Jump to content

ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! -


Recommended Posts

ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா?  ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 1

பன்னீர் செல்வம்

ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்.... சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை... அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்... அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்... தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்... பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்... வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி... வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்ட பட்டங்களை உடைத்து நொறுக்கி இருக்கிறார் பேச்சிமுத்து என்ற ஓ.பன்னீர் செல்வம் என்ற ஓ.பி.எஸ். இப்போது அவர் ‘மிஸ்டர்’ பரிசுத்தம் என்று பட்டத்தோடு வலம் வர ஆரம்பித்துள்ளார். குறிப்பிட்ட ஊடகங்கள் அவரை அப்படிக் காட்டுகின்றன. ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்ற ஹேஷ்டேக்காக சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. நாளுக்குநாள் அவர்களுக்கான பன்னீல் செல்வத்தின் ஆதரவாளர்கள் கூடிக்கொண்டே போகின்றனர். 

சசிகலா கெட்டவர்... அதனால், ஓ.பி.எஸ் நல்லவரா?

பன்னீர் செல்வம்

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் இருக்கும் காபந்து அரசாங்கம், நிலைத்தன்மை இல்லாத அரசியல், தலைமைக்கு வந்துள்ள தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் அசாதாரண சூழல் ஒன்று தமிழகத்தைச் சூழ்ந்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில், ‘பன்னீர் செல்வம் உத்தமர்’ என்று கட்டமைக்கிறவர்கள், ‘ஐ சப்போர்ட் ஓ.பி.எஸ்’ என்று ஹேஷ்டேக் போடுபவர்கள், அவற்றை அப்படியே நம்புபவர்கள்... என்று யாரிடமும்  உண்மையிலேயே பன்னீர் செல்வம் உத்தமரா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் இல்லை; பதில் தெரியவும் இல்லை. ‘சசிகலா கெட்டவர்... அதனால், பன்னீர் நல்லவர்...’ என்ற தெளிவில்லாத மனநிலைதான் உள்ளது. பன்னீர் செல்வத்தின் அரசியல் பிரவேசம், அரசியலில் அதிகாரத்தை அடைய அவர் செய்த தந்திரங்கள், அதிகாரத்தை அடைந்தபிறகு அவர் செய்த சாகசங்கள், நிகழ்காலத்தில் அவர் எழுப்பி இருக்கும் உரிமைக்குரலுக்கான நிஜப் பின்னணி, இப்போது அவர் ஆரம்பித்திருக்கும் இருக்கும் கலகத்தின் தெளிவான உள்நோக்கம் ஆகியவற்றை குறுக்கு வெட்டாகத் தெரிந்து கொள்வதன் மூலமே பன்னீர் செல்வம் உத்தமரா? அல்லது அவரும் குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒன்றா? என்ற உண்மையை உணர்ந்துகொள்ள முடியும். 

கடைக்கோடி கரைவேட்டித் தொண்டன் அல்ல!

அ.தி.மு.க என்ற கட்சியை ஜெயலலிதா எப்படி நடத்தினார் என்பதை தமிழகம் அறியும். ‘மாற்றுக் கருத்து’ என்ற வார்த்தைக்கே அந்த கட்சி அகராதியில் இடமில்லை; அப்படியொரு சர்வாதிகரம் அங்கு கொடிகட்டிப் பறந்தது. ஜெயலலிதா தரையில் நடந்தாலும் சரி... ஹெலிஹாப்டரில் பறந்தாலும் சரி... தொண்டர்களும் அமைச்சர்களும் குனிந்து நின்று ஜெயலலிதாவை கும்பிட வேண்டும் என்பது அங்கு அடிப்படைப் பயிற்சி; அப்படியொரு அடிமைபுத்தி அந்தக் கட்சியில் புகுத்தப்பட்டு இருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசினாலும் சரி... சட்டமன்றத்தில் பதில் சொன்னாலும் சரி... ‘மாண்புமிகு-இதயதெய்வம்-புரட்சித் தலைவி-அம்மாவின் ஆணைக்கிணங்க’ என்று மூச்சுக்கு மூச்சு உச்சரிக்க வேண்டும்; அப்படியொரு போலி விசுவாசம் அந்தக் கட்சியில் வளர்க்கப்பட்டது. ஊழல், முறைகேடு வழக்குகளில் சிக்கி அந்தக் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் இரண்டுமுறை சிறைக்குச் சென்றார்; இரண்டுமுறை முதலமைச்சர் பொறுப்பை இழந்தார். அந்தளவுக்கு அந்த கட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. இவ்வளவு கறைபடிந்த வரலாற்றைக் கொண்ட கட்சியில், பன்னீர் செல்வம்,  கரைவேட்டி உடுத்தும் வெறும்  கடைக்கோடித் தொண்டன் மட்டுமல்ல... மூன்றுமுறை மூத்த அமைச்சராக இருந்தார்; 15 ஆண்டுகளுக்கு மேலாக அந்தக் கட்சியின் பொருளாளர் பொறுப்பு வகித்தார்; மூன்று முறை அந்தக் கட்சியின் சார்பில் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பாவங்களில் பன்னீருக்குப் பங்கு இல்லையா? 

அ.தி.மு.க என்ற மிகப்பெரிய கட்சியில், 17 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப்பொறுப்புகளோடு வலம் வந்த பன்னீர் செல்வம், அந்தக் பன்னீர் செல்வம்கட்சியின் தலைமையால் நடத்தப்பட்ட முறைகேடுகளில் முக்கியப் பங்குதாரராக இருந்தாரா, இல்லையா? வருவாய்த்துறை, நிதித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளை தன்வசம் வைத்திருந்த பன்னீர் செல்வம் அங்கு நடந்த ஊழல்களுக்கு முக்கியக் காரணகர்த்தாவாகத் திகழ்ந்தாரா, இல்லையா? பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத்தின் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பன்னீர் செல்வம் அடித்தளம் அமைத்தாரா? இல்லையா? கரூர் அன்புநாதன் வீட்டில் நடைபெற்ற ரெய்டுக்கும் பன்னீருக்கும் சம்பந்தம் இருந்ததா, இல்லையா? தமிழகத்தின் மணல் குத்தகையை மொத்தமாக சேகர்ரெட்டிக்கு தாரைவார்த்து, தழிகத்தின் ஆறுகளை கூறுபோட பன்னீர் செல்வம் உதவினாரா, இல்லையா?  அதற்கு சேகர் ரெட்டியிடம் இருந்து பன்னீர் செல்வம் கைகளுக்கு கரன்சிகள் கடத்தப்பட்டதா, இல்லையா? தேனியில் பால் பண்ணையும், டீக்கடையும் வைத்திருந்த பன்னீர் செல்வத்தின் இன்றைய சொத்து மதிப்பு 15 ஆயிரம் கோடிகளா? இல்லையா? 

ஜெயலலிதா உடல் ஆரோக்கியத்துடன் முதல் அமைச்சராக இருந்தபோதே, ‘எனக்குச் சுயமரியாதை முக்கியம்’ என்று காரசாரமாகப் பேட்டி கொடுத்த பழ.கருப்பையாவும், சசிகலாவை எதிர்த்து பேட்டி கொடுக்கும் பன்னீர் செல்வமும் சரிநிகர் சமமா, இல்லையா? 2016 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தியதா, இல்லையா? அதில் இருவரும் வசமாகச் சிக்கினார்களா, இல்லையா? அதற்குப் பிறகு பன்னீரையும், நத்தம் விஸ்வநாதனையும் போயஸ் கார்டனில் வைத்து சசிகலா  உருட்டுக் கட்டைகளின் உதவியோடு விசாரணை நடத்தினாரா, இல்லையா? ஜெயலலிதா இறந்த பிறகு, மதுசூதனனை மறைத்து சசிகலாவை பொதுச் செயலாளராகக் கொண்டு வந்ததில் பன்னீர் செல்வத்துக்கு பங்கு இருந்ததா, இல்லையா? போயஸ் தோட்டத்தில் வைத்து, ‘முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்யுங்கள்’ என்று டாக்டர் வெங்கடேஷூம் டி.டி.வி.தினகரனும் பன்னீர் சொல்வத்தை மிரட்டியபோது, ‘துணை முதலமைச்சர் பதவியாவது கொடுங்கள்’ என்று பன்னீர் செல்வம் கேட்டாரா? இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலைத் தெரிந்துகொள்வதன் மூலமே உண்மையில் ஓ.பி.எஸ் உத்தமரா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். இவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள பன்னீரின் கடந்த காலத்துக்குள் கொஞ்சம் பயணம் செய்ய வேண்டும்; செய்வோம்!

பயணம் தொடங்குகிறது... 

http://www.vikatan.com/news/coverstory/80480-can-ops-be-crowned-mrclean--mini-series-on-panneerselvam-political-journey.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

‘தினகரனால் வந்த திருப்புமுனை!' ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 2

பன்னீர்செல்வம்

பேச்சிமுத்து ‘டூ’ பி.வி.கேண்டீன் முதலாளி!

பன்னீர்செல்வம்தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயக்குடியானவர் ஓட்டக்காரத்தேவர்; அவரது மனைவி  பழனியம்மாள்; இவர்களின் குலதெய்வம் பேச்சிமுத்து. அதனால், ஓட்டகாரத்தேவர்-பழனியம்மாள் தம்பதி, அவர்களுக்குப் பிறந்த முதல் பிள்ளைக்கு பேச்சி முத்து என்று பெயர் வைத்தனர். ஆனால், வீட்டில் அந்தப் பிள்ளையை பன்னீர்செல்வம் என்று வேறு பெயர் வைத்து அழைத்தனர். அந்தப் பெயர்தான் பள்ளிக்கூடத்தில் சேர்க்கும்போதும் கொடுக்கப்பட்டது. பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் பி.யூ.சி படித்துவிட்டு, பி.ஏ.,பொருளாதாரத்தை ‘உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கவுதியா’ கல்லூரியில் போய்ப்படித்தார்.

நட்பு, காதல், மோதல், கேலி, கிண்டல் என நவரசங்களும் கொட்டிக்கிடக்கும் கல்லூரியிலும் பேச்சிமுத்து அமைதியான மாணவர். கல்லூரிப் பருவத்துக்குரிய உற்சாகத் துள்ளல் எதுவும் அவரிடம் இருக்காது. மதிய உணவு இடைவேளையில்கூட சக மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிடமாட்டார். யாரும் இல்லாத இடமாகப் பார்த்து, தனியாகப்போய் சாப்பிடுவதுதான் பன்னீரின் வழக்கம். கல்லூரியில் இப்படி ஒரு மாணவர் படித்தார் என்ற தடமே இல்லாதவகையில் கல்லூரிப் படிப்பை முடித்த பன்னீர், பெரியகுளம் கைலாசநாதர் கோயில் அருகே, தங்கள் குடும்பத்துக்குச் சொந்தமாக இருந்த நிலத்தில் விவசாயம் பார்க்கத் தொடங்கினார்.

அதில்பெரிய பிடிபாடு இல்லை. வேறு ஏதாவது தொழிலும் கைவசம் இருந்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்று முடிவெடுத்தவருக்கு, பெரியகுளத்தைச் சுற்றி ‘டீ ஸ்டால்’களுக்கு பால் கிராக்கி இருப்பது தெரியவந்தது. அதனால், அந்தக் கடைகளுக்கு மாட்டுப்பால் சப்ளை செய்யலாம் என்று முடிவெடுத்தார் பன்னீர். அதற்காக தங்கள் நிலத்திலேயே பால்பண்ணை ஒன்றை அமைத்தார். பால்பண்ணை அமைக்க ஜாமீன் கையெழுத்து போட்டவர் பன்னீரின் நண்பர் விஜயன். பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் டீக்கடைகளுக்கு பால் சப்ளை செய்ததுபோக, எஞ்சிய பாலை என்ன செய்யலாம் என்று யோசித்தவர், அதை விற்றுக் காசாக்கத் தனியாக ஒரு டீ கடையையும் ஆரம்பித்தார். அந்த கடையின் பெயர் ‘பி.வி கேண்டீன்’. பி - என்பது பன்னீர்செல்வம் என்ற பெயரின் முதல் எழுத்து; வி - என்பது வங்கிக் கடனுக்கு ஜவாப்தாரியான நண்பர் விஜயனின் பெயரில் உள்ள முதல் எழுத்து. பன்னீர் ஆரம்பித்த டீக்கடை இப்போதும் இருக்கிறது... ஆனால், அந்தக் கடையில் பி.வி.கேண்டீன் என்ற பெயர் இப்போது இல்லை. 

நடிகர் திலகம் டூ மக்கள் திலகம்!

பன்னீர்செல்வத்துக்கு சிறு வயதில் இருந்தே நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் படங்களின் மீதுதான் ஈர்ப்பு. அதனால், விடலைப் பருவத்தில் தீவிர சிவாஜி ரசிகராக வலம்வந்தார் பன்னீர். எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தபோது, பன்னீர் அதில் சேர்ந்துகொண்டார். அப்போது, பெரியகுளம் தேனிக்குள் இருந்தது; தேனி ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்துக்குள் இருந்தது. அ.தி.மு.க-வில் இலக்கிய மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்த கம்பம் செல்வேந்திரன் அன்றைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர். அவரது ஆதரவாளராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார் பன்னீர்செல்வம். கம்பம் செல்வேந்திரனின் கனிவு, பன்னீருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞர் அணிச் செயலாளர் பதவியைப் பெற்றுத்தந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜா.அணி - ஜெ.அணி என அ.தி.மு.க பிளவுற்றபோது, ஜானகி அணியை நடிகர் சிவாஜியின் தமிழக முன்னேற்ற முன்னணி ஆதரித்தது. தனது அரசியல் குருவான கம்பம் செல்வேந்திரனும் அதே அணியைத்தான் ஆதரித்தார். அதனால், பன்னீர்செல்வமும் ஜானகி அணிக்காகவே வேலை பார்த்தார். 

வெண்ணிற ஆடை நிர்மலாவுக்குப் பின்னால் பன்னீர்!

ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஜெ.அணி-ஜா.அணி இரண்டுக்கும் வாழ்வா? சாவா? போராட்டமாக இருந்தது அந்தத் தேர்தல். சசிகலாவின் கணவர் நடராஜன், ஜெயலலிதா போட்டியிடுவதற்கு ஏதுவான தொகுதிகளைத் தமிழகம் முழுவதும் தேடினார். “வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக இருக்க வேண்டும்; இரண்டே நாட்களில் பிரச்சாரத்தை முடிக்கக்கூடிய அளவுக்கு சிறிய தொகுதியாக இருக்க வேண்டும்” என்று நினைத்துத் தேட ஆரம்பித்த நடராஜன் ஸ்ரீரங்கம், போடி தொகுதிகளை ஜெயலலிதாவுக்காகத் தேர்ந்தெடுத்தார். இரண்டு தொகுதிகளையும் சுற்றிப்பார்த்த ஜெயலலிதா போடி தொகுதியை டிக் செய்தார். ஜெயலலிதா எங்கு போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து ஒரு பிரபலமான வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று ஜானகி அணி நினைத்திருந்தது.

அவர்கள் அதற்காக தேர்ந்தெடுத்தது நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவை. அன்றைய அரசியல் சூழலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளரை மடக்கிவிட நடராஜன் பல வியூகங்களை வகுத்து வைத்திருந்தார். அதை அறிந்துகொண்ட ஜானகி அணி, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா வேட்புமனு தாக்கல் செய்யும்வரை, அவரை பத்திரமாக பாதுகாக்கும் பொறுப்பை கம்பம் செல்வந்திரனிடம் ஒப்படைத்தது. அவர் பன்னீரின் துணையுடன் ‘வெண்ணிற ஆடை’ நிர்மலாவைப் பத்திரமாகப் பாதுகாத்து வைத்து வேட்புமனுத்தாக்கல் செய்ய வைத்தனர். அதன்பிறகு, ஜெயலலிதாவும் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

போடி தொகுதியில் கடும்போட்டி நிலவியதுபோன்ற தோற்றம் இருந்தது. ஜெயலலிதாவை வீழ்த்த வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக பன்னீர்செல்வம் கடுமையாக வேலை பார்த்தார். ஆனாலும், ஜெயலலிதாவே ஜெயித்தார். தேர்தலுக்குப் பின்னர் ஜெ.-ஜா. அணிகள் இணைய, ஜெயலலிதாவின் தலைமையைப் பணிவாக... மிகப் பணிவாக... மிகமிகப் பணிவாக ஏற்றுக்கொண்டார் பன்னீர். அதன்பிறகு கட்சியில் பெரியகுளம் நகரச் செயலாளர் பதவி கிடைத்தது. பெரியகுளம் நகராட்சித் தேர்தலில் சீட்வாங்கிப் போட்டியிட்டு சேர்மன் பதவியைப் பிடித்தார். 1999-ம் ஆண்டுவரை பன்னீரின் வாழ்க்கை பெரியகுளம் என்ற வட்டத்துக்குள் மட்டுமே சுழன்று கொண்டிருந்தது. 

டி.டி.வி.தினகரனால் வந்த திருப்புமுனை!

ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன்

 

1999-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தது. அந்த நேரத்தில் போயஸ் கார்டனின் செல்லப் பிள்ளையாக வலம்வந்தவர் டி.டி.வி.தினகரன். சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூத்தமகன். அவருக்கு பெரியகுளத்தில் போட்டியிட சீட் வாங்கிக்கொடுத்தார் சசிகலா; டி.டி.வி.தினகரனை பெரியகும் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா; டி.டி.வி.தினகரன் பெரியகுளத்தில் முகாமிட்டார். கட்சிக்காரர்கள் வரிசையாக வந்து தினகரனுக்கு வணக்கம் வைத்தனர். பன்னீர்செல்வம் சாஷ்டாங்கமாக விழுந்து தினகரனை வணங்கினார். தினமும் தினகரன் முன் ஆஜரானார். பன்னீர்செல்வம் அவரது தம்பி ராஜாவின் வீட்டை தேர்தல் அலுவலகமாக மாற்றி, தினகரனை அங்கு வரவழைத்தார்.

பன்னீரின் உபசரிப்புகள் பிடித்துப்போக, பன்னீரின் தம்பி ராஜாவின் வீட்டிலேயே தினகரன் தங்கினார். அப்போது பன்னீருக்கு ஒதுக்கப்பட்ட வேலை, தேர்தல் வரவு-செலவுகளைப் பார்ப்பது. ஆனால், பன்னீர் அதை மட்டும் பார்க்கவில்லை. இருக்கின்ற வேலைகளை எல்லாம் இழுத்துப்போட்டுக்கொண்டு பார்த்தார். எதிர்முகாமில் இருந்த ‘ஆக்டிவ்’ புள்ளிகளை அமைதியாக்கினார். அந்தச் சூட்சுமங்கள் பலன் அளிக்க... தினகரன் ஏகபோகமாக வென்றார். வெற்றிக்கு கைமாறாக பன்னீர்செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார் தினகரன். அப்போது மேலேபோக ஆரம்பித்த பன்னீருக்கு 2016-வரைக்கும் எந்தச் சறுக்கலும் இல்லை. அந்தளவுக்கு சுலபமாக பன்னீரின் அரசியல் பயணம் மேடேறிவந்தது. 

பயணம் தொடரும்!

http://www.vikatan.com/news/coverstory/80714-dinakaran-helps-opanneerselvam-can-ops-be-crowned-mrclean-chapter---2.html

Link to comment
Share on other sites

பன்னீருக்கு அடித்த பம்பர்! ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 3

பன்னீர்செல்வம்

ரசியல் கலாசாரம், அரசியல் பண்பாடு, அரசியல் தத்துவம் என்ற எந்த அளவுகோலில் அளந்து பார்த்தாலும், அ.தி.மு.க என்பது விசித்திரமான ஒரு அரசியல் கட்சி என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அந்தக் கட்சித் தலைமை, அந்தக் கட்சித் தொண்டர்களின் அரசியல் வாழ்வில் உருவாக்கும் ஏற்ற-இறக்க நடவடிக்கைகளும் அதற்கு விதிவிலக்கல்ல. அங்கு, யாருக்கு... எப்போது... பொறுப்புகளும் பதவிகளும் பரிசளிக்கப்படும்... யாரிடம் இருந்து... எப்போது... பொறுப்புகளும் பதவிகளும் பறிக்கப்படும் என்பது யாருக்கும் புரியாத ஒரு புதிர். தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சாதரணத் தொண்டன், எந்த நேரத்திலும் தோட்டத்துக்கு அழைக்கப்படலாம்; கோட்டையில் அமர்த்தப்படலாம். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சியிலும், தோட்டத்திலும், கோட்டையிலும் ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் எந்த நேரத்திலும் ஒன்றுமில்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படலாம். அடிப்படை உறுப்பினர் ஒரே நாள் இரவில் அமைச்சராவதும் அ.தி.மு.க-வில் சாத்தியம். அமைச்சராக வலம் வருபவரின் அடிப்படை உறுப்பினர் தகுதிகூட ஒரு நொடியில் பறிக்கப்படுவதும் அ.தி.மு.க-வில் மட்டுமே சாத்தியம். ஓ.பன்னீர் செல்வம் அதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தினகரனுக்கு ஜாக்பாட்... பன்னீருக்கு பம்பர்! 

ஜெ. அணியும் ஜா. அணியும் இணைந்த பிறகு, அ.தி.மு.க என்ற மிகப்பெரிய அரசியல் கட்சி ஒட்டுமொத்தமாக ஜெயலலிதாவின் கரங்களுக்குள் சரணாகதி ஆனது. காலம் அப்படி ஒரு நிலையை உருவாக்கி வைத்தபோது, எம்.ஜி.ஆரை மட்டுமே பூஜித்து, எம்.ஜி.ஆரை மட்டுமே நேசித்து, எம்.ஜி.ஆருக்காகவே அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தவர்களுக்கு ஒரு தடுமாற்றம் ஏற்பட்டது. அவர்கள் எடுத்த முடிவில் தள்ளாட்டம் இருந்தது.  சைதை துரைசாமி, காளிமுத்து, ஆர்.எம்.வீரப்பன், கம்பம் செல்வேந்திரன், போன்றவர்களால் உடனடியாக ஜெயலலிதாவின் தலைமையை ஏற்க முடியவில்லை. எதிர் நீச்சல் போட்டுப்பார்த்தனர். கரையேற முடியவில்லை. ஆனால் பன்னீர் செல்வம் அந்தத் தவறைச் செய்யவில்லை. யாரிடம் அதிகாரம் இருக்கிறதோ அவர்களுக்கு விசுவாசியாக மனதளவிலேயே தன்னை மாற்றிக் கொண்டார். ஜெ. தலைமையை ஏற்றுக்கொண்ட பன்னீருக்கு, அக்னீப் பரிட்சையாக அமைந்தது 91-ல் நடந்த சட்டமன்றத் தேர்தல். அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பெரியவீரனுக்கு தீயாய் வேலை பார்த்தார் பன்னீர்.

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன்

பெரியகுளம் ஒன்றியச் செயலாளர் செல்லமுத்து பார்த்ததைவிட, பன்னீர் செல்வம் பார்த்த வேலைகள் பரவலாகப் பேசப்பட்டன; கட்சிக்காரர்களின் கவனத்தை ஈர்த்தன. ‘நன்றாகத் தேர்தல் வேலை பார்த்தார்’ என மேலிடங்களுக்குத் தகவல்கள் போயின. அதன்விளைவு 93-ல் மீண்டும் நகரச் செயலாளர் பதவி பன்னீருக்குக் கிடைத்தது. 1996-ம் ஆண்டு பெரியகுளம் நகர் மன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புப் பெற்றார்; அதில் வெற்றியும் பெற்றார். பெரியகுளம் நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‘கூடி வரும் போது கூட இருப்பவர்கள் கழுத்தை அறுப்பார்கள்’ என்பதை போல கூட்டுக்குடும்பமாக இருந்த பன்னீர்செல்வம் வீட்டில் சொத்துப் பிரச்னை வந்தது. தெருவில் நிற்கதியாக நின்றார். நண்பர் அபுதாகீர் என்பவரின் உதவியால் கூட்டுறவு சங்கக் கடன் பெற்று தெற்குத் தெருவில் வீடு ஒன்றை வாங்கினார். 1998-ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், அதற்கு 1999-ல் தேர்தல் வந்தது. பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதிக்கு, அப்போது ‘போயஸ்கார்டனுக்குச் செல்லப்பிள்ளை’யாக செயல்பட்ட டி.டி.வி தினகரன் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அது தினகரனுக்கு அடித்த ஜாக்பாட் அல்ல. பன்னீர் செல்வத்துக்கு அடித்த பம்பர் என்பதை எதிர்காலம் நிரூபித்தது. 

மாண்புமிகு மாணிக்கக் கோரிக்கை!

ஓ.பன்னீர்செல்வம்அமைதியானவர்; அடக்கமானவர்; நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயர், நாடாளுமன்ற வேட்பாளர் டி.டி.வி.தினகரனுக்குத் தேவையானதைச் செய்து கொடுக்கவும் அவர் கூடவே இருந்து கவனித்துக் கொள்ளவும் பன்னீர் பணிக்கப்பட்டார். பன்னீர்செல்வத்தின் தம்பி ராமசாமியின் வீடு தேர்தல் அலுவலகமாக மாறியது. அந்த வீட்டில்தான் தினகரனும் தங்கி இருந்தார். அங்கு பன்னீருக்கு ஒதுக்கப்பட்ட வேலை, வரவு-செலவு கணக்குப் பார்ப்பது. நயா பைசாத் துல்லியமாக தேர்தல் செலவுக் கணக்குகளை கார்டனில் ஒப்படைத்து முத்திரை பதித்தார் பன்னீர் செல்வம். இத்தனைக்கும் அந்த நேரத்தில் கடுமையான வறுமையில்தான் இருந்தார் பன்னீர் செல்வம். அந்த நேரத்தில் பன்னீர் செல்வம் மற்றொரு வேலையை சத்தமில்லாமல் செய்துமுடித்ததாக பெரியகுளத்தில் ஒரு தகவல் உண்டு. அது என்னவென்றால், தினகரனை வெற்றி பெற வைக்க, அன்றைய தி.மு.க மாவட்டச் செயலாளர் மூக்கையாவை வளைத்து, அவருக்கு 20 லட்சம் ரூபாயைக் கொடுத்து, அவரையே ஆஃப் செய்தார் என்பதே. அது உண்மையோ... இல்லையோ... தி.மு.க அங்கு அடிவாங்கியது. டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். பன்னீர் செல்வம் பார்த்த வேலை, தி.மு.க பொதுக்குழுவையே அதிர வைத்தது. இதற்கு கைம்மாறாக, பன்னீர் செல்வத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கிக் கொடுத்து, கார்டனுக்குள் ‘என்ட்ரி’ ஆகும் தகுதியை வளர்த்துவிட்டார் டி.டி.வி.தினகரன். அதன்பிறகு, 2001 சட்டமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுத்தார் டி.டி.வி.தினகரன். பன்னீர் செல்வத்தை எதிர்த்து திமுக கூட்டணியின் ஐக்கிய ஜமாத் வேட்பாளரான அபுதாகீர் (முன்பு பன்னீர் கூட்டுறவு கடனில் வீடு வாங்க உதவி செய்தவர்) களம் இறக்கப்பட்டார். தேர்தலில் பன்னீர் ஜெயிக்க, அபுதாகீர் தோல்வியடைந்தார். அதன்பிறகு, அபுதாகிரும் அ.தி.மு.க-வில் ஐக்கியமானர் என்பது தனிக்கதை. தினகரனின் நல்லாசியால் முதன் முதலாக எம்.எல்.ஏ ஆன பன்னீருக்கு 'வருவாய்' துறை அமைச்சர் பதவியும் கிடைத்தது. அ.தி.மு.கவில் அமைச்சர்கள் யார் என்பது யாருக்கும் சாதரணமாக நினைவில் இருக்காது. ஆனால், பன்னீர் செல்வம் அமைச்சர் என்பது அவருடைய அமைச்சரவை சகாக்களுக்கே தெரியாது. அமைச்சரவையில் கடைசி வரிசையில் கடைசி நாற்காலி பன்னீர் செல்வத்துக்கு. வருவாய்த்துறை மானியக் கோரிக்கை வந்தபோது, மாண்புமிகு உறுப்பினர்கள் வருவாய்த்துறையின் மானியக் கோரிக்கையை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அப்பாவியாகச் சொன்னார் பன்னீர் செல்வம். அவை மற்ற உறுப்பினர்களின் சிரிப்பொலியால் நிறைந்தது.

பயணம் தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/81552-opanneerselvam-gets-bumper-prize-can-ops-be-crowned-mrclean--episode-3.html

Link to comment
Share on other sites

ஜெயலலிதா தமிழகத்துக்கு தந்த ‘சஸ்பென்ஸ்’!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 4

ஓ.பன்னீர் செல்வம்

அரசியல் சாசன அமர்வு’ பன்னீருக்கு கொடுத்த பரிசு!

மானியக் கோரிக்கையை ‘மாணிக்கக் கோரிக்கை’ என்று வாசித்த ஓ.பன்னீர் செல்வம் மாண்புமிகு அமைச்சராக இருந்தாலும், ‘இருட்டுக்குள் மறைந்திருப்பதுபோல’ இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, யாருக்கோ... எதற்கோ அளித்த தீர்ப்பு ஒன்று, பன்னீர் செல்வத்தின் மீது ஊடக வெளிச்சம் பாய்வதற்கும் காரணமாக அமைந்தது. 

சசிகலா, ஜெயலலிதா

2001 காலகட்டத்தில் ‘டான்சி’ வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றிருந்தார். அதனால் அவர் 2001 சட்டமன்றத் தேர்தலில்கூட போட்டியிடவில்லை. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெற்றது. அதையடுத்து அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள், தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதாவை முதல்வராகத் தேர்ந்தெடுத்தனர். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற ஒருவர் சட்டமன்றத்துக்குள் செல்லக்கூடாது என்பதால்தான், தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடுவதையே சட்டம் தடுக்கிறது. அதை அ.தி.மு.க-வின் வெற்றிப் பெருமிதத்தில் இருந்த ஜெயலலிதா புரிந்துகொள்ளவில்லை; அன்றைய தமிழக ஆளுநர் பாத்தீமாபீவியும் புரிந்துகொள்ளவில்லை. குற்றவாளியாகவே சட்டமன்றத்துக்குள் செல்லலாம்; அதன்பிறகு டான்சி வழக்கை வெல்லலாம்; அதற்குப்பிறகு தேர்தலைப் பார்த்துக் கொள்ளலாம் என்ற தலைகீழ் விதிப்படி இயங்க முடிவு செய்தார் ஜெயலலிதா. அதற்கு தமிழக ஆளுநர் பாத்திமாபீவியும் அப்போது உறுதுணையாக இருந்தார்.

கார்டனில் நடந்த முதலமைச்சர் ‘ரேஸ்’!

ops25_vc-1_14449.jpgஜெயலலிதாவின் இந்த முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் டான்சி வழக்கின் தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கும் நடைபெற்றது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வருவதற்கு முன்பே, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு வெளியானது. 2001 செப்டம்பர் 21-ம் தேதி வெளியான அந்தத் தீர்ப்பு, “கவர்னர் பாத்திமாபீவி முதலமைச்சராக ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லாது” என்று உத்தரவிட்டது. அதில் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது. பன்னீர் செல்வத்துக்கு பம்பர் அடிக்கும் நேரம் நெருங்கியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானதும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை பரபரப்பானது; போயஸ் தோட்டமும் பதற்றமானது; அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி தமிழகத்தை நிரப்பியது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் போயஸ் கார்டன் வீட்டில் குவிந்தனர். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ-வும் வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வமும் ஒரு ஒப்புக்காக போயஸ் கார்டன் பக்கம் சுற்றிக் கொண்டிருந்தார். கட்சியின் சீனியர்கள், ஜெயலலிதாவுக்கு நெருக்கமான சிலர் மட்டும் போயஸ் கார்டன் வீட்டுக்குள் போவதும் வருவதுமாக இருந்தனர். யாரெல்லாம் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வருகிறார்களோ... அவர்கள்தான் அடுத்த முதல்வர் என்று செய்தி பரவியது. அந்தநேரத்தில் நாவலர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் போயஸ் தோட்டத்துக்கு வீட்டுக்குள் போய் ஜெயலலிதாவைச் சந்தித்துவிட்டு வந்தார். உடனே அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று செய்தி பரவியது. பொன்னையன், காளிமுத்து, உப்பிலியாபுரம் சரோஜா, சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மனைவி இளவரசி என்று ஒவ்வொரு நொடியும் ஒருவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டனர்; யூகங்கள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. ஒருகட்டத்தில், “அம்மா கவர்னரைச் சந்திக்கப்போகிறார். அந்தச் சந்திப்பு முடிந்ததும், ராகுகாலத்துக்குப் பிறகு தலைமைக்கழகத்தில் வைத்து முடிவை அறிவிப்பார். அதனால், மாலை 4.30 மணிக்கு எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் தலைமைக் கழகத்துக்கு வந்துவிடுங்கள் என்று அறிவிப்பு வெளியானது. 

தமிழகத்துக்கு ஜெயலலிதா தந்த சஸ்பென்ஸ்! 

டி.டி.வி.தினகரன், சசிகலா, ஜெயலலிதாமாலை 4.30 மணிக்கே எம்.எல்.ஏ-க்களும் அமைச்சர்களும் தலைமைக் கழகத்தில் குவிந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு... நம்மை முதலமைச்சராக அம்மா அறிவித்துவிடமாட்டாரா என்ற நப்பாசை... அதன் காரணமாக எழுந்த ஆர்வம்... காரசாரமான விவாதங்கள் என தலைமைக் கழகம் அல்லோலகல்லோலப்பட்டது. ஜெயலலிதா இரவு 7 மணிக்கு தலைமைக் கழகம் வந்து சேர்ந்தார். மாடியில் நின்று கையசைத்துவிட்டு கூட்ட அரங்குக்குச் சென்றார். சிந்தாமல் சிதறாமல் வார்த்தைகளை அளந்து பேசினார். “இப்போது ஏற்பட்டு இருக்கிற சூழ்லை உங்களுக்கு எல்லாம் தெரியும். புதிதாக ஒரு முதல்வரை தற்காலிகமாக தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நான் ஒரு பெயரைக் குறிப்பிடுகிறேன். அதற்கு ஒப்புதல் தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு நான் அவரை முதல்வராகத் தேர்ந்தெடுத்துள்ளேன்” என்று சொல்லி சில நொடிகள் நிறுத்தினார். அந்த நொடிகள்தான் அன்றைய தமிழகத்தின் உச்சக்கட்ட சஸ்பென்ஸ் நிறைந்த நொடிகள். கூட்ட அரங்கில் இருந்த எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்களுக்கு இதயம் அடைத்தேவிட்டது; ஒவ்வொரு நொடியையும் அவர்களால் தாங்க முடியவில்லை; சர்வ நிசப்தம் நிலவியது. அதை உடைத்து மீண்டும் பேச ஆரம்பித்த ஜெயலலிதா, “பெரியகுளம் தொகுதியின் எம்.எல்.ஏ-வும் இப்போதைய வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம்” என்றார். சீனியர்களுக்கு இதயம் நொறுங்கிவிட்டது. சிலருக்கு ஜெயலலிதாவின் வார்த்தைகளை நம்பவே முடியவில்லை. ஒட்டுமொத்தமாக எல்லோரும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பன்னீர் செல்வத்தைத் தேடினார்கள். பல எம்.எல்.ஏ-க்கள் அப்போதுதான் பன்னீர் செல்வத்தை முதல்முறையாகப் பார்க்கின்றனர். மற்றவர்களின் நிலையே இப்படி என்றால், பன்னீர் செல்வத்தின் நிலையை எந்த வார்த்தைகளிலும் வருணிக்க முடியாது. அந்த நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம், ‘ஓன்றும் புரியாமல்... உடல்நடுங்கி உட்கார்ந்திருந்தார்’ என்பதை மட்டும்தான் சொல்லமுடியும்.  பிறகு சமாளித்துக் கொண்டு மெல்ல எழுந்தவர் கைகளை கும்பிடுவதுபோல் வைத்துக்கொண்டே ஜெயலலிதாவை நோக்கி நடந்துபோனார். பக்கத்தில்போய் தரையோடு தரையாக விழுந்து ஜெயலலிதாவை   வணங்கினார். அப்போதும் அவர் உடல் அதிர்ந்து கொண்டிருந்தது. 

இவர்தான் முதலமைச்சர்... - ஜெயலலிதா செய்த அறிமுகம்!

அதன் பிறகு தலைமைக் கழகத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. கான்பரஸ் ஹாலுக்கு வந்த ஜெயலிதா தன் நாற்காலியில் உட்கார்ந்துவிட்டு திரும்பிப் பார்த்தால் பன்னீர் செல்வத்தைக் காணவில்லை. பல அடி தூரம் தள்ளி பவ்யமாக உடல் வணங்கி நின்றிருந்தார். திரும்பிப் பார்த்த ஜெயலலிதா, “வாங்க! பக்கத்துல உட்காருங்க... அவருக்கு சேர் போடுங்க” என்று படபடக்க சேர் வந்தது. பன்னீர் நாற்காலியின் நுனியில் பவ்யமாக அமர்ந்தார். பத்திரிகையாளர்களுக்குப் புரிந்துவிட்டது புதிய முதல்வர் இவர்தான் என்று. ஆனால், “இவரை இதற்கு முன்பு எங்கு பார்த்திருக்கிறோம்.... இவர் எந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ... என்று சென்னைப் பத்திரிகையாளர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது பேச ஆரம்பித்த ஜெயலலிதா, “எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் புதிய முதல்வர் பன்னீர் செல்வம்” என்று சம்பிரதாயமாக அறிவித்துவிட்டு, பத்திரிகையாளர்களின்  மற்ற கேள்விகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு போயஸ் தோட்டம் நோக்கிப் பறந்தார். 

ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா

ஓ.பன்னீர் செல்வம் ஆகிய நான்...

2001 செப்டம்பர் 21-ம் தேதி, இரவு 8.05 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் ராஜ்பவன் வந்துசேர்ந்தார். தலைமைச் செயலாளர் பன்னீர் செல்வத்தை வரவேற்று சோபா ஒன்றில் அமரவைத்தார். அதன்பிறகு 10 நிமிடங்கள் கழித்து ஜெயலலிதாவும் சசிகலாவும் வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்துவிட்ட பன்னீர் செல்வம், நாற்காலியை விட்டு எழுந்து ஓடி அவர்கள் முன்னால் போய் ஒரு தாராள கும்பிடு போட்டார். அதைக் சட்டை செய்யாமல், ஜெயலலிதாவும் சசிகலாவும் பன்னீரைத் தாண்டிப்போய், அங்கு போடப்பட்டு இருந்த இருவர் அமரும் சோபாவில் மகாராணிகளைப் போல் அமர்ந்திருந்தனர். அவர்கள் அமரும்வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு பக்த்தில் தனியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தார் பன்னீர் செல்வம். அதன்பிறகு கவர்னர் வந்து பன்னீர் செல்வத்தை மேடைக்கு அழைத்ததும், பிரமாண வாக்குமூலத்தை ஜெயலலிதா கையில் கொடுத்துவிட்டு அவர் காலில் விழுந்து வணங்கினார். அதுவரை எங்குமே காணப்படாத டி.டி.வி.தினகரன், பன்னீர் செல்வம் மேடைக்குப் போகும் நேரத்தில் சரியாக வெள்ளைக்குர்தாவில் உள்ளே வந்தார். அவரை நன்றி கொப்பளிக்கும் பார்வையோடு பார்த்துக் கொண்டே மேடையேறினார் பன்னீர் செல்வம். ‘ஓ.பன்னீர் செல்வமாகிய நான்...’ என்று சொல்லி முதலமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.  பதவிப்பிரமாணம் நடந்தபோது ஒவ்வொரு அமைச்சர்களைப் பற்றியும் சசிகலாவும் ஜெயலலிதாவும் கமெண்ட் அடித்து சிரித்துக் கொண்டிருந்தனர். அவர்களோடு சேர்ந்து கவர்னரின் மனைவியும் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஜெயலலிதா, சசிகலா, பன்னீர் செல்வம்

அம்மா சொல்லாமல் செய்யமாட்டேன்!

பதவிப்பிரமாணம் முடிந்தபிறகு, பத்திரிகையாளர்கள் பன்னீர் செல்வத்தை சூழ்ந்தனர். “அம்மாவைக் கேட்காமல் உங்களிடம் பேச முடியாது” என்று சொல்லிவிட்டுக் கழன்று கொண்டார் பன்னீர் செல்வம். புதுகேபினட் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி ராஜ்பவன் புல்வெளியில் நடைபெற்றது. மற்ற அமைச்சர்கள் ஓடிப்போய் அவரவர் இடங்களில் நின்று கொண்டனர். முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவை ஓரக்கண்ணால் பார்க்க, சசிகலாவும் ஜெயலலிதாவும் விழுந்து விழுந்து சிரித்தனர். கண்ஜாடை காட்டி அவரையும் போகச் சொன்னார் ஜெயலலிதா. சுற்றிலும் அமைச்சர்கள் நிற்க நடுநாயகமாக அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதாவும் சசிகலாவும் அதை ஓரக்கண்களால் பார்த்துக் கொண்டே வெளியேறினர்.  

பயணம் தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/81998-jayalalithaas-suspense-to-tamilnadu--can-ops-be-crowned-mrclean-episode-4.html

Link to comment
Share on other sites

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆசான் பொன்னையன்! ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 5 

ஓ.பன்னீர்செல்வம்

2001 செப்டம்பர் 22-ம் தேதி காலை சரியாக 9 மணிக்கு, கீரின்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை இல்லத்தில் இருந்து வெளியில் வந்தார். தன் வீட்டைச் சுற்றி குவிந்து நிற்கும் போலீஸ், தன் காருக்கு செய்யப்படும் பாதுகாப்பு சோதனைகள், ஓயாத வயர்லெஸ் சத்தங்கள் என்று எல்லாவற்றையும் புதிதாக கொஞ்சம் மிரட்சியுடன் பார்த்தார். அதன்பிறகு சுதாரித்துக்கொண்டு, வீட்டைச்சுற்றி நிற்பவர்களுக்கு பவ்யமாக ‘வணக்கம்’ வைத்துவிட்டு காரில் ஏறினார். அந்தக் கார் நேராக கோட்டைக்குப் போகவில்லை. அதற்கு முன்னதாக, போயஸ் கார்டன் போனது. அங்கு போய் ஜெயலலிதாவிடம் ஆசிர்வாதம் வாங்கினார் பன்னீர்செல்வம். அதன்பிறகே அவரது கார் கோட்டைக்குப் பறந்தது. அதுவரை அமைச்சரவையில் 10-வது இடத்தில் இருந்த வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், இப்போது முதல் அமைச்சர் பன்னீர்செல்வமாக கோட்டைக்குள் நுழைந்தார்.

ஓ.பன்னீர்செல்வம்

முதல் கையெழுத்து... முதல் பேட்டி!

பொன்னையன், தம்பித்துரை, ஓ.பன்னீர்செல்வம்ஜெயலலிதா கோட்டைக்கு வருவது ஒரு ‘சாமியின் தேர்பவனியைப் போல’ இருக்கும். நிச்சயம் அப்படிப்பட்ட படோடோபமான வருகையை பன்னீர்செல்வத்திடம் இல்லை. அதை அந்தச் சூழ்நிலைக்கைதியிடம் யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. பன்னீர்செல்வத்தின் காருக்கு முன்னால் ஒரு கார், பின்னால் ஒரு கார்... என இரண்டு கார்கள் சூழ கோட்டைக்கு வந்தார் தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். அவரைக் கோட்டையில் உள்ள அதிகாரிகள் வரவேற்று முதலமைச்சர் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் இருக்கையில் அமராமல் தனியாக ஒரு இருக்கையைப் போட்டு அமர்ந்தார்.

முதல் கையெழுத்தாக பத்திரப் பதிவு சம்மந்தப்பட்ட ஒரு கோப்பில் கையெழுத்துப்போட்டார். சீனியர் அமைச்சர்களான பொன்னையன், செங்கோட்டையன் பக்கத்தில் இருந்தனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது சுதாரித்துக் கொண்டு, அண்ணா, எம்.ஜி.ஆர் படம் மட்டும் இருப்பதைக் கவனித்துவிட்டு “அம்மா படம் ரெடி பண்ணுங்கள்” என்ற சன்னமான குரலில் உத்தரவிட்டார். உடனே, அதிகாரிகள் ஜெயலலிதாவின் படத்தைக் கொண்டுவந்து வைத்தனர். ஜெயலலிதா படம் வைக்கப்பட்ட பிறகே போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அதன்பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு. பத்திரிகையாளர்களின் கேள்விகளை நிதானமாக எதிர்கொண்டவர், ஒரு கேள்விக்கு அளித்த பதில் மிக முக்கியமானது. “தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பீர்களா?”எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு “பொறுப்பை உணர்ந்து அதற்குத்தக்கபடி முடிவெடுப்பேன்” என்று பதில் அளித்தார் பன்னீர்செல்வம். 

ஒருமுறை கோட்டை... இருமுறை போயஸ் தோட்டம்!

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாபத்திரிகையாளர்கள் சந்திப்புக்குப்பிறகு கோட்டையில் இருந்து கிளம்பியவர் நேராக தனது தென்பெண்ணை இல்லத்துக்குச் சென்றார். மாலையில் மீண்டும் போயஸ் கார்டன் சென்று ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தினார். இதையே தனது அன்றாட வழக்கமாக வைத்துக் கொண்டார் பன்னீர்செல்வம். கோட்டைக்கே ஒரு முறை செல்பவர், போயஸ் தோட்டத்துக்கு இரண்டுமுறை ஆஜர் போட்டார். ஆனால் அதிகாரிகள்தான் அந்த நேரத்தில் ரொம்பவும் திணறிப்போனார்கள்.

பன்னீர்செல்வம் எப்போது கோட்டைக்கு வருகிறார்... எப்போது வெளியேறுகிறார் என்பதை அவர்களால் கணிக்கவே முடியவில்லை. ஜெயலலிதா கோட்டைக்கு வருகிறார் என்றால் முதலில் போலீஸ்காரர்கள் வந்து குவிவார்கள். ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே போலீஸ்காரர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கிவிடும். கோட்டையில் உள்ள அதிகாரிகள் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பார்கள். முதலமைச்சரிடம் மனுக்கொடுக்க வரும் பொதுமக்கள் ஒருபக்கம் குவிந்து நிற்பார்கள். வெளியூர்களில் இருந்து வரும் கட்சிக்காரர்கள் கறைவேட்டி, கஞ்சிபோட்ட சட்டையோடு அணிவகுத்து நிற்பார்கள். இந்த வரிசையை எல்லாம் சீர்படுத்துவதில் போலீஸ் மூச்சுத் திணறிப்போகும். ஆனால் பன்னீருக்கு அப்படியில்லை! 

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆசான் பொன்னையன்!

பொன்னையன் பன்னீர்செல்வம்கோட்டைக்கு சத்தமில்லாமல் வரும் பன்னீரை சரியாக அறிந்து வைத்திருந்தவர் பொன்னையன்தான். வருவாய்த்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தபோது, துறை ரீதியாக தனக்கு எழும் சந்தேகங்களை அன்றைய நிதி மற்றும் சட்டத்துறை அமைச்சர் பொன்னையனிடம்தான் கேட்பார். அந்த வழக்கம் அவர் முதலமைச்சர் ஆனபிறகும் தொடர்ந்தது. ஒரே வித்தியாசம், இப்போது பொன்னையன் ஓ.பன்னீர்செல்வத்தின் அறையைத் தேடிப்போகிறார். தினமும் ஒரு மணிநேரம் முதலமைச்சரின் பணிகள் குறித்து பொன்னையன் ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிளாஸ் எடுக்கிறார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இருந்த அதிகாரிகள்தான் பன்னீர்செல்வத்தைச் சுற்றியும் இருந்தனர். அவர்கள் பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் பற்றி கார்டனுக்கு தனியாக ஒரு அறிக்கை கொடுத்துக் கொண்டிருந்தனர். இதுபோக, சசிகலாவுக்கு வேண்டிய அதிகாரிகள் அவருக்கும் அறிக்கை அனுப்பிக் கொண்டிருந்தனர். அதன்பிறகு முதல்முறையாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டியவர், என்ன பேசப்போகிறார் என்று மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் குறுகுறுப்பு. வந்தார்கள். “அம்மா மீண்டும் இந்த நாற்காலியில் வந்து அமருகிறவரை எனக்கு நிம்மதியில்லை” என்று பேசினார். அனைத்து அமைச்சர்களும் அதற்கு ஆமாம் என்று தலையாட்டுவதைத்தவிர வேறு வழியில்லை.  

யாருக்கு விசுவாசம்... பரிதவித்த பன்னீர்செல்வம்!

ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன்

அந்தநேரத்தில் பன்னீர்செல்வம் தனது விசுவாசத்தை ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும், தன் அரசியல் குரு தினகரனுக்கும் நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அன்றாடம் தோட்டத்துக்கு அட்டெண்டன்ஸ், நீட்டிய பைல்களில் கையெழுத்து, இருபத்து நாலு மணி நேர கண்காணிப்பு என்று தங்கக்கூண்டில் அடைக்கப்பட்ட பச்சைக் கிளியைப்போல் பரிதவித்தார் பன்னீர்செல்வம். அது அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. அதேநேரத்தில் எதிர்காலத்தில் எப்படிச் செயல்படவேண்டும் என்பதற்கான பாடங்களாகவும் அமைந்தன. யாருக்கு தன் விசுவாசத்தைக்காட்ட வேண்டும் என்று ஜெயலலிதாவே பன்னீருக்கு வகுப்பெடுத்தார். அதில் பன்னீருக்கு ஜெயலலிதா மூன்று கட்டளைகள் கொடுத்தார். அந்தக் கட்டளைகளில் ஒன்றுதான், தினகரனுக்கும் பன்னீருக்கும் இடையில் லேசான விரிசல் உருவாகக் காரணமாக அமைந்தது. 

பயணம் தொடரும்..

http://www.vikatan.com/news/coverstory/82419-ponnaiyan-master-of-o-panneerselvam--can-ops-be-crowned-mr-clean-episode---5.html

Link to comment
Share on other sites

“ஜெயலலிதா பிறப்பித்த 3 கட்டளைகள்!” : ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? - அத்தியாயம் - 6

ஓ.பன்னீர்செல்வம்

மிழகத்தின் உச்ச அதிகாரம் படைத்த பதவி, தமிழக முதல்வர் பதவி. “தன் கனவிலும்கூட அந்தப் பதவியை அடைவோம்” என்று பன்னீர் பன்னீர்செல்வம்செல்வம் நினைத்திருக்க மாட்டார். ஆனால், நிஜத்தில் அது நிறைவேறியது. அப்படி நிறைவேறியபோது, அவரிடம் எந்த அதிகாரமும் இல்லை. போயஸ் கார்டனில் 80 சதவிகித அதிகாரம் இருந்தது. மீதி 20 சதவிகித அதிகாரத்தை போயஸ் கார்டனுக்கு வெளியில் இருந்த மன்னார்குடி குடும்பம் வைத்திருந்தது. வசதியான கூண்டில் அடைக்கப்பட்ட பறவையைப்போல பன்னீர் பரிதவித்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், ஜெயலலிதா அவருக்கு மூன்று கட்டளைகள் விதித்தார். அது, பன்னீர்செல்வத்துக்கு ஒரு பக்கம் நிம்மதியைக் கொடுத்தாலும், தன் அரசியல் ஆசான் டி.டி.வி.தினகரனோடு இருந்த உறவில் சிறு விரிசலையும் ஏற்படுத்தியது.

ஜெ. கட்டளைகளுக்கு என்ன காரணம்?

பன்னீர்செல்வம் என்னதான் பணிவுக்கும் விசுவாசத்துக்கும் பாத்திரமாக இருந்தாலும், முதல்வர் நாற்காலியில் அமர்கிற யாருக்கும் ஒரு அசாத்திய துணிச்சல் வந்துவிடும். அது என்றைக்குமே நமக்கு ஆபத்தாகப்போகும் என்பது ஜெயலலிதாவின் எண்ணமாக இருந்தது. அதோடு,  “பன்னீர்செல்வம்தான் முதல்வர்” என்ற அறிவிப்பு வெளியான நிமிடத்தில் இருந்தே கட்சிக்காரர்களுக்கு தினகரன் பிரதானமாக மாறிவிட்டார். கட்சிக்காரர்கள், அவருக்கு ‘கிங் மேக்கர்’ பட்டம் கொடுத்துக்கொண்டாடினர். தினகரனின் பெயரைச் சொல்லி, கோட்டைக்கு ஏகப்பட்ட சிபாரிசுகள் வந்தன. அவற்றைப் பன்னீர்செல்வம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பிவைத்தார். எல்லாத் துறைகளிலும் தினகரனின் சிபாரிசால் வந்த வேலைகள் குவிந்தன. இந்தத் தகவலும் அதிகாரிகள்மூலம் ஜெயலலிதாவின் கவனத்துக்குப்போயின. அதைக்கேட்டுக்கொண்ட ஜெயலலிதா, “பன்னீர்செல்வத்தை முதல்வர் நாற்காலியில் அமரவைத்தது சசிகலாவுக்காகத்தானே தவிர, தினகரனுக்காக அல்ல; அதனால், தினகரன் சிபாரிசுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். அதோடு, உடனடியாக பன்னீர்செல்வத்தை போயஸ் தோட்டத்துக்கு அழைத்து, அவருக்கு 3 கட்டளைகளைக் கறாராகப் பிறப்பித்தார். 

ஜெயலலிதா போட்ட 3 கட்டளைகள்! 

பன்னீர்செல்வம் - ஜெயலலிதா

1.அரசாங்க ‘ஃபைல்’களை பன்னீர்செல்வம் தன் வீட்டில் வைத்துப் பார்க்கக்கூடாது; கோட்டையில் வைத்துத்தான் ‘ஃபைல்’களைப் பார்க்க வேண்டும். 

2.ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரண்டு மணி வரை  உறவினர்களைச் சந்திக்கலாம். தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக மட்டுமே உறவினர்கள், நண்பர்களை அவர் வீட்டில் தங்கவைக்கலாம்; அப்படியல்லாமல், மற்றவர்களை வீட்டுக்குள் தங்கவைக்கவே  கூடாது.

3.தன்னிடம் (ஜெயலலிதாவிடம்) முன் அனுமதி பெறாமல் டி.டி.வி.தினகரனைச் சந்திக்கக் கூடாது; தினகரனிடமிருந்து எந்த  சிபாரிசு வந்தாலும், உடனே அதுபற்றி தோட்டத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 

இவைதான்  ஜெயலலிதா, பன்னீருக்கு போட்ட மூன்று கட்டளைகள். இந்த மூன்று கட்டளைகளையும் பன்னீர்செல்வம் சிறு பிசிறுகூட தட்டாமல் பின்பற்றினார். அதில், தினகரனுக்கு வருத்தம் ஏற்பட்டது; அந்த வருத்தம், பன்னீர்செல்வத்துக்கும் தினகரனுக்கும் இடையில் லேசான விரிசலை உண்டாக்கியது; ஆனால், ஜெயலலிதாவின் இந்தக் கட்டளைகள்தான், பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வில் ஒரு தெளிவை ஏற்படுத்தியது; அ.தி.மு.க-வில் எப்படி இருக்க வேண்டும் என்ற நீக்குப்போக்கைக் கற்றுக்கொடுத்தது, “இனிமேல் நம்முடைய விசுவாசத்தை தினகரனுக்கும் சசிகலாவுக்கும் காட்டத் தேவையில்லை. முழுக்க முழுக்க நாம் ஜெயலலிதாவின் விசுவாசியாகவே இருந்துவிடலாம். அதன்மூலம் வரும் லாபம்-நட்டம்; ஏற்றம்-இறக்கம் அனைத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளலாம்!” என்று பன்னீர்செல்வம் தீர்மானமான முடிவுக்கு வந்தது அப்போதுதான். அதன்பிறகு, அவர் ஜெயலலிதாவின் பூரண விசுவாசியாக மாறினார். ஆனால் ஜெயலலிதாவுக்கு, ‘தினகரன் வேறு; சசிகலா வேறு’ என்பதை பன்னீர்செல்வம் சீக்கிரமே புரிந்துகொண்டார். போயஸ் தோட்டத்தில் சசிகலாதான் ஜெயலலிதா... கோட்டையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஜெயலலிதாதான் சசிகலா... என்பதை பன்னீர்செல்வம் போகப்போகப் புரிந்துகொண்டார். சசிகலாவுக்கு விசுவாசத்தைக் காட்டவில்லை என்றால், அதிகாரத்திலும் இருக்க முடியாது... கட்சிக்குள்ளும் காலம்தள்ள முடியாது... என்பதைத் தெளிவாகப் பிறகு பன்னீர்செல்வம் உணர்ந்துகொண்டார். 

பயணம் தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/82586-3-commands-from-jayalalithaa-can-opanneerselvam-be-crowned-mrclean-episode---6.html

Link to comment
Share on other sites

பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!, ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 7

ஓ.பன்னீர்செல்வம்

ன்னீர்செல்வத்தின் அரசியல்வாழ்வை அறிமுகப் படலம், அனுதாபப் படலம், அதிகாரப் படலம் என்று பிரிக்கலாம். நாம் இதுவரை பார்த்தது அவர் பெரியகுளம் டீ கடைக்காரர் பன்னீர்செல்வமாக இருந்தது முதல் முதல்முறை முதல்வர் நாற்காலியில் அமர்ந்தது வரையிலான அறிமுகப் படலம். முதல்முறை முதல் அமைச்சர் ஆனபோது பன்னீர்செல்வத்துக்கு அதிகாரப் படலம் வாய்த்துவிடவில்லை. அவர் அதற்கிடையில் அனுதாபப் படலம் ஒன்றையும் கடக்க வேண்டி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் அவர் போட்ட அந்த அஸ்திவாரம்தான், இன்றைய தேதிவரை அவர் அரசியல் நடத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அந்த அஸ்திவாரம்தான் 2001-2006 காலகட்டத்தில் கிள்ளி எடுத்துக் கொண்டிருந்த பன்னீர்செல்வத்தை, 2011-2016 காலகட்டத்தில் அள்ளி எடுக்க வைத்தது. 

அறிமுகப் படலம் டூ அனுதாபப்படலம்!

ஓ.பன்னீர்செல்வம்2001 செப்டம்பர் 21-ல் முதல்முறை முதலமைச்சர் பதவிக்கு வந்த பன்னீர்செல்வத்தை பொதுஜனம் கேலியாகத்தான் பார்த்தது. எதிர்கட்சிகள் ‘பொம்மை’ முதலமைச்சர் என்றனர். ஆனால் நாளடைவில் அதுவே பன்னீரின் பலமாக மாறியது. ஆரம்பத்தில் பன்னீரைக் கேலியாகப் பார்த்த பொதுஜனங்களிடம் இனம்புரியாத அனுதாபம் ஒன்று உருவானது. எதிர்கட்சிக்காரர்களிடம்  மானசீகமான மரியாதை ஏற்பட்டது. பன்னீரும் அந்தக் கெத்தைவிடாமல், வாய்ப்புக் கிடைக்கும்போது எல்லாம், “தான் பொம்மை அல்ல... உண்மை!” என்று நிரூபித்துக்கொண்டே இருந்தார்.

திருப்பரங்குன்றத்தில் பத்திரிகையாளர்களைத் தவிர்க்க முடியாமல் சந்தித்த பன்னீர்செல்வம் “என்னை செயல்பட முடியாத முதலமைச்சர் என்று கருணாநிதி விமர்சிக்கிறார். நான் எப்படிச் செயல்படுகிறேன் என்று என்னை உருவாக்கிய மாண்புமிகு இதயதெய்வம் அம்மாவுக்குத் தெரியும். நாட்டு மக்கள் அதைப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் கருணாநிதி என்னை விமரிசிப்பதை விட்டுவிட்டு உருப்படியான வேறு வேலைகளைப் பார்க்கலாம்” என்று பதில் கொடுத்தார். கருணாநிதிக்கு பதில் கொடுத்த கையோடு, ““நான் தற்காலிக முதல்வர்தான்; அம்மாதான் நிரந்தர முதல்வர்; இடையில் அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையால் அவர் இந்தப் பதவியை என்னிடம் ஒப்படைத்துள்ளார்; அம்மாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை அம்மா விரைவில் தகர்த்துவிடுவார்; அப்போது நான் இந்தப் பதவியை அவரிடம் பத்திரமாக ஒப்படைத்துவிடுவேன்” என்று விசுவாசத்தை வெளிப்படுத்தினார். 

 

2001-2011 : பத்தாண்டு அக்னீப் பரீட்சை! 

தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் 5 மாதங்கள் அமர்ந்திருந்தார் பன்னீர்செல்வம். அந்த 5 மாதங்கள்தான் அவருடைய அரசியல் வாழ்க்கைக்குத் திருப்புமுனையாக அமைந்த அனுதாபப்படலம் அரங்கேறிய காலம். போயஸ் கார்டனில் ஜெயலலிதா, சசிகலா... மன்னார்குடி குடும்பத்தில் திவாகரன், பாஸ்கரன், தினகரன் என்று ஏகப்பட்ட கரன்கள், கோட்டைக்குள் அதிகாரிகள், கட்சிக்குள் பழம்தின்று கொட்டை போட்ட சீனியர்கள், சக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று ஏகப்பட்ட உள்ளடிகள்.... இத்தனை அக்னிப் பரிட்சைகளையும் வென்று அ.தி.மு.க-வில் அதிகாரத்தை அடைவது எவ்வளவு பெரிய காரியம் என்பது கோட்டையில் இருக்கும் அமைச்சர்கள் முதல் கடைக்கோடியில் கட்சி வளர்க்கும் பகுதிச் செயலாளர்வரை அனைவரும்  அறிந்தது. அந்த அக்னிப் பரிட்சைதான் பன்னீருக்கு 2001 முதல் 2011 வரை நடந்தது. 

துரைமுருகன், ஜெயலலிதா, பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக்கிய ஜெயலலிதா, ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்தத் தேர்தல் முடிவுகள் 2002 பிப்ரவரி 24-ம் தேதி வெளியானது. தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று ஜெயலலிதாவைவிட பன்னீர்செல்வமே அதிகமாகக் காத்திருந்தார். ஜெயலலிதா வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டதுமே, தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை எடுத்துக் கொண்டு கவர்னரை நோக்கிப் போனார். ‘முதலில் கடிதத்தைப் பிடியுங்கள்’ என்று அவர் கையில் திணித்துவிட்டு வெளியில் வந்தார். தகவல் கேள்விப்பட்ட ஜெயலலிதா நெகிழ்ந்து போனார். ஆண்டிப்பட்டித் தேர்தல் வெற்றிச் செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா “பன்னீர்செல்வத்தைத் தொண்டனாகப் பெற்றது, நான் செய்த பாக்கியம்” என்றார். அன்றுமுதல் 2011 வரை கட்சிக்குள் பன்னீருக்கு ஏறுமுகம்தான். 

பழைய பன்னீர்செல்வம் டூ புதிய ஓ.பி.எஸ்!

பன்னீர்செல்வம்2001-ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பத்தாவது அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், 2002-ல் இரண்டாவது இடத்துக்கு வந்தார். பொதுப்பணித்துறையை ஜெயலலிதா பன்னீர் செல்வத்துக்குக் கொடுத்தார். 5 மாதம் முதல் அமைச்சராக இருந்தவர், பொதுப்பணித்துறை அமைச்சராகி  ஜெயலலிதா பக்கத்தில் அடக்கமாக அமர்ந்திருந்தார். அந்த நேரத்தில்தான் பொதுப்பணித்துறை என்பது ‘அள்ள அள்ளக் குறையாத’ தங்கச் சுரங்கம்  என்பது பன்னீருக்குப் புரிந்தது. ஆனாலும்கூட பன்னீர்செல்வம் அந்த நேரத்தில் அள்ளி எடுக்கவில்லை; தன்னால் முடிந்தவரை கிள்ளிமட்டுமே எடுத்துக் கொண்டார். அதன்பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது. 2006-ம் ஆண்டுத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. அப்போது பன்னீர்செல்வத்தைத்தான் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா நியமித்தார்;   அந்த நேரத்தில் பன்னீர்செல்வத்தின் பணிவுக்கு தி.மு.க எம்.எல்.ஏ-க்களிலேயே ரசிகர்கள் உருவானார்கள். எதிர்கட்சிக்காரர்கள் மத்தியிலும் பன்னீர்செல்வத்தின் மீது மானசீகமான மதிப்பு உண்டானது. அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் பொருளாளராகவும் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா நியமித்தார். பதவிக்காகவும் பொறுப்புக்காகவும் பன்னீர்செல்வத்தை நாடிவரும் கட்சிக்காரர்களின் எண்ணிக்கை அதிகமானது. பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு வேட்பாளர் பட்டியலில் அவருடைய அனுதாபிகள் அதிகளவில் இடம்பிடிக்கும் அளவுக்குப்போனது. மீண்டும் 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதுதான் பன்னீர்செல்வத்தின் அதிகாரப்படலம் ஆரம்பமான இடம்.  2011-ல் மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபோது ஓ.பன்னீர் செல்வத்துக்கு இரண்டாவது முறை முதல்வராகும் வாய்ப்பும், பொதுப்பணித்துறை மற்றும்  நிதி அவரது கைக்கு வந்தது. அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவுக்கும் சீனியர்களான பலர் எட்ட முடியாத உயரத்தை பன்னீர் எட்டினார். கட்சியில், சட்டமன்றத்தில்,  ஆட்சி நிர்வாகத்தில் பன்னீர்செல்வத்தின் கை ஓங்கத் தொடங்கியது. அமைச்சர்களையும் கட்சிக்காரர்களையும் கண்காணிக்க ஜெயலலிதா நியமித்த நால்வர் அணி, ஐவர் அணி என அனைத்து அணியிலும் பன்னீர்செல்வம் முதலாமவராக தொடர்ந்து இருந்தார். பன்னீர் செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத் லாபி உருவானது. நத்தம் விஸ்வநாதனோடு நட்பு பலப்பட்டது. இவை எல்லாம் சேர்ந்து பழைய பன்னீர்செல்வத்தை அடியோடு மாற்றி புதிய பன்னீர் செல்வமாக்கியது.

பயணம் தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/83280-panneerselvam-to-new-ops-can-ops-be-crowned-mrclean-episode---7.html

http://www.vikatan.com/news/coverstory/83280-panneerselvam-to-new-ops-can-ops-be-crowned-mrclean-episode---7.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

பணம் படைத்த பன்னீர்செல்வம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-8

பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வத்தின் ஆள்-அம்பு-படை-பட்டாளம் 

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்டவர் ஐக்கிய ஜமாத்தைச் சேர்ந்த அபுதாகீர். தி.மு.க அபுதாகிரை வைத்து பன்னீரை வீழ்த்திவிடலாம் என்று தப்புக் கணக்குப்போட்டு அவரை நிறுத்தியது. தி.மு.க நிறுத்திய அபுதாகீர் வேறு யாருமல்ல... பன்னீர்செல்வம் அவருடைய ஆரம்ப காலகட்டத்தில் வீடு வாங்க உதவியவர்; கூட்டுறவு வங்கியில் பன்னீருக்காக ஜாமீன் போட்டவர். அந்த அபுதாகீரைத்தான் தி.மு.க பன்னீருக்கு எதிராக நிறுத்தியது. பழைய நண்பர்கள்... தேர்தல் களத்தில் புதிய எதிரிகளாக நின்றனர். அந்தத் தேர்தலில் அபுதாகிர் தோற்றார். பன்னீர்செல்வம் வென்றார். தன்னை எதிர்த்துப்போட்டியிட்ட அபுதாகிரைப் பன்னீர் பரம விரோதியாக நினைக்கவில்லை. பழைய நண்பனை பயனுள்ள நண்பனாகப் பார்த்தார். அவரை அழைத்து வந்து அ.தி.மு.க-விலேயே சேர்த்துவிட்டார். அதற்கும் காரணம் இருந்தது. அபுதாகிரின் வளைகுடாத் தொடர்புகள் பன்னீருக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவரை வைத்து மிகப்பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டிய தேவை அப்போது பன்னீருக்கு இருந்தது. வளைகுடா நாடுகளில் அபுதாகிரை வைத்துத்தான் பன்னீர்செல்வம் முதலீடுகளைச் செய்தார்.  அங்கு பல சொத்துக்களை வாங்கிப்போட்டார். அதற்கு வழிகாட்டியாக அபுதாகிர் பயன்பட்டார். அதேநேரத்தில், மணல் ராஜா, பாலமுருகன், பத்திர எழுத்தர் நாகராஜ் என்ற கூட்டம் ஒன்றும் பன்னீருடன் கூட்டணி அமைத்தது. தேனி மாவட்டத்தில் எங்கெல்லாம் சொத்துக்கள் வாங்கலாம்... அவற்றை யார் பெயரில் வாங்கலாம்... என்பதற்கு யோசனை சொல்லும் ஆள்,அம்பு,படை, பட்டாளமாக பாலமுருகன், நாகராஜ், மணல் ராஜா மாறினார்கள். 

ஜெயலலிதா, பன்னீர்செல்வம்

தேனி, பெரியகுளம் பகுதிகளில் உள்ள சொத்துக்கள் விபரம் பத்திர எழுத்தர் நாகராஜூக்கு அத்துப்படி. அவர் வழிகாட்டுதலில் போடி முந்தல் எரியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் தோப்புகள், பெரியகுளம் கைலாசபட்டி கோயில் காடுகள், சோத்துப்பாறை, கும்பக்கரை, உப்புக்கோட்டை, போடேந்திரபுரத்தில்  தோப்புகள், குமுளி, வண்டல்மேடு, வெள்ளிவிழுந்தான்,ராஜகுமாரி, கஜானாபாறை, ரோசப்பூகண்டம், கம்பமெட்டு பகுதிகளில் ஏலக்காய், காபித் தோட்டங்கள், பெங்களூருவில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் நத்தம் விஸ்வநாதன் மகன் அமர், ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் சேர்ந்து தொடங்கிய தொழில் சாம்ராஜ்ஜியம் என்று பன்னீரின் சொத்து சாம்ராஜ்ஜியம் பலமடங்கு உயர்ந்தது.  

பன்னீர் சொத்து சேர்ந்(த்)த வழிகள்!

கிரானைட் அதிபர் பி.ஆர்.பி-யோடு பன்னீருக்கு நெருக்கம் ஏற்பட்டது. பி.ஆர்.பி தொழிலுக்கு சமயங்களில் பன்னீர்செல்வம் ஆதரவாக நின்றார்; அதற்குக் கைமாறாக பன்னீர்செல்வத்தின் கட்டுப்பாட்டுக்குள் சில கிரானைட் குவாரிகளைக் கொண்டுவர பி.ஆர்.பி வழி செய்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல கிரானைட் குவாரிகள் பன்னீரின் பினாமி சொத்துப் பட்டியலில் இடம்பிடித்தன. அதுபோல கேரளாவில் 1500 ஏக்கரில் டீ எஸ்டேட் ஒன்று புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அதை விசாரித்தபோது, அதற்குப் பின்னால் பன்னீர்செல்வம் இருப்பது தெரியவந்தது. இன்னும் விசாரித்தபோது பன்னீர்செல்வத்துக்காகவே அந்த எஸ்டேட் வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த விஷயம் உம்மன்சாண்டி மூலம் ஜெயலலிதாவின் காதுகளுக்கு வந்தது. ஆனால், அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், பன்னீர்செல்வத்தைக் கொஞ்சம் தள்ளிவைக்க ஆரம்பித்தார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தபோது, ஜெயலலிதாவுக்கு பன்னீரைத் தவிர வேறு விசுவாசமான ஆள் கிடைக்கவில்லை.

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா

ஓ.பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது பொதுப்பணித்துறை டெண்டர்கள் தாறுமாறாக நடைபெற்றன. ஜெயலலிதா,சசிகலாவைப் பொறுத்தவரை கார்டனுக்கு வரவேண்டியது வந்துவிட்டால் போதும் என்று  இருந்தனர். அதனால், பன்னீர் செல்வம் மட்டுமல்ல... அ.தி.மு.க அமைச்சர்களில் பசையுள்ள உள்ள இலாக்காக்களை வைத்திருந்தவர்கள் கார்டனுக்கு அள்ளிக்கொடுத்துவிட்டு, தங்களுக்காக கொஞ்சம் கிள்ளி எடுத்துக் கொண்டனர். ஆனால், நத்தம் விஸ்வநாதனும், பன்னீர்செல்வமும் மட்டும் இதில் விதிவிலக்கு. இவர்கள் இருவரும் தங்களுக்கு அள்ளி எடுத்துக்கொண்டு, கார்டனுக்கு கொஞ்சத்தை கிள்ளிக் கொடுத்தனர். பசையற்ற துறைகளை வைத்திருந்த அமைச்சர்கள் என்ன செய்வதென்று தெரியாமல், அதிகாரிகளை கசக்கிப் பிழிந்தனர். பன்னீர்செல்வத்துக்குத்தான் அந்தப் பிரச்னை இல்லை அல்லவா! அவர் வசம் பொதுப்பணித்துறை இருந்ததே! பொதுப்பணித்துறை டெண்டர்கள் பன்னீர்செல்வத்தின் வீட்டிலேயே விடப்பட்டன. ஒவ்வொரு டெண்டருக்கும் கார்டன் பெயரைச் சொல்லி, 30 சதவிகித கமிஷன் கறாராக நிர்ணயிக்கப்பட்டது; போலி பில்கள் போடப்பட்டன. திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் பெரும்பகுதி பன்னீர் செல்வத்தின் பாக்கெட்டுக்குப் போனது.

ராக் அன்டு ஆர்ச் மற்றும் இன்பிரா டெவலப்பர்ஸ் 

ராக் அன்டு ஆர்ச் கன்ஸ்டிரக்ஷன் நிறுவனம், ஈரோட்டில் இருந்து செயல்படுகிறது. செம்பரம்பாக்கம், நேமம், அயனம்பாக்கம் என்று ஏரிகள் தொடங்கி கூவம் ஆறு சீரமைப்பு வரை பல வேலைகள் இந்த நிறுவனத்தின் வசம் கொடுக்கப்பட்டன. தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற 90 சதவீத வேலைகள், ராக் அன்டு ஆர்ச் கன்ஸ்டிரக்ஷன் இல்லாமல் நடந்திருக்காது. இதன் இயக்குனர்கள் பழனிகவுண்டன்பாளையம் குமரப்பா கவுண்டர் துரைசாமி, பகலையூர் சென்னிமலை கவுண்டர் சுப்பிரமணியம். இதைப்போல, கடந்த 5 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை வேலைகளில் கோலேச்சிய மற்றொரு நிறுவனம் அன்னை இன்பிரா டெவலப்பர்ஸ். இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் சுப்பிரமணியம் அசோக் குமார், கலைச்செல்வி, ரவீந்திரன்.  இந்த இரண்டு நிறுவனங்களோடு இரண்டு லெட்டர் பேடு நிறுவனங்களும் உள்ளன. இந்த நான்கு நிறுவனங்களைத்தாண்டி, வேறு யாருடனும்  பொதுப்பணித்துறை ஒப்பந்தம் போடவில்லை. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மூலம் அரசாங்க வேலைகளை எடுக்க ஆரம்பித்த இந்த நிறுவனங்கள், கடந்த 5 ஆண்டில் சம்பாதித்த தொகை பல நூறு கோடிகள்; அதில் சில நூறு கோடிகள் பன்னீருக்குப் போனது. 

வைத்திலிங்கம்,கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம்

2011-12 பட்ஜெட்டில் அன்றைய நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளை ஆழப்படுத்தி, நீரின் கொள்ளளவை அதிகப்படுத்த 163 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால், அதில் சில கோடிகள் கூட செலவு செய்யப்படவில்லை. சோழவரம் ஏரியை டி.ராஜாராம் என்பவர் தூர்வாரினார். போரூர் ஏரி ராக்ஆர்ச் கன்ஸ்டிரக்சன் என்ற நிறுவனமும் அயனம்பாக்கம் ஏரியை இன்பிரா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனமும் தூர்வாரின. இந்த இரண்டு நிறுவனங்களும்  முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவுக்கு நெருக்கமானவை என்று சொல்லப்பட்டன. 

போலி பில்கள்... ஏமாற்றும் வேலைகள்!

போரூர் ஏரி கொள்ளளவை உயர்த்த 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ராக்-ஆர்ச் கன்ஸ்டிரக்சன் நிறுவனம் ஏரியை ஆழப்படுத்தாமல், ஏரியில் உள்ள மண் சரியாமல் இருக்க கட்டுமானப் பணியை மட்டும் செய்தார்கள். மேடான பகுதிகளில் உள்ள மண்ணை அள்ளி தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு விற்றனர். அதில் ஒரு பெரும்தொகை கிடைத்தது. அதுதவிர்த்து பணி முடிந்துவிட்டது என்ற போலியான பில்கள் தயாரிக்கப்பட்டன. 5 கோடி ரூபாய்க்குள் பணிகளை முடித்துவிட்டு, மற்ற போலி பில்களை வைத்து 20 கோடியை சுருட்டிக் கொண்டனர். அய்யணம்பாக்கம் ஏரியில் ஒரு பகுதியில் 60 அடி ஆழம்வரை மணல் இருந்தது. அந்த மணலை திருவேற்காடு நகராட்சித் தலைவர் பவுலிடம் 10 கோடிக்கு விற்றனர். பவுல் அதை 15 கோடிக்கு விற்றார். இங்கும் கரைகள் மட்டும் சரிசெய்யப்பட்டன. ஆனால், 30 கோடிக்கு எம்.புத்தகம் தயாரிக்கப்பட்டு ஒப்பந்தக்காரர் பெயரில் கசோலை கொடுக்கப்பட்டது. நேமம் ஏரிக்கு 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இங்கு கிடைத்த மணல் சேகர் ரெட்டிக்கு 12 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பிறகு சில கட்டுமான வேலைகள் செய்யப்பட்டன. மற்ற தொகைக்கு வழக்கம்போல் பில்கள் தயார் செய்யப்பட்டு 80 கோடி ரூபாய் சுருட்டப்பட்டது. மூன்று அரசாணைகள் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 179 வேலைகள் நடந்ததாக எம்.புத்தகம் சொல்கிறது. ஆனால், இவற்றில் ஒரு வேலைகூட நடக்கவில்லை என்பதுதான் எதார்த்தம். அதன்விளைவுகளை சென்னை 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் அனுபவித்தது. அப்போது ஏற்பட்ட பெருமழையில் சென்னை மூழ்கியதற்கு முக்கியக் காரணங்கள் பன்னீர் செல்வம் பொதுப்பணித்துறையில் நடத்திய இந்தக் கூத்துக்கள்தான். இவை எல்லாம் மிகச்சிறிய சாம்பிள்கள் மட்டுமே. இந்தக் கொள்ளை தமிழகம் முழுவதும் நடந்தது. அதில் பலகோடிகள் பன்னீர்செல்வத்தின் பாக்கெட்டுக்குப் போனது. அதில் பல சொத்துக்களை வாங்கி ஆக்கிரமித்தார்; சில சொத்துக்களை ஆக்கிரமித்து வாங்கினார். அப்படி பன்னீர் ஆக்கிரமித்த 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தின் கதை அடுத்த அத்தியாயத்தில்...

பயணம் தொடரும்...

http://www.vikatan.com/news/coverstory/84752-how-panneerselvam-become-rich-can-ops-be-crowned-mrclean-chapter-8.html

Link to comment
Share on other sites

“பன்னீர்செல்வம் குடும்பத்தை ஒதுக்கி வைத்த ஜெயலலிதா!” - ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம் - 9

ஓ.பன்னீர்செல்வம்

பன்னீர்செல்வம் அரங்கேற்றிய விசித்திர நாடகம்!

2001-ம் ஆண்டு டான்சி வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா, ஓ.பி.எஸ்ஸை முதல்முறையாக முதல் அமைச்சராக்கினார். ஓ.பி.எஸ் பதவிப் பிராமணம் எடுத்து முடிந்த, அடுத்த நொடியே ஜெயலலிதா அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்களும் அவசர அவசரமாக அங்கிருந்து நகன்றனர். தனித்த ஆளாக, தளர்ந்த நடையோடு, உணர்ச்சிகள் அற்ற முகத்தோடு பன்னீர்செல்வம் கடைசி ஆளாக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியேறினார். தன்னுடைய காரில் ஏறிக்கொண்டவர், தன் காருக்கு முன்னால்-பின்னால் போலீஸ் வாகனங்கள் எதுவும் அணிவகுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அதன்பிறகு பன்னீர்செல்வத்தின் மீதான நம்பிக்கை ஜெயலலிதாவுக்கு அதிகரித்தது. அவரை ஜெயலலிதா கொஞ்சம் தள்ளியே வைத்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவின் விதி பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் அதிஷ்டத்தைக் கொண்டு வந்தது. 2014 செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா காலையில் 11 மணிக்கு ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்துவிட்டார். தண்டனை விபரங்களை மதியத்துக்கு மேல் அறிவிக்கிறேன் என்று நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு அவருடைய அறைக்குச் சென்றுவிட்டார். அப்போது நீதிமன்றத்துக்குள் இருந்து வெளியில் வந்த ஜெயலலிதா பன்னீர்செல்வத்தை மட்டும் தனியாக அழைத்து, “நீங்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்” என்று மீண்டும் பன்னீர்செல்வத்திடமே பொறுப்பை ஒப்படைத்தார். 

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா

‘கண்ணீர் மல்க ஓ.பி.எஸ் இரண்டாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார். இந்தமுறை ‘போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்’ என்று முதல்முறை மறுத்ததுபோல் ஓ.பி.எஸ் மறுக்கவில்லை. ''கொஞ்சம் போலீஸ் போதும்'' என்று தனது நிலைப்பாட்டைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டார். விசிட்டர்களின் வருகையில் மாற்றம் தெரிந்தது. அவர் வீட்டைத் தேடி சொந்த ஊர் ஆட்களும், சென்னை ஆட்களும் நூற்றுக் கணக்கில் குவியத் தொடங்கினர். அதே அளவு ஓ.பி.எஸ்.சின் வாரிசான மகன் ரவீந்திரநாத் வீட்டிலும் ஆட்களின் கூட்டம் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் சாந்தோம், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், கண்ணகி சிலை சந்திப்புகளில் கோட்டைக்குப் போகும் ஓ.பி.எஸ். ரூட்டை போலீஸ் கையிலெடுத்தது. ஓ.பி.எஸ் கோட்டைக்குப்போகும் நேரத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆனால், கோட்டைக்கு அருகில் குறிப்பாக போர் நினைவுச் சின்னம் அருகில் சென்றதும், இந்தக் காட்சிகள் மாறும். ஓ.பி.எஸ்.காருக்கு முன்னும் பின்னும் செல்லும் போலீஸ் சைரன் வாகனங்கள் மாயமாய் மறைந்துவிடும். அந்த இடத்தில் போக்குவரத்து தடை செய்யப்படாது. கார் கோட்டைக்குள் நுழையும்போது ஓ.பி.எஸ்.சாதரணமாக இருப்பார். இந்த முன்னுக்குப்பின் முரணான விசித்திர நாடகங்கள் ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன.  உடனே சசிகலா ஒரு கண்காணிப்பு டீமை களத்தில் இறக்கினார். அந்த கண்காணிப்பின் டீமில் ஓ.பி.எஸ் மட்டும் சிக்கவில்லை. அவரோடு சேர்ந்து ஒட்டுமொத்த ஐவர் அணியும் சிக்கியது. அந்த டீம் சம்பாதித்த பங்களா, தியேட்டர், மால், பில்டர்ஸ், கல்லூரி, கடல் கடந்த வியாபாரங்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்குப்போனது. இதையடுத்து ஓ.பி.எஸ் உறவினர்களை கட்சியில் களையெடுத்தார் ஜெயலலிதா.

ஜெ. நடத்திய ஆப்பரேஷனில் பன்னீர்செல்வம்!  

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வெளியில் வந்த ஜெயலலிதா, தான் முதல்வர் பதவியில் இல்லாத போது எந்தெந்த துறைகளில் பைல்கள் கையெழுத்தாயின, எவ்வளவு முறைகேடுகள் நடந்தது என்பது பற்றி ரகசிய விசாரணை நடத்த உத்தரவிட்டார். முன்னாள் டி.ஜி.பி. அலெக்சாண்டர் தலைமையிலான குழு அந்த விசாரணையை நடத்தியது. ஓ.பன்னீர்செல்வம் வசம் இருந்த பொதுப்பணித்துறையில் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்திருப்பதாக அந்த ரகசிய குழு ஜெயலலிதாவிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் முக்கியமான வில்லன்களாக வெளிவந்தவர்கள் ஓ.பி.எஸ்ஸின் தம்பி ராஜா, அவரது மகன் ரவீந்திரநாத். 

தேனி மாவட்டத்தில் ராஜாதான் ராஜா!

ஓ.ராஜாபெரியகுளம் அருகேயுள்ள தேவதானம்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து என்பவர் 2012 செப்டம்பர் 17-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய தற்கொலைக் கடிதத்தில், ஓ.பி.எஸ். தம்பி ராஜாவின் ‘டார்ச்சர்’ காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டு இருந்தார். அந்த விவகாரத்தில், ஓ.பி.எஸ் ஜெயலலிதாவின் காலில் விழுந்துகூட அல்ல... சசிகலாவின் கருணையால்தான் தன் பதவியைக் காப்பாற்றிக் கொண்டார். அந்த ராஜாவைப் பற்றி அலெக்சாண்டரின் அறிக்கை புட்டு புட்டு வைத்தது. தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைத் துறை உள்பட பல்வேறு துறைகளில் ராஜா வைத்ததுதான் சட்டமாக இருந்தது. தென் மாவட்டங்களில் மணல் மற்றும் குவாரிகள் உள்பட பல்வேறு ஒப்பந்தங்களும் ராஜாவின் கண்ணசைவில்தான் நடைபெற்றன.

‘உன் குடும்பத்தையே ஓழிச்சிக்கட்டிடுவேன்’ தொலைச்சுடுவேன்’ என்று மிரட்டுவதுதான் ராஜாவின் ஸ்டைல். கட்சிக்காரர்கள், பொதுமக்களிடம் குரலை உயர்த்திப் பேசுவது, ஜாதியைச் சொல்லித் திட்டுவது என்று ஏகப்பட்ட வெறுப்பை தேனி மாவட்டத்துக்குள் ராஜா உருவாக்கி வைத்திருந்தார். கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள மஞ்சளாறு அணைக்கட்டில் உள்ள வனப்பகுதியில் இருந்த சந்தனம், தேக்கு உள்பட விலையுர்ந்த மரங்களை வெட்டினார் என்ற குற்றச்சாட்டில் ராஜேந்திரன் என்கிற வனத்துறை அதிகாரியுடன் மோதினார். இருவரும் துப்பாக்கியால் மாறி மாறி சுட்டுக்கொண்டதாக சொல்லப்பட்டது. தேனி மாவட்டத்தில்  அகமலை, நாகலாபுரம், ஓடைப்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பணை கட்டியது, பாலம் கட்டியது, சாலைகள் அமைத்தது போன்ற திட்டங்களில் நடைபெற்ற முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. முல்லை பெரியாறு, வைகை ஆற்றுப்படுகையில் மூன்று ஆண்டுகளில் 5 லட்சம் யூனிட்டுக்கு மேல் மணல் திருட்டுத்தனமாக கேரளாவுக்குக் கடத்தப்பட்டது. அதில் ராஜாவின் கைங்கர்யம் இருந்தது. 

ஓ.பி.எஸ்-ஆக்டோபஸ் குடும்ப அரசியல்! 

ஓ.பன்னீர் செல்வம் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருடைய தம்பி ராஜா பெரியகுளம் நகராட்சித் தலைவர். பன்னீரின் மூத்த மகன் ரவிந்திரநாத் குமார், தேனி மாவட்ட இளைஞர்கள் இளம்பெண் பாசறை செயலாளர். பன்னீரின் மகளை திருமணம் செய்த காசிராஜன், வீட்டு வசதிவாரிய அரசு வழக்கறிஞர். காசிராஜன் அப்பாவான செல்லப்பாண்டியன், மதுரை உயர் நீதிமன்ற அடிஷனல் அட்வகேட் ஜெனரல். இளைய மகன் பிரதீப் மனைவியின் உறவினர் தங்கராஜ், வங்கி விவகாரங்களைப் பார்க்கும் அரசு வழக்கறிஞர். ரவீந்திரநாத் குமாரின் மாமனார் கந்தசாமி முன்னாள் காவல் துறை அதிகாரி. ஓ.பி.எஸ் தங்கை கணவர் சரவணன் பல்வேறு அரசு ஒப்பந்தங்களைப் பார்ப்பவர். பாலமுருகன் என்கிற தம்பி சென்னையில் இருந்து பல்வேறு துறைகளை தனது கன்ட்ரோலில் வைத்துள்ளார்.

கடைசித் தம்பியான சுந்தரம் அதிகார வட்டாரத்தில் மூக்கை நுழைப்பவராக வலம் வந்தனர். அதோடு 30 மாவட்டச் செயலாளர்கள் ஓ.பி.எஸ். மூலம் பதவியைப் பிடித்தவர்கள்; அவர்கள் அனைவரும் ஓ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளர்கள் என்ற அதிர்ச்சியை அலெக்சாண்டரின் அறிக்கை அம்பலப்படுத்தியது; அதிர்ந்துபோனார் ஜெயலலிதா.

“பன்னீர்செல்வத்துக்குகூட ஆதரவாளர்கள் இருக்கிறார்களா?” என்று கேட்டு ஜெயலலிதா ஆச்சரியமடைந்தார். ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் ரவிந்திரநாத், பன்னீர்செல்வம்குமார்தான் அனைத்து அரசு ஒப்பந்தங்கள், டெண்டர்கள் உள்பட அரசு சம்பந்தப்பட்ட அனைத்துக் கோப்புகளையும் பார்த்து வந்தனர். பல்வேறு அரசு அதிகாரிகள், கட்சிக்காரர்கள் என்று தன்னைப் பார்க்க வருபவர்களை அவரின் உதவியாளர் மூலம் முன்பே சொல்லி காலில் விழ வைப்பது ரவியின் ஸ்டைல். அதோடு இல்லாமல் சினிமாத்துறையிலும் ரவி முதலீடு செய்தார். கேரளாவில் தயாராகும் படங்களுக்கு பாதிக்குமேல் ரவிதான் தயாரிப்பாளர் என்று ரவியைப்பற்றியும் அலெக்சாண்டரின் அறிக்கையில் தாறுமாறு பக்கங்கள் இடம்பெற்றன. இதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சென்னை வீடு, திருவல்லிக்கேணியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் அலுவலகம் உள்பட அவரது உறவினர்கள்  வீடுகளில் காவல்துறையினர் ரகசியமாக அதிரடி சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். 

ஓ.பி.எஸ் குடும்பத்தை விலக்கிவைத்த ஜெயலலிதா!

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலைபெற்று முதல்வராக பதவியேற்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா புதுக்கோட்டை திருக்கடையூரில் குடும்பத்தினருடன் சாமி கும்பிடச்சென்றார். அது ஜெயலலிதாவின் சந்தேகத்தையும் கோபத்தையும் அதிகப்படுத்தியது. உடனே சென்னைக்கு வருமாறு ராஜாவுக்கு அழைப்பு வந்தது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தனியாக விசாரணை நடத்தப்பட்டது.  சொத்துக்கள் வாங்கியது, பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடந்தது. பெரியகுளம் பூசாரி நாகமுத்து கொலை சம்பவம் தொடர்பான பைல்களை உடனே சென்னைக்கு கொண்டு வரும்படி பெரியகுளம் டி.எஸ்.பி.க்கு உத்தரவு பறந்தது. இதைத் தொடர்ந்து ராஜாவிடம் இருந்து பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிமுக தலைமை எழுதி வாங்கியது. மேலும், சென்னையில் தங்கியுள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் பார்க்க கூடாது, பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து சென்னையில் தங்கியிருக்க வேண்டும் என்று ராஜாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ராஜாவை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் பவர்புல் பினாமியாக விளங்கிய அவரது உறவினர்களான வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தார். அதுபோல் அவரது மகன் காசிநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வீட்டு வசதி வாரியத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். அவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி போயஸ்கார்டனில் இருந்து கட்டளை வந்தது. ஆனால், இவ்வளவுக்குப்பிறகும் பன்னீர்செல்வத்தைப் பக்கத்தில்தான் வைத்திருந்தார் ஜெயலலிதா. ஆனால், 2016 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு கரூர் அன்புநாதன் வீட்டில் ஒரு அதிரடி ரெய்டு நடந்தது. அதன்பிறகு பன்னீர்செல்வத்துக்கு போயஸ்தோட்டத்தின் மேற்பார்வையில் பொள்ளாச்சியில் வைத்து தோலுரிப்பு நடத்தினார்கள் ஜெயலலிதாவும்,சசிகலாவும். 

பயணம் தொடர்கிறது. 

http://www.vikatan.com/news/coverstory/84849-jayalalithaa-sacks-panneerselvam-and-his-family-can-ops-be-crowned-mrclean-chapter-9.html

Link to comment
Share on other sites

பன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!, ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா? அத்தியாயம்-10

ஓ.பன்னீர்செல்வம்

2016 மார்ச் மாதம்... தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டிக் களம் பரபரப்பாகிக்கொண்டிருந்தது. தி.மு.கவை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்று சொல்லி சூறாவளிப் பயணத்தில் ஈடுபட்டிருந்தார். பா.ம.கவின் வெற்றிக்காக ‘மாற்றம்- முன்னேற்றம்-அன்புமணி’ என்ற கோஷத்தை முன்வைத்து விதவிதமான மேடைகளில், விதவிதமான ‘கெட்-அப்’புகளில் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்துகொண்டிருந்தார். மக்கள் நலக்கூட்டணியின் கௌரவத்தைக் காப்பற்றிவிட வேண்டும் என்ற தவிப்பில் திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், வைகோ, விஜயகாந்த் உள்ளிட்டவர்கள் ஆளுக்கொரு திசையில் போராடிக்கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட பரபரப்பான நேரத்தில் அ.தி.மு.க-வில்  உச்சக்கட்ட அவமானம் அரங்கேறிக்கொண்டிருந்தது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு, சட்டம்-ஒழுங்கு, உள்கட்சிப் பஞ்சாயத்துக்களைக் கண்காணிக்கும் சக்தி வாய்ந்த ‘ஐவர் அணி’யை மொத்தமாக போயஸ் கார்டன் ‘கஸ்டடி’ எடுத்திருந்தது. ஓ.பன்னீர்செல்வம் ஒரு வாரத்துக்கு மேலாக ஒளித்து வைக்கப்பட்டு இருந்தார்; நத்தம் விஸ்வநாதன் எந்தத் திசைக்குப்போனார் என்பதை யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை; அமைச்சர் பழனியப்பன் ஆறு நாள்களாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருந்தார். அவர்களுக்கு என்ன ஆனது, எங்கு போனார்கள் என்பதெல்லாம்  அரண்மனை ரகசியம்போல் இருந்தது. அ.தி.மு.க என்ற இரும்புக் கோட்டைக்குள் அரங்கேறிக்கொண்டிருந்த அந்த இருட்டு நாடகத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அதை வீதிக்குக் கொண்டுவந்தனர் ராமதாஸும், கருணாநிதியும்! அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் அந்த மர்மங்கள் விடுபட்டன. தமிழகம் அதிர்ந்து அடங்கியது!

ஓ.பி.எஸ் - ஐவர் அணி - 30 ஆயிரம் கோடி!

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், “அ.தி.மு.க.வின் மூத்த அமைச்சர்கள் சிலர் ஊழல் மூலம் குவித்த பணத்தில் ஒரு பகுதியை தலைமையிடம் கணக்குக் காட்டாமல் தாங்களே பதுக்கிக்கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க-வில் ஐவர் அணி என்றழைக்கப்படும் 5 அமைச்சர்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் பல ஆயிரம் கோடி பணமும், சொத்துகளும் மேலிடத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி சேர்த்த சொத்துகள் பற்றி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது மட்டுமன்றி, அவர் மகனும் சட்டவிரோத காவலில் வைத்து 3 நாட்கள் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டதுடன், தம்மிடம் உள்ள பணம் மற்றும் சொத்துகளை ஒப்படைத்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மூத்த அமைச்சர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மற்றும் சொத்துகளின் மதிப்பு 30 ஆயிரம் கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிட்டு இருந்தார்.

பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன்

தி.மு.க தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “மன்னார்குடி அமைச்சர் ஒருவர் ஆம்னி பேருந்தில் மூட்டை மூட்டையாகப் பணத்தையும் நகையையும் ஏற்றிக்கொண்டு வந்ததாக செய்தி வெளியாகி உள்ளது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமரேந்திரா எனும் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டிவரும் ‘காஸா கிராண்ட்’ நிறுவனம், நியூயார்க் நகரில் உள்ள விலை உயர்ந்த ஓட்டல், லண்டனைச் சேர்ந்த ‘ஓக்லி பிராப்பர்ட்டி சர்வீஸ்’ ஆகியவற்றில் அமைச்சர் ஒருவர் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார். தற்போது மூத்த அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணம் 30 ஆயிரம் கோடி என்றும், அப்பணம் மேலிடத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன” என்று குறிப்பிட்டிருந்தார். 

ஓ.பன்னீர்செல்வம் பிடிபட்ட கதை!

பன்னீர்செல்வம்சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதலமைச்சரான ஜெயலலிதா பன்னீர்செல்வத்தைக் கண்காணிக்க ஆரம்பித்தார். அதற்காகவே ஐவர் அணி என்ற ஒன்றை ஆரம்பித்தார்ர. ஓ.பி.எஸ், நத்தம் விசுவநாதன், எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம், பழனியப்பன் அடங்கிய அந்த அணியில் ஓ.பி.எஸ் தவிர்த்த மற்ற நால்வருக்கும் முக்கியமான வேலையே ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிப்பதுதான். ஓ.பி.எஸ்ஸையும், ஓ.பி.எஸ்ஸைக் கண்காணிக்கும் மற்ற நால்வரையும் சேர்த்துக் கண்காணிக்க முன்னாள் டி.ஜி.பி அலெக்சாண்டர் தலைமையில் ஒரு ரகசிய ‘டீம்’ அமைத்தார். அந்த ‘டீம்’ ஐவரின் செயல்பாடுகள், சொத்துவிபரங்களைப் புட்டுப்புட்டு வைத்ததுடன், ‘ஐவரும் வேறு வேறல்ல... அனைவரும் ஒன்றே!’ என்று சொன்னது. அது ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்தது; அலெக்சாண்டர் ‘டீம்’ கொடுத்த ஐவர் அணியின் சொத்துப்பட்டியல் சசிகலாவை ஆத்திரப்பட வைத்தது.

இதையடுத்துத்தான் ஐவர் அணியை கஸ்டடியில் எடுத்த போயஸ் கார்டன் ‘டீம்’ விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்து அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டிய சொத்துகளை முடிந்தவரையில் பறித்தது. அப்படிப் பறிக்கப்பட்ட சொத்துகளின் மதிப்பு குத்துமதிப்பாக 30 ஆயிரம் கோடி. ஆனால், போயஸ் கார்டனின் இந்தக் கறாரை எல்லாம் கடந்து ஐவர் அணி பதுக்கிய சொத்துகள் அதையும் தாண்டி, பல கோடி என்றனர் விபரமறிந்தவர்கள். அதில் ஓ.பி.எஸ்ஸின் சொத்துமதிப்பு மட்டும் 15 ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று மத்திய அரசுக்கும் தகவல்போனது. 

ஓ.பி.எஸ் ஆதரவாளர்களை வேட்டையாடிய ஜெ.!

பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, அவருக்கு நெருக்கமானவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டார். எல்லப்பட்டி முருகன், பன்னீர்செல்வம்ஓ.பி.எஸ்ஸின் நெருங்கிய நண்பர் சீனி கந்தசாமி கைது செய்யப்பட்டார்; அவர் கொடுத்த தகவலின் பேரில் விருதுநகர் சுந்தரபாண்டியன் கைது செய்யப்பட்டார். முன்னதாக, போயஸ் கார்டனின் ஊழியர் ரமேஷ், சிவகுமார், சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ண மூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், “ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு டெண்டருக்கும் சில நூறு லட்சம் கைமாற்றிவிடப்பட்டன.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆலோசனைபடிதான் கட்சி பதவியிலிருந்து, டெண்டர் வரை எல்லாமே முடிவு செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள் அனைவரும் இரு அமைச்சர்களின் ஆலோசனையின்படிதான் செயல்பட்டார்கள்” என்று கூறியதாகத் தகவல் வெளியானது. நெல்லை மாவட்டத்தின் முதன்மையான கான்ட்ராக்டராகவும், ஓ.பி.எஸ்ஸுக்கு ‘ஆல் இன் ஆல்’ என்று  இருந்து வந்த முருகன் கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் தலைமறைவானார். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முருகனின் திருவிளையாடல்கள் அதிகம். தான் எடுக்கும் வேலைகளை சப் காண்ட்ராக்ட் மூலம் தனக்குக் கீழ் உள்ளவர்களுக்கு வேலை கொடுப்பார். இதற்காக 30 முதல் 40 சதவீத கமிஷனை ஓ.பி.எஸ்ஸிடம் சேர்க்கும் பணி முருகனுடையது. 

ஓ.பி.எஸ்ஸைத் துரத்தியடித்த ஜெ.! அழைக்கச் சொன்ன நடராசன்! 

ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஐவர் அணியை ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து, அவர்களிடம் இருந்த சொத்துகளைப் பறித்துக்கொண்டது ஜெயலலிதா, பன்னீர்செல்வம்போயஸ் கார்டன். அதன்பிறகு, 2016 மார்ச் 17-ம் தேதி போயஸ் கார்டனுக்கு வரச்சொல்லி ஓ.பி.எஸ்ஸூக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. கோவையில் இருந்தவர் அலறி அடித்துக்கொண்டு, இரவு 11.50 மணி ஃபிளைட்டைப் பிடித்து சென்னை வந்தார். காலையில் 10.20 மணிக்கு கார்டனுக்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் வந்தார். இவர்கள் வந்த தகவல் உள்ளே சொல்லப்பட்டது. ஆனால், உள்ளே இருந்து உடனே அழைப்பு வரவில்லை. அந்த நேரத்தில் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்டவர்களும் வந்திருந்தனர். அவர்கள் யாரும் அப்போது ஓ.பி.எஸ்ஸிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசவில்லை. அவர்களை முதலில் சந்தித்த ஜெயலலிதா, அதன்பிறகு ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதனை உள்ளே அழைத்தார். ஒரு மணி நேரம் அவர் கேட்ட கேள்விகளுக்கு எந்தப் பதிலும் சொல்ல முடியாமல், தலையைத் தொங்கப் போட்டு இருவரும் நின்றனர். ஒருகட்டத்தில் உச்சக்கட்ட ஆத்திரமடைந்த ஜெயலலிதா, "எனக்குத் தெரியாதுன்னு நினைச்சிட்டு இந்தளவுக்கு நீங்கள் செயல்படுவீங்கன்னு நான் நினைச்சுப் பார்க்கலை. உங்களுக்கு மன்னிப்பே கிடையாது. இந்தத் தேர்தலில் போட்டியிட உங்களுக்கு சீட் கிடையாது. என் முன்னே நிற்காமல் போய்விடுங்கள்" என்று சொல்லித் துரத்தியடித்தார்.

இந்தத் தகவல் அனைத்தும் சசிகலா மூலம் உடனே நடராசனுக்குப் போனது. அனைத்து விபரங்களையும் கவனமாகக் கேட்டுக்கொண்ட நடராசன், “சசி, அந்த அம்மாவிடம் பேசி சமாதானப்படுத்து. பன்னீரையும், நத்தத்தையும் அப்படியே அனுப்ப வேண்டாம். அவர்களுக்குத் தொகுதி மாற்றி சீட்டைக் கொடுத்து போட்டியிடச் சொல். அவர்கள் மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் செலவை இவர்களை வைத்தே செய்யச் சொல்” என்று யோசனை சொன்னார். இந்தத் தகவல் ஜெயலலிதாவுக்குப்போனது. அதையடுத்து மீண்டும் மாலை 5.30 மணிக்கு கார்டனுக்கு ஓ.பி.எஸ்  வரவழைக்கப்பட்டார். ஒரு மணிநேரத்துக்கும் மேல் பேச்சுவார்த்தை நடந்தது. சில பேப்பர்களில் கையெழுத்துகள் வாங்கப்பட்டன. அதன்பிறகு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். பன்னீர்செல்வம் போடி தொகுதியில் போட்டியிட்டுக் கரையேறினார். நத்தம் விஸ்வநாதன் ஆத்தூரில் போட்டியிட்டு ஐ.பெரியசாமியிடம் தோற்றுப்போனார். 

ஜெ. மரணத்துக்குப் பிறகு... 240 கோடி கமிஷன்?

2016-ம் ஆண்டு மீண்டும் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியது. ஜெயலலிதா 6-வது முறையாக முதல் அமைச்சர் ஆனார். ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் ஆனார். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கான துரதிருஷ்டங்கள் எப்போதும் பன்னீர்செல்வத்துக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவதுதானே வழக்கம். இந்தமுறையும் அதுதான் நடந்தது. ஜெயலலிதாவின் இலாக்காக்களை கூடுதலாக கவனித்துக்கொள்ளும் மூத்த அமைச்சர் ஆனார் பன்னீர்செல்வம். அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அன்று இரவே பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக முதல் அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இரண்டாவது முறையாக பன்னீர்செல்வத்துக்கு முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்றுக்கொடுத்தார் சசிகலா. ஜெயலலிதா மரணமடைந்த 15 நாட்களுக்குப்பிறகு பன்னீர்செல்வம்முக்கியமான ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அதுதான் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம். 2011 முதல் 2016 வரை இந்தத் திட்டம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் வசம் இருந்தது. 1.32 கோடி பேருக்கான இந்தத் திட்டத்தை, யுனைடெட்  இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமே நேரடியாக நடத்த முடியாதபடி ஏகப்பட்ட குளறுபடிகள். அதனால், அந்தத் திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் உள் குத்தகைக்கு டி.டி.கே.ஹெல்த் கேர் என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது.

அதன்பிறகு 2016-ல் மீண்டும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த டெண்டர் விடப்பட்டது. ஆனால், இந்தமுறை டெண்டரில் கலந்துகொண்ட நிறுவனங்கள், 437 ரூபாய் இருந்த பிரீமியத் தொகையை உயர்த்தி ஆயிரம் ரூபாயாகக் கேட்டன. அதன்பின்னணியில் டி.டி.கே.ஹெல்த் கேர் நிறுவனம் மற்றும் ஓ.பன்னீர்செல்வம்தான் இருந்தனர். ஆனால், சுகாதரத் திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. பிரிமியத் தொகையைத் குறைக்கவிட்டால், டெண்டரை ரத்து செய்துவிடுவேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ஒரு வழியாக பிரிமியத் தொகை 699 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. அதாவது முன்பிருந்த தொகையைக் காட்டிலும் 200 ரூபாய் அதிகம். ஒருவழியாக இந்தத் தொகைக்கு ஒத்துக்கொண்டு 2017 ஜனவரி 11-ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது 1.32 கோடி அட்டைகளைக் கணக்கிட்டு 808 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் கேட்டது. அதற்கு முதல்வர் பன்னீர்செல்வமும் ஒத்துக்கொண்டார்.

ஆனால், திட்ட இயக்குநர் தாரேஷ் அகமது, ‘உடனடியாகக் கொடுக்க முடியாது. 25 சதவிகிதம்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது கொடுக்க முடியும். அதன்பிறகு மீதித் தொகையை மூன்று மாதங்களுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கொடுக்க முடியும்” என்றார். ஆனால், முதல்வர் பன்னீர்செல்வம் திட்ட இயக்குநரை சமாதானப்படுத்தி உடனடியாகக் கொடுத்துவிடலாம் என்றார். அதன்படி 808 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்த திட்ட இயக்குனரக அதிகாரிகள், “ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள், தொகையைப் பிரித்து மூன்று மாத தவணையில் வாங்கிக்கொள்ளலாமே” என்று யுனைடெட் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சொன்ன பதில், “முதல்வர் ஓ.பி.எஸ் உடனடியாக தனக்கான கமிஷன் தொகை 240 கோடியைக் கேட்கிறார். அதனால், நாங்கள் முழுத் தொகையை இப்போதே வாங்கினால்தான் அவருக்கான கமிஷனைக் கொடுத்துவிட்டு, எங்கள் வேலையை ஆரம்பித்து, நாங்களும் லாபம் பார்க்க முடியும்” என்று சொல்லி அதிர வைத்துள்ளனர். 

ஓ.பி.எஸ் அபகரித்த 15 ஆயிரம் ஏக்கர் நிலம்!

மதுரை ஜில்லா, பெரியகுளம் தாலுகா, அகமலை கிராமத்தில் உள்ள ‘டிரை லாண்டு எஸ்டேட்’க்கு 27 ஆயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இந்த நிலம் கடைசியில் காசிம் பாஷா என்பவர் வசம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு அவருடைய மகன் எம்.சி.எஸ்.பாஷாவுக்கு நிலம் சொந்தமாகிறது. ஆனால், அது வனத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லி 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வனத்துறை கையகப்படுத்திக் கொள்கிறது. மீதி உள்ள 15 ஆயிரம் ஏக்கர் நிலத்தை 2002-ம் ஆண்டு முதல் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் ஆக்கிரமித்து பணப் பயிர் விவசாயம் செய்து வருகின்றனர். அதை மீட்க எம்.சி.எஸ்.பாஷாவின் இரண்டாம் தலைமுறை வாரிசுகள் முயற்சி செய்தபோது, ஓ.பி.எஸ்ஸின் தம்பி ராஜாவால் அந்தக் குடும்பம் மிரட்டப்பட்டது. அவர்களும் பல வழிகளில் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால், நிலத்தை மீட்க முடியவில்லை. தற்போது அ.தி.மு.க சசிகலா அணி-பன்னீர் செல்வம் அணி என்று பிரிந்து இருப்பதால் இந்த விவகாரத்தை தற்போது தலைமைச் செயலகத்துக் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையில் வனத்துறை எடுத்துக்கொண்ட 12 ஆயிரம் ஏக்கர் நிலத்தையும் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய பன்னீர் செல்வம் கோப்புகளை நகர்த்திக்கொண்டிருந்தது தனிக்கதை! 

பன்னீர்செல்வத்தின் குடும்பம்

வெளியில் வந்த விவகாரங்கள் கொஞ்சம்... இன்னும் வெளியில் வராத வில்லங்கங்கள் பன்னீர்செல்வம் அடைந்த பதவிகள், பெற்ற அதிகாரங்கள், சேர்த்த சொத்துகளுக்குப் பின்னால் மறைந்துகிடக்கின்றன. வெளியில் வந்த விவகாரங்களையும் மறைந்துகிடக்கும் வில்லங்கங்களையும் முழுதாகப் புரிந்துகொண்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா என்ற கேள்விக்கான பதிலையும் தெரிந்துகொள்வார்கள்.

தற்போதைக்கு பயணம் முடிந்தது! 

http://www.vikatan.com/news/coverstory/84964-panneerselvams-15-thousand-crore-money-and-15-thousand-acre-land-can-ops-be-crowned-mrclean-chapter-10.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.