• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

ஒரு நிமிடக் கதை- மனசு

Recommended Posts

ஒரு நிமிடக் கதை- மனசு

விவாகரத்து கிடைத்து விட்டது. நிர்மலா நீதிபதியை நன்றியோடு பார்த்தாள். நரேனின் முகம் வாடிப்போயிருந்தது. குமரன் மகளிடம் வந்தார்.

“இனி என்னம்மா பண்ணப் போறே?” என்று கேட்டார்.

“அப்பா!... என்னைக் கொஞ்சம் தனியா விடுங்க. ஆண்டவன் இருக்கான்!”

ஏனோ தெரியவில்லை. முதல் பார்வையிலே அவளுக்கு நரேனை பிடிக்காமல் போய்விட்டது. வீட்டில் சொல்லிப் பார்த்தாள். எடுபடவில்லை. அப்பா பிடிவாதமாக இருந்தார். கல்யாணத்தை முடித்தார்.

ஒட்டுதல் இல்லாமலே ஆரம்பித்த வாழ்க்கை. வெறுப்பைத்தான் தந்தது. அவள் மனசை தொடும் விதமாக நரேன் இல்லை. அதற்கு அவன் முயற்சி செய்யவும் இல்லை. வாழ்க்கையை ரசித்து வாழ விரும்பியவள் நிர்மலா. அது முடியாமல் போகவே விவாகரத்துக்கு அடிப்போட்டாள். எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அவள் உறுதியாய் இருந்தாள்.

இன்று நினைத்ததை சாதித்து விட்டாள். நிர்மலா அப்பாவுடன் கோர்ட்டுக்கு வெளியே வந்தாள்.

நரேன் அவளிடம் வந்தான்.

“உன் பிடிவாதத்தால நீ விவாகரத்து வாங்கிட்டே. ஆனா, இனி நீ என்ன பண்ணுவே?... அதான் எனக்கு தெரிஞ்ச கம்பனியில உனக்கு ஒரு நல்ல வேலைக்கான அப்பாயின்மென்ட் ஆர்டரை வாங்கிட்டு வந்தேன். கை நிறைய சம்பளம். நீ நினைச்சபடி வாழலாம். ஆல் த பெஸ்ட்!”

அவள் கையில் கவரை திணித்து விட்டு நரேன் நடந்தான். முதல் முறையாக தன் மனதை தொட்ட அவனை நிர்மலா பார்க்கும் போது அவன் படி இறங்கி சென்றுகொண்டிருந்தான்!

http://tamil.thehindu.com/

Share this post


Link to post
Share on other sites

அட அருமை நிமிடக் கதை

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."
    
    
   ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..
   அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது.
   வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....
   ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை
   நடந்து சென்றே...
   ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்
   முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
   அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்!
   ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்!
   இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
   சம்பாதித்து விடுவார்!
   பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;
   ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!
   காரணம்
   ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!
   ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....
   சிறிது நேரத்தில்
   பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
   எடைபோட... அதில் ஒன்பது கிலோ
   மட்டுமே இருந்தது!....
   அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை!   ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
   இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!
   இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!
   அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!
   நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!
   நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!
   "கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..
   அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.
   வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!
   இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?  கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,
   இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.
   அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..
   ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.
   "இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
   மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....
   "தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!
   இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...
   அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!
   இது தான் உலகநியதி!
   நாம் எதை தருகிறோமோ
   அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
   நல்லதை தந்தால் நல்லது வரும்,...
   தீமையை தந்தால் தீமை வரும்!
   வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
   ஆனா....
   நிச்சயம் வரும்!
   ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம்!!
   மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."
   படித்ததில் பிடித்தது
    
     https://www.facebook.com/ibctamiljaffna
  • By நவீனன்
   தீர்ப்பு!  ஒரு நிமிடக் கதை
    

           தீர்ப்பு!
   அவசரமாகக் கிளம்பிக்கொண்டு இருந்த நீதிபதி கணேசனை, மகனுடைய அலறல் டென்ஷன்படுத்தியது. தன் அக்காவின் கையிலிருந்த பொம்மைதான் வேண்டும் என்று அடம்பிடித்து அழுதுகொண்டு இருந்தான் அவன். ‘‘தம்பிக்கு அந்தப் பொம்மையைக் கொடுத்துத் தொலைச்சா தான் என்ன?’’ என்று தன் பெண்ணின் முதுகில் ஓங்கி ஓர் அறை வைத்தார் அவர்.
   ‘‘அந்தப் பொம்மை ஒடைஞ்சிருக்குப்பா! ஆணி, தம்பி கையைக் கிழிச்சிடும்னுதான் கொடுக்கலே. அதைப் புரிஞ்சுக்காம என்னை அடிச்சிட்டீங்க. பரவாயில்ல... கோர்ட்டிலேயும் இதுமாதிரி என்ன ஏதுன்னு விசாரிக்காம, யாராவது நல்லவருக்குத் தண்டனை கொடுத்துடாதீங்க!’’ என்று விசும்பினாள் அவள். தம் பெண் முன் குற்றவாளியாகத் தலைகுனிந்து நின்றார் கணேசன்!
   - கலா
   https://www.vikatan.com
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதைகள்
    

   ஒரு நிமிடக் கதைகள்     ஜடம்!
   காலையில் ஆபீஸுக்குக் கிளம்பும் அவசரத்தில்கூட மனைவி கீதாவை, ‘‘பன்னாட... பன்னாட... அறிவு இருக்கா உனக்கு? ஒழுங்கா ஒரு வேலை செய்றியா? அறிவு கெட்ட முண்டம்’’ என்று சரமாரியாகத் திட்டிவிட்டுத்தான் கிளம்பினான் ரகு.
   காரணம் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. வழக்கமாகச் சாப்பிடும் அளவைவிட அவன் தட்டில் ஒரு இட்லி அதிகம் வைத் திருப்பாள். அதற்கு ஒரு திட்டு! கேட்டால்,
   ‘‘எதிர்த்துப் பேசாதே! நான் கத்தினா அமைதியா கேட்டுக்க. ஆபீஸ்ல ஏகப்பட்ட டென்ஷன். நான் திட்டறது, கோபப்படறது எல்லாம் உன்கிட்டதான் முடியும். அதனால உணர்ச்சியற்ற ஜடமா இரு!’’ என்பான்.
   அன்று இரவு... படுக்கை அறையில், அவன் அவளை ஆசையுடன் அணைத்த போது, ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
   ‘‘என்னடி இது... உணர்ச்சியற்ற மரக்கட்டை மாதிரி படுத்துக் கிடக்கிறியே... இப்படி இருந்தா எப்படி உன்கிட்ட ஆசை வரும்?’’ என்றான் எரிச்சலாக.
   ‘‘நீங்கதானே என்னை உணர்ச்சியற்ற ஜடமா இருன்னு சொன்னீங்க!’’ என்றாள் கீதா பட்டென்று. அவளுடைய பதில் அவன் மனதில் சுரீர் என்று தைத்தது!
   - மங்களம் ரவீந்திரன்
    
       நல்ல செய்தி, கெட்ட செய்தி!
   ‘‘அம்மா... ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி! எந்தச் செய்தியை முதல்ல சொல்ல?’’ என்று கேட்டான் ரமேஷ்.
   ‘‘நல்ல செய்தியை முதல்ல சொல்லு!’’
   ‘‘உன் பொண்ணுகிட்ட அடிக்கடி சொல்லி அனுப்புவியே, மாப்பிள்ளையை கைக்குள்ள போட்டுகிட்டு எப்படியாவது தனிக்குடித்தனம் போயிடுன்னு... அதே மாதிரி தனிக்குடித்தனம் போயிட்டாளாம்!’’
   ‘‘அப்பாடா! இப்பத்தான் நிம்மதி ஆச்சு. ஆமா, ஏதோ கெட்ட செய்தின்னியே, அது என்ன?’’
   ‘‘என் பொண்டாட்டியும் தனியா போயிடலாம்னு ரொம்ப நாளா நச்சரிச்சுட்டே இருக்கா. அதான், நாளைக்கே நாங்களும் தனிக்குடித்தனம் போகலாம்னு இருக்கோம்!’’
   அதிர்ச்சியில் மௌனமானாள் அம்மா.
   - ராகுல் வெங்கட்
    
       தங்கச்சி இருக்கும்போதே...
   ‘‘சு தா... இன்னிக்குக் காலேஜ் முடிஞ்சதும் அப்படியே சித்தி வீட்டுக்குப் போயிடு. ராத்திரி அப்பா வந்து உன்னை அழைச் சுட்டு வருவார்!’’
   சுதா சரி சொல்லக் காத்திருந்த நிமிஷத்தில், ’’வேணாம் சுதா! நேரே நீ நம்ம வீட்டுக்கே வா!’’ என்றாள் அக்கா ரமா.
   ‘‘சும்மா இருடி! இன்னிக்கு உன்னைப் பெண் பார்க்க வர்றாங்க, போன தடவை மாதிரி இப்ப வரப் போறவனும், உன் தங்கச்சியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றதுக்கா?’’ அம்மா பொரிந்தாள்.
   ‘‘அம்மா! ஒருத்தரைப் பெண் பார்க்க வந்துட்டு, இன்னொரு பெண்ணை ஓ.கே. பண்றவன் நிலையான மனசு இல்லாத வன்.இதுபோன்ற ஆம்பிளைகளை, ஆரம்பத்திலேயே அடையாளம் கண்டுக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம்! தங்கச்சிகூட இருக்கிறப்ப யார் என்னை ஓ.கே. பண்றாரோ, அவர்தான் திட புத்தியுள்ள ஆண். அவரைக் கல்யாணம் செய்துக்கத்தான் நான் விரும்பறேன்!’’ - உறுதியாகச் சொன்னாள் ரமா.
   - ஆர்.பிருந்தா
  • By நவீனன்
    ஒரு நிமிடக் கதை செல்லினம்!
   பேரன் ரமணா குழந்தையா இருக்கும்போது அவனோடு சரிக்குச் சரியாக விளையாடி, அவன் வளர வளர நல்லது கெட்டதுகளை அறிவுபூர்வமாக எடுத்துச் சொல்லி வளர்த்தவர் தட்சிணாமூர்த்தி. தன் பேரனிடம் மட்டுமல்ல... அவன் ஈடு பிள்ளைகள் எல்லாரிடமும் எப்போதும் பேசி, சிரித்து கலகலவென்று இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்த்து, ‘‘தாத்தான்னா இப்படித்தான் இருக்கணும்’’ என்பார்கள் எல்லோரும்!   சமீப காலமாக எந்த சத்தத்தையும் கேட்க முடியவில்லை. தட்சிணாமூர்த்தி முகத்திலும் மலர்ச்சி இல்லை. இன்று மதியம் திடீரென மூச்சுப் பேச்சில்லாமல் படுக்கையில் விழுந்தவர், அப்படியே முடிந்து போனார். ரமணா அப்போது வீட்டில் இல்லை. அவனிடம் தாத்தாவின் மறைவுச் செய்தியைச் சொல்ல, ஊர்ப் பெரியவர் கணேசன் பழசை எல்லாம் நினைத்துப் பார்த்துக்கொண்டே ரமணாவைத் தேடி பிள்ளையார் கோயிலுக்கு வந்தார்.

   இளைஞர்கள் தனித்தனியே ஆளுக்கொரு செல்லை தடவித் தடவிப் பார்த்து, அதன் திரையில் மூழ்கியபடி அமைதியாக இருந்தார்கள். அவர் வந்ததைக்கூட யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

   ‘‘ரமணா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   ‘‘தாத்தா...’’
   ‘‘ஊம்... ஊம்...’’
   கணேசன் ஒரு முடிவுக்கு வந்தவராக தன் செல்போனை எடுத்து வாட்ஸ்அப் மூலம் செய்தியைப் பகிர்ந்தார்.
   ‘‘ஐயோ தாத்தா... போயிட்டீங்களா!’’ - கதறி அழுதான் ரமணா. அழுது..?           
   http://kungumam.co.in/
  • By நவீனன்
     செயல்!
   அந்தக் காட்சி கீதாவின் மனசை உருக்கியது. சின்னஞ்சிறு பிஞ்சு, ஒரு வேளை உணவுக்காக எப்படியெல்லாம் தன் உடலை வில்லைப் போல் வளைக் கிறது. கணவன் விஷாலைப் பார்த்தாள். அவள் பார்வையைப் புரிந்துகொண்டு பக்கத்தில் இருந்த கடையில் பத்து ரூபாய் கொடுத்து பிஸ்கட் பாக்கெட் வாங்கினான். மனம் முழுதும் சந்தோஷமாக இருந்தது கீதாவுக்கு. திருமணமான ஆறு நாட்களுக்குள்ளே நம்மைப் புரிந்துகொண்டானே. ஆனால், அடுத்து அவன் செய்த செயல் அருவருப் பாக இருந்தது. பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, இரண்டு பிஸ்கட்டுகளைத் தான் எடுத்துக்கொண்டு, பிரித்த பாக்கெட்டை அந்தச் சிறுமியிடம் கொடுக்கும்படி கீதாவிடம் நீட்டினான்.
   வீடு வந்து சேரும் வரை ஒன்றும் பேசவில்லை கீதா. ‘‘அந்த பிஸ்கட் பாக்கெட் டைப் பிரிக்காமல் கொடுத்தால்தான் என்ன? இரண்டு பிஸ் கட்டில் உங்களுக்கு என்ன வந்துவிடப் போகி றது?’’ சற்று கோபமாகக் கேட்டாள்.‘‘நாம் பிஸ்கட் பாக்கெட்டைப்பிரிக்கா மல் கொடுத்தால் என்ன வாகும் தெரியுமா? நாம அங்கிருந்து நகர்ந்த உடனே, அந்தாளுங்க, பிஸ்கட் பாக்கெட்டைத் திரும்பவும் கடையிலேயே கொடுத்து, பணத்தை வாங்க முயற்சி செய்வாங்க. பாக்கெட்டைப் பிரிச்சுட்டா, கடைக்காரன் திருப்பி எடுத்துக்க மாட்டான். அந்தப் பிஞ்சுக்கு இரண்டு பிஸ்கட்டாவது கிடைக்குமே, அதனாலதான்!’’
   -எம்.காஞ்சனாகரண்
   https://www.vikatan.com/
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை

             கடவுள் ஒரு கணக்கன்!
   கிழித்த நாராக ஆஸ்பத்திரி படுக்கையில் கிடந்தாள் உமா. இந்தப் பதினைந்து நாட்களாக நாராயணனுக்கு உலகமே இருண்டதாகத் தெரிந்தது.
   அவள் அவனது அன்புக்குரிய மனைவி மட்டுமல்ல; அவனது உயிரே அவள்தான்! யாருக்கு என்ன உதவி தேவை என்றாலும், ஓடிப் போய் உதவுகிற பரோபகாரி அவள். அவளுக்கா இந்த நிலை!
   நியாயமாக அந்த வியாதி தனக்கு வந்திருக்க வேண்டியது. நம்பிய நண்பனுக்குத் துரோகம், வேலை பார்த்த அலுவலகத்துக்குத் துரோகம்... சே!
   ‘‘கடவுளே! நீ என்னைத்தானே தண்டித்திருக்க வேண்டும். என் மனைவிக்கு ஏன் கஷ்டம் கொடுக்கிறாய்?’’ என்று சாமி படத்தின் முன் அழுதான்.
   ‘‘உனக்கும் கஷ்டம் தந்தேன். ஆனால், அவற்றை உதாசீனப்படுத்தினாய். தொடர்ந்து தவறு செய்தாய். உன் மனைவிக்கு ஒரு கஷ்டம் என்றதும், துடிக்கிறாய் அல்லவா! இனியாகிலும் திருந்து!’’
   கடவுள் சொன்னது, அவன் காதில் மட்டும் விழுந்தது.
   - ஜே.வி.நாதன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
     உக்காந்து யோசிப்பாய்ங்களோ!
   பிரபல டைரக்டர் சந்திரனை மிகுந்த சிரமத்துக்குப் பின் சந்தித்துப் பேசினான் ரகு. ‘‘சார், நான் கற்பனை பண்ணி வெச்சிருந்த மாதிரியே அச்சு அசலா நிறைய ஸீன்கள் இப்ப வர்ற படங்கள்ல வருது’’ என்ற வன், தன் ரசனையும் ஐடியாக்களும் சமீபத்திய ரிலீஸ் சினிமாக்களில் இடம்பெற்ற சூப்பர் ஸீன்கள், கிராஃபிக்ஸ் உத்திகள், க்ளைமாக்ஸ் திருப்பம் எனப் பல விஷயங்களில் பொருந்தியிருப்பதை உதாரணங்களோடு சொல்லிப் பெருமைப்பட்டுக்கொண்டான்.
   பின்பு, ‘‘சார், என்னை உங்க அசிஸ்டென்ட்டா சேர்த்துக்கிட்டீங்கன்னா ரொம்ப ‘யூஸ்’புல்லா இருப்பேன்...’’ என்றான்.
   ‘‘ஸாரி பிரதர், எனக்கு மத்தவங்களை மாதிரியே யோசிக்கிற ஆட்கள் வேணாம். புத்தம்புதுசா இதுவரைக்கும் யாரும் யோசிக்காத மாதிரி ‘திங்க்’ பண்றவங்கதான் வேணும்’’ என்று ரகுவுக்கு வாசலைக் காட்டினார் டைரக்டர்!
   - எஸ்.மாலதி
   http://www.vikatan.com
  • By நவீனன்
   ‘அவனை அழிக்கிறேன் பார்’   சூழுரைத்தல், சபதமேற்றல் எல்லோருக்கும் ஏற்புடையதல்ல; நல்ல நோக்கத்தை நிறைவேற்றுவேன் எனச் சபதமேற்பவர்களை விட, “அவனை அழிக்கிறேன் பார்” என எதிரிகளை அழிக்கச் செய்ய, சபதம் எடுப்போர் தொகைதான் அதிகம்.  
   உலகம் அழுக்காகி வருகின்றமைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். 
   இன்று உலக நாடுகள்கூட, மக்களை அழித்து, உரிமைகளை அடக்கும் செய்யும் வண்ணம், வெளிப்படையாக சூழுரைகளும் மறைமுகமாகச் செய்யும் கழுத்துறுப்புகளையும் மக்கள் பார்த்து, இரசிக்கின்றார்கள். வலு இழந்த மக்கள் போராட்டம் செய்ய, எந்த அரசுமே அனுமதிப்பதில்லை.  
   நீதியைக் காப்பாற்று வதைவிட, தங்கள் ஆணவ அதிகாரத்துக்கு வலுச் சேர்ப்பதையே பலரும் விரும்புகின்றனர்.  
   போலியான ஒரு சந்தோசத்துக்காக எவரையும் நோகடிப்பது, அவ்வாறு பெற, எண்ணுதல் கண்ணியமானதல்ல;  
   http://www.tamilmirror.lk
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை
   பழக்கம்
   காலை டிபனாக பொங்கலை எடுத்து சுவைத்த ராகவனின் முகம் சிவந்தது.
   ‘‘எனக்கு இஞ்சி பிடிக்காதுன்னு தெரியுமில்ல? இத்தனை நாளா இஞ்சி போடாமதானே இருந்தே? அப்புறம் ஏன் இன்னைக்குப் போட்டே?’’ - பொங்கலைத் துப்பியபடி கேட்டான்.
   ‘‘இதுவரைக்கும் சாப்பிடலை. இனிமே சாப்பிடுங்க!’’ என்றபடி கிச்சனுக்குள் சென்றுவிட்டாள் சுசீலா. மதியம் பசியுடன் அமர்ந்த ராகவன், சாம்பாரில் முள்ளங்கி தெரிந்ததும், எரிச்சலானான்.
   ‘‘ஏண்டி! எனக்கு முள்ளங்கி வாசனையே பிடிக்காதுனு தெரியுமில்ல?’’ - போனில் கேட்டான்.
   ‘‘மூக்கை மூடிக்கிட்டுச் சாப்பிடுங்க!’’ என்று ‘கட்’ ஆனாள் சுசீலா.
   அலுவலகம் முடிந்து திரும்பிய ராகவனை, சூடான மெதுவடைகள் வரவேற்றன. ‘‘ஆஹா!’’ என்று எடுத்துக் கடித்தவன், கோபத்தில் வெடித்தான்.
   ‘‘வடையில உங்களுக்குப் பிடிக்காத மிளகு போட்டிருக்கேன். அதனாலென்ன? சும்மா சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.   ‘‘ஏண்டி! உனக்கு என்ன ஆச்சு?’’
   ‘‘கிராமத்துல தனியா இருக்கிற உங்க அம்மா, அடுத்த மாசத்திலிருந்து நம்ம கூடத்தான் இருக்கப் போறாங்க. அவங்களுக்கு இஞ்சி, மிளகு, முள்ளங்கி எல்லாம் ரொம்பப் பிடிக்கும்ங்க. இனிமே அதையெல்லாம் சேர்த்துதானே சமைக்கணும். அவங்க எதிர்ல நீங்க கோபப்பட்டா, வருத்தப்பட்டு திரும்பிப் போயிடுவாங்க. அதனால, நீங்களும் எல்லாத்தையும் இப்பவே சாப்பிடப் பழகுங்க!’’ என்றாள் சுசீலா.
   kungumam.co
  • By நவீனன்
   ஒரு நிமிடக் கதை பார்ட்டிக்குப் பாட்டியா?   பார்ட்டிக்குப் பாட்டியா?
   ‘‘என்னங்க, சொன்னா கேளுங்க. நாளைக்கு நியூ இயர் பார்ட்டிக்கு உங்கம்மாவையெல்லாம் கூட்டிட்டுப் போக வேணாம். அவங்களும், அவங்க கண்டாங்கிப் புடவையும், தொளதொள ரவிக்கையும், இழுத்து இழுத்துப் பேசும் கிராமத்துத் தமிழும்... நம்ம மானமே போயிடும்!’’
   ஜானகி தீர்மானமாகச் சொல்ல, கணவர் வாயடைத்து நிற்க, ‘‘ஆமாப்பா! அம்மா சொல்றது சரிதான். ஸ்டார் ஓட்டல், நியூ இயர் பார்ட்டி இதுக்கெல்லாம் பாட்டி சரிப்பட்டு வரமாட்டாங்க’’ என்றான் அவர்களின் மகன் ஸ்ரீராம்.
   ‘‘சரியாச் சொன்னேடா, ஸ்ரீராம்!’’ என்று மகிழ்ந்தாள் ஜானகி.
   ‘‘ஆமாம்மா! நாளைக்கே நான் பெரியவனா னதும், என்கூட நியூ இயர் பார்ட்டிக்கு உன்னை எல்லாம் கூட்டிட்டுப் போனா எனக்கும் அசிங்கமாதானே இருக்கும்!’’
   ஜானகிக்குச் சுருக்கென தைத்தது!
   - வரலொட்டி ரெங்கசாமி
    
    
     கா தலைச் சொல்லிவிடுவதென்று முடிவுசெய்துவிட்டு, செல்போன் மெஸேஜில் ‘ஐ லவ் யூ’ என்று டைப் செய்தான். அனுப்புவதற்கு முன், செல்போன் மெமரி யில் உள்ள பெயர்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் தொடங்கினான், யாருக்கு அனுப்பலாம் என்று!
   - அ.ரியாஸ்
   http://www.vikatan.com