Jump to content

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி


Recommended Posts

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

 
 
 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெய்லர் சதத்தால் நியூசிலாந்து அணி வெற்றி
 
ஹேமில்டன்:

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் நடைபெற இருந்த 2-வது ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

இரு அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி முதலில் களம் இறங்கியது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது.

டெய்லர் 107 ரன்னும், தொடக்க வீரர் புரவுன்லி 63 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க், பில்க்னெர் தலா 3 விக்கெட்டும், ஹாசல்வுட் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 47 ஓவர்களில் 257 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது. இதனால் நியூசிலாந்து 24 ரன்னில் வெற்றி பெற்றது.

ஆரோன் பிஞ்ச் 56 ரன்னும், டிரெவிஸ்ஹெட் 43 ரன்னும் எடுத்தனர். போல்ட் 33 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். சான்ட்னெர் 2 விக்கெட்டும், வில்லியம்சன் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டெய்லர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 178-வது ஒரு நாள் போட்டியில் விளையாடும் அவருக்கு இது 16-வது செஞ்சூரி ஆகும். இதன் மூலம் அதிக சதம் எடுத்த நியூசிலாந்து வீரரான ஆஸ்லேயை சமன் செய்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/05123825/1066395/New-Zealand-won-by-24-runs-against-Australia-in-3rd.vpf

Link to comment
Share on other sites

ஆஸியுடனான தொரை வென்றது நியூஸிலாந்து
2017-02-05 20:37:02

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரொஸ் டெய்லர் குவித்த அபார சதம் மற்றும் ட்ரென்ட் போல்டின் துல்லியமான பந்துவீச்சு ஆகியவற்றின் உதவியுடன் 24 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிபெற்றது.

 

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 0 என்ற ஆட்டக் கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி கடும் மழையினால் முழுமையாக கைவிடப்பட்டிருந்தது.

 

 ரொஸ் டெய்லர் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 16ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஆரம்ப வீரர் டீன் ப்றவுண்லீயுடன் மூன்றாவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களை ரொஸ் டெய்லர் பகிர்ந்தார்.

 

22167new-zealand.jpg

 

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 282 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அவ் லக்கை அடைய 25 ஓட்டங்களால் தவறியது.

 

ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்கள் வீசிய ட்ரென்ட் போல்ட் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றி தனக்கான அதி சிறந்த பந்து வீச்சுப் பெறுதியை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.

 

எண்ணிக்கை சுருக்கம்:

 

நியூஸிலாந்து 50 ஓவர்களில் 281 க்கு 9 விக். (ரொஸ் டெய்லர் 107, டீன் ப்றவுண்லீ 63, மிச்செல் சென்ட்னர் 38 ஆ.இ., கேன் வில்லியம்சன் 37 ஆ.இ., ஜேம்ஸ் ஃபோக்னர் 59 க்கு 3 விக்., மிச்செல் ஸ்டார்க் 63 க்கு 3 விக்.)

 

அவுஸ்திரேலியா 47 ஓவர்களில் சகலரும் ஆட்டமிழந்து 257 (ஆரொன் ஃபின்ச் 56, ட்ரவிஸ் ஹெட் 53, மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 42, மிச்செல் ஸ்டார்க் 29 ஆ.இ., ட்ரென்ட் போல்ட் 33 க்கு 6 விக்.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=22167#sthash.HEG6akXB.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது வெளிநாட்டிலே கொரோனா அழிவு அதை கொடர்ந்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரப்பு போர் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்பினால் ரெயில் நிலையத்தில் நிற்கும் போது பெண்களும் ஒரு டொலர் தரமுடியுமா என்று கையை பிடித்து கேட்கிற மாதிரி கேட்கின்றனர்.
    • இது க‌ருத்து க‌ணிப்பு கிடையாது க‌ருத்து தினிப்பு 6.60 கோடி வாக்காள‌ர் இருக்கும் த‌மிழ் நாட்டில் சும்மா ஒரு சில‌ தொகுதியில் போய் ம‌க்க‌ளை ச‌ந்திச்சு விட்டு இவ‌ர்க‌ள் க‌ண்ட‌ மேனிக்கு த‌ந்தி தொலைக் காட்சி அடிச்சு விடும்.......................இந்த‌ க‌ருத்து தினிப்பு யூன் 4ம் திக‌தி தெரியும்  எவ‌ள‌வு பொய்யான‌து என்று ம‌க்க‌ளை குழ‌ப்பி த‌ங்க‌ளுக்கு பிடிச்ச‌ க‌ட்சிக‌ளுக்கு ஆதார‌வாய் போடுவ‌து தான் இவ‌ர்க‌ளின் வேலை வேண்டின‌ காசுக்கு ந‌ல்லா கூவ‌த்தானே வேணும் அதை இவ‌ர்க‌ள் ந‌ல்லா செய்யின‌ம்................... இந்த‌ க‌ருத்து க‌ணிப்பு எல்லா தேர்த‌லும் பொய்த்து போன‌து இதை தெரியாம‌ நீங்க‌ள் ச‌ந்தோஷ‌ ப‌டுவ‌தை பார்க்க‌ சிரிப்பு வ‌ருது😁 இவ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ட‌ந்த‌ தேர்த‌ல்க‌ளில்  வெளியிட்ட‌ க‌ருத்து க‌ணிப்புக‌ளில் ஏதாவ‌து ஒன்று ச‌ரி வ‌ந்த‌தை உங்க‌ளால் காட்ட‌ முடியுமா........................ இள‌ம்த‌லைமுறை பிள்ளைக‌ள் க‌ழுவி க‌ழுவி ஊத்துதுக‌ள் இந்த‌ க‌ருத்து க‌ணிப்பை பார்த்து😂😁🤣....................................
    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.