Jump to content

சசி குற்றவாளியே !


Recommended Posts

சொத்து குவிப்பில் தீவிரமாக
செயல்பட்ட சசிகலா, இளவரசி
 
 
 

சொத்து குவிப்பு வழக்கில், செலவு கணக்காக, 11.56 கோடி ரூபாய் காட்டப்பட்டுள்ளது. இதில், பெரிய செலவு தொகை, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணம் தொடர்பானது. சுதாகரன் திருமணம், 1995 செப்டம்பரில் நடந்தது. 6.45 கோடி ரூபாய், திருமண செலவு என, லஞ்ச ஒழிப்பு துறை கூறியுள்ளது.

 

Tamil_News_large_171220220170217001659_318_219.jpg

வழக்கு விசாரணையின் முடிவில், செலவு தொகையை, மூன்று கோடி ரூபாயாக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குறைத்து விட்டது. ஆனால், கர்நாடக உயர் நீதி மன்றமோ, 28.68 லட்சம் ரூபாய் தான் என, முடிவுக்கு வந்தது.திருமணத்துக்கான பந்தல், உணவு, மினரல் தண்ணீர், தாம்பூலம், டைட்டன் கடிகாரங்கள், சில்வர் பிளேட்டுகள், திருமண ஆடை தைப்பதற்கான செலவு என்கிற தலைப்பில், ஆதாரங்களை, சிறப்பு நீதிமன்றம் ஆராய்ந்துள்ளது. அதன்படி, மூன்று கோடி ரூபாய் செலவானதாக முடிவுக்கு வந்தது.

ஜெயலலிதா தரப்பில் திருமண செலவாக, 28.68 லட்சம் ரூபாய் என, வருமான வரி துறைக்கு சமர்ப்பித்த கணக்கை, கர்நாடக உயர் நீதி மன்றம் ஏற்றுள்ளது. மணமகள், நடிகர் சிவாஜி யின் பேத்தி என்றும், திருமண செலவு குறித்து, பெண்ணின் தந்தையிடம் விசாரிக்க வில்லை என்றும், உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், திருமண செலவை பொதுவாக பெண் வீட்டார் ஏற்பது தான் வழக்கம் என கூறியதை யும், உயர் நீதிமன்றம் ஏற்றுள்ளது. இதன் மூலம், அரசு தரப்பில் குறிப்பிட்ட, 6.45 கோடி ரூபாய் திருமண செலவை, 28.68 லட்சம் ரூபாயாக, உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது.

திருமண செலவு தொடர்பாக அளிக்கப்பட்ட சாட்சியங்களை முழுமையாக பரிசீலிக்கும் போது, ஜெயலலிதா செலவு செய்ததாக குறிப்பிட்ட தொகையை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்கவில்லை. ஊழல் தடுப்பு சட்டத்தில், பொது ஊழியர் ஒருவர் குற்றம் புரிய, அவருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து, துாண்டுதலாக இருந்த குற்றத்துக்காக, தனிப்பட்ட நபர்கள் மீதும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடியும் என, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது.

ஜெ., முதல்வராக இருந்த கால கட்டத்தில், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயர்களில், அதிக எண்ணிக்கையில் நிறுவனங்கள் துவங்கியதை, சிறப்பு நீதிமன்றம் கணக்கில் கொண்டுள்ளது. அந்த சந்தர்ப்ப சூழ்நிலையானது, கூட்டு சதி மற்றும் துாண்டுதல் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதாக உள்ளது.

ஜெ., பணம் புழக்கத்தில்மேலும், ஒட்டுமொத்த சாட்சியங்களையும் பரிசீலித்த சிறப்பு நீதி மன்றம், ஜெ., முதல்வராக இருந்த கால

கட்டத்தில் தான், சசிகலா, சுதாகரன், இளவரசி பெயர்களில் வர்த்தக நடவடிக்கைகள் துவங்கப் பட்டன; அதற்காக, அவர்களின் சொந்தப் பணம் முதலீடு செய்யப்படவில்லை என்று கூறியுள்ளது.

கணக்கில் வராத கணிசமான தொகையை, ஜெயலலிதாவும், சசிகலாவும் மாற்றிக் கொள்ள, இந்த நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்ட தாகவும் கூறியுள்ளது. துவக்கத்தில், 12 வங்கி கணக்குகள் தான், ஜெயலலிதா, சசிகலா பெயர்களில் இருந்த தாகவும், அதன் பின், காளான்கள் போல், 50 கணக்கு கள் முளைத்து விட்டதாகவும், சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வருமான வரி கணக்கில், சொத்து விபரங்களை தெரிவிப்பதன் மூலம், சட்டப்படியான வருமானம் மூலம் தான், சொத்துக்கள் வாங்கப்பட்டதாக ஆகாது என, சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது. மேலும், சசிகலா, சுதாகரன், இளவரசி மற்றும் துவங்கப்பட்ட நிறுவனங்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதாக கூறினாலும், அவர்களுக்கு என, தனிப்பட்ட முறையில் வருமானம் கிடையாது என்பதை, அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

ஜெயலலிதாவின் பணம் தான் புழக்கத்தில் இருந்த தும், அவரது பணத்தை வைத்தே, ஏராளமான சொத்துக்கள் வாங்கப்பட்டதும், சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சென்னை, போயஸ் தோட்டத்தில் பணியாற்றிய ஜெயராமன் என்ற ஊழியர் அளித்த சாட்சியத்தில், விஜயன் என்பவர் மூலம், வெவ்வேறு வங்கி கணக்குகளில் பணம் டிபாசிட் செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

வங்கி விபரங்கள், சூட்கேஸ்களில் கொண்டு செல்ல வேண்டிய பணம் விபரங்கள் பற்றி, சசிகலா தான் உத்தரவுகள் வழங்குவது வழக்கம் என்றும் கூறியுள்ளார். இதை, சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது.
 

ரூ.53.60 கோடி சொத்து


சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் பெயர்களில் உள்ள அனைத்து சொத்துக்களும், வருவாய் ஆதாரங்களும், ஜெயலலி தாவுக்கு சொந்தமானவை என்ற அரசு தரப்பு குற்றச் சாட்டை, சிறப்பு நீதிமன்றம் ஏற்றுள்ளது. இவ்வாறு, 55 கோடி ரூபாய் அளவுக்கான சொத்துக்கள், ஜெயலலிதா மற்றும் மூவரது பெயர்களிலும், நிறுவனங்களின் பெயர்களிலும் உள்ளது நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழான குற்றங்களுக்குரிய அம்சங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே, ஜெயலலிதாவுடன் சசிகலா, சுதாகரன், இளவரசி சேர்ந்து கூட்டு சதி செய்து, வருமானத் துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கில், ஒருவருக்கொருவர் தீவிரமாக செயல்பட்டனர் என்பதை, சாட்சியங்கள் மூலம், அரசு தரப்பு சந்தேகமின்றி நிரூபித்துள்ளதாக,சிறப்பு நீதிமன்றம் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, 1996 ஏப்ரலில், ஜெயலலிதா வசம், 55.02 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருந்துள்ளன; முதல்வராக இருந்த கால கட்டத்தில், அவர் செய்த செலவு தொகை, 8.49 கோடி ரூபாய். இந்த இரண்டையும் கூட்டினால், 63.51 கோடி ரூபாய் வருகிறது.

அனைத்து நிலைகளிலும் வந்த வருமானம், 9.91 கோடி ரூபாய்.எனவே, வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு என பார்த்தால், 53.60 கோடி வருகிறது. இதற்கு, திருப்திகரமான கணக்கு காட்டப் படவில்லை. இத்தகையை முடிவுக்கு, சிறப்பு

 

நீதிமன்றம் வந்ததால், ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ், நான்கு பேரையும் குற்றவாளி கள் என அறிவித்து, தண்டனை விதித்துள்ளது.
 

சிறப்பு நீதிமன்றத்துக்கு பாராட்டு


எதிர் தரப்பு சாட்சியங்களை, சிறப்பு நீதிமன்றம் பரிசீலிக்கவில்லை என, கூறுவது சரியல்ல; சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை பார்க்கும் போது, பல சாட்சிகள் விரிவான விசாரணைக்கு உட்படுத் தப்பட்டுள்ளனர். எதிர் தரப்பினருக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தியதாக, கூறுவதை ஏற்க முடியாது.

மிகவும் உன்னிப்பாக, கண்காணிப்புடன், கவனமுடன், சொத்துக்கள் மதிப்பீடு செய்வ தில், சிறப்பு நீதிமன்றம் செயல்பட்டுள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்ற விசாரணையில் குறை காண முடியாது.வழக்கின் தன்மை, சூழ்நிலையை ஆராய்ந்த பின், எங்கள் முன் வைக்கப்பட்ட அனைத்து தரப்பு வாதங்களும், சாட்சியங்களையும் பரிசீலித்த பின், கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, ஏற்க முடியவில்லை. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம்.
 

ஐகோர்ட்டின் கூட்டல் பிழை


எங்களைப் பொறுத்தவரை, கர்நாடக உயர் நீதிமன்றம் கணக்கிட்ட, வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 8.12 சதவீதம் என்பது, சாட்சியங்களை தவறாக புரிந்து கொண்டதன் அடிப்படையிலானது. தவறான கூட்டல் கணக்கின் அடிப்படையிலானது. வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அளித்த சாட்சியங்களை, நாங்கள் பரிசீலித்ததில், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் கூட்டு சதி செய்து, அதன் தொடர்ச்சியாக, முதல்வராக ஜெயலலிதா இருந்த கால கட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்கிற முடிவுக்கு
வருகிறோம்.

குற்றம் புரிய, ஜெயலலிதாவை துாண்டியதாக, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான அப்பீல் மனுக்கள் விலக்கி வைக்கப் படுகின்றன. மற்ற மூவரையும் குற்றவாளி என உறுதி செய்து, தண்டனை விதித்த, சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு, முழுமையாக அமலுக்கு வருகிறது.

-தொடரும்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712202

 

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
 

 

 

 

 
Tamil_News_large_1712404_318_219.jpg
 

'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது'

 

கோவை : 'சசிகலா உள்ளிட்ட மூவரும், தலா, 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தவறினால், வழக்கில் காட்டப்படாத சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்' என, சீனியர் வக்கீல்கள் கூறினர்.

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்காண்டு சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், 10 கோடி ரூபாய் அபராத தொகையை, கோர்ட்டில் உடனடியாக செலுத்தவில்லை.

இது குறித்து, வக்கீல் விவேகானந்தன் கூறியதாவது: கோர்ட்டில் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய, கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு, 10 கோடி அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதம் கட்ட தவறும் பட்சத்தில், வருவாய் துறை மூலமாக, அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது பெயரில் உள்ள, வழக்கில் சேர்க்கப்படாத சொத்துக்களை, பொது ஏலத்தில் விடுவதற்கு கோர்ட் உத்தரவிடும்.
வக்கீல் ஞானபாரதி

தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், அப்பீல் இருந்தால் உடனடியாக அபராதம் செலுத்த தேவையில்லை. ஆனால், சசிகலா உள்ளிட்ட மூவருக்கும், உச்ச நீதிமன்றத்தால் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அபராத தொகையை செலுத்த வேண்டும்.

அபராதம் கட்ட தவறினால், வருவாய் துறை மூலமாக, வழக்கில் சேர்க்கப்படாத சொத்தை ஏலத்தில் விட்டு, அரசுக்கு செலுத்த, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்படும்.
அபராதம் கட்ட தவறினால், வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தவிர, வேறு சொத்துக்கள் இல்லை என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, கூடுதல் தண்டனையை அனுபவித்து, அபராத தொகைக்கு ஈடு கட்ட முடியும்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712404

Link to comment
Share on other sites

சிறையில் எப்படி இருக்கிறார் சசிகலா? #Tnpolitics #sasikala

மிழக அரசியலில் கடந்த 6 மாதங்களாக அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர் வி.கே.சசிகலா! முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலமின்றி அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே அவரது உடன்பிறவா சகோதரியான சசிகலாவைச் சுற்றி ஊடக செய்திகள் றெக்கை கட்ட ஆரம்பித்தன; சமூக வலைதளங்களோ சகட்டுமேனிக்கு சதாய்த்தன. இதற்கிடையில் சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனதாக செய்திகள் வெளிவரவும் சசிகலா மீதான குற்றச்சாட்டுக்கள் உச்சக்கட்டத்தை எட்டியது. 'ஜெ. மரணத்துக்கு காரணமே சசிகலாதான்!' என்ற அதிரடிக் குற்றச்சாட்டுகளும் அரசியல் அரங்கில் ஒங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

ஜெயலலிதாவும் சசிகலாவும்

இப்போது எல்லாமே தலைகீழ் நிலைமை! தமிழக அரசியலின் அதிரடி மாற்றங்களில் ஒன்றாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் 3295-ம் எண் கைதியாக சிக்கிக் கிடக்கிறார் சசிகலா.! ஆம்... ஜெ. மறைவையடுத்து அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர், முதல்வர் என  அரசியல் பரமபத ஏணிகளில் உச்சம் தொட்டவரை, சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரேயடியாக அதலபாதாளத்தில் தள்ளிவிட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெ.-சசியைத் துரத்தி வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த 14-ம் தேதி வழங்கப்பட்டது. இதன்படி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில், 4 ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. 

'ஜெயலலிதாவின் உடல்நலக் கோளாறுகளுக்கு மூலகாரணமே சசிகலாதான் காரணம்' என்றெல்லாம் செய்திகள் பரவி வந்த நிலையில், 'மூட்டுவலி, ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்னை என உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் எனக்கு சிறையில் வீட்டுச் சாப்பாடு மற்றும் தனக்கு சிகிச்சை அளிக்க பிரத்யேக மருத்துவர் வசதி அளிக்க வேண்டும்.' என்று சசிகலாவே கர்நாடக கோர்ட்டில் கோரிக்கை வைத்து மன்றாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அப்படியும் அவரது கோரிக்கைகளை நீதிபதி நிராகரித்தது சோதனையின் உச்சம்.! கோர்ட்டில் சரண் அடைந்த சசிகலாவுக்கு சிறை நிர்வாகமே மருத்துவப் பரிசோதனைகள் செய்து அறிக்கை அளித்ததோடு சரி.

உண்மையில், சசிகலாவின் ஆரோக்கியத்தில் என்னதான் பிரச்னை?

05-1475666310-sasikala-new-600_19305_081

''ஒரு பிரச்னையும் இல்லை. சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட கார் விபத்தின்போது சசிகலாவின் கண்களில் காயம் ஏற்பட்டது. அப்போதிருந்தே அவரது கண்களில், இருந்து கண்ணீர் எப்போதும் கசிந்துகொண்டிருக்கும். அதனால், அடிக்கடி கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக்கொண்டிருப்பார். எந்த ஒரு பொருளையும் கூர்ந்து தெளிவாகப் பார்க்கவும் சிரமப்படுவார்; அவ்வளவுதான். மற்றபடி உடல் ரீதியாக அவருக்குப் பெரிய பிரச்னைகள் எதுவும் கிடையாது.'' என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.!

இதுகுறித்துப் பேசும், தமிழக அரசியல் வட்டாரங்களோ, ''ஜெயலலிதா அப்போலோ சிகிச்சையில் இருந்த 75 நாட்களும் இரவு பகல் கூடவே இருந்து கவனித்துக்கொண்டவர் சசிகலா என்று அவருடைய கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்.  'அக்காவுக்காகத்தான் நான் வாழ்ந்தேன்' என்றெல்லாம் சசிகலாவும் சொல்லிவருகிறார். அந்தளவுக்கு உயிருக்கு உயிரான ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனபோதும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் மரண அவஸ்தைகளை அனுபவித்து வந்தபோதும் சசிகலாவுக்கு சின்னதாக படபடப்போ, மயக்கமோ ஏற்பட்டிருக்க வேண்டுமே... ஆனால், அப்படி எந்த நிகழ்வும் நடைபெறவில்லையே...? அவ்வளவு ஏன்... சிறையில் அவரது உடல்நலத்தை பரிசோதித்த டாக்டர்களே 'நலமாக இருக்கிறார்' என்றுதானே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்?'' என்று லாஜிக்கல் கேள்வி கேட்கிறார்கள்.

பரப்பன அக்ரஹாரா சிறை நிர்வாக வட்டாரங்களிடம் பேசியபோது, ''சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடனேயே இருக்கிறார். ஆனால், வயதான காரணத்தால் மூட்டு வலி பிர்சனை மட்டும் அவரை வாட்டி எடுக்கிறது. இதற்கும் ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொள்கிறார். உணவு விஷயத்தில், மிகுந்த கவனம் செலுத்துகிறார். சிறையில் அளிக்கப்படும் உணவுகளில் சப்பாத்தி, கேழ்வரகு களி ஆகியவற்றோடு பழங்களும் சாப்பிடுகிறார். சாம்பார், மோர் போன்ற நீராகாரங்களையும்  அரிசி சாதத்தையும் கொஞ்சமே சேர்த்துக்கொள்கிறார். வயதின் காரணமான தளர்ச்சியும், புதிய சூழல் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியும் அவரை மனதளவில் ரொம்பவே பாதித்திருக்கிறது. அந்த சோர்வு மட்டும் வெளிப்படையாகத் தெரிகிறது.'' என்கிறார்கள்.

எதுவும் கடந்து போகும்!

http://www.vikatan.com/news/tamilnadu/81087-how-is-sasikala-in-prison.html

Link to comment
Share on other sites

2 ரொட்டி முதல் 150 கிராம் சாம்பார் வரை... சசிகலா மெனு!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா,  சிறை வாழ்க்கைக்குத் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ள இன்னும் சில நாள்கள் ஆகும். இதற்குமுன் இருமுறை அவர் சிறை சென்றிருந்தாலும், வழக்கில் இருந்து விடுதலை பெற ஏதாவது ஒரு வழி கிடைக்கும். இந்தமுறை அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டன. இதுவரை சிறையில் இருந்த நாள்கள் தவிர, கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பத்து மாதங்கள் வரை அவர் பெங்களூரு சிறையில் இருக்க வேண்டும். 

Sasikala

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட முதல்நாள் இரவு, சசிகலா உணவு சாப்பிட்டார். நேற்று இரவு சாப்பிடவில்லை. உணவாக அவருக்கு இரண்டு ரொட்டிகள், ராகி களி உருண்டை, 200 கிராம் சாதம், 150 கிராம் சாம்பார் வழங்கப்பட்டது. இதுதான், சிறையில் உள்ள அனைத்து கைதிகளுக்கும் இரவு உணவாக வழங்கப்படும். தனக்கு வழங்கப்பட்ட  உணவை சசிகலா சாப்பிட மறுத்து விட்டராம். மேலும், எந்த வசதியும் இல்லாத சிறிய அறையில் உறங்க முடியாமலும் அவர் தவித்துள்ளார். 

சிறையில் அடைக்கப்பட்ட முதல் நாள் இரவு, சசிகலாவும் இளவரசியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துள்ளனர். நேற்று காலை 6 மணிக்கு சசிகலா எழுந்துள்ளார். பத்திரிகைகளைக் கேட்டு வாங்கிப் படித்துள்ளார். காலை 8 மணியளவில் காலை உணவு வழங்கப்பட்டது. அதை சசிகலா சாப்பிடவில்லை. இளவரசி கட்டாயப்படுத்தி அவரைச் சாப்பிட வைத்தார். நேற்று மதியத்துக்குப் பிறகு சசிகலா யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. சோகமாகக் காணப்பட்டதாக சிறை வட்டராங்கள் தெரிவிக்கின்றன. 

இது குறித்து கர்நாடக மாநில அ.தி.மு.க செயலாளர் புகழேந்தி கூறுகையில், ‘‘சிறையில் ‘சின்னம்மா’ பத்துக்கு எட்டு அறையில் இருக்கிறார். அந்த அறையில் எந்த வசதியும் இல்லை. அதனால் சோர்வுடன் உறங்க முடியாமல் தவிக்கிறார். ஆனால், சிறையில் யோகா செய்கிறார். நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறார்'' என்றார். 

இதற்கு முன், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி முதல் அக்டோபர் 18-ம் தேதி வரை இதே சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது ஜெயலலிதாவும் அதே சிறையில் இருந்தார். அதனால், அது சசிகலாவுக்கு ஆறுதலாக இருந்தது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அதை ஜெயலலிதா எதிர்கொள்வார் என்ற நம்பிக்கையும் இருந்தது. தற்போது ஜெயலலிதா மறைந்து விட்டதால், அவருக்கு இருந்த ஒரே நம்பிக்கையும் பொய்த்துவிட்டது. இதனால்தான் மிகுந்த சோகத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழக முதல்வராக தன் ஆதரவாளர் எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதும், ஓ.பி.எஸ் அணிக்குப் பின்னடைவு ஏற்பட்டதும் கூட சசிகலாவுக்குச் சந்தோஷத்தைத் தரவில்லை என்றே சொல்லப்படுகிறது. நான்கு ஆண்டு கால சிறை வாழ்க்கை குறித்து அவர் மிகுந்த கவலைக்குள்ளாகியிருக்கிறார். தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தாலும், அதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு நான்கு ஆண்டு சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.  தண்டனை விதிக்கப்பட்ட மூவரும்,10 கோடி ரூபாய் அபராதத் தொகையை, நீதிமன்றத்தில் செலுத்தவில்லை. அபராதம் கட்டத் தவறினால், சொத்துக்களை நீதிமன்றம் பறிமுதல் செய்யும் என வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/81114-two-chapatis-to-150-gram-sambar-sasikala-menu.html

Link to comment
Share on other sites

சசிகலாவைவிட வேறு யார்?

 

ஜெயலலிதாவின் நெற்றிப்பொட்டு, ஹேர்ஸ்டைல், ஆடை அணியும் பாங்கு... எனக் கொஞ்சம் கொஞ்சமாக ‘அம்மா’ அரிதாரம் பூசிக்கொண்டிருந்த ‘சின்னம்மா’வின் அடுத்த அவதாரம், `தமிழ்நாட்டு முதலமைச்சர்'.

‘தற்காலிக முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்க, நிரந்தர முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்க, நிரந்தர-தற்காலிக முதலமைச்சரைப் பார்த்திருக்கீங்களா... பார்த்திருக்கீங்களா?’ எனப் பணிவு பன்ச் பேசி, ஒதுங்கி ஓரமாக நிற்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

கவுன்சிலர் தேர்தலில்கூட போட்டியிடாத சசிகலா, மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ-க்களின் தலைவர் ஆகியிருக்கிறார். ‘மக்களால் நான்... மக்களுக்காகவே நான்’ எனச் சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட கட்சி எம்.எல்.ஏ-க்களின் தலைவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சசிகலா. அதுதானய்யா அ.தி.மு.க... இதுதானய்யா ஜனநாயகம்!

தமிழ்நாட்டின் மிகப்பெரியப் பிரச்னைகளில் ஒன்று, டாஸ்மாக் பிரச்னை. உடல் நோகச் சம்பாதித்த 6p2.jpgதினக்கூலியை டாஸ்மாக்குக்குக் கப்பமாகக் கட்டிவிட்டு, போதையில் முடங்கிக்கிடக்கும் லட்சக்கணக்கான ஆண்கள், அவர்களை அண்டியிருக்கும் அவர்களது மனைவிகள், வயதான பெற்றோர்கள், குழந்தைகள்... என அத்தனை பேரின் அவலநிலையை, டாஸ்மாக்குக்குப் பெருவாரியாக சப்ளை செய்யும் மிடாஸ் உரிமையாளரான சசிகலாவைவிட நன்கு உணர்ந்தவர் வேறு யார் இருக்க முடியும்?

அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து அரசின் சொத்துகளை அதிகாரிகளோ, பிற அமைச்சர்களோ அடிமாட்டு விலைக்கு வாங்க நினைத்தால், எத்தகைய வழக்குகளை எல்லாம் சந்திக்க நேரிடும் என்பதை எடுத்துச்சொல்லி எச்சரிக்கைவிடுக்கும் தகுதி சசிகலாவுக்குத்தானே இருக்கிறது. சட்டத்துக்குப் புறம்பாக அந்நியச் செலாவணி சட்டத்தை வளைத்து வெளிநாட்டுப் பணத்தைக் கொண்டுவந்தால், அது சட்டரீதியாக எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லாம் அனுபவரீதியாக அறிந்தவர் ‘அடுத்த அம்மா’ சசிகலா.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தால், சொத்துக்குவிப்பு வழக்கு எப்படி எல்லாம் சுழன்றடிக்கும் என்பதை அனுபவரீதியாக அறிந்த சசிகலாவைவிட, வேறு யார் அதிகாரவர்க்கத்துக்குத் தெளிவாகப் புரியவைக்க முடியும்? தமிழ்நாட்டின் உரிமைகள் சிலவற்றை சட்டரீதியாக மீட்டுத் தந்தவர் ஜெயலலிதா என்றால், சட்டரீதியிலான சிக்கல்கள் எப்படி எல்லாம் வரும், அதை எப்படி எல்லாம் எதிர்கொள்ளலாம் என அறிந்தவர், புரிந்தவர், தெரிந்தவர், தெளிந்தவர் சசிகலா ஒருவரே.

‘நான் தனி ஆள் இல்லை; எனக்குப் பின்னால் ஒரு கும்பலே இருக்கு’ என தமிழ் சினிமாக்களில் நாயகர்கள் பேசும் பன்ச் டயலாக்குகளுக்குப் பொருத்தமானவர் நம் சின்னம்மாதான். அப்போலோ ரகசியங்களையே யாரும் அறியாமல் காப்பாற்றிய சசிகலா, ரகசியக் காப்புப் பிரமாணம் எடுத்து அரசாங்க ரகசியங்களையும் காப்பாற்றுவார் அல்லவா!

யாரங்கே... இன்னும் சில மாதங்களில் தண்ணீர்ப் பஞ்சம், மின்தட்டுப்பாடு, தொழில்கள் முடக்கம், முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் அவலம் மூச்..! மணல் மாஃபியாக்கள், கான்ட்ராக்ட் கங்காணிகள், கார்ப்பரேட் கைமாறல்கள், விதவிதமான விதூஷகர்கள்... `சின்னம்மா ஸ்டிக்கர்' கொண்ட `மக்கள் நல'த் திட்டங்கள் என அடுத்தடுத்த அதிர்ச்சிகள் அரங்கேறும் நேரம் இது. வாக்காளப் பெருமக்களே... இதற்கு நாம் என்ன செய்யலாம்? இடைத்தேர்தல் இருக்கிறது, அடுத்து உள்ளாட்சித் தேர்தல் வருகிறது, தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் வருகிறது. இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டால்கூட, இருக்கவே இருக்கிறது 2021-ம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்.

செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா?

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

சொத்துக்குவிப்பு வழக்குச் செலவு: தமிழக அரசிடம் ரூ.12 கோடி கேட்கும் கர்நாடகா

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து  சேர்க்கப்பட்ட வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.  இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. 

Karnataka

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடகா அரசுக்கு ரூ.12.4 கோடி வழங்க வேண்டும் என்று அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், ரூ.12.4 கோடிக்காக பில் இணைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற கட்டணம், நீதிபதி, வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்காக ரூ.12.4 கோடி கேட்டுள்ளது கர்நாடக அரசு.

இவைகள் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2016 வரை செய்யப்பட்ட செலவு என்றும் கர்நாடக அரசு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

http://www.vikatan.com/news/india/81154-da-case-karnataka-asking-rs12-crore-from-tn-goverment.html

Link to comment
Share on other sites

சசிகலா மறுசீராய்வு செய்தாலும் வெளியே வரமுடியாது - மார்க்கண்டேய கட்ஜு

திருச்சி என்.ஐ.டியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு நிகழ்ச்சிக்கு முன்னதாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.


அப்போது அவர்,


"முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றுள்ளார். கவர்னர் அவரை ஆட்சி அமைக்க அழைத்தது அவரது முடிவு. அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது. ஆனால் விரைவில் நடக்க உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் அவரது ஆட்சி நிலைக்குமா என்பது அப்போது தெரியவரும். எடப்பாடி பழனிசாமியை எல்லோரும் விமர்சிக்கிறார்கள். அவர் முதல்வராகப் பதவி ஏற்றுள்ளார். அவரை இப்போது விமர்சனம் செய்ய வேண்டாம். அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தில் முதல்வராக வந்த உடன் இது குண்டர்கள் ஆட்சி என்றெல்லாம் குறைகூறினார்கள். அது ஆறுமாதங்களுக்குப் பிறகு மாறியது. அதைபோலத்தான் ஆறுமாதம் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியையும் பொறுத்திருந்து அவரின் செயல்பாடுகளை கவனிப்போம்.

Markandey Katju talks about Sasikala


நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் அதிகரித்துள்ளது. அதைக் களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு, உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கிறது. இது ஒரு அரசியல் நாடகம். ராமர் கோவில் கட்டினால் இந்தியாவில் வறுமை குறைந்துவிடுமா? இல்லை வேலைவாய்ப்பின்மை தீர்ந்துவிடுமா?. 


சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பில் இனி மேல்முறையீடு செய்து வெளியில் வர முடியாது. இந்த வழக்கில் மறுசீராய்வு மனுதான் போடமுடியும், உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்துப் போடப்பட்ட 90 சதவிகிதமான மறுசீராய்வு மனுக்கள் தள்ளுபடியே செய்யப்பட்டன. அதனால்தான் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடியே செய்யும் என்கிறேன்" என்றார்.

http://www.vikatan.com/news/politics/81190-markandey-katju-at-trichy---talks-about-sasikala.html

Link to comment
Share on other sites

கர்நாடக ஐகோர்ட் செய்த கூட்டல் தப்புகள்!
 
 
 

'கூட்டல் கணக்கில் செய்த தவறால், கடன் தொகையை, 24.17 கோடி ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உயர்த்தி உள்ளது. ஆனால், 10.67 கோடி ரூபாய் என்பது தான், சரியான கணக்கு' என, உச்ச நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

Tamil_News_large_1712781_318_219.jpg

ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' 570 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை அளித்தது.
 

அந்தத் தீர்ப்பில் உள்ள முக்கிய சாராம்சங்கள்:


திராட்சை தோட்ட வருமானம்: வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு, ஐதராபாத்தில் திராட்சை தோட்டம் உள்ளது; 14.50 ஏக்கர் பரப்பிலான, திராட்சை தோட்டத்தில் நடந்த விவசாயம் மூலம், 5.78 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்தது.

சிறப்பு நீதிமன்ற விசாரணையின் போது, ஜெ., தரப்பில் கூடுதலாக, 4.21 லட்சம் ரூபாய்க்கு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், அதையும் ஏற்று, 10 லட்சம் ரூபாயாக, வருமானத்தை உயர்த்தியது.

மேல்முறையீட்டு விசாரணையில், திராட்சை தோட்டத்தில் நடந்த விவசாயம் மூலம் கிடைத்த வருமானம் என, 52.50 லட்சம் ரூபாய் என, கர்நாடக உயர் நீதிமன்றம் உயர்த்தியுள் ளது.ஆந்திர மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், தோட்டக்கலை அதிகாரி லதா, நேரடியாக திராட்சை தோட்டம் சென்று, அங்கு பயிரிடப் பட்ட பயிர்கள் மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வருமானங்களை விசாரித்தார்.

இதில், 91 - 96ல், 6.01 லட்சம் ரூபாய்க்கு, தோட்டப் பயிர்கள் மூலம் வருவாய் வந்திருக் கும் என, மத்திய அரசின், 'நபார்டு' திட்ட விதி களின் படி, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், 52.50 லட்சம் ரூபாய்க்கு வருமானம் காட்டப்பட்டுள்ளது. ஜெயலலிதா தாக்கல் செய்த வருமான வரி கணக்கை ஏற்று, அவர் கோரியபடி, விவசாய வருமானம், 52.50 லட்சம் ரூபாய் தான் என, கர்நாடக உயர்

நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்தார் என்பதற் காக, திராட்சை தோட்ட வருமானத்தை நிராகரிக்க முடியாது என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிறப்பு நீதிமன்றம், விரிவாக ஆய்வு செய்துள்ள ஆதாரங்களை பார்க்காமல், இந்த விஷயத்தை உயர் நீதிமன்றம் அணுகி உள்ளது தெரிகிறது. வருமான வரி கணக்கு, அதன் மீதான உத்தரவின் அடிப்படை யில் மட்டுமே, திராட்சை தோட்ட வருமானம், 52.50 லட்சம் ரூபாய் என, நீதிபதி குமாரசாமி கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் கோரிக்கைக்குஆதரவாக, தனிப் பட்ட சாட்சியங்கள் இல்லை. வருமான வரி கணக்கு மற்றும் அதன் மீதான உத்தரவுகள், கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களை கட்டுப் படுத்தாது. ஏற்கனவே தீர்க்கப்பட்ட, இந்த சட்டப் பிரச்னையை கருத்தில் கொள்ளாமல், கர்நாடக உயர் நீதிமன்றம், ஜெ., தரப்பில் கூறிய வருமானத்தை ஏற்றுள்ளது.

கடன் தொகையில் தப்பான கணக்கீடு: மேலும், கடன் தொகையை, 10 தலைப்புகளின் கீழ் கணக் கெடுத்ததில், கர்நாடக உயர் நீதிமன்றம், தவறாக கணக்கிட்டுள்ளது. அதாவது, 24.17 கோடி ரூபாய் கடன் தொகை என, தவறாக கணக்கிட்டுள் ளது. ஆனால், 10.67 கோடி ரூபாய் தான் சரியான தொகை; இதை, சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டிருந்தது.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் சார்பில், இந்தியன் வங்கி யில் பெறப்பட்ட, 1.50 கோடி ரூபாய், கடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டது. இதற்கு, 50.93 லட்சம் ரூபாய் வட்டியாக செலுத்தப்பட்டது. பின், கடன் தொகையும் செலுத்தப்பட்டு விட்டது. அதனால், இதை வருமானமாக கணக்கில் கொள்ள முடியாது.

இதை, சிறப்பு நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள் ளது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றமோ, கடன் தொகையை, வருமானமாக சேர்த்து தவறு செய்துள்ளது.

* இந்தியன் வங்கியில், விவசாய கடனாக, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தரப்பில், 3.75 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது. இதை, சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே கணக்கில் கொண்டுள்ளது. உயர் நீதிமன்றமும், மீண்டும் அதை கணக்கில் எடுத்துள்ளது. ஆனால், உயர் நீதிமன்றம் அவ்வாறு சேர்த்திருக்கக் கூடாது

* இந்தியன் வங்கியில், 1996 ஆகஸ்ட்டில், ஜெயலலிதா சார்பில், 90 லட்சம் ரூபாய்கடன் பெறப் பட்டுள்ளது. அதாவது, முதல்வர் பதவி காலம் முடிந்த பின், கடன் பெறப்பட்டுள்ளது. இந்த, 90 லட்சம் ரூபாயை, உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்திருக்கக் கூடாது. எனவே, இந்த தொகையை நீக்க வேண்டும்.

* ஜெய் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு, இந்தியன் வங்கியில், 25 லட்சம் ரூபாய் கடன் பெற அனுமதி அளிக்கப்பட்டது; ஆனால், ஐந்து லட்சம் ரூபாய் மட்டுமே, பணம் பெறப்பட்டது. இதை, 25 லட்சம் ரூபாயாக, உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துள்ளது.

 


* ஜே.எஸ்.ஹவுசிங் சார்பில், இந்தியன் வங்கி யில், 12.46 லட்சம் ரூபாய் கடன் அனுமதி பெறப்பட்டு, ஏழு லட்சம் ரூபாய் மட்டுமே வங்கியிலிருந்து பணம் கிடைத்துள்ளது. இதை உயர் நீதிமன்றம், 12.46 லட்சம் கடன் வந்ததாக, கணக்கில் எடுத்துள்ளது.

* ஜெய் விவசாய பண்ணை சார்பில், இந்தியன் வங்கியில், 50 லட்சம் ரூபாய் கடன் அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால், 28 லட்சம் ரூபாய் மட்டுமே பணம் கிடைத்துள்ளது. இதை உயர் நீதிமன்றம், 50 லட்சம் ரூபாய் வருமான மாகவே கணக்கில் எடுத்துள்ளது.

* சசி எண்டர்பிரைசஸ் பெயரில், சசிகலா சார்பில், 50 லட்சம் ரூபாய் கடன் வாங்கப்பட்டு, அதில், 13 லட்சத்து 55 ஆயிரத்து 23 ரூபாய் மட்டுமே, மீண்டும் வங்கிக்கு கட்ட வேண்டி யிருந்தது. ஆனால், இதை, 25 லட்சம் கடன் இருப்பதுபோல், உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துள்ளது.

* சுதாகரன் சார்பில், 'லெக்ஸ் பிராபர்ட்டி டெவலப்மென்ட் லிமிடெட்' நிறுவனத்துக்கு, 1.57 கோடி ரூபாய் கடன் கேட்டு, இந்தியன் வங்கியில் விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், 83 லட்சம் ரூபாய் மட்டுமே, பாக்கி தொகையாக செலுத்த வேண்டியிருந்தது. இதை, 1.57 கோடி ரூபாய் வருமானமாக, உயர் நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது.

* ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் நிறுவனத் துக்கு, 1.65 கோடி ரூபாய், கடன் தொகை கோரப் பட்டது. அதற்கு, அனுமதியும் பெறப்பட்டது. ஆனால், பணம் வந்ததா, இல்லையா என்ப தற்கு, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட வில்லை.

இருந்தாலும், வழக்கில் கூறப்பட்ட காலத்தில், குறிப்பிட்ட வங்கி கணக்கில், 39.10 லட்சம் ரூபாய் மட்டுமே, செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் இருந்தது. ஆனால், 1.65 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துள்ளது. அவ்வாறு செய்திருக்கக் கூடாது.

- தொடரும் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712781

 

Link to comment
Share on other sites

'நான் சாதா திருடி அல்ல'
போலீசிடம் சசி ஆவேசம்
 
 
 

பெங்களூரு:'போலீஸ் ஜீப்பில் ஏறுவதற்கு நான் ஒன்றும் சாதா திருடி அல்ல' என,போலீசாரிடம், சசிகலா ஆவேசமாக கூறியுள்ள தகவல், தற்போது வெளியாகி உள்ளது.

 

Tamil_News_large_171287020170217232002_318_219.jpg

சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா

சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க.,வின் பொதுச்செயலர் பதவியை கைப் பற்றிய அவர், முதல்வர் பதவியையும்பறிக்க முயற்சிகள் மேற்கொண்டார்.

இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு, அவருடைய கனவுகளை தவிடுபொடியாக்கியது. மேலும், சரணடைய அவகாசம் கேட்டபோது, சுப்ரீம் கோர்ட் மறுத்த துடன், ஆவேசமாக கேள்வி எழுப்பியிருந்தது.

சிறையில் சிறப்பு சலுகைகள் அளிக்க மறுத்ததும், சசிகலாவின் எரிச்சலை அதிகரித்தது. இதனால், விரக்தி மற்றும் கோபத்தில் இருந்த சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் ஆக்ரோஷமாக சபதம் செய்து சிறைக்கு வந்தார். சிறை வளாக நுழைவாயிலில் இருந்து சிறை

 

பகுதிக்கு, போலீஸ் ஜீப்பில் அழைத்துச் செல்ல போலீசார் முன்வந்தனர். அப்போது, கோபம் அடைந்த சசிகலா, 'நான் ஒன்றும் சாதா திருடி அல்ல, போலீஸ் ஜீப்பில் ஏறி வருவதற்கு' என்று ஆவேசமாக கூறி, நடந்தே சென்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1712870

Link to comment
Share on other sites

 

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு விபரம்

 

பொது ஊழியராக இருந்த ஜெ., பரிசுப் பொருட்கள் வாங்கியது குற்றம்

ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்அளித்த தீர்ப்பில், கூறப்பட்டுள்ளதாவது:

பரிசுகள் பெறுவது சட்டவிரோதம்:

முதல்வராக ஜெயலலிதா இருந்ததால், அவரது பிறந்த நாளுக்கு வந்த ஏராளமான பரிசுகளை, வருமானமாக கணக்கு காட்டியுள்ளார். நகைகள், ரொக்கப் பணமும், வெளிநாட்டிலிருந்து வந்த தொகையும் காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதா, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக இருந்ததால், அவரது பிறந்த நாளுக்கு, 300 முதல், 350 பேர் வரை, நன்கொடையாக பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பணம் கொடுத்தவர்களில் ஒருவருக்கு கூட, எந்த ரசீதும் கொடுக்கப்படவில்லை. இதற்காக, எந்த வங்கி கணக்கும் பராமரிக்கப்படவில்லை. இதுகுறித்து, வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆதாரங்கள் நிரூபிக்கப்படவில்லை.

நகைகள், பணம், வங்கி வரைவோலை, வெள்ளி பொருட்கள், பட்டு புடவைகள், பிரேம் செய்யப்பட்ட படங்கள் உள்ளிட்டவை, பிறந்த நாள் பரிசாக வந்துள்ளதாக கூறப்பட்டன. இவை அனைத்தும், 1.26 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதேநேரம், 2.15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களும், வெளிநாட்டிலிருந்து, அமெரிக்க டாலர்கள் உட்பட, 77.52 லட்சம் ரூபாயும் பரிசாக வந்ததாக, ஜெயலலிதா கணக்கிட்டுள்ளார். இதுகுறித்து, வருமான வரி கணக்கும் தாக்கல் செய்துள்ளார். அதில், பல குளறுபடிகள் ஏற்பட்டதால், வருமான வரித்துறை கணக்கை தாக்கல் செய்த ஆடிட்டர், உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொது வாழ்வில் இருப்பவர், துாய்மையானவராக இருக்க வேண்டும். பொது ஊழியரான முதல்வர், பரிசுப் பொருட்கள் வாங்குவது, சட்ட விரோதமானது. வாடகை வருமானங்களில் குளறுபடி:

* சசி என்டர்பிரைசஸ் மூலம், வாடகையாக, 6.15 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக, லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கீடு செய்தது. ஆனால், குற்றவாளிகள் தரப்பில், 95.92 லட்சம் ரூபாய் சம்பாதித்ததாக கூறப்பட்டுள்ளது. இதை, சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இதில், 'எச்.பி.எம்., பவுண்டேஷன் லிமிடெட்' நிறுவனம், சசி என்டர்பிரைசஸ் இடத்திற்கு, 21 ஆயிரத்து, 600 ரூபாய், முன் பணமாக கொடுத்து, 97ம் ஆண்டு வரை, வாடகை கட்டியதாக, அதன் நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தில் யார் கையெழுத்திட்டனர் என்பது நிரூபிக்கப்படவில்லை.

வருமான வரி சட்டத்தின் படி, 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல், ரொக்கப் பணம் பரிவர்த்தனை கூடாது என்பதால், இந்த வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது. மேலும், டி.எஸ்.ஆர்.வாசுதேவன் - சசிகலா இடையில், விவசாய நிலம் தொடர்பாக குத்தகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி, 11 மாதங்களுக்கு மட்டுமே, இந்த ஒப்பந்தம் செல்லும். இந்த நிலத்தில் விவசாயம் செய்தது குறித்தும், என்ன பயிர்கள் மகசூல் செய்யப்பட்டன என்பது குறித்தும், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

'ஹவுசிங் ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட்' நிறுவனம், 10 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்ததாக, வெள்ளைத்தாளில் எழுதி கொடுக்கப்பட்டுள்ளது; இதையும் ஏற்க முடியாது. இவை அனைத்தையும் சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தாலும், 25 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளதாக, உயர் நீதிமன்றம் கணக்கிட்ட முறை தவறானது. இதில், உயர் நீதிமன்றம், ஒரு மேல்முறையீட்டு மன்றம் என்பதை காட்ட தவறிவிட்டது.

ஜெ., வாடகை வருமானம்: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டடத்திற்கு, 40.01 லட்சம் ரூபாய், வாடகையாக கிடைத்ததாக, லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது. ஆனால், 43.75 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாக, ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஆவணங்கள் மற்றும் வாக்குமூலங்களை பார்த்ததில், 3.22 லட்சம் ரூபாய்க்கு கணக்கு கிடைக்கவில்லை. உயர் நீதிமன்றம், அதையும் சேர்த்து கணக்கில் எடுத்து விட்டது.

ஜெயா பப்ளிகேஷனின், 'நமது எம்.ஜி.ஆர்.,' என்ற செய்தித்தாள் நிறுவனம், வட்டியில்லாத வைப்புத்தொகை திட்டத்தை, 1990ல் அறிமுகப்படுத்தியது. இதில், ஏராளமானோர் சேர்ந்ததில், 14.23 கோடி ரூபாய் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

நமது எம்.ஜி.ஆர்., நிறுவன விளம்பரம் மற்றும் அச்சடிப்பு தொடர்பாக, ஒரு கோடியே, 15 லட்சத்து 94 ஆயிரத்து 848 ரூபாய், வருமானம் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, சிறப்பு நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சாட்சிகள் யாரும், பணம் கட்டியதற்கான ரசீது பெற்றதை உறுதி செய்யவில்லை.

ஜெயா பப்ளிகேஷன்ஸ், நமது எம்.ஜி.ஆர்., சசி என்டர்பிரைசஸ், மெட்டல் கிங் நிறுவனம் மற்றும் வினோத் வீடியோ விஷன் ஆகியவற்றின் கணக்குகள் உள்ள, மயிலாப்பூர் கனரா வங்கியில், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நடத்திய விசாரணையில், வங்கி அதிகாரி வித்யாசாகர் அளித்த வாக்குமூலத்தையும் பார்க்கும் போது, நமது எம்.ஜி.ஆர்., வைப்புத் தொகை பணம் எதுவும், 'டிபாசிட்' செய்யப்படவில்லை என, தெரிய வந்தது.

இதை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின், வைப்புத் தொகை என்ற கதையை, வருமான வரி கணக்கில் ஜோடித்துள்ளனர் என, சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.

இந்த வருமான வரி கணக்கு அறிக்கையில், வைப்பு தொகைக்கு உரிய ஆவணம் காட்டப் படாததால், அவர்கள் கோரிய வரி விலக்கு ஏற்கப்படவில்லை. இதை சிறப்பு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் கணக்கில் கொண்டாலும், வைப்புத் தொகை திட்டத்தில், கூடுதலாக, நான்கு கோடி ரூபாய் தொகையை, வருமானமாக உயர் நீதிமன்றம் சேர்த்துள்ளது. இது சரி தான் என, ஏற்க முடியாது.

சூப்பர் டூப்பர், 'டிவி'

மூன்றாம் குற்றவாளியான சுதாகரனின் சூப்பர் டூப்பர், 'டிவி' நிறுவனம், அதன் கேபிள் ஒளிபரப்புக்காக, ஒருவருக்கு, 5,000 ரூபாய் வீதம், திருப்பித் தரப்படாத வைப்புத் தொகை பெற்றது. இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், 100 ரசீதுகள் உடைய, 22 ரசீது புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவற்றின் மூலம், ஒரு கோடி ரூபாய் வரை வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளது; அதை கணக்கில் எடுக்கவில்லை என, குற்றவாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றம் நடத்திய விசாரணையில், சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு, ஏராளமான பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. மேலும், வைப்புத் தொகையாக பெற்ற பணத்தை, நிறுவன பயன்பாட்டுக்கு செலவிட்டதாக ஆவணங்கள் இல்லை.

கேபிள், 'டிவி' சட்டத்தின் படி, திருப்பி செலுத்தப்படாத வைப்புத் தொகை பெற முடியாது. இதை, உயர் நீதிமன்றம் கருத்தில் எடுக்காமல், ஒரு கோடி ரூபாயை வருமானமாக, கணக்கில் சேர்த்துள்ளதை ஏற்க முடியாது.

திரும்பி பெறப்பட்ட செல்வ வரி: ஜெயலலிதா செலுத்திய செல்வ வரியில், ௧.௩௫ லட்சம் ரூபாய், 1993 ஏப்ரலில் திரும்ப கிடைத்தது. இதை வருமானமாக சேர்க்க கோரப்பட்டது. வருமான வரி சட்டப்படி, இதை வருமானமாக எடுத்துக் கொள்ள முடியாது.

கடந்த, 1993 மார்ச்சில், 31 ஏ, போயஸ் கார்டன் இடத்தை பதிவு செய்வதற்கு, இரண்டு லட்சத்து, 86 ஆயிரத்து, 569 ரூபாய் செலவு செய்ததாக, சசி என்டர்பிரைசஸ் தெரிவித்துள்ளது. அதேநேரம், சசி என்டர்பிரைசஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான, 'பேக்சஸ் யுனிவர்சல்' நிறுவனங்களிலிருந்து, ஆறு லட்சத்து, 28 ஆயிரத்து, 569 ரூபாய் வருமானம் பெற்றதாக, ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்களில், தங்களுக்குள் பரிவர்த்தனை செய்யும் பணத்தை, வருமானமாக காட்ட முடியாது.

சசிகலாவிடம் கடன்: சசிகலாவுக்கு சொந்தமான, 'பிரெஷ் மஷ்ரூம்' மற்றும் வினோத் வீடியோ விஷன் நிறுவனத்திடம், ௧.௫௩ கோடி ரூபாய் கடன் பெற்றதாக, ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆய்வு செய்ததில், வருமான வரி கணக்கு சட்டத்தின், 13(1) (இ) பிரிவின் கீழ், இந்த பணம் சட்டரீதியான வருமானமாக எடுக்கும் வகையில், ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

ஜெயா பப்ளிகேஷன், கேன்பின் ஹோம்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர்., மூலம் ஜெயலலிதாவுக்கு கிடைத்த வருமானம்:

ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்தில், 1992 - 93 முதல், 96 - 97 வரை, ஒரு கோடியே, 15 லட்சத்து, 94 ஆயிரத்து, 848 ரூபாய் வருமானம் காட்டப்பட்டுள்ளது. இதில், ஒரு கோடியே, ஒரு லட்சத்து, 49 ஆயிரத்து, 900 ரூபாயை ஜெயலலிதா பெற்றுள்ளார்.

அதேநேரம், 1992, செப்டம்பரில் கேன்பின் ஹோம்ஸ் நிறுவனத்திற்கு, 75 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறியுள்ளார். இந்த தொகையை, 1995, மார்ச்சில், ஜெயா பப்ளிகேஷன் திரும்ப செலுத்தியுள்ளது.

ஆனால், கடன் தொகை, தன்னால் செலுத்தப்படவில்லை, தான் பங்குதாரராக உள்ள ஜெயா பப்ளிகேஷனால் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளார். இதை சிறப்பு நீதிமன்றம் ஆய்வு செய்தபோது, ஜெயலலிதா வாங்கிய கடன் தொகை, அவர் வங்கியில் செலுத்திய வைப்பு தொகையின் பேரில் பெற்றுள்ளார் என, கேன்பின் ஹோம்ஸ் நிறுவன மேலாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நமது எம்.ஜி.ஆர்., நிறுவனத்தில் பங்குதாரர் என்ற முறையில், 94 லட்சத்து, 33 ஆயிரம் வருமானம் பெற்றுள்ளதாக, ஜெயலலிதா கூறியுள்ளார். இப்படி மொத்தம், இரண்டு கோடியே, 70 லட்சத்து, 82 ஆயிரத்து, 900 ரூபாய் வருமானம் காட்டியுள்ளார். இந்த தொகையை நிரூபிக்க போதுமான ஆவணங்கள் காட்டவில்லை.

சசி குடும்பத்தினரின் முதலீடு: சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் இளவரசி, சுதாகரன் ஆகியோரை பங்குதாரராக கொண்ட, ஒன்பது நிறுவனங்களின், 26.50 கோடி ரூபாய் வருமானத்தை, லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் சிறப்பு நீதிமன்றம் கணக்கில் எடுக்கவில்லை என, குற்றவாளிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சசி என்டர்பிரைசஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ், ஜெய் வேளாண் பண்ணை, கிரீன் வேளாண் பண்ணை, சூப்பர் டூப்பர் 'டிவி' மற்றும் ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது பங்குதாரர் மற்றும் வெளியாட்கள் மூலம் பெற்ற வருமானமாக, 28.23 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதில், வெளிநாட்டு முதலீட்டை நியாயப்படுத்தும் வகையில், உரிய ஆவணங்களை சசிகலா தாக்கல் செய்யவில்லை. மேலும், குறிப்பிட்ட வருமானம் வந்த காலத்தில், வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டப்படவில்லை என்பதே குற்றமாகும்.

சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையை, வருமானமாக, உயர் நீதிமன்றம் எடுத்தது. ஆனால், நிறுவனங்கள் பெயரில் கடன் பெற்றதை, ஆய்வு செய்யவில்லை.

'பரணி பீச் ரிசார்ட்ஸ், ரிவர்வே அக்ரோ புராடக்ட்ஸ், மெடோ அக்ரோ பார்ம்ஸ்' ஆகியவற்றின் பெயரில் காட்டப்பட்ட முறையே, 22 லட்சம், 52 லட்சம், மற்றும் 32.90 லட்சம் ரூபாய் ஆகியவை குறித்தும், பணப் பரிவர்த்தனை நடந்தது குறித்தும், ஆவணங்கள் இன்றி வார்த்தைகளாலேயே நிரூபிக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு நீதிமன்றம், நிராகரித்ததை ஏற்று கொள்கிறோம்.

குற்றவாளிகள் தரப்பில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள், ஏமாற்றும் வகையில் முதலீடு செய்யவும், கணக்கு காட்டி, தங்களை காத்து கொள்ளவும் துவங்கப்பட்டதாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒன்பது நிறுவனங்களும், 1995 பிப்., 15ல், வெலிங்டன் பிளாசா என்ற ஒரே முகவரியில், ஒரே நாளில் துவங்கப்பட்டுள்ளன. இதை சாதாரண நிகழ்வாக பார்க்க முடியாது என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பரணி பீச் ரிசார்ட்ஸ் மூலம், 50 வங்கி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அவற்றில், ஜெயலலிதா, சசிகலா பெயரில், தலா, 10 கணக்குகள் உள்ளன. குறிப்பிட்ட கால கட்டத்தில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பங்குதாரராக கொண்ட நிறுவனங்கள் பெயரில், 52 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன.

சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், ஜெ.ஜெ., 'டிவி' நிறுவனத்தின் மூலம், இந்தியன் வங்கியில், ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றதாக வருமானம் காட்டியுள்ளனர். ஆனால், இந்த வழக்கில், ஜெ.ஜெ., 'டிவி' இடம் பெறாததால், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

- தொடரும் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713622

Link to comment
Share on other sites

கட்டுமான செலவை கணித்ததில் ஐகோர்ட் அப்பட்டமான தவறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விளாசல்

 

 

ஜெ., சொத்து குவிப்பு வழக்கு விபரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான, சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவ்ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.

இந்தத் தீர்ப்பில், கர்நாடக உயர் நீதிமன்ற உத்தரவில் உள்ள குறைபாடுகள், தவறுகள், சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம்
ஏற்றுள்ளது.

சொத்துக்கள் என்ற வகையில், புதிய கட்டடங்கள், கூடுதல் கட்டடங்கள் கட்டப்பட்ட வகையில், 27.79 கோடி ரூபாயை, ஜெயலலிதா தரப்பினர் செலவு செய்துள்ளனர் என, அரசு தரப்பு குற்றம் சாட்டியது. சொத்துக்கள் மதிப்பில், புதிய மற்றும் கூடுதல் கட்டுமானச் செலவு என்பது, மிகவும்
முக்கியமானது. கணிசமான பணம் இதற்காக செலவிடப்பட்டதால், சொத்துக்கள் மதிப்பில், இது
முக்கிய பங்கு வகிக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் அலசப்பட்டுள்ள விபரங்கள் இதோ:

குற்றப்பத்திரிகையில், 1991-96 காலக்கட்டத்தில், ஜெயலிலதா உள்ளிட்ட, நால்வரின் சொத்து விபரங்கள், 66.44 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டிருந்தது. இந்த சொத்துக்களை, அரசுத் தரப்பு,
12 இனங்களாக பிரித்துள்ளது.

சொத்துக்களின் மதிப்பை பொறுத்தவரை, லஞ்ச ஒழிப்பு போலீஸ், 68.61 கோடி ரூபாய்; பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 55.02 கோடி ரூபாய்; கர்நாடக உயர் நீதிமன்றம், 25.46 கோடி ரூபாய்; ஜெ., உள்ளிட்ட நால்வர் தரப்பில், 29.82 கோடி ரூபாய் என, மதிப்பிட்டிருந்தது.

சொத்து மதிப்பீடு குறைப்பு

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் சொத்து மதிப்புகளாக, அரசுத் தரப்பு மதிப்பிட்டிருந்த, 66.44 கோடி ரூபாயை, கணக்கீட்டுக்காக ஏற்பதாக, கர்நாடக உயர் நீதிமன்றம், அதன், 966வது பக்க தீர்ப்பில் கூறியிருந்தது.மேலும், அசையா சொத்து; விற்பனை விலையில் கூடுதலாக
செலுத்தப்பட்ட ரொக்கம்; புதிய அல்லது கூடுதல் கட்டட கட்டுமானங்கள்; காலணிகள் மற்றும் கைக்கடிகாரங்கள் ஆகிய ஐந்து இனங்களில் கூறியிருந்த மதிப்பை, உயர் நீதிமன்றம் மாற்றி
உள்ளது. அதனால், சொத்து மதிப்பீடு பெரிதும் குறைந்தது.

குறிப்பாக, புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் மதிப்பை, கர்நாடக உயர் நீதிமன்றம், 5.10 கோடி ரூபாயாக மதிப்பிட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறையோ, 27.79 கோடி ரூபாயாக மதிப்பிட்டிருந்தது. இதன் மூலம், 22.69 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்துக்களின் மதிப்பை, உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் மதிப்பீட்டை ஏற்றுக் கொண்டாலும், நான்கு பேரின் சொத்து மதிப்பான, 66.44 கோடி ரூபாயில் இருந்து, 22.69 கோடி ரூபாயை கழித்தால், சொத்து மதிப்பு, 43.75 கோடி ரூபாயாக வந்து விடும் என்பது அரசு தரப்பு வாதம். எனவே, இந்த சொத்துக்கள் தொடர்பாக, அனைத்து இனங்களையும் பரிசீலிக்க தேவையில்லை; ஒரே ஒரு இனமாக, புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் கட்டுமானம் குறித்த ஆதாரங்களை மட்டுமே ஆய்வு செய்வது போதுமானது. ஏனென்றால், அதுவே இந்த வழக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டடங்களின் கட்டுமானத்தின் மதிப்பை பொறுத்தவரை, லஞ்ச ஒழிப்புத் துறை, 27.79 கோடி ரூபாய்; சிறப்பு நீதிமன்றம், 22.53 கோடி ரூபாய்; கர்நாடக உயர் நீதிமன்றம், 5.10 கோடி ரூபாய்; ஜெயலலிதா சார்பில், 8.60 கோடி ரூபாய் என, மதிப்பிடப்பட்டுள்ளது.

17 கட்டடங்கள் பரிசீலனை

ஜெ., உள்ளிட்ட நான்கு பேர் கூறிய தொகையை விட, கர்நாடக உயர் நீதிமன்றம், 3.5 கோடி ரூபாய் குறைத்து மதிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அரசுத் தரப்பில், புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் என்ற தலைப்பில், 21 வகை கட்டுமானங்கள் பட்டியலிடப்பட்டிருந்தது. அதில், 18 கட்டுமானங்களை, தனி நீதிமன்றம் பரிசீலித்துள்ளது; ஆனால், உயர் நீதிமன்றம், 17 கட்டுமானங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது.

அரசுத் தரப்பின்படி, அந்த, 21 கட்டுமானங்களின் மொத்த பரப்பு, 23 ஆயிரம் சதுர மீட்டர்; அதாவது, 2,483 சதுரங்கள். உயர் நீதிமன்றம் கணக்கில் எடுக்காத, நான்கு கட்டடங்களின் பரப்பு, 2,174 சதுரங்கள்.இந்த 2,174 சதுரங்களுக்கான மதிப்பை கணக்கெடுப்பதற்கு பதிலாக, 1,668 சதுரங்களுக்கு
மட்டுமே, அதாவது, 506 சதுரங்கள் குறைவாக, உயர் நீதிமன்றம் மதிப்பீடு செய்துள்ளது.

கர்நாடக உயர் நீதிமன்றம், நான்கு கட்டடங்களை விட்டுவிட்டது மட்டுமின்றி, அது கணக்கில் எடுத்துக் கொண்ட, 17 கட்டடங்களின் மொத்த பரப்பை மதிப்பிடுவதிலும் தவறு செய்தது என்பது, அரசு தரப்பு வாதம்.புதிய கட்டடங்கள் மற்றும் கூடுதல் கட்டுமானங்களுக்கு, 29.35 ரூபாய் செலவு செய்யப்பட்டதாக, அரசுத் தரப்பு கூறியுள்ளது; ஆனால், ஜெயலலிதாவோ, ஐந்து ஆண்டு காலத்தில், 6.52 கோடி ரூபாய் மட்டுமே செலவானதாக கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு சொத்தை மட்டும் வாங்கியதாகவும்,
ஐதராபாத்தில் உள்ள திராட்சைத் தோட்டம் மற்றும் சென்னை போயஸ் கார்டனில், கூடுதல் கட்டுமானங்கள் மேற்கொண்டதில், 3.62 கோடி ரூபாய் செலவானதாகவும் தெரிவித்திருந்தார்.
மேற்கூறிய வகையில், 13.65 கோடி ரூபாய் செலவானதாக, அரசுத் தரப்பில் மதிப்பிடப்பட்டதால், 10 கோடி ரூபாயை கழித்துவிட வேண்டும் என, ஜெயலலிதா தரப்பில் கோரப்பட்டது. இதுதவிர,
செலவினங்கள் மிக அதிகமாக மதிப்பிடப்பட்டதாகவும், ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.

உதாரணத்திற்கு, கட்டுமானம் நடந்த போது, மார்பிள் கற்களின் ஒரு சதுர அடி விலை, 100 முதல் 180 ரூபாயாக இருந்தது; ஆனால், அரசுத் தரப்பில், அது, 5,000 ரூபாய் முதல், 21 ஆயிரம் ரூபாயாக மதிப்பிட்டுள்ளது; ஆனால், உயர் நீதிமன்றம் அதை சரியாக மதிப்பிட்டிருந்ததாகவும் ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டது.

20 சதவீதம் குறைப்பு

அதேநேரத்தில், 21 கட்டடங்கள் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றுக்காக, 29.35 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக, அரசுத் தரப்பு கூறிய நிலையில், தனி நீதிமன்றம், 18 கட்டடங்களை கணக்கில் எடுத்து, 22.53 கோடி ரூபாய் செலவானதாக கூறியது.மொத்த கட்டுமானங்களில்,
21க்குப் பதில், 17-ஐ மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டதுடன், கட்டுமானப் பரப்பையும், 506.3 சதுரங்கள் குறைத்து, உயர் நீதிமன்றம் மதிப்பிட்டிருந்ததை, அரசு தரப்பு சுட்டிக்காட்டியது.
இதுதவிர, செலவினங்களை கணக்கிடும் போது, விலை உயர்ந்த பொருட்களை வாங்கிய செலவுகளை, உயர்நீதிமன்றம் கணக்கில் எடுக்கவில்லை.

கட்டுமானச் செலவு, சதுர அடிக்கு 4,037 ரூபாய் என்பதற்கு மாறாக, சதுர அடிக்கு, 680 ரூபாய் மட்டும் செலவிடப்பட்டதாக, உயர் நீதிமன்றம் குறைத்து காட்டியிருந்தது. அதன்படி, புதிய மற்றும் கூடுதல் கட்டுமான மதிப்பை, 83 சதவீதம், உயர் நீதிமன்றம் குறைத்து காட்டியுள்ளது என்றும், அரசுத் தரப்பு தெரிவித்தது.

எனவே, கட்டுமானப் பரப்பு கணக்கீட்டை குறைத்தது மட்டுமின்றி, செலவை மதிப்பிடுவதிலும், உயர் நீதிமன்றம் தவறு செய்துள்ளது, என அரசுத் தரப்பு வாதிட்டது.

புறக்கணிக்க முடியாது

ஆவணங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையில், செலவினங்களை சிறப்பு நீதிமன்றம் ஆய்வு செய்தது. அந்த கட்டடங்களை ஆய்வு செய்த பொறியாளர்கள், பொதுப்பணி மற்றும் மின்துறை அதிகாரிகள் அளித்த அறிக்கையையும் ஆய்வு செய்தது. அரசுத் தரப்பு நிர்ணயித்த
செலவின தொகையை, 20 சதவீதம் குறைத்து, 22.53 கோடி ரூபாயாக, சிறப்பு நீதிமன்றம் இறுதி செய்தது.

கட்டுமானங்களை ஆய்வு செய்யும் பணி மிக பெரியது. அதை, ஆவண சாட்சியங்கள்
அடிப்படையில், சிறப்பு நீதிமன்றம் விவரித்த விதத்தை பார்க்கையில், அது ஏற்புடையதே.
மொத்தத்தில், சிறப்பு நீதிமன்றம் குறிப்பிட்ட செலவினத்தை, அபத்தம் என்றோ, நம்பத்தக்கதல்ல என்றோ கூற முடியாது. ஆவணங்களை சரிவர பரிசீலித்து, செலவு கணக்கை, சிறப்பு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இது, சரியல்ல என்று புறக்கணித்து விட முடியாது.

ஏற்புடையதல்ல

உயர் நீதிமன்றம், கட்டுமானத்திற்கு, ஒரு சதுரத்துக்கு, 28 ஆயிரம் ரூபாய் செலவானது என்பதை ஏற்றுக்கொண்டது. உயர் நீதிமன்றத்தின்படி, மொத்த கட்டுமானப் பரப்பு, 1.66 லட்சம் சதுர அடி அல்லது 1,668 சதுரங்கள். அதில், 25 ஆயிரம் சதுர அடியில், கிரானைட் பயன்படுத்தப்பட்டு இருப்பதையும் ஏற்றுள்ளது.கட்டட கலைஞர் மற்றும் திட்ட அனுமதி செலவினமாக, மேலும், 9.65 லட்சம் ரூபாயை சேர்த்திருந்தது. சதுர அடி செலவு, 28 ஆயிரம் ரூபாய் அடிப்படையில், அனைத்து அம்சங்களும் நிறைந்த கட்டடங்களுக்கான, கட்டுமான செலவை 5.10 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் நிர்ணயித்தது.

ஆவண சாட்சியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறை, ஏற்கக்கூடியதாக இல்லை. ஒரு சதுரத்துக்கு, 28 ஆயிரம் ரூபாய் என, உயர் நீதிமன்றம் கணக்கிட்டிருக்க கூடாது. அதுமட்டுமின்றி, அரசுத் தரப்பு கூறியபடி, உயர் நீதிமன்றம், 2,174 சதுரங்களுக்குப் பதிலாக, 1,668 சதுரங்கள் என, குறைவாக கணக்கில் எடுத்ததும் தெரியவந்தது. உயர் நீதிமன்றத்தின், அந்த தவறான மதிப்பீடு ஏற்புடையதல்ல.

ஒட்டுமொத்தமாக ஆதாரங்களை பரிசீலிக்கும் போது, புதிய மற்றும் கூடுதல் கட்டுமானங்களுக்கு ஆன செலவை, 5.10 கோடி ரூபாயாக, உயர் நீதிமன்றம் குறைத்தது தவறானது.புதிய கட்டுமான மதிப்பீட்டில், கட்டுமான செலவுக்கான போதுமான ஆதாரங்களை அரசு தரப்பு தாக்கல் செய்யாததால், அதில், 20 சதவீதத்தை, சிறப்பு நீதிமன்றம் குறைத்தது; அதனால், அவர்களது ஒட்டுமொத்த மதிப்பீட்டையும் கணக்கில் எடுக்கக் கூடாது என, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கோரப்பட்டது.

அதற்கு, தகுதி பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தான், கட்டுமானத்தை ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர் என, அரசு தரப்பு பதிலளித்தது. மேலும், எளிதில் கணிக்க முடியாத
செலவுகள் இருந்ததாலேயே, 20 சதவீத செலவினத்தை, சிறப்பு நீதிமன்றம் குறைத்தது என்றும் கூறப்பட்டது

கட்டுமானத்திற்கு உயர் ரக மார்பிள் கற்களை பயன்படுத்தியதை வைத்து பார்க்கையில், சிறப்பு நீதிமன்றத்தின் மதிப்பீடு நியாயமானது என்றும் அரசுத் தரப்பு தெரிவித்தது. மேலும், ஜெயலலிதா, சசிகலா உட்பட, நால்வர் தரப்பிலும் குறிப்பிட்ட மதிப்பீடான, 8.60 கோடி ரூபாயை விட, கர்நாடக உயர் நீதிமன்றம், 5.10 கோடி ரூபாயாக குறைவாக மதிப்பீடு செய்ததையும் சுட்டிக் காட்டினர். மேலும், 50 ஆயிரத்து, 630 சதுர அடி குறைவாக கணக்கில் கொண்டதையும் கூறினர்.

49 பத்திரங்கள் இல்லை

புதிய, கூடுதல் கட்டுமானங்கள் தவிர்த்து, பெரிய சொத்துக்களாக அசையா சொத்துக்களை
கணக்கிடும் போது, 97 விற்பனை பத்திரங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட உயர்
நீதிமன்றம், மொத்த வருவாய், 6.24 கோடி ரூபாய் என, கணக்கிட்டுள்ளது. 49 விற்பனை பத்திரங்களை, கணக்கில் கொள்ளாமல், 6.24 கோடி ரூபாய் என, முடிவுக்கு வந்துள்ளது.புதிய கட்டுமானம் மற்றும் கூடுதல் கட்டுமான மதிப்பை, 5.10 கோடி ரூபாய் அளவிற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் குறைத்து காட்டியதை, மீண்டும் இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.

அதனால், அரசுத் தரப்பு நிர்ணயித்த மதிப்பீட்டில், 22.69 கோடி ரூபாய் மதிப்பீடு குறைந்தது. மேலும், உயர் நீதிமன்றம், கணக்கில் கொள்ளாமல் விடுத்த நான்கு கட்டுமானங்கள் குறித்து, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தரப்பில் கேள்வி கேட்கவில்லை.மொத்த ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், புதிய கட்டுமானம் மற்றும் கூடுதல் கட்டுமானச் செலவாக, 5.10 கோடி ரூபாயை, கர்நாடக உயர் நீதிமன்றம் கணித்தது அப்பட்டமான தவறு.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1714074

Link to comment
Share on other sites

புளூ பார்டர் சேலைகள்... தட்டு... டம்ளர்... சொம்பு... போர்வை!

சிறை அத்தியாயம் ஸ்டார்ட்ஸ்!

 

பெங்களூரு நீதிமன்றத்தில் சசிகலாவும் இளவரசியும் ஆஜரானது முதல், பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டது வரையிலான பரபரப்பு நிமிடங்களின் பதிவு இது!

 ‘சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் சரணடைகிறார்கள்’ என்ற தகவல் வெளியானவுடன், பிப்ரவரி 15-ம் தேதி காலையிலேயே பெங்களூரு பரபரப்பானது. அந்த நீதிமன்றத்தில்தான், 2004-ம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வந்தது. அன்றைய தினம், காலை 10 மணிக்கு பதிவாளர் ராதாகிருஷ்ணாவை, சசி தரப்பு வழக்கறிஞர் குலசேகரன் சந்தித்து, “சசிகலாவும், இளவரசியும் இன்று சரணடைகிறார்கள்” என்று தெரிவித்தார். அதையடுத்து, 48-வது நீதிமன்ற அறைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அந்த அறையின் நீதிபதி அஷ்வத நாராயணாவுக்கும் இதுபற்றித் தெரிவிக்கப்பட்டது. மீடியாவினர் குவிந்ததால், நீதிமன்றத்துக்கு வெளியே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால், நீதிமன்றப் பதிவாளர் ராதாகிருஷ்ணா, ‘இந்த வழக்கு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் உள்ள நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதாகத் தெரிவித்தார். அதையடுத்து, அனைவரும் அங்கு சென்றார்கள். மதியம் ஒரு மணிக்கு மேல் கர்நாடக போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். சிறை வளாகத்துக்குள் இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.

 பிற்பகல் மூன்று மணிக்கு நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் வந்தார்கள். சரியாக 5:15 மணிக்கு சசிகலாவும், இளவரசியும் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்துக்குள் இருந்த கோர்ட்டுக்குள் சென்றனர். நீதிபதி அப்போது சேம்பருக்குள் இருந்ததால், கோர்ட் அறையையொட்டிய வராண்டாவில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அவர்கள் இருவரும் அமர்ந்தனர். அவர்கள் வந்த செய்தி, கோர்ட் ஊழியர்கள் மூலம் நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டது. 10 நிமிடங்களுக்குப்பின், நீதிபதி அஷ்வத நாராயணா, தன் இருக்கையில் வந்து அமர்ந்தார். கோர்ட் கிளார்க் யோகானந்த் எழுந்து நின்று வழக்கு எண்ணைச் சொல்லி, “குற்றவாளிகள் சசிகலா, இளவரசி’’ எனச் சத்தமாகக் கூப்பிட, அவர்கள் இருவரும் நீதிபதியைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டவாறே கூண்டுக்குள் ஏறி நின்றார்கள்.

p5.jpg

நீதிபதி: “உச்ச நீதிமன்றத்தில் உங்கள் வழக்கின் மீது தீர்ப்பு வழங்கியது பற்றி உங்களுக்குத் தெரியுமா?’’

சசிகலா: (தலையாட்டினார்)

சசி தரப்பு வழக்கறிஞர் குலசேகரன்: “தெரியும். அதனால்தான் இன்று சரண்டராகி இருக்கிறோம்.”

நீதிபதி: (சசிகலாவைப் பார்த்து) “உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமா?’’

சசிகலா: (தலையாட்டிக்கொண்டே) “தெரியும்.’’

நீதிபதி: (சரண்டர் ஃபார்மில் சசிகலா, இளவரசியிடம் நீதிபதி கையொப்பம் பெற்றார். கோர்ட் கிளார்க் யோகானந்திடம், சிறைத்துறைக்குக் கொடுக்க வேண்டிய படிவத்தைப் பூர்த்தி செய்யுமாறு சொன்னார். பிறகு, சிறைத்துறை பெண் இன்ஸ்பெக்டர் அஜ்மலிடம்) “இவர்களை நீங்கள் கஸ்டடி எடுத்துக்கொள்ளுங்கள்.’’

இன்ஸ்பெக்டர் அஜ்மல்: “ஓ.கே சார்.’’

அதையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோரின் சரண்டர் ஃபார்மில் உள்ள அங்க அடையாளங்களைச் சரிபார்த்ததோடு... அவர்களுடைய உயரம், எடை, ரத்த வகை முதலிய பரிசோதனைகளைச் சிறைத்துறை மருத்துவர்கள் செய்தனர். இருவருக்கும் ரத்த அழுத்தம் இயல்பாக இருந்தது. ஆனாலும், இருவருக்கும் சர்க்கரை நோய் இருந்ததால், மீண்டும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கறிஞர் குலசேகரன்: “இவர்கள் இருவரும் சர்க்கரை நோயாளிகளாக இருப்பதால், வெளியில் இருந்து மாத்திரைகள் கொடுக்க அனுமதிக்க வேண்டும்.’’

நீதிபதி: “இதை சிறைத் துறை டாக்டர்கள் பார்த்து பரிசீலனை செய்வார்கள்.’’

வழக்கறிஞர் குலசேகரன்: “இவர்கள் வருமான வரிக் கட்டுவதால், ஏ கிளாஸ் அறை ஒதுக்கித்தர வேண்டும்.’’

நீதிபதி: “சிறைத்துறைக்கு என்று விதிமுறைகள் இருக்கின்றன. அவற்றை சிறைத்துறை அதிகாரிகள் பின்பற்றுவார்கள். என்னிடம் வைத்த இந்தக் கோரிக்கையை சிறைத்துறை கண்காணிப் பாளரிடமும் வையுங்கள். அவர் செய்து தருவார். இன்னொரு குற்றவாளி எங்கே? பெண்களாகிய நீங்கள் வந்துவிட்டீர்கள். அவர் ஏன் இன்னும் வரவில்லை?’’

வழக்கறிஞர் மூர்த்தி ராவ்: “சுதாகரன் வந்துகொண்டிருக்கிறார். வருவதற்குக் கொஞ்சம் காலதாமதம் ஆகும், மை லார்ட்.’’

நீதிபதி: “எவ்வளவு நேரம் ஆகும்?’’

வழக்கறிஞர் மூர்த்தி ராவ்: “முக்கால் மணி நேரம் ஆகும்.’’

நீதிபதி: ‘‘ஓகே, வெயிட் பண்றேன். 10 கோடி ரூபாய் அபராதத் தொகையை ஒவ்வொருவரும் இப்போது கட்டுகிறீர்களா?’’

வழக்கறிஞர் குலசேகரன்: “இன்றைய தேதியில் கட்டுவதற்கில்லை. சசிகலா, இளவரசி தங்கள் உறவினர்களைப் பார்த்துப் பேசுவதற்கு 15 நிமிடங்கள் அனுமதி கொடுக்க வேண்டும்.’’

நீதிபதி: “ஓகே... பேசிக்கொள்ளட்டும்.’’

p5a.jpg

அதையடுத்து சசிகலாவும், இளவரசியும் கோர்ட் ஹாலை விட்டு வெளியே வந்தார்கள். அவர்களைச் சுற்றி சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனின் மகன் டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார், இளவரசின் மகன் விவேக் மற்றும் சிலர் கண்கலங்கியபடி நின்றனர். அவர்களுடன் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் இருந்தார். அந்தச் சமயத்தில், சசியின் கண்களில் இருந்தும் கண்ணீர் கசியத் தொடங்கியது. கண்ணீரைத் துடைத்தபடியே அங்கிருந்தவர்களிடம் பேசினார்.  

இந்த கும்பலில் ஒட்டாமல், ஒரு ஓரமாக நின்று கவனித்துக்கொண்டிருந்தார், சசிகலாவின் கணவர் ம.நடராசன். சசிகலாவும் நடராசனும் சமீப நாட்களில் பொதுவெளியில் சந்தித்துக்கொண்டது அரிது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அப்படி ஒரு சந்திப்பு சிறை வளாகத்தில் நிகழ்ந்தது. பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறைத்துறை பெண் இன்ஸ்பெக்டர் அஜ்மல், மாலை 6:20 மணிக்கு சசிகலாவிடம் வந்தார். ‘‘வாங்க கிளம்பலாம். கார் எடுத்து வரச் சொல்லவா?’’ என்றார். அதற்கு, ‘‘வேண்டாம்... நடந்தே வருகிறேன்’’ என்றார் சசிகலா. நீதிமன்றத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள சிறையை நோக்கி, சசிகலாவும் இளவரசியும் சோகத்துடன் நடந்துசென்றனர். சிறைக்கதவு திறக்கப்பட்டதும், இருவரும் குனிந்தபடி சிறைக்குள் சென்றனர்.

 இதையடுத்து 6:50 மணிக்கு சுதாகரன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிபதி: “உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது பற்றி உங்களுக்குத் தெரியுமா?’’

சுதாகரனின் வழக்கறிஞர் மூர்த்தி ராவ்: “தெரியும்.’’

நீதிபதி: “ஏன் இந்தக் காலதாமதம்?’’

மூர்த்தி ராவ்: “கார் டிரைவருக்கு நீதிமன்றத்துக்கான வழி தெரியாமல் மாறிச்சென்றுவிட்டதால் காலதாமதம் ஏற்பட்டது.’’

நீதிபதி: “ஓகே. (அருகில் இருந்த இன்ஸ்பெக்டர் கிஷோரைப் பார்த்து) இவரை கஸ்டடி எடுத்துக்கொள்ளுங்கள்.’’

கிஷோர்: “ஓகே மை லார்டு.’’

அதையடுத்து சுதாகரனுக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இரவு 7:05 மணிக்கு அவரை ஆண்கள் சிறைக்குள் அனுப்பினார்கள். 7:15 மணிக்கு நீதிபதியும், நீதிமன்ற ஊழியர்களும் கிளம்பிச் சென்றார்கள். அங்கிருந்த காவல் துறையினர், சிறை வளாகத்துக்குள் இருந்தவர்களை அப்புறப்படுத்தினார்கள்.

சசிகலாவுக்கும் இளவரசிக்கும் கைதி எண்கள் தரப்பட்டன. சசிகலாவின் கைதி எண்: 9,234. இளவரசியின் கைதி எண்: 9,235. இவர்கள் இருவருக்கும் வெள்ளை நிறத்தில் நேவி புளூ பார்டர் வைத்த சேலைகள் (தலா மூன்று) வழங்கப்பட்டன. ஒரு தட்டு, டம்ளர், குவளை, போர்வை போன்ற பொருள்களும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. சுதாகரனுக்கு, 9,236 என்ற கைதி எண் தரப்பட்டு, கைதிகளுக்கான மூன்று செட் ஜிப்பாக்களும் பேன்ட்டும், ஒரு தட்டு, டம்ளர், போர்வையும் வழங்கப்பட்டன. கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவில்லை என்பதால், இவர்கள் யாரும் வேலைசெய்ய வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் செய்யலாம்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

சொத்து சேர்க்கவே ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள்! - உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது!

 

நீதிமன்றத் தீர்ப்புகளில், எளிய மக்களுக்குப் புரியாத சட்ட வார்த்தைகளே அதிகம் இருக்கும். அலங்கார வார்த்தைகளுக்கு அதில் இடம் இருக்காது. உணர்ச்சிவசப்பட்டு நீதிபதிகள் கருத்து சொல்வதெல்லாம், அரிதான சம்பவங்கள். ஆனால், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பில் இந்த வழக்கங்கள் ஏதுமில்லை. 570 பக்கத் தீர்ப்பில், முதல் 563 பக்கங்களை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவா ராய் ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக ஏழு பக்க இணைப்பு ஒன்றைத் தனியாக எழுதியிருந்தார், அமிதவா ராய். 

‘‘வேதனையான அமைதியில் சில எண்ணங்கள் அலைபாய்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த இணைப்பு’’ எனச் சொல்கிறார் அமிதவா ராய். ‘‘சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சொத்து சேர்த்து, நிழலான நிறுவனங்களில் அவற்றைப் பதுக்கி வைக்கும் சதி நிகழ்ந்திருக்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி இப்படி ஊழல் செய்யும்போது, அவர்களைத் தண்டிக்கவும், பதில் சொல்லவும் வைக்க வேண்டிய கடமை, இந்தச் சமூகத்துக்கும் நாட்டுக்கும் இருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்தப் போரில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்க வேண்டும்’’ என உணர்ச்சி வசப்படுகிறார் ராய்.

p30.jpg

கீழமை நீதிமன்றங்கள் பொதுவாக உச்ச நீதிமன்றத்தின் பாராட்டைப் பெறுவது அபூர்வம், ஆனால், இந்தத் தீர்ப்பில் முழுக்கவே கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்துத் தீர்ப்பு வழங்கிய மைக்கேல் டி குன்ஹாவைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள் நீதிபதிகள். ‘‘நுணுக்கமாகவும், புத்திசாலித்தனமாகவும், விழிப்பு உணர்வோடும், நியாயமாகவும் அவர் வழக்கைக் கையாண்டு இருக்கிறார்’’ என ஷொட்டு வைத்திருக்கும் நீதிபதிகள், மேல்முறையீட்டில் வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியைக் குட்டவும் தவறவில்லை. ‘சாட்சியங்களை சரியான சட்ட வழிமுறைப்படி புரிந்துகொண்டு பரிசீலிக்கத் தவறிவிட்டார்’ எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.  குன்ஹா, குமாரசாமி ஆகிய இருவரின் தீர்ப்பையும் ஒப்பிட்டு, எல்லா விஷயங்களிலுமே குன்ஹா தீர்ப்போடு ஒத்துப் போயிருக்கிறார்கள். அந்தப் பட்டியலே குன்ஹாவின் பாரபட்சமற்ற அணுகுமுறையையும் குமாரசாமியின் பிழைகளையும் உணர்த்தும்.

dot.png ஜெயலலிதா முதல்வராக இருந்த ஐந்தாண்டு காலத்தில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரின் வருமானம், ரூ.9,91,05,094.75 என குன்ஹா கணக்கு போட்டிருந்தார். குமாரசாமி போட்ட கணக்கில் இந்த வருமானம், ரூ.34,76,65,654 என கிட்டத்தட்ட மூன்று மடங்குக்கும் அதிகமாக எகிறியிருந்தது. கடன்கள், பரிசுப்பொருட்கள், வாடகை வருமானம் என 10 விதமான வருமானங்களை குமாரசாமி புதிதாகச் சேர்த்திருந்தார். ‘‘கடன்களை எப்படி வருமானமாகக் காட்ட முடியும்?’’ என்பது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் கேள்வி. வாங்கி, திரும்ப அடைத்துவிட்ட கடன்களையும் வருமானமாகக் காட்டியிருந்தார் குமாரசாமி. இதையெல்லாம் சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்றம், ‘‘ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் வருமானம் மிகைப்படுத்தியும் தவறாகவும் குமாரசாமி தீர்ப்பில் காட்டப்பட்டுள்ளது’’ என்கிறது.

dot.png ஜெயலலிதாவின் சொத்து மதிப்பில் முக்கியமாக வருபவை கட்டடங்கள். 5 ஆண்டு காலத்தில் புதிதாக வாங்கியவை, கட்டப்பட்டவை என, வழக்குத் தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத் துறை ஒரு கணக்கைக் கொடுத்தது. பொதுப்பணித் துறையை வைத்து கட்டடங்களை மதிப்பீடு செய்த குன்ஹா, அதிலிருந்து 20 சதவிகித சேதாரத்தைக் கழித்துவிட்டு, 22,53,92,344 ரூபாய் என மதிப்பைக் கணக்கிட்டார். ஆனால், குமாரசாமியோ சுமார் 22 கோடியே 69 லட்ச ரூபாயைக் குறைத்து வெறும் 5,10,54,060 ரூபாய் என இந்த மதிப்பைக் காட்டினார். இதில் வேடிக்கை என்னவென்றால், ஜெயலலிதா தரப்பே இதற்கு 8,60,59,261 ரூபாய் மதிப்பு எனச் சொன்னது. ஜெ. தரப்பு சொன்னதைவிடவும் மூன்றரை கோடி ரூபாய் குறைவாக குமாரசாமி மதிப்பிட்டதுதான் பெரும் ஆச்சர்யம். ‘‘இந்த மதிப்பீடு உண்மையாகவோ, பகுத்தறிவின் அடிப்படையிலோ செய்யப்பட வில்லை. இது ஒப்புக்கொள்ள உகந்ததல்ல’’ என உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது.

dot.png இதேபோன்ற இன்னோர் அபத்தம், ஜெயா பப்ளிகேஷன்ஸின் வருமான விஷயத்தில் குமாரசாமி போட்ட கணக்கு. ‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் சந்தா போன்றவை மூலம் வந்த வரவுகளை சட்டபூர்வ வருமானமாகக் கணக்கிடக் கோரியது ஜெயலலிதா தரப்பு. இதில் ஜெ. தரப்பு வழக்கறிஞர்களே உரிமை கோரியது, 1.15 கோடி ரூபாயை மட்டுமே! இது ஜெயா பப்ளிகேஷன்ஸின் லாபம். ஆனால், ஜெயா பப்ளிகேஷன்ஸ் வருமானமாக குமாரசாமி நான்கு கோடி ரூபாயை வரவு வைத்திருந்தார். ‘‘கட்சிக்காரர்கள் 31 பேர் சொன்ன சாட்சியை வைத்து நீதிபதி இந்த முடிவுக்கு வந்திருக்கிறார். சட்டப்படி இந்த சாட்சியங்கள் செல்லாது’’ எனக் குட்டியுள்ளது உச்ச நீதிமன்றம்.

dot.png சர்ச்சைக்குரிய இன்னொரு விஷயம், பரிசுப்பொருட்கள். ‘‘ஜெயலலிதாவின் 44-வது பிறந்தநாளின்போது அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்களை, அவருடைய வருமானக் கணக்கில் சேர்த்துக்கொள்ள வேண்டும்’’ என அவர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரினார்கள். ‘இது வருமானமாக வராது’ என மறுத்தார் குன்ஹா. ஆனால், இதைச் சட்டப்பூர்வ வருமானமாக வரவு வைத்தார் குமாரசாமி. உச்ச நீதிமன்றமோ, ‘‘ஊழல் தடுப்புச் சட்டப்படி இது சட்டப்பூர்வ வருமானம் இல்லை’’ என குமாரசாமியின் கணக்கை மறுத்துள்ளது.

dot.png செலவுக் கணக்கிலும் இந்த வித்தியாசம் தொடர்கிறது. வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத் துக்கு ஆன செலவு,  ஆறு கோடியே 45 லட்ச ரூபாய் என கணக்குச் சொன்னது லஞ்ச ஒழிப்புத் துறை. குன்ஹா இதை மூன்று கோடி ரூபாய் என மதிப்பிட்டார். ஆனால், திருமணச் செலவு வெறும் 28 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய்தான் என அதிரடியாகக் குறைத்தார் குமாரசாமி. ஜெயலலிதாவின் வருமான வரி ரிட்டர்ன் கணக்கை வைத்து இந்த முடிவுக்கு வந்ததாக குமாரசாமி சொன்னார். ஆனால், ‘‘இந்தக் கணக்கை ஏற்றுக்கொள்ள முடியாது. வழக்கில் வைக்கப்பட்டுள்ள சாட்சியங்களைப் பார்த்தால், இப்படி ஒரு முடிவுக்கு வர முடியாது’’ என்றது உச்ச நீதிமன்றம்.

யார் கணக்கு சரி?

வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் குவித்தனர் என்பது வழக்கு. 01.07.1991 முதல் 30.04.1996 வரையிலான காலத்தில் இவர்களின் சொத்துக் கணக்கு மதிப்பிடப்பட்டு, வழக்கு நடந்தது. இதில் ஒவ்வொருவரும் போட்டக் கணக்கு இங்கே...

p30b.jpg

இப்படி தீர்ப்பின் பல பகுதிகள், குமாரசாமியைக் குட்டியும், குன்ஹாவைப் பாராட்டியுமே உள்ளன. குமாரசாமியின் எல்லா கணக்குகளிலுமே உச்ச நீதிமன்றம் தவறு காண்கிறது.

ஜெயலலிதா இறந்துவிட்டதாலேயே அவர் உத்தமர் என இந்தத் தீர்ப்பு சொல்லவில்லை. ஊழலிலும், கூட்டுச் சதியிலும் அவருடைய பங்கையும் விலாவாரியாக விவரித்திருக்கிறது. ‘‘சட்டப்பூர்வமான முகமூடியை வைத்துக்கொண்டு நிழலான காரியங்களைச் செய்யும்போது, அந்த முகமூடியை அகற்றிவிட்டு, திரைக்குப் பின்னால் இருக்கும் நிஜமான முகத்தைக் காட்ட வேண்டிய அவசியம் நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அதை சிறப்பு நீதிமன்றம் சரியாகச் செய்திருக்கிறது’’ என குன்ஹாவைப் பாராட்டி இருக்கிறார்கள் நீதிபதிகள்.  

‘‘ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா, சுதாகரன், இளவரசி என எல்லோரும் கூட்டாகச் சேர்ந்திருந்தது, ஏதோ தொண்டு செய்யும் உந்துதலில் இல்லை. ஜெயலலிதா சம்பாதித்த சொத்துக்களை வைத்து என்ன செய்யலாம் எனக் குற்றச் சதியில் ஈடுபடவே இணைந்திருந்தார்கள். ஜெயலலிதா சம்பாதித்த பணத்தைவைத்து மற்ற மூன்று பேரும் பெரிய அளவில் நிலங்களையும் சொத்துக்களையும் வாங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்கின்றனர் நீதிபதிகள்.

‘நால்வரும் இணைந்து கூட்டுச் சதி செய்ததற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா?’ - ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் வழக்கறிஞர்கள் ஒவ்வொரு முறையும் கேட்ட கேள்வி இது. இதற்கும் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள் நீதிபதிகள்.

p30a.jpg

‘‘கிரிமினல் சதிக்கு எப்போதுமே நேரடி சாட்சியங்கள் கிடைக்காது. ஏனெனில், சதித்திட்டம் என்பது ரகசியமாகத் தீட்டப்படுவது. அதனால், சூழ்நிலை சாட்சியங்களே சதியை நிரூபிக்கப் போதுமானவை. நான்கு பேர் சேர்ந்து ஈடுபடும் செயலில், ஓரிரண்டு பகுதிகள் யாரோ ஒருவருக்கோ, இருவருக்கோ தெரியாமல் இருக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தச் சதியில் பங்கு பெற்றிருக்கும் அனைவருக்கும் இதற்கான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே நீதி’’ என நீதிபதிகள் தெளிவாகச் சொல்கிறார்கள்.

‘‘ஜெயலலிதாவின் கணக்கில் வராத பணத்தை வைத்து, மற்ற மூவரும் நிறைய நிறுவனங்களைத் தொடங்கினார்கள். ஒரே நாளில் பத்து நிறுவனங்கள் தொடங்கப்பட்ட வரலாறும் உண்டு. மற்ற மூவருக்கும் வேறு எந்த வருமானமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் தொடங்கிய இந்தப் பல நிறுவனங்களுக்கு, சொத்துக்களை வாங்குவதைத் தவிர வேறு எந்த பிசினஸும் இல்லை. ‘இவை எல்லாம் எனக்குத் தெரியாமல் நடந்தது’ என ஜெயலலிதா சொல்ல முடியாது. அவருடைய வீட்டு முகவரியை வைத்தே பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வங்கிக் கணக்குகளில் பணம் போடும்போது, எண் 36, போயஸ் கார்டன் என்ற முகவரியைக் குறிப்பிட்டே பணம் செலுத்தியிருக்கிறார்கள். ரத்த உறவாக இல்லாதபோதும், ஜெயலலிதாவின் வீட்டில்தான் இவர்கள் தங்கியிருந்தார்கள். அதனால் எல்லா குற்றங்களிலும் எல்லோருக்கும் பங்கு உண்டு’’ எனத் தெளிவாகத் தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்ற நீதிபதிகள், குன்ஹா விதித்த அதே தண்டனையை உறுதி செய்தார்கள்.

சட்டம் நின்று கொல்லும்!

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

“சசிகலாவுக்கு பெயில் இல்லை... பரோல் உண்டு!” - அரசு வக்கீல் ஆச்சார்யா அதிரடி

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, 2004-ம் ஆண்டில் பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, இந்த வழக்கின் அரசு வழக்கறிஞராக இருந்து சிறப்பாக வாதிட்டு வந்தவர் பி.வி.ஆச்சார்யா. ஜெ. தரப்பினர் ஏற்படுத்திய மன உளைச்சலைத் தாண்டி உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, இந்த வழக்கில் நீதி கிடைக்கக் காரணமாக இருந்தார். பெங்களூரு வசந்த நகரில் உள்ள வீட்டில், அவரிடம் பேசியதிலிருந்து...

‘‘வழக்கு வெற்றி பெற்றிருக்கிறது. இந்தத் தருணத்தில் எப்படி உணர்கிறீர்கள்?’’

‘‘இந்தத் தீர்ப்பை எண்ணி மகிழ்ச்சி அடையவில்லை.  இவ்வளவு நாட்கள் உழைத்ததற்குக் கிடைத்தத் தீர்ப்பாக எண்ணி மன திருப்தி அடைகிறேன். நீதிமன்றம் மக்களுக்காகத் தன் கடமையைச் செய்திருக்கிறது. இதற்காகப் பட்டாசு வெடித்துக் கொண்டாடக் கூடாது. எவ்வளவு அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், தவறு செய்தால் கண்டிப்பாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை ஊழல் செய்பவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஊழல் புரியும் அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் ஒரு நாள் சட்டத்தின் பிடியில் சிக்கித் தண்டனைப் பெற்றே ஆக வேண்டும் என்ற பாடத்தைப் புகட்டி இருக்கிறது.’’

p34.jpg

‘‘இந்தத் தீர்ப்பால், அதிகாரத்தில் இருப்பவர்கள் தவறு செய்வதற்குப் பயப்படுவார்கள் என்று சொல்கிறீர்கள். ஆனால், 21 ஆண்டுகள் கழித்து, ஜெயலலிதா மறைந்தபிறகுதானே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது?’’

‘‘நீங்கள் கேட்பது உண்மைதான். ஆனால், அதை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானித்தது.’’

‘‘இந்த வழக்கு வெற்றிபெற நீங்கள்வைத்த முக்கிய வாதங்கள் என்னென்ன?’’

‘‘வருமானத்துக்கு அதிகமாகக் குற்றவாளிகள் ரூ. 66.65 கோடி சேர்த்தார்கள் என்பது வழக்கு. இது கீழ் நீதிமன்றத்தில் உறுதியானது. ஆனால், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பில், ‘வருமானத்துக்கு அதிகமாக இவர்கள் ரூ.2.82 கோடி மட்டுமே சேர்த்திருக்கிறார்கள். வருமானத்துக்கு அதிகமாக 10 சதவிகிதத்துக்குள் சொத்து சேர்த்திருந்தால் மன்னிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. அப்படிப் பார்த்தால் இவர்கள் சேர்த்தது 8.12 சதவிகிதம்தான் அதிகம்’ என்று சொல்லி, மன்னித்து விடுதலை செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி, மொத்த வருமானத்தைக் கணக்கிடும்போது கணிதப்பிழை செய்திருந்தார். அவர் போட்ட கணக்கை சரி செய்தாலே, ரூ.21 கோடி அதிகமாக சொத்து சேர்த்ததாக வருகிறது. இதனால், வருமானத்துக்கு அதிகமாக 76.7 சதவிகிதம் சொத்து சேர்த்திருக்கிறார்கள் எனக் கண்டறிந்திருக்கலாம். இந்த ஒன்றே போதும் இவர்கள் தண்டனை பெறுவதற்கு.

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, குற்றவாளிகளுக்குச் சொந்தமான கட்டடங்களை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்து, ரூ.27 கோடி என்று மதிப்பீடு செய்தது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி அதைக் கருத்தில் கொள்ளாமல், இவராக ரூ.5 கோடி என்று மதிப்பீடு செய்தது தவறு.

‘குற்றவாளிகள் நான்கு பேரும் ஒரே வீட்டில்தான் இருந்தார்கள். நான்கு பேரின் வங்கிக் கணக்குகளில் தொடர்ந்து பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. நான்கு பேரும் சேர்ந்து கூட்டுச்சதி செய்து சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள்’ என்று வாதிட்டோம். இதைக் குமாரசாமிகூட ஏற்றுக்கொண்டார்.’’

‘‘தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதா போயஸ் கார்டனில் கூடுதல் கட்டடம் கட்டுகிறார். அதற்கு, எந்த வருமானமும் இல்லாமல் தன் வீட்டில் இருந்த சசிகலாவிடம் ரூ.2 கோடி கடன் வாங்கியதாகச் சொல்கிறார். இதை யாராவது நம்புவார்களா?’’

‘‘இவைதான் உச்ச நீதிமன்றத்தில் எங்களால் உறுதியான வாதங்களாக எடுத்து வைக்கப் பட்டன.’’

‘‘இவ்வளவு முக்கியமான வழக்கில், ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கவனக் குறைவாக தீர்ப்பு வழங்கலாமா?’’

(சிரித்துக் கொண்டே...) ‘‘இது பற்றி நான் பேச விரும்பவில்லை. கர்நாடக உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் செய்த கணிதப் பிழையை மட்டும் அகற்றி விட்டால், மூன்று நீதிமன்றத் தீர்ப்புகளும் சமமாக இருந்திருக்கும். கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் இவர்கள் தண்டிக்கப் பட்டிருப்பார்கள்.’’

‘‘மறு சீராய்வு மனு மூலம் குற்றவாளிகளுக்குப் பயன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘குற்றவாளிகள் தரப்பு மறு சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். ஆனால், அதற்கு எந்த அடிப்படை ஆதாரங்களும் இல்லை. அதை நீதிபதிகளும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.’’

‘‘குற்றவாளிகள் வெளியே வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?’’

‘‘வழக்கு முடிந்து விட்டதால் பெயில் என்ற பேச்சுக்கே இடமில்லை. பரோலில் வரலாம். அதுவும் சாதாரண பரோலில் வருவதற்குக்கூட ஆறு மாதங்கள் சிறையில் இருந்தபிறகே அனுமதி கிடைக்கும். மோசமான உடல்நிலை காரணமாகவோ... அல்லது குற்றவாளிகளின் ரத்த உறவினர்கள் மரணம் அடைந்தாலோ மட்டும் தான் வெளியில் செல்ல அனுமதிப்பார்கள். பெரும்பாலும் அனுமதிப்பது கடினம்.’’

http://www.vikatan.com/juniorvikatan/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.