Jump to content

இன்று மாலை எடப்பாடி பதவியேற்பு


Recommended Posts

இன்று மாலை எடப்பாடி பதவியேற்பு

 

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி, கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் இன்று மாலை 5 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712038

15 நாளில் பெரும்பான்மையை நிருபிக்க எடப்பாடிக்கு உத்தரவு

 

சென்னை: அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சியமைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் 15 நாளில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712036

முதல்வராகிறார் எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தி, எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியுள்ளார்.

Edappadi Palanisamy

எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆளுநரை சந்தித்ததை அடுத்து இந்த அறிவிப்பை, ஆளுநர் மாளிகை  வெளியிட்டுள்ளது. கடந்த 14-ம் தேதி கொடுத்த எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதத்தின் அடிப்படையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளதாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Rajbhavan press release

இதனால் இன்று மாலை 4.30 மணிக்கு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்கிறார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80990-governor-calls-edappadi-k-palanisamy-to-form-goverment.html

Link to comment
Share on other sites

முதல்வராக எடப்பாடி பழனிசாமி நியமனம்: பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்களில் வாக்கெடுப்பு

 

 
ஆளுநர் மாளிகையில் நடந்த சந்திப்பு | படம் உதவி: அதிமுக முகநூல் பக்கம்.
ஆளுநர் மாளிகையில் நடந்த சந்திப்பு | படம் உதவி: அதிமுக முகநூல் பக்கம்.
 
 

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில் சட்டப்பேரவையில் 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் வழங்கியிருக்கிறார்.

இதன்மூலம் தமிழக அரசியல் களத்தில் கடந்த 9 நாட்களாக நீடித்துவந்த குழப்பத்துக்கு முடிவு வந்துள்ளது. தமிழக முதல்வராக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக் கொள்கிறார்.

124 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்திருப்பதாக எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்த ஆதரவுக் கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநர் அவரை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்தடுத்து சந்திப்பு:

முன்னதாக, நேற்று (புதன்கிழமை) ஆளுநர் வித்யாசாகர் ராவை பொறுப்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக சந்தித்து ஆட்சி அமைப்பது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு சென்றது. இதனையடுத்து கூவத்தூரிலிருந்து ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகையிலிருந்து செய்திக் குறிப்பு வெளியானது. அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக நியமித்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டிருக்கிறார். அதேவேளையில், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என அவகாசம் கொடுத்திருக்கிறார்.

தகர்ந்த கனவும்.. எதிர்பாராத வரவும்..

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால், அவரது முதல்வர் கனவு தகர்ந்தது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலாவுக்கு பதில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கட்சியில் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தாலும் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால், அவருக்கு முதல்வர் ஆகும் வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இழுபறிக்குப் பின்..

சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்றைய தினமே ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பழனிசாமி. அதன்பிறகும் ஆளுநர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதையடுத்து, நேற்று இரவு 7.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, டி.ஜெயக்குமார், எம்பி நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேர் ஆளுநரைச் சந்தித்தனர். சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அமைச்சர் டி.ஜெயக்குமார் அங்கிருந்த நிருபர்களிடம் பேசும்போது, "அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதால் எங்களை அழைத்து அமைச்சரவையை உடனடியாக அமைத்து சட்டப்பேரவை ஜனநாயக மாண்பு காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அதை பரிசீலிப்பதாக ஆளுநர் தெரிவித்தார். ஆளுநர் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

முதல்வர் பன்னீர்செல்வமும் தங்களுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக கூறியுள்ளாரே என கேட்டபோது, "அவர்களிடம் 8 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். எங்களிடம் 124 பேர் உள்ளனர்" என்றார்.

இதைத் தொடர்ந்து இரவு 8.45 மணிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரை சந்தித்தார். அவருடன் அமைச்சர் பாண்டியராஜன், மதுசூதனன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என ஆளுநரிடம் ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். சந்திப்பு முடிந்து 9.03 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.

இரு தரப்பினரையும் ஆளுநர் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு விரைவில் முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நீண்ட இழுபறிக்குப் பின்னர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/முதல்வராக-எடப்பாடி-பழனிசாமி-நியமனம்-பெரும்பான்மையை-நிரூபிக்க-15-நாட்களில்-வாக்கெடுப்பு/article9546445.ece?homepage=true

Link to comment
Share on other sites

எடப்பாடி பதவியேற்பை எதிர்த்து வழக்கு

 

சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஜோதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை நீதிபதிகள் குலுவாடி ஜி.ரமேஷ், சுமந்த் ஆகியோர் அவசர வழக்காக மதியம் 2.15 மணிக்கு விசாரணை செய்கின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712045

Link to comment
Share on other sites

"பெரும்பான்மையை நிரூபிப்பாரா எடப்பாடி பழனிச்சாமி?"

 'எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானாலும் அவரை 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்' என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்துள்ளார். இதனால் சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

எடப்பாடி பழனிச்சாமி

 தமிழகத்தில் நிலவிய பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இன்று ஒரு முடிவை எடுத்துள்ளார் ஆளுநர் வித்யாசாகர் ராவ். ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர், 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மெஜாரிட்டியை நிரூபிக்கவில்லை என்றால் முதல்வர் அரியணையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி இறங்க வேண்டும். இதற்கிடையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய அமைச்சரவை என்ற தகவல் கிடைத்ததும்  கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆட்டம், பாட்டம் என்று எம்.எல்.ஏ.க்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் திளைத்தனர். 

ஆளுநர், நிச்சயம் நம்மை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று முன்கூட்டியே தெரிந்த சசிகலா அணியினர் நேற்றிரவு முதல் அதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டினர். சிறையிலிருக்கும் சசிகலாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் சில ஆலோசனைகளைச் சொல்லி இருக்கிறார். குறிப்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா.பாண்டியராஜன், பன்னீர்செல்வத்தின் அணிக்கு சென்று விட்டதால் அந்த  அமைச்சர் பதவி ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த தங்கத்தமிழ்செல்வன் எம்.எல்.ஏ.வுக்கு வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுபோல அவைத்தலைவர் செங்கோட்டையனும் அமைச்சராகிறார். இதுதவிர தற்போதுள்ள அமைச்சர்களுக்கு இலாகாவும் மாற்றப்படலாம் என்ற தகவல் உள்ளது.  

சசிகலா விருப்பத்தின்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் விரைவில் அமர உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று மாலை அமைகிறது. இந்த மகிழ்ச்சியில் சசிகலா அணியினர் இருந்தாலும் அவர்களுக்கு ஆளுநர் ஒரு 'செக்'கையும் வைத்துள்ளார். அதாவது, 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு பன்னீர்செல்வத்தின் புகார்களே காரணம் என்கின்றனர். 

இதுகுறித்து ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைக்க உரிமை கோரி 124 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்திருந்தார். அதன்படி அவருக்கு ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார். அதை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் அமைச்சரவை குறித்து விவாதித்தார் ஆளுநர். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமியிடம் 15 நாட்களில் நீங்கள் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்று மாலை 4 மணியளவில் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்" என்றனர்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து பேசியவர்கள், "சின்னம்மாவுக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏ.க்களுக்கு பன்னீர்செல்வம் தரப்பினர் கடும் நெருக்கடி கொடுத்தனர். இருப்பினும் எங்களுக்கு ஆதரவளித்தவர்கள் உண்மையான அம்மாவின் விசுவாசிகள். பதவி, பணத்துக்காக அணி தாவ மாட்டார்கள் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். இதற்கெல்லாம்  அம்மாவின் ஆசியோடு சின்னம்மாவின் ராஜதந்திரம் இருக்கிறது. சின்னம்மாவை முதல்வராக்கக் கூடாது என்று காலதாமதப்படுத்தியதோடு சொத்துக்குவிப்பு வழக்கிலும் தீர்ப்பை வழங்கினர். இருப்பினும் அம்மாவின் மறைவு, சின்னம்மாவின் சிறைவாசம் போன்ற இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் ஒற்றுமையாக இருந்து அ.தி.மு.க.வை பிளவுப்படுத்தவிடாமல் சாதித்துக் காட்டி இருக்கிறோம். எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சின்னம்மாதான் ஒருங்கிணைத்தார். இதுதான் அம்மாவிடமிருந்து சின்னம்மா படித்த அரசியல் அனுபவம். இதைத்தான் ஒவ்வொரு முறையும் பேட்டியின் போது தெரிவித்தார். சின்னம்மாவின் ஆலோசனைப்படி புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய அமைச்சரவையில் இடம் பிடித்தவர்களில் செங்கோட்டையன், தங்கத்தமிழ்செல்வன் போன்றோர்களின் பெயர்களும் உள்ளன. அம்மாவின் வழியில் இந்த ஆட்சியை தொடருவோம். நிச்சயமாக மெஜாரிட்டியை நிரூபிப்போம்"என்றார். 

பன்னீர்செல்வம் தரப்பில் பேசியவர்கள், "கூவத்தூரிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய பிறகுதான் அங்குள்ளவர்களின் உண்மையான மனநிலை தெரியவரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியால் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாது. ஏனெனில் அந்ததரப்பு எம்.எல்.ஏ.க்களை மிரட்டி வைத்துள்ளது. மிரட்டல் காரணமாகவே அந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். எங்களை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதை சட்ட ரீதியாக சந்திக்க முடிவு செய்துள்ளோம்"என்றனர். 
 
கட்சி வட்டாரங்கள் கூறுகையில், "எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான புதிய அமைச்சரவைக்கு காலக்கெடு 15 நாட்கள் விதிக்கப்பட்டுள்ளது. மெஜாரிட்டியை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவை கலைக்கப்படும். இது எங்களுக்குத் தெரியும். இதனால் முன்பை விட இப்போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களிடம் நிலைமையை விளக்கமாக தெரிவித்துள்ளோம். குறிப்பாக முதல் முறை எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உண்மையான நிலைமை சொல்லப்பட்டுள்ளது. அதாவது, லட்சங்களை செலவழித்துள்ளீர்கள் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளோம். இதனால் நிச்சயம் அம்மாவின் ஆட்சி தொடரும். பன்னீர்செல்வம் அணிக்கு கூவத்தூரிலிருந்து இனி எந்த எம்.எல்.ஏ.க்களும் செல்வதில்லை என்ற உறுதிமொழியை சின்னம்மாவிடம் கொடுத்துள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80997-will-edappadi-k-palanisamy-prove-the-vote-of-confidence.html

Link to comment
Share on other sites

 

கண்கலங்காமல் முடிந்த பதவியேற்பு விழா

ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது அமைச்சர்கள் கண்கலங்கியப்படி பதவியேற்று கொண்டனர். ஆனால், இன்று அதுபோன்ற சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

இப்படிதான் முதல்வர் ஆனார் எடப்பாடி பழனிசாமி...!

 

எடப்பாடி பழனிசாமி

ரசியல் பரமபதத்தில் ஏணியில் ஏறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  முதல்வர் ஜெயலலிதா மறைவின் போதே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று முணுமுணுக்கப்பட்டது. பின் அந்த சொற்கள் காற்றில் கரைந்து போனது. அதன்பின் தமிழக அரசியல் களத்தில்  நடந்த நிகழ்வுகள் அந்த சொற்களை உயிர்ப்பித்து, அவரை முதல்வராக அரியணை ஏற்றி இருக்கிறது.

சரி... யார் இந்த எடப்பாடி பழனிசாமி... எப்படி பல சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல்வர் பதவிக்கு முன்னேறினார்...? என்ற கேள்விகளுக்கான பதில் பின்வரும் சில பத்திகளில்...

‘குலக்கல்வித் திட்டம்... பழனிசாமி’

ஐம்பதுகளின் மத்திய காலம், தமிழகமே ராஜாஜி அறிமுகப்படுத்த முனைந்த குலக்கல்வித் திட்டத்தால் அல்லோலப்பட்டது. தமிழகமெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. இது ராஜாஜி தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் காரணமாக இருந்தது. 1954 -ம் ஆண்டு காமராஜர் மதராஸ் மாகாணத்துக்கு முதல்வராக பொறுப்பேற்றார்.  இப்படி தமிழகம் தகித்து, தணிந்த சூழலில்  தான் 1954 -ம் ஆண்டு, சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர், சவுரியம்மாள் ஆகியோரின் இரண்டாவது மகனாகப் பிறந்தார் எடப்பாடி பழனிசாமி.  

எடப்பாடி பழனிசாமியின் அண்ணன் கோவிந்தராஜ்.பழனிசாமி படிப்பில் சிறப்பு என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஆனால், படுமோசமானவர் இல்லை. பள்ளிப்படிப்பை முடித்தப்பின், ஈரோடு வாசவி கல்லூரியில் பி.எஸ்.சி விலங்கியல் படித்தார்.  படிக்கும் போதே எம்.ஜி.ஆர் மீது பிடிப்பு ஏற்பட்டது. அது அரசியல் பிடிப்பாக உருமாறி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார். 

அரசியல் வாழ்க்கை சரி... பிழைப்புக்கு என்ன செய்வது...? 

“தொழில் வாழ்க்கை... அரசியல்... அமைச்சர்”

எடப்பாடி பழனிசாமிகல்லூரியில் படிப்பு முடித்த பின்னர், எடப்பாடியைச் சுற்றி உள்ள பகுதிகளில் வெல்ல உற்பத்தியாளர்களிடம் இருந்து வெல்ல மூட்டைகளை வாங்கி சந்தைக்குக் கொண்டு சென்று கமிஷனுக்கு விற்பனை செய்து வந்தார். மூட்டை ஒன்றுக்கு இரண்டு ரூபாய் கமிஷன் வைத்து வெல்ல வியாபாரம் செய்தார். பெரிதாக லாபம் இல்லாவிட்டாலும், மகிழ்ச்சியாகத்தான் சென்று கொண்டிருந்தது தொழில் வாழ்க்கை. ஆனாலும், அரசியல் வாழ்க்கை உள்ளே அழுத்திக் கொண்டே இருந்தது.

செங்கோட்டையனைச் சந்திக்கிறார். அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறார்.  கோணேரிபட்டி கிளைச் செயலாளர் பொறுப்பு கிடைக்கிறது.  1989-ம் ஆண்டு எம்.எல்.ஏ. சீட்டும் கிடைக்கிறது. வெற்றியும் கிடைக்கிறது. மீண்டும் 1991-ல் சீட்டு வழங்கப்படுகிறது.  மீண்டும் வெற்றி. அவருக்கு எல்லாம் சரியாகத்தான் சென்றது. ஆனால், அ.தி.மு.க.வுக்கு இல்லை.  1991 -96 காலக்கட்டம், ஜெயலலிதா மொத்தமாக கெட்டப் பெயர் சம்பாதித்த காலம்.  1996  சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வி அடைகிறார். மூன்று ஆண்டுகளில் மத்தியில் ஆட்சி கவிழ்கிறது. மீண்டும் 1999-ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடுகிறார். தோல்வி அடைகிறார். மீண்டும் 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுகிறது. அப்போதும் தோல்வி.  2006 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அப்போதும் தோல்வி. தொடர்ச்சியான தோல்விகளால் அவர் துவண்டுவிடவில்லை. அவருக்கு வாய்ப்பு வழங்குவதில் கட்சியும் துவண்டுவிடவில்லை.

மீண்டும் 2011 -ல் வாய்ப்பு வழங்குகிறது. வெற்றி பெறுகிறார். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஆகிறார். 2016- ல் மீண்டும் வாய்ப்பு.... மீண்டும் வெற்றி... மீண்டும் அமைச்சர் பதவி..

 

‘மன்னை விசுவாசம்... தேடி வந்த முதல்வர் பதவி’

எடப்பாடி பழனிசாமி

 

இவ்வளவு வெற்றிகள் கண்டிருக்கிறார். அதுபோல், அத்தனை தோல்விகளையும் கண்டிருக்கிறார். எப்படி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைவருக்கும் தெரிந்த பதில்தான் மன்னார்குடி விசுவாசம். தொடக்க காலத்திலேயே சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். அதனால்தான், செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்ட போதும், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டது. 

ஒரு கட்டத்தில் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன் செயல்பாடு ஆகியவை மன்னார்குடி குடும்பத்தினருக்குப் பிடிக்காமல் போனது. அப்போது அடுத்த விசுவாசி என்ற பட்டியலில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதன் பிறகு கட்சியின் அனைத்து உள்விவகாரங்களும் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. கட்சிக்கு வருவாய் வரும் அனைத்து விவகாரங்களையும் எடப்பாடி பழனிசாமியே கவனித்து வந்தார்.  இவரின் விசுவாசமும், சசிகலா தரப்பு இவர் மீது வைத்த நம்பிக்கையும், ஜெயலலிதா இறந்தபோது, இவர் மேலும் முக்கியத்துவம் பெற காரணமானது. அப்போதே, இவர் பெயர் முதல்வர் பதவிக்காக  சசிகலா தரப்பால் முன்மொழியப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அது கைவிடப்பட்டது. 

இப்படியான சூழலில் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக திரும்ப... சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல.... இப்போது முதல்வர் ஆகி இருக்கிறார் பழனிசாமி.

ஹூம்... ஒரு முக்கியமான விஷயம்... சில தசாப்தங்களுக்கு முன்,  இவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில்,  நில விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டார்கள். அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அந்த வழக்கில் தேடப்பட்டவர்களில் ஒருவர் தான் எடப்பாடி பழனிசாமி.

http://www.vikatan.com/news/tamilnadu/81057-brief-note-about-chief-minister-edappadi-palanisamy.html

Link to comment
Share on other sites

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றிய நல்லதும் கெட்டதுமான செய்திகள் என்ன?

அரசியல் பரமபதத்தில் ஏணியில் ஏறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.  முதல்வர் ஜெயலலிதா மறைவின் போதே முதல்வராக பொறுப்பேற்க இருக்கிறார் என்று முணுமுணுக்கப்பட்டது. பின் அந்த சொற்கள் காற்றில் கரைந்து போனது. அதன்பின் தமிழக அரசியல் களத்தில்  நடந்த நிகழ்வுகள் அந்த சொற்களை உயிர்ப்பித்து, அவரை முதல்வராக அரியணை ஏற்றி இருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி

 

மந்திரி தந்திரி

2011-2016 அதிமுக ஆட்சியில் நடந்த தில்லுமுல்லுகளை ஆனந்த விகடன் மந்திரி தந்திரி மூலம் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.

அன்று எடப்பாடி எட்டுப்பட்டிக் கவுண்டர் தெருக்கள் பரபரப்பாக இருந்தன. ஊரில் மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் பதற்ற முணுமுணுப்புகள். நெடுங்குளம் கிராமமே பதற்றச் சூறாவளியின் பிடியில் இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், ஈட்டியால் சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டதும், அதைச் செய்தவர்கள் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதும்தான் அத்தனை அமளிதுமளிகளுக்கும் காரணம். அந்தக் கொலைகளுக்குக் காரணமானவர்கள் எனத் தேடப்பட்டவர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளுக்குள் மாயமாகிப்போனார்கள். அவர்களில் அந்த இளைஞரும் ஒருவர்.  

எடப்பாடி பழனிசாமி

 

என்ன செய்தார் எம்.எல்.ஏ.? - அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி (எடப்பாடி)

சக்கரை மூட்டை இருக்கா?’, ‘சக்கரை மூட்டை இருக்கா?’ என்று கூவியவாறு சர்க்கரை மூட்டைகளை வாங்கிக் கொண்டிருந்தவர்... பங்காளியோடு வாய்க்கால் வரப்புச்சண்டையில் ஈடுபட்டு, இருவரைக் கொலைசெய்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாக இருந்தவர்... காவல் துறைக்குப் பயந்து மேற்குத்தொடர்ச்சி மலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தவர்... அது எல்லாம் ஒரு காலம். இன்றைக்கு, போலீஸ் பாதுகாப்போடு, சிவப்பு விளக்குச் சுழலும் சொகுசுக் காரில் வலம் வருகிறார். அவர்தான், தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி.

 

ஓ.பி.எஸ்ஸை பின்தொடரும் எடப்பாடி பழனிச்சாமி!  -மூவரணியின் விஸ்வரூபம்

 

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதாவின் விசுவாசியாக வலம் வந்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக வலம் வருகிறார். ' தற்போது முதல்வரின் துறைகளை கவனித்து வரும் ஓ.பி.எஸ்ஸை கண்காணிப்பதுதான் எடப்பாடிக்கு முழுநேர வேலையாக இருக்கிறது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

edapadi600_15055_23137.jpg

 

 

http://www.vikatan.com/news/tamilnadu/81068-the-goods-and-bads-of-edappadi-palanisamy.html

Link to comment
Share on other sites

எம்.எல்.ஏ.,க்கள் கொதிப்பு இடைப்பாடிக்கு சிக்கல்?

 

 

முதல்வராக இடைப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எம்.எல்.ஏ.,க்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது.

கட்சியும் ஆட்சியும், தன் குடும்பத்தினர் கையை விட்டு போய் விடக்கூடாது என்பதில், உறுதியாக இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து 2011ல் நீக்கப்பட்ட தன் அக்கா மகன், டி.டி.வி.தினகரனை, பிப்., 14 இரவு, கட்சியில் சேர்த்தார்; மறுநாள், துணை பொதுச் செயலராக அறிவித்தார்.

அத்துடன், சட்டசபை கட்சி தலைவராக, தன் குடும்ப விசுவாசியான, இடைப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்ய வைத்தார். இதற்கு, கட்சி, எம்.எல்.ஏ.,க்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இடைப்பாடி பழனிச்சாமியை, அரசியலில் வளர்த்து விட்டவர் செங்கோட்டையன். முதல்வர் பதவியை தனக்கு வழங்காததால், அவர் அதிருப்தியில் உள்ளார்.

ஜெ.,க்கு பின், முதல்வர் பதவி, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்திற்கு வந்தது. தற்போது கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, இடைப்பாடி பழனிச்சாமி தேர்வானது, முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என, வன்னியர் சமூக, எம்.எல்.ஏ.,க்களும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு முன், நாடார் சமூகத்தைச் சேர்ந்த பாண்டியராஜன், அமைச்சராக இருந்தார்.

தற்போதைய அமைச்சரவையில், அந்த சமூகத்தைச் சேர்ந்த, யாருக்கும் பதவி தரப்படவில்லை.
பன்னீர்செல்வம் பக்கம் செல்வதை தடுக்க, சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏ.,க்களை, கூவத்துார் அருகே தனியார் சொகுசு விடுதியில் அடைத்து வைத்தனர். அப்போது, ஒவ்வொரு எம்.எல்.ஏ., விடமும் அமைச்சர் பதவி தருவதாக சசிகலாவும், தினகரனும் உறுதி அளித்துள்ளனர்.

மேலும், துணை பொதுச் செயலராக, தினகரன் நியமிக்கப்பட்டதை பல எம்.எல்.ஏ.,க்கள் விரும்பவில்லை. மீண்டும் சசிகலா குடும்பத்தின் பிடியில் சிக்க விரும்பாத அவர்கள் முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712175

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

 

கண்கலங்காமல் முடிந்த பதவியேற்பு விழா

ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த போது அமைச்சர்கள் கண்கலங்கியப்படி பதவியேற்று கொண்டனர். ஆனால், இன்று அதுபோன்ற சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை.

 

Bildergebnis für செம்மறி ஆடு

 

Link to comment
Share on other sites

எவ்வளவு நாள் தாங்குவார் எடப்பாடி பழனிச்சாமி?!' - எம்.எல்.ஏக்களை வதைக்கும் '88' சென்டிமெண்ட்

எடப்பாடி பழனிச்சாமி

மிழக சட்டப் பேரவையில் நாளை பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ' அ.தி.மு.கவின் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களிடமும் நேற்று இரவு உருக்கமான வேண்டுகோள் வைத்தார் பழனிசாமி. ' பன்னீர்செல்வம் அளவுக்கு அவர் நிதானித்து ஆட்சி நடத்துவாரா?' என்ற கேள்விகளும் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

தமிழக அரசியல் களத்தில் 11 நாட்களாக நீடித்துவந்த குழப்பம் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு, பூந்தண்டலத்தில் உள்ள வில்லேஜ் ரிசார்ட்டில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி. " ஒரு வாரமாக கூவத்தூர் ரிசார்ட்டில் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்த நிர்வாகிகளுக்கு நேற்று கொண்டாட்டமான நாளாக அமைந்துவிட்டது. பெண் எம்.எல்.ஏக்களில் பலர் உற்சாக நடனம் ஆடினர். வழக்கத்தைவிட, இரவு நெடுநேரம் உற்சாகத்தில் மிதந்தனர் எம்.எல்.ஏக்கள். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக, ஒவ்வொரு எம்.எல்.ஏக்களையும் தனித்தனியாக சென்று சந்தித்தார் பழனிசாமி. அவர்களிடம், ' கட்சிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததால், நம்மால் சாதிக்க முடிந்தது. சபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்போம். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். அனைத்தும் வந்து சேரும்' என உருக்கமான வேண்டுகோள் வைத்தார். ' சபையில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?', ' நம்மை சீண்டிப் பார்க்கும் வேலைகள் நடந்தாலும் பொறுமை காக்க வேண்டும்' என ஆலோசனைகளை வழங்கினார். எம்.எல்.ஏக்கள் பலரும், ' நான்கரை ஆண்டுகள் ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற மனநிலையில்தான் நாங்கள் இருக்கிறோம். பலத்தை நிரூபிக்க முடியாமல் போனால், ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள். இன்னொரு தேர்தல் வருவதற்கு நாங்கள் விரும்பவில்லை' எனத் தெரிவித்துள்ளனர். இதன்பிறகே, சீனியர் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தக் கிளம்பினார் எடப்பாடி பழனிசாமி" என விவரித்தார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர். 

ops_ele2_11310.jpg" எம்.எல்.ஏக்களில் சிலரை தன் பக்கம் இழுத்துவிட வேண்டும் என்பதில் ஓ.பி.எஸ் அணியினர் தீவிரமாக வேலை பார்க்கிறார்கள். '15 நாட்கள் வரையில் காத்திருந்தால், நிலைமை கைமீறிப் போய்விடும்' என்பதால்தான், நாளையே பலப் பரீட்சைக்கு இசைவு தெரிவித்தார் எடப்பாடி. வாக்கெடுப்பில் நாளை அவர் வெற்றி பெற்றாலும், எப்போது வேண்டுமானாலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வரலாம். எம்.எல்.ஏக்களைத் தக்க வைப்பதே அவருக்குப் பெரும் சவாலாக இருக்கும்" என விவரித்த அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர், " சபையில் தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சியின் பலம் 98 ஆக இருக்கிறது. ஓ.பி.எஸ் பக்கம் 11 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனச் சொல்கின்றனர். மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ நட்ராஜ், எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க இருக்கிறார். தற்போது எடப்பாடி அணியில் 124 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது என்கின்றனர். ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அ.தி.மு.க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் எதிர்த்து வாக்களிக்க இருக்கிறது. எடப்பாடி தோற்றுவிட்டாலும், அடுத்து யாரை அழைப்பது என்பதை ஆளுநர்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போதுள்ள சூழலில், எடப்பாடி பழனிசாமி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம். ஆனால், அதற்குப் பிறகு அவர் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் ஏராளமாக இருக்கின்றன" என்றவர், 

governor200_11548.jpg" பன்னீர்செல்வம் அளவுக்கு போயஸ் கார்டனை அனுசரித்து நடந்து கொண்டவர்கள் மிகவும் குறைவு. அவர்களின் அதிகாரத் தோரணைக்கு முன்னால், 'எடப்பாடி எவ்வளவு நாள் தாங்குவார்?' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. முதலமைச்சர் பதவியில் அமர்ந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பன்னீர்செல்வத்திற்கு என்ன மரியாதை கொடுக்கப்பட்டதோ, அதே நிலைதான் எடப்பாடிக்கும் தொடர வாய்ப்பு இருக்கிறது. எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், பன்னீரைப் போல் எடப்பாடி கடந்து போக மாட்டார். அவருக்குப் பொறுமை என்பது கிடையாது. பன்னீர்செல்வம் முதல்வராக இருக்கும்போதும், சீனியர் அமைச்சர்கள் அவரை ஒரு பொருட்டாக மதித்தது கிடையாது. உதாரணமாக, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் நீண்ட விளக்கம் கொடுத்துவிட்டு அமர்ந்தார்.

உடனே எழுந்த அமைச்சர் ஜெயக்குமார் ஜல்லிக்கட்டு தொடர்பாகப் பேசினார். இதைக் கண்ட தி.மு.க எம்.எல்.ஏக்கள், ' முதல்வர் பேசிவிட்டு அமர்ந்த பிறகு, அமைச்சர் எழுந்து பேசுவது மரபு அல்ல. இதே இடத்தில் ஜெயலலிதா இருந்திருந்தால் நீங்கள் பேசியிருப்பீர்களா? முதலமைச்சருக்கு உண்டான மரபைக் காப்பாற்றுங்கள்' என சத்தம் போட்டனர். 'முதலமைச்சர் பதவியை இவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?' என்பதற்கு இது ஓர் உதாரணம். சசிகலாவை முதல்வர் பதவியில் அமர வைக்க முடியாத கோபத்தில் அவரது உறவினர்கள் இருக்கிறார்கள். எடப்பாடிக்கு அரசியல் முக்கியத்துவம் கிடைப்பதையும் அவர்கள் ரசிக்க மாட்டார்கள். சொந்த சமூகத்தின் அழுத்தத்திற்கும் செவிசாய்க்க வேண்டிய இடத்தில் எடப்பாடி இருக்கிறார். ' பன்னீரைப் போல் அவர் பவ்யத்தோடு பதவியில் அமர்ந்திருப்பாரா?' என அ.தி.மு.க நிர்வாகிகளே கேள்வி எழுப்புகின்றனர்" என்றார் விரிவாக. 

எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு, 88-ம் ஆண்டு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. அப்போது ஜானகி ராமச்சந்திரன் முதல்வரான போதும், அடுத்து வந்த நாட்களில் ஆட்சிக் கலைப்பு அரங்கேறியது. 'அதேபோல் இப்போதும் நடந்துவிடுமா?' என்ற சென்டிமெண்ட் அச்சமும் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களை வாட்டி வருகிறது. 

http://www.vikatan.com/news/tamilnadu/81103-will-edappadi-palanisaamy-be-better-than-o-panneeselvam---the-88-sentiment.html

Link to comment
Share on other sites

'மனசாட்சியுடன் வாக்களியுங்கள்' - எம்.எல்.ஏவுக்கு தொகுதி மக்கள் கோரிக்கை

Arunkumar MLA

'நாளை சட்டசபையில் நடக்கவிருக்கும் வாக்கெடுப்பில், கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் மனசாட்சியுடன் வாக்களிக்க வேண்டும்' என வலியுறுத்தி, அதிமுக முன்னாள் மேயர் ராஜ்குமார் தலைமையில் கணபதி பகுதி மக்களிடையே ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

http://www.vikatan.com/news/politics/81182-people-ask-mla-to-vote-with-conscience.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.