Sign in to follow this  
nunavilan

குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017)

Recommended Posts

குமாரபுர தமிழினப்படுகொலை நினைவு நாள் (11.02.1996 – 11.02.2017)

குமாரபுரம் திருகோணமலையின் கிழக்கே, மூதூர் கிளிவெட்டியின் அண்மைய தமிழ்க் கிராம்ம். மகாவலி கங்கையின் கரங்களால் நிதமும் குளிரூட்டப்படும் வரத்தைப்பெற்ற அழகிய பசுமை பூசிய கிராம்ம்.

எங்கும் அடர்ந்து செழித்த வேளாண் வயல்வெளிகள், பசுக்களும் ஏறுகளும் துள்ளி விளையாட எருமைகள் சகதி குளிர்க்க உழவன் உழவில் தலைநிமிர்ந்து தமிழன் வாழ்ந்த வளமிகு ஊராகும்.

செழிப்பான இக்கிராமம் கொடுமையான இனவழிப்பை எதிர்கொள்ள என்ன காரணங்கள் என பார்ப்போமானால்

1. இக்கிராமம் ஒரு திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றமாக உருவாக இருப்பதை அறிந்த அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்கள் இரவோடிரவாக தமிழ் மக்களை குடியேற்றி சிங்கள அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்தமை

2. ஈழப்போரில் ஏற்பட்ட சிங்கள இராணுவ இழப்பு:

இச்சண்டை உண்மையில் முஸ்லீம் கிராமத்திற்கு அண்மையில் தான் இடம்பெற்றது. இச்சண்டை இடம்பெற்ற களத்திற்கும் குமாரபுரத்திற்கும் இரண்டு கிலோமீட்டர் தூரமிருக்கும்

இவ்வினவழிப்பானது திட்டமிடப்பட்ட பழிவாங்கலாகவே தமிழர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

நடக்கப் போகும் துயரமறியாத எங்கள் உறவுகள், உழைத்து களைத்த சோர்வும், பாடசாலை மாணவர்கள் பின்னேர வகுப்புகளை முடித்தும், சிறுவர்கள் விளையாடி வியர்வை குளிர்த்தும், பறவைகள் கூடு தேட, கறவைகள் வீடு சேர, கதிரவன் மேற்கில் மறைய சிங்கள பௌத்த காடையர்கள் தங்கள் பழிவாங்கலை அப்பாவி தமிழ் மக்கள் மீது காட்டத்தொடங்கினர்

கோடரி, கத்தி மற்றும் இந்த்திர துப்பாக்கி என அனைத்து ஆயுதங்களும் அப்பாவி தமிழ் மக்களின் இரத்தம் குடித்தது. மதுபோதையில் வந்த புத்தனின் வாரிசுகள் நிறைமாத கர்ப்பிணித் தாயை வண்புணர்ந்து கொலை செய்து புத்த தர்மம் காத்தனர்

பன்னிரண்டு வயதுடைய என் தங்கை தனலட்சுமியை கூட பௌத்த காவாலிகள் விட்டு வைக்க வில்லை. தங்கள் ஆண்மைக்கு என் தங்கையை இரையாக்கி துப்பாக்கி குண்டுக்கு பலியிட்டனர்.

எத்தனை கொடூரம் அத்தனையும் விழிகளில் இரத்தம் வரும் துன்பம், இரவின் இரக்க குணம் இருள இருள மீதி மக்கள் மறைவிடத்தில் மறைந்து தம்மை பாதுகாத்தனர்.

இலங்கை சிங்கள பௌத்த இராணுவத்தின் காவலில் படுகொலை செய்துவிட்டு பாதுகாப்பாக சென்றனர் காடைச் சிங்கள சிப்பாய்கள். இப்படுகொலையின் போது
பெண்களும் சிறுவர்களுமாக இருபத்து நான்கு பேர் படுகொலை செய்யப்பட இருபத்தாறு பேர் படுகாயமடைந்தனர்.

IMG_0840.jpg

இம்மக்களுக்கு நீதி கிடைக்காமைக்கான காரணம் என்ன?

சிங்கள பௌத்த அரசிடம் தமிழருக்கு நீதி கிடைப்பதென்பது பகற்கனவாகி அறுபது வருடங்களுக்கு மேலாகி விட்டது. இருந்தும் அதற்கான தூண்டுதலைச் செய்யாமல் அப்படி காலத்தை கடத்தியது தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் எதிர்க்கட்சி தலைவரும் ஆகும். இதற்கு பல சான்றுகளுண்டு

1. எதிர்க் கட்சி தலைவர் சாணக்கியர் அவர்கள் அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் இரண்டுமுறை தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்

2. இக்கிராம்ம் ஐயா தங்கத்துரை அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

3. மூதூர் மக்களிடத்தில் சாணக்கியருக்கு தகுந்த வரவேற்பின்மை.

போன்ற காரணங்களால் சாணக்கியர் இப்படுகொலைக்கான தனது குரலை உயர்த்தவில்லை

அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களால் முன்னெடுக்கப்பட்ட வழக்கு மூதூர், திருகோணமலை மற்றும் அனுராதபுரமென மாற்றப்பட்டு கடைசியில் இருபது வருடத்திற்கு மேலாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனர்.

1996 இல் மூதூர் நீதிவான் நீதிமன்றில் தொடங்கப்பட்ட வழக்கு அனுராதபுரத்தில் ஜூரிகளால் தமிழ் மக்களின் நீதி மறுக்கப்பட்டது

இறுதியாக நல்லாட்சியில் இடம்பெற்ற விசாரணை நயவஞ்சகத்துடன் நிறைவேறியது. தகுந்த சாட்சியங்கள் இருந்தும் மறுக்கப்பட்ட நீதியை தமிழ் மக்கள் ஏற்கவேண்டிய காலமாகிப்போனது.

எதிர்க்கட்சி தமிழ் அரசியற் கட்சிகள், ஆனால் தமிழருக்காக குரல்கொடுக்காத பச்ணோந்திகள். இவர்களால் தமிழருக்கு விடியுமென எழுக தமிழை புறக்கணித்த சாணக்கிய விசுவாசிகளுக்கு இன்னமும் சாணக்கிய சாயம் வெளுக்கவில்லை போலும்.

குமாரபுர மக்களின் நீதிக்காக அமர்ர் ஐயா தங்கத்துரை அவர்களைத்தவிர எந்த ஒரு அரசியல்சார் நடவடிக்கைகளையும் அரசியியல்வாதிகள் எடுக்க தவறியது மிகவும் மன வேதனையான விடயமாகும்

எனவே இப்படுகொலையின் போது கொல்லப்பட்ட மக்களுக்கான நீதியைப் பெற மக்களாகிய நாம் ஒன்றாகி குரல்கொடுப்போம், உறவுகளை இழந்துவாடும் சொந்தகளுக்கு ஆறுதலாக இருந்து, புனித ஆன்மாக்களின் சாந்திக்காக பிராத்திப்போம்

http://www.tamilsvoice.com/archives/23718

 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this