Recommended Posts

10 செகண்ட் கதைகள்

ஓவியங்கள்: ஸ்யாம்

 

p92k1.jpg

குறி

p92a.jpg

``பேருந்து எப்போ வரும்?'' எனக் கேட்டார், கிராமத்தில்  குறி சொல்லும் பூசாரி.

- அபிசேக் மியாவ்  


முன்னேற்றம்

p92b.jpg

ஸ்கூட்டர் ஓட்டத் திணறும் அப்பா, கார் ஓட்டப் பழகினார் செல்போன் கேமில்.

- கோ.பகவான்


சத்துணவு

p92c.jpg

வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டுவந்திருந்தார் சத்துணவு ஆயா.

- சி.சாமிநாதன்


ஒற்றுமை

p92d.jpg

``வழிகாட்ட ஒரு தலைவனே இல்லாம, எப்படி உங்களுக்குள்ள போராட்டம் நடத்துற ஒற்றுமை வந்தது?'' என ஆச்சர்யமானார் சுதந்திரப் போராட்டத் தியாகி.

- பெ.பாண்டியன்


ஏமாற்றம்

p92e.jpg

``ஏ.டி.எம்-ல ஒரு பேய் சார்'' என இயக்குநர் சொன்னதும், ``ஏமாந்துபோயிருக்குமே!'' என்றார் புரொடியூஸர்.

- கோ.பகவான்


புலம்பல்

p92f.jpg

``இந்த ஆபீஸ்ல எவனாவது வேலைசெய்வானா சார்..?'' எனப் புலம்பிக்கொண்டே, ஓய்வுபெறும் வரை அதே அலுவலகத்தில் இருந்தார் ராம்கி.

- கே.சதீஷ்


காலண்டர்

p92g.jpg

ஏழைகள் வீட்டில், வருடாவருடம் தொங்குகிறது அடகுக் கடை காலண்டர்.

- கட்டுமாவடி கவி கண்மணி


தள்ளிச் சென்ற மரணம்

p92h.jpg

சிறையில் தற்கொலைக்கு முயன்ற மரண தண்டனைக் கைதி, காப்பாற்றப்பட்டார்.

- கோ.பகவான்


முதல் வேலை

p92i.jpg

ஆபீஸுக்கு வந்ததும் முதல் வேலையாக வைஃபையை ஆன்செய்து வாட்ஸ்அப்பில் வந்த மெசேஜைப் படித்துக்கொண்டிருந்தாள் கார்த்திகா.

-  கிருஷ்ணகுமார்


புலம்பல்

p92j.jpg

``பேயை காமெடியா காட்டி, என் பொழப்பைக் கெடுத்துட்டாங்களே!'' எனப் புலம்பிக் கொண்டிருந்தார், பேய் ஓட்டும் பூசாரி.

- பர்வீன் யூனுஸ்

http://www.vikatan.com/

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
       ஓவியங்கள்: செந்தில்
    

   மன்னிப்பு

   நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்!

   - கிருஷ்ணகுமார்

    
   புகார்

   “நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.

   - விகடபாரதி

   ஹவுஸ்மேட்ஸ்

   ``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’

   - ரியாஸ் 

   முதலும் முடிவும்

   “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான்.

   - விகடபாரதி

   என்னாச்சு?

   பைக்கில் அடிபட்டு இரண்டு நாள்களாக மயக்கத்தில் இருந்தவன், கண் விழித்தவுடன் கேட்ட கேள்வி “ஓவியாக்கு என்னாச்சு?”

   - A. சண்முக ராஜன்

   சம்பவம்

   “சின்ன ஆபரேஷன்தான். பயப்படாதீங்க...” டாக்டர் ஆறுதல் சொன்னார், கூலிப்படைத் தலைவனுக்கு!

   - பெ.பாண்டியன்

   காலிங் ராகுல்

   மாமா, சித்தி, அத்தை, அண்ணன், அண்ணி, சித்தப்பா, பெரியப்பா எல்லாருக்கும் போன் பண்ணிச் சொன்னான் ராகுல், லைக்ஸ் போடச் சொல்லி...

   - விகடபாரதி

   உத்தரவு

   ‘`பிக்பாஸ் முடியறதுக்குள்ள எல்லா போராளிகளையும் கைது பண்ணி உள்ளே வெச்சுப் பின்னியெடுங்க’’ என்று உத்தரவிட்டார் அமைச்சர்!

   - கே.சதீஷ்

   ஏற்பு

   வருங்கால மாமனார், ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்ததுமே நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தான் வினோத்!

   - கே.மணிகண்டன்

   அடி

   வீட்டில் குழந்தையைப் போட்டு சாத்தினாள், நல்ல மிஸ் என்று பெயரெடுத்த ஆசிரியை!

   - சி.சாமிநாதன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   நெருக்கடி

   நடந்துபோனால், அரைமணி நேரத்துக்குள் போய்விடும் அலுவலகத்துக்கு ஒரு மணி நேரம் ஊர்ந்தபடியே காரில் போனான் ராகுல்!

   - கே.சதீஷ்

   புரிதல்

   ``ஹாய் டாட்!’’ என்ற வாட்ஸ் அப் மெசேஜ் பார்த்து மகளுக்கு `டாப் அப்’ செய்தார் அப்பா!

   - கி.ரவிக்குமார்

   சுறுசுறுப்பு

   “ஹோம் ஒர்க் எழுத முடியல...தூக்கம் வருதும்மா...” என்றவனிடம், மொபைலை நீட்டியதும் எழுந்து உட்கார்ந்தான்!

   - சி.சாமிநாதன்

   பிரார்த்தனை

   படம் பார்த்துக்கொண்டிருக்கையில் பேயின் ஆசை நிறைவேற கடவுளை பிரார்த்தித்தது குழந்தை!

   - பெ.பாண்டியன்

   தனிமை

   ஆயிரமாவது ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்துவிட்டு, ஃபீலிங் லோன்லி என்று ஸ்டேட்டஸ் போட்டான் தருண்!

   - வி.சகிதாமுருகன்

   அவசரம்

   6 மணி, 6.30, 7, 8 மணி என வேலைக்குப் போகும்வரை அலாரம்களை அலறவிட்டபடியே இயங்கிக்கொண்டிருந்தான் ராகவன்!

   - செல்வி

   வெய்ட்டிங்

   ``காபி போட்டுட்டு வர்றேன். ஆல்பம் பாருங்க’’

   "வேண்டாம். வை-ஃபை ஆன் பண்ணிட்டுப் போங்க!’’

   - ரியாஸ்

   உயிர்

   ``எங்க அப்பா செத்துருவார்னுதான் நினைச்சேன்... ஆனால் பொழைச்சுட்டாருடா’’ மருத்துவமனை வாசலில் சந்தோஷ செய்தி சொல்லிக்கொண்டிருந்தான் விக்னேஷ்!

   - கே.மணிகண்டன்

   மருத்துவம்

   ``ஒண்ணும் பிரச்னையில்லை... இது சாதாரண தலைவலிதான்’’ என மூன்று வேளைகளுக்கான மாத்திரை கொடுத்தார் மருந்துக்கடைக்காரர்!

   - கே.மணிகண்டன்

   பந்தி

   பந்திக்குச் சாப்பாடு குறைவாக இருக்கிறதென்றதும், பிளாஸ்டிக் அரிசி பரிமாறப்படுவதாகப் புரளி கிளப்பினார் கேட்டரிங் மேனேஜர்!

   - ராஜேஷ்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   பேச்சு

   ``வாட்ஸ்அப்ல அப்படி என்னதான் பேசிப்பீங்க” என்ற அம்மாவிடம், ``ஒன்லி வீடியோதாம்மா” என்றாள் பொன்னி.

   - கே.சதீஷ்

   இங்கிதம்

   சுமாரான புடவை, சிம்பிளான அலங்காரத்துடன் கிளம்பினாள், வேலைக்கார அம்மாவின் வீட்டு விசேஷத்துக்கு.

   - ராம்ஆதிநாராயணன்

    
   சிரிப்பு

   முதல்வரைப் பார்த்து, 32 எம்.எல்.ஏக்களும் தெரிய சிரித்தார் தலைவர்.

   - கிணத்துக்கடவு ரவி

   சமையல்

    ``சாப்பாடு பிரமாதமா இருக்கு. சமைச்சவருக்குக் கை குடுக்கணும். மாஸ்டர் எங்கே இருக்காரு..?’’என்ற கஸ்டமரிடம்,

   ``வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்காரு சார்..’’ என்றார் சர்வர்!

   - சி.சாமிநாதன்

   பில்டப்

   ``கார் பார்க்கிங், மூணு பெட்ரூம், ஒப்பன் டெரஸ்...’’

   ஆறு மாதங்களாக விற்காத ஃப்ளாட்டைக் காட்டிப் பேரம் பேசிக்கொண்டிருந்தார் புது பில்டர்!

   - கே.மணிகண்டன்

   பிஸி

   ஒரு லைக் கூட போட முடியாத அளவுக்கு பிஸியா என கணவனிடம் அலுத்துக்கொண்டாள் புது மனைவி!

   - கே.சதீஷ்

   சிகிச்சை

   இன்னன்ன நோய்க்கு இந்தந்த மருந்து சாப்பிட வேண்டும் என்று பக்கத்திலிருப்பவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் நோயாளி!

   - சி.சாமிநாதன்

   செல்ஃபி

   ``ஃபங்ஷன் முடிஞ்சதும் இருந்து செல்ஃபி எடுத்துட்டுத்தான் போகணும்’’ என்றான் நண்பன்.

   - பவான்ராஜ்

   உறக்கம்

    `12 மணி ஆச்சு... போனை ஆஃப் பண்ணிட்டுத் தூங்குடா’ என்று மகனுக்கு வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பினான் மனோ! 

   - ரியாஸ்

   போர்

   பள்ளிகள் திறந்ததும் போருக்குத் தயாராகினர் பெற்றோர்!

   - கே.மணிகண்டன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   கண்காணிப்பு

   “ஸ்கூல்ல பசங்க யாரும் செல்போன் கொண்டுவர்றாங்களா?” என வாத்தியாரிடம் வாட்ஸ்அப்பில் கேட்டார் ஹெச்.எம்!

   - பெ.பாண்டியன்

   கலைப்பு

   “இரண்டு நாள்ல கலைக்கப் போறாங்களாம் ஐயா...”

    பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் ஆளுங்கட்சி MLA, தோட்டக்காரன் காட்டிய குருவிக் கூட்டை.

   - கல்லிடை வெங்கட்

    விதி

   விதியை மீறி கட்டிய கட்டடத்தால் விதியை ஒன்றும் செய்ய முடியவில்லை.

   - நந்த குமார்

   வெள்ளைப்பூக்கள்

   சண்டை போட்டுக்கொண்டே குடும்ப அமைதிக்காகக் கோயிலுக்குப் புறப்பட்டனர்  கணவனும் மனைவியும்!

   - கே.சதீஷ்

   நிறைவு

    “வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த மகிழ்ச்சியில் முதியோர் இல்லத்தில் காலத்தைக் கடத்தினார் கார்த்திக்.’’

   - சீர்காழி.ஆர்.சீதாராமன்

   தவிப்பு

   “யார், யாருக்கோ லைக்ஸ் போடறார். எனக்கு லைக்ஸ் போட மாட்டேங்கறார். பிரியமில்லாத கணவர்கூட எப்படி வாழ்றது?’’ என அம்மாவிடம் அழுதாள் ஆர்த்தி!

   - பெ.பாண்டியன்

   வறட்சி

   பாலம் கட்டித் தரச் சொல்லி போராடிய ஆற்றில், தார்ச்சாலை போட்டுக் கொண்டனர் மக்கள்.

   - கி.ரவிக்குமார்

   கல்வி

   15 நாளில் கார் ஓட்டக்கற்றுக்கொண்டு, 10 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கி டாக்ஸி டிரைவரானர் 45 வயதான ஆறுமுகம்!

   - கே.மணிகண்டன்

   தையல்

   நகரின் பெரிய ஜவுளிக் கடையில் மகனுக்கு ஜீன்ஸும், டி-சர்ட்டும் வாங்கிக் கொடுத்தார் டெய்லர் மாடசாமி.

   - கல்லிடை வெங்கட்.

   பழையது

   முதலாளியின் மகன் ஆதித்யாவின் பிறந்த நாளுக்குப் பரிசாக புது டிரெஸ் வாங்கிக் கொடுத்த வேலைக்காரியின் மகனுக்கு, ஆதித்யாவின் பழைய துணிகளைக் கொடுத்து அனுப்பினாள் முதலாளியம்மா.

    - கல்லிடை வெங்கட்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: செந்தில்
    

   சம்மர்

   ``சம்மரில் உங்கள் குழந்தைகளுக்கு டிராயிங்.. ஹேண்ட் ரைட்டிங்...அபாகஸ் எனக் கற்றுத் தருகிறோம், வாருங்கள்..'' என்ற விளம்பரத்தில் நடித்து முடித்த ஹீரோ, மனைவி குழந்தைகளுடன் புறப்பட்டார், சுற்றுலாவுக்கு!

   - சி.சாமிநாதன்

   கண்டிஷன்

   `மணமகன் தேவை' விளம்பரத்தில் ஃபேஸ்புக் அக்கவுன்ட் இருக்கக் கூடாது என்ற கண்டிஷனையும் சேர்த்தாள்.

   - ரேகா ராகவன்

   உதவி

   ``உதவிக்கு நர்ஸ் இருக்காங்க. பயப்படாதீங்க ...''

   என பைபாஸ் சர்ஜரி செய்துகொண்ட அப்பாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, வேலைக்குக் கிளம்பினான் மகன்!

   பெ.பாண்டியன்

   பார்வை

   ``தப்பு செஞ்சா மேலே இருந்து ஒருத்தன் பார்ப்பான்!" என்றதும், "கேமிராவாப்பா?" என்றது குழந்தை.

   - கி.ரவிக்குமார்

   எலிமினேட்

   ``எலிமினேட் பண்ணும்போதும் அழமா, சிரிச்சிக்கிட்டே பேட்டி கொடுக்கிறாங்களே... இதுதான் ஐ.பி.எல். கிரிக்கெட்டாப்பா?'' என்றாள் திவ்யா அப்பாவிடம்!

   -கே.சதீஷ்

   முத்தம்

   அந்தக் காதல் ஜோடி நிரந்தரமாகப் பிரியும் தருணம்...

   கடைசியாக ஒருமுறை வாட்ஸ்அப் ஸ்மைலி மூலம் முத்தம்கொடுத்துக்கொண்டனர்!

   - ஃபெரோஸ்கான்

   ஜாக்கிரதை

   "சண்டை போடாம இருங்க" என ஊருக்குப் போகும் முன் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் போனது குழந்தை.

   -கோ. பகவான்

   பயம்

   மனைவி அடிக்க வந்ததும் பயந்து நடுங்கினார் ஸ்டன்ட் மாஸ்டர்.

   -அபிசேக் மியாவ்.

   நட்பு

   ``ஃபேஸ்புக்ல ஏன் என்னை அன்ஃப்ரெண்ட் பண்ணிட்ட?" எனக் கேட்டதும், ``நேத்து கடன் கேட்டேனே கொடுத்தியா?'' என்றான் நண்பன்.

    -பவான்ராஜ்
    

   கடவுள்

   இறந்துபோன தன் அப்பாவின் போட்டோவைப் பார்த்து கடவுள் படத்தை வரைந்துகொண்டிருந்தாள்  ரம்யா!

   - கே.மணிகண்டன்

   ஷுகர்
   ``போர் அடிக்குது. அப்படியே வெளிய போய் ஷுகர் டெஸ்ட் பண்ணிட்டு மாத்திரை வாங்கிட்டு வரலாமா?'' என்றார் சுந்தரம், மனைவியிடம்!

   - ரியாஸ்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
    
    

   பயம்

   திருடிய சிசிடிவி கேமராவை, தன் சொந்த வீட்டில் மாட்டினான் திருடன்.

   - வேம்பார் மு.க.இப்ராஹிம்

   விளக்கம்

   'புரளின்னா என்ன?' என்று கேட்ட பேரனுக்கு, 'வாட்ஸ்அப் மெசேஜ்' என்றார் தாத்தா.

   - வேம்பார் மு.க.இப்ராஹிம்

   திட்டம்

   கடும் பண நெருக்கடிக்கு ஆளான ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏ., `அரசுக்கு எதிராக அறிக்கை விடலாமா?' என்று யோசித்துக்கொண்டு இருந்தார்.

   - ரா.ராஜேஷ்

   ஷவர்

   `எவ்வளவு பெரிய ஷவர்' என்றது, மழையில் நனைந்த குழந்தை.

   - சங்கரி வெங்கட்

   வேலை

   `இங்கே, டாஸ்மாக்கை எல்லாம் அடிச்சு மூடுறாங்க, அங்கேயே வேலை தேடிக்கோ' என்று நண்பனுக்குத் தகவல் கொடுத்தான் பீகாரி.

   - கி.ரவிக்குமார்

   சொந்தம்

   ஒரே அலுவலகத்தில் பணியாற்றிய திவ்யாவும் கீதாவும் தூரத்துச் சொந்தம் எனத் தெரிந்ததும், நட்பைத் துண்டித்துக்கொண்டார்கள்.

   - கே.சதீஷ்

   கடமை

   சேஸிங் செய்து துரத்திப் பிடித்தது போலீஸ், கமிஷன் தராத மணல் லாரியை..!

   - ராஜி ராம்

   மாற்றம்

   ``இது நீலகண்டன் வீடுதானே?''

   ``இல்லைங்க. இப்ப இது மணிகண்டன் வீடு'' என்றார் வாடகைக்குக் குடியிருந்தவர்.

   - பெ.பாண்டியன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: ஸ்யாம்
    
   ட்ரீட்மெண்ட்

   ``கண் வலின்னு பையன் அழுறான்...'' என்றவரிடம்,

   ``காலைல 50MB, மதியம் 50MB, நைட்டு 50MB மட்டும் மொபைல பார்க்கச் சொல்லுங்க... சரியாயிடும்'' என்றார், டாக்டர்.

   - சி.சாமிநாதன்

   லாஸ்ட் ஸீன்

   ``கடைசியா எப்ப பார்த்தீங்க?'' என விசாரித்த போலீஸ்காரரிடம் வாட்ஸ்அப் லாஸ்ட் ஸீனைக் காட்டினார் பக்கத்து வீட்டுக்காரர்.

   - கிருஷ்ணகுமார்

   காதல்

   ``நம்ம பொண்ணு லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னு எப்படி சொல்ற!''

   ``நேத்து சேலை கட்டிப் பார்த்தாள்!''

   - கி.ரவிக்குமார்

   கதை

   ``சும்மாச் சும்மா கதை கேட்டு நச்சரிக்கக் கூடாது. பாட்டியை சீரியல் பார்க்கவிடு...'' என்றாள் அம்மா!

   - பெ.பாண்டியன்

   என் ஆளு

   அவள் என் ஆளு என்பதில் ஆரம்பித்து நீங்க என்ன `ஆளு?' என்பதில் முடித்துவைக்கப்பட்டது கதிர்-மீராவின் காதல். 

   - அபி

   கோபம்

   குடிகாரக் கணவனிடம் அடிவாங்கும் மனைவிகள் திருப்பி அடிக்கின்றனர் டாஸ்மாக் கடைகளை!

   - பழ.அசோக்குமார்

   அவசரம்

   ``வேலைக்கு மத்தில போன் எடுத்து பேசினா உசிரா போயிடும்?''

   - 108 ஆம்புலன்ஸ் டிரைவரிடம் கத்தினாள் மனைவி.

    - நந்த குமார்

   குடிநீர்

   ``குடிநீருக்காகச் சாலை மறியல் பண்ணிய பொதுமக்களிடம் மறியலை கைவிடுங்கள்... உடனே தண்ணீர் வண்டி அனுப்புறேன் குடம் பத்து ரூபாய்தான்'' என்றார் தலைவர்!

   - வேம்பார் மு.க.இப்ராஹிம்

   உறுதி செய்தல்

   `ஓவர் மேக்கப்' என்று நண்பிகள் சொன்னதை நம்பாமல் ஒரு செல்ஃபி எடுத்துப்பார்த்துக்கொண்டாள் நர்மதா.

   - விகடபாரதி

   நடிப்பு

   டிவியில் பார்க்கும்போதுதான், `இன்னும் கொஞ்சம் நல்லா அழுதிருக்கலாம்' எனத் தோன்றியது, சீரியல் நடிகை சுமத்ராவுக்கு!

   - சி.சாமிநாதன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: ஸ்யாம்
    

   கடன்

   ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை.
   - நந்தகுமார்

   மனசு

   'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ.

   - வி.வெற்றிச்செல்வி

   தீர்ப்பு

   நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!”

   - விகடபாரதி

   புரிதல்

   கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை.

   - வேம்பார் மு.க.இப்ராஹிம்

   பேய்

   ``எங்க வீட்டுல குட்டிப் பிசாசு ஒண்ணு இருக்கு'' என நான் சொன்னதும், ``அது காமெடி பண்ணுமா?'' எனக் கேட்டது எதிர்வீட்டுக் குழந்தை.

   - பெ.பாண்டியன்

   அடி

   அம்மாவிடம் அடிவாங்கிய குழந்தை அழுதபடியே பொம்மையை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தது.

   - வெ.ராம்குமார்

   பதற்றம்

   விபத்தை செல்போனில் வீடியோ படம் எடுத்தவன் பதறினான், சார்ஜ் குறைந்ததும்.

   - பெ.பாண்டியன்

   ஆர்டர்

   ``ஆன்லைன் புக்கிங் வந்து, எங்க பொழப்பைக் கெடுக்குது'' எனப் புலம்பிக்கொண்டே பத்து செல்போன்களை ஆன்லைனில் ஆர்டர் செய்தார் செல்போன் கடைக்காரர்.

   - கிருஷ்ணகுமார்

   சத்தியம்

   ``நாம எடுத்த செல்ஃபி மேல சத்தியம் பண்ணி சொல்லு, நீ என்னை லவ் பண்ணலைனு!'' என்றான் அருண், கவிதாவிடம்.

   - சி.சாமிநாதன்

   டெக்னாலஜி

   பேரன் ஐபிஎல் பார்க்க ஆரம்பித்ததும் ஜியோ டிவியில் சீரியல் பார்க்க ஹெட் போனுடன் உள்ளே சென்றாள் பாட்டி

   - ப.மணிகண்டபிரபு
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி
    

   பிஸி!

   ``மேனேஜர் ரொம்ப பிஸி. போன் பண்ணா எடுக்க மாட்டார். வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுங்க. உடனே பதில் போடுவார்'' என்றான் ராகுல்.

   - கே.சதீஷ்

   ட்ரிப்

   ``இந்த சம்மர் லீவுக்கு, நல்ல ஒரு ரிசார்ட்டா பார்த்துத் தங்கணும்'' என மகன் சொன்னதும் திடுக்கிட்டார் அரசியல்வாதி.

   - கோ.பகவான்

   சமாளிப்பு

   ``படத்துல பெருசா கண் வெச்சுக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டு வந்துச்சுல்ல... சத்தியமா அதாண்டா பேய்!'' என்றான், பேயைக் காட்டச் சொல்லி அழுத மகனிடம்.

   - கோ.பகவான்

   பாராட்டு

   மகன் வரைந்த பெயின்டிங்கைப் பார்த்து வாய்விட்டுப் பாராட்டாத அப்பா, அதை அவன் ஃபேஸ்புக் புரொஃபைல் போட்டோவாகப் வைத்தபோது லைக் போட்டார்.

   - பர்வீன் யூனுஸ்

   பட்ஜெட்

   ``ரொம்ப லோ பட்ஜெட்ல ஒரு கதை சார்'' என டைரக்டர் சொன்னதும் ``அப்ப ஏன் நீங்களே தயாரிக்கக் கூடாது?'' எனக் கேட்டார் புரொடியூஸர்.

   - கோ.பகவான்

   நடிப்பு...

   ``500 டாஸ்மாக்கை மூடுவார்களாம்... ஒரு மிடாஸை மூட மாட்டார்களாம்.''

   - கிணத்துக்கடவு ரவி

   ஆதாரம்

   ``நவீன்கிற ஒருத்தரைக் காதலிக்கிறேன்'' என்றவளிடம், ``எங்கே, செல்ஃபி இருந்தா காட்டு'' என்றாள் அம்மா.

   -சி.சாமிநாதன்

    
   அழைப்பு

   ``அங்கே தனியா இருந்து என்ன பண்ணப்போறீங்க? இங்கே வந்து குழந்தையைப் பார்த்துக்கோங்க'' என, கிராமத்து அம்மாவை அழைத்தான் நிகேத்.

   - கிருஷ்ணகுமார்

   பிரேக்கிங் நியூஸ்

   `அம்மா பொம்மையை உடைச்சுட்டேன்...' என பிரேக்கிங் நியூஸ் கொடுத்தது குழந்தை.

   - எஸ்.ராமன்

   காதல்

   ``ஃபேஸ்புக் அக்கவுன்ட்டை குளோஸ் பண்ணிடு ஹேமா'' என மனைவிக்குக் கட்டளையிட்டான், அவளை முகநூல் மூலமாகக் காதலித்தவன்.

   - பெ.பாண்டியன்
   http://www.vikatan.com
  • By நவீனன்
   10 செகண்ட் கதைகள்
   ஓவியங்கள்: ஸ்யாம்
    

   தூக்குடா

   `எத்தனை பேரை நாம தூக்கியிருப்போம்... இப்போ நம்மையேவா?' - மனசாட்சிகள்  முணுமுணுத்தன.

   - பிரகாஷ்.T.A.C

   கடைசி ஆசை

   கடைசி ஆசையைக் கேட்டதற்கு, ``சீக்கிரம் தூக்குல போட்டுடுங்க'' என்றான் மரணதண்டனைக் கைதி.

   - கோ.பகவான்

   மரியாதை

   மிக மிக மரியாதையாக நடத்தப்பட்டார் அப்பா, சொத்து அவரிடம் இருந்தவரை.

   - பெ.பாண்டியன்

   பயம்

   பக்கத்து இருக்கை பயணி பிஸ்கட் நீட்டியதும் திடுக்கிட்டான், மயக்க பிஸ்கட் வைத்திருந்தவன்.

   - சி.சாமிநாதன்

   ஞாபகம்

   வீட்டுக்கு வந்தும் குத்தாட்டம் போட்டார், கூவத்தூரிலிருந்து வந்த எம்.எல்.ஏ.

   - சி.சாமிநாதன்

   தலைமுறை

   நியூஸ் பேப்பரோடு அப்பா வெளியே வந்ததும்,  பாத்ரூமுக்குள்ளே சென்றான் மகன் செல்போனோடு.

   - கிருஷ்ணகுமார்

   பிடிவாதம்

   டிவி-யைப் பார்த்துப் பார்த்து, ``எனக்கு சைரன் வெச்ச கார் பொம்மைதான் வேணும்'' என அடம்பிடித்தது குழந்தை.

   - கோ.பகவான்

   மீம்ஸ்

   வீட்டில் மறந்தும்கூட சிரித்துப் பேசாத நவீன், ஃபேஸ்புக்கில் ஆயிரம் லைக்ஸ் வாங்கும் மீம்ஸ் ஸ்பெஷலிஸ்ட்.

   - கே.சதீஷ்

   தியானம்

   மனைவி தியானம் செய்கிறாள்; பயமாய் இருக்கிறது.

   - ப.மணிகண்ட பிரபு

   விசாரிப்பு

   சாவு வீட்டில் நலம் விசாரித்துக்கொண்டார்கள், நண்பர்கள்.

   - பெ.பாண்டியன்
   http://www.vikatan.com/