Jump to content

உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைப்போம்: வங்காள தேச கேப்டன் சொல்கிறார்


Recommended Posts

உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைப்போம்: வங்காள தேச கேப்டன் சொல்கிறார்

 

இந்தியாவில் நாங்கள் விளையாடும் திறமையை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் எங்களை அழைக்க வேண்டும் என வங்காள தேச கேப்டன் தெரிவித்துள்ளார்.

 
 
உலக கிரிக்கெட்டை திரும்பி பார்க்க வைப்போம்: வங்காள தேச கேப்டன் சொல்கிறார்
 
வங்காள தேச கிரிக்கெட் அணி கடந்த 2000-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடும் அந்தஸ்தை பெற்றது. இந்தியா அதே ஆண்டு நவம்பர் 10-ந்தேதி அங்கு சென்று முதன் முறையாக வங்காள தேசத்திற்கு எதிரான டெஸ்டில் விளையாடியது.

சுமார் 16 வருடங்களாக வங்காள தேச அணி இந்தியா வந்து விளையாடியது கிடையாது. தற்போது முதன்முறையாக வங்காள தேசம் இந்தியா வந்து ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த டெஸ்ட் ஐதராபாத்தில் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான வங்காள தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது, முஷ்பிகுர் ரஹிம் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவில் முதன்முறையாக சென்று விளையாடும் எங்களுக்கு இதுஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டி என்று நான் நம்பவில்லை. எங்களுடைய ஆட்டத்தை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் மீண்டும் இந்தியாவில் வந்து விளையாட அழைக்க வேண்டும் என்று வங்காள தேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘இந்தியாவில் விளையாடுவது குறித்து சற்று ஆச்சரியம் அடைந்தேன். ஆனால் இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க போட்டி என்று நான் நம்பவில்லை.

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்டில் விளையாடுவதை உதாரணமாக எடுத்துக் கொண்டால், எங்களுக்கு நெருக்கடி அதிகமாக இருக்கும். ஏனென்றால் அந்த டெஸ்டில் நாங்கள் தோற்று விட்டால் அதைவிட மோசமானது எதுவும் இல்லை. தற்போது நாங்கள் சிறந்த அணியாக உள்ளோம். ஐந்து வருடத்திற்கு முன்பு இருந்த அணி இல்லை.

இந்திய ஆடுகளத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை உலக கிரிக்கெட்டிற்கு சொல்ல விரும்புகிறோம். எத்தனை வருடத்திற்குப் பிறகு இந்தியா வந்து விளையாடுகிறோம் என்பது பற்றி நான் நினைக்கவில்லை. இந்தியா எங்களை மீண்டும் மீண்டும் அழைக்கும் வகையில் நாங்கள் விளையாட விரும்புகிறோம்” என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/02161253/1065849/I-do-not-believe-this-is-a-historic-Test-Mushfiqur.vpf

Link to comment
Share on other sites

உதார் விடும் வங்கப்புலி!

 

தினைந்து வருடங்களுக்கும் மேலாக கத்துக்குட்டி அணியாக வளைய வந்த வங்காளதேச அணி, இன்று இந்தியா போன்ற நாடுகளுக்கே கடும் சவால் தர ஆரம்பித்திருக்கிறது. வங்கதேச மண்ணில் அவர்களை ஜெயிக்க தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே தட்டுத் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. வெட்டிப்புலியாக இருந்த இவர்கள் வீரப் புலியாக மாறியது எப்படி?

p58a.jpg

நீண்டகாலமாக காமாசோமாவென கிரிக்கெட் ஆடும் அணிகளில் முன்னணியில் இருந்த அணி வங்காளதேசம். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், கோச்சிங் போன்ற விஷயங்களில் மற்ற அணிகளைவிட பின்தங்கியிருந்தாலும் ஒரே ஒரு மேட்சையாவது ஜெயிக்க வேண்டும் என காத்துக்கொண்டே இருந்தது இந்தப் புலி. 2005-ம் ஆண்டு இங்கிலாந்து மண்ணில் நடந்த நாட்வெஸ்ட் தொடரில்தான் முதன் முதலாக ஜாம்பவான் அணிகளுக்கு அதிர்ச்சி தர ஆரம்பித்தது வங்காளதேசம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு போட்டியில் அஸ்ரஃபுல்லின் அபார சதத்தால் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வங்காளதேசம். ரிக்கி பான்டிங், கில்கிறிஸ்ட், ஹைடன், மெக்ராத் என கிரிக்கெட் உலகின் சகாப்தங்கள் நிறைந்திருந்த ஆஸ்திரேலிய அணியை வங்காளதேசம் தோற்கடித்திருந்ததால், கிரிக்கெட் உலக ரசிகர்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் அந்த அணி மீது திரும்பியது. வங்காளதேசத்திடம் தோற்றதை மிகப்பெரிய கௌரவக்குறைச்சலாகக் கருதியது ஆஸ்திரேலியா. சில நாட்களுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் தாம் உண்டு தம் வேலையுண்டு என அமைதியாக இருந்தார்கள். 2007-ம் ஆண்டு `ஒருநாள் உலகக்கோப்பை'யில் இந்திய அணியை வீட்டுக்கு அனுப்பியதில் வங்காளதேசத்துக்குப் பெரும் பங்கு உண்டு. அந்த ஒரே ஒரு மேட்சை தோற்றதால் இந்தியா மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

ஒருவகையில் வங்காளதேசத்துக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். அந்த போட்டியை மற்றும் அவர்கள் ஜெயித்திருக்காவிட்டால் டிராவிட் விலகி தோனி நமக்குக் கேப்டனாக வாய்த்திருக்கவே மாட்டார். 2007 - 2014 வரை அவ்வப்போது ஏதாவது பெரிய அணியை ஜெயிப்பதையும், பிறகு வரிசையாக தோல்வியைத் தழுவுவதையுமே வாடிக்கையாக வைத்திருந்தது வங்காளதேசம். சங்ககாரா, ஜெயவர்த்தனே போன்ற வீரர்கள் கொஞ்சம் ஃபார்ம் அவுட்டில் இருந்தாலும் `ஒரு டூரைப் போடுப்பா வங்காளதேசத்துக்கு!'' எனச் சொல்லி, `வைத்து' வெளுத்து வாங்கினார்கள். 2014-க்குப் பிறகு புது உத்வேகத்துடன் கிளம்பியது வங்காளதேசம். ``பார்த்துக்கிட்டே இருங்க, உலகக்கோப்பையில் நாங்க பல அணிகளுக்கு ஷாக் தரப்போறோம்'' எனப் பேட்டி தட்டிவிட்டுக் கிளம்பினார் வங்கதேச கேப்டன் மோர்தசா.

2015 `ஒருநாள் உலகக்கோப்பை'யில் காலிறுதிக்குத் தகுதி பெற்று ஆச்சர்யமடைய வைத்தது. ஆனால், அங்கிருந்துதான் வங்காளதேசத்தின் குணம் மாற ஆரம்பித்தது. `ஆஸ்திரேலியாவை அலறவிடுவோம், இந்தியாவை உலகக்கோப்பையில் வெளியேற்றுவோம்' என வீரர்களும்,  `தலைகீழாகத்தான் குதிப்போம்' என ரசிகர்களும் கத்த ஆரம்பித்தார்கள். `WE WILL SEND BACK INDIA' என மீம்ஸ் போட்டுக் கொக்கரித்தார்கள் ரசிகர்கள். நானும் ரவுடிதான் எனக் களமிறங்கிய வங்காள தேசத்தை இந்தியா நேர்த்தியாக ஆடி ஜெயித்தது. ஆனாலும், `ரோஹித் ஷர்மா அவுட் ஆனபோது நோ பால் கொடுத்துவிட்டார் அம்பயர். இல்லலைனா ஃபைனலில் ஆஸ்திரேலியாவை விரட்டி அடித்து கப் ஜெயித்திருப்போம்' என சீரியஸாய் சொன்னார்கள். `உங்களுக்கு வெண்கலக்கிண்ணிகூட கிடையாது போங்கப்பா!' என இந்திய ரசிகர்கள் பதிலுக்கு மீம் போட, வங்காளதேசத்துக்கு செம கோபம்.

p58b.jpg

அதன் பிறகு இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் போல இந்தியா - வங்காளதேசம் போட்டிகள் மாறின. இரண்டு அணிகள் மோதும்போது சமூகவலைதளங்களில் மீம் போரே நடக்கும். கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பையில் இந்தியாவும் வங்கதேசமும் மோதின. அந்தப் போட்டியில் இந்தியா சுமாராகவே ஆடியது. வங்கதேசம் எளிதாக வெற்றி பெறும் நிலைமையில் இருந்தது. இன்னும்  இரண்டு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையை நெருங்கியவுடன், ஏதோ வெற்றி அடைந்த நினைப்பில் குதூகலம் காட்டினார் முஷ்பிகுர் ரஹீம். அப்போது தோனி அமைதியாக இருந்தார். அடுத்தடுத்த பந்துகளை தோனி ஆலோசனைப்படி பாண்டியா வீச, கடைசி மூன்று பந்துகளிலும் மூன்று விக்கெட்டுகள் விழுந்தன. `ஜெயிக்கிறதுக்கு முன்னாடியே ஓவரா ஆடக்கூடாது கண்ணு' என ஸ்டேட்டஸ் மழை பொழிந்தான் இந்தியன்.

சமீபத்தில்கூட நியூசிலாந்து மண்ணில் மீண்டும் வெற்றியை நெருங்கி வந்து கோட்டைவிட்டது வங்காளதேசம். `அந்நிய மண்ணில் நாங்க ஜெயிக்கப் போகிறோம்... ஜெயிக்கப் போறோம்' எனக் கூவிக் கூவியே நம்ப முடியாத வகையில் ஒரு மோசமான தோல்வியைச் சந்தித்தது.

நல்ல பேட்ஸ்மேன்கள், சிறந்த ஆல்ரவுண்டர், முஸ்தாபிசுர் ரஹ்மான் முதலான சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள், மெஹதி ஹசன் போன்ற சிறப்பான சுழற்பந்து வீச்சாளர் என நல்ல வீரர்கள் இருந்தும்  வங்கதேச அணி தோல்வியடைவதற்கு முக்கியக் காரணம், அவர்களது  மோசமான மனோபாவம்தான்!

http://www.vikatan.com/

Link to comment
Share on other sites

''இந்தியா உஷார்... உலகத்துக்கே நாங்கள் யார் எனத் தெரியும்!'' - முஷ்ஃபிகுர் ரஹீம்

வங்கதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐசிசி டெஸ்ட் அணிக்கான அந்தஸ்தைப் பெற்ற வங்கதேசம், முதன்முறையாக இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது. இப்போட்டி வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் வங்கதேச வீரர்கள், நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தனர். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, அபினவ் முகுந்த் தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் 2 நாள் பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணி விளையாடுகிறது. ஜிம்கானா மைதானத்தில் நடக்கும் இந்த பயிற்சிப் போட்டி, நாளை காலை 9.30 மணிக்குத் தொடங்குகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட் போட்டி குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் கூறியதாவது:

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்

''இந்திய மண்ணில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை, இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் உலக கிரிக்கெட்டுக்குச் சொல்ல விரும்புகிறோம். டெஸ்ட் அந்தஸ்து பெற்று பல ஆண்டுகள் கழித்து, இந்தியா வந்து விளையாடுவதைப் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. நாங்கள் விளையாடும் விதத்தைப் பார்த்து, இந்தியா எங்களை மீண்டும் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளை விளையாட அழைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்புகிறோம். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டி என நான் நம்பவில்லை. அதுபோன்று அழைப்பதும் சற்று ஆச்சர்யமான விஷயமாகவே உள்ளது. என்னைப் பொறுத்தவரை, இது வங்கதேச அணி பங்கேற்கும் மற்றுமொரு டெஸ்ட் போட்டி, அவ்வளவே. 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அணி போல இல்லாமல், இப்போது இந்தியா வந்திருக்கும் வங்கதேச அணி மிகவும் வலிமையானது. போதுமான வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்களுடன் சேர்த்து ஆழமான பேட்டிங்கும் எங்களிடம் உள்ளது. சமீபத்திய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள், தங்களது பார்மை தக்க வைத்து கொள்வார்கள் என நம்புகிறேன்.

இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்

இதனுடன் கடந்த காலங்களில் சிறப்பாகச் செயல்படாத வீரர்களும் இம்முறை தங்கள் கணக்கை வெற்றிகரமாகத் தொடங்கவும் நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியா வலுவான அணி. சொந்த மண்ணில் அவர்கள் எப்போதுமே சிறப்பாக விளையாடுவார்கள். சூழ்நிலை இந்தியாவுக்குச் சாதகமாகவே இருந்தாலும், நாங்கள் பலம் பொருந்திய அணியாகவே இருக்கிறோம். எங்களது பேட்ஸ்மேன்களால் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சுக்குக் கடும்சவால் கொடுக்க முடியும் என்றே கருதுகிறேன். பந்துவீச்சைப் பொறுத்தவரையில், எங்களது வீரர்களுக்கு அனுபவம் போதாது. ஆனால் சில வீரர்கள் நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஒரு அணியாக சிறந்த திறனை நாங்கள் வெளிப்படுத்தும் பட்சத்தில், எந்த ஒரு சிறந்த அணிக்கு எதிராகவும் எங்களால் சிறப்பாக செயல்பட முடியும். இந்தியாவும் அதற்கு விதி விலக்கு அல்ல. வெறும் 2 அல்லது 3 நாளில் போட்டியை முடிக்க நாங்கள் விரும்பவில்லை. ஏனெனில் இந்தியாவுக்கு எதிராக 5 நாட்களும் முழுதாக விளையாடவே விரும்புகிறோம்'' என்றார். 

வங்கதேச பெளலர் முஸ்டாபிஸுர் ரஹ்மான்

வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முஸ்டாபிஸுர் ரஹ்மான், தோள்பட்டை காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடாதது, அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகவே கருதப்படுகிறது. ஏனென்றால் போட்டி நடைபெறும் ஐதராபாத் மைதானம், அவருக்கு நன்கு பரிட்சயமானது. இங்குதான் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காகக் கடந்த சீசனில் விளையாடினார். புவனேஸ்வர் குமாருடன் இணைந்து விக்கெட்டுகளை அள்ளி, அணி கோப்பை வெல்லவும் காரணமாக இருந்தார். இவருக்குப் பதிலாக ஷஃபியுல் இஸ்லாம் அணியில் இடம்பிடித்துள்ளார். காயம் காரணமாக நியுஸிலாந்துக்கு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாத வங்கதேச அணியின் கேப்டன் முஸ்ஃபிகுர் ரஹிமுடன், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான மோமினூல் ஹாக், இம்ரூல் கெய்ஸ் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். 

http://www.vikatan.com/news/sports/79728-we-will-show-whom-we-are-not-only-to-india-but-to-the-whole-world-says-mushfiqur-rahim.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.