Jump to content

சசிகலாவின் மூன்று சபதங்கள் இவை தான்!


Recommended Posts

சசிகலாவின் மூன்று சபதங்கள் இவை தான்!

Sasikala at Jaya memorial

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சரணடையப்போகும் சசிகலா, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்றார். அப்போது மலர்தூவி மரியாதை செலுத்திய சசிகலா, ஜெயலலிதா சமாதி மேல் கையை மூன்று முறை அடித்து சபதம் செய்தார். ’சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன்’, என சசிகலா சபதம் ஏற்றுக் கொண்டதாக அதிமுகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய சின்னம்மா சபதம் ஏற்றார்.

— AIADMK (@AIADMKOfficial) February 15, 2017

http://www.vikatan.com/news/tamilnadu/80896-these-are-the-three-vows-of-sasikala-at-jayalalithaa-memorial.html

Link to comment
Share on other sites

பேசும் படம்: சரணடையும் முன் சபதமேற்ற சசிகலா!

 

p_3133314f.jpg
 
 
 

பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையும் முன்னர், மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்றார் சசிகலா. அவருடன் அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், முன்னாள் அமைச்சர் ப.வளர்மதி ஆகியோர் சென்றனர். நினைவிடத்தை வலம் வந்து வணங்கிய சசிகலா அங்கு சபதம் செய்தார். நினைவிடத்தின் மீது ஓங்கி அடித்து அவர் சபதம் செய்தார். பின்னர் கண்கள் கலங்கியபடியே வெளியே வந்தார்.

17e8f752-e681-4208_3133304a.jpg

47e45ed3-02bd-45eb_3133305a.jpg

6f89d736-c524-4d1f_3133306a.jpg

f3abb035-2aea-45c6_3133303a.jpg

94de130c-885c-4007_3133308a.jpg

a508e1c7-f090-44de_3133310a.jpg

 
 

http://tamil.thehindu.com/tamilnadu/பேசும்-படம்-சரணடையும்-முன்-சபதமேற்ற-சசிகலா/article9544487.ece?homepage=true

Link to comment
Share on other sites

சபதம் போட்டு தாதா முகத்தை சசிகலா காட்டியபோது நடுநடுங்கிப் போன வளர்மதி

 

ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் போட்டு தாதா முகத்தை சசிகலா காட்டியபோது நடுநடுங்கிப் போனார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.

 

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் போட்டு தாம் பெண் தாதா என்பதை வெளிப்படுத்திய போது அருகே இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி வெலவெலத்துப் போனவராக இருந்தார்.

அதிமுகவில் போல்டான பெண்மணிகளில் ஒருவராக நெட்டிசன்களால் கலாய்க்கப்படுபவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி. ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியாக தம்மை காட்டிக் கொண்டு வேப்பிலை ஆடை உடுத்துவது, மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி எடுப்பது என ஏகத்துக்கும் அலம்பல் காட்டியவர்.

சசி ஆதரவாளர்

 

சசி ஆதரவாளர்

ஜெயலலிதா மறைந்தபோது சகஜமான நிலையில் வளர்மதி சிரித்துக் கொண்டே இருந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர சசிகலா ஆதரவாளராக மாறிப் போனார் வளர்மதி.

பெண் தாதா

 

பெண் தாதா

சசிகலாவோ முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் வெறித்தனமாக ஒரு பெண் தாதாவைப் போல செயல்படுகிறார் என தமிழக காங். கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதை இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வெளிப்படுத்தினார் சசிகலா.

 

சபதம்

சபதம்

பெங்களூரு சிறைக்குப் போவதற்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் 3 முறை சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்து தாதாவை போலவே ஆவேசமாக சபதமெடுத்துக் கொண்டார். அப்போது யாரையோ அழிப்பேன் என்றெல்லாம் முணகினார்.

அதிர்ந்த வளர்மதி

அவரது அருகே இருகரம் கூப்பியவாறு நின்றிருந்த வளர்மதி அதிர்ச்சியில் உறைந்து குலைநடுங்கியவராக சசிகலாவையே பார்த்துக் கொண்டிருந்தார். வளர்மதியே அதிர்ந்து போறாங்கன்னா 'சின்னம்மா' ஆவேசம் எப்படி இருக்கும் என்பதுதான் அங்கு நின்றிருந்த அதிமுக தொண்டர்களின் கமெண்ட்டாக இருந்தது.
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/valarmathi-shocks-over-sasikala-s-actions-jaya-memorial-274177.html

Link to comment
Share on other sites

சிறை செல்லும் முன் ஜெ. நினைவிடத்தில் சபதம் செய்த சசிகலா

 
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா
ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா
 
 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையச் செல்வதற்கு முன், மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்றார். அங்கு அஞ்சலி செலுத்தியபின் சபதம் மேற்கொண்டார்.

அவர் ஆவேசமாக சபதம் செய்த காட்சி ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

நினைவிடத்தில் அந்த சில நிமிடங்கள்:

பெங்களூரு செல்லும் முன் சென்னை மெரினாவுக்கு வந்த சசிகலா ஜெயலலிதா நினைவிடத்தில் பூக்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். அங்கு கண்மூடி நின்ற சசிகலா மற்றவர்களுக்குக் கேட்காத வகையில் முணுமுணுத்தார்.

சிறிது நேரம் அமைதியாக நின்ற சசிகலா, மூன்று முறை வணங்கியும் எழுந்தவர் திடீரென சமாதியில் ஓங்கி அடித்து சபதம் ஏற்றார். "சூழ்ச்சி, துரோகம், இக்கட்டு ஆகிய மூன்றில் இருந்தும் மீண்டு வருவேன் என அவர் சபதம் மேற்கொண்டார்" என அதிமுகவின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜெ. நினைவிடத்திலிருந்து எம்ஜிஆர் இல்லத்துக்குச் சென்றவர், அங்கிருந்த எம்ஜிஆர் சிலையைத் தொட்டு வணங்கினார். அங்கேயே சில நிமிடங்கள் தியானத்திலும் ஈடுபட்டார்.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு கூவத்தூரில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, ''அதிமுகவை என்னிடம் இருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்போதும் இருக்கும். என்னை எந்தக் கூண்டில் அடைத்தாலும் கட்சி வளர்ச்சியை நோக்கித்தான் எனது எண்ணம் இருக்கும். என்னைத்தான் அடைக்கலாமே தவிர எனது மனதை அடைத்துவைக்க முடியாது. என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது.

இந்த வழக்கைப் போட்டது திமுகதான். அதனால் திமுக என்ற ஒன்று இருந்ததா என்ற நிலையை நீங்கள்தான் உருவாக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/சிறை-செல்லும்-முன்-ஜெ-நினைவிடத்தில்-சபதம்-செய்த-சசிகலா/article9544749.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுசா சந்திரமுகியாகிட்டா பாருங்கோ சச்சிகலா..

Image may contain: 3 people

ரா..ரா...

Link to comment
Share on other sites

எல்லாம் பதவி படுத்தும் பாடு; சசிகலா சிறைப்பறவையான பின்னணி!

சசிகலா

நேற்றுவரை சினிமாவில் பார்த்து கைதட்டி மகிழ்ந்த காட்சிகள்தான். தமிழகத்தில் நிஜமாகவே  அரங்கேறும் என யாரும் நினைத்துப்பார்த்திருக்க வாய்ப்பே இல்லாத இக்காட்சிகள் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு குறையாமல் நடந்துவருகிறது. ஜெயலலிதா இறக்கிறார், பன்னீர்செல்வம் முதல்வராகிறார், சசிகலா பொதுச் செயலாகிறார்...க்ளைமேக்ஸில் தன் ராஜினாமா கடிதத்தை கவர்னர் அலுவலகத்துக்கு கொடுத்துவிட்டு அழுதபடி அம்மா சமாதியில் போய் அமர்கிறார் பன்னீர். மீடியாக்களிடம் தன் அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு தன் கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் சசிகலா அதிருப்தியாளர்களுக்காக காத்திருக்க ஆரம்பிக்கிறார்.

இதனிடையே கூவத்துாரில் தன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களை தங்கவைக்கிற சசிகலா, 'கவர்னர் தங்களை ஆட்சியமைக்க அழைப்பார்' என கால்கடுக்கக் காத்திருக்கிறார். 'தான் ஆட்சியமைக்கப்போவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என வீராப்பு காட்டுகிற விறுவிறுப்பான கதையின்போக்கில் கிளைமேக்ஸ் வருகிறது. 

சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் முந்தையை தீர்ப்பை உறுதி செய்கிறது உச்ச நீதிமன்றம். பரபரப்பான இந்தக் காட்சிகளினிடையே பன்னீர் கூவத்தூரில் தங்கியுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களைப் பார்க்கத் திட்டமிடும் வேளையில்... அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. பன்னீர் சற்று ஓய்வில் இருக்க, சசிகலா சிறை செல்லும் படலம் தொடங்க... இப்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இந்தப் படத்தின் முதல் பகுதி முடிந்திருக்கிறது.

இப்படிச் சினிமாவை விஞ்சி, தமிழகத்தில் நடந்துமுடிந்த அரசியல்  இந்த  களேபரங்களுக்கு பின்னணியில், மத்திய அரசின் பங்கு இருப்பதாகச் சொல்கிறார்கள் விபரமறிந்தவர்கள். தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அதைப் பறிக்க சசிகலா தரப்பு மேற்கொண்ட முயற்சிகள் பன்னீர்செல்வத்துக்கு அதிருப்தியைத் தந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த நிலையில் தலைமைக் கழகத்தில் ஜனவரி இறுதியில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில்... பத்தோடு பதினொன்றாக பன்னீருக்கு மேடையின் கீழே இருக்கை ஒதுக்கப்பட்ட சம்பவம் மனதில் அவருக்கு குடைச்சலை தந்துகொண்டிருந்தது.  உச்சகட்டமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சசிகலாவின் ரத்த உறவுகளால் அவர் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

பன்னீர்செல்வம்

இதன்பின்னர்தான் மத்திய அரசு மாநிலத்தில் நடக்கும் நிகழ்வுகளை கூர்ந்துகவனிக்கத்துவங்கியதாம். சசிகலா தரப்பினரால் பன்னீர் மிரட்டப்பட்டாரா என்ற தகவல்களை உளவுத்துறை மூலம்    உறுதிசெய்த மத்திய அரசு அதன்பின்னரே தனது ஆட்டத்தை துவங்கியது என்கிறார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலா கைப்பற்றியபோது அமைதிகாத்த பி.ஜே.பி தலைமை, அடிப்படை அரசியல்வாதியாக அல்லாமல்... 'ஜெயலலிதாவின் தோழி' என்று மட்டுமே அறியப்பட்ட சசிகலாவை, முதல்வர் என்ற நிலையில் வைத்துப்பார்க்க விரும்பவில்லை. குறிப்பாக, சசிகலாவின் மீது சொத்துக் குவிப்பு வழக்கு நிலுவையில் இருந்ததும் மத்திய அரசை யோசிக்கவைத்ததாம். ''அரசியல் தவிர்த்து தனிப்பட்ட முறையிலும், ஜெயலலிதாவுடன் நல்ல நட்புடன் இருந்த பிரதமர், இத்தனை தகுதிக்குறைவுடன் ஒருவர் அ.தி.மு.க-வின் தலைமைப் பதவிக்கும் ஆட்சிப்பொறுப்புக்கும் வருவதை விரும்பவில்லை'' என்கிறார்கள்.

மேலும் இந்திய அரசியலில் 'துக்ளக்' சோ, மற்றும் நரேந்திரமோடி இருவரிடமும்தான் ஜெயலலிதா அரசியலை மீறி தனது தனிப்பட்ட விஷயங்கள் பலவற்றையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இப்படி ஜெயலலிதாவின் மனவருத்தங்கள் சிலவற்றையும் நன்கறிருந்திருந்த டெல்லி தலைமை சசிகலா ஆட்சிப்பொறுப்புக்கு வருவதை அறவே விரும்பவில்லை என்கிறார்கள்.

இதனால் சசிகலாவை முதல்வராக்கும் முடிவைத் திரும்பப் பெற பரிசீலிக்கும்படி கட்சியின் இரண்டாம்கட்டத் தலைவர்களிடம் பேசப்பட்டதாம். ஆனால், சசிகலா தான் முதல்வராவதில் உறுதியாக இருந்த தகவல் தெரிவிக்கப்பட்டபோது பி.ஜே.பி தலைமை எரிச்சலுக்குள்ளானது. இந்த நிலையில்தான் கடந்த 6-ம் தேதி ராஜினாமா தந்துவிடும்படி ஓ.பி.எஸ்ஸுக்கு இறுதி எச்சரிக்கை அ.தி.மு.க-வில் உள்ள சிலரால் விடுக்கப்பட்டது. அதன்படி ராஜினாமா செய்ய முடிவெடுத்த ஓ.பி.எஸ்ஸிடம் மத்திய அரசிடமிருந்து சிலர் பேசியதாகச் சொல்லப்படுகிறது. சசிகலாவுடன் கருத்துவேறுபாட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் எதிர்காலத்தில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்லுமா என்பது குறித்து உறுதிபெறப்பட்டதாம். ஓ.பி.எஸ்ஸின் எந்த நடவடிக்கைக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என உறுதி தரப்பட்டதாம். ' 'ஓ.பி.எஸ் தரப்பில் அதற்கு பச்சைக்கொடி காட்ட, காரியங்கள் விறுவிறுவென நடைபெற்றது'' என்கிறார்கள்.  

பன்னீர்செல்வம்

''ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டது முதலே எல்லா விஷயங்களும் திட்டமிட்டுச் செய்யப்பட்டன'' என்கிறார்கள். ஒரு முதல்வர் தனது ராஜினாமாவை கவர்னரிடம் முறையாக ஒப்படைப்பதுதான்  நடைமுறை. ஆனால், ராஜினாமா கடிதம் ஃபேக்ஸ் மூலம் கவர்னர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அன்றைய தினம் கவர்னர் சென்னையில் இல்லாமல் பார்த்துக்கொள்ளப்பட்டது. கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட கடிதத்திலும் தேதி தவறுதலாக இடம்பெறும் வகையில் ஃபேக்ஸ் இயந்திரத்தில் தேதியை மாற்றி அமைத்ததாகச் சொல்கிறார்கள். இதனால் கடிதம் பெற்ற தேதி ஒன்றாகவும் கடிதத்தில் உள்ள தேதி வேறொன்றாகவும் இருந்திருக்கிறது. அதாவது, எப்போது வேண்டுமானாலும் ராஜினாமா கடிதத்தின் செல்லுபடித்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் இப்படித் திட்டமிட்டுக் கடிதம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டனவாம். அதன்படியே தனது ராஜினாமா கடிதம் மிரட்டிப் பெற்றதாக கவர்னரிடம் மனு அளித்து சசிகலாவை  அழைத்துவிட முடியாதபடி ஒரு சட்டச் சிக்கலை உருவாக்கினார் ஓ.பி.எஸ். 

அதன்பின்னரே கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எம்.எல்.ஏ-க்களுக்காக ஓ.பி.எஸ் 'காத்திருக்க' ஆரம்பித்தார் என்கிறார்கள். ஆட்சியமைக்க எம்.எல்.ஏ-க்கள் போதும் என்ற நிலையில் எம்.பி-க்களும் கிரீன்வேஸ் சாலைக்கு படையெடுத்துவர ஆரம்பித்ததன் பின்னணியும் பி.ஜே.பி-தான் என்கிறார்கள். நேரடியாக நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என்றாலும் சென்சிடிவ் வழக்கான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கினை உள்துறை அமைச்சகம் மூலம் அறிந்துகொண்ட மேலிடம், அதன்படி கவர்னர் மாளிகைக்கு சில அறிவுறுத்தல்களைச் செய்ததாகத் தெரிகிறது. அதுதான் போதிய எம்.எல்.ஏ-க்கள் தங்களிடம் இருப்பதாகக்கூறித் தங்களை ஆட்சியமைக்கக் கோரிய சசிகலாவுக்கு கவர்னர் செவிமடுக்காமல் போகக் காரணமாம். அதேசமயம், கவர்னர் தங்களை அழைக்க வேண்டும் என மன்றாடி வந்தபோதும் கவர்னரிடம் இருந்து எந்தச் சமிக்ஞையும் கிடைக்காதது குறித்து மத்தியில் உள்ள தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தபோது, மத்திய அரசின் தீவிரமான பின்னணி தெரியவந்தது என்கிறார்கள்.

சசிகலா

“பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு” என சசிகலா பேட்டியளித்த பின் பாஜக வின்   எச்.ராஜா, அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் பாஜகவுக்கு அதை சமாளிக்கத் தெரியும் என பதிலடி கொடுத்ததும், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானபோது, “யாருக்கு தண்டனை கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது” என தமிழிசை சொன்னதும் இதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் தெரியவந்த பிறகுதான், ஆட்சியமைப்பது அப்புறம் இருக்கட்டும், தீர்ப்பு சாதகமாக இல்லாமல் போனால் கட்சியைத் தக்கவைப்பதற்கான விஷயங்களை முதலில் பார்க்கலாம் என சசிகலா, தீர்ப்புக்கு முன்தினமே கூவத்துார் போய் தங்குவதென முடிவெடுத்தாராம். அன்றைய தினம் போயஸ் கார்டன் கிளம்பிச்செல்கையில், கவர்னர் அழைக்காதது குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, “வெளிப்படையாக இதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது புத்திசாலி பத்திரிகையாளர்களான உங்களுக்கே நன்றாகத் தெரியுமே” எனச் சொன்னார் கடுகடு முகத்துடன். 

கூவத்துாரில் அன்றிரவு அளித்த பேட்டியின்போதும், ''தான் ஆட்சியமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்கமுடியாது'' என்றெல்லாம் படபடத்தார். இந்த நிலையில் நேற்று சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. இதன் எதிரொலியாகச் சசிகலாவுக்கு பதிலாக அ.தி.மு.க சட்டமன்ற கட்சியின் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதுடன் “மகனே இனி உன் சமத்து” என  மத்திய அரசு தனது ஆட்டத்தை முடித்துக்கொண்டுள்ளது என்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதியதாக ஆட்சி அமைந்தபின் சட்டமன்றத்தில் நடத்தப்போகும் ஆட்டமே, தமிழக அரசியலின் இரண்டாவது பகுதி என்கிறார்கள். இருப்பினும், ஓ.பி.எஸ்ஸின் அதிரடிகளால் ஆட்சிக்கு எந்தப் பாதகம் வந்தாலும் கட்சியைத் தக்கவைக்கும் நோக்கிலேயே டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக அவசர கதியில் நியமித்து சிறை சென்றிருக்கிறார் சசிகலா.

எம்.ஜி.ஆர்

அதன் முதற்கட்டமாக சசிகலாவின் வாகனம் இன்னமும் பெங்களுரு நெருங்காத நிலையிலேயே கானா எனப்படும் கருப்பசாமி பாண்டியன் இந்த நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க-வின் பை லா எனப்படும் சட்டவிதிகளின்படி, சசிகலாவே நெருக்கடியான நேரத்தில் நியமிக்கப்பட்ட ஒரு தற்காலிக பொதுச்செயலாளர்தான். பொதுச் செயலாளர் நியமனத்துக்கான எந்தச் சட்டவிதிகளின்படியும் அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால், சசிகலாவும் அவரால் செய்யப்பட்ட நியமனங்களும் செல்லாது என அதிருப்தியாளர்கள் நீதிமன்றப் படியேறவும் வாய்ப்புள்ளது எதிர்காலத்தில். 

தான் அங்கம் வகித்த கட்சியில் புரையோடிப்போன ஊழலை எதிர்த்து எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சிதான் அ.தி.மு.க. ஆனால், எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில் அதன்  இன்றைய தலைமை ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டு சிறை செல்லும் நிலை ஏற்பட்டிருப்பதுதான் வரலாற்றுச் சோகம்.

எம்.ஜி.ஆரின் நுாற்றாண்டுக் கொண்டாட்டம் இப்படித்தான் தொடங்கியிருக்க வேண்டியிருக்கவேண்டுமா என பலரும் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிற, அதேவேளையில் எம்.ஜி.ஆரை நிஜமாய் நேசிக்கும் ஒவ்வொரு தொண்டனின் மனதும் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும், காரணம் தங்கள் தலைவரின் நுாற்றாண்டுக் கொண்டாட்டத்துக்குத் காலம் தந்த பரிசு இது என்பது அவர்கள் மட்டுமே அறிந்த உண்மை! 

http://www.vikatan.com/news/tamilnadu/80926-bjp-role-and-factions-in-admk-reason-behind-sasikalas-jail-term.html

Link to comment
Share on other sites

16711708_166460463856759_565463932984726

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார்குடி கரும்புத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த இந்த கருங்குயில் CM ஆகும் கனவோடு வந்து கண்டமானதால், ஜெயிலுக்கே திரும்பிப் போகிறது.. tw_tounge_wink:16708294_830253427128144_827826524099462
Toda

Link to comment
Share on other sites

:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபதமெல்லாம் ஓக்கே..! ஆனால் சசிகலாவிடம்  ஹெஸ்பெண்டாக ஒர்க் பண்ணிய நடராசன் நிலைமைதான் அந்தோ பரிதாபம் ..!! முதல்வர் கனவோட ஜெயலலிதா இல்லத்தில் பணி செய்ய 20 வருடத்திற்கும் மேல் அனுமதித்த அவருக்கு கிடைத்தது என்னவோ "0" !!

sasi.jpg

 

மணிவண்ணன் :  ( சுற்றும் முற்றும்  பார்த்து போட்டு) என் வைப்பை  டச்சு பண்ணி 20 இயர்ஸ் ஆச்சு பா ..!!
சத்தியராஜ் :????? என்னது 20 இயர்ஸா ?
மணிவண்ணன் : ஒரு மனுசன் இந்த விசயத்தில் பொய் சொல்லுவானா ?
கவுண்டமணி : ச்சு.. ஒரு மனுசன் கல்யாணம் ஆகமா கூட இருக்கலாம் ..!! ஆனால் கல்யாணம் ஆகி 20 வருசத்திற்கும் மேல தொடாம இருந்திருக்கனா இவந்தான் தியாகி .. யோவ் தாடி!!  உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுதுய்யா..!!

டிஸ்கி :
குறிக்கோள் எல்லாம் ஓக்கெ ..! புள்ள குட்டி இல்லை ..போகட்டும் ..இந்த வேலைய செய்ய மனைவியை செயலலிதாவிடம் அனுப்புவதை விடுத்து சொந்தமா கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் எதிர்கட்சி தலைவர் ஆகி இருக்கலாம் ..! பெட்டர் லக் நெக்ஸ்ட் ரைம் சாரி நெக்ஸ்ட் ஜென்மம் ..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சபதமெல்லாம் ஓக்கே..! ஆனால் சசிகலாவிடம்  ஹெஸ்பெண்டாக ஒர்க் பண்ணிய நடராசன் நிலைமைதான் அந்தோ பரிதாபம் ..!! முதல்வர் கனவோட ஜெயலலிதா இல்லத்தில் பணி செய்ய 20 வருடத்திற்கும் மேல் அனுமதித்த அவருக்கு கிடைத்தது என்னவோ "0" !!

sasi.jpg

 

மணிவண்ணன் :  ( சுற்றும் முற்றும்  பார்த்து போட்டு) என் வைப்பை  டச்சு பண்ணி 20 இயர்ஸ் ஆச்சு பா ..!!
சத்தியராஜ் :????? என்னது 20 இயர்ஸா ?
மணிவண்ணன் : ஒரு மனுசன் இந்த விசயத்தில் பொய் சொல்லுவானா ?
கவுண்டமணி : ச்சு.. ஒரு மனுசன் கல்யாணம் ஆகமா கூட இருக்கலாம் ..!! ஆனால் கல்யாணம் ஆகி 20 வருசத்திற்கும் மேல தொடாம இருந்திருக்கனா இவந்தான் தியாகி .. யோவ் தாடி!!  உன் பீலிங்க்ஸ் எனக்கு புரியுதுய்யா..!!

டிஸ்கி :
குறிக்கோள் எல்லாம் ஓக்கெ ..! புள்ள குட்டி இல்லை ..போகட்டும் ..இந்த வேலைய செய்ய மனைவியை செயலலிதாவிடம் அனுப்புவதை விடுத்து சொந்தமா கட்சி ஆரம்பித்து இருந்தால் இந்நேரம் குறைந்தபட்சம் எதிர்கட்சி தலைவர் ஆகி இருக்கலாம் ..! பெட்டர் லக் நெக்ஸ்ட் ரைம் சாரி நெக்ஸ்ட் ஜென்மம் ..!

புரட்சியர்!

திரைப்படங்களில் எதுவுமே நிஜமில்லாமல் சோடிக்கப்படுவதில்லை.

உண்மையைத்தான் கற்பனை எனும் பெயரில் சினிமாக  எடுத்து நாலு காசு பார்க்கின்றார்கள் என்பது உங்களுக்கு தெரியாததா என்ன?:grin:

Link to comment
Share on other sites

ஜெ., சமாதியில் அடித்து சசி 'ஸ்டன்ட்'
எம்.ஜி.ஆர்., இல்லத்தில் தியானம்
 

 

  • gallerye_235050213_1711379.jpg

 

 
 

சொத்து குவிப்பு வழக்கில், சிறை தண்டனை பெற்ற, சசிகலா, அவரது அண்ணி இளவரசி ஆகியோர், போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டில் இருந்து, நேற்று காலை, 11:45 மணிக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைவதற்காக, கண்ணீர் மல்க காரில் புறப்பட்டனர்.

 

Tamil_News_large_171137920170215232855_318_219.jpg

ஒரு காரில், சசிகலா, இளவரசி இருந்தனர். காலை, 11:50 மணிக்கு, ஜெ.,யின் வளர்ப்பு மகன் சுதாகரன், அவரது மனைவி ஆகியோர், மற்றொரு காரில் புறப்பட்டனர். சசிகலாவின் உறவினர்கள் அழுதபடி, அவர்களை வழியனுப்பினர்.
 

சசிகலா 'ஸ்டன்ட்'


சசிகலாவின் கார் நேராக, ஜெ., நினைவிடத் திற்கு சென்றது. அங்கு மலர் துாவி சசிகலா வணங்கினார். பின், மூன்று முறை, ஜெ., சமாதியில் ஓங்கி அடித்து, ஆவேசமாக, 'ஸ்டன்ட்' செய்தார். மந்திரம் உச்சரிப்பது போல் ஏதோ பேசினார்.அங்கிருந்து கிளம்பியவர், மதியம், 12:13 மணிக்கு, ராமாவரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவு இல்லம் சென்றார். அங்கு, எம்.ஜி.ஆர்., சிலையை வணங்கி, சில நிமிடங்கள் கீழே அமர்ந்து, தியானம் செய்தார்.

அங்கிருந்து புறப்பட்டு, பெங்களூரு சென்றார். மாலை, 5:15 மணிக்கு, சசிகலா, இளவரசி ஆகியோர், பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
 

தொண்டர்கள் 'ஆப்சென்ட்'


அ.தி.மு.க., பொதுச் செயலரானதும், டிச., 30ல், ஜெ., நினைவிடத்திற்கு, சசிகலா வந்தார். அப்போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், கார்களில் அணிவகுத்து வந்தனர். நேற்று, சசிகலா வந்த போது, அமைச்சர்கள்,

எம்.எல்.ஏ.,க்கள் யாரும் வரவில்லை. நிர்வாகிகள் குறைந்த அளவில் வந்திருந்தனர்; தொண்டர்கள் யாரும் வரவில்லை.

கூறியது என்ன?


ஜெ., சமாதியில், கையால் மூன்று முறை அடித்து, சசிகலா 'ஸ்டன்ட்' செய்தது குறித்து, அருகில் இருந்தோர் கூறியதாவது:அவர் மெதுவாக கூறியதால், எதுவும் சரியாக காதில் விழவில்லை. சில நாட்களாக, 'ஜெ., ஆட்சியே தொடரும்;

சட்டசபையில், ஜெ., படம் திறப்பேன்; ராமாவரத்தில், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு வளைவு அமைப்பேன்' என, சசிகலா கூறி வந்தார். 'சிறையில் இருந்து மீண்டு வந்து, அதை நிறைவேற்றுவேன்' என, கூறியிருக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

போயஸ் கார்டன் பரபர நிமிடங்கள்


* நேற்று காலை, 9:00மணியில் இருந்து, செய்தியாளர்களும், போலீசாரும் குவிந்தனர்

* காலை, 10:00 மணிக்கு பின், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் வந்தனர். அவர்களை தொடர்ந்து, சசிகலா உறவினர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் வந்தனர்

* காலை, 11:05 மணிக்கு, கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர், கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினர்

* காலை, 11:32 மணிக்கு, இளவரசியின் மகன் விவேக் உள்ளிட்டோர் வெளியில் வந்தனர். அவர்கள், அ.தி.மு.க., தொண்டர்களிடம், 'சசிகலா, ஜெ., நினைவிடம் செல்ல இருக்கிறார். அதனால், அங்கு செல்லுங்கள்' என்றனர்.
 

எல்லாம் ஒன்னால தான்...: ஓங்கி அடித்த வலைதளவாசிகள்


பெங்களூரு சிறைக்கு செல்லும் வழியில், மெரினா சென்ற சசிகலா, ஜெயலலிதா நினைவிடத்தில், மலர் துாவி வணங்கினார். திடீரென, உடல் அடக்கம் செய்த இடத்தில் குனிந்து, மூன்று முறை ஓங்கி அடித்து, 'ஸ்டன்ட்' செய்தார். அது என்னவாக இருக்கும்; ஓங்கி அடித்தது ஏன் என, சமூக வலை தளங்களில் பதிவுகள் பரவின.
* எல்லாம் ஒன்னாலதான் என, ஓங்கி அடித்தார்; சாரி, 'ஸ்டன்ட்' செய்தார் சசிகலா...
 

 

* இதுக்கு பேர் தான் மரண அடியா?
* என்ன மட்டும், ஜெயில்ல தள்ளிட்டு போயிட்டியே...
* அடிச்சு சொல்றேன்; 10 ஆண்டுகளுக்கு பின், நான் தான் முதல்வர்
* திரும்பி வந்து கவனிச்சுக்கறேன், இது,உன் மேல சத்தியம் சத்தியம் சத்தியம்!
* இது, சாதாரண ஆள் அடிச்ச அடி இல்ல... நாடி நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்துலயும் ஆவேசம் ஊறிப்போன ஒருத்தரால தான், இந்த மாதிரி அடிக்க முடியும்...
* ஓங்கி அடிச்சா, ஒன்றரை டன் வெயிட்டு... பாய்ஞ்சி அடிச்சா, பத்து டன் வெயிட்டு,
பாக்குறியா... பாக்குறியா... சிங்கம் டா!
* நீ யார், நான் யார்? தெரியார்? 'நாலு'ம் தெரிஞ்சவர் யார்? யார்?
* 'கதம், கதம், கதம்' முப்பத்து மூணு வருஷ அதிகாரத்தை பிடுங்கிட்டியே...
* நான் தான் சி.எம்., நான் தான் சி.எம்., நான் தான் சி.எம்.,
* பட்டாசு வெடிச்சா பரவாயில்ல, மத்திய அரசோட, 'இஸ்ரோ' 104 செயற்கைக்கோள வச்சு, ராக்கெட் வெடிக்கிறான் பாருடா...
* ஸ்டாலின் துணை முதல்வராகிட்டார், நடிகர் அர்ஜுனும் ஒரு நாள் முதல்வராகிட்டார், ஆனா, 33 வருஷம் ஒன்னோட இருந்ததுக்கு, ஒரு மணி நேரம் கூட, நான், சி.எம்., ஆகலையே...
* கடலுாரோட நின்னுட்டு போக, இது, 'தானே' வா, கடலுக்குள்ளே மிரட்டிட்டு போக, 'நடா'வா, கரையை கடந்து பெங்களூரு வரை அலரும், 'வர்தா'டா...
* ஓங்கி அடிச்சதுல, சமாதியில விரிசலா? பொது சொத்துக்கு சேதம் விளைவிக்கிற வழக்கு போட்றாதீங்க பா...
* பன்னீரை ஒரு தடவையா, ரெண்டு தடவையா, மூணு தடவை, சி.எம்., ஆக்கினியே அக்கா... என்னை மட்டும், ஒரு தடவையா, ரெண்டு தடவையா, மூணு தடவை சிறைக்கு போக வச்சிட்டியே அக்கா... ஒன்ன, டிஷ்யூம் டிஷ்யூம் டிஷ்யூம்...
* இந்த ஏரியா, அந்த ஏரியா, அந்த இடம், இந்த இடம், எங்கேயுமே எனக்கு பயம் கிடையாது டா... ஏன்னா, ஆல் ஏரியாவிலும் அம்மா, சின்னம்மா டா...
* துரோகிகளை அழிக்க, நீங்க நெனச்சா முடியும். ஆனா, நெனைக்கலை, இந்த சிங்கம் நினைச்சிருச்சு, பாக்குறியா பாக்குறியா பாக்குறியா...
* ஜெயிலுக்கு போறவ, இங்க எதுக்கு வந்துருக்கேன்னு நினைக்கிறியா, புயல் எப்போதும் கரையை கடந்து தான் வரும்.

- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1711379

Link to comment
Share on other sites

சசிகலாவின் அந்த 3 சபதங்கள் என்னவாக இருக்கும்? - வாசகர்களின் கலகல கற்பனை #DontMiss

போயஸ் கார்டனிலிருந்து பெங்களூரு சென்ற சசிகலா வழியில் ஜெ. சமாதியில் மூன்று முறை ஆக்ரோஷமாக சபதம் எடுத்துக்கொண்டார்.சசிகலா எடுத்துக்கொண்ட அந்த 3 சபதங்கள் இவை தான்.  உடனே பற்றிக்கொண்டன சமூக வலைதளங்கள். மீம்ஸ், விவாதங்கள் என அனல் பரவி வந்த வேளையில் சசிகலா எடுத்துக்கொண்ட மூன்று சபதங்கள் என்னவாக இருக்கும் என வாசகர்களிடம் கேட்டோம். வந்து குவிந்த கமென்ட்களில் சில 'அடடே' ரக கமென்ட்கள் உங்கள் பார்வைக்கு...!

சசிகலா

* அந்த மூன்று சபதங்கள் முறையே நீதி, நேர்மை, நியாயம் என ஒருவர் கமென்ட் அடித்திருக்கிறார். பாஸ் நீங்க காமெடி கீமெடி பண்ணலையே?

* இந்த வாசகர் நிறைய தெலுங்கு பாலைய்யா படங்கள் பார்ப்பார் போல. திரும்ப வருவேன், ஆட்சியை பிடிப்பேன், எதிரியை ஒழிப்பேன் ஆகியவையே அந்த மூன்று சபதங்கள் எனக் கூறியுள்ளார்.

* ஜில் ஜங் ஜக் - இது ஒரு வாசகரின் கமென்ட். நீங்க இந்த உலகத்துக்கு ஏதோ சொல்ல வர்றீங்கன்னு தெரியுது. ஆனா என்னன்னுதான் தெரியலை. 

* இந்த வாசகரின் கமென்ட் கலகல ரகம். 
   1) பன்னீர் சோடா குடிக்கமாட்டேன் 
   2) சிங்கம் 4 படம் வர்றதுக்குள்ள ரிலீஸாகிடுவேன் 
   3) பேன்ஸி டிரஸ் போட்டியில கலந்துக்கமாட்டேன்
என குபீர் கமென்ட்களை தந்துள்ளார்.

* இது கொஞ்சம் வேற மாதிரி கமென்ட். 'அந்த சபதங்கள் எதுவாக இருந்தாலும் சத்தியம் செய்தபின் கையை துடைத்துவிட்டதால் சபதங்கள் கேன்ஸலாகிவிட்டன' எனச் சொல்லியிருக்கிறார் ஒருவர். இது புது ஐட்டமா இருக்கே!

* நேற்று சமூக வலைதளங்களில் வைரலான மீம்களால் கவரப்பட்ட ஒரு வாசகர், 'அவர் ஓங்கி அடித்து 3 செய்திகளை                சொல்லியிருக்கிறார். அவை    
     1)கொசுவை எப்படி அடிப்பது 
     2)கொசு மீது அடி விழவில்லை என்றால் மீண்டும் எப்படி அடிப்பது
     3)அக்கொசு சாகும் வரை எப்படி அடிப்பது 

     இடை இடையில் கையை எப்படி துடைக்க வேண்டும் என்றும் காண்பித்தார். இந்த நுட்பத்தின் பெயர்தான் கொசுவை கொல்லும் நவீன        machine' என கமென்ட் தட்டியிருக்கிறார். 

* இதுவும் கலகல ரகம்தான். 
   சபதம் 1 - இனி வாழ்க்கையில் பன்னீரே சாப்பிடமாட்டேன். இது உங்க மேல சத்தியம்க்கா. 

   சபதம் 2 - தமிழகத்துக்கு முதல்வராக ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெங்களூருக்கு முதல்வராகாமல் சென்னை வர மாட்டேன். இது     உங்க மேல சத்தியம்.
 
   சபதம் 3 - என்னை ஜெயிலுக்கு அனுப்பியவர்களைக் கூடவிட்டுடுவேன். ஆனா இந்த மீம்ஸ் பண்ணி அமர்க்களம் பண்ணவங்களை    ஒருகை பார்க்காமல் உங்களை பார்க்க வர மாட்டேன். இது சத்தியம்.
- இதுதான் இன்னொருவரின் கமென்ட்.

* 'சத்தியத்தை எல்லாம் வெளியே சொல்லமுடியாது. அப்புறம் பலிக்காது' என ஒருவர் கமென்ட் தட்டியிருக்கிறார். உங்க அப்ரோச் ரொம்ப பிரமாதம் ஜி!

* இது 'அடேங்கப்பாடியப்பா' ரக கமென்ட். 1) சி.எம் ஆகணும் 2) அப்புறம் பி.எம் ஆகணும் 3) மிச்சமிருக்கிற ஜனாதிபதி சீட்லயும் உட்காரணும். இது ஒரு வாசகரின் கமென்ட். தட் 'வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்' மொமென்ட்.

http://www.vikatan.com/news/miscellaneous/81034-vows-of-sasikala---survey-results.html

Link to comment
Share on other sites

:D:

Link to comment
Share on other sites

''கல்லறையில் விழுகின்ற அடியைப் பார்த்தால்..."-ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கிளப்பும் சர்ச்சை#TNPolitics

evkslong2_06189.jpg

ஈரோட்டில் நடந்த  திருமண விழாவில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசும்போது, "தேசிய அளவில் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் வழக்கு தொடுத்து மிகப்பெரிய தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அயோக்கியத்தனம் செய்தால் தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்திருக்கிறார். தவறு செய்தவர்களும் மக்களை ஏமாற்றியவர்களும் கல்லறைக்கு அல்லது சிறைக்குத்தான் செல்ல வேண்டும். இல்லையெனில் தப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என அனைவரும் சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் ஜெயலலிதாவை அடித்துக் கொன்றுவிட்டதாகச் சொல்கின்றனர். நாட்டைக் குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் நிம்மதியாக இருக்க வேண்டியதுதான்" என்றார்.

http://www.vikatan.com/news/politics/81085-if-you-look-at-the-footsteps-falling-on-the-grave----mr-arouse-controversy-evkselangovan-tnpolitics.html

Link to comment
Share on other sites

Advertisement
 

 

 

 

 
Tamil_News_large_1714423_318_219.jpg
 

 

நடுங்கும் முன்னாள் அமைச்சர்கள் சசிகலா எடுத்த சபதம் ஏற்படுத்தும் கிலி

 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அடைந்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா. அங்கு செல்வதற்கு முன், சென்னையில் இருந்து பெங்களூருக்கு காரில் புறப்பட்ட சசிகலா, சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வணங்கினார். அப்போது, மூன்று முறை சமாதியில் குனிந்து குனிந்து கையால் ஓங்கி ஓங்கி அறைந்து, சபதம் எடுத்தார்.

அந்த காட்சிகளை அவருக்கு பின்னாலேயே நின்று பார்த்தவர்கள் முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திராவும், வளர்மதியும். சற்று தள்ளி நின்றவர், தலைமைக் கழக நிர்வாகியான மகாலிங்கம்.

இவர்கள் மூவருக்கு மட்டுமே, சசிகலா எடுத்த சபதங்கள் குறித்து முழுமையாக தெரியும் என்பதால், அவர்கள் எங்கு போனாலும், சசிகலா சபதம் குறித்தே கேட்கின்றனராம். அடிக்கடி செல்போனில் தொடர்பு கொள்ளும் பொது மக்களும், கட்சிக்காரர்களும், சசிகலா சபதம் குறித்து கேட்பதால், பல சமயங்களில் வளர்மதியும், கோகுல இந்திராவும் செல்போனை ஆப் செய்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

இவர்கள் தங்களுக்கு சபதம் குறித்து எதுவும் தெரியாது என்று சொல்லி வருவதால், அவர்கள் வாயிலிருந்து வார்த்தைகளை பெற நினைக்கும் பொதுமக்கள், இப்படித்தானே சசிகலா சபதம் எடுத்தார் என, சம்பந்தமில்லாமல் பலவற்றையும் கூறி, அவர்கள் வாயால், சபதங்களை அறிய முயல்கின்றனராம்.

விட்டால் போதும் என்று, அவர்கள் சொல்லும் தகவலுக்கு ஆமாம் என்று சொல்லி, அது மறுமுனையில் டேப் செய்யப்பட்டு, வாட்ஸ் ஆப்பில் வெளியானாலோ, கட்சித் தலைமையாக இருக்கும் டி.டி.வி.தினகரனுக்குச் சென்றாலோ, கட்சியில் தங்களுக்கு சிக்கல் ஏற்படலாம் என அஞ்சி நடுங்குகின்றனர். அதனால், தற்போது எந்த போன் வந்தாலும், அவர்கள் நடுங்குவதாகக் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714423

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.