Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்


Recommended Posts

டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா முதலிடம்

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

 
 
டெஸ்ட் தொடரில் 25 விக்கெட் வீழ்த்தி ஜடேஜா முதலிடம்
 
சென்னை:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தை பிடித்தார்.

118 இன்னிங்சில் 213.1 அவர் வீசி 464 ரன்கள் கொடுத்து அவர் 25 விக்கெட் வீழ்த்தினார். 63 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். 2 தடவை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றுவது 2-வது முறையாகும்.

இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஜடேஜா 5 டெஸ்ட் தொடரில் 26 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
201703281148172790_mba559iy._L_styvpf.gi
சென்னையை சேர்ந்த ஆர்.அஸ்வின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்தார். சராசரி 27.38 ஆகும். 5 விக்கெட்டுக்கு மேல் ஒரு முறை எடுத்துள்ளார். 41 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.
201703281148172790_fm8e3dvj._L_styvpf.gi
மற்ற இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவ் 17 விக்கெட் வீழ்த்துகிறார். ஒரு தொடரில் அவர் தற்போது தான் அதிகமான விக்கெட் எடுத்துள்ளார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 2011-12-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் 14 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீரர்கள் நாதன் லயன், ஓகிபே, தலா 19 விக்கெட் கைப்பற்றி இருந்தனர். இருவரும் 2 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளனர்.

ஓகிபே 35 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். லயன் 50 ரன் கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சு ஆகும். ஹாசல்வுட் 9 விக்கெட்டும், கும்மினஸ் (2 டெஸ்ட்) 7 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் 499 ரன்கள் குவித்து முதல் இடத்தை பிடித்தார். சராசரி 71.28 ஆகும். 3 சதம் அடித்து உள்ளார். அதிகபட்சமாக 178 ரன் குவித்து இருந்தார்.
201703281148172790_0xvpl8lp._L_styvpf.gi
புஜாரா 405 ரன் குவித்து 2-வது இடத்தை பிடித்தார். ஒரு சதமும், 2 அரை சதமும் இதில் அடங்கும். சரசரி 67.50 ஆகும். அதிகபட்சமாக 202 ரன் குவித்து இருந்தார். ராகுல் 355 ரன்கள் எடுத்து 3-வது இடத்தை பிடித்தார். சராசரி 59.16 ஆகும். 5 அரை சதம் அடித்து முத்திரை பதித்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/28114846/1076515/Jadeja-at-1st-place-for-25-wicket-haul-in-Test-series.vpf

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடம் பிடித்த இந்திய பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
 
25 விக்கெட்டுகளை சரித்த ரவீந்திர ஜடேஜா ஆட்டநாயகன் மற்றும் தொடரின் நாயனாக தேர்வு
 
தரம்சாலா:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய சுழற்பந்து வீரர் ரவிந்திர ஜடேஜா ஒட்டு மொத்தமாக 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்துள்ளார். 118 இன்னிங்சில் 213.1 ஓவர்களை வீசியுள்ள அவர் 464 ரன்கள் கொடுத்து 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 63 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை கைப்பற்றியது இந்த தொடரில் அவரது சிறந்த பந்து வீச்சு ஆகும். 2 முறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி உள்ளார்.

டெஸ்ட் தொடரில் ரவிந்திர ஜடேஜா 25 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றுவது 2-வது முறையாகும். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த தொடரில் ஜடேஜா 5 டெஸ்ட் போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

201703281223097994_jadu1._L_styvpf.gif

தமிழக வீரர் அஸ்வின் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார். 5 விக்கெட்டுக்கு மேல் ஒரு ஆட்டத்தில் எடுத்துள்ளார். 41 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியது இந்த தொடரில் அவரது சிறந்த பந்துவீச்சு ஆகும்.

மற்ற இந்திய பவுலர்களில் உமேஷ் யாதவ் 17 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்த டெஸ்ட் தொடரில் தான் அதிகமான விக்கெட்டுகளை உமேஷ் யாதவ் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக 2011-12-ம் ஆண்டு ஆஸ்திரேலியா தொடரில் 14 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியதே அதிகபட்சமாக இருந்தது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/28122309/1076524/Ravindra-Jadeja-named-man-of-the-match-and-man-of.vpf

Link to comment
Share on other sites

கேட்ச் சர்ச்சை விவகாரம்: முரளி விஜய்யை மோசமான வார்த்தையால் திட்டிய சுமித்

 

தரமசாலா டெஸ்டில் இந்திய வீரர் முரளி விஜய்யை ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் மோசமான வார்த்தைகளால் திட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 
 
கேட்ச் சர்ச்சை விவகாரம்: முரளி விஜய்யை மோசமான வார்த்தையால் திட்டிய சுமித்
 
தரமசாலா:

அஸ்வின் ஓவரில் ஹாசல்வுட் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற முரளிவிஜய் ‘கேட்ச்.’ செய்தார். அப்போது பந்து தரையில் பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரிடம் நாடப்பட்டது.

டெலிவி‌ஷன் ரீபிளேயில் பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3-வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார்.

201703281400131196_c7luk2z5._L_styvpf.gi

முரளி விஜய் தரையில் பந்து பட்டதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டதால் வீரர்கள் அறையில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் ஆவேசம் அடைந்தார். அவர் முரளி விஜய்யை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லி மோசடி என்று கூறி திட்டினார். சுமித் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சத்தம் போட்டது கேமிராவில் பதிவாகி இருந்தது.

சுமித்தின் இந்த செயல் மிகவும் மோசமான நிகழ்வாகும். அவரது இந்த நடத்தையால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிருப்தி அடைந்து உள்ளது. ஆனால் சுமித் மீது அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் செய்யவில்லை.

இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/28140012/1076553/India-v-Australia-Did-Steve-Smith-abuse-Murali-Vijay.vpf

Link to comment
Share on other sites

“ஆஸி. வீரர்கள் இனி ஒருபோதும் என் நண்பர்கள் அல்ல!”

அவுஸ்திரேலிய வீரர்கள் இனி ஒருபோதும் தனது நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

5_Virat_Angry.jpg

நான்கு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் 2-1 என்ற ரீதியில் வென்று இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.

இந்தப் போட்டித் தொடரின் ஆரம்பம் முதலே விராட் கோலிக்கும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் இடையே சில உரசல்கள் தோன்றின. தனது ஆட்டமிழப்பை அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் கேலி செய்தார் என்று கோலியும், பதிலுக்கு ஆஸி. வீரர்  டேவிட் வோர்னரின் ஆட்டமிழப்பையடுத்து, தனது தோற்பட்டையைத் தொட்டுக் காட்டி கேலி செய்தார் விராட் கோலி. 

எனினும், ஸ்டீவன் ஸ்மித் கோலியை கேலி செய்யவில்லை எனவும், அந்தக் காட்சி காண்பிக்கப்பட்ட கோணத்தில் அப்படித் தோற்றமளித்தது எனவும் ஆஸி. ஊடகங்கள் வாதிட்டன. மேலும் கோலியின் இந்தச் செய்கையை கடுமையாக விமர்சித்த ஊடகங்கள் ஒரு கட்டத்தில், விளையாட்டுலகின் டொனால்ட் ட்ரம்ப் என்றும் குறிப்பிட்டிருந்தன.

இது குறித்து கோலி மன்னிப்புக் கோராததைச் சுட்டிக்காட்டிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் தலைவர் ஜேம்ஸ் சதர்லேண்ட், கோலிக்கு மன்னிப்பு என்ற ஆங்கில வார்த்தைக்கு எழுத்துக் கூட்டவும் தெரியாது என்று மிகக் காட்டமாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், இன்று தர்மசாலாவில் நடைபெற்று முடிந்த போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரையும் கைப்பற்றியது. போட்டியின் பின் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அவுஸ்திரேலிய வீரர்களுக்கும் தனக்கும் இடையில் இனி ஒருபோதும் நட்புறவு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று உறுயாகக் கூறினார் விராட் கோலி.

http://www.virakesari.lk/article/18387

Link to comment
Share on other sites

உணர்ச்சிவசத்தால் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன் - ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்

 

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது நிகழ்ந்த சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தன்னுடைய உணர்ச்சிவசத்தால் நிகழ்ந்து விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
உணர்ச்சிவசத்தால் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்கிறேன் - ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்
 
தரம்சாலா:
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இன்று வென்றது. ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகனாக 25 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார்.
 
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சில சர்ச்சைக்குரிய சம்பவங்களில் மாட்டிக் கொண்டார். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தின் போது, இந்திய வீரர் அஸ்வின் ஓவரில் ஹாசல்வுட் அடித்த பந்தை ‘கல்லி’ பகுதியில் நின்ற முரளிவிஜய் ‘கேட்ச்.’ செய்தார். அப்போது பந்து தரையில் பட்டதா? என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து 3-வது நடுவரிடம் நாடப்பட்டது.
 
டெலிவி‌ஷன் ரீபிளேயில் பந்து லேசாக தரையில் பட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து 3-வது நடுவர் அவுட் இல்லை என்று தெரிவித்தார். முரளி விஜய் தரையில் பந்து பட்டதை கேட்ச் பிடித்து அவுட் கேட்டதால் வீரர்கள் அறையில் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் ஆவேசம் அடைந்தார். அவர் முரளி விஜய்யை நோக்கி கெட்ட வார்த்தையை சொல்லி மோசடி என்று கூறி திட்டினார். சுமித் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி சத்தம் போட்டது கேமிராவில் பதிவாகி இருந்தது.
 
201703281255574160_smith._L_styvpf.gif
 
அதேபோல், பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது எல்.பி.டபில்யூ மூலம் அவுட் ஆனார். ஆனால், நடுவர்களிடம் ரிவிவ்யூ கேட்கலாமா? என்பதை டிரெஸ்ஸிங் ரூமை நோக்கி ஆலோசனை கேட்டார். கிரிக்கெட் விதிகளின் படி இது பெரிய தவறு என்பதால், இவ்விவகாரம் பெரிதாக வெடித்தது. 
 
இந்நிலையில், இது குறித்து இன்று பேசியுள்ள ஸ்மித் ,” அந்த சூழ்நிலைகளில் உணச்சிவசப்பட்டு சில செயல்களை செய்து விடுகிறேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் 70 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கான காரணம். உமேஷ் யாதவ் சிறப்பான முறையில் பந்து வீசி எங்களை கட்டுப்படுத்திவிட்டார். எங்களைப் பொறுத்தவரை இது மிகவும் கடினமான தருணம், இந்த தொடரை 4-0 என்றச் கணக்கில் இந்தியா வென்றுவிடும் என்பதே அனைவரின் கணிப்பாக இருந்தது. ஆனால், நாங்கள் அவர்களுக்கு கடும் சவால்களை அளித்தோம். இது எங்களுக்கு பெருமையே” என்று கூறியுள்ளார்.
 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/28125558/1076536/Have-let-my-emotions-slip--I-apologise-says-Smith.vpf

Link to comment
Share on other sites

ஜடேஜாவை சரமாரியாக ஸ்லெட்ஜிங் செய்த மேத்யூ வேட், ஸ்மித்

 

 
படம்.| ஏ.பி.
படம்.| ஏ.பி.
 
 

நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் இந்திய வெற்றியில் முடிந்தாலும், இருதரப்பினரும் சரமாரியாக ஒருவரையொருவர் ஸ்லெட்ஜிங் செய்த வகையில் மிக மோசமான தொடராக அமைந்தது.

தரம்சலாவில் ஜடேஜா பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கேப்டன் ஸ்மித் இருவரும் அவரை மாறி மாறி கேலி செய்யும் விதமாக ஸ்லெட்ஜ் செய்தனர்,

அது குறித்த வீடியோ ஒன்றை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் ஸ்டம்ப் மைக்ரோ போனில் இந்த வார்த்தைப் பரிமாற்றம் பதிவாகியுள்ளது.

ஆட்டத்தின் திருப்பு முனை இன்னிங்சை (63) ஆடிய ரவீந்திர ஜடேஜா பேட் செய்யும் போது, மேத்யூ வேட், “இந்தியாவுக்கு வெளியே ஏன் அணியில் நீங்கள் சேர்க்கப்படுவதில்லை? ஏன் அது? ஏன் உன்னை இந்தியாவுக்கு வெளியே அணியில் சேர்ப்பதில்லை?” என்று கேலி பேசினார்.

இதற்கு உடனே ஸ்மித், “கொஞ்ச நாட்களுக்கு இதுதான் இவரது கடைசி டெஸ்ட், இதன் பிறகு இந்தியா அயல்நாடு செல்கிறது” என்று கேலி பதில் அளித்தார்.

மேலும் ஸ்மித், “நீங்கள் இந்தியாவைத் தவிர வேறு எங்கும் விளையாடத் தகுதியற்றவர், ஏனெனில் நீங்கள் மற்ற இடங்களில் பயனற்றவர்” என்று மேலும் சீண்டினர்.

இது குறித்து இன்று பரிசளிப்பு நிகழ்ச்சியில் ஜடேஜா குறிப்பிடும்போது, ‘பின்னாலிலிருந்து வேட் தொடர்ந்து வார்த்தைகளை வீசிக் கொண்டிருந்தார், அது எனது உத்வேகத்தை அதிகரித்தது என்றார்.

முன்னதாக ஆஸ்திரேலிய இன்னிங்ஸ் போது ஜடேஜா, மேத்யூ வேடை நோக்கி கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதாகவும், அதன் அர்த்தம் என்ன என்று வேட் கேட்டதாகவும் ஆஸ்திரேலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஜடேஜாவை-சரமாரியாக-ஸ்லெட்ஜிங்-செய்த-மேத்யூ-வேட்-ஸ்மித்/article9604725.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஐசிசி டெஸ்ட் சாம்பியன் இந்திய அணி: 1 மில்லியன் டாலர்கள் பரிசு பெற்றது

 

 
படம். | வி.வி.கிருஷ்ணன்.
படம். | வி.வி.கிருஷ்ணன்.
 
 

ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் 2-1 என்று வீழ்த்தி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன் அணியாகத் திகழ்கிறது. இதற்கான 1 மில்லியன் டாலர்களுக்கான காசோலை கேப்டன் விராட் கோலியிடம் கவஸகரால் அளிக்கப்பட்டது.

மேலும் நம்பர் 1-ஐ அடையாளப்படுத்தும் தண்டாயுதத்தையும் சுனில் கவாஸ்கர் விராட் கோலிக்கு அளித்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணி ஒரே ஒரு வெற்றி பெற்றாலே நம்பர் 1 இடத்தைத் தக்கவைக்கும் என்ற நிலை இருந்தது, ஆஸ்திரேலியா இந்திய அணியை 3-0 என்று வீழ்த்தியிருந்தால் இந்திய அணி நம்பர் 1 இடத்திலிருந்து இறங்கியிருக்கும், ஆனால் தொடரை இந்தியா 2-1 என்று வென்றது.

2016 அக்டோபரி நியூஸிலாந்தை இந்தூர் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய பிறகு இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.

தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து மோதும் ஹேமில்டன் டெஸ்ட் முடிந்தவுடன் 2வது 3-வது இடங்கள் தீர்மானிக்கப்படவுள்ளது. தென் ஆப்பிரிக்கா டிரா செய்தால் 2-ம் இடம் உறுதியாகும். தோற்றால் ஆஸ்திரேலியா 2-ம் இடத்தில் முடியும்.

2-ம் இடத்தில் முடியும் அணிக்கு 5 லட்சம் டாலர்கள் தொகை பரிசாகக் கிடைக்கும் 3-ம் இடம் பிடிக்கும் அணிக்கு 2 லட்சம் டாலர்கள் பரிசு கிடைக்கும். 4-ம் இடத்தில் உள்ள இங்கிலாந்துக்கு 1 லட்சம் டாலர்கள் கிடைக்கும்.

பரிசைப் பெற்ற கோலி கூறும்போது, “ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடம் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் அணி வீரர்களின் உறுதிக்கு சவால் விடுவதாகும். இந்நிலையில் நாங்கள் உறுதியான அணி என்பதை நிரூபித்தது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி” என்றார் விராட் கோலி.

சுனில் கவாஸ்கரும் இந்திய அணியின் திறமையான வீரர்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/sports/ஐசிசி-டெஸ்ட்-சாம்பியன்-இந்திய-அணி-1-மில்லியன்-டாலர்கள்-பரிசு-பெற்றது/article9604504.ece?homepage=true

 

 

Link to comment
Share on other sites

ராகுல் அரைசதம்; ரஹானே அதிரடியில் ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

 

 
  • பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய அணி. | படம்.| ஏ.பி.
    பார்டர்-கவாஸ்கர் கோப்பையுடன் இந்திய அணி. | படம்.| ஏ.பி.
  • வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்ட ராகுல். | படம். | ராய்ட்டர்ஸ்.
    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உணர்ச்சிவயப்பட்ட ராகுல். | படம். | ராய்ட்டர்ஸ்.
 

தரம்சலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா தன் வசமாக்கியது இந்திய அணி. இந்த சீசனை 4-வது டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இந்திய அணி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

19/0 என்று தொடங்கிய இந்திய அணி முரளி விஜய், புஜாரா விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் (51 நாட் அவுட்), ரஹானே (38 நாட் அவுட்) ஆகியோரின் ஆட்டத்தினால் 106/2 என்று 24-வது ஓவரில் வெற்றியைச் சாதித்தது. ரஹானே அமைதியாக இருந்தார், அரைசதம் கண்ட ராகுல், ஓகீஃப் பந்தை மிட்விக்கெட்டில் பஞ்ச் செய்து வெற்றிக்கான ரன்களை எட்டினார். 7 இன்னிங்ஸ்களில் ராகுல் 6-வது அரைசதம் எடுத்தார். சவாலான பிட்சில் சவாலான பந்து வீச்சில், சவாலான சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு உண்மையில் ஒரு அருமையான டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா.

இந்திய அணியினர் குதூகலத்துடன் மைதானத்திற்குள் வந்து ஆஸி. வீர்ர்களுடன் கைகுலுக்கினர். இந்த உள்நாட்டு சீசனில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-இல் டிரா செய்து ஒன்றில் தோற்றுள்ளது. டாஸ்களை இழந்த பிறகும் வெற்றி பெற்றது இந்திய அணியின் வெற்றியை நோக்கிய லட்சியார்த்தமே காரணம்.

இன்று காலை முதல் ஓவரிலேயே ஹேசில்வுட், விஜய்க்கு ஒரு பெரிய எல்.பி.முறையீடு எழுப்பினார். வெளியே பிட்ச் ஆனதால் அவுட் இல்லை. ரிவியூவும் செய்யவில்லை.இதற்கு அடுத்த பந்தே வெடிப்பில் பட்டு உள்ளே வர விஜய் மட்டை உள்விளிம்பில் பட்டதால் பிழைத்தார், கடந்த பந்தை விடவும் உரத்த எல்.பி.முறையீடாகும் இது, முரளி விஜய் தடுமாற்றத்துடன் தொடங்கினார்.

மறு முனையில் ஓகீஃப் ஒரு பந்தை தாறுமாறாக திருப்ப அது 4 பை ரன்களுக்குச் சென்றது. ராகுலும் தன் முதல் பவுண்டரியை எட்ஜில் எடுத்தார், ஸ்லிப்புக்கு மேல் சென்றது அது. பிறகு அடிக்கும் முனைப்பில் ராகுல், ஓகீஃப் பந்தை ஒரு அருமையான ஸ்கொயர் டிரைவ் மற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்வீப் பவுண்டரிகளை விளாசினார்.

12-வது ஓவரில் கமின்ஸ் வீசிய லெக் திசை எழுச்சிப் பந்து விஜய் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனதை ஆஸி. அணி கவனிக்கவில்லை, முறையீடே செய்யவில்லை, அது அவுட், ஆனால் கேட்கவில்லை. விஜய் தப்பித்தார், விஜய்யின் உத்தியில் நிச்சயம் முன்னேற்றம் தேவை. பிறகு ஹேசில்வுட் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட்டில் பவுண்டரி அடித்தார் ராகுல்.

அடுத்த கமின்ஸ் ஓவரில் எப்போது வேண்டுமானாலும் என் விக்கெட் உனக்குத்தான் என்று ஆடிய முரளி விஜய்க் கமின்ஸ் பந்தை தொட்டு வேடிடம் கேட்ச் கொடுத்தார். 35 பந்துகள் வேதனையான இன்னிங்சில் விஜய் 8 ரன்களில் அவுட் ஆனார்.

அதே ஓவரில் திருப்பு முனை ஏற்பட்டு விடுமோ என்று ரசிகர்கள் அஞ்சும் விதமாக புஜாராவும், ராகுலும் ஒரு சிங்கிளுக்கு நடு பிட்சில் கபடி ஆட ரன்னர் முனையில் மேக்ஸ்வெல் ஸ்டம்பை நேர் த்ரோவில் பெயர்க்க புஜாரா 0-வில் ரன் அவுட்.46/2 என்ற நிலையில் பதற்றம் ஏற்பட கேப்டன் ரஹானே இறங்கினார்.

இறங்கியவுடனேயே ஆக்ரோஷம் காட்டிய ரஹானே, கமின்ஸை மிகவும் நேர்த்தியாக ஒரு நேர் டிரைவ் ஆடி பவுண்டரியும், அடுத்த பந்தே கமின்ஸின் ஷார்ட் பிட்ச் முயற்சியை ஹூக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். மீண்டும் கமின்ஸையே ஃபைன் லெக்கில் பவுண்டரி விளாசினார்.

20-வது ஓவரில் கமின்ஸ் தொடர்ந்து பவுன்சர் வீசும் முயற்சியில் ரஹானேயிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஷார்ட் பிட்ச் பந்தை சச்சின் ஆடும் கோபக்கனல் ஹூக் ஷாட்டில் மிட் விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார் ரஹானே அடுத்த பந்து மீண்டும் உடலை நோக்கி பவுன்சர் வீசுவார் என்பதைக் கணித்த ரஹானே ஒதுங்கிக் கொண்டு கவரில் பிளாட் சிக்ஸ் விளாசினார். ஒன்று சச்சின் பாணி கோபம் மற்றொன்று சேவாக் பாணி விளாசல், இதுதான் ஆக்ரோஷத்தைக் காட்டும் விதம் என்று ரஹானே காட்டினார்.

கடைசியில் ரஹானே 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 38 ரன்கள் என்று நாட் அவுட்டாகத் திகழ ராகுல் 76 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 நாட் அவுட். தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி, பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்டது இந்திய அணி.

மிகவும் சவாலான தொடரில் இந்திய அணி ஒரு போட்டியை இழந்த பிறகு மீண்டு வந்து வென்றுள்ளது, கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மன உறுதியுடன் டிரா செய்தது, ஆனால் இப்போட்டியில் குல்தீப் யாதவ்வின் முதல் நாள் பந்து வீச்சும், இந்திய அணியில் புஜாரா, ராகுல், ரஹானே, ஜடேஜா பேட்டிங்கும், நேற்று ஆஸி.யை அபாரப் பந்து வீச்சில் 137 ரன்களுக்குச் சுருட்டியதும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளையும் ஜடேஜா தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், 127 ரன்கள் அதில் இரண்டு அரைசதங்கள்.

http://tamil.thehindu.com/sports/ராகுல்-அரைசதம்-ரஹானே-அதிரடியில்-ஆஸியை-வீழ்த்தி-தொடரை-கைப்பற்றியது-இந்தியா/article9604215.ece?homepage=true

WR_20170328224547.jpeg

சபாஷ் இந்தியா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டில் வென்ற இந்திய அணி தொடரை கைப்பறியது. இதற்கான பார்டர்- கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி கேப்டன் கோஹ்லி, ரகானேவிடம் வழங்கிய முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இடம்: தர்மசாலா, இமாச்சல பிரதேசம்.

Link to comment
Share on other sites

இலங்கை கால்லே டெஸ்ட் தோல்வி நினைவுக்கு வந்தது, அதனால் அடித்து ஆடினேன்: ரஹானே

 

 
கமின்ஸ் பந்தை சிக்சருக்குத் தூக்கும் ரஹானே. | படம்.| ராய்ட்டர்ஸ்.
கமின்ஸ் பந்தை சிக்சருக்குத் தூக்கும் ரஹானே. | படம்.| ராய்ட்டர்ஸ்.
 
 

106 ரன்கள் போன்ற குறைந்த இலக்கிற்கெல்லாம் 30-40 ரன்களை விரைவு கதியில் எடுக்க வேண்டும் என்று பொறுப்பு கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.

இன்று அவர் களமிறங்கி கமின்ஸ் சவாலை அடித்து நொறுக்கி எதிர்கொண்டார், அதுவும் மிட்விக்கெட்டில் அடித்த சிக்ஸ், பிறகு ஒதுங்கிக் கொண்டு கவரில் அடித்த சிக்ஸ் ஆகியவை கமின்ஸை நிலைகுலையச் செய்தன.

இந்நிலையில் அவர் ஆட்டம் முடிந்த பிறகு கூறியதாவது:

அனைவருக்கும் பாராட்டுக்கள். வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். இந்தத் தொடர் மட்டுமல்ல, இந்த சீசனில அடிய அனைவருமே அபாரமாக ஆடினர். கேப்டனாக மனநிறைவான வெற்றி இது. அனைவருமே சிறப்பாக ஆடியதாகவே கருதுகிறேன்.

முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளையின் போது அவர்கள் ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தோம். ஸ்மித்,வார்னர்தான் ரன் எடுக்கின்றனர் எனவே ஒரு விக்கெட்டைச் சாய்த்து விட்டால் அவர்கள் மீது அழுத்தம் செலுத்த முடியும் என்று கருதினோம்.

குல்தீப் வீசிய அந்த ஸ்பெல் மறக்க முடியாதது. வலைப்பயிற்சிகளில் குல்தீப் யாதவ் அருமையாக வீசினார், அவரிடம் ஒரு இனம்புரியாத பந்து வீச்சுத் தன்மை உள்ளது, அதைப் பயன் படுத்திக் கொள்ள திட்டமிட்டோம்.

குறைந்த ரன்களை இலக்காகக் கொண்ட போட்டிகளில் 30-40 ரன்களை விரைவில் எடுப்பது அவசியம். நாம் கால்லே டெஸ்ட் போட்டியில் தயங்கித் தயங்கி ஆடி தோல்வியில் முடிந்தது நினைவுக்கு வந்தது. அதனால்தான் இன்று அடித்து ஆடுவது என்ற முடிவெடுத்தேன். ஆஸ்திரேலியா அருமையான, சவாலான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது நல்ல பிட்ச், இதில் வேகம், ஸ்பின் இரண்டுமே நன்றாக எடுத்தது, பேட்டிங்கிலும் நாம் ஒழுங்காக நம்மை நிலைநிறுத்தினால் ரன்கள் அடிக்கக் கூடிய பிட்ச்தான்.

இவ்வாறு கூறினார் ரஹானே.

http://tamil.thehindu.com/sports/இலங்கை-கால்லே-டெஸ்ட்-தோல்வி-நினைவுக்கு-வந்தது-அதனால்-அடித்து-ஆடினேன்-ரஹானே/article9604339.ece?homepage=true&ref=tnwn

Link to comment
Share on other sites

விராட் கோலியின் நண்பர்கள் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

 

ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் கிடையாது என விராட் கோலி தெரிவித்த கருத்து தனக்கு ஏமாற்றமளிப்பதாக, அந்நாட்டு பயிற்சியாளர் டேரன் லெக்மான் தெரிவித்துள்ளார்.

 
விராட் கோலியின் நண்பர்கள் கருத்து ஏமாற்றம் அளிக்கிறது: ஆஸ்திரேலிய பயிற்சியாளர்
 
புது டெல்லி:

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பெற்றுள்ளது.

201703291428137526_coach-x._L_styvpf.gif

டெஸ்ட் தொடருக்குப்பின் கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் இனி களத்திற்கு வெளியேயும் நண்பர்கள் கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆஸ்திரேலிய வீரர்கள் தொடர்ச்சியாக சீண்டியதால் கோலி இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிலையில், இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்த கருத்து தனக்கு ஏமாற்றமளிப்பதாக ஆஸ்திரேலிய பயிற்சியாளர் டேரன் லெக்மான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ விராட் கோலியின் கருத்து எனக்கு ஏமாற்றமளிக்கிறது. எனினும் அது அவரது சொந்தக் கருத்து இல்லையா?

இந்திய வீரர் ரகானே கேப்டனாக செயல்பட்ட விதம் எனக்கு திருப்தியளிக்கிறது. அவர் ஒரு சிறந்த வீரர் என நான் கருதுகிறேன்.டெஸ்ட் மேட்சைப் பொறுத்தவரை 100 ரன்கள் நாங்கள் குறைவாக எடுத்து விட்டோம். இது எங்களுக்கு ஏமாற்றம் தான் என்றாலும் வீரர்களின் பங்களிப்பை நினைத்து நான் பெருமை கொள்கிறேன்.

இந்த சுற்றுப்பயணம் மூலமாக வீரர்கள் நிறைய கற்றுக்கொண்டனர். ஆட்டத்தின் முடிவு வீரர்களை காயப்படுத்தி விட்டது ஆனால் அவர்களின் உழைப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/29142812/1076799/Lehmann-disappointed-with-Kohlis-nolongerfriends-comment.vpf

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியர்கள் இனி நண்பர்கள் இல்லை: விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்

ஆஸ்திரேலிய வீரர்கள் இனி நண்பர்கள் இல்லை என்ற விராட் கோலியின் கருத்துக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

 
 
ஆஸ்திரேலியர்கள் இனி நண்பர்கள் இல்லை: விராட் கோலிக்கு முன்னாள் வீரர்கள் கண்டனம்
 
மெல்போர்ன்:

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த 4 டெஸ்ட் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. டி.ஆர்.எஸ். விவகாரம், புத்தி கூர்மையின்மை, அமெரிக்க அதிபர் டிரம்புடன் கோலியை ஒப்பிட்டது, முரளி விஜய்யை சுமித் வசைபாடியது, கோலியின் காயத்தை மேக்ஸ்வெல் நையாண்டி செய்தல் உள்பட பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்தன.

இந்த தொடர் முடிந்த பிறகு பேட்டி அளித்த விராட் கோலி, “ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு மீட்க முடியாத அளவுக்கு இந்த தொடரில் சேதம் அடைந்து விட்டது. இனி அவர்கள் நண்பர்கள் இல்லை” என்று தெரிவித்தார்.

விராட் கோலியின் இந்த கருத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

201703301046460774_lbfrn6v7._L_styvpf.gi

மார்க் டெய்லர் (ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்):- கிரிக்கெட் வீரர்கள் ஒன்றிணைந்து நீண்ட நாட்கள் ஆடுவார்கள். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுக்கு எதிராக விளையாடுவார்கள். அப்போது மிகவும் கவனமாக இருப்பது முக்கியம்.

ஆஸ்திரேலியர்கள் இனி நண்பர்கள் இல்லை என்று விராட் கோலி கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. இது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. காழ்ப்புணர்ச்சியை மனதில் வைத்துக் கொள்ளக்கூடாது.

என்னை பொறுத்தவரை நான் எப்போதும் போட்டி முடிந்த பிறகு எதிர் அணியுடன் சுமூகமான உறவை தான் வைத்துள்ளேன்.

டீன் ஜோன்ஸ் (ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்):- கிரிக்கெட் ஒரு மிக சிறந்த விளையாட்டு. வெற்றியையோ, தோல்வியையோ பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. விராட் கோலி இதை கற்றுக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட் விளையாடுவதே எல்லோரும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்பதற்குதான் என்பதை கோலி புரிந்து கொள்ள வேண்டும்.

டேவிட் லாயிட் (இங்கிலாந்து முன்னாள் வீரர்):- ஆடுகளத்துக்கு வெளியே எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தெண்டுல்கரிடம் இருந்து விராட் கோலி பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

லீமேன் (ஆஸ்திரேலிய பயிற்சியாளர்):- விராட் கோலியின் கருத்து மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அது அவரது கருத்து இல்லையா? ஒட்டு மொத்த இந்திய அணியின் கருத்தாக இது இருக்கும் என்று கருதவில்லை. தரம்சாலா டெஸ்டில் ரகானே கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/30104645/1076946/Australians-have-no-friends-Virat-Kohli-slams-former.vpf

Link to comment
Share on other sites

‘உலக மன்னிப்பு தினம்’: கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஹாட்ஜ் குறித்து அஸ்வின் கருத்து

 

விராட் கோலியின் காயம் குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் பிராட் ஹாட்ஜ் விமர்சனம் செய்து பின்னர் மன்னிப்பு கேட்டுள்ள நிலையில், இதனை ‘உலக மன்னிப்பு தினம்’ என அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

 
 
 
 
‘உலக மன்னிப்பு தினம்’: கோலியிடம் மன்னிப்பு கேட்ட ஹாட்ஜ் குறித்து அஸ்வின் கருத்து
 
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோலி விளையாடவில்லை. ராஞ்சியில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின்போது விராட் கோலியின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அந்த காயம் 100 சதவீதம் குணமடையவில்லை என்பதால் தரம்சாலாவில் விளையாடவில்லை.

தொடர் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என்னுடைய காயம் 100 சதவீதம் குணமடைய சில வாரங்கள் ஆகும் என்று விராட் கோலி கூறியிருந்தார்.

இந்நிலையில் ‘‘விராட் கோலி தரம்சாலா டெஸ்டில் விளையாடாததற்கு அடுத்த மாதம் தொடங்கும் ஐ.பி.எல். தொடரே காரணம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக காயம் காரணமாக ஆடவில்லை எனும்போது, ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐபிஎல் முதல் போட்டியில் (இன்னும் 2 வாரங்களில்) அவர் ஆடினால் அது அசிங்கமானது’’ என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்ஜ் கூறியிருந்தார்.

இதற்கு கடும் விமர்சனம் எழுந்த நிலையில், ஹாட்ஜ் தனது கருத்திற்கு இந்திய மக்கள், ரசிகர்கள், இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் குறிப்பாக விராட் கோலியிடம் மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ‘‘யாரையும் காயப்படுத்துவதோ, விமர்சிப்பதோ அல்லது தரக்குறைவாக பேசுவதோ தனது எண்ணம் இல்லை’’ என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

201703301650384348_3-ashwin1-s._L_styvpf

இதையடுத்து இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டுவிட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில் ‘‘நகைச்சுவையாக சொல்ல வேண்டுமென்றால், இந்த வருடத்தில் இருந்து மார்ச் 30-ந்தேதி ‘உலக மன்னிப்பு தினம்’ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். தொடரில், குஜராத் லயன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ஹாட்ஜ் இணைய உள்ளது குறிப்படத்தக்கது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/30165037/1077068/Ashwin-on-Hodge-Tweet-March-30-Will-be-Remembered.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.