Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்


Recommended Posts

நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று மும்பை வந்தடைந்துள்ளது.

 
நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் அவர்கள் தெற்கு மும்பையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றனர். இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அதுவரை மும்பையில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணி பின்னர் முதல் போட்டி நடைபெறும் புனேயிற்குச் செல்லும். பயிற்சி ஆட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் விவரம்:-

1. பிப்ரவரி 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை: இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா - மும்பை
2. பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை: முதல் டெஸ்ட் - புனே
3. மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை: 2-வது டெஸ்ட் - பெங்களூரு
4. மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை: 3-வது டெஸ்ட் - ராஞ்சி
5. மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை: 4-வது டெஸ்ட் - தரம்சலா

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/13205313/1068126/Australian-team-arrives-for-four-Test-series.vpf

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

ஆஸி.க்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணியில் மாற்றமில்லை

 
படம்.| கே.ஆர்.தீபக்.
படம்.| கே.ஆர்.தீபக்.
 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இந்தியா எந்தவித மாற்றமும் செய்யவில்லை. அதே 16 வீரர்கள் கொண்ட அணியை தக்கவைத்தது.

பிசிசிஐ தரப்பிலிருந்து அறிக்கை எதுவும் இல்லாததாலும், செய்தியாளர்கள் சந்திப்பு இல்லாததாலும் ரோஹித் சர்மா, மொகமது ஷமி, அமித் மிஸ்ரா ஆகியோர் காயத்திலிருந்து இன்னமும் குணமடையவில்லை என்று தெரிகிறது.

வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியை வென்ற பிறகு 3 அணித் தேர்வாளர்கள் கூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அணி விவரம்:

விராட் கோலி (கேப்டன்), அஸ்வின், ஜடேஜா, புவனேஷ் குமார், அபினவ் முகுந்த், கருண் நாயர், ஹர்திக் பாண்டியா, புஜாரா, ரஹானே, ராகுல், சஹா, இசாந்த் சர்மா, முரளி விஜய், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்.

http://tamil.thehindu.com/sports/ஆஸிக்கு-எதிரான-முதல்-2-டெஸ்ட்-போட்டிகளுக்கு-இந்திய-அணியில்-மாற்றமில்லை/article9541455.ece?homepage=true

Link to comment
Share on other sites

அணியின் வெற்றிக்கு உதவினால் ‘ஸ்லெட்ஜிங்’ செய்யலாம்: ஸ்மித் பச்சைக்கொடி

மும்பையில் 14ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸி.கேப்டன் ஸ்மித்.
மும்பையில் 14ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸி.கேப்டன் ஸ்மித்.
 
 

எதிரணி வீரர்களை கேலி, கிண்டல் செய்து, வாய்வார்த்தைகளில் ஈடுபட்டு மன உறுதியைக் குலைக்கும் உத்தியான ‘ஸ்லெட்ஜிங்’ வெற்றிக்கு வித்திடுமானால் அதை ஆதரிக்கலாம் என்று ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

எங்கள் அணியின் ஒவ்வொரு வீரரும் அவர்கள் விரும்பும் வழியில் ஆட நினைப்பவர்கள். எனவே இந்திய வீரர்களுடன் வார்த்தை பரிமாற்றங்களில் ஈடுபடுவது எங்கள் அணி வீரர்களின் திறமையை கூடுதலாக வெளிக்கொணரும் என்றால் ஸ்லெட்ஜிங்கை நான் ஆதரிக்கவே செய்வேன்.

தனிவீரர்களாக சரியான மனநிலையில் இருப்பதையும் வெற்றி பெறுவதையும் அவர்கள் உறுதி செய்ய மேற்கொள்ளப்படுவதே ஸ்லெட்ஜிங். ஆனால் நாம் நம் திறமையின் அடிப்படையில் மட்டுமே ஆட வேண்டும் என்பதை முக்கியமாக நினைவில் கொள்ள வெண்டும், இந்திய மண்ணில் சாதிக்கும் சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தித் தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றே நான் கூறுகிறேன்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

2001-ம் ஆண்டு மும்பையில் தோல்வி தழுவி, பிறகு கொல்கத்தா என்ற காவிய டெஸ்ட் போட்டியிலும் சென்னையிலும் வென்று தொடரை 2-1 என்று இந்தியா வென்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திருப்பு முனை டெஸ்ட் தொடருக்குப் பிறகே இந்திய-ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளின் பகைமை பெரிய அளவுக்கு சென்றது.

இதன் உச்சகட்டமாகவே ஹர்பஜன் சிங், சைமண்ட்ஸ் வசை விவகாரம் எழுந்தது, ஒழுக்கக் கேடு காரணமாக அதன் பிறகு அணியை விட்டு நீக்கப்பட்ட ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இன்றும் தனது நீக்கத்திற்குக் காரணமாக இந்த ஹர்பஜன் விவகாரத்தைக் கூறிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/sports/அணியின்-வெற்றிக்கு-உதவினால்-ஸ்லெட்ஜிங்-செய்யலாம்-ஸ்மித்-பச்சைக்கொடி/article9541537.ece

Link to comment
Share on other sites

டெஸ்ட் வரலாற்றில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைச் சாதிக்க வந்திருக்கிறோம்: ஆஸி.கேப்டன் ஸ்மித்

 
படம்.| ஏ.பி.
படம்.| ஏ.பி.
 
 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியைச் சாதிக்க வந்திருப்பதாக ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ஸ்மித் கூறியதாவது:

இந்தியாவில் விளையாடுவது மிகப்பெரிய சவால், நாங்கள் இங்கு தொடரை வெல்வோமானால் 10-20 ஆண்டுகளுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கையின் சிறந்த காலக்கட்டம் இந்தத் தொடரை வென்ற காலக்கட்டமாகவே நினைத்துப் பார்த்து மகிழ்வோம், டெஸ்ட் வரலாற்றில் யாரும் எதிர்பாராத ஒரு வெற்றியைச் சாதிக்கவே இங்கு வந்திருக்கிறோம், ஆனால் இது அவ்வளவு சுலபமல்ல என்பதையும் நன்றாக அறிந்துள்ளோம்.

அடுத்த 6 வாரங்களுக்கு நடக்கவிருப்பதை எண்ணி நாங்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளோம். வெற்றிகளை விட தோல்விகளிலிருந்தே நாம் பாடம் கற்றுக் கொள்ள முடியும். நாங்களும் நிறைய கற்று வருகிறோம். கடின உழைப்பை இட்டு எங்களின் சிறந்த திறமைகளை பாடுபட்டு வெளியே கொண்டு வரக் காத்திருக்கிறோம். தற்போது அணி இருக்கும் நிலை குறித்து திருப்தி ஏற்பட்டுள்ளது.

என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் போட்டி என்பது அது நடைபெறும் காலத்தின் பல்வேறு தருணங்களைப் புரிந்து கொள்வது என்பதுதான். ஆட்டத்தில் சில வேளைகளில் தாக்குதல் ஆட்டம் ஆட வேண்டி வரும், சில வேளைகளில் தடுப்பாட்ட உத்தி கைகொடுக்கும்.

இந்தியாவில் விளையாடுவதென்பது இத்தகைய கணங்களை எப்படி நாம் அணுகுகிறோம் என்பதைப் பொறுத்ததே கேப்டன்சிக்கு விடுக்கப்படும் சவாலாகும். இலங்கையில் இது குறித்து நான் சிறிதளவு கற்றேன். வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை மாற்றிக் கொள்ளக்கூடாது என்றே நான் நினைக்கிறேன். தடுப்பாட்டம்தான் ஆட வேண்டும் என்று முன் கூட்டியே தீர்மானிப்பதுதான் பிரச்சினையின் ஆரம்பம். ரன்கள் எடுப்பதையே குறிக்கோளாக வைத்திருக்க வேண்டும், அதே வேளையில் இந்திய ஸ்பின் பவுலர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் நன்றாக ஸ்விங், ரிவர்ஸ் செய்யும் புதிய இந்திய வேகப்பந்து வீச்சுக்கு எதிராகவும் நம் தடுப்பாட்டம் கூர்மையடைய வேண்டும் என்றே கருதுகிறேன். இந்தத் தொடரில் தடுப்பாட்டம் பெரிய பங்களிப்பு செய்யும் என்றெ நான் நினைக்கிறேன்.

எங்களிடம் நல்ல வேக, சுழல் கலவை உள்ளது. இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக குறிப்பாக விராட் கோலிக்கு எதிராக சில உத்திகளை திட்டமிட்டுள்ளோம், அது என்ன என்பதை நான் கூறப்போவதில்லை, இந்தியாவின் டாப் 6 வீரர்கள் அருமையாக ஆடி வருகிறார்கள். எனவே இவர்களை நிறுத்துவதற்கான உத்திகளை வகுத்துள்ளோம். அது போலவே அஸ்வின் உலகின் தலை சிறந்த பவுலராக இருந்து வருகிறார், அவரை இந்த சூழலில் ஆடுவது கடினமே, ஆனாலும் இவருக்கு எதிராகவும் பேட்டிங் உத்திகளை வகுத்துள்ளோம்.

நாங்கள் துபாயில் இதே போன்ற பிட்ச்களில் ஆடி பயிற்சி பெற்றுள்ளோம் எனவே இந்தியத் தொடருக்கு தயாராக இருக்கிறோம். டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டிங் என்பது நல்ல முடிவை எடுத்து அதனைச் செயல்படுத்துவதாகும். இதனை நீண்ட நேரத்துக்குக் கடைபிடிக்க வேண்டும். துபாயில் பந்துகள் நன்றாகத் திரும்பின கணிக்க முடியாத பவுன்சும் இருந்தது.

இந்தியத் தொடர் எங்களுக்கு ஒரு மிகப்பெரிய சோதனையாகவும் உற்சாகமூட்டும் அனுபவமாகவும் இருக்கும் என்றே கருதுகிறேன்.

இவ்வாறு கூறினார் ஸ்மித்.

http://tamil.thehindu.com/sports/டெஸ்ட்-வரலாற்றில்-யாரும்-எதிர்பார்க்காத-வெற்றியைச்-சாதிக்க-வந்திருக்கிறோம்-ஆஸிகேப்டன்-ஸ்மித்/article9541947.ece

Link to comment
Share on other sites

கடந்த தொடரில் 4 முறை டாஸ் வென்றும் 4-0 என்று தோற்றோம்: டேரன் லீ மேன்

டேரன் லீ மேன். | படம். | ஏ.எஃப்.பி.
டேரன் லீ மேன். | படம். | ஏ.எஃப்.பி.
 
 

இந்தியாவில் டாஸ் பெரிதாகப் பேசப்படுகிறது, ஆனால் டாஸ் முடிவுகளை தீர்மானிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லீ மேன் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்தியாவுக்கு வரும் அயல்நாட்டு அணிகள் டாஸில் வெல்வதை ஒரு மிகப்பெரிய காரணியாகக் காட்டுவதுண்டு, காரணம் முதல் ஒன்றரை அல்லது 2 நாட்களில் பேட்டிங் எளிதாக அமையும் என்பது சில அணிகளின் கோட்பாடு. இதனை மறுக்கும் டேரன் லீ மேன் கூறியதாவது:“கடந்த முறை இந்தியாவில் 4 முறையும் டாஸில் வென்றோம் ஆனால் தொடரை 4-0 என்று இழந்தோம் எனவே டாஸ் வெல்வது மட்டுமே வெற்றி தோல்விகளை தீர்மானிப்பதில்லை.

டாஸ் வென்றாலும் நன்றாக ஆடவேண்டும் என்பதே முக்கியம். என்னைப் பொறுத்தவரை டாஸ் எந்தப்பக்கம் வேண்டுமானாலும் சாதகமாக இருந்து விட்டு போகட்டும், ஆஸ்திரேலியாவில் ஆடினாலும் இதுதான் டாஸைப் பொறுத்தவரை என் பார்வை.

எனவே இந்தியா நல்ல பிட்ச்களை உருவாக்கும் என்றே நம்புகிறேன், 5 நாட்கள் தாங்கும் நல்ல பிட்ச்கள் என்று கூறுகிறேன்” என்றார் டேரன் லீ மேன்.

http://tamil.thehindu.com/sports/கடந்த-தொடரில்-4-முறை-டாஸ்-வென்றும்-40-என்று-தோற்றோம்-டேரன்-லீ-மேன்/article9553633.ece

Link to comment
Share on other sites

சிந்தாமல் சிதறாமல் கங்காருகளை வேட்டையாடுமா கோலி அணி? #INDvsAUS

கிரிக்கெட் உலகமே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவிருக்கிறது. கோலியின் தொடர் வெற்றிகளும், ஆசிய மண்ணில் ஆஸ்திரேலியாவின் பதுங்கல் ஆட்டமும் இந்தியாவுக்கே தொடர் சாதகமாக முடியும் என பறைசாற்றுகின்றன. பாண்டிங் முதல் பீட்டர்சன் வரையில் அத்தனை பேரும் ஆஸ்திரேலிய அணியை எச்சரித்திருக்கிறார்கள். "இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா போராடித் தோற்றாலே கவுரவமான விஷயம்தான்" என எழுதிக் குவிக்கிறார்கள் முன்னாள் ஜாம்பவான்கள். இவர்கள் எல்லோரும் சொல்வதும் போல ஆஸ்திரேலிய தொடர் இந்திய அணிக்கு அல்வா சாப்பிடுவது போல அமைந்துவிடுமா, இல்லை அதிர்ச்சிகரமான முடிவுகளை தரக்கூடிய தொடராக மாறவுள்ளதா? எந்த அணிக்கு எவ்வளவு பலம், யார் ஜெயிக்க வாய்ப்பிருக்கிறது, ஆஸி பலவீனமான அணியா என்பதை அலசுவோம். 

கிரிக்கெட் என்பது ஒரு நம்பர் விளையாட்டு. வரலாறு என்ன சொல்கிறது என்பது இந்த விளையாட்டில் மிக முக்கியமான விஷயம். முழு ஆண்டுத் தேர்வுக்கு படிக்கும் மாணவன் அதற்கு முன் நடந்த இடைப்பருவம், காலாண்டு, அரையாண்டு தேர்வு வினாத்தாள்களை திருப்புதல் செய்தாலே மதிப்பெண்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறதல்லவா? அதேபோலத்தான் கிரிக்கெட்டும்! வரலாறு நமக்கு நிறையச் சொல்லித் தரும், வியூகங்களை வகுத்துத் தரும். அதை நாம் நம்பிக்கையோடும், எச்சரிக்கையோடும் அணுக வேண்டும்.அப்படி இந்திய மண்ணில் நடந்த இந்தியா Vs ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் பக்கங்களை திருப்புவோமா? 

கொல்கத்தா டெஸ்ட்

1956/57 சீசனில்தான் முதன்முதலாக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் ஆட வந்தது ஆஸ்திரேலியா. 1956 - 1995 வரை இந்திய மண்ணில் ஆறு முறை டெஸ்ட் கிரிக்கெட் ஆடியிருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாதான்  இங்கே கோலோச்சியது. 1979/80 சீஸனைத் தவிர மற்ற அனைத்துத் தொடர்களிலும் இந்தியா சொதப்பல் ஆட்டமே ஆடியது. 1996 - 2016 வரை ஏழு முறை இங்கே ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்தது. இதில் 2004/05 சீசனை தவிர மற்ற எல்லாத் தொடர்களிலும் இந்தியாவே அபார வெற்றியைச் சுவைத்திருக்கிறது. அதிலும் தோனி கேப்டன்சியில் இந்திய அணி மூன்று ஆஸ்திரேலியத்  தொடர்களை ஜெயித்திருக்கிறது. 2008, 2011, 2013  ஆகிய மூன்று  தொடர்களிலும் ஒரு போட்டியைக்கூட ஆஸ்திரேலியா ஜெயிக்கவில்லை. 2012/13 சீசனில் 0-4 என ஒயிட்வாஷ் ஆகி அவமானகரத் தோல்வியுடன் சொந்த ஊருக்குத் திரும்பியது ஆஸி.

ஆஸ்திரேலிய அணி கொஞ்சம் கொஞ்சமாக இந்திய மண்ணில், ‘மோசத்தில் இருந்து மிக மோசம்’ என்ற நிலையை அடைந்து வருகிறது. சமீபத்தில் இலங்கை மண்ணில், மண்ணைக் கவ்வியது; டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவிடம் தொடரை இழந்தது; பாகிஸ்தானை போராடி ஜெயித்தது. அதே சமயம் விராட் கோலி முழு நேரக்  கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, வீறுகொண்டு எழுந்து, வெளுத்து வாங்குகிறது இந்தியா. இலங்கை, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகளை துவம்சம் செய்திருக்கிறது. ஆக, வரலாறு இந்தியாவுக்குச் சாதகமாகத்தான் இருக்கிறது.

கோலி ஸ்மித்

இந்தியா, ஆஸ்திரேலியத் தொடரை பொறுத்தவரையில் நான்கு டெஸ்ட் நடக்கவிருக்கிறது. இதில் புனே, பெங்களூரு, ராஞ்சி, தர்மசாலா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் போட்டி நடைபெறும். புனே மைதானத்தைப் பொறுத்தவரையில் பேட்டிங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்குச் சாதகமாக இருக்கும். அங்கே ஆஸியின் வேகப்பந்தை சமாளிப்பது இந்தியாவுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். முக்கியமாக மிச்சேல் ஸ்டார்க். எனினும் டாஸ் வெல்லும் அணி, நீண்ட நேரம் களத்தில் பேட்டிங் செய்தால் வெற்றி பெற அதிக வாய்ப்பிருக்கிறது. பெங்களூரு மைதானம், முதல் இரண்டு நாட்கள் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கே சாதகமாக இருக்கும். அதன் பின்னர் பந்துகள் திரும்பலாம். இந்த டெஸ்ட் போட்டியிலும் டாஸ் மிக முக்கியமான அங்கம் வகிக்கும். முதலில் பேட்டிங் செய்யும் அணி 450 ரன்களுக்கு மேல் ஸ்கோர் குவிக்க வாய்ப்பிருக்கிறது.  எனினும் இந்த மண்ணில், நான்காவது இன்னிங்ஸில் 200 -250 ரன் வரையிலான இலக்கை சேஸ் செய்து விடலாம்.

ராஞ்சி சுழற்பந்தின் சொர்க்கபுரியாக இருக்கிறது. இந்த மண்ணில் லெக் ஸ்பின் நன்றாக எடுபடும். ஜடேஜா உள்ளிட்டவர்கள் பெரிய அளவில் விக்கெட் வேட்டை நடத்தமுடியும். தர்மசாலா ஆஸ்திரேலிய மைதானங்களை போலவே இருக்கும். பேட்டிங் பிட்ச்சாகவும், மித வேகப்பந்துக்கு சாதகமாகவும் இருக்கும். ஆக, புனே மற்றும் ராஞ்சி டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது. பெங்களூரு மற்றும் தர்மசாலாவில் ஆஸ்திரேலியா நன்றாக விளையாடினால் வெற்றி பெற முடியும். ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மனரீதியாக சோர்ந்தால், இந்திய அணியிடம் ஒயிட் வாஷ் வாங்குவதைத் தடுக்கவே முடியாது.

warner வார்னர்

ஆஸ்திரேலிய அணி செய்ய வேண்டியது என்ன? 

இலங்கை மண்ணில் வெறும் 40, 60 ஓவர்களில் ஆட்டம் இழந்து படுதோல்வியைச் சந்தித்தது ஆஸ்திரலிய அணி. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரையில் வேகமாக ரன் குவிப்பில் ஈடுபடுவது அதன் பாணி. ஆனால் இந்திய மண்ணில் பொறுமையே முக்கியம். வார்னர், மேக்ஸ்வெல் உள்ளிட்ட அதிரடி வீரர்கள்  தங்களது இயல்பை மாற்றிக்கொள்ளத் தேவையில்லை, ஆனால் கவாஜா, ரென்ஷா, ஸ்மித் போன்றோர்  நிறைய ஓவர்களை விளையாட வேண்டியது அவசியம். ஆஸி அணியில் இடது கை ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட இருவரின் பந்துகளையும்  சமாளிக்க இவர்கள் மிகவும் சிரமப்பட வேண்டியதிருக்கும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை, அவர்கள் ஐ.பி.எல்லில் பல ஆண்டுகள் ஆடிப்பெற்ற அனுபவம்தான்.

இந்திய மண்ணில் Strike Rotate செய்வது  அவசியம்.  பந்தை பவுண்டரிக்கு விரட்டுவதைவிட, ஓடி ஓடி ரன்களை சேர்க்க முயற்சிக்க வேண்டும். அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டவர்களுக்கு செட்டிலாக நிறைய நேரம் கொடுத்தால், பின்னர் கோலி வகுக்கும் சுழல் வலையில் இருந்து தப்பவே முடியாது. எனவே ஓவருக்கு மூன்று முதல் நான்கு ரன்கள் ஓடி ஓடி எடுத்தால், பவுலர்களுக்கு அழுத்தம் ஏற்பட்டு பிடியை விட்டுக்கொடுத்து தவறான பந்துகளை வீசுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்போது சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்டு மேலும் மேலும் அழுத்தம் தர வேண்டும். இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது என்பது மிக மிக கடினம். எனவே பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி பெரிய ஸ்கோர்களை குவிப்பதே ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும் ஒரே வழி. ஆனால் வெயில் புழுக்கம் நிறைந்த நம் நாட்டில்  இந்த யுக்தியை கையாள்வது ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சிரமமான காரியம் தான். 

இந்திய மண்ணில் சமீபத்தில் நடத்த டெஸ்ட் தொடர்களில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தொடர்  சவாலானதாக  அமைந்தது. மைதானங்கள் இந்தியாவுக்குச் சார்பாக அமைக்கப்படவில்லை. இங்கிலாந்து, முதல் இன்னிங்க்ஸில் நிறைய ரன்களை குவித்தும் தோல்வியைத் தழுவியது. இங்கிலாந்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணமே, அந்த அணி நான்காவது இன்னிங்ஸில் தொடர்ந்து சொதப்பல் ஆட்டம் ஆடியது தான். எனவே இந்திய மண்ணில்  மூன்று, நான்காவது இன்னிங்ஸ் ஆடும் போது குறைந்தபட்சம் 300 ரன்களை குவிக்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்போடு ஆட வேண்டும்.  

இலங்கையில் கையாண்ட உத்திகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உத்திகளோடு களமிறங்கி விளையாடினால் மட்டுமே ஆஸ்திரேலியாவால் ஐந்து நாட்கள் டெஸ்ட் ஆட முடியும். ஐந்து நாட்கள் ஆடும் சவாலான டெஸ்ட் போட்டியைத் தான் இந்திய வீரர்களும், டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள். 

விராட் கோலி

இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி? 

நிச்சயமாக ஒயிட் வாஷ் செய்து அனுப்பும்  திறமை கோலி அணியிடம் இருக்கிறது. அதே சமயம் கொஞ்சம் எச்சரிக்கையோடு விளையாட வேண்டியதும் அவசியமாகிறது. வார்னர், கவாஜா உள்ளிட்ட வீரர்கள் அதிரடி ஆட்டம் ஆடினால் ரன்ரேட் எகிறிவிடும். ஒருவேளை டாஸ் தோற்றுவிட்டால் இந்தியாவுக்கு நிலைமையே சிக்கலாகி விடும். ஸ்டார்க், ஹாசில்வுட் இருவரின் துல்லியமான பந்துவீச்சுகளும் கவனத்தில் கொள்ளத்தக்கவை.

அஷ்வின் ஜடேஜா

கடந்த மூன்று டெஸ்ட் தொடர்களிலும் இரட்டைச் சதம் விளாசிய கோலி, இந்த டெஸ்ட் தொடரிலும்  இரட்டைச் சதம் எடுத்தால் அது உலக சாதனையாகும். இந்த டெஸ்ட் தொடரை வெல்வதும், ஒரு போட்டியில் கூட தோற்காமல் இருக்க வேண்டியதும்  கோலி முன் இருக்கும் சவால்கள். ரஹானே - கருண் நாயர்  இவர்கள் இருவரில் யாரை தொடர்ந்து தேர்வு செய்வது என்பது இப்போதைக்கு கோலிக்கு இருக்கும் பெரிய தலைவலி. இந்த பிரச்னையை எப்படி அணுகப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

இந்திய  அணியின் தொடக்க வீரர்கள் கடந்த காலம் போல அல்லாது இம்முறையாவது  நல்ல தொடக்கம் தர வேண்டும். பந்துவீச்சில் முகமது ஷமி அணியில் இல்லாதது பெரிய இழப்பு . ஆகவே, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோர் கூடுதல் பொறுப்போடு செயல்பட வேண்டியது அவசியம். அஷ்வின், ஜடேஜா உள்ளிட்டோர்  தாராளமாக ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை இந்த தொடரில் முடக்கலாம். நமக்குத் தேவை  எக்ஸ்ட்ரா கவனம் மட்டும்தான். தோனியின் கடைசி டெஸ்ட் தொடரில், அதாவது கடந்த 2014/15 சீசனில்  ஆஸ்திரேலிய மண்ணில் நாம் வாங்கியதற்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய தருணமிது.

http://www.vikatan.com/news/sports/81643-can-india-whitewash-australia-in-upcoming-series.html

Link to comment
Share on other sites

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கண்ணோட்டம்

 

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் கண்ணோட்டங்கள் பற்றி சில தகவல்களை காண்போம்.

 
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் கண்ணோட்டம்
 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி 1947-ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 226 ரன்னில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 24 டெஸ்ட் தொடரில் மோதியுள்ளன. இதில் இந்தியா 7 தொடரையும், ஆஸ்திரேலியா 12 தொடரையும் கைப்பற்றியுள்ளன. 5 டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிந்தது.

ஆஸ்திரேலியா அணி 14-வது முறையாக இந்தியா வந்துள்ளது. இதில் 4 தடவை மட்டுமே அந்த அணி தொடரை வென்று இருக்கிறது. 1956-ல் 2-0 என்ற கணக்கிலும், 1959-60-ல் 2-1 என்ற கணக்கிலும், 1969-ல் 3-1 என்ற கணக்கிலும், 2004-ல் 2-1 என்ற கணக்கிலும் தொடரை கைப்பற்றி இருந்தது. 2 முறை சமநிலை ஆனது. ஆஸ்திரேலிய அணி கடைசியாக இந்திய மண்ணில் விளையாடிய 3 தொடரிலும் (2008, 2010, 2013) தோற்று இருந்தது. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி விட வேண்டும் என்ற வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

89A6155B-BD12-4760-80C8-41EC0CCCBBD6_L_s

2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் 7 விக்கெட் இழப்புக்கு 705 ரன் குவித்ததே இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்திய மண்ணில் அதிகபட்சமாக கொல்கத்தா ஈடன் கார்டனில் 2001-ம் ஆண்டு 7 விக்கெட்டுக்கு 657 ரன் குவித்து இருந்தது.

1948-ம் ஆண்டு அடிலெய்டுவில் 674 ரன் குவித்ததே ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தியாவில் அந்த அணி டெல்லியில் 2008-ம் ஆண்டு அதிகபட்சமாக 577 ரன் குவித்து இருந்தது.

இந்திய அணி 58 ரன்னில் சுருண்டதே (பிரிஸ்பேன், 1947) குறைந்தபட்ச ஸ்கோராகும். சொந்த மண்ணில் 2004-ல் மும்பையில் 104 ரன்னில் சுருண்டு இருந்தது. ஆஸ்திரேலியா 83 ரன்னில் சுருண்டதே (மெல்போர்ன், 1981) குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்தியாவில் அந்த அணி குறைந்த பட்சமாக 93 ரன்னில் (மும்பை, 2004), ‘ஆல்அவுட்’ ஆகி இருந்தது.

62C679F5-CD67-48AB-B1BA-BA8DA11B187A_L_s

தெண்டுல்கர் 39 டெஸ்டில் விளையாடி 3630 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். இதில் 11 சதமும், 16 அரை சதமும் அடங்கும். அதிகபட்சமாக 241 ரன் குவித்து இருந்தார். அவருக்கு அடுத்தப்படியாக ரிக்கி பாண்டிங் 2555 ரன் (29 டெஸ்ட்) எடுத்து உள்ளார். அவரது அதிகபட்ச ரன் 257 ஆகும். லட்சுமண் 2434 ரன்னும் (29 டெஸ்ட்), டிராவிட் 2143 ரன்னும் (32), கிளார்க் 2049 ரன்னும் (22) எடுத்துள்ளனர்.

ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்தவர் கிளார்க் 2012-ம் ஆண்டு சிட்னியில் 329 ரன் குவித்தார். அவருக்கு அடுத்தப்படியாக வி.வி.எஸ்.லட்சுமண் 281 ரன் (கொல்கத்தா, 2001) குவித்து இருந்தார். தெண்டுல்கர் 11 செஞ்சூரியுடன் முதலிடத்தில் உள்ளார். கவாஸ்கர், பாண்டிங் தலா 8 சதம் அடித்துள்ளனர்.

கும்ப்ளே 111 விக்கெட் கைப்பற்றி (20 டெஸ்ட்) முதலிடத்தில் இருக்கிறார். 141 ரன் கொடுத்து 8 விக்கெட் சாய்த்தது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும். ஹர்பஜன் சிங், 95 விக்கெட்டும், கபில்தேவ் 79 விக்கெட்டும், ஜாகீர்கான் 61 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.

இந்திய வீரர் ஜேசுபாய் பட்டேல் 1959-ம் ஆண்டு கான்பூர் மைதானத்தில் 69 ரன் கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தியது ஒரு இன்னிங்சின் சிறந்த பந்துவீச்சு ஆகும். ஒரு டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் ஹர்பஜன் சிங். 2001-ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்டில் அவர் 15 விக்கெட் சாய்த்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/22151803/1069820/India-Australia-Test-Overview.vpf

Link to comment
Share on other sites

விராட் கோலி ரன்கள் குவிக்கும்போது அவரைச் சீண்ட வேண்டும்: ஸ்டீவ் வாக் யோசனை

விராட் கோலி ரன்கள் குவிக்கத் தொடங்கும்போது, அவரைச் சீண்ட வேண்டுமென ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் யோசனை தெரிவித்துள்ளர்.

 
விராட் கோலி ரன்கள் குவிக்கும்போது அவரைச் சீண்ட வேண்டும்: ஸ்டீவ் வாக் யோசனை
 
சிட்னி:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நாளை (23-ந்தேதி) தொடங்குகிறது.

இந்நிலையில், விராட் கோலி ரன்கள் குவிக்கும் போது அவரைச் சீண்ட வேண்டுமென ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் யோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

''போட்டியின் ஆரம்பத்திலேயே விராட் கோலியை சீண்ட வேண்டும் என நான் சொல்லவில்லை. ஆனால் கோலி ரன்களை குவிக்கத் தொடங்கும்போது அவரைச் சீண்ட வேண்டும். எல்லோரையும் போல கோலியும் சீண்டினால் பாதிக்கப்படக் கூடியவர்தான். தற்போது அவர் கடும் நெருக்கடியில் உள்ளார்.

ஒவ்வொரு முறை அவர் களமிறங்கும் போதும் 100 ரன்கள் குவிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் நினைக்கின்றனர். ரசிகர்களின் விருப்பத்தை கோலி பெரும்பாலும் நிறைவேற்றியே வருகிறார் என்றாலும், சில நேரங்களில் நேரம் அவருக்கு எதிராகத் திரும்பலாம்.

587AC990-2423-4D69-A1E4-C2B5E7167A9F_L_s

மோசமான ஷாட் அல்லது கவனம் சிதறுவது போன்ற தருணங்கள் கோலிக்கும் வரலாம். அப்போது அந்த வாய்ப்பினை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அவர் எல்லா அணிகளுக்கும் எதிராக ரன்களைக் குவித்து வருகிறார்.

கோலி ஒவ்வொரு பந்துக்கும் முன்னுரிமை அளிப்பதால், சவாலான எதிரணி வீரராக அவர் திகழ்கிறார். எனவே ஆஸ்திரேலிய அணிக்கு இது உண்மையிலேயே சவாலான தொடராக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை''.

இவ்வாறு ஸ்டீவ் வாக் ஆஸ்திரேலிய அணிக்கு யோசனை தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/22195901/1069879/Steve-Waugh-wants-Australians-to-fire-up-Virat-Kohli.vpf

Link to comment
Share on other sites

இந்திய - ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் இன்று ஆரம்பமாகியது ; முதலில் அவுஸ்திரேலியா துடுப்பாட்டம்

 

 

இந்­தியஅவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மராட்­டிய மாநிலம் புனேயில் இன்று ஆரம்பமாகியது.

259343.3.jpg

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி, முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி 53 ஓட்டங்களைப்பெற்று ஆடிவருகின்றது.

259342.jpg

ஸ்மித் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை­யா­டு­­தற்­காக இந்­தியாவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

விராட் கோஹ்லி தலை­மை­யி­லான இந்­திய அணி சமீப கால­மாக டெஸ்ட் போட்­டி­களில் மிகவும் சிறப்­பாக விளை­யாடி வரு­கி­றது.

இலங்கை (2-1), தென்­னா­பி­ரிக்கா (3–0), மேற்­கிந்­தியத் தீவுகள் (2-0), நியூ­ஸி­லாந்து (3–0), இங்­கி­லாந்து (4-0), பங்­­ளாதேஷ் (1–0) ஆகிய அணி­­ளுக்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக 6 டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.

இந்நிலையில் தற்­போது அவுஸ்­தி­ரே­லி­யாவை வீழ்த்தி 7வது டெஸ்ட் தொடரை தொடர்ச்­சி­யாக வெல்லும் ஆர்­வத்தில் இந்­திய அணி களமிறங்கியுள்ளது.

இந்­திய அணி கடை­சி­யாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்­கையில் நடந்த டெஸ்டில் இலங்­கை­யிடம் 63 ஓட்­டங்­களால் தோற்­றது. அதன்­பிறகு விளை­யா­டிய 19 டெஸ்ட் போட்­டி­­ளிலும் இந்­திய அணி தோல்­வியை சந்­திக்­வில்லை.

தோல்­வியை சந்­திக்­காமல் விளை­யாடிவரும் இந்­திய அணியின் சாதனை அவுஸ்­தி­ரே­லிய தொட­ரிலும் நீடிக்­குமா என்று ஆவ­லுடன் எதிர்­பார்க்­கப்­­டு­கி­றது.

அவுஸ்­தி­ரே­லிய அணி கடை­சி­யாக 2013-ஆம் ஆண்டு இந்­தியாவுக்கு சென்ற­போது 4 டெஸ்ட் போட்­டி­­ளிலும் தோற்று வைட் வொஷ்­ ­னது. இந்த முறை­யா­வது இந்­தி­யாவை வென்றுவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த அணி இருக்கிறது.

 

இந்நலையில் யார் இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது என்னு பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://www.virakesari.lk/article/16975

Link to comment
Share on other sites

முதல் பந்தில் இருந்தே சுழலும் இப்படியொரு ஆடுகளத்தை பார்த்ததில்லை: ஆஸி. கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சி

 

 
இந்தியா ஏ அணிக்கு எதிராக சதம் எடுத்த ஸ்மித் பந்தை விளாசும் காட்சி. | படம்.| ஏ.எப்.பி.
இந்தியா ஏ அணிக்கு எதிராக சதம் எடுத்த ஸ்மித் பந்தை விளாசும் காட்சி. | படம்.| ஏ.எப்.பி.
 
 

புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பந்திலேயே சுழல் எடுபடும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

இந்த தொடர் கடினமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணி சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது. அதில் குறிப்பாக சொந்த மண்ணில் அருமையாக செயல்படுகிறது. எங்களது அணி இங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு வலுவான ஆட்டத்தை கொடுக்கும்.

இந்த தொடரில் எங்களுக்கு இடர்கள் உள்ளன. ஹர்பஜன் சிங் நாங்கள் இந்த தொடரில் 4-0 என தோல்வியடைவோம் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி உணரவில்லை. இந்தியாவுக்கு எதிராக வலுவான ஆட்டத்தை கொடுக்கவே நாங்கள் விரும்புகிறோம்.

சூழ்நிலையை தகவமைத்துக் கொண்டு திட்டங்களை களத்தில் எங்களது வீரர்கள் சரியாக செயல் படுத்துவதை பார்க்க நான் விரும்பு கிறேன். அவ்வாறு விளையாடும் போது கடினமான சூழ்நிலை களிலும் நாங்கள் நிச்சயம் போராடுவோம்.

கடினமான தருணங்களில் பதிலடி கொடுப்பதற்கான திறன்கள், திட்டங்கள், மனதள விலான திடம் எங்களிடம் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கிறது. போட்டியின் முடிவை பற்றி நாங்கள் அதிகம் கவலை கொள்ளவில்லை. செயல்முறை பற்றிதான் அதிகம் கவலை கொண்டுள்ளோம்.

மேலும் புனே ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. முதல் பந்திலேயே சுழல் எடுபடும் என நினைக்கிறேன். டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இதுபோன்ற ஒரு ஆடுகளத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. வேகப்பந்து வீச்சாளர் களுக்கு ஏற்றம், இறக்கமாகவே இருக்கும்.

இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.

ஆடுகள படங்கள்

இதற்கிடையே சிட்னி மார்னிங் ஹெரால்டு பத்ரிகையில் புனே ஆடுகளத்தின் இரு படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆடுகளத்தில் உள்ள பிளவுகள் தெளிவாக தெரிகின்றன. வழக்க மாக ஆடுகளத்தை படம் எடுப் பதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனால் ஆஸ்தி ரேலிய செய்தியாளர்கள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்து ஆடுகளத்தை பல்வேறு கோணங்களில் படம் எடுத்துள்ளனர்.

http://tamil.thehindu.com/sports/முதல்-பந்தில்-இருந்தே-சுழலும்-இப்படியொரு-ஆடுகளத்தை-பார்த்ததில்லை-ஆஸி-கேப்டன்-ஸ்டீவ்-ஸ்மித்-அதிர்ச்சி/article9556639.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆஸி. உறுதியான தொடக்கம்: இடைவேளை வரை விறுவிறுப்பான ஆட்டம்

 

 
புனே டெஸ்ட் | படம்: ராய்ட்டர்ஸ்
புனே டெஸ்ட் | படம்: ராய்ட்டர்ஸ்
 
 

புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால், அந்த அணியின் தொடக்க வீரர் அருமையாக ஆடிவந்த நிலையில், உடல் நலக்கோளாறு (வயிற்று உபாதை என்று கூறப்படுகிறது) காரணமாக ரிட்டையர்டு ஆக வேண்டியிருந்தது.

டாஸ் வென்ற ஸ்மித் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். இசாந்த் சர்மாவும், அஸ்வினும் தொடக்கத்தில் பந்து வீசினர். வார்னருக்கு எதிராக அஸ்வின் இதுவரை சிறப்பாக வீசி அவரை வீழ்த்தியிருப்பதால் அதைப் பயன்படுத்த கோலி முடிவெடுத்திருக்கலாம்.

9-வது ஓவரிலிருந்தே பந்துகள் கடுமையாக திரும்பின. ஆட்டத்தின் 10-வது ஓவரை அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டில் வீச தொடர்ச்சியாக 3 முறை வார்னர் மட்டையை நூலிழையில் கடந்து சென்றது பந்து. ஆனால் எட்ஜ் ஆகவில்லை.

ஒரு முறை ரென்ஷாவுக்கு எட்ஜ் ஆனதாக அஸ்வின் பந்தில் மிகப்பெரிய முறையீடு எழுந்தது. கோலி ரிவியூ செய்தார் ஆனால் அது விரயமானது. கோலி வெறுப்பானார். தொடக்கத்திலேயே 2 அனுமதிக்கப்பட்ட ரிவியூக்களில் ஒன்றை விரயம் செய்ததை அவர் விரும்பவில்லை என்பது அவரது உடல்மொழியில் வெளிப்பட்டது. ஏனெனில் அவ்வளவு அருகில் இருக்கும் சஹா தன்னம்பிக்கையுடன் அப்பீல் செய்தது ரிவியூவுக்கு வழி வகுத்தது.

மற்றபடி ஜெயந்த் யாதவ் பந்துகளும் திரும்பின, வார்னர் அவரை 4 பவுண்டரிகள் அடித்தார், அத்தனையும் அடிக்க வேண்டிய பந்துகள் என்பதில் ஐயமில்லை.

ஒருமுறை ஜெயந்த் யாதவ் பந்தில் வார்னர் பவுல்டு ஆனார். லெக் ஸ்டம்பைக் காட்டிக் கொண்டு அவர் ஷாட் ஆட முயன்று பவுல்டு ஆனார், ஆனால் அது நோ-பால் என்பதோடு பவுண்டரிக்கும் சென்றது. ஒரே பந்தில் நோ-பால், பை, பவுல்டு, 4 ரன்கள் என்று அனைத்தும் நிகழ்ந்தது.

மேத்யூ ரென்ஷா தனது உயரத்தைக் கொண்டு கால்களை நன்றாகப் பயன்படுத்தி ஸ்பின்னர்களை அருமையாக ஆடினார். ஜடேஜாவை மிகப்பெரிய சிக்ஸ் ஒன்றை லாங் ஆனில் அடித்தார். அவர் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 36 ரன்கள் எடுத்து உடல்நலக்குறைவினால் பெவிலியன் சென்றுள்ளார்.

வார்னர் பெரும்பாலும் அஸ்வினைத் தடவினார், அவரை ஆதிக்கம் செலுத்த நினைத்தபோதெல்லாம் பீட்டன் ஆனார். ஒருமுறை எல்.பி.க்கு கடுமையான முறையீடு எழுந்தது, ஆனால் அது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே பிட்ச் ஆன பந்து என்பதால் களநடுவர் தீர்ப்பு நாட் அவுட்.

ஒரு டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் உணவு இடைவேளைக்கு சற்று முன்னர் ஒரு வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளரை முதன் முதலாக பந்து வீச அழைப்பது அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகும், உமேஷ் யாதவ்வை இன்று அப்படித்தான அழைத்தார் கோலி.

28-வது ஓவரில்தான் உமேஷ் யாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார், எதிர்பார்த்தது போல் அவர் வார்னரை பவுல்டு செய்தார். நல்ல அளவில் வீசப்பட்ட பந்திற்கு வார்னர் முன்னால் காலை நகர்த்தாமல் டிரைவ் ஆட முனைந்து பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பவுல்டு ஆனது. வார்னர் 77 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 38 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தொடக்கத்திலேயே உமேஷுக்கு கொடுத்து அவர் வார்னரை வீழ்த்தியிருந்தால் அஸ்வினுக்கு பந்துகள் கன்னாபின்னாவென்று திரும்புவதற்கு 2-3 ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கலாம், உமேஷ் யாதவ்வும் வார்னரை 4-5 முறை வீழ்த்தியுள்ளார். முதல் 2 மணி நேரம் ஆஸ்திரேலியாவுக்குரியதே. காரணம் தொடக்கத்திலிருந்தே திரும்பிய பிட்சில் முதல் விக்கெட்டுக்காக 82 ரன்கள் சேர்த்தது பெரிய விஷயமாகும். மொத்தம் 33 ஓவர்களில் 16 ஓவர்களை அஸ்வின் வீசியுள்ளார். ஜடேஜா 6 ஓவர்களை வீசினார். பாதிக்குப் பாதி அஸ்வின் என்பது பாரபட்சமான அணுகுமுறையே.

http://tamil.thehindu.com/sports/ஆஸி-உறுதியான-தொடக்கம்-இடைவேளை-வரை-விறுவிறுப்பான-ஆட்டம்/article9556915.ece?homepage=true

Australia 150/4 (61.0 ov)
India
Australia won the toss and elected to bat
Link to comment
Share on other sites

புனே டெஸ்ட்: இந்தியாவின் சுழற்பந்து நெருக்கடியைத் தாக்குப்பிடிக்கும் ஆஸ்திரேலியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புனேவில் இன்று தொடங்கியது. டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.  ‘‘ பிட்ச் மிகவும் வறண்டு இருக்கிறது; புற்கள் இல்லை; ஸ்லோ ‘பிட்ச்’ போல காணப்படுகிறது; இது சுழற்பந்துக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பந்துகள் முதல் ஓவரில் இருந்தே திரும்பும் என நினைக்கிறேன். இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து ஆல்ரவுண்டர் பேட்ஸ்மேன் ஆகியோர் களமிறங்குகிறோம். இந்திய மண்ணில் எப்படி விளையாட வேண்டும் என திட்டங்கள் தீட்டி வைத்திருக்கிறோம். இப்போது அதைச் சரியாக செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்

‘‘எங்களுக்கு பேட்டிங் செய்யவே விருப்பம். எனினும் டாஸ் தோற்றதை மிகப்பெரிய விஷயமாகக் கருத விரும்பவில்லை. கடந்த இங்கிலாந்து தொடரில் மூன்று முறை டாஸ் தோற்றோம். ஆனால் நான்கு போட்டியில் வெற்றிபெற்றோம். எந்தவொரு சூழ்நிலைக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். இதுபோன்ற ஆடுகளங்களில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ மிகவும் முக்கியம். இஷாந்த், உமேஷ் யாதவ் அந்த வேலையை கச்சிதமாகச் செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஜெயந்த் யாதவ் இந்த போட்டியில் களமிறங்குகிறார். மற்றபடி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய வீரர்களே அணியில் தொடர்வார்கள்" எனச் சொன்னார் விராட் கோலி.

ஆஸ்திரேலியா சார்பாக ரென்ஷா, வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர் . இஷாந்த் ஷர்மா முதல் ஓவரை வீச ரெடியானார். முதல் பந்தையே ‘தேர்ட் மேன் ’ திசையில் ஒரு பவுண்டரி அடித்து கெத்தாக தனது ரன் கணக்கையும், ஆஸ்திரேலிய ரன் கணக்கையும் தொடங்கி வைத்தார் மேட் ரென்ஷா. இரண்டாவது ஒவரையே அஷ்வின் வீச வந்தார். அவரின் பந்திலும் ஒரு பவுண்டரி அடித்தார் ரென்ஷா. அதன் பின்னர் இஷாந்தும், அஷ்வினும் கிடுக்கிப்பிடி பிடித்தனர். 

எட்டாவது ஓவரை வீசவதற்கு ஜெயந்த் யாதவை அழைத்தார் கேப்டன் கோலி. அவரது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசினார் வார்னர். அதற்கடுத்த ஓவரில் அஷ்வின் பந்துவீச்சில் ரென்ஷா அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பித்தார். ஓவரின் இரண்டாவது பந்தை அஷ்வின் வீச, அது ரென்ஷாவின் பேட்டில் இருந்து ஊசி முனை இடைவெளியில் படாமல் தப்பித்து கீப்பர் சாஹாவின் கையில் தஞ்சம் அடைந்தது. விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்துவிட்டதாகக்  கத்த, அஷ்வினும் அவுட் கேட்டார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர், அவுட் தரவில்லை. இதையடுத்தது கோலி மூன்றாவது அம்பயரிடம் ‘ரிவ்யூ’ கேட்டார். ‘ஸ்னிக்கோ மீட்டரில்’ பந்துபேட்டில் படாதது தெளிவாகத் தெரிந்தது. இதையடுத்து ‘களத்தில் இருந்த அம்பயர் சொன்ன முடிவே சரியானது’ என அறிவித்தார் மூன்றாவது அம்பயர். பத்து ஓவருக்குள்ளாகவே முதல் ரிவ்யூவை இழந்தது இந்திய அணி.

warner

15-வது ஓவரில் ஜெயந்த் யாதவ் பந்தில் வார்னர் போல்ட் ஆனார். ஆனால் அந்த பந்து ‘நோ பால்’ என அறிவிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் விக்கெட்  விழுந்த மகிழ்ச்சியில் அவுட் கேட்டுக் கொண்டிருக்க, பந்தோ பவுண்டரிக்குச் சென்றது. இதனால் அந்த பந்தில் ஐந்து ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. அதன் பின்னர் வார்னர் நிலைத்து நின்று ஆடத் தொடங்கினார். இதுபோன்ற மைதானங்களில் நிறைய ஓவர்கள் விளையாடினால் மட்டுமே இந்திய அணிக்கு நெருக்கடித் தர முடியும் என்பதை உணர்ந்து அற்புதமாக விளையாடியது ஆஸ்திரேலியா. வார்னரைக் காட்டிலும் மிகவும் மன உறுதியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ரென்ஷா. 
ஜடேஜாவின் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர்களைத் தெறிக்க விட்டார். 28-வது ஓவரில்தான் முதன் முறையாக உமேஷ் யாதவை அறிமுகப்படுத்தினார் கோலி. இதற்கு நல்ல பலன் கிடைத்தது. அந்த ஓவரின் இரண்டாவது பந்தை வார்னர் சரியாக கணிக்காமல் ஆட, பந்து உட்புறமாக எட்ஜாகி விக்கெட்டைத் தாக்கியது. இதையடுத்து வார்னர் முதல் விக்கெட்டாக வீழ்ந்தார். டெஸ்ட் போட்டிகளில் டேவிட் வார்னர் விக்கெட்டை உமேஷ் யாதவ் வீழ்த்துவது இது ஐந்தாவது முறை.

உடனடியாக  தொடக்க வீரர் ரென்ஷாவும் வயிறு வலியால் வெளியேறி விட்டார். இதையடுத்து ஸ்மித்தும் ஷான் மார்ஷும் இன்னிங்ஸைத் தொடர்ந்தனர்.  ஷான் மார்ஷ் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஜெயந்த் யாதவ் பந்தில், விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்தார். ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் ஹேண்ட்ஸ்கோம்ப் (22 ரன்கள்)  விக்கெட்டை இழந்தார்.  பொறுமையாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் ஸ்மித், அஸ்வினிடம்  வீழ்ந்தார். ஸ்மித் 27 ரன்களில் வெளியேற, மிச்செல் மார்ஷ் - ரென்ஷா ஜோடி சேர்ந்தனர். இரண்டாவது செசன் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு  153 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று தேநீர் இடைவெளிக்குப் பிறகு மாலையில் கடைசி பத்து ஓவர்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆஸ்திரேலியா கவனமுடன் நாளை மதியம் வரை  விளையாடி முதல் இன்னிங்ஸில் 350 ரன்களுக்கு மேல் எடுத்தால், இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் போட்டி கடும் சவாலாக அமைந்து விடும். எனவே இன்றைய தினம் மேலும் நான்கு முதல் ஆறு விக்கெட் வரையாவது இந்தியா வீழ்த்த முயற்சிக்க வேண்டும். உணவு இடைவேளை வரையிலான 33 ஓவரில் தொடர்ந்து 16 ஓவரை அஷ்வின் வீசியிருக்கிறார். அவரது ஓவரில் பந்துகள் சிறப்பாக திரும்புகின்றன. சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு அற்புதமாக பந்து வீசினார் அஷ்வின். எனினும் அவருக்கு பணிச்சுமை தருவதை விட, ஜெயந்த் யாதவ் சிறப்பாக வீசினால், ஆஸ்திரேலியாவை எளிதில் கட்டுப்படுத்தலாம். 

http://www.vikatan.com/news/sports/81779-australia-starts-the-day-1-in-a-slow-pace.html

Link to comment
Share on other sites

#CricketUpdates: ஆஸ்திரேலியா 256/9

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் புனேவில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக மேட் ரென்ஷா 68 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.  அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

249301_16144.jpg

துவக்கத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி, பின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், அந்த அணியின் மிட்சர் ஸ்டார்க் 50 பந்துகளில் 54 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஸ்டார்க் 54 மற்றும் ஹேஸல்வுட் 1 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

Link to comment
Share on other sites

ரென்ஷா, ஸ்டார்க் அரைசதம்; உமேஷ் யாதவ் அபாரம்: ஆஸ்திரேலியா 256/9

 

  • உமேஷ் யாதவை பாராட்டும் இந்திய அணியினர். | படம்.| ஏஎப்பி.
    உமேஷ் யாதவை பாராட்டும் இந்திய அணியினர். | படம்.| ஏஎப்பி.
  • அதிரடி அரைசதம் கண்ட ஸ்டார்க் பந்தைத் தூக்கி அடிக்கும் காட்சி. | ஏ.எப்.பி.
    அதிரடி அரைசதம் கண்ட ஸ்டார்க் பந்தைத் தூக்கி அடிக்கும் காட்சி. | ஏ.எப்.பி.
 

புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் எடுத்துள்ளது. உமேஷ் யாதவ் அபாரமாக வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆஸ்திரேலியா தரப்பில் ரென்ஷா 68 ரன்களையும், மிட்செல் ஸ்டார்க் அதிரடி 57 ரன்களையும் எடுத்தனர், இதில் ஸ்டார்க் 57 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்கிறார், இவருடன் ஹேசில்வுட் 1 ரன்னுடன் ஆடி வருகிறார். ஸ்டார்க், ஹேசில்வுட் இணைந்து கடைசி விக்கெட்டுக்காக 51 ரன்களைச் சேர்த்ததில் ஸ்டார்க் மட்டுமே 49 ரன்களைச் சேர்த்தார்.

முதல் பந்தே திரும்பும் ஒரு பிட்சைப் பார்த்ததில்லை என்று ஸ்மித் கூறியதும் இந்தப் பிட்ச் பற்றிய உண்மைதான், விராட் கோலி, உமேஷ் யாதவின் திறமைகளை மிகவும் தாமதமாகப் பயன்படுத்தியதும் உண்மைதான். உமேஷ் யாதவ் இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்தே சரியான லெந்த், வேகம் என்று நல்ல ஒரு வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார். அவரை தொடக்கத்திலேயே கொடுத்திருந்தால் ஆஸ்திரேலியா இன்னும் முன்னமேயே ஆல் அவுட் ஆகியிருக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் அஸ்வின் தான் விக்கெட்டுகள் வீழ்த்த தகுதியானவர் என்பது ஊடகரீதியிலான நிறுவல் ஆன பிறகு அவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தொடக்க வீரர்கள் 82 ரன்களைச் சேர்த்த பிறகு இரண்டாவது செஷனில் ஸ்மித், ஓரளவுக்கு ஷான் மார்ஷ், பிறகு ஹேண்ட்ஸ்கம்ப் ஆகியோர் தாக்குப் பிடித்தனர்.

ஆனால் ஷான் மார்ஷ் 3 பவுண்டரிகளுடன் வலுவான தடுப்பாட்டத்துடன் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்த பிறகே ஆட்டம் திருப்பு முனை கண்டது. ஹேண்ட்ஸ்கம்ப் 22 ரன்களில் ஜடேஜாவின் வழக்கமான ஒரு பந்துக்கு எல்.பி.ஆக, அஸ்வின் மிக முக்கியமான விக்கெட்டாக 27 ரன்கள் எடுத்திருந்த அபாய ஸ்மித்தை வீழ்த்தினார், மிட்விக்கெட்டில் கோலி கேட்சைப் பிடித்தார். ரென்ஷா மீண்டும் களமிறங்கி தன்னுடைய அபாரத் தடுப்பாட்டத்துடன் தளர்வான பந்துகளை பவுண்டரிகளையும் அடித்தார்.

மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் ஜடேஜாவிடம் எல்.பி.ஆக, மேத்யூ வேட் உமேஷ் யாதவ்வின் அருமையான ரவுண்ட் த விக்கெட் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார், இது உண்மையில் கூற வேண்டுமெனில் நாட் அவுட்தான், ஆனால் நடுவர் கையை உயர்த்தியதால் 3-ம் நடுவரும் செவிசாய்த்தார். ரிவியூவைப் பொறுத்தவரை கள நடுவர் அவுட் கொடுத்தாலும், நாட் அவுட் கொடுத்தாலும் ரிவியூவில் பேட்ஸ்மெனுக்கு எதிராகத்தான் தீர்ப்பு வருகிறது. இந்த விதத்தில் மேத்யூ வேட் துரதிர்ஷ்டசாலிதான்.

ரென்ஷா 156 பந்துகளில் 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 68 ரன்கள் எடுத்து அஸ்வினின் அருமையான ஸ்லிப் கேட்சுக்குக் காலியானார். ஆனால் ரென்ஷா இங்கு ஆடும் ஆட்டம் அவர் இந்தத் தொடரில் மேலும் சாதிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது, உடலை விட்டு விலகுமாறு அவர் ஸ்பின் பந்துகளுக்கு மட்டையைக் கொண்டு செல்லவில்லை, உள்ளே வரும் பந்தைத்தான் அவர் தடுத்தாடினார், வெளியே செல்லும் பந்தை ஆடாமல் விட்டு விடுகிறார். ஒருமுறை ஜடேஜாவை மேலேறி வந்து சிக்ஸ் அடித்ததும் அவரது தன்னம்பிக்கைக்கு உதாரணம்.

ரென்ஷாவுக்குப் பிறகு உமேஷ் யாதவ் அடுத்தடுத்த பந்துகளில் ஓகீஃப் மற்றும் லயனை வீழ்த்தினார். இதில் ஓகீஃபுக்கு சஹா பிடித்த கேட்ச் அதி அற்புதமானது. ஒருகையில் டைவ் அடித்து பிடித்தார் சஹா. நேதன் லயன் எல்.பி.ஆனார்.

205/9 என்ற நிலையில்தான் ஸ்டார்க் அதிரடி ஆட்டம் ஆடத் தொடங்கினார், ஜடேஜாவை ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 15 ரன்கள் விளாசினார், இதில் ஒரு பவுண்டரி இன்சைடு எட்ஜ். இசாந்த் சர்மாவை இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அவர் 58 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 57 ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 205/9 என்ற நிலையிலிருந்து ஆல் அவுட் ஆகாமல் ஆஸ்திரேலியா 256/9 என்ற ஸ்கோரை எட்டிய போது இன்றைய ஆட்டம் நிறைவுற்றது.

இன்று வீசப்பட்ட 94 ஓவர்களில் அஸ்வின் மூன்றில் ஒருபங்காக 34 ஓவர்களை வீசி 10 மெய்டன்களுடன் 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். உண்மையில் பிட்சில் இருந்த திருப்பத்துக்கு இவர் ஆஸ்திரேலியாவை சுருட்டி இந்த 39 ஓவர்களில் குறைந்தது 5 விக்கெட்டுகளையாவது கைப்பற்றியிருக்க வேண்டும், அதுவும் கோலி இவருக்கு அமைத்த பீல்டிங்கும் குறை கூற முடியாததே. இன்றைய ஆட்டத்தின் பந்து வீச்சு நாயகன் உமேஷ் யாதவ்தான், இவர் 12 ஓவர்கள் 3 மெய்டன், 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள். ஆஸ்திரேலியா அடித்த 30 பவுண்டரிகள் 4 சிக்சர்களில் அஸ்வின், ஜெயந்த் யாதவ், ஜடேஜா 22 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் விட்டுக் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஏற்கெனவே முதல் செஷனிலேயே உடையத் தொடங்கிய பிட்சை சேதம் செய்ததற்காக இருமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டார். இதெல்லாம் இல்லாமலேயே நேர்மையாக வெற்றி பெற வேண்டும், ஏனெனில் இத்தகைய செயல்கள் இந்திய பேட்ஸ்மென்களுக்குமே அபாயமானதுதான், காரணம் அங்கு நேதன் லயன், ஓகீஃப் ஆகிய ஸ்பின்னர்கள் உள்ளனர், இந்திய அணி இவர்களை குறைவாக எடைபோட முடியாது.

http://tamil.thehindu.com/sports/ரென்ஷா-ஸ்டார்க்-அரைசதம்-உமேஷ்-யாதவ்-அபாரம்-ஆஸ்திரேலியா-2569/article9557299.ece?homepage=true

Link to comment
Share on other sites

பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாதியில் வெளியேறியது ஏன்?: ரென்ஷா விளக்கம்

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ரென்ஷா 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வயிற்று உபாதை காரணமாக பாதியில் நடையை கட்டினார்.

 
 
பேட்டிங் செய்து கொண்டிருந்த போது பாதியில் வெளியேறியது ஏன்?: ரென்ஷா விளக்கம்
அரைசதம் அடித்த மகிழ்ச்சியில் மேத்யூ ரென்ஷா.
புனே :

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் மேத்யூ ரென்ஷா 36 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த போது வயிற்று உபாதை காரணமாக பாதியில் நடையை கட்டினார். பிறகு 4-வது விக்கெட்டுக்கு மீண்டும் இறங்கி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். இந்த சம்பவம் குறித்து 20 வயதான ரென்ஷா கூறியதாவது:-

வார்னர் ஆட்டம் இழப்பதற்கு 5 அல்லது 10 நிமிடங்களுக்கு முன்பு திடீரென வயிற்றை கலக்கியது. உடனே நடுவர் கெட்டில்போரப்பிடம் உணவு இடைவேளைக்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கிறது என்று கேட்டேன். அரைமணி நேரம் இருப்பதாக கூறினார்.

7CD402CA-FEBB-4E40-A731-DF669C4B5D21_L_s

என்னால் சமாளிக்க முடியவில்லை. சங்கடத்தில் நெளிந்தேன். இப்படியொரு நிலைமை வந்து விட்டதே என்று எனக்கு நானே நொந்து கொண்டேன். உடல்நலக்குறைவால் ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேற முடியுமா? அதற்கு விதியில் அனுமதி உண்டா? என்பது தெரியாது. எனது பிரச்சினையை கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் கூறினேன். அதை கேட்டு அவர் ஆச்சரியப்படவில்லை. நிலைமையை புரிந்து கொண்டார். கழிவறைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது, சென்று தானே ஆக வேண்டும் என்று கூறினார். இதன் பின்னர் நடுவரிடம் பேசினோம்.

இருப்பினும் இது ஒரு சரியான சூழ்நிலையாக இருக்கவில்லை. அப்போது தான் நாங்கள் ஒரு விக்கெட்டை இழந்திருந்தோம். நானும் வெளியேறும் போது, ஒரே சமயத்தில் இரண்டு புதிய பேட்ஸ்மேன்கள் நெருக்கடியான சூழலை சந்திக்க வேண்டி இருக்கும். ஆனால் வேறு வழியில்லை என்பதை கேப்டன் ஸ்டீவன் சுமித் உணர்ந்து கொண்டார். இதையடுத்து அவசரமாக வெளியேறினேன்.

இவ்வாறு ரென்ஷா கூறினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/24084612/1070124/Renshaw-explanation-when-batted-out-in-half.vpf

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியா 260 ரன்னுக்கு ஆல்-அவுட்

 

புனேவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 260 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

 
 
ஆஸ்திரேலியா 260 ரன்னுக்கு ஆல்-அவுட்
 
புனே:

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நேற்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க வீரர் டேவிட் வார்னர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தது. இந்திய சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் திணறினர்.

ரென்ஷா 68 ரன்னிலும் கேப்டன் சுமித் 27 ரன்னிலும், ஷான் மார்ஷ் 16 ரன்னிலும் ஹேன்ட்ஸ்கோம்ப் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் மிட்செல் ஸ்டார்க் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார்.

அவர் 47 பந்தில் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்புக்கு 256 ரன் எடுத்து இருந்தது.

மிட்செல் ஸ்டார்க் 57 ரன்னுடனும், ஹேசல்வுட் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்டார்க், ஹேசல்வுட் தொடர்ந்து விளையாடினர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய ஸ்டார்க் அஸ்வின் ஓவரில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 63 பந்துகளில் 61 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 6 பவுண்டரி 3 சிக்சர்கள் அடங்கும். இதனால்,    ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/24113458/1070154/Australia-all-out-for-260-runs.vpf

Link to comment
Share on other sites

கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழத்தியதன் மூலம் கபில்தேவ் சாதனையை முறியடித்தார்.

 
 
கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் 34.5 ஓவரில் 63 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழத்தினார். இது அவர் உள்ளூர் சீசனில் கைப்பற்றும் 64-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் அவர் கபில்தேவ் சாதனையை முறியடித்தார். இதற்கு முன்பு கபில்தேவ் உள்ளூர் சீசனில் 63 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/24131211/1070184/Ashwin-breaks-Kapil-Dev-record-of-most-wickets-in.vpf

Link to comment
Share on other sites

105 ரன்னில் சுருண்டது இந்தியா- ஸ்டீவ் 6 விக்கெட் வீழ்த்தினார்

 

austrialia_13449.jpg

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 105 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. 
புனேவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 260 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே தொடர்ச்சியாக விக்கெட்டுகளை  இழந்தது. இறுதியில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஓக்ஃகேப் 35 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

 

ENGLISH OVERVIEW

India out of 105, lokesh rahul took 68 runs

http://www.vikatan.com/news/sports/81900-india-out-of-105-lokesh-rahul-took-68-runs.html

Link to comment
Share on other sites

11 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 105 ரன்களுக்கு அதிர்ச்சி ஆல் அவுட்

 
  • ரஹானே விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஓகீஃப்.| படம்.| கே.முரளிகுமார்.
    ரஹானே விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஓகீஃப்.| படம்.| கே.முரளிகுமார்.
  • ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்த விராட் கோலி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
    ஸ்டார்க் பந்தை எட்ஜ் செய்த விராட் கோலி. | படம்.| ராய்ட்டர்ஸ்.
 

புனே டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எதிர்த்து இந்திய அணி தன் முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு அதிர்ச்சிகரமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட்டது.

ஆஸ்திரேலிய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓகீஃப் 24 பந்துகளில் 6 விக்கெட்டுகளைச் சாய்த்ததன் மூலம் 94/3 என்று இருந்த இந்திய அணி அதிர்ச்சிகரமாக அடுத்த 11 ரன்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இந்த குழி பிட்சில் 155 ரன்கள் என்ற மிகப்பெரிய முன்னிலையைப் பெற்றது. 64 ரன்கள் எடுத்து அருமையாக ஆடி வந்த கே.எல்.ராகுல், ஸ்டீபன் ஓகீஃப் பந்தில் ஆடிய மோசமான ஷாட்டினால் இந்திய அணி சரிவு தொடங்கியது. ஓகீஃப் 35 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு 24 பந்துகளில் அவர் இந்த சரிவை உண்டாக்கி ஆஸ்திரேலியாவுக்கு அருமையான, அரிதான ஒரு வெற்றி வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளார்.

ஒரே ஓவரில் ஓகீஃப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதிலிருந்து இந்த சரிவு தொடங்கியது, முதலில் கே.எல்.ராகுல் படுமோசமாக ஒரு ஸ்லாக் செய்ய அது லாங் ஆஃபில் டேவிட் வார்னரால் கேட்ச் எடுக்கப்பட்டது. 2 பந்துகள் சென்று அஜிங்கிய ரஹானே (13) செய்த எட்ஜ் 2-வது ஸ்லிப்பில் பீட்டர் ஹேண்ட்ஸ்கம்பினால் அருமையாக பிடித்துப் போடப்பட்டது. இன்னும் 2 பந்துகள் சென்று ஓகீஃபின் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் சஹா எட்ஜ் செய்ய முதல் ஸ்லிப்பில் ஸ்மித் அருமையாக பிடித்தார். 94/3 என்ற நிலையிலிருந்து ஒரே ஓவரில் 95/6 என்று ஆனது இந்திய அணி.

அஸ்வின் விக்கெட்டை நேதன் லயன் வீழ்த்தினார், அஸ்வின் தடுத்தாடிய பந்து காலில் பட்டு ஹேண்ட்ஸ்கம்பிடம் செல்ல அவர் முன்னால் டைவ் அடித்து வலது கையினால் கேட்ச் எடுத்தார்.

ஜெயந்த் யாதவ் ஸ்பின்னை சமாளிக்க முடியாமல் ஆடிவந்த நிலையில் முன்னால் சற்று கூடுதலாக வந்து தடுத்தாட நினைத்தார், ஓகீஃப் வீசிய அந்தப் பந்து மட்டையைக் கடந்து விக்கெட் கீப்பரிடம் செல்ல வேட் அதனை ஸ்டம்ப்டு செய்தார். இந்நிலையில் நின்று கவிழும் படகை நிலைநிறுத்த முயலாமல் ரவீந்திர ஜடேஜா, ஓகீஃப் பந்தை மேலேறி வந்து டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்தார். ஸ்டாக் அதனை விடுவாரா? உமேஷ் யாதவ், ஓகீஃப் பந்தை எட்ஜ் செய்ய இந்திய இன்னிங்ஸ் 105 ரன்களில் முடிந்தது. ஓகீஃப் 35 ரன்களுக்கு 6 விக்கெட்.

முன்னதாக ஆஸ்திரேலியா இன்று 256/9 என்ற நிலையில் தொடங்கி அஸ்வின் ஓவரில் ஸ்டார்க்கின் ஒரு மிட் ஆன் பவுண்டரியுடன் முடிந்தது, அதே ஓவரில் டீப்பில் கேட்ச் கொடுத்து ஸ்டார்க் வெளியேற ஆஸ்திரேலியா 260 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியைப் போலவே மிட்செல் ஸ்டார்க்குடன் ஓகீஃப் தொடங்கினார், ஆனால் முதல் விக்கெட் ஹேசில்வுட்டால்தான் வீழ்த்த முடிந்தது. விஜய்க்கு அவர் 3இன்ஸ்விங்கர்களை வீசி அதே லெந்தில் ஒரு பந்தை வெளியே கொண்டு சென்றார், தனது ஆஃப் ஸ்டம்ப் எங்கு உள்ளது என்பதில் விஜய் கவனமாக இருந்தாலும் அதனை தொட்டார், கெட்டார். பிறகு ஸ்டீவ் ஸ்மித் ஒரு அருமையான முடிவில் மிட்செல் ஸ்டார்க்கை கொண்டு வர புஜாரா சற்றும் எதிர்பாராத வகையில் விளையாட முடியாத ஒரு எழுச்சிப் பந்தை வீசினார் பந்து அதுவாகவே புஜாராவின் உயர்த்திய கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனது.

2 பந்துகள் கழித்து ஆஸ்திரேலியா எதிர்பார்த்த கனவு விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தினார், விராட் கோலி, வெளியே சென்ற பந்தை, ஆடத் தேவையில்லாத பந்தை அவரது ‘ராஜ கவர் டிரைவுக்காக’ முயன்று எட்ஜ் செய்தார். விராட் கோலி ஸ்கோரரை தொந்தரவு செய்யவில்லை.

155 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா அணி தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 46 ரன்கள் எடுத்துள்ளது, ஸ்மித் 27 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கம்ப் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முன்னதாக வார்னர், ஷான் மார்ஷ் ஆகியோர் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.
முதல்நாளே குழி பிட்ச் போட்டால் என்ன ஆகும் என்ற பலனை இந்திய அணி அனுபவித்து வருகிறது.

http://tamil.thehindu.com/sports/11-ரன்களுக்கு-7-விக்கெட்டுகளை-இழந்து-இந்தியா-105-ரன்களுக்கு-அதிர்ச்சி-ஆல்-அவுட்/article9558957.ece?homepage=true

Link to comment
Share on other sites

298 ரன்கள் முன்னிலை! வலுவான நிலையில் ஆஸ்திரேலியா

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும், முதல் டெஸ்ட் போட்டி புனேவில் நடந்து வருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

Smith

அந்த அணியின் கேப்டன் ஸ்மித் 59, மிட்சல் மார்ஸ் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணியை விட ஆஸ்திரேலிய அணி 298 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் வலுவான நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பெவிலியன் திரும்பியுள்ளனர். 

இந்திய அணியின் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 260 ரன்களிலும், இந்திய அணி 105 ரன்களிலும் ஆட்டமிழந்தது. 

http://www.vikatan.com/news/sports/81925-australia-at-strong-situation-on-day-2-stumps-vs-india.html

Link to comment
Share on other sites

ஒரேயொரு நாள் மோசமாக அமைந்தது: விமர்சனங்களிலிருந்து அணியைக் காத்த அனில் கும்ப்ளே

 

 
 
படம்.| ஏ.எஃப்.பி.
படம்.| ஏ.எஃப்.பி.
 
 

புனே டெஸ்ட் போட்டியில் எதிர்பாராத விதமாக இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 105 ரன்களுக்குச் சுருண்டதையடுத்து, ‘ஒரேயொரு தினம் மோசமாக அமைந்துள்ளது” என்று சரிவை அடக்கி வாசித்தார் அனில் கும்ப்ளே.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அனில் கும்பேளே, “நீங்களே கூறியது போல் ஒரேயொரு தினம் மோசமாக அமைந்தது. ஆனால் இது ஏமாற்றமளிகிறது. ராகுல், ரஹானே பேட் செய்த போது ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தோம். ராகுல் ஆட்டமிழந்த பிறகு 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இழந்தோம். இதனால் பின்னடைவு ஏற்பட்டது, ஓரிரு விக்கெட்டுகள் சடுதியில் விழுந்த விவகாரம் மட்டுமே இது.

இந்தப் பிட்ச் நிச்சயம் சவாலானதே, எனவே 2-வது இன்னிங்ஸில் இன்னும் கட்டுப்பாட்டுடன், தலையைத் தொங்கப் போட்டு ஆட வேண்டும், அப்படி ஆடினால் இலக்கை எட்டலாம். ராகுல் ஆட்டமிழந்தது துரதிர்ஷ்டமே, அங்குதான் ஆட்டத்தை இழக்கத் தொடங்கினோம்.

சவாலான பிட்ச்தான் ஆனால் இதிலும் நாம் நம்மை எப்படி ஈடுபடுத்திக் கொள்கிறோம் என்பது உள்ளது, ஆக்ரோஷம் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. இன்று எங்கள் நாளல்ல. ஆஸ்திரேலிய பவுலர்களைப் பாராட்ட வேண்டும். நாளை மீதமுள்ள 6 விக்கெட்டுகளை எப்படி வீழ்த்தப் போகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த பிட்சில் நாம் அதற்குத் தக்கவாறு மாற வேண்டும் இதில்தான் சோடை போனோம். முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா தொடக்கத்தில் 80 ரன்களையும் கடைசியில் 60 ரன்களையும் எடுத்தது ஆஸ்திரேலியாவை எந்த ஸ்கோருடன் நிறுத்த வேண்டும் என்ற அணியின் விருப்பத்துக்கு மாறாக அமைந்தது.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் நாம் நினைத்தபடி ஆட முடியாமல் போகும் நியதி எப்போதுன் உள்ளது.பின்கள வீரர்கள் சமீபகாலமாக நன்றாக பங்களிப்பு செய்தனர், இன்று இல்லை. இன்னும் இந்தப் போட்டியில் ஆட வேண்டியது நிறைய இருக்கிறது, நாளை மற்றுமொரு நாளே.

இத்தகைய பிட்ச்களில் ஷாட்களை ஆட வேண்டும். நாம் ராகுலை இதற்காக குற்றம்சாட்ட முடியாது. ராகுல் தனது இடது தோள்பட்டையில் காயமடைந்தார். இவரது உடல் நிலை தற்போது சரியாகிவிட்டது. பொதுவாக இவ்வகை காயங்கள் 24 மணிநேரத்தில் மீண்டும் ஏற்படக்கூடியதே, எனவே நாளை வரை அவரது உடல் நிலையை கூர்மையாக கவனித்து வருகிறோம்.

ஆஸ்திரேலிய அணி பெரிய அளவில் முன்னிலை பெறாமல் மட்டுப்படுத்த வேண்டும், நாம் சில கேட்ச்களை நழுவ விட்டோம், கடந்த காலங்களில் இது அணியைக் காயப்படுத்தியது, இந்தப் போட்டியில் அரை வாய்ப்பாக இருந்தாலும் அதனை பிடிக்க வேண்டும். ஆனால் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 3 கேட்ச்களை விட்டோம். நாளை காலை விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தி அவர்கள் மீது நெருக்கடியை மீண்டும் சுமத்துவோம்.

ஓகீஃப் கட்டுக்கோப்புடன் வீசினார், சீராக நல்ல இடங்களில் பந்தை பிட்ச் செய்தார். நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் இரண்டு அவுட்கள் தேவையில்லாமல் ஆனதே. ஜடேஜா ஒவ்வொரு ஓவரிலும் மட்டையை 3 முறை பீட் செய்தார், இன்று எட்ஜ் எடுக்கவில்லை, இன்னொரு நாளில் இவை எட்ஜ் ஆகியிருக்கும்” என்றார் நம்பிக்கையை விடாத அனில் கும்ப்ளே

http://tamil.thehindu.com/sports/ஒரேயொரு-நாள்-மோசமாக-அமைந்தது-விமர்சனங்களிலிருந்து-அணியைக்-காத்த-அனில்-கும்ப்ளே/article9559179.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஆஸி இரண்டாவது இன்னிங்ஸில் 285 :  இந்திய அணிக்கு வெற்றியிலக்கு 441 (படங்கள்)

 

 

இந்தியா மற்றும் ஆஸி மோதும் முதல் டெஸ்ட் போட்டி பூனேவில் இடம்பெற்றுவருகின்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி  260 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

25017.jpg

பதிலுக்கு முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி ஆஸியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல், 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 285 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

25021.jpg

இதனடிப்படையில் ஆஸி அணி 440 ஓட்டங்களால் முன்னிலைவகிக்கின்றது.

ஆஸி அணி சார்பில் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

259417.jpg

பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில்  இந்திய அணி வெற்றிபெற வேண்டுமாயின் 441 ஓட்டங்களை பெறவேண்டும்.

259449.jpg

259456.jpg

C5fRqK2WMAQIuY0.jpg

fsdg.jpg

http://www.virakesari.lk/article/17062

Link to comment
Share on other sites

 
 
புனே டெஸ்ட்: இந்திய அணி தோல்வி
 
 
 
 
 
 
Tamil_News_large_1718424_318_219.jpg
 

புனே: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, ஓ கீபே 'சுழலில்' சிக்கி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி புனேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 260, இந்தியா 105 ரன்கள் எடுத்தன. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் (59), மிட்சல் மார்ஷ் (21) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

 

ஸ்மித் சதம்:

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடந்தது. ஜடேஜா 'சுழலில்' மிட்சல் மார்ஷ் (31) சிக்கினார். மாத்யூ வேட் 20 ரன்கள் எடுத்தார். சிறப்பாக செயல்பட்ட கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 18வது சதம் அடித்தார். ஜடேஜா பந்தில் ஸ்மித் 109 ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்று சிக்சர் அடித்த ஸ்டார்க் 30 ரன்கள் எடுத்தார். உமேஷ் 'வேகத்தில்' லியான் (13) அவுட்டானார். ஓ கீபே (6) கிளம்ப, ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

மீண்டும் ஓ கீபே அசத்தல்:

441 ரன்கள் என்ற கடின இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை துவக்கியது. ஓ கீபே 'சுழலில்' முரளி விஜய் (2) சிக்கினார். லோகேஷ் ராகுல் 10 ரன்களில் அவுட்டானார். கேப்டன் கோஹ்லி 13 ரன்களுக்கு போல்டானார். தொடர்ந்து அசத்திய ஓ கீபே இம்முறை, ரகானே (18), அஷ்வினை (8) வெளியேற்றி, இப்போட்டியில் 10வது விக்கெட்டை கைப்பற்றினார். சகா (5) அணியை கைவிட்டார். மற்றவர்களும் ஏமாற்ற, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 107 ரன்களுக்கு 'ஆல்-அவுட்டாகி' வீழ்ந்தது. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஓ கீ பே 6 விக்கெட் வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக இரு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 12 விக்கெட் வீழ்த்திய இவர், வெற்றிக்கு காரணமாக அமைந்தார். இதன் மூலம், தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட், மார்ச் 4ல் பெங்களூருவில் துவங்குகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1718424

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு மற்றுமொரு தினம்!       சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு மற்றுமொரு தினத்தை வழங்குவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும், விவசாயிகளின் நெல் கொள்வனவு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 12.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று (19) பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=185353
    • தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பா. மன்றின் நடுவில் 8 பேரின் விடுதலை வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
    • ஆமாம் .....40 ஆயிரமாகத் தான் இருக்கும்   ஆனால் இது மிகவும் குறைவு   கொஞ்சம் கூட கேட்டிருக்கணும் 🤣🤣🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.