• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
குமாரசாமி

தடயமின்றி அழித்திடுவோம்.

Recommended Posts

Bild könnte enthalten: 4 Personen, Personen, die stehen, Hochzeit, Menschenmasse und im Freien

தடயமின்றி அழித்திடுவோம்

அடிமைகளின் கூட்டம் கண்டேன் 
அகமகிழ்ந்து பேச கேட்டேன் 
ஆயாவை தலைவியாக்கிவிட்டு 
ஆனந்த கூத்தாட கண்டேன்
வேட்டிக்கட்டிய ஆண்கள் எல்லாம்
வெட்கத்தை தொலைக்க கண்டேன்
மூத்தோரென்று சொல்லப்பட்டோர் 
முட்டாள்களாய் நிற்க கண்டேன்
களவு செய்யும் வாய்ப்பிற்காக 
கைகூப்பி நிற்க கண்டேன்
பெண்ணின் காலில் விழுவதனை 
பெருமையாக நினைக்க கண்டேன்
பணமொன்றே நோக்கமென்று 
பல்லிளித்து சிரிக்க கண்டேன்
பச்சோந்தியும் தோற்றுப்போகும் 
பகல்வேஷ நடிப்பு கண்டேன்
காசு பணம் சுருட்டிடவே 
காலில் விழும் கூட்டத்திற்கு 
ஈனம் மானம் எதுவுமில்லை 
என்பதையும் அறிந்து கொண்டேன்
எதிர்ப்பு சொல்ல ஒருவருக்கும் 
ஏன் தோன்றவில்லை என்றால் 
கைமாறிய பண கட்டிற்காக
கட்டுகோப்பை காட்டுகின்றார்
உங்களின் திருட்டு எண்ணம் 
ஒருபோதும் நிறைவேறிடாது 
அடிமட்ட தொண்டனெல்லாம்
அனலெனவே கொதிக்க கண்டேன்
இனியும் உங்கள் மாய்மாலம் 
இங்கு பலிக்காது சொல்வேன் 
தடயமின்றி அழித்தொழிக்க 
தயாராகவே மக்கள் உள்ளார் !

தங்கர்பச்சன்
ஒளிப்பதிவாளர், திரைப்பட இயக்குனர்.

http://cinema.dinamalar.com//tamil-news/56249/cinema/Kollywood/Thangar-Bachans-poet-regarding-sasikala-judgement.htm

  • Like 2

Share this post

Link to post
Share on other sites
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ம் யோசித்து தான் சொல்ல வேண்டும் கருத்து தமிழ் நாட்டு மக்களை நம்பவே முடியாது மிஸ்டர் தங்கர் பட்சன்tw_confused:

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, முனிவர் ஜீ said:

ம் யோசித்து தான் சொல்ல வேண்டும் கருத்து தமிழ் நாட்டு மக்களை நம்பவே முடியாது மிஸ்டர் தங்கர் பட்சன்tw_confused:

ஒரு சிறிய திருத்தம் முனிவர் ஜீ........

மக்கள் அல்ல தமிழ்நாட்டு அரசியலைத்தான் என்றுமே நம்ப முடியாது.

கொள்ளை கொலைகளை மூலதனமாக கொண்டதுதான் இந்திய அரசியல்.
சசிகலா சிறைக்கு சென்றதை கொண்டாடும் கூட்டம் திமுக கட்டுமரத்தின் கொள்ளைகளை மறந்து விட்டார்களா? tw_blush:

Share this post

Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

ஒரு சிறிய திருத்தம் முனிவர் ஜீ........

மக்கள் அல்ல தமிழ்நாட்டு அரசியலைத்தான் என்றுமே நம்ப முடியாது.

கொள்ளை கொலைகளை மூலதனமாக கொண்டதுதான் இந்திய அரசியல்.
சசிகலா சிறைக்கு சென்றதை கொண்டாடும் கூட்டம் திமுக கட்டுமரத்தின் கொள்ளைகளை மறந்து விட்டார்களா? tw_blush:

மறக்கலாம் அல்லது மறந்து போகலாம் கட்சி, அதிகாரிகளுக்கு  விசுவாசமானவர்கள் கொலை செய்த்தால் கூட ஒத்துக்கொள்வதில்லை

மீண்டும் இந்த தி.மு.க.............. (திருத்த முடியாத முன்னேற்ற கழகம்) வந்தாலும் மக்களை கவிழ்க்க சதி பண்ணலாம் அல்லாவா அரசியல்யென்பது  அதுதானே மக்களை முட்டாளாக்கி அதில் மயக்க மருந்து தெளித்து மந்த நிலையில் வைத்து இருத்தல்

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, முனிவர் ஜீ said:

இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டிலிருந்து ஒடுக்கப்பட வேண்டும். தமிழ்நாடும் தமிழும் ஓகோவென்று உலகில் மிளிரும்.

வெளிநாட்டில் உள்ள பேருந்துவண்டியில் தமிழில் அறிவிப்பு பலகை இருந்தால் அது தமிழ்வளர்ச்சி என்று நினைத்தால் அது தவறு.... அது வியாபாரம்.

  • Like 1

Share this post

Link to post
Share on other sites

தமிழக மக்களின்... மன ஓட்டத்தை, அழகிய கவிதையாக வடித்துள்ளார் தங்கர் பச்சான். :)

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this