Jump to content

கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணெய் 35 கி.மீ. தூரம் பரவியது : சென்னை கடலில் ஆபத்து நீடிப்பு...

Daily_News_2962414026261.jpg

சென்னை: சென்னையில் எண்ணூர் கடலில் இரு கப்பல்கள் மோதி ஏற்பட்ட கச்சா  எண்ணெய் கசிவு, இப்போது 35 கிலோ மீட்டர் தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி பரவிக்ெகாண்டிருக்கிறது. இதனால், கடலில் மீன்வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்து அதிகரித்து வருகிறது.   நவீன தொழில்நுட்பம்  இல்லாததால் சென்னை கடல் பகுதியில் கலந்துள்ள ஆயிலை முழுவதும் அகற்ற  முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர். இதற்கிடையே, விபத்து ஏற்படுத்திய  கப்பல் நிறுவனம் மீது மீஞ்சூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு  செய்து விசாரிக்கின்றனர்.

எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு கச்சா  எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த ஆயில் கசிந்து  கடலில் கலந்தது. விபத்து குறித்து அறிக்கை வெளியிட்ட துறைமுக நிர்வாகம்,  யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. கப்பலில் இருந்து ஆயில் கசிவு  எதுவும் இல்லை என தெரிவித்தது. ஆனால், கப்பலில் இருந்து பல டன் ஆயில்  பீய்ச்சி அடித்துக்கொண்டு வெளியேறுவதை நேரில் பார்த்ததாக அப்பகுதி  மீனவர்கள் தெரிவித்தனர்.

எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு,  மெரினா, திருவான்மியூர் என தற்போது பாலவாக்கம் வரை எண்ணெய் படலம் பரவி  கிடப்பதால் கடலில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆமை,  மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து நீரில் மிதக்கின்றன. கடலோர  காவல்படை வீரர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள்,  மீனவர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து கடலில் கலந்துள்ள ஆயிலை அகற்றும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் அதிகளவு ஆயில் கலந்திருப்பதாலும் அதை  முழுவதும் அகற்றுவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாததாலும்  பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. 

நேற்று 7வது நாளாக வீரர்கள் ஆயிலை  அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கடலோர காவல்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில்  ‘ஆயில் ஸ்கிம்மர்’ கருவியை பொருத்தி அதன் மூலம் நீரில் உள்ள ஆயிலை உறிஞ்சி  எடுக்கின்றனர். ஆனால், இது மிகவும் பழமையான தொழில்நுட்பம் என்பதால் அந்த  முயற்சியில் எந்த பலனும் அளிக்கவில்லை. ஒருபுறம் கரையோரம் ஒதுங்கும் ஆயில்  படலத்தை மோட்டார் பைப் மூலம் உறிஞ்சியும், பக்கெட்டில் இறைத்தும் அகற்றி  வருகின்றனர்.

நேற்று 35 கிமீ தூரம் பரவி, பாலவாக்கத்தை தாண்டி கடலில் பரவியபடி உள்ளது கச்சா கழிவு எண்ணெய். இதனால், வங்கக்கடலில் கடலியல் வளங்களுக்கு ஆபத்து ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் அபாயம் அதிகரிப்பதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். ஒருவாரம் ஆகியும் ஆயிலை அகற்றாததால் மீனவர்கள் வருவாய்  இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருசிலர் வெகுதூரம் சென்று 

கடலில் மீன்பிடித்து வந்தாலும் கூட அதை சாப்பிட்டால் ஆபத்து ஏற்படும் என  அஞ்சி பொதுமக்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால் மீன் வியாபாரம் முற்றிலும்  முடங்கி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினமும் காசிமேட்டில் ₹15  கோடி வருவாய் ஈட்டி வந்த நிலையில் தற்போது வெறும் ரூ.2 கோடிக்கு மட்டுமே  வியாபாரம் நடப்பதாக மீனவர்கள் கூறினர்.

இந்நிலையில்,  விபத்து ஏற்படுத்திய காஸ் ஏற்றி வந்த எம்.டி.மாபிள் கப்பல் மீது காமராஜர்  துறைமுக கடல்சார் சேவை பிரிவு பொதுமேலாளர் குப்தா மீஞ்சூர்  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், எளிதில் தீப்பற்றும்  பொருளை பாதுகாப்பின்றி கொண்டு வருதல், விபத்து ஏற்படும் நோக்கில்  செயல்பட்டது, உயிரிழப்பு ஏற்படும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட 5  பிரிவுகளின் (இபிகோ 336, 427, 431, 250, 285) கீழ் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.  

அந்த கப்பல் லைபீரியா நாட்டில் பதிவு  செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்தில் சர்வதேச சதி ஏதேனும் உள்ளதா  எனவும் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல் கடல் பகுதியில் அலட்சியமாக  விபத்து ஏற்படுத்தியதாக கடலோர காவல்படை சார்பில் இரண்டு கப்பல் நிறுவனங்கள்  மீதும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து விபத்து ஏற்படுத்திய கப்பல் நிறுவனம்

சம்பவத்தன்று  துறைமுகத்தில் காஸ் இறக்கிவிட்டு ஈராக் நோக்கி சென்ற எம்.டி. மாபிள்  கப்பல்தான் எதிரில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.டி. டான் காஞ்சிபுரம்  கப்பல் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. அதனால்தான் எம்.டி. மாபிள் கப்பல்  மீது அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் விபத்துக்கு முழுக்க,  முழுக்க இக்கப்பல்தான் காரணம் என தெரியவந்துள்ளது. அதாவது, எம்.டி.மாபிள்  கப்பல் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு கப்பல் ஒன்று கடந்த 26ம் தேதி  அன்று மும்பையில் விபத்து ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த  சம்பவம் நடந்த அடுத்த 2 நாளில் சென்னையில் அதே நிறுவனத்தை சேர்ந்த கப்பல்  விபத்து ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சம்பந்தப்பட்ட  நிறுவனத்தின் அலட்சியத்தால்தான் விபத்து ஏற்பட்டிருக்கிறது என அதிகாரிகள்  தெரிவிக்கின்றனர்.

அதிகாரிகள் அலட்சியம்

கடலோர  காவல்படையுடன் இணைந்து துறைமுக ஊழியர்கள், மீனவர்கள், பொதுமக்கள்,  தன்னார்வலர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கடலில் கலந்த ஆயிலை அகற்றி  வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு சாப்பாடு, குடிநீர், கழிவறை உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மேலும் கழிவு ஆயில் உடலில் பட்டால் தோல் வியாதி வரக்கூடும் என்ற அச்சம்  ஏற்பட்டுள்ளது. ஆனால் அச்சத்தை போக்க சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ  வசதிகளும் ஏற்படுத்தி தராமல் இருப்பது அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது.

கடலில் கலந்தது எந்த ஆயில்?

விபத்துக்குள்ளான  எம்.டி. டான் காஞ்சிபுரம் கப்பலில் எச்.எஸ்.டி எனப்படும் அதிவேக டீசல்  மற்றும் மெத்திலேடட் ஸ்பிரிட் திரவம் ஆகியவை இருந்துள்ளது. கப்பலில் ஏற்றி  வரப்பட்ட கச்சா எண்ணெய் கடலில் கலக்கவில்லை என அதிகாரி ஒருவர்  தெரிவித்துள்ளார். மாறாக, கப்பலின் அடிபாகத்தில் காபர் டேம் என்ற பகுதியில்  கப்பலை இயக்கப் பயன்படுத்தும் ஹெவி பியூல் ஆயில் என்ற கசடு எண்ணெய்தான்  விபத்தின்போது கசிந்ததாக தெரிவித்துள்ளார். அந்த ஆயில் அவ்வப்போது  சுத்தப்படுத்தப்பட வேண்டும். ஆனால், டான் கப்பலில் அது  சுத்தப்படுத்தப்படாமல் இருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும்  விபத்துக்கு இரண்டு கப்பல்களை இயக்கியவர்கள்தான் காரணம் எனவும் அவர்  கூறியுள்ளார். 
http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: im Freien

அடேய்.. பீட்டா வந்து கிளீன் பன்னி குடுத்துட்டு ....

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிரிப்பாக..... இருக்கிறது.
இவங்களுக்கு,  கடலை  எண்ணை தான், சரி வரும்  அண்ணே......  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்கால  நடவடிக்கை என்னும், முறையில்...... 
பாடசாலை மாணவர்களை, உதவிக்கு கூப்பிடலாம் தானே... 
அரசு.... இயந்திரத்தை விட , மாணவர் இயந்திரம் பலம் பொருந்தியது.
-ஜல்லிக்கட்டு-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.