Jump to content

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் : தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை ஆரம்பம்


Recommended Posts

மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் : தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை ஆரம்பம் 

 

 

11 ஆவது மகளிர் ஒரு நாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் நாளை 7ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கொழும்பில் இடம்பெறவுள்ளன.

DSC_8539_copy.jpg

2017 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டிகளில் விளையாடவுள்ள அணிகளை தெரிவு செய்வதற்கான தகுதி காண் சுற்றுப் போட்டிகளே இலங்கையில் நாளை ஆரம்பமாகவுள்ளது.

unnamed-_12_.jpg

இம் முறை மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் 8 நாடுகளின் அணிகள் மோதிக்கொள்ளவுள்ளன.

இதில் பங்கேற்கவுள்ள முதல் நான்கு அணிகளான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன ஏற்கனவே ஐ.சி.சி இனால் 2014/16ஆம் ஆண்டுகளின் பருவ காலத்தில் நடத்தப்பட்ட சம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், இத்தொடரில் விளையாடவுள்ள மிகுதி நான்கு மகளிர் அணிகளையும் தெரிவு செய்வதற்காக இந்த தகுதி காண் சுற்றுப் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

DSC_8522_copy.jpg

இந்த தகுதிகாண் சுற்றுப்போட்டியில் விளையாடவுள்ள அணிகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், அயர்லாந்து, சிம்பாப்வே, தாய்லாந்து, பப்புவா நியூ கினியா மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளின் மகளிர் அணிகள் இத்தொடரில் விளையாடவுள்ளன.

 

இத்தொடரில் பங்கு பெரும் அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இதில் குழு  ஏ யில் இந்தியா, இலங்கை, அயர்லாந்து, தாய்லாந்து மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகளும் குழு பி யில்  தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

cricket.jpg

நாளை 7ஆம் திகதி ஆரம்பமாகும் இத் தகுதிகாண் தொடர் 21ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித் தொடரின் போட்டிகள் அனைத்தும் கொழும்பிலுள்ள CCC, MCA, NCC, பி சரவணமுத்து ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

 

30 போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் சுற்றுப்போட்டிகளின் வெற்றி தோல்விகளின் மூலம் பெறப்படும் புள்ளிகளிற்கு அமைவாக தத்தமது குழுக்களில் முன்னிலை பெறும் முதல் 3 அணிகளும் சுப்பர் சிக்ஸ் போட்டிகளுக்கு தகுதி பெறும்.

DSC_8516_copy.jpg

அவ்வணிகளில் இருந்து, நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டு, அதில் இருந்து இரு அணிகள் எதிர்வரும்  21 ஆம் திகதி பி சரவணமுத்து மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

DSC_8545_copy.jpg

இத்தொடரில் மகளிர் இலங்கை அணியினை இனோக்கா ரணவீர தலைமை தாங்குகின்றார். 

நாளை பி சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகும் இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் பலப் பரீட்சை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16294

Link to comment
Share on other sites

ம­களிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தகு­திகாண் சுற்று: இந்­தியா, தென் ஆபி­ரிக்கா, பங்­க­ளாதேஷ், அயர்­லாந்து வெற்றி
2017-02-08 09:59:35

(நெவில் அன்­தனி)

கொழும்பில் நடை­பெற்­று­வரும் பத்து நாடு­க­ளுக்கு இடை­யி­லான மகளிர் உலகக் கிண்ண தகு­திகாண் போட்­டி­களின் ஆரம்ப நாளான நேற்­றைய தினம் இந்­தியா, தென் ஆபி­ரிக்கா, பங்­க­ளாதேஷ், அயர்­லாந்து ஆகிய நாடுகள் தத்­த­மது போட்­டியில் இல­கு­வாக வெற்­றி­பெற்­றன.

 

22216_Mithali_Raj_batting_against_SL_Wom

 

பி. சர­வ­ண­முத்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்ற குழு ஏ போட்­டியில் இலங்கை மகளிர் அணியை எதிர்த்­தா­டிய இந்­திய மகளிர் அணி 114 ஓட்­டங்­களால் வெற்­றி­பெ்­ற­றது. இப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்த இந்­திய மகளிர் அணி மூவரின் அரைச் சதங்­களின் உத­வி­யுடன் 50 ஓவர்­களில் 4 விக்­கெட்­களை மாத்­திரம் இழந்து 259 ஓட்­டற்­களைக் குவித்­தது.

 

5ஆவது ஓவரில் ஆரம்ப வீராங்­கனை மோனா மெஷ்ராம் 6 ஓட்­டங்­க­ளுக்கு இழந்த போதிலும் மற்­றைய ஆரம்ப வீராங்­கனை தீப்தி ஷர்­மாவும் (54 ஓட்­டங்கள்) 3ஆம் இலக்க வீராங்­கனை தேவிகா வைத்­யாவும் (89) இரண்­டா­வது விக்­கட்டில் 123 ஓட்­டங்­களைப் பகிர்ந்து இந்­தி­யாவைப் பலப்­ப­டுத்­தினர்.

 

22216_south-africa.jpg

 

இவர்­களைத் தொடர்ந்து அணித் தலைவி மிதாலி ராஜும் அபா­ர­மாகத் துடுப்­பெ­டுத்­தாடி ஆட்­ட­மி­ழக்­காமல் 70 ஓட்­டங்­களைப் பெற்றார். 

இலங்கை மகளிர் அணி பந்­து­வீச்சில் உதே­ஷிகா ப்ரபோ­தனி 56 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினார்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டு­து்­தா­டிய இலங்கை மகளிர் அணி 50 ஓவர்­களில் 8 விக்­கட்­களை இழந்து 145 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது.
துடுப்­பாட்­டத்தில் முன்­வ­ரிசை வீராங்­க­னை­க­ளான ஹசினி பெரேரா (34), சமரி அத்­தப்­பத்து (30), ஏஷானி லொக்­கு­சூ­ரிய (26) ஆகி­யோரே ஓர­ளவு திற­மையை வெளிப்­ப­டுத்­தினர். இந்­திய பந்­து­வீச்சில் ராஜேஷ்­வரி கயேக்வார்ட் 19 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கட்­க­ளையும் எக்டா பிஷ்ட் 27 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­கட்­க­ளையும் கைப்­பற்­றினர்.

 

தென் ஆபி­ரிக்க மகளிர் வெற்றி
தென் ஆபி­ரிக்க மகளிர் அணிக்கும் பாகிஸ்தான் மகளிர் அணிக்கும் இடையில் என். சி. சி. மைதா­னத்தில் நடை­பெற்ற குழு பி தகு­திகாண் போட்­டியில் தென் ஆபி­ரிக்கா 63 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது.

 

முதலில் துடுப்­பெ­டு்த்­தா­டிய தென் ஆபி­ரிக்கா 50 ஓவர்­களில் 9 விக்­கட்­களை இழந்து 258 ஓட்­டங்­களைப் பெற்­றது.

 

மத்­திய வரிசை வீராங்­கனை க்ளோ டிரோன் 79 ஓட்­டங்­க­ளையும் மினோன் டு ப்ரீஸ் 40 ஓட்­டங்­க­ளையும் மாரிஸ்ஆன் கெப் 38 ஓட்­டங்­க­ளையும் பெற்­றனர்.

 

22216_Ban_v_PNG.jpg

 

பாகிஸ்தான் மகளிர் பந்­து­வீச்சில் நஷ்ரா சாந்து 51 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­களைக் கைபற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 195 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றது.துடுப்­பாட்­டத்தில் நய்ன் அபிடி (62), சானா மிர் (38 ஆ.இ.), நஹிதா கான் (35) ஆகிய மூவரே திற­மையை வௌிப்­ப­டுத்­தினர்.தென் ஆபி­ரிக்க மகளிர் பந்­து­வீச்சில் டேன் வன் நிக்கேர்க் 35 ஓட்­டங்­க­ளுக்கு 2 விக்­டெ்­களை வீழ்த்­தினார்.

 

பங்­க­ளா­தே­ஷுக்கு இலகு வெற்றி
சிசிசி மைதா­னத்தில் நடை­பெற்ற மற்­றொரு குழு பி போட்­டியில் பப்­புவா நியூ கினி மகளிர் அணியை 118 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் மகளிர் அணி இல­கு­வாக வெற்­றி­கொண்­டது.

 

முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பங்­க­ளாதேஷ் மகளிர் அணி 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­களை இழந்து 215 ஓட்­டங்­களைப் பெற்­றது.
துடுப்­பாட்­டத்தில் ஷார்மின் அக்தர் (56), ஃபர்­கானா ஹொக் (51), சல்மா காத்தும் (32 ஆ.இ.) ஆகியோர் பிர­கா­சித்­தனர்.
பப்­புவா நியூ கினி மகளிர் பந்­து­வீச்சில் ரவினா ஓஆ, மெய்ரி டொம், சிபோன ஜிம்மி ஆகியோர் தலா 2 விக்­கெட்­களைக் கைப்­பற்­றினர்.

 

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய பப்­புவா நியூ கினி மகளிர் அணி 32.1 ஓவர்­களில் சகல விக்­கட்­க­ளையும் இழந்து 97 ஓட்­டங்­களை மாத்­திரம் பெற்­றது. ருமா (32), ஓஆலா (29), ருமா (20) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்­ணிக்­கை­களைப் பெற்­றனர்.பங்­க­ளாதேஷ் மகளிர் பந்­து­வீச்சில் ஜஹ­னாரா, பன்னா கோஷ், சல்மா காத்துன், ருமானா அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்­கெட்­களை வீழ்த்­தினர்.

 

அயர்­லாந்து வெற்றி
எம். சி. ஏ. மைதா­னத்தில் நடை­பெற்ற குழு ஏ தகு­திகாண் போட்­டியில் ஸிம்­பாப்வே மகளிர் அணியை 119 ஓட்­டங்­களால் அயர்­லாந்து மகளிர் அணி வெற்­றி­கொண்­டது.

 

எண்ணிக்கை சுருக்கம்
அயர்லாந்து மகளிர் 50 ஓவர்களில் 237 க்கு 6  விக். (கிம் கார்த் 63, லோரா டிலேனி 47, கிளயார் ஷிலிங்டன் 30, ஜே. என்கோமோ 46 க்கு 2 விக்.)
ஸிம்பாப்வே 37.5 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 118 (எஷ்லி எண்டிராயா 35, லொரென் ஷுமா 25, கிம் கெரத் 24 க்கு 3 விக்., சியாரா மெட்காவ் 38 க்கு 3 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=22216#sthash.DqD9pECm.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.