Sign in to follow this  
Followers 0
nunavilan

அம்மா சமாதி

6 posts in this topic

அம்மா சமாதி

ன்னீர் வடிக்கும்
கண்ணீரில்
அம்மா சமாதியே
அரை அடி உயரும்.

opsசசி துடைக்கும்
கைக்குட்டையில்
காவிரி டெல்டா
ஒருபோகம் விளையும்.

அம்மாவை நினைத்தாலே
அழத்தான் முடியும்.
அவர்களுக்கோ,
அழுகை
சிரிப்பின் முக்காடு
சிரிப்பு
அழுகையின் வேக்காடு.

அழுகைப் போட்டியில்
யாருக்கு முதல் பரிசு?.
தடுமாறுது தமிழகம்
அழுகாச்சி காவியத்தில்
அமுக்கி எடுக்குது ஊடகம்.

சிரித்ததனால்
நான் மனிதன் என்பது
பன்னீரு
சிரித்ததனாலேயே
நீ மனிதனில்லை
என்பது வெந்நீரு.

நீ
பெரிய  குளமென்றால்
நான்
மன்னார் குடி!

அம்மாவுக்கே
நான்தான் ஆன்மா
அடைக்கலம் தருமோ
அம்மா ஆன்மா?
மெரினா தியானத்தை
கலைக்கும்  சின்னம்மா!

பேயைப்  பற்றி
அதன் பாட்டியிடம்
புகார் சொல்வது போன்றது
சின்னம்மாவைப் பற்றி
பெரியம்மாவிடம்
முறையிடுவது.

sasikalaமுதலில்,
எனக்கு எதிரே
உட்காரும் தைரியம்
உங்களுக்கு எப்படி வந்தது?
கடைக்கண் பார்வைக்கு
கிடையாசனத்திலேயே கிடந்தவர்
அரியாசனத்திற்காக
பத்மாசனமா?
கோபத்தில் குமுறுது
அம்மாவின் ஆவி!

பேய்களை சமாளிக்க
ஒரே வழி
பேயாகி விடுவதுதான்.
பேய்களுக்கு கால்களில்லை
நிமிர்ந்து நிற்க முடியாது
நேரத்திற்கேற்ப நெளியலாம்.
இடம் தாவி அலைகின்றன
கரைவேட்டி ஆவிகள்.

பிணைக்கைதிகளோடு
ஊரையே சுற்றுது
மன்னார்குடி பஸ்.
அம்மாவைச் சுற்றிவந்து
பழத்தைக் கேட்கிறார்
ஒ.பி.‍எஸ்.

நாம்
வாழ்வுக்கு வழி தேடுகிறோம்
அவர்களோ
சமாதி தேடுகிறார்கள்.

செத்தாலும் விடமாட்டார்
ஜெயலலிதா!
எச்சரிக்கைத் தமிழகமே
ஏய்ப்பவருக்கு
அம்மா சமாதி
ஏமாந்தவனுக்கு
அடுத்த சமாதி!

 துரை. சண்முகம்

http://www.vinavu.com/2017/02/10/ops-and-sasikala-played-drama-at-jaya-memorial/

1 person likes this

Share this post


Link to post
Share on other sites

கங்கையை வென்றவன்,
கடாரம் பிளந்தவன்..!
...,
பிடாரித் தெய்வத்துக்கு....,
கிடாய் வெட்டி வேள்வி செய்தவன்...!

உலகெல்லாம் ,
உன் பெருமை பேசுகிறாய்!

ஒரு கோப்பை பிளேன் டீயும்,
ஒரு சுருட்டும் போதும்,
உன்னை வாங்க...!

சொன்னவன் வேறு யாருமல்ல..!
நம் ஊரவன் தான்..!

மகா ராணியின் கவுன்சிலர்கள்,
மண் கவ்விய வரலாறு!

அது மட்டுமா?
இணுவில் திருவிழா பார்த்தேன்!
இரத்தம் கொதித்தது..!
ஏனெனில்..,
கோவிலடியில் குடியிருந்தவன் நான்!

கேரளத்தின் கொட்டுக்கு..,
நீ தாளம் போடுகிறாய்!

சிங்களத்தின் மேளத்துக்கு மட்டும்,
பொங்கி எழுகிறாயே?
ஏன்..?

அதுவும் கலாச்சாரத்தின்..,
பரி மாற்றம் தானே!

அனுமானுக்குச் சிலை எடுக்கிறாயே!
அவன் யார்?
உன்னை அழித்தவனின் தூதுவன் அல்லவா?

சரி... அதை விடுவோம்!

ஒரு கோப்பைத் தேனீர்,..
இன்று ஒரு கோடி ரூபாயாகி,
ஒரு எம்.எல்.யின் விலையாக உள்ளது!

தமிழா...!
நீ வெட்கமில்லாதவன்!

இருந்திருந்தால்,
கோப்பா புலவின் கண்ணீரில்,
நீயும் கரைந்திருப்பாய்!

மதுரையை எரித்திருப்பாய்!

வேஷங்கள்...!
உனக்கு விலை பேசுகின்றன!

நீயும் விலை போகின்றாய்!
இது தானே உனது வரலாறு?

அரிவரிக் காலத்தில்..,,
ஆசிரியர் ஒருவர்....!

எனது 'ரிப்போர்ட்' புத்தகத்தில்..,
எப்போதும் எழுதுவது...,
'இன்னும் திருந்த இடமுண்டு" !

Edited by புங்கையூரன்
லகர,ளகர,ழகர பிரச்சனை
5 people like this

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, புங்கையூரன் said:

கங்கையை வென்றவன்,
கடாரம் பிளந்தவன்..!
...,
பிடாரித் தெய்வத்துக்கு....,
கிடாய் வெட்டி வேள்வி செய்தவன்...!

உலகெல்லாம் ,
உன் பெருமை பேசுகிறாய்!

ஒரு கோப்பை பிளேன் டீயும்,
ஒரு சுருட்டும் போதும்,
உன்னை வாங்க...!

சொன்னவன் வேறு யாருமல்ல..!
நம் ஊரவன் தான்..!

மகா ராணியின் கவுன்சிலர்கள்,
மண் கவ்விய வரலாறு!

அது மட்டுமா?
இணுவில் திருவிழா பார்த்தேன்!
இரத்தம் கொதித்தது..!
ஏனெனில்..,
கோவிலடியில் குடியிருந்தவன் நான்!

கேரளத்தின் கொட்டுக்கு..,
நீ தாளம் போடுகிறாய்!

சிங்களத்தின் மேளத்துக்கு மட்டும்,
பொங்கி எழுகிறாயே?
ஏன்..?

அதுவும் கலாச்சாரத்தின்..,
பரி மாற்றம் தானே!

அனுமானுக்குச் சிலை எடுக்கிறாயே!
அவன் யார்?
உன்னை அழித்தவனின் தூதுவன் அல்லவா?

சரி... அதை விடுவோம்!

ஒரு கோப்பைத் தேனீர்,..
இன்று ஒரு கோடி ரூபாயாகி,
ஒரு எம்.எல்.யின் விலையாக உள்ளது!

தமிழா...!
நீ வெட்கமில்லாதவன்!

இருந்திருந்தால்,
கோப்பா புலவின் கண்ணீரில்,
நீயும் கரைந்திருப்பாய்!

மதுரையை எரித்திருப்பாய்!

வேஷங்கள்...!
உனக்கு விலை பேசுகின்றன!

நீயும் விலை போகின்றாய்!
இது தானே உனது வரலாறு?

அரிவரிக் காலத்தில்..,,
ஆசிரியர் ஒருவர்....!

எனது 'ரிப்போர்ட்' புத்தகத்தில்..,
எப்போதும் எழுதுவது...,
'இன்னும் திருந்த இடமுண்டு" !

மிக நீண்ட காலத்தின் பின்.... அருமையான கவிதை ஒன்றை எடுத்தியிருக்கின்றீர்கள் புங்கையூரான். :)

 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
21 hours ago, தமிழ் சிறி said:

மிக நீண்ட காலத்தின் பின்.... அருமையான கவிதை ஒன்றை எடுத்தியிருக்கின்றீர்கள் புங்கையூரான். :)

 

நன்றி.... தமிழ் சிறி அண்ணா!:mellow:

உங்கள் ஊக்குவித்தலை வாசிக்கும் போது..ஒரு அழகிய 'அப்சரஸ்' முதுகில் தடவுவது மாதிரி இருக்கும்!:112_lips:

யாழில் கொஞ்சம் முன்போல எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்! 

3 people like this

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, புங்கையூரன் said:

நன்றி.... தமிழ் சிறி அண்ணா!:mellow:

உங்கள் ஊக்குவித்தலை வாசிக்கும் போது..ஒரு அழகிய 'அப்சரஸ்' முதுகில் தடவுவது மாதிரி இருக்கும்!:112_lips:

யாழில் கொஞ்சம் முன்போல எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்! 

புங்கையூரான்..... நீங்கள் யாழில் தொடர்ந்து கவிதை எழுத, முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சியான விடயம்.
உங்கள் கவிதைகள்... யதார்த்தமான பல விடயங்களையும், தொட்டுச்  செல்லும் என்பதால்...
அதனை ஒரு முறை அல்ல, பல முறை வாசித்து, ரசிப்போம்.  :)

Share this post


Link to post
Share on other sites

புங்கையூரான் ..... மீண்டும் உங்கள் ஆக்கங்களைக் காணும் ஆவலுடன்........ 

1 person likes this

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0