Jump to content

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர்


Recommended Posts

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 1

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் முதல் அத்தியாயம் இது.

 

- லதா சரவணன்

 

(சென்னையில் இருந்து 200கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டைக்கு அருகில் உள்ளது கூவாகம் எனும் ஊர். சித்ரா பெளர்ணமி அன்று உலக கவனத்தையெல்லாம் தன்பால் ஈர்க்கும் கூவாகம் அர்ஜீனின் மகனான அரவான் என்பவர்தான் இங்கு கூத்தாண்டவராக எழுந்தருளி தன்னை மானசீக கணவனாக வணங்கும் அரவாணிகளுக்கு அருள் பாலித்து வருகிறார்)

அன்று வந்த கடிதங்களைப் படித்து அதற்கு பதில் குறிப்புகள் தயார் செய்து கொண்டு இருந்தான் கவின். ஆபீஸீல் ஏறத்தாழ எல்லோரும் கிளம்பிக் கொண்டு இருந்தார்கள். அவன் கைபேசி அழைத்தது. டிஸ்பிளேயில் மனைவி வித்யாவின் புன்னகை ததும்பும் முகம். கவினும், வித்யாவும் காதல் மணம் புரிந்தவர்கள்.

 

 

 
Kakithapookkal, new story series
 

 

 

அளவில்லாத சொத்து சுகம் இத்தனை இருந்தும் மணமாகி ஐந்து வருடங்களாய் குழந்தை இல்லை. வேண்டாத கோயில்களும் ஏறாத மருத்துவமனைகளும் இல்லை! கடைசியில் கடவுளின் அருளோ அல்லது மருந்துகளின் உபயோகமோ அழகான ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள் வித்யா.

 

 

 
இழந்த சந்தோஷம்மீண்டுவந்தது. கூடவே இடியாய் செய்தியும்.! வித்யாவின் கருப்பைக்கு மற்றொரு குழந்தையைத் தாங்கும் அளவிற்கு சக்தி இல்லையென்பதால், அதை எடுக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லிட கவினும் ஒப்புக்கொண்டான்.

 

மகன் ஜீவன் வளர வளர சந்தோஷமும் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்தது. அவனின் மழலை மொழியும் நிற்கும் போதும், நடக்கும்போதும், ஒவ்வொரு செயலுக்கும் மகிழ்ந்தார்கள். கராத்தே, நாட்டியம், நீச்சல் என அவன் விரும்பும் பயிற்சிகளைத் தந்தார்கள்.

 

 

 
Kakithapookkal, new story series

 

 

இன்று அவனுக்கு டிராயிங் கிளாஸ். முடிந்தவுடன் டிரைவின் கூட்டிப்போவதாய் சொல்லி இருந்தான் கவின். அதை நினைவுபடுத்திடத்தான் இந்த போன் போலும். சிரிப்புடன், இன்னும் கிளம்பலையா ? என்று கேட்டு தாயிடமும், மகனிடமும் அர்ச்சனையை எதிர்பார்த்தபடியே, எடுக்கலாமா ? இல்லை கிளம்பலாமா? என்று சில நிமிட யோசனைக்குப்பிறகு, அலைபேசியை உயிர்ப்பித்தான் கவின்,

"ஹலோ.......!"

"என்னங்க..." வித்யாவின் குரலில் பதட்டம்?!

"வந்துட்டேன் வித்யா....இன்னும் அரைமணிநேரம் ...".

"ஏங்க,.,,, நம்ம ஜீவன் இன்னமும் வீட்டுக்கு வரலை ! டிரைவர் எண்ணிற்குப் போன் பண்ணினா ரிங் போயிட்டே இருக்கு ? எனக்கு பயமாயிருக்குங்க?"

"ஏய்! ஏதாவது வேலையிருந்திருக்கும்,,,, இல்லேன்னா வழக்கம்போல ஏதாவது ஐஸ்கிரீம் கடைக்கு கூட்டிப்போய் இருப்பான். கவலைப்படாதே நான் கோச்சிங் சென்டர் போய் விசாரிச்சிட்டு வந்திடறேன்" போனை வைத்தவுடன் இலேசாய் அவனுக்குமே பதட்டம்.

(தொடரும்)

http://tamil.oneindia.com/

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 2

 

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 2வது அத்தியாயம் இது.

 

லதா சரவணன்

டிரைவர் அப்படி ஒன்றும் விவரம் அற்றவர் அல்ல.. ஐந்து நிமிடம் லேட்டானாலும் உடனே பேசி காரணம் சொல்பவர். வித்யா சொல்லியதுபோல அவரைத் தொடர்பு கொண்டால் மணி அடித்துக்கொண்டேதான் இருந்தது. இனி தாமதிக்கக்கூடாது. காரைக் கிளப்பினான்.

"ஜீவனா அவன் 5 மணிக்கே போயிட்டானே ? "

"மேடம் அவன் இன்னமும் வீட்டுக்கு போகலை ? "

"தெரியலையே ஸார் ... இன்று எங்கோ வெளியே போவதாய் ஜீவன் சொல்லியிருந்தான்ய உங்க டிரைவர் அஞ்சு நிமிடம் தாமதமின்னு ஓரே திட்டு வேறு ... !"

Latha Saravanan's Kakithapookkal story,

 

"சாரி மேடம் ஒருவேளை வண்டியில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் நான் வழியில் பார்க்கிறேன்.." "கவின் ஸார்... தகவல் தெரிந்தால் உடனே போன் பண்ணுங்கள்."

தலையசைத்துவிட்டு, கடவுளே?! மீண்டும் டிரைவர் எண்ணிற்கு தொடர்பு கொள்ள அது ரிங் போய்க் கொண்டே இருந்தது. டிரைவரை நம்பி ஜீவனை அனுப்பியது தவறோயென்று தோன்ற, வழியெங்கும் பார்வையைத் திருப்பினான். வண்டி எங்காவது பிரேன் டவுன் ஆகி விட்டதோயெனும் நினைப்பில்...! ஆனால் வண்டி எங்கும் தட்டுப்படாமல் போகவே பயம் மனதிற்குள் மண்டியது..! வீட்டை நெருங்க நெருங்க வித்யாவை எப்படி சமாளிக்கப் போகிறோம்.? அவன் எதிர்பார்த்தபடியே, வித்யா தொய்ந்து போய்தான் இருந்தாள். அழகிய முகத்தில் கவலைரேகைகள் கூடவே கண்ணீர் கோடுகள். கணவனைக் கண்டதும் கதறியபடி வந்தாள்..

 

"என்னங்க....."

"பயப்படாதே... வித்யா.... ஜீவனுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது.?!"

"அப்படின்னா..... "தெரியலை.... இன்னும் டிரைவரிடம் இருந்து தகவல் இல்லை... "நேரம் ஆக ஆக கவினுக்கே உள்ளுக்குள் பயம் அதிகமாகியது.. என்ன செய்யலாம்? எனும் போதே போலீஸ் துறையில் ஏ,ஸியாக இருக்கும் தன் நண்பன் ஈஸ்வரின் கவனம் வர உடனே அவனைத் தொடர்பு கொண்டான் கவின்,

"ஹலோ ஈஸ்வர்...".

"சொல்லு கவின்! என்ன விஷயம் ?

அண்ணி ஜீவனெல்லாம் நலமா?!"

"ஈஸ்வர் நீ கொஞ்சம் வீட்டுக்கு வரமுடியுமா ?"

"இப்போ நான் டியூட்டியில் இருக்கேனே ,,,,! ஏதாவது பிரச்சனையா ?"

"ஆமாம். ஜீவன் டிராயிங் கிளாஸ் போனவன் ஐந்து மணிக்கு வரவேண்டியது, இன்னமும் வீடு வந்து சேரலை?! டிரைவரோட போனும் எடுக்கமாட்டேங்குது. பயமா இருக்கு "ஈஸ்வர்.

"பயப்படாதே கவின், " தைரியமா இரு நான் உடனே வர்றேன், அண்ணியையும் சமாதானப்படுத்து.... டிராயிங் சென்டர்ல கேட்டியா ?"

"நேரிலேயே போய் பார்த்தேன் டிரைவர்தான் கூப்பிட்டுப்போனதா சொல்றாங்க!"

"சரி போனை வை. நான் வர்றேன். இருக்கையில் இருந்து நகர்ந்தபடியே, துரை நான் கொஞ்சம் வெளியே போகவேண்டி இருக்கு... பார்த்துக்கோங்க..." என்று டேபிளின் மேல் இருந்த என்பீல்ட் சாவியை எடுத்துக்கொண்டு பறந்தான் ஈஸ்வர்.

கவின் அலைபேசி ஒலிக்கத் துவங்கியது.. "ஹலோ...."

எதிர்முனையில் கரகரப்பாய் ஒரு ஆண் குரல்.. "ஹலோ.... பேசறது ஜீவனோட அப்பாவா ?"

"ஆமாம் நீங்க யாரு?"

"அவரசப்படாதே கவின் நான் யாருன்னுகிறதை தெரிஞ்சிகிட்டு நீ என்ன பண்ணப்போறே சொல்றதை மட்டும் கேளு. உன் பிள்ளை இப்போ என்கிட்டேதான் இருக்கான். அவனை பத்திரமா சேர்க்கணுமின்னா 10லட்ச ரூபாய் தரணும்."

"நீ யாரா இருந்தாலும், பணம் சம்பாதிக்க பச்சைப் பிள்ளைகளை கடத்தி பெற்றோரோட வயிற்றெரிச்சலை கொட்டிக்காதே ?!"

"உன் அறிவுரையை விடு, பணம் எப்போ எங்கேன்ன அப்புறமா சொல்றேன்.' இணைப்பு துண்டிக்கப்பட வித்யா அலறினாள்.

'நான் அப்பவே சந்தேகப்பட்டேன்." வித்யா அரற்றியபடி இருக்கும் போதே ஈஸ்வர் புயலாய் நுழைந்தான்..

'என்னாச்சு.... கவின்.... டிரைவர் நம்பிக்கையானவன்தானே ?!"

"அப்படித்தான் பழகினான்.. அண்ணா இப்போ பாருங்க? பாவிப்பயல் என் பிள்ளையைப் போய்.....?! இப்போதான் யாரோ போன் பண்ணி பத்துலட்ச ரூபாய் பணம் கேட்டாங்க.....!"

'அழாதீங்க அண்ணி! கண்டுபிடிச்சிடலாம்,நீங்க போய் டீ கொண்டு வாங்க..எனக்கு கொஞ்சம் யோசிக்க அவகாசம் தாங்க அதுவரையில் அவன் ஸ்கூல் போயிருக்கான்னு நினைச்சிக்கோங்க".

வித்யா அழுதபடியே,,, "ஜீவன் பசி தாங்கிட மாட்டான் . ஏதாவது சாப்பிடக் கொடுத்தாங்களான்னு கூட தெரியலையே...."

"பணம் கேட்டு இருக்காங்க... அது கிடைக்கும் வரையில் அவனுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.....! பளீஸ் நீங்க அழுகையை நிறுத்தினாத்தான் மேற்கொண்டு என்ன செய்வதுன்னு யோசிக்க முடியும். அழுவதால் எந்தபயனும் இல்லை. போங்க.". அவள் விசும்பியபடியே நகர, நண்பணின் கரங்களைப் பற்றிக் கொண்டான் கவின்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/latha-saravanan-s-kakithapookkal-story-272856.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - அத்தியாயம் 3

 

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 3வது அத்தியாயம் இது.

 

 "ஈஸ்வர் வித்யா மட்டுமல்ல, எனக்குமே பயமாகதான் இருக்கிறது.. ஜீவனை மீட்டுட முடியுமா? பணம் பற்றிக் கவலையில்லை.."

"எல்லா பெற்றவங்களும் பிள்ளை மேலுள்ள பாசத்தில் சொல்றதுதான் கவின் இந்த வார்த்தை. முதலில் என் கேள்விகளுக்கு ஒழுங்கா பதில் சொல்லு... போன் வந்ததா சொன்னியே? மொபைலிலா..? லேண்ட்லைனிலா...?"

கவின் மொபைல் போனைத்தர, அதில் சற்று முன் வந்த எண்ணைக் குறித்துக்கொண்டான். "அடுத்த முறை போன் வந்தால், பேச்சை வளர்க்கப்பாரு, பையனைப் பார்க்காமலோ, அல்லது பேசாமலோ பணம் தர முடியாதுன்னு போல்டா பேசு,,,! உன் குரல் பிசிறு தட்டக் கூடாது... தைரியம் தேவை...."

Kakithapookkal Part 3

 தலையசைத்தான் கவின். விட்டால் அழுதுவிடுவான் போல் இருந்தது..

ஈஸ்வர் தன் செல்லில் இருந்து கண்ட்ரோல் ரூமிற்குத் தொடர்பு கொண்டான். 'நான் ஒரு போன்நம்பர் தர்றேன். அது என்ன லிமிட் டவர் எங்கேயிருக்குன்னு டிரேஸ் பண்ணுங்க. நம்பர் யார் பேர்ல இருக்குன்னும் தெரியனும். எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வரணும். அப்புறம் கவினின் செல் நெம்பர் தந்து அந்த போனிற்கு வரும் கால்களை டேப் பண்ணச் சொன்னான்.

"எஸ் ஸார்....."

மறுபடியும் ஸ்டேஷனுக்குப் போன் செய்து," ஹலோ துரை"

"ஸார்...."

"கார் நம்பர் TN3026 ஸ்கார்பியோ டார்க் க்ரே கலர் , சிட்டி லிமிட் தாண்டி எங்கேயும் போயிடக்கூடாது. எல்லோ லிமிட்டுக்கும் இன்பார்ம் பண்ணுங்க.... அந்த வண்டி கண்ணில் பட்ட அடுத்த நிமிடம் எனக்கு தகவல் வரணும். "

"சரி சார்.."

ஈஸ்வர் போன் பேசி வைத்துவிட்டு, டீ யுடன் வந்த வித்யாவை நோக்கினான். பேச முற்பட்ட விநாடி, மறுபடி கவினின் செல் அழைக்க....!

"ஹலோ...! "அதே கரகரப்பான குரல்..

"இம்முறை டிஸ்பிளேயில் வேறு எண்ணில் இருந்து வந்தது. என்ன கவின் முடிவு பண்ணிட்டியா? "

"பணம் பிரச்சனையில்லை,,,, ஆனா நீ சொல்றது உண்மைதான்ங்கிறதுக்கு என்ன ஆதாரம்...? நான் உன்னை எப்படி நம்பறது?"

"கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணச் சொல்றியா?"

"தேவையில்லை எம் பிள்ளையை பார்க்கணும்"

"பார்க்கலாம்.. பணம் தந்தபிறகு,,,,,,?!"

"அட்லீஸ்ட் அவன் குரலையாவது கேட்கணும்.?!" அவன் ஜீவனிடம் போனைத் தந்திருப்பான் போலும்

"டாடி....மகனின் குரல் கேட்டதும் அலறிவிட்டாள் வித்யா.... கண்ணா எங்கேடா இருக்கே?"

"மம்மி....!" விம்மலுடன் வெடித்தது ஜீவனின் குரல்,,,

அதற்குள் அவன் போனை பிடுங்கி விட்டிருந்தான். "அதான் பேசியாச்சு இல்லே.., பணத்தை ரெடி பண்ணு .," மறுபடியும் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இம்முறை ஈஸ்வரின் போன் அலற, "சொல்லுங்க துரை"

"ஸார் நீங்க சொன்ன கார் அடையார் போற வழியில் ஆள் அரவமற்ற ரோட்டில் நிக்குது. டிரைவருக்கு விபத்து ஆகி பக்கத்திலே இருக்கிறே ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.?!"

"இஸிட்....!"

"அப்புறம் நீங்க தந்த போன் நெம்பருக்கு இரண்டு கால் வந்திருக்கு, இரண்டுமே வேறவேற நம்பர், முதல் வந்த போன்நம்பர் அட்ரஸ் புருப் எல்லாம் போர்ஜரி ஸார்.. ஆனா இரண்டு எண்ணுக்கும் டவர் திருவான்மியூரில் இருந்துதான் கிடைக்குது."

"தேங்க்ஸ் துரை... நீங்க திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு நாம் வர்றோம்ன்னு தகவல் தெரிவியுங்கள். உடனே புறப்பட்டு திருவான்மியூர் வந்திடுங்க.."

"எஸ் ஸார்....."

கவின் நண்பனின் முகத்தினை ஆர்வமாய் பார்த்தான்... "கவின் ஒரு சின்ன க்ளூ கிடைச்சிருக்கு.. அநேகமா எப்படியும் இரவுக்குள்ளே ஜீவன் இங்கேயிருப்பான்.!"

"நிஜமா அண்ணா..,.!"

"கட்டாயம் வரேன்!"

"நானும் வர்றேன் ஈஸ்வர்.... ?!"

"வேண்டாம் கவின்... நீயும் கூட வந்திட்டா பாவம் அண்ணி ரொம்பவும் பயந்து போயிடுவாங்க,,,,நீ இரு.. ஜீவனை நான் கூட்டிட்டு வந்திடறேன்.."

"அண்ணா உங்களைத்தான் மலைபோல நம்பி இருக்கேன்.!"

"உங்க நம்பிக்கை நிச்சயம் பலிக்கும்....!"

ஈஸ்வர் வேகமாய் புறப்பட்டான்.

"மார்னிங் ஸார்.! துரை விஷ் பண்ணிட வேற ஏதாவது தகவல் வந்ததா?"

(தொடரும்)

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-part-3-273078.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - அத்தியாயம் 4

 

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 4வது அத்தியாயம் இது.

 

 "மீண்டும் ஒருமுறை போன் வந்திருக்கு ஸார்... வேற நம்பர் ஆனா சிக்னல் மட்டும் திருவான்மியூர்ல இருந்துதான்,,,,,!"

"டிரைவர் கண் திறந்திட்டாரா? ஏதாவது விசாரிச்சீங்களா?"

"மயக்கம் தெளிஞ்சிடுச்சு டாக்டர் ட்ரீட் பண்றார். அதனால விசாரிக்க முடியலை" பேசியபடியே இருவரும் உள்ளே நுழைய எதிர்ப்பட்ட டாக்டாரிடம், "எப்படி இருக்கான் டாக்டர்?"

Kakithapookkal - Part 4

 

 "பெட்டர்."

"விசாரிக்கலாமா?"

"தாராளமா?" அவர் வெளியேற,

"வணக்கம் ஸார்...!" டிரைவர் கைகூப்பினான். காலில் முதுகில் நல்ல அடி, தொட்டிலாய் கட்டிய கையோடு இருந்தான்

"காசி....!"

"நீங்கதான் ஜீவனை தினமும் ஸ்கூலில் கொண்டுபோய் விடறது. என்னாச்சு ?"

"ஸார். நானும் குழந்தையும் கிளாஸ் முடிச்சிட்டு வரும் வழியில் எப்பவும் பழரசம் குடிப்பது வழக்கம்... அதேபோல இன்று காரை நிறுத்தும் போதே யாரோ இரண்டு பேர் வம்பு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்க. நான் சுதாரிப்பதற்குள் எங்க வண்டியை விரட்ட ஆரம்பிச்சிட்டாங்க.. அப்போதான் விபத்து ஏற்பட்டுடுச்சு.. அதுக்குப்பிறகு என்ன நடந்ததுன்னு புரியலை. கண்விழிச்சி பார்த்தப்போ இங்கே இருக்கேன்... ஸார் ஜீவனுக்கு ஒண்ணும் ஆயிடலையே?"

 

"நத்திங்....உங்ககிட்டே சண்டை போட்ட ஆளுங்க எப்படி இருந்தாங்கன்னு தெரியுமா?"

"மாநிறம், ஒருத்தன் உயரமா இருந்தான், ஒருத்தன் குள்ளமா பருமனா இருந்தான். நெற்றியில் பெரிய வடு இருந்தது... ஆ,,,அப்புறம் அவங்க சண்டைபோட்டப்போ என்னைப்பத்தி கோட்டின்னு சொன்ன ஞாபகம்....?!"

"சரி... ரெஸ்ட் எடுங்க காசி"

Kakithapookkal - Part 4

"சார் பச்சைப்பிள்ளை ஸார்.! அவனுக்கு.....!பேசும்போதே காசியின் கண்கள் கலங்கின...."!

ஈஸ்வர் அவன் தோளைத்தட்டிக் கொடுத்துவிட்டு வெளியேற, துரை அருகில் வந்தான். "ஸார் டிரைவர் சொல்றதெல்லாம்....!"?

"உண்மைதான்... துரை அவன் வார்த்தையிலும், கண்களிலும் உண்மையான வருத்தம் இருந்தது.. சரி போன் வந்தது திருவான்மியூர்... காசி சொன்ன வார்த்தையில் கோட்டின்னு ஒரு பேரு வருது. முதல்ல ஸ்டேஷனுக்கு போன் பண்ணி அந்த பெயர்லே யாராவது ரெளடி இருக்கானான்ன கேளுங்க...!"

சற்று நேரத்திற்குள் தகவல் வரவும், ஈஸ்வர் கவினுக்கு போனில் ஆறுதல் கூறிக் கொண்டு இருந்தான்.. "என்னாச்சு?"

"கோட்டி பாஸ்கர் போனமுறை அடையார் திருட்டு வழக்கில் ஜாமீன் வாங்கிப்போனவன்"

"அவன் இடம் தெரியுமா?"

"தெரியும்... !"

"வண்டியை அங்கே விடுங்க.... துரை நெரிலேயே போய் பார்த்திடலாம்...!" வண்டி பீறிட்டு கிளம்பியது.. புழுதியைச் சுமந்தபடி செல்லும் போலீஸ் ஜீப்பினைக் கண்டு சிலர் பதுங்கிட சிலர் பயந்து வழிவிட அந்த கூரை வேய்ந்த வீட்டின் முன் நின்றது ஜீப்,,,, அதற்குள் பதறியபடி வெளியே வந்த கோட்டி பாஸ்கர்...

"என்ன சாமி! நான்தான் கரெக்டா வந்து கையெழுத்தெல்லாம் போடறேனே ?"

"இது வேற பிரச்சனை ? சாரோட நண்பர் குழந்தையை கடத்திட்டு போய் இருக்காங்க?" "உங்க ஏரியா ஆளுங்கதான்... உனக்கு ஏதாவது ....!"

"அய்யா,,,, எனக்குப்புள்ளைங்க இல்லே சாமி.... கஞ்சா,,, கள்ளசாராயம், ஏன் கொலை கூட செய்து இருக்கேன். ஆனா பச்சைப்பிள்ளையை கடத்திட்டுபோய் கொடுமை செய்ய மாட்டேங்க... நம்புங்கய்யா?"

"இதோ பாரு கோட்டி, உனக்கு யார் மேலாவது....!"

"அப்படியெல்லாம் இல்லேங்க?"

"கோட்டி கடத்திட்டுப்போனவன் பேச்சு வாக்கிலே உன் பேரைத் தான் சொல்லி இருக்கான் அதுக்கு சாட்சி இருக்கு,,, நீ இப்போ தப்பிக்க முடியாது.. மரியாதையா உண்மையை சொல்லிடு இல்லேன்னா... முட்டி பேந்திடும்.?!"

"அய்யா.. நான் ... எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேங்க..

ஆனா யார் செய்து இருப்பாங்கன்னு தெரியும்...!"

"யாரு?"

"நம்ம பிச்சுவா வேலு ஸார்.. அவன்தான் முன்பு நாங்க கூட்டா தொழில் செய்தப்போ நம்ம தெருமுனை அய்யர் புள்ளையை கடத்திட்டான் .. அதிலேதான் எங்களுக்குள்ளே பிரச்சனையே வந்தது."

"நீ பொய் சொல்லலையே? இல்லை என்பதுபோல் தலையசைத்தான்.. சரி அவன் எப்படி இருப்பான்..?" கோட்டி சொன்ன அடையாளமும் காசி சொன்ன அடையாளமும் ஒத்துப்போக "அவன் இப்போ எங்கே இருப்பான்னு தெரியுமா? என்றான் உக்கிரமாய் ஈஸ்வர்.

(தொடரும்)

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-part-4-273319.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (5)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 5வது அத்தியாயம் இது.

 

 லதா சரவணன் "அவனுடைய குடோன் இங்கே குப்பத்துக்குப்பின்னாடி இருக்கு, அங்கேதான் தப்பு எதுவும் செய்வான்.. எடம் எனக்குத் தெரியும்.,. வாங்க ஸார்...!" கோட்டி முன்னால் நடக்க, ஈஸ்வரும், துரையும் அவனைத் தொடர்ந்தார்கள்.

சற்றே ஒதுக்குப்புறமான இடமாய் இருந்தது அந்தக்கட்டிடம். "உள்ளே வா குரல் கொடுத்து கூப்பிடு !

" "அய்யா,,,,ஏற்கனவே எங்க ரெண்டு பேருக்குள்ளே கோஷ்டிப்பூசல் இனிமே நீங்கதான் பார்த்துக்கணும்....!"


Latha Saravanan's Kakithapookkal

 

"சரி போ......"!

ஈஸ்வரும் துரையும் கையில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தனர். வேலு, அவர்களைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. சுற்றிலும் மூன்றே பேர், ஜீவன் ஒரு கயிறு கட்டிலில் கிடந்தான். மயக்கமாய் கூடவே இன்னொரு சிறுவனும், கையில் ஊசி குத்திய தடம், ஈஸ்வருக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது. எல்லாரையும் நையப் புடைத்தான். "என்ன வேண்டுமானாலும் செய்துகொள் உன்னை உயிரோடு நான் விட்டால்தானே"-

"ஏய்?! ஏ.ஸி என்னையா அடித்துவிட்டாய் ? உனக்கு என்ன தெரியம்? நான் நினைத்தால்.... உன்னை என்ன செய்வேன் தெரியுமா ?" ஒரு மணி நேரத்திற்குள்ளே வெளியே வந்துவிடவா எந்த தடையும், இல்லாமல் ஆளுங்கட்சியே என் பக்கம்.'

"ஒரேயொரு விநாடி மட்டும் யோசித்தான் ஈஸ்வர், பிறகு துரை நாம இங்கே வந்துயிருப்பது? யாருக்கும் தெரியாது இல்லே...." அவன் இல்லை என்று தலையசைக்க, ஒரு விநாடி யோசித்தான். அவனோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர் கையிலிருந்த பிஸ்டலை உயர்த்தி எல்லாரையும் சுட்டான்.

"ஸார்..." துரை பதற.....!

'விடுங்க.....! துரை இவனை கூட்டிப்போய் வேஸ்ட்டா ஏன் செலவைக் கூட்டணும். இன்னைக்கு விட்டா திரும்பவும் வந்து எத்தனைப் பெற்றவங்க வயிற்றெரிச்சலைக் கொட்டிக்குவான். விடுங்க ஜனத்தொகையில் ஒரு நாலுபேர் காலி இந்தியாவிற்கு என்னால் முடிந்த சின்ன உதவி!"

"விசாரணை வருமே ஸார்....!"

"வரட்டும் பார்த்துக்கலாம் செத்தவன் ஒண்ணும் மகாத்மா இல்லை காசாசை பிடிச்ச பிசாசு தப்பிச்சுப் போகப் பார்த்தான். காலில் சுட முயன்றோம் குறி தவறிட்டுன்னு சொல்லி பைலை க்ளோஸ் பண்ணுங்க. இல்லேன்னா எண்கெளண்டர்ல போட்டதா பேசிடுவோம்." துரையும் தலையசைக்க ஜீவனை நல்ல விதமாய் வீட்டில் கொண்டு போய் சேர்த்தான்.

கணவன் மனைவி இருவரும் காலில் விழாத குறைதான். "நன்றிடா எங்க உயிரையே மீட்டுக்கொடுத்திட்டே,,,,,"

"விடுடா ஜீவன் எனக்கும் மகன் மாதிரிதானே! நான் வரேன், எத்தனையோ ரகசியமா இருந்தும் ப்ரஸுக்கு நியூஸ் போயிடுச்சு. விசாரணைக்கமிஷன் வந்தாலும் வரும் அதை கவனிக்க வேண்டும்."

"என் பொருட்டு நீ செய்த உதவிக்கு இத்தனை பெரிய கஷ்டமா ? என்ன பிரச்சனைவந்தாலும் சரி நானிருக்கேன். எங்கு வந்து சாட்சி சொல்லவும் நான்தயார்."

Latha Saravanan's Kakithapookkal

 

"முட்டாள் இது உதவி இல்லை அன்பு! அப்பறம் உங்க டிரைவர் அடையார் மருத்துவமனையில் இருக்கிறார். அவரை போய் பாருங்கள். நல்ல விசுவாசமான வேலைக்காரர்கள் கிடைப்பது ரொம்பவும் கஷ்டம்." அவன் கிளம்ப முற்படும்போது, துரை வாசலில் நின்றார்.

"ஸார்... உங்களை கமிஷனர் வரச்சொன்னார்..."

 

"வருகிறேன் ..." எத்தனை சொல்லியும் கேட்காமல் அவன் கூடவே வித்யாவும், கவினும் கிளம்பினார்கள். கமிஷனர் அலுவலகத்தில் ஒரு விறைப்பான சல்யூட்டை வழங்கி அவர் காட்டிய இருக்கையில் நன்றி சொல்லி அமர்ந்தான் ஈஸ்வர்.

"அந்த வேலுக்கு அரசியல் செல்வாக்கு நிறைய உண்டு. ஈஸ்வர் மேலேயிருந்து ஒரே பிரஷர். கேஸ் எதுவும் இல்லாமல் எப்.ஐ.ஆர் போடாமல் எப்படி அவனை நீங்க எண்கெளண்டர் பண்ணலாம் என்று கேட்டு துளைக்கிறாங்க?"

"ஸார் கடந்த சில வருடங்களாவே சிலகும்பல் பள்ளி குழந்தைகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது நடந்து வருகிறது... பணம் தரலைன்னாலோ அல்லது போலீஸ்க்கு சொன்னாலோ குழந்தையைக் கொல்வதுன்னு வன்முறையில் ஈடுபடறாங்க.... இது என் நண்பன் கவின் இவர் குழந்தையைத்தான் கடத்தினாங்க.... அவன் பிஞ்சுக் கையில் எத்தனை மயக்கமருந்து போடப்பட்ட தடயங்கள் இருக்குத் தெரியுமா ? அதில் இந்த வேலுவும் ஒரு ஆள் என்பது ஒரு ரூமராகவே இருந்தது."

"இன்பார்மர் யாரு ? கடத்தலை நேரில் பார்த்த சாட்சி இருக்கா...?"

"கோட்டி பாஸ்கர் இருவருக்கும் ஏதோ கோஷ்டி பூசல் அவன் எல்லாத்தையும் சொல்லி விட்டான். கடத்தலை இவரோட டிரைவர் நோ¢ல் பார்த்து இருக்கார். அவர் சொன்ன அடையாளங்களை வச்சித்தான் நான் வேலுவை பிடிக்க சென்றேன். போன இடத்திலே எங்களை தாக்கிட வந்தாங்க வேறு வழியில்லாம சுட வேண்டியதாகப் போச்சு....!"

 

"அரெஸ்ட் பண்ணிக் கொண்டு வந்து இருக்கலாம் ஈஸ்வர்."

"முயற்சி பண்ணினேன் ரொம்பவும் திமிரா பேசினான் , வேறு வழியில்லாமதான் சுட்டேன்."

கவின் வாய் திறந்தான். 'ஸார்.. என் குழந்தையை கடத்திட்டுபோய்... அவனை பார்ப்போமான்னு ஆயிடுச்சு அந்த நேரத்தில் ஈஸ்வர் மட்டும் உதவலேன்னா என் பிள்ளையை நான் பார்த்து இருக்கவே முடியாது... ! நானும் சொசைட்டியில் பெரிய ஆளுதான்... எனக்கு அரசியலில் ஆட்களைத் தெரியும். என்ன பிரச்சனை வந்தாலும் நான் பார்த்துக்கறேன். ஒரு போலீஸ் அதிகாரியா அவர் தன் கடமையைத்தான் செய்து இருக்கார்."

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/latha-saravanan-s-kakithapookkal-05-274590.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. புத்தம் புதிய நெடுந்தொடர் - (6)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 6வது அத்தியாயம் இது.


- லதா சரவணன்

"ஸார் பிரஸ்பீப்பிள்ஸ் எல்லாம் சத்தம் போடறாங்க ? ஒரு கான்ஸ்டபிள் வந்து சொல்ல...."

"இதோ வருகிறேன் என்று வெளியேறினார்கள் அனைவரும்.... பொதுமக்கள் சிலர் ஈஸ்வருக்கு ஆதரவாய் பேசினார்கள். அய்யா அவர் செய்தது தப்பே இல்லை,, சமூகத்தில் நடந்த சீர்கேட்டை புல்லுருவிகளை அவர் அகற்றி இருக்கிறார். பெற்றவர்கள் வயிற்றில் பால்வார்த்து இருக்கிறார். அவரை தண்டிப்பதனால் நாங்கள் போராட்டம் நடத்திட வேண்டியிருக்கும்."

"அமைதி.... ஈஸ்வர் மேல் எந்த விசாரணையும் வராது அதை நான் பார்த்துக் கொள்ளகிறேன். தயவு செய்து பிரச்சனை செய்யாமல் கலைந்துபோங்கள் என்று கமிஷனர் கேட்டுக்கொண்டு நான் மேலிடத்தில் பேசுகிறேன்" என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டு நகர்ந்தார். வெளியேறிய அவனை பத்திரிகையாளர்களும், மீடியாக்களும் சூழ்ந்துகொள்ள,

 

 
Kakithapookkal Part 6
 

 

"ரொம்பவும் துணிச்சலான காரியம் செய்து இருக்கீங்க? ஏதாவது பிரச்சனை வருமின்னு எதிர்பார்க்கிறீங்களா ? ஏன்னா இறந்துபோன வேலுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கே....?"

"வந்தாலும் கவலை இல்லை.... நான் என் கடமையை செய்தேன். காஞ்சிபுரம் குழந்தைகள் இரட்டைக்கொலை நம் நெஞ்சை விட்டு இன்னமும் அகன்று இருக்காது. யோசியுங்கள் எவனோ ஒருவன் தன் சுயலாபத்திற்காக ஒண்ணும் அறியாத அப்பாவிக் குழந்தைகளை பலியாக்குவது நல்லதா? அப்படிப்பட்டவர்களை விசாரணையின்றி கொல்ல வேண்டும். பெற்ற பிள்ளைகளை இழந்து தவிக்கும் அந்த பெற்றோரின் மனம் என்ன பாடு பட்டு இருக்கும். அந்த வேதனையில் சம்பந்தப்பட்டவன் மட்டும் கிடைத்திருந்தால் என்ன செய்வார்களோ அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். மனசாட்சி உள்ள யாராலும் இதை தவறென்று சொல்ல முடியாது ?"

"பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன ?"

"உங்களுக்கு என்ன வேலையிருந்தாலும், குழந்தைகள் சம்மந்தப்பட்ட காரியங்களை நீங்களே நிறைவேற்றுங்கள். அவர்களை உங்கள் கண்பார்வையிலேயே வைத்திருங்கள். வேலையாட்களை நம்பிக்கொண்டு, உங்கள் செல்வங்களை இழந்துவிடாதீர்கள்? அவ்வளவுதான்.!'"

மறுநாள் காலையில் பத்திரிகைகளும், மீடியாக்களும் ஈஸ்வரின் செயலை பாராட்டிக்கொண்டு இருந்தது. அத்தனை புகழ்ச்சிக்கும் காரணமான ஈஸ்வரன் அலட்டாமல் அமைதியாய் தன் வீட்டுத் தோட்டத்தில் அமர்ந்து புத்தகம் வாசித்துக்கொண்டு இருந்தான்,

"வாழ்த்துக்கள் ஈஸ்வர்....!"

"வாடா சுரேன்.. என்னடா திடீர் விஜயம் ? மழைவரப்போகுதா ?" வேடிக்கையாய் வானத்தைப் பார்த்த நண்பனை முதுகில் தட்டினான் சுரேன்.

"காபி சாப்பிடறீயா ?"

"நோ நோ எத்தனை பெரிய காரியம் பண்ணியிருக்கே ? பெரிய டீரீட் தரணும்.? வெறும் காபியோட துரத்திட பாக்குறியா ?"

"நான் என்னடா பெருசா செய்திட்டேன். என் கடமைதானே இது. அதை மீடியாக்கள்தான் பெருசா காட்டுதுன்னா, நீயும் வந்து வாழ்த்தறியே? நான் என்னவோ
பெருசா சாதிச்சா மாதிரி.....!"

"அடப்பாவி! தன்னடக்க தர்மரே ! ஓவர் நைட்லே ஹீரோ ஆயிட்டே டீவி, பேப்பர்ன்னு எதைப்பார்த்தாலும் உன் முகம்தான்."

"போடா ! உன் ஸாப்ட்வேர் கம்பெனியெல்லாம் எப்படிபோகுது?"

"மெஷின் லைப்டா மச்சான், தினமும் கண்விழிக்கும்போதே ஆயிரம் பிரச்சனைகள்.'

"கம்ப்யூட்டரோடதானே போராடுறே? என்னை மாதிரி களவாணியோட இல்லையே ?'

சுரேன் ஈஸ்வரைப் புன்னகையோடு பார்த்தான். நல்ல நிறம், அழகான வசீகரிக்கும் பெரிய கண்கள், நெடுநெடுவென்ற உயரமும், அதற்கேற்ற உடல்வாகும், இளஞ்சிவப்பான மெத்தென்ற உதடகள், அதை உட்பக்கமாய் கடித்து கன்னக்குழி விழ அவன் சிரிப்பது ஆளை அடித்துப்போடும் அழகு..!


"அதை அப்புறமாய் பார்க்கலாம் என்று உதட்டை மடித்தபடி சிரித்தான்." ஈஸ்வர்"உன்னை நினைக்கும் போது ரொம்ப பெருமையா இருக்குடா.....! நண்பனின் அருகில் நெருங்கி அமர்ந்து தோளில் கைபோட அவன் நெளிந்தான். அடப்பாவி இத்தனை பெரிய ஆளாயிட்டே! ஊரே உன்னைப்பார்த்த மிரளுது இன்னமும் உனக்கிந்த கூச்சம் போகலையா ? பாவம்டா உன்னைக் கட்டிக்கப்போறவ ?" என மழுமழுவென்று ஷேவ் செய்யப்பட்டு இருந்த மோவாயில் இடித்தான் சுரேன்.

"இந்த,,,,, இந்த சிரிப்புதாண்டா மச்சான் உன் ஹைலைட்! நீ மட்டும் பொண்ணாயிருந்தா நானே உன்னைத் தூக்கிட்டுப் போய் கல்யாணம் பண்ணிப்பேன் சும்மா கற்பனை பண்ணி பாரேன் ?"

"ஏதை ? என்னன்னு ?"

'நானும் நீயும் காதல் பண்றாமாதிரி....!'

ஈஸ்வர் மனம் விட்டு சிரித்தான். நண்பனின் கற்பனையையெண்ணி!

"மறுபடியும் அப்படி சிரிக்காதேடா ? உன் உத்தியோகத்திற்கு உள்ள முரட்டுத்தனம் உன் முகத்திற்கு இல்லை அதில் மென்மை அதிகம். அதிலும் உன் கண்கள் இருக்கே... ?"

'நிறுத்துடா... மச்சீ..... இன்னைக்க உனக்கு என்னாச்சு ? ஏன் இப்படி ஆயிட்டே ? உன் பக்கத்திலே உக்காரவே எனக்கு பயமாயிருக்கு.."

"ஏற்கனவே உன் மேலே எனக்கு இம்ப்ரஸ் அதிகம். இப்போ நீ பண்ணிய காரியம் வேற அதிகமா இம்ப்ரஸ் பண்ணவைக்குது."

"நீ சரியில்லை முதல்ல வீட்டுக்குப் போ ....."

"விரட்டாதேடா கிளம்பறேன்.." அவன் ஈஸ்வரின் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றான்.

(தொடரும்)

http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-part-6-274963.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (7)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள்..

 
 

- லதா சரவணன்

ஈஸ்வர் புன்னகையோடு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் சந்தோஷமாய்! கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைக் கண்டான். சுரேன் கூறியது போல், அவன் முகத்தில முரட்டுத்தனமே இல்லை. வசீகரிக்கும் மென்மை இருந்தது.

"உன்னைத் தூக்கிட்டுப்போய் கல்யாணம் செய்துப்பேண்டா ! நீ மட்டும் பொண்ணா இருந்து இருந்தால்...?! "நண்பனின் குரல் மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்து அதரங்களில் இளநகை பூக்கவைத்தது.

கட்...!

கூவாகம் கோவிலின் முகப்பு

ஐநூறு ஆண்டுகால பழைமையானது. கல்சுவரில் கட்டப்பட்டு கருவரைக்கு மேலே வட்ட வடிவில் கோபுரம் அதில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை திரெளபதியின் சிற்பங்கள் கோபுரத்தின் நான்கு புறங்களிலும் காளியம்மன் சிலைகள், பணிப்பெண்கள். முகப்பு மண்டபத்தின் மேல் அரவான் களப்பலி தொடர்பான நிகழ்வுகளை சிற்பங்களாக வடிவமைத்து உள்ளனர். 1997-ஆம் ஆண்டு அலிகள் மாநாடு ஒன்று விழுப்புரத்தில நடைபெற்றது. அங்கு கலந்துகொண்ட ரவி என்பவர்தான் அலிகளுக்கு அரவாணி என்று பெயரிட்டார். அதன்பிறகே கூவாகம் விழா அரசு விழாவாக மாற்றமடைந்தது.

Kakithapookkal, new story series

 
மீனாட்சி ரசித்து ரசித்து காபியைப் பருகியதை கண்டு கோபமாய் முனகினாள் ரத்னா. "என்னடி வாய்க்குள்ளேயே முனகிகிட்டு இருக்கே ? நீதானே காபி வேண்டான்னு சொன்னே ? இப்போ முனகினால் எனக்கு வயிறு வலிக்காதா ?!"


 

"உன் காபி யாருக்கு வேணும் ?"

"பின்னே? என்னப் பிரச்சனைடீ உனக்கு ?"

"பேப்பர் பார்த்தியா? உன் ஆளு எத்தனை பெரிய விஷயம் செய்து இருக்காருன்னு? ஊர்பூரா பேச்சே அதுதான். டிவி, பத்திரிகைன்னு கலக்குறார். நீயானா அழுக்கு கேண்டீனில் உட்கார்நது டீ குடிக்கிறே ?"

"தப்பு ?"

"எது?'

"உன் புள்ளி விவரம்? நான் குடிப்பது காபி ?! டீயில்லை ?!"

"நாசமாப்போச்சு,,,?"

"இல்லையே நல்லாத்தானே இருக்கு,,," ரத்னா முறைப்பதைக் கண்டு, சிரித்தாள் மீனாட்சி

"நீயென்ன ஜடமா ? மேடையில் உணர்வு பூர்வமா கட்டுரை எழுதி பேசிட்டா போதுமா?

வாழ்க்கையில் பூஜ்ஜியமாய் இருக்கியே? பி,ஏ கடைசி வருடம் கல்லூரி விழாவில் ஈஸ்வரைப் பார்த்தே?! இப்போ எம்.ஏ முடிச்சிட்டு பி.ஹெச்.டி பண்றே இந்நேரம் வயிற்றைத் தள்ளிட்டு வந்து நிக்க வேண்டாமா?"

"அடி கழுதை மீனாட்சி அவளை அடிக்க கை ஓங்கினாள் திமிரா ?"

"இல்லே டியர், நீ இப்படி தத்தியா இருக்கியேன்னு கவலை..."

"நான் காதலை சொல்லுவதில் உனக்கென்னடி அத்தனை அவசரம்..."

"எனக்கு கிடைக்காத இன்பம் உனக்காவது கிடைக்கட்டுமே ?!"

"ஏன் நீயும் காதலிக்க வேண்டியதுதானே?"

"தெரிஞ்சிகிட்டே கேட்கக்கூடாது? எனக்குத்தான் சின்னவயசிலேயே ஒரு மாமா பையனை முடிவு பண்ணிட்டாங்களே ? இனிமே எங்கே காதல் வர்றது?"

"சரிடி உங்க மாமா பையனைக் காதலிக்க வேண்டியதுதானே ?"

"அவன் உன்னைவிடவும் சாமியார். நீயே தேவலாம்? நானே போய வலிய நின்றாலும் கைபட்டா ஓடற தூரத்தில்தான் நிப்பான்."

"அத்தனை பயமா?" மீனாட்சி கிண்டலாய் கேட்க,

"நீ வேற அது ஒரு பண்பாட்டில் ஊறின ஜடம். எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுன்னு 1970 ஹீரோயின்ஸ் டயலாக் சொல்லும். பேருக்குத்தான் முறைப்பையன் ஒரு சீண்டல், முத்தம், ஒரு டச், ஒரு லுக் ஒண்ணும் இல்லை,"

  •  
  •  

மீனாட்சி கண்களில் நீர் வருமளவுக்கு கலகலவெனச் சிரித்தாள்.

"பேசாம கல்யாணம் பண்ணிக்கோ,.,...!"

"அது ஒரு வட்டத்தினுள் சிக்கிடும். சில விஷயங்கள் அந்தந்த வயசிலே அனுபவிக்கணும் மீனு! அப்பத்தான் லைப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கம். திருட்டு மாங்காய்க்குத்தானே ருசி அதிகமின்னு நீ கேள்விபட்டதில்லையா ? எப்போ உன் லவ்வை டிக்ளர் பண்ணப்போறே ?"

"கூடிய விரைவில் !"

"சீக்கிரம் மூணு வருஷம் ஆச்சு, இப்படியே யோசிச்சா காத்திருந்த புருஷனை ஸாரி காதலனை இன்னைக்கு வந்த எவளாவது அடிச்சிட்டுப் போயிடப்போறோ?"

"போடி லூசு?!"

"யாரோ முன்பின் அறியாதவ கூட உன் ஆளுக்கு அப்ளிகேஷன் போடலான்னு யோசிப்பாளுங்க?"

"எதுக்கும் காலநேரம் வரணும் ரத்னா?!"

"கிழிச்சே ?! அதுக்கு முன்னாடியாவது அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. இப்போதான் ஒரு மாதமா அவர் வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே இருக்கே இப்பவும் இல்லேன்னா எப்படி டீ?!"

"லூசு! வீட்டுக்கு பக்கத்திலேதானே இருக்கேன். உள்ளே இல்லையே ?! அவரை சந்திக்க சரியான சந்தர்ப்பமே எனக்கு கிடைக்கலைடீ!"

"முட்டாள் ! காதல் ஆயிரம் காரணங்களை உருவாக்கும். காதலிக்கிறவங்க எல்லாரும் மணிக்கணக்கா பேசறாங்களே?! காரணத்தை தேடியா பேசறாங்க! அர்த்தமில்லாத பேச்சு ஆறுதலான அணைப்பு செல்ல உரசலோடு கூடிய ஆழமான பார்வை அதுதான் காதலர்கள் அடையாளம். தனக்கு பிடித்த பெண்ணை பார்க்க ரோட்சைட் ரோமியோக்கள் எப்படி அலைவார்கள்? டீ குடிக்கிறாமாதிரி, சிகரெட் பிடிக்கிறாமாதிரி, போன் பேசுவது போல் எத்தனையோ இதுதானே உருவாக்குவதுதானே!."

  •  
  •  
 

"நீயே ஒருநல்ல ஐடியாவாச் சொல்லேன்."

"நீ லவ் பண்றீயா? இல்லை நான் லவ் பண்றேனா? சரி பிரண்டாப்போயிட்டே, சொல்றேன் கேட்டுக்கோ?! எங்க வீட்டில் இந்த பலகாரம் செய்தாங்க?!. நீங்க சாப்பிட்டீங்களா? இந்த வாரம் என் கட்டுரை வந்திருக்கு படிச்சு உங்க அபிப்ராயம் சொல்லுங்க. இதுவும் இல்லேன்னா நாம ரிசர்ச் பண்ணும் திருநங்கைகளை நேரில் சந்திக்க யாரை அணுக வேண்டும்? இதோ இதில் இருக்கிற பத்திரிகை நீயூஸ் காட்டி விஷ் பண்ணலாமே?"

தோழி சொல்வதையெல்லாம் கேட்ட மீனாட்சி "செய்யலாம்தான்"

"என்னத்தே செய்யலாம் ?"

"போக வர்ற ஒரு சின்ன சிரிப்பு, இல்லே ஒரு ஹல்லோ அதுகூடவா நான் சொல்லித் தரணும்."

"சரிடி ஆனா இப்படி வலியப்போய் நின்னா அவர் என்னைத் தப்பா நினைக்க மாட்டாரா?"

"நோ வே! எந்தவொரு விஷயமும் அடிக்கடி கண்ணில்படும்போதுதான் யோசிக்கத் தோன்றும், நீ அடிக்கடி அவர் முன்னாடி போய் நின்னாத்தான் நீ ஏன் வர்றேங்கிற விஷயம் தெரியும். உன் நெருக்கமும் புரியும், தனுஷ் சொல்றா மாதிரி பார்க்கப் பார்க்கத்தாண்டி பிடிக்கும் மனசில பதியும்".

"சரிடி எனக்காக இல்லைன்னாலும் உனக்காவது முயற்சிக்கிறேன்".

"ஆமா நான்தான் குடும்பம் நடத்தப்போறேன் பாரு?!"

"இப்போ இப்படி பேசறவ அன்னைக்கு யோசின்னு அவகாசம் தந்தியே ஏனாம்? இல்லேன்னா அப்பவே என் விருப்பத்தை அவர்கிட்டே சொல்லியிருக்கலாமே?"

(தொடரும்)

http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-26-02-275250.html

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (8)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 8வது அத்தியாயம் இது.

 
 

- லதா சரவணன்

"பார்றா.....! கடைசியில் என்னை வில்லன் ஆக்குறதை? அப்போ நீ சின்னப் பப்பா தப்பான முடிவு எடுக்கக் கூடாது பாரு அதான".தோழியின் தலையில் செல்லமாய் குட்டியபடி காபிக் குண்டான பணத்தைத் தந்து விட்டு இடத்தை காலி செய்தனர் இருவரும்.

மீனு என்கிற மீனாட்சி 23 வயது அழகி, கண்களை உறுத்தாத கவரும் அழகு, அவளுடையது, பால் போன்ற வெளுத்த சருமம், மீன் போன்ற விழிகள், கூர்நாசி, கிள்ளத் தூண்டும் கன்னக்கதுப்புகள், நேர் பல்வரிசை கொண்டு அவளின் சிரிப்பை காணும் எவரும் தடுமாறுவது நிஜம்.

 

 
Kakithapookkal, new story series
 
VIDEO : MS Dhoni captaincy record still a dream for Virat Kohli
 
You__O3KCPVHA_crop_org_resize_640x360.jpg
 
 
 
 
 
 

கணவர் அலுவல் சென்றபின் பயந்துபயந்து காலங்கழித்த ரத்னாவின் அன்னை செல்விக்கு உற்ற துணையென வந்தவர்கள்தான் மீனாட்சியின் குடும்பத்தினர். நல்ல குடும்பம், தங்களைப்போலவே நடுத்தரக் குடும்பத்தினர் என்பதால் செல்விக்கும் பழகிட ஏதுவாய்ப் போனது. மீனாவின் தாய் கலைவாணியும் செல்வியும் நெருங்கியத் தோழிகளாயினர். அதே போல் ரத்னாவிற்கு மீனா கிடைத்தாள். பெண்களுக்கு ஒரு துணை கிடைத்த திருப்தியில் ஆண்கள் இருவரும் நிம்மதியாக வேலைக்குச் செல்லத் துவங்கினார்கள். பள்ளி செல்வதில் இருந்து கல்லூரி, நூலகம், பொழுது போக்கு எல்லாமே இருவருக்கும் ஒன்றாகிப் போனது.ரத்னா அவளின் நெருங்கியதோழி இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசிப்பவர்கள். சிறுவயது முதலே அவர்களுக்குள் எழுந்த ஒற்றுமை இன்று வரையில் தொடர்ந்து வருகிறது. பாகுபாடு பார்க்காமல பழகும் குணாதிசயம் கொண்டவர்கள். இரு குடும்பத்தினரும். மீனாவின் தந்தையும், ரத்னாவின் தந்தையும் ஒரே நேரத்தில்தான் பூந்தமல்லியில் பிளாட் வாங்கினார்கள. அப்போது அங்கே நகரம் ஏற்பட்டு இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசைகள், சிறு கல்வீடுகள் முளைத்திருந்தன. முதலில் குடிவந்தது ரத்னாவின் குடும்பம்தான் மில் ஒன்றில் மேனேஜராய் பணிபுரிந்து வந்தார் ரத்னாவின் தந்தை. உள்ளூரில் வீடு வாங்கும் அளவிற்கு சக்தியில்லை, ஆபிஸில் லோன் போட்டு நகை நட்டு எல்லாம் விற்று இங்கு இடத்தை வாங்கி விட்டார். வீட்டிற்கு குடிவந்த போதிலும், திருப்தியைம் மீறி, சுற்றிலும் இருந்த தனிமை சற்று மிரட்டிடத்தான் செய்தது.

இருவரும் ஒன்றாய் வரலாறு பாடம் எடுத்தார்கள். அதன்பிறகு M.A History படித்ததும் PHDயில் இணைந்தார்கள் , வரலாற்று மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு அதில் ஆறுமாத கால பிராஜெக்ட் - ஆக ரத்னா-மீனாட்சி எடுத்தது திருநங்கைகள் பற்றிய ஆய்வுதான்.

"ரத்னா கூட முதலில் இது வேண்டுமா மீனு? சர்ச்சைக்குரிய விஷயம் மற்றவர்களைப் போல நாமும் ஏன் இலக்கியம், தமிழ் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது."

"எல்லாரும் செய்யறதை நாமயேன் செய்யணும் ரத்னா. நமக்குன்னு ஒரு தனி அடையாளம் வேணும். தவிரவும், நம்மாலே அவங்களுக்கு ஒரு நல்லது நடக்கணும். நான் ஏற்கனவே உன்கிட்டே சொன்னேனே?"

 
 
 

"ஒருமுறை அப்பா கூட வடமாநிலம் போய் இருந்த போதுதான் அவர்களை முதன் முதலில் பார்த்தேன். அப்போ எனக்கு 13 வயசு ட்ரைனில் போயிட்டு இருந்தப்போ எனக்கு எதிரிவ் ஒரு பெண்! அவளை முழுமையான பெண் என்று சொல்லிட முடியாது. உடையும் நளினமும் மட்டுமே பெண் என்றது. அங்கு உள்ள இளைஞர்கள் எல்லாரும் தேவையில்லாமல் அவளை சீண்டினார்கள். அசிங்கமாய் பேசினார்கள். ஆனால், அவளோ அமைதியாய் இருந்தாள். டிக்கெட் பரிசோதகர் வந்திட எல்லாரும் ஏதோ குசுகுசுத்தனர்.

அவரும் வந்து அந்தப்பெண்ணை இறங்கிடச் சொல்லி வற்புறுத்திட அதற்குள் அடுத்த ஸ்டேஷன் வந்தது. அவளும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். இறுதியில் அவர்களின் பேச்சு கொச்சையாய் போகவே, வேதனையோடு இறங்கினாள்."

"கீழிறிங்கிய அந்த பெண்ணின் காலில் வணங்கிய ஒரு சிலர் தன் இளம் குழந்தையைக் காட்டி ஆசிர்வதிக்கும்படி கேட்க, எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது.
அப்போதான் அப்பா அவர்களைப் பற்றி சொன்னார். அவர்கள் எல்லாம் திருநங்கைகள் என்று. பெண்ணும் ஆணும் இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ, அதே அளவு உள்ள மூன்றாம் பாலினம். உனக்கு இதைப்பற்றி இப்போது புரியாது. இங்கே அவர்களை தெய்வமாய்ப் பார்ப்பார்கள். அவர்கள் ஆசிர்வதித்தால் கடவுளே ஆசீர்வதிப்பதைப் போல்,,,,,,,,,!'

"அப்போ ஏன் டிரைனில் எல்லாம் கிண்டல் பண்றாங்கப்பா?"

"கோவிலில் கூட கடவுளுக்கு விமர்சனங்கள் நடக்கும் இல்லையா? நன்மையும் தீமையும் உடனேயே புரியாதுடா தங்கம். காலம் அதை உணர்த்தும்."

"அப்பவே எனக்கு அவங்களைப் பற்றி ஒரு சின்ன இன்ட்ரஸ்ட் இருந்தது. நம்ம ஊருக்கு வந்த பிறகு எப்பவாவது சில நேரங்களில் திருநங்கைகளை சந்திப்பது உண்டு. ஆனா வடமாநிலங்களைக் காட்டிலும் இங்கே அவங்க ரொம்பவும் கேவலமா நடத்தப்படறாங்க.ஏதோ பார்க்கக் கூடாததைப் பார்த்தது போல் ஒதுங்கிப்போறதும், கல்லெடுத்து அடிக்கிறதும், அசிங்கமான கமெண்ட் அடிச்சி கண்ட இடத்தில் தட்டறதும், ச்சீ, ரொம்பவும் தப்பு ரத்னா இதெல்லாம் ?!"

"கொஞ்சம் யோசி நமக்கு முன்பின் அறிமுகம் இல்லாத யாரோ ஒருத்தர் டீவியிலோ, அல்லது பத்திரிகையிலோ இறந்ததாகவோ... கேள்விப்பட்டால் ஒரு நிமிஷமானாலும், மனசு வருத்தப்படறோம். ஆனா நம்மையும் அறியாமல் கண்ணுக்கு எதிர்க்க, ஆதரிக்க ஆளில்லாம திரியும் இவங்களிடம் எப்படி நடக்கறோம் தப்பு இல்லே இது?!"

"மீனா நீ பேசறது கரெக்ட். ஆனா இவங்க எல்லாம் என்ன நேரத்தில் எப்படி டரீட் பண்ணுவாங்கன்னு தெரியாது? திடீர்னு அசிங்கமா ஏதாவது பேசிட்டா தாங்க
முடியாது."

"அப்படி சொல்லமுடியாது ரத்னா. அடிமனசிலே அவங்க அன்புக்க ஏங்கிட்டு இருக்காங்க. பூனை கூட விரட்டுறவங்களை எதிர்க்கும் தங்களிடம் எல்லை மீறுபவர்களிடம் வேறு வழியில்லாம தவறா நடக்கிறாங்க? பேசுறாங்க? நீ வளர்க்கும் புறா கூட முதலில் நீ அருகில் போகும்போது மிரண்டு பின்வாங்கலையா? நாம் அவர்களை நெருங்கும்போது பயம், அச்சம், கோபமின்னு, நல்லதுகெட்டதுன்னு யோசிக்க முடியாமல்?! யாரையும் கிட்டே நெருங்க விடுவதில்லை......"

'அப்போ அவங்களைப் பற்றி எழுதுவதா முடிவே பண்ணிட்டியா ?'

"ம்.... ஆராய்ச்சிங்கிறே பேரில் புதைந்ததை தோண்டுவதும், இல்லாததை தேடுவதையும்விட, மனமும், உடலும் ரணமாய் ரத்தமும், தசையும் உள்ள மனிதர்களுக்காக நான் ஏதாவது செய்யணும் என்று என்று நினைக்கிறேன். இது என்னால் செய்யமுடிந்த ஒரு சிறு உதவி அவ்வளோதான்."

(தொடரும்)

http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-mar-06-276048.html

Link to comment
Share on other sites

ரத்னா அவளின் நெருங்கியதோழி இருவரும் அருகருகே உள்ள வீட்டில் வசிப்பவர்கள். சிறுவயது முதலே அவர்களுக்குள் எழுந்த ஒற்றுமை இன்று வரையில் தொடர்ந்து வருகிறது. பாகுபாடு பார்க்காமல பழகும் குணாதிசயம் கொண்டவர்கள். இரு குடும்பத்தினரும். மீனாவின் தந்தையும், ரத்னாவின் தந்தையும் ஒரே நேரத்தில்தான் பூந்தமல்லியில் பிளாட் வாங்கினார்கள. அப்போது அங்கே நகரம் ஏற்பட்டு இருக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் குடிசைகள், சிறு கல்வீடுகள் முளைத்திருந்தன. முதலில் குடிவந்தது ரத்னாவின் குடும்பம்தான் மில் ஒன்றில் மேனேஜராய் பணிபுரிந்து வந்தார் ரத்னாவின் தந்தை. உள்ளூரில் வீடு வாங்கும் அளவிற்கு சக்தியில்லை, ஆபிஸில் லோன் போட்டு நகை நட்டு எல்லாம் விற்று இங்கு இடத்தை வாங்கி விட்டார். வீட்டிற்கு குடிவந்த போதிலும், திருப்தியைம் மீறி, சுற்றிலும் இருந்த தனிமை சற்று மிரட்டிடத்தான் செய்தது.

கணவர் அலுவல் சென்றபின் பயந்துபயந்து காலங்கழித்த ரத்னாவின் அன்னை செல்விக்கு உற்ற துணையென வந்தவர்கள்தான் மீனாட்சியின் குடும்பத்தினர். நல்ல குடும்பம், தங்களைப்போலவே நடுத்தரக் குடும்பத்தினர் என்பதால் செல்விக்கும் பழகிட ஏதுவாய்ப் போனது. மீனாவின் தாய் கலைவாணியும் செல்வியும் நெருங்கியத் தோழிகளாயினர். அதே போல் ரத்னாவிற்கு மீனா கிடைத்தாள். பெண்களுக்கு ஒரு துணை கிடைத்த திருப்தியில் ஆண்கள் இருவரும் நிம்மதியாக வேலைக்குச் செல்லத் துவங்கினார்கள். பள்ளி செல்வதில் இருந்து கல்லூரி, நூலகம், பொழுது போக்கு எல்லாமே இருவருக்கும் ஒன்றாகிப் போனது.

இருவரும் ஒன்றாய் வரலாறு பாடம் எடுத்தார்கள். அதன்பிறகு M.A History படித்ததும் PHDயில் இணைந்தார்கள் , வரலாற்று மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஆய்வு அதில் ஆறுமாத கால பிராஜெக்ட் - ஆக ரத்னா-மீனாட்சி எடுத்தது திருநங்கைகள் பற்றிய ஆய்வுதான்.

 

மேலே வாசிக்க முடியாமல் உள்ள பகுதியை மீண்டும் இணைத்து உள்ளேன்

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (9) எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர்

காகிதப் பூக்கள். தொடரின் 9வது அத்தியாயம் இது.

 

 "All the best meenu !"

"நீயென்ன பண்ணப்போறே?"

"நான் எதையும் தனியா பண்ணப்போறதில்லை?

உனக்கு உதவியா இருக்கப்போறேன்."

"சரி... என்று சந்தோஷமாய்த் தலையசைத்தாள் மீனாட்சி..'

Kakithapookkal, new story series

அதேபோல் கல்லூரியிலேயே அவளின் பிராஜெக்ட் பற்றி வியப்பாய் பேசியது. காதில் விழுந்த விமர்சனங்கள் கேலிகள் என எல்லாவற்றையும் அலட்சியம் செய்து துவங்கினாள் மீனாட்சி, அதன் பிறகு சில கட்டுரைகளும் எழுதினாள் அவர்களைப் பற்றிய புத்தகங்களையும் படித்தாள் ஓரளவு புரிந்துகொண்ட பிறகு, எல்லாமே கைகொடுத்தது. ஏற்கனவே மூன்றாம் வருடம் போட்ட திருநங்கைகளின் தலைவனைப் பற்றிய நாடகமும் அரங்கேறி இருந்ததால் காலேஜிலும் அவளின் இந்த முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

ஸ்கூட்டியைப் பார்க் பண்ணிவிட்டு எதிர்வீட்டின் மேல் பார்வையைத் திருப்பிட ரத்னாவோ கேலியாய்ப் பார்த்தபடியே சென்றாள். "அம்மா" புன்னகையுடன் உள்ளே நுழையும் போது, தாயை அழைத்தபடியே வந்தாள்.

"டயர்டா இருக்கும்மா,,"

"சூடா மெதுபக்கோடாவும், மிக்ஸரும் செய்தேன் கைகால் கழுவிவிட்டு உடைமாற்றி வாடா!"

"ரத்னாவுக்கு...."

"அப்பவே கொடுத்தாச்சு..."

. மீனாட்சி தன் அறைக்குள் சென்று உடைமாற்றி வரவும், அம்மாவும் டிபனோடு வரவும், சூடாய் காபியைப் பருகியபடியே "மீனா நானும் ஆன்ட்டியும் கோவிலுக்குப் போறோம்."

"சரிம்மா.. "அம்மா கிளம்பிட தன் அறையின் ஜன்னலைத் திறந்தாள் மீனாட்சி...

 

நேரம் ஆறரையை தொட்டு இருக்க எதிர்பிளாட் இருளில் மூழ்கி இருந்தது. ஈஸ்வர் இன்னமும் வரவில்லை போலும். வண்டியைக் காணவில்லை. மெல்ல காபியைச் சுவைத்தபடியே நோட்டம் விட்டுக் கொண்டிருந்த போதே சரக்கென்று ஜீப் நுழைந்து அதிலிருந்து உதிர்ந்தான் ஈஸ்வர். ஒரே விநாடிதான் உடனே வீட்டினுள் நுழைந்து கதவைத் தாளிட்டான். மேலே அவன் அறையில் விளக்கு ஒளிவிடத் துவங்கியது.

எப்போதுமே அவன் இப்படித்தான், வந்து ஒரு மாதமான போதிலும், யாரிடமும் அநாவசியமான பேச்சு இல்லை. உடற்பயிற்சி கூட அறையில்தான் போலும், எப்போதாகிலும்

அரிதாய் பால்கனியில் நிற்பது வழக்கம். அதுதவிர காலையில் வாக்கிங். இதுதான் ஈஸ்வரின் வெளிப்புழக்கம். ஜீப்பில் ஏறும்போதும் இறங்கும்போதும் மட்டுமே அவள் காணமுடியும். இதில் அவள் எங்கேயிருந்து சிரிப்பதும், பேசுவதும் ரத்னாவிற்கு இதெல்லாம் புரிய வாய்ப்பில்லையே? அவள்தான் ஒரு மணி வரை படுக்கையைத் தேய்த்துக் கொண்டு இருப்பாளே ?

 

அன்பைப் பரிமாறிக்கொள்ளாமல் இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. கற்பனையுலகில் சஞ்சாரிப்பதென அற்புதமானதொரு ஆளுகைதான் காதல். தினம் தினம் அதில் மூழ்கினாலும் மீளத் தோன்றாமல் உள்ளே இருக்கும். காதலின் இதயம் ஒரு படுகுழி! கால்பதிக்கும் வரைதான் பாதுகாப்பு ! கால் பதித்து விட்டால், தேனும், விஷமும் இழையோடும் அந்தச் சேற்றில் பலருக்கு கிடைப்பது விஷமே!

இனிக்கும் தேனைப் பருகி அதன் சுவை மாறுவதற்குள் கசக்கும் விஷமாய் மாறுவதும் உண்டு. விஷத்தை விரும்பி உண்டிட எல்லாரும் நீலகண்டன் இல்லையே ? மீனாட்சி முதன்முதலாய் ஈஸ்வரைச் சந்தித்த நினைவுகளை அசை போட்டாள்....

அது கல்லூரியின் இறுதி வருடம் சரித்திர கல்லூரி என்பதால், பழைய பண்பாடு, வரலாறு என்று ஒரு விழா நடத்தப்பட்டது. அதாவது நலிந்துபோய் தற்போதைய இளசுகள் காண மறுக்கும் அறுவையென்று ஒதுக்கப்பட்டு வருமும் பழைய வரலாற்றுக் கதைகளை நாடகமாய் தொகுக்கப் போட்டி வைக்கப்பட்டது. அந்த விழாவிற்கு தலைமை தாங்கிட வந்தவன் தான் ஈஸ்வர்.

 

மொத்தம் எட்டு நாடகங்கள். புதினங்களில் இருந்து சில மூவேந்தர்களைப் பற்றியதும், என்று ஒவ்வொன்றம் அருமையாகத்தான் இருந்தது. ஆனால் ஐந்தாவதாக இடம்பெற்ற அந்த நாட்டிய நாடகமே பரிசைத் தட்டிச் சென்றது.

அதை நடத்தி அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவளும் மீனாட்சிதான். அன்றைய விழா தினத்தில்! வரவேற்புரை பேசி தலைமையாளரை வரவேற்ற பிறகு நடைபெற்ற நான்காவது நாடகம் வரை நார்மலாகவே இருந்தது.

அரவான் களப்பலி என்ற நாடகம் துவங்கப் போகிறது எனவும் அதன் கதைப்பற்றிய எழுச்சியும் எதிர்பார்ப்பும் பார்வையாளர்களிடையே சலசலக்க மேடையில் திரை விரிந்தது. (தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-14-3-276894.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் (10)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 10வது அத்தியாயம் இது

 

 

கதை மகாபாரதக் காலக்கட்டத்தில் ஆரம்பித்தது. பாரதப் போருக்கான ஆயத்தம் செய்வதில் பாண்டவர்களும், கெளரவர்களும் மும்முரமாய் ஈடுபட்டு இருந்தனர். காளி தேவிக்கு நரபலி கொடுத்தால் போரில் வெற்றி பெறுவார் என அந்தக்கால மக்களிடையே நிலவி வந்த நம்பிக்கை! அதை பாண்டவர்கள் மற்றும் கெளரவர்கள் என இருதரப்பினருமே நம்பினார்கள்

. உயிருள்ள மனிதனைப் பலி கொடுப்பது. அதுவும் 32 அங்க லட்சணங்களும் பொருந்திய மனிதனாக அவன் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்! நீண்ட நேரம் யோசித்த துரியோதனின் நினைவிற்கு வந்தவர்கள் மூவர். கிருஷ்ணபகவான், அர்ஜீனன். மற்றொருவன் அர்ஜீனனின் மகனான அரவான். இவர்களுள், அர்ஜீனன் எதிரி, கிருஷ்ணனோ எதிரிக்கு நண்பன். எதிரியை விடவும் ஆபத்தானவன். மூன்றாவது அர்ஜீனனின் மகன் அரவான் எதிரியின் மகன்தான்! என்றாலும், உதவியென்று யார் வந்தாலும் தவறாமல் கொடுத்த வாக்கு மீறாமல் செய்பவன் எனவே அவனே நரபலிக்குச் சிறந்தவன் என்ற முடிவிற்கு வந்தான் துரியோதனன். உடனே அவனைச் சென்று சந்திக்கவும் செய்தான்.

Latha Saravanan's Kakithapookkal


"அரவான் நலமா ?"

"நலம்"! என்றான் அரவான் தந்தையின் எதிரி தன்னை கண்டு நலம் விசாரிப்பதை கண்டு நெகிழ்ந்தான் அரவான்.

"நாம் எல்லாரும் காலத்தின் கைப்பொம்மைகள்தானே மைந்தா! உன் தந்தை சூழ்ச்சிக்காரனான கிருஷ்ணன் வலையில் வீழ்ந்து விட்டான்." என்று பொய் சொன்னான் துரியோதனன்.

"அய்யா... நான் அரசியலில் தற்போது தலையிடுவதில்லை. தாங்கள் என்னை காண வந்த காரணம் என்ன என்று நான் அறியலாமா ?" என்றான் அரவான் துரியோதனனை நோக்கி...!

"இல்லையென கூறாத வள்ளல் நீ உன்னிடம் ஒரு உதவி கேட்டு வந்து உள்ளேன் ."! என்று துரியோதணன் கேட்டதும், வியப்பு தொற்றிக்கொண்டது அரவானுக்கு.

"என்ன? வணங்காமுடி என்று பெயர் பெற்ற தாங்கள் இந்தச் சிறுவனை நாடி உதவி கேட்க வந்துள்ளதே என் பாக்கியம் ... அய்யா,...! தாங்கள் என் உயிரைக் கேட்பதாக இருந்தாலும் அதனை மிக மகிழ்வோடு நான் தருகிறேன். என்ன வேண்டும் ?" என்றான் அரவான்.

"உன் உயிர்தான் மைந்தனே.! வேண்டும்....! ஆனால் எனக்கு அல்ல, காளி தேவிக்கு!" அரவானிடமிருந்து என்ன பதில் வருமோயென்று பதற்றமாய் நின்ற துரியோதனைக் கண்டு,

"உயிர்தானே ! எடுத்துக்கொள்ளுங்கள்?!"என்றான் அரவான். அரவாணின் முகத்தில் கடுகளவு மாற்றமோ வேதனைக்கான அறிகுறியோ இல்லை?! எனவே அமாவாசை அன்று அரவானை களப்பலி தர தீர்மானித்து, அவனுக்கு நன்றியையும் தெரிவித்து பாரதப் போரின் வெற்றிக் கனவோடு அரண்மனைக்குச் சென்றான் துரியோதணன்.


சில ஒற்றர்கள் மூலம் அரவாணின் களப்பலி பற்றி அறிந்த கிருஷ்ணர், இந்தப் பிரச்சனையில் மனதளவில் சோர்ந்த பாண்டவர்களை எப்படி சரிக்கட்டுவது என்ற கவலையில் ஒரு ஏற்பாட்டைத் துவங்கினார்.

அமாவாசையன்று நரபலி கொடுத்தால் மட்டுமே வெற்றியெனும் நிலையில், ஒருநாள் முன்னதாகவே அமாவாசையை வரச்செய்து விட முடிவு எடுத்த கிருஷ்ணர் அரவானைச் சந்திக்கப் புறப்பட்டார். கிருஷ்ணரைப் பணிந்து வணங்கிணான் அரவான்.

"தர்மத்துக்கம் அதர்மத்துக்கும் இடையே நடைபெறும் ஒரு யுத்தம் இதுவென்று அழகாக எடுத்துரைத்தார்." கிருஷ்ணர்.

"எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்கு உதவும் அந்த உயர்ந்த குணம் பாராட்டுக்குரியது. ஆனால், விஷச்செடிக்கு உரமிடுவதால் தீமை வளருமே தவிர நன்மை வராது!". கிருஷ்ணர் பேசவரும் விஷயத்தை உணர்ந்த அரவான், "பகவானே என்னை நம்பி வந்தவர்களுக்கு என்னால் முடிந்ததை செய்வது என் குணம்". என்றான்.

"நல்லவர்களுக்கு செய்யும் உபகாரம் கல்லின் மேல் எழுதிய எழுத்து போல நிலைத்து நிற்கும். தீயவருக்கு செய்யும் உபகாரம் தண்ணீர் மேல் எழுதப்படும் எழுத்துக்குச் சமமாகும். என்பதை நீ அறிந்ததில்லையோ? என்றார் கிருஷ்ணர் பொருள்பட....!"

"உண்மைதான் பகவானே.... ஆனால், நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? என்பதை மட்டும் சொல்லுங்கள் எனக்கு குழப்பமாய் உள்ளது" என்றான்.

"உன் தியாகம் பாண்டவர்களுக்குப் பயன்படவேண்டும் குழந்தாய் !"

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/latha-saravanan-s-kakithapookkal-19-3-277351.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் போடும் கதையை வாசிப்பதாக இல்லை. முன்னரும் ராஜேஸ்குமாரின் கதை போட்டு இடையில் விட்டாச்சு.  வரவர ஆதவன் TV மாதிரி இடையில நிக்குது.tw_smiley:

Link to comment
Share on other sites

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமல் விடலாம் அது உங்கள் விருப்பம்.

 

எழுத முதல் அந்த விடயத்தை சரியாக தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட ராஜேஷ்குமாரின் கதை போன கிழமையும் (March 20ம் திகதி)  ஒரு அத்தியாயம் போட்டு உள்ளேன்.

 

அது என்ன ஆதவன் tv..:grin:  என்னக்கு எந்த tv யும் தெரியாது.<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

நீங்கள் வாசிக்கலாம், வாசிக்காமல் விடலாம் அது உங்கள் விருப்பம்.

 

எழுத முதல் அந்த விடயத்தை சரியாக தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட ராஜேஷ்குமாரின் கதை போன கிழமையும் (March 20ம் திகதி)  ஒரு அத்தியாயம் போட்டு உள்ளேன்.

 

அது என்ன ஆதவன் tv..:grin:  என்னக்கு எந்த tv யும் தெரியாது.<_<

ஒரு தொடரை போட்டு இடையில் நிப்பாட்டி இரண்டு மாதத்தின் பின் போட்டால் ..........

அதுக்குப் பேர் தொடர் இல்லை இடர்

 

Link to comment
Share on other sites

எழுத முதல் அந்த விடயத்தை சரியாக தெரிந்து கொண்டு எழுதுங்கள்.

 

3 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஒரு தொடரை போட்டு இடையில் நிப்பாட்டி இரண்டு மாதத்தின் பின் போட்டால் ..........

அதுக்குப் பேர் தொடர் இல்லை இடர்

 

மீண்டும் போய் சரியாக பாருங்கள். எங்காவது இரண்டு மாத இடைவெளி இருக்கா என்று.

வேறு தளங்களில் வருவதை இங்கு போடும்போது அவர்கள் போடும் நேரம்தான் நான் இங்கு போடமுடியும். முதல் அதை புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (11)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 11வது அத்தியாயம் இது.

 

"ஏற்கனவே கொடுத்துவிட்ட வாக்கை மீறுவதெப்படி?"

"எதுவும் மறுரிசீலனைக்கு உரியதே?"

"சத்தியம் கூடவா ?"

"அதர்மத்திற்கு அளித்துவிட்ட வாக்கு சத்தியம் ஆகாது! உன் சொற்படி பார்த்தாலும் நீ அமாவாசை அன்றுதானே பலியாகிட வேண்டும் என்று துரியோதனுக்கு வாக்கு அளித்தாய்.?!"

"ஆமாம்.."

"அதனால் அமாவாசையை வேறு தினத்திற்கு அதாவது முன்கூட்டி வர ஏற்பாடு செய்திருக்கிறேன் .. தர்மத்திற்கு நீ தலை கொடுப்பாயா?" அரவான்

"கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கு எடுத்துக்காட்டாய், அரவானும் கிருஷ்ணர் கூறிய விஷயங்களை ஒத்துக்கொண்டதோடு, தருவேன் நிச்சயம் ...! "என்றான்

Kakithapookkal, new story series

 

வெட்டருவா மீசை, உறுதியான தோள்கள், தேக்குமரத் தேகம், கம்பீரத் தோற்றம், முப்பத்திரண்டு லட்சணங்களும் பொருந்திய ஒரு வாலிபன் உலகின் எந்தவொரு சுகத்தையும் அனுபவிக்காமலே அற்ப ஆயுசான இறந்துவிடப் போகிறேனா என்ற வேதனை

கிருஷ்ணருக்கு இருந்தது.

எனவே...! அரவானிடம். "உனக்கு இறுதி ஆசை ஏதாவது இருந்தால் சொல்! அதை நான் நிறைவேற்றித் தருகிறேன்?" என்றார்.

"ஆம்! எனக்கு ஒரேயொரு ஆசை இருக்கிறது. இறப்பதற்குள் ஒரு திருமணம் செய்து பார்க்க வேண்டும்" என்றான். அவனின் ஆசையைக் கேட்டு அதிர்ந்து போனார் கிருஷ்ணர். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. எனினும், "சரி"! என்றார்.

ஆனால் தேவர் லோகம், நாகலோகம் என எல்லா லோகத்திலும் அரவானுக்குப் பெண் கொடுக்க யாருமே முன்வரவில்லை, நாளை சாகப்போகிற ஒருவனுக்கு யார் பெண் கொடுக்க முன்வருவார்கள். அதனால் கிருஷ்ணர் தானே ஓர் அழகிய பெண்ணாக வடிவம் கொண்டு அரவானை மணந்து அவன் ஆசையை நிறைவேற்றிட முன்வந்தார்.

அதன்பின் அவர்களின் திருமணமும் நடந்தது, அரவானின் தலை பாண்டவர்களுக்கு எனத் தரப்பட்டது. அரவான் இறந்த பின், ஒரு கணவனின் இறப்பில் மனைவியானவள் எவ்வித சடங்குகளுக்கு ஆளாவோளோ அதே போல் கிருஷ்ணன் தாலியறுத்து சடங்கு மேற்கொண்டார். அரவானின் சிரம் சொன்ன கதையென்று ஒரு பாடலோடு அந்த கதையும் முடிந்தது. பாரதப்போரில் பாண்டவர்களே வென்றனர்.

நாடகம் முடிந்தது. அரவான் வேடத்தைக் கலைக்காமலே மீனாட்சி மேடையில் உரையாற்றினாள்.

 

வணக்கம்...

"இந்த வரலாற்றுச் சான்றில் நான் இக்கதையைத் தேர்வு செய்யக் காரணமே புரட்டப்படாதவர்களின் புண்ணியச் சிறகுகளை சில புல்லுருவிகள் பிய்த்து எறிந்ததுதான் ! ஆம் ஒரு விநாடி இந்த கிளிப்பிங்ஸைப் பாருங்கள்." திரை விரிந்தது.

"சில திருநங்கைகள் படும் அவலங்கள் அதில் இருந்தது , அவர்கள் கடைகேட்டலும், ஆண்கள் பொது இடம் என்றும் பாராமல் கேலி செய்வதும், கற்கள் கொண்டு அடிப்பதும், காண்பிக்கப்பட்டன."

"இங்கே நீங்கள் பார்த்தவை எல்லாம் அன்றாடம் நாம் சந்திப்பது ? குடும்பம் சமூகம் என எல்லாராலும் புறந்தள்ளப்பட்டவர்கள் இவர்கள். பெண்களுக்கு ஒரு அநீதி என்றால் சங்கங்கள் திரளுகின்றன. ஆனால், இவர்களுக்கு? மனிதம் மறுக்கப்பட்டு கரடு முரடான முள்பாதையில் சங்கமிக்கும் வாசமில்லா மல்லிகளின் குரலாய் இது இருக்கும் என்று நம்புகிறேன்? அநாதையாய் விரட்டப்பட்டு பிழைப்பிற்காக எத்தனையோ இன்னல்களை சந்திக்கும் அவலம் நாம் கண்கூடாய்க் காண்கிறோம்., ஊனமுற்றவர்களைப் போல் தான் இவர்களும்,!"

 

"உச்!" எனப்படும் அப்பரிதாபமான சொல் கூட இவர்களுக்கு இல்லை, எய்ட்ஸ் நோயாளிகளைக் கூட நாம் சேர்த்துக் கொள்வோம். ஆனால், இவர்களை விரட்டிடுவோம். பொது இடங்களில் நடமாடும் சமயம் வெறித்துப் பார்ப்பது, சீட்டியடிப்பது, கல்கொண்டு எரிவது கெட்ட வார்த்தைகளால் ஏசுவது என எத்தனை துன்புறுத்த இயலுமோ அத்தனை துன்புறுத்தி வருகிறோம்."

 

"நாகரீகம் என்பது நமக்குள் மட்டுமல்ல பிறரிடத்திலும் தான் உணர வேண்டும். அவர்களும் மனிதர்கள்தானே? ஐந்தறிவு உள்ள உயிரினம் போல நினைத்ததை வெளியே சொல்ல இயலாமல் எனக்கு ஏனிந்த நிலை என்று ஏங்கி மனம் வெறுத்து உடலும் மனமும் புண்ணாகி தவிப்பவர்களை நாம் காப்பாற்ற முன்வரவில்லையென்றாலும் காயப்படுத்தாமல் இருக்கலாம். இந்த நாடகமும் அவர்களுக்கு சமர்ப்பணமே! .,. இந்த அரவானைத்தான் அவர்கள் மணமகளாய் எண்ணி கூவாகத்தில் விழா எடுக்கிறார்கள். இந்த நாடகம் போடப் போகிறேன் என்று தெரிந்தபோது சக மாணவர்கள் கூட என்னை கேலி பேசி ஏளனப்பார்வை பார்த்தனர். அவர்களுக்கு என் தாழ்மையான கருத்து, என் செயல் ஆக்கப்பூர்வமானது."

"அதற்கு உங்கள் ஆதரவுகளை மட்டுமல்ல மாற்றங்களையும் எதிர்பார்க்கிறேன். நன்றி!" அவள் பேசி முடித்தபிறகு அரங்கமே அமைதியாய் இருக்க, அடுத்த நாடகங்கள் எல்லாம் நடந்தேறியது. அவையில் வீற்றிருந்த ஈஸ்வரின் கண்கள் மட்டும் அவளையே வியப்பாய் பார்த்தன. பரிசு கொடுக்கும் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. ஈஸ்வரைப் பேச அழைத்தனர்,

"நடைபெற்ற அனைத்து வரலாற்று நாடகங்களுமே நன்றாய் இருந்தது. ஆனால், மற்ற எல்லா நாடகங்களையும் நாம் புராணமாக கதைகளாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், மிஸ். மீனாட்சி சொல்லிய கருத்துக்களும், அவரின் கதைக் களமும், புதியது, இதுவரையில் யாராலும் உரக்கப் பேசப்படாதது. ஒரு புது யுக்தியை கையிலெடுத்து அதனால் பலரும் நன்மைய¨டைய வேண்டும் என்று ஒரு சர்ச்சையான விஷயத்தை செய்து இருக்காங்க. மீனாட்சி கொஞ்சம் மேடைக்கு வரவும்..! அவள் வந்ததும் மீனாட்சியின் கையைப் பற்றிக் குலுக்கினான்.

 

(தொடரும்)



Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-11-277948.html

Link to comment
Share on other sites

"ரியல்லி யூ ஆர் கிரேட் மீனாட்சி".

(காகிதப் பூக்கள் - 12)

 

 "ரியல்லி யூ ஆர் கிரேட் மீனாட்சி..!" சமூக அக்கறைங்கறது, உப்பு சப்பில்லாத விஷயத்திற்காக ஸ்டிரைக் கோரிக்கையை ஏற்க வைக்க வன்முறை இவையெல்லாம் இல்லை. ஒரு விஷயத்தை எல்லோரிடமும் வெகு அற்புதமாய் கொண்டு சேர்த்து இருக்கிறீர்கள். இளம்பெண் சர்ச்சைக்குரிய ஒரு பிரச்சனையை .....! பாராட்டுகிறேன்..! உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!" என்றதோடு தன் சட்டைப் பையில் இருந்து விலையுர்ந்த பேனாவையும் தந்தான்.

"நன்றி ஸார்!" ஏனோ மைக்கின் முன்பு பொரிந்து தள்ளியவளுக்கு ஈஸ்வரின் முன் பேச்சே எழவில்லை. நன்றி கூட ரத்னா உசுப்பி விட்டதுதான். இல்லையெனில், அவள் சுயநினைவு அற்றுப் போய் இருந்தாள் என்பதே நிஜம். அவன் கைகளால் முதல் பரிசை வாங்கிய சந்தோஷம் மனம் முழுக்க பூரிப்பு, எத்தனையோ பேர் வந்து பாராட்டிய போதும், வாய் மட்டும் நன்றி சொன்னதே தவிர கண்கள் ஈஸ்வரையே மொய்த்தன.

 

Kakithapookkal, new story series

 

ஆடையைக் கலைக்கும் போதே ரத்னா கேட்டுவிட்டாள். "என்னடியிது? அத்தனை பெரிய மனிதர் உன்னைப் பாராட்டி இருக்கிறார்? ஒரு சின்ன நன்றியைக் கூட உன்னால் சொல்ல இயலவில்லையா? ஏண்டி முறைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? அவர் என்ன நினைப்பார்?!"

 

"அது வந்து.... ஏன்னு தெரியலை ரத்னா? என்னமோ அவரு என் கையைத் தொட்டதுமே அவரு கூட யுகம்யுகமாப் பழகினா மாதிரி இருந்தது.!"

"என்னடி சொல்றே ?"

"ரத்னா இதுவரையில் நம்ம இரண்டு பேருக்கும் நடுவில் எந்த ஒளிவு மறைவும் இல்லை என்னமோ தெரியலை ஈஸ்வரைக் கண்டதும்.?!"

"காதலா,,,?"

"ச்சே ! அதெல்லாம் இல்லை,,"

"என்ன இல்லை, அரை மயக்கம், எப்போதும் கணீரென்று பேசும் உன் குரலில் ஒரு குழைவு ! அவர் தந்த பரிசையும் பேனாவையும் நெஞ்சோடு அணைத்திருந்தாய்! பேக்கு மாதிரி அவர் நகரும் வரை பார்த்துக்கொண்டே இருந்தாய்.. இதைவிட வேறென்ன சான்று வேண்டும் ?"

"இதுதான் காதலா ?"

"வேறென்ன சொல்ல? எனக்கு அப்பவே தெரியுண்டீ?! கனவு இலட்சியமின்னு நீ சுத்தும்போதே நினைச்சேன் இப்படி தடாலடியாய் கவிழுவேன்னு ?!"

"கிண்டலா ?"

"சத்தியமா இல்லை.. நீ மட்டுமல்ல ஊரு உலகமே, ஏன் காக்கா குருவி கூடகாதலிக்கிறது. இன்று காதலர் பதிவேட்டில் உன் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது."

"விளையாடாதே ரத்னா....!"

"சீரியஸ்.,,,,,! ஈஸ்வர் நல்ல செலக்ஷன்தான்! அப்பப்போ நானும் அவரைப் பற்றி பத்திரிகையில் படிப்பது உண்டு, நல்ல மனிதர் முக்கியமா கறைபடியாத கைகள்."

"ரத்னா நான் இன்றுதான் அவரைப் பார்த்திருக்கேன். அவரிடம் ஏதோ இரண்டொரு வார்த்தை பேசியிருக்கேன் ஆனா...?!"

"எப்படி உன் காதலை வளர்க்கன்னு கேட்குறே? காலேஜ் போறது போல டெய்லி போலீஸ் ஸ்டேஷன் போகவேண்டியதுதான்.!"

"ஏய்?"

"வேற வழியில்லை மீனா அவறென்ன புரபஸரா,,,? காலேஜில் பார்க்க...? அர்ச்சகரா இல்லை ரோடுசைட் ரோமியோவா கோவிலிலோ அல்லது ரோட்டிலோ பார்க்க, அவர் ஒரு போலீஸ் அதிகாரி. அங்குதானே அவரைப் பார்க்க முடியும்?!

 

தோழியின் களையிழந்த முகம்தனைக் கண்டதும், கவலைப்படாதே மீனா ஈஸ்வர் பேசியதை எல்லாம் கவனிச்சியா? கனவு இலட்சியம் எல்லாம் துணை நிற்கும். மீனாட்சி போன்ற பெண்களைக் காணும்போது மனதிற்கு இதம் அளிக்கிறது. மேலும், ஆண்களே யோசிக்கும் ஒரு சமூகப்பிரச்சனையை அழகாய் கையில் எடுத்து அதன் காரணத்தையும் அவர்கள் படும் அவலத்தையும் அழகாய் ¨தைரியமாய் பேசிய அவர்களை என்னால் மறக்க முடியாது. இந்த ஆராய்ச்சிக்கு சம்பந்தமான எந்தவிதஉதவிகளையும நான் அவர்களுக்குச் செய்யத் தயாராய் இருக்கிறேன்."

 

"தோழியின் பேச்சில் மீண்டும் ஈஸ்வரின் நினைவு எழுந்தது. எத்தனை அழகு கம்பீரம், நேர்மை, கண்ணியம், ஆண்மையிலும் மென்மை!"

"என்னடி மறுபடியும் டிரீம் போயிட்டியா ?"

"ம்கூம்!"

"விடு மீனா...!" பிரண்டுங்கிற முறையில் உனக்கு சீரியஸா அட்வைஸ் பண்ணட்டுமா. என்ன என்பதுபோல் பார்த்தாள் மீனாட்சி., இது படிப்புக்காலம் நீ டீன் ஏஜைத் தாண்டி விட்டாலும் எல்லாமே நாம் உணர்ந்துவிடப் போவதில்லை, நம்ம வேவ்லைனில் ஒத்துப் போகும் சிலரைக் காணும்போது நம்மையும் அறியாமல், சிலநேரம் மனம் அசையும், கல்லையும் அசைத்துப்பார்க்கும் துணிவு காதலுக்கு உண்டு. இப்போ ஈஸ்வரைக் கண்டதும் உன் மனசில் ஒரு பிடிப்பு உண்டாயிருக்கு, அதுக்கு காரணம் ஈர்ப்பாக்கூட இருக்கலாம். இல்லை அவருடைய அழகு, கம்பீரம், எல்லாரும் சர்ச்சைன்னு சொன்ன உன் முயற்சியை பாராட்டிய குணமாக் கூட இந்த ஈர்ப்பு ஏற்படக் காரணமாக இருக்கலாம்."

 

"ஏதோ ஒரு விஷயத்திலே உன் கவனம் சிதறி இருக்கு,. இதை அப்படியே விடு இன்னும் கொஞ்சநாள் போகட்டும் , உன் போக்குக்கு இரு மேற்கொண்டு இதே பிடிப்பு தொடர்ந்தால் யோசிப்போம்."

"அப்போ இதை இன்பேக்ட்சுவேஷன்னு சொல்றீயா ?"

"நீ தடுமாறிட மாட்டே மீனா. பார்த்ததும் எல்லா பொருள்மீதும் ஆசைப்படும் ரகம் நீ இல்லை. இருந்தாலும் இந்த நாள் கடப்பு உன் விருப்பத்திற்கு உறுதியைக் கொடுக்கும் அதுதான் உனக்கு நல்லது."

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-apr-08-279190.html


 

Link to comment
Share on other sites

இனிமேல் தடையில்லை.. உன் அன்பை தெரியப்படுத்திடு.(காகிதப் பூக்கள் -13)

 

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 13வது அத்தியாயம் இது.

 "நன்றி ரத்னா,, கஷ்டத்தில் உதவுவதுதான் உண்மையான நட்பு குழப்பத்தில் இருந்த என்னை தெளிவாக்கிட்டே ரொம்பவும்......!"

"இரு....இரு.... நன்றி சொல்லி அந்நியமாக்கித் தொலைக்காதே ?! நீ நல்லா இருக்கணும் மீனா,,,, உன் வாழ்க்கை நல்லா அமையணும்!" தோழியின் தோளை ஆதரவாய் கட்டிக் கொண்டாள் ரத்னா..

"நீ சொன்னபடியே நான் நடந்து கொள்கிறேன் ரத்னா...!"

Kakithapookkal, new story series

 

"கட்டாயம் ... இது என் உத்தரவு!" என்று மன்னர் தோரணையில் அவள் பேசிட புன்னகையில் கட்டிக் கொண்டனர் பெண்களிருவரும்!

அன்றைய தினத்திற்குப் பிறகு படிப்பில் கவனம் செலுத்தினாள். ரத்னாவின் பேச்சிற்கு மரியாதை கொடுத்து தன் பணியை கவனிக்கலானாள். அவ்வப்போது நிறைய பத்திரிகைகள், மேகஸின்கள் எல்லாம் ஈஸ்வர் பெயர் வரும் நேரம் மனம் அலைபாயும்... தனிமையில் அவன் நினைவுகளில் இருந்து தன்னை மீட்டுக் கொள்ள இயலாமல் தவியாய் தவிப்பாள். வலுக்கட்டாயமாய் ஒதுங்குவாள். இதோ படிப்பையும் ஆராய்ச்சியையும் முடிக்கும் தருவாய்க்கு வந்துவிட்டது.

அவர்கள் வீட்டிற்கு எதிர் புறம் உள்ள வீட்டில் யாரா புதிதாய் குடி வருவதாய்தாய் சொல்லிட கேட்டு, மாலையில் கல்லூரி முடித்து திரும்பி வரும் போது ஈஸ்வர் ஏ,ஸி என்ற பெயர் பலகையைக் கண்டவுடன் வியப்பு தொற்றிக்கொண்டது இருவருக்கும்.

"ஏய் ?! இது உன் ஆளுதான் மீனா ரத்னா காதைக் கடித்தாள்." "கத்தாதேடி ! யார் காதிலாவது கேட்டுடப் போவது?"

 

"நடிக்காதே மீனா உன் மனசிலே ஈஸ்வர் மேலுள்ள நேசம் மறையாமல் இருக்குன்னு எனக்குத் தெரியும் மீனா, என்ன? வாய் விட்டுச் சொல்லாம எப்படித் தெரியுமின்னு பாக்குறீயா? ஈஸ்வர் பத்தின ஒவ்வொரு விஷயங்களை நீ சேகரிக்கிறதும், பத்திரப்படுத்தி வைக்கிறது. இதோ இப்போ அவர் உன் வீட்டுக்கு எதிரே வந்து இருக்கார்ன்னு தெரிஞ்சதும், உன் கண்களின் ஒளி முகத்தின் சிரிப்பு எல்லாமே உன் இறவாத நேசத்தை உணர்த்துதே !"

"அன்னைக்கும் உண்மையான அன்பு இருந்தது ரத்னா,."

"இருக்கலாம். ஆனா மனசு சீக்கிரம் உணர்ச்சி வசப்படக்கூடியது. சட்டுன்னு ஏத்துக்கிட்டதை உதற முடியாது. இந்தக்கால இடைவெளியில் உனக்கு நல்லது கெட்டது எதுன்னு புரிந்திருக்கும். ஈர்ப்புக்கும், அன்பிற்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருக்கும். எதார்த்தத்தை ஏற்கும் மனப்பக்குவம் வந்திருக்கும். புரியுதா? ஏன் அன்னைக்கு அப்படி பேசினேன் என்று?!"

தலையசைத்தாள் மீனா!

"இனிமேல் தடையில்லை, கூடுமான வரையில் சீக்கிரமே உன் அன்பை அவருக்குத் தெரியப்படுத்திடு..!"

"எப்படிடீ...." உடனே முடியும்

"லூசு! ஏற்கனவே 2 வருடங்களுக்கு மேலும் கடந்தாகி விட்டதே?! தைரியமா டிரை பண்ணு.,!"

ஈஸ்வர் எதிர்வீட்டில் இருந்து வருவது போவதையெல்லாம் தினமும் கவனித்துக் கொண்டுதான் வருகிறாள். ஆனால், அவனிடம் பேசும் சந்தர்பபம் தான் வாய்க்காமலேயே போனது..,,!

(தொடரும்)

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-13-279791.html

Link to comment
Share on other sites

ராமருக்காக 14 வருடங்கள் காத்திருந்த அரவாணிகள் (காகிதப்பூக்கள் - 14)

 

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 14வது அத்தியாயம் இது.

 

 அரவாணின் உறுப்புகள்: அரவாணின் உடலுருப்புகள் ஒவ்வொன்றும் ஒரு ஊரிலிருந்து கொண்டு வரப்படுகிறது. அரவாணின் சிரசு மட்டும்தான் கூவாகத்தில் உள்ளது. அவன் மார்பு கிரிகோடு எனும் கிராமத்திலும், கை, கால், குதிரைவாகனம் நத்தைவெளி எனும் கிராமத்திலும், செவிலியான் குடை எனும் கிராமத்திலிருந்து பித்தளைக்குடை ஒன்று கொண்டு வரப் படுகிறது. கூவாகம் காலணியில் இருந்து வடமும் தேருக்கு தீட்டும் வண்ணமும் கொண்டு வரப்படுகிறது. நாவத்தழையாலும், வைக்கோல் பிரியாலும் அரவாணின் உடம்பு உருவம் அமைத்து வைக்கோலும், தழையும் தெரியாமல் பூவினால் வடிவமைக்கிறார்கள். தேர் வடிவமைப்பு முடிந்தவுடன் விடியற்காலையில் ஆடு பலியிடப்படுகிறது.

 

Kakithapookkal, new story series

 

அரவாணிகளும் சரித்திர உதாரணங்களும் :

இயற்கையைப் புரிந்து கொள்வதே அறிவு என்கிறோம். ஆனால், மனித இயற்கையே புரியாமல்தான் இன்னமும் மனிதன் இருக்கிறான். கண்ணாடியின் ஒரு பக்கத்தினை மட்டுமே நாம் காண்கிறோம். மற்றொரு பக்கம் நமக்குத் தெரியவும் இல்லை, அரவாணியர்கள் பற்றிய கருத்துக்களும் அப்படியே !

பெண்ணும் ஆணும் இயற்க்கையின் படைப்பு என்பதில் எந்தளவு உண்மையுள்ளதோ அதே போல் அலிகள் எனப்படும் அரவாணிகளும் இயற்கையின் படைப்புதான். இந்த சமூகம் என்றுமே அந்த அரவாணிகளை அங்கீகா¢க்கவில்லை. எல்லாமே மீடியா காண்பித்த ஒரு அருவெருப்பான பொருளைப் போலத்தான் இழிவாய்ப் பார்க்கிறது.

 

ஆணின் உடல் உணர்வுகள் பெண்ணின் உடல் உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருப்பதைப் போலவே அரவாணிகளும் பெண்! ஆண் உடல் உணர்வுகளில் இருந்து வேறுபட்டிருக்கிறார்கள். ஆனோ அல்லது பெண்ணோ உடனே அரவாணியாக மாறிவிடுவதில்லை, குழந்தைப் பருவத்திலேயே பெண்சார்ந்த அடையாளங்களையே விரும்புகிறார்கள். அதற்கு அவர்களின் வளர்ப்பு முறையும் ஒரு காரணமாய் அமைந்து விடுகிறது.

 

ஆண் பிள்ளைகளோடு சேருவது பிடிக்காது, பெண்போல ஆடுவதும் , மைதீட்டி மகிழ்வதும், அலங்கரித்துக் கொள்வதும், பார்ப்பவர்களுக்கு அறுவருப்பாய்த்தான் தோன்றும். இது எல்லாம் எதற்காக? தான் பெண்தான் என்பதை பிறருக்கு உணர்த்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இம்மாதிரியானவர்களை வெளியே கொண்டுவரும். அவர்கள் தன் மனதிற்குள் எத்தனையோ போராட்டங்களுக்கு ஆளாகிறார்கள். அது பிறருக்கு கேலியாத் தோன்றிவிடும் என்பதினால்தான் தனிமையை அவர்கள் விரும்புகிறார்கள்.

 

பெண்கள் பூப்படையும் போதுதான் அல்லது ஆண்களுக்கு மீசை முளைக்கும் பருவத்தில்தான் தான் யார்? என்று உணர முடியாத அளவிற்கு பெரிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் ஆண் அடையாளம் தன்னை சூழ்வதை அவர்கள் உணருகிறார்கள். தன்னை அரவாணி என்று பகிரங்கப்படுத்திக்கொள்ள அவர்கள் முன் வருவதில்லை. ஆண் உடலிற்குள் பெண்ணாகச் சிறைபட்டு இருக்கிறோம் என்பதையுணர்ந்த பிறகு, தன் எதிர்காலம் குறித்து முடிவெடுக்க வேண்டியதாகி விடுகிறது. ஒரு வகையில் தன்னிலைப் பற்றி வீட்டில் சொல்ல பயந்து அல்லது தான் சார்ந்த சமூகத்தை சந்திக்க பயந்து கூட அவர்கள் வெளியேறுகிறார்கள். ஒரு சிலரோ நம் மகன் அரவாணியென்று உணர்ந்து விட்டால் மறு பேச்சின்றி அவர்களை துரத்திவிடுகின்றனர்.

 

குடும்பத்தை விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய சூழலில் ஜமாத் என்றழைக்கப்படும் பெரும் குழுவட்டத்தோடு சேருகிறார்கள். அங்கே அவர்களுக்கு குடும்பத்து அங்கத்தினர் களிடையே, இந்த சமூகத்தினரிடையே கிடைக்காத அன்பும் அரவணைப்பும் கிடைக்கிறது. ஆனால் ஜமாத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத்தான் அவர்கள் நடக்கவேண்டும். இல்லையெனில் கடும் தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும். தங்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கொஞ்சமாவது இளைப்பாறிக் கொள்வதற்கும், தங்களை ஏதாவது ஒரு வகையில் உயிர்ப்பித்து கொள்ளவே பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடுதல் இவைகளை மேற்கொள்கிறார்கள்.

நேற்று பெய்த மழையில் இன்று முளைத்துவிட்ட காளான்கள் மாதிரி அல்ல அரவாணிகள் என்பதற்கு சரித்திர உதாரணம்...

"ஆணாகி பெண்ணாகி அலியாகி உன்னடி சேர வேணும்.!"

என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.

அரவாணிகள் எப்படிப் பிறக்கிறார்கள் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"ஆண்மிகில் ஆண் ஆகும் பெண்மிகில் பெண் ஆகும்...!"

என்று அதாவது பூண் இரண்டு ஒத்துப் பொருந்தின் அலியாகும்,

"ஆண் பெண் கலப்பின் போது, ஆண் சுரக்கும் சுக்கிலம் அதிகமானால் ஆண் குழந்தையும், பெண் சுரக்கும் சுரோணிதம் அதிகமானால் பெண் குழந்தையும், இவ் விரண்டும் சமமாயச் சுரக்குமேயானால் அது அலியாய் பிறக்கும் என்று திருமூலர் கூறியுள்ளார்."

"வலியார் பிறர் மனைமேல் சென்றாரே,,,

இம்மை அலியாகி ஆடியுண்பார்...!"

அடுத்தவர் மனையாளின் மீது ஆசைப்படுவானேயானால் அடுத்த ஜென்மத்தில் அவன் அலியாகவே பிறப்பெடுப்பான் என்கிறது நாலடியார் கருத்து

எனவே நாலடியார் காலத்திலும் அலிகள் ஆடிப்பாடி தான் பிழைப்பைத் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கின்றனர்..

மாவீரனான மாலீக்பூர் ஓர் அரவாணியே ஆவார். அதுமட்டுமல்லாது மன்னர்கள் காலத்தில் தங்கள் அந்தப்புரக் காவலர்களாக அரவாணிகளையே நியமித்தனர். ராஜ்ய காரியங்களிலும் அவர்கள் ஈடுபட்டார்கள். மேலும், அர்ஜீனன் அரவாணியின் உருவத்தில் இருந்தபோது தான் தன்னந்தனியே கெளரவப் படைகளை எதிர்த்துப் போராடித் தோற்கடித்தான்.

கர்ணன் படைவீரர்களிடம், "ஒரு பேடியிடமாத் தோற்றீர்கள்?" என்று கேட்டபோது, "அவன் நூறு வீரர்களுக்கு சமமானவன்!" என்று கூறினார்களாம். பீஷ்மரைக் கொல்லக் காரணமான சகண்டியும் ஓர் அரவாணியே !

ராமாயணத்தில் ஓர் உதாரணம்

Kakithapookkal, new story series

 

ராமன் காட்டுக்கு வனவாசம் செல்லப் புறப்படும் போது அவனின் பிரிவுத்துயர் தாளாமல் அந்நாட்டு மக்களும் பின்தொடர்ந்தார்கள். ஆனால், ராமரோ,,,,! நான் என் தந்தையாரின் கட்டளையை நிறைவேற்ற செல்கிறேன். என் நாட்டு மக்களே என்னிடம் நீங்கள் காட்டும் அன்பு உண்மையாய் இருப்பின் ஆண்களே பெண்களே உடனடியாக நாடு திரும்பி என் தந்தைக்கு ஆதரவாய் இருங்கள் என்றாராம்.

அதேபோல் ஆண்களும் பெண்களும் கலைந்துவிட, அரவாணிகள் மட்டுமே நின்றனராம். நமக்குத் தலைவனான ராமர் ஆண்களையும், பெண்களையும் தான் போகச் சொன்னாரே தவிர்த்து நம்மையல்ல என்று 14 வருடங்கள் வரையிலும் கோசலநாட்டு எல்லையிலேயே ராமருக்கென காத்திருந்தார்களாம்.

அரவாணிகள் திடம்மிக்கவர்கள், அன்பு செலுத்துவதில் அன்னையைப் போன்றவர்கள். கருணையிலும் கண்ணியமானவர்கள். அவர்களைத் திறம்பட புரிந்து கொள்வோம். அவர்கள் புன்னகை ஓவியங்கள் கொண்டு வெண்மைப் பக்கத்தில் அழகான பொன் வண்ணங்களைப் பூசுவோம்! முட்களை விதைக்க வேண்டாம்....!

கட்டுரையை எழுதி முடித்துவிட்டு தொடரும்! என்று எழுதிய பின் நிமிர்நதாள் மீனா,,, மீண்டும் ஒருமுறை எழுதியவற்றைப் படித்துப் பார்த்தாள் திருப்தியாய் இருந்தது. என்வலப் கவரி பத்திரிகை அலுவலக முகவரியை எழுதி ஒட்டிவிட்டு நாளை போஸ்ட் பண்ணுவதற்கு வசதியாய் உறையிலிட்டாள். உடலை ஒருமுறை நெட்டி முறித்துவிட்டு கசங்கிய உடையை நீவிவிட்டு,ஜன்னலருகில் சென்றாள்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-16-04-2017-279932.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

திரை விலக்கி நீ முத்திரை பதிக்க.. (காகிதப் பூக்கள்- 15)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 15வது அத்தியாயம் இது.

 

 அதிசயமாய் அன்று வரவேற்பரையில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வர். ரகசியமாய் அவனை விழிகளால் வருடினாள் மீனாட்சி. நீலநிற ஷெர்வானி அவனை சற்று உயர்த்திக் காட்டியது. நொடிக்கு ஒருமுறை அவனிடம் பல உடல்மொழி மாற்றங்கள், அபிநயங்கள் தலைமுடியைப் கோதிக் கொள்வதில் ஆகட்டும், புத்தகப் பக்கங்களை ஒற்றை விரல் கொண்டு திருப்பும் லாவகமாகட்டும் அவளை அசைத்துப் பார்த்தன.

ரத்னா சொன்னது போல் இப்போது அவனிடம் போய் நின்று பேச்சுக் கொடுப்போமா? ஆனால் என்னவென்று சொல்வது ? முதலில் அவனைக் கண்டால் எனக்குப் பேச்சு வருமா ? அப்படியில்லையெனில் அசடுவழிய நிற்கவேண்டுமே ? அய்யோ அது அசிங்கமல்லவா? வேண்டாம். நான் அவர் மேல் கொண்ட அன்பு நிஜம் அது கட்டாயம் அவரிடம் என்னைக் கொண்டு சேர்க்கும் என்று கண்களை மெல்ல மூடினாள் அவனின் பிம்பத்தை அதில் நிரப்பிக்கொண்டு ...!

Kakithapookkal, new story series

 

என் விழிக்குள் இருக்கும் உன் பிம்பம் வெளிவரா வண்ணம் பாதுகாக்கிறேன் ஏன் எனைக் கொல்லும் பார்வை, மாலை நேரமிது, மலர்களின் சூட்டைத் தணிக்க வண்டுகளின் அணிவகுப்பு, நான் கன்னி மாடத்தின் மேல் காளை உனக்கென நீலநிற பட்டுடுத்தி பிறை நெற்றியில் செந்தூரத்திலகமிட்டு, விழிகளில் ஏக்கத்தையும் விரல்களில் உன் வருகைக்கென தீபத்தையும் சுமந்து காத்திருக்கிறேன்.!

நீயும் வந்தாய்! நம்மிருவருக்கும் இடையில் மெல்லிய வெண்திரை! மருதாணி பூசிய விரல்களில் மட்டுமல்ல சிவப்பு என் மலர் முகத்திலும்தான்.! திரை விலக்கி நீ முத்திரை பதிக்க பதறிய நெஞ்சம் இடறிய இடம் உன் மலர் மஞ்சம்.!

இதோ கட்டிலின் மேல் நான் உனக்காக பறித்த ஆசை ரோஜா என் சங்கு கழுத்தினை அலங்கரிக்க நீ அளித்த முத்துக்கள். நின் வருகையையெண்ணி பூத்து காத்திருக்கும் மலர்கள் எங்கே நீ...!

காற்றாய் சுவாசமாய்... மிதந்து வருகிறாயா? காலை புலர்ந்து மாலை மலர்ந்து மேகக்கூட்டம் சிதறி கலைந்து ஓடி ஒளிந்து இருந்த நிலவைக் கொண்டு வந்துவிட்டது வானம். ஆனால், நான் மட்டும் மூடிய விழிகளும், மெளனித்த இதழ்களுமாய் அலையலையாய் பரவும் எண்ணங்களோடு காத்திருக்கிறேன்.

"மீனா..!". ரத்னா வந்து அவள் முதுகில் ஓங்கி அடித்தாள். " ஸ்ஆ,,,,!"

"எத்தனை தடவை கூப்பிடறேன் . அப்படியென்னத்தை மெய்மறந்து பார்த்திட்டு இருக்கே? தோழியின் பார்வை சென்ற இடத்தினைக் கண்டதும் அவள் கண்களில் குறும்பு குடிகொண்டது. அடிசக்கை பூஜை நேரக் கரடிபோல் வந்து விட்டனோ? அம்மையாருக்கு என்மேல் கோபம் ஒன்றும் இல்லையே?"

"போடி.....!"

"இப்படி பார்த்தே காலம் தள்ளிடப்போறடி நீ?! முறைக்காதே... நம்மை பார்க்க ஒரு விருந்தாளியை அழைச்சிட்டு வந்திருக்கிறேன்.!"

"யாரு? ரத்னா?"

"முதல்ல நீ வெளியே வா! எல்லாம் நமக்கு வேண்டிய விருந்தாளிதான். இந்த ரூமில் ஓரே காதல் காற்று மூச்சடைக்கிறது. வெளியே வா!" இருவரும் வெளியே வந்தனர். சுமார் 38 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி அங்கே அமர்ந்திருந்தார். மரியாதை நிமித்தம் இவர்களைக் கண்டு கைகுவிக்க வணக்கம்மா என்றாள் மீனாட்சி.

கனிவு ததும்பும் முகம் அவருக்கு மெல்லிய கரையோடிய காட்டன் புடவை வட்டமான பொட்டு நெற்றியில் விபூதிக்கீற்று! வெள்ளிப் பிரேமிட்ட கண்ணாடி

"மேடம் ஆதம்பாக்கம் அருகில் "சுடர்ஒளிங்கிற" பேரில் ஒரு ஹோம் நடத்திறாங்க. நாம திருநங்கைகள் பற்றி கட்டுரைகள் எழுதறோம் இல்லையா? அவங்க ஹோமிலும் திருநங்கைகள் இருக்காங்களாம். மனசும் உடலும் நொந்து போய் வந்தவங்க! இப்போ ஏதேனும் கைவேலை,தையல் முதியோர்களை கவனித்தல், போன்ற வேலைகளைச் செய்யறாங்களாம். அவர்களை ஒருமுறை நேரில் சந்தித்து பத்திரிகையில் எழுதணுமின்னு கேட்டு வந்திருக்காங்க.!" ரத்னா சொல்லவும், மீனாட்சியின் அம்மா காபியோடு வந்தார்.

 

காபியை பருகியபடியே,, "உனக்கு சம்மதமாம்மா,,,,,!"

"என்னம்மாயிது? எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நீங்க உருவாக்கித் தந்து இருக்கீங்க? இதைப் போல் ஒரு நேரடிக் கட்டுரை எழுத வேண்டும் என்று நான் இருந்தேன், அதுக்கு தகுந்த சந்தர்ப்பம் அமைந்து உள்ளது. உங்க ஹோமில் மொத்தம் எத்தனைபேர் இருக்கீங்க?"

"60பேருக்கும் மேலம்மா! சின்னதா ஆரம்பிச்சேன்... இப்போ உங்களைப் போல சமூக அக்கறையும் நல்ல மனமும் உள்ள மனிதர்களால நடந்திட்டு வருது."

"நீங்க ? உங்களுக்கு எப்படி இந்த மாதிரி ஒரு ஹோம் நடத்தணுங்கிற எண்ணம் வந்தது.?"


"என் பெயர் திவ்யா.. நானும் ஒரு அரவாணிதான். அப்பெண்மணி சொல்ல ஹாலில் இருந்த மூவரும் ஒருவரையொருவர் வியப்பாய் பார்த்துக்கொண்டனர். உண்மைதான் மீனாட்சி ! சொந்த ஊர் ஸ்ரீவில்லிப்புத்தூர், பெரிய குடும்பம் அப்பா அம்மா வெச்ச பேரு ராகவன், என் கூட பிறந்தவங்க ஐந்து பெண்கள், மூணு பையன்கள்.

13வயசிலே எனக்குள்ள சில மாற்றங்கள். என் மார்பு பெரிசாகிகிட்டே வந்தது. பள்ளியிலே எல்லாரும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சாங்க. என்கிட்டே ஏற்பட்ட நளினங்கள் பார்த்து அப்பாவுக்கு சந்தேகம். ஊரிலேயே பெரிய மனிதர் என்னால ஒவ்வொரு இடத்திலும் அவமானப்பட்டாங்க, அக்காங்க கல்யாணம் எல்லாம் கேள்விக் குறியா இருந்தது. அதனால வீட்டை விட்டு துரத்திட்டாங்க!"

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-02-05-281507.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"நீயிருக்கும் இடம் தானே என் இடமும்....!" (காகிதப் பூக்கள் - 16)

லதா சரவணன்

 

"அம்மா மட்டும் ரொம்பவும் அழுதாங்க! சென்னைக்கு வந்து ஒரு ஜமாவில் சேர்ந்திட்டு மும்பை போனேன். அங்கேயும் பிடிக்கலை, சில விஷயங்களால வரக் கூடாத நோயும் வந்திட்டு, அப்போதான். என் மூளையில் சிறு தீப்பொறிபோல் பளிச்சிட்டது நாம் ஏன் மெழுகுபோல் உருகணும். எல்லாரும் ஒருநாள் போகிறவர்தான் இருக்கும்வரை நல்லது செய்ய நினைத்து இதைத் துவங்கினேன் 12 வருஷமாச்சு!"

 

"இப்போ திடுமென்று உங்க ஹோமைப்பற்றி எழுதணுமின்னுங்கிற எண்ணம் ஏன் வந்தது?"

"விரக்தியிலும் வேறு வழியின்றி என்போல் வெளிவருபவர்கள் தவறான இடங்களில் சிக்கி சீரழியாம ஒரு விழிப்புணர்வா இருக்கட்டுமேன்னுதான்! மீடியாக்கள் மூலமா பேசினா இன்னமும் நிறைய பேர் பார்வையில் பட வாய்ப்பு இருக்குமே மீனாட்சி, எனக்கும் ஆயுள் குறைவு இருக்கும்போதே ஏதாவது செய்துடணும், ஆதரவில்லாம இருப்பவர்களுக்கு நானும் என் அமைப்பும் உதவ தயாரா இருக்கோன்னு புரிய வைக்கணும்மா!"

Kakithapookkal, new story series

 

"எனது இனத்தவரும் மற்றவரைப்போல் முன்னுக்கு வந்து நல்ல வாழ்க்கை நடத்தணும். நாங்களும் சமுதாயப்பிரஜை ஏன் விலகி வாழணும். பிறருடைய கேலிக்கு ஆளாகாமல் குறுகிய மனதோட இல்லாமல் நெஞ்சுறுதியோட சொற்ப வருமானம் ஆகஇருந்தாலும், நிறைவா வாழறோன்னு காட்டணும். எங்கமேல சமூகத்திற்கு ஒரு மதிப்பு வரணும்.

வெளிச்சத்தில் சுடர்விடும் விளக்கா இல்லாமல், துன்பம் எனும் இருளை விலக்கும் தீபமாய் மாறணும்!" அவருடைய கண்களில் நீர் பெருகியது.

 

மீனாட்சி அருகில் வந்து அவர் தோளினைப் பற்றினாள். "உணர்ச்சிவசப் படாதீங்கம்மா?! சமூகத்தில் நலிந்தவர்களுக்கென என் குரல் கட்டாயம் ஒலிக்கும். அவசியம் நாங்க உங்க ஹோமிற்கு வருவோம். எப்போன்னு மட்டும் தெரிவிங்க?!"

"வர்ற ஞாயிறு எல்லோரும் இருப்பாங்க. நீங்க ப்ரீயா இருந்தா அன்னைக்கே.....!"

"அவசியம் வர்றோம்....!"

"அப்போ நான் கிளம்பறேன்.. ரொம்ப நன்றி! அந்தப் பெண்மணி கைகூப்பி வணங்கிவிட்டு சென்றார்.

"ரத்னா வர்ற ஞாயிறு உனக்கு வேறெதுவும் வேலையில்லையே?"

"கழுதை கெட்டா குட்டிச்செவரு.! நீயிருக்கும் இடம் தானே என் இடமும்....!"

"உன்னை....! சாரி ஒரு காமிரா.....!அப்புறம் கைக்கு அடக்கமா ஒரு சின்ன டேப் ரெடி பண்ணிடு !"

"யெஸ்! அம்மா என்ன டின்னர் இன்னைக்கு வாசனை கமகமன்னு வருதே,,,,!"

"வெஜிடேபிள் ரைஸ், தயிர் வெள்ளரிப் பச்சடி,!"

"அப்ப டின்னர் இங்கேதான். ஏய் நீ வர்றீயா? இல்லை உன்னோடதையும் சேர்த்து நானே காலி பண்ணட்டுமா?" ரத்னா சாப்பாட்டு மேஜைக்கு ஓட இவளும் சிரித்தபடி பின்னாலேயே சென்றாள்.

ஈஸ்வர் எழுந்து உள்ளே சென்றான்.." ம்...!". சாப்பாட்டு மேஜையருகில் சென்றான் ஹாட்பேகில் பரோட்டாவும் சென்னாமசாலாவும், இருந்தது. ஹோட்டல் சாப்பாடுதான். போஸ்டிங்கில் மாறி சென்னை வந்ததில் இருந்தே பழகிப்போனது. அம்மாதான் மாய்ந்து கொள்வாள். "என்னடா எத்தனை நாளைக்கு இப்படி எடுப்புச் சாப்பாடே சாப்பிடுவே வயசுப்பிள்ளை அதிலும் நீ பார்க்கும் உத்தியோகத்திற்கு நல்லா சாப்பிடணும். முன்னேயாவது குவாட்டர்ஸில் இருந்தே மெஸ் சாப்பாடுதான்னாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவங்க எல்லாம் தாயா பிள்ளையா பழகினாங்க..... இப்போ என்னடான்னா தனியா வீடு எடுத்திட்டே சாப்பாட்டு என்னடா பண்ணப்போறே?"

 

"அதெல்லாம் நான் மேனேஜ் பண்ணிப்பேன் அம்மா! நீங்க ரிலாக்ஸா இருங்க!"

"இல்லேண்ணா நா வேணுன்னா அங்கே வந்து தங்கியிருக்கட்டுமா?"

"வேணாம்மா! இங்கே இருக்கிறே காத்து, பொல்லியூஷன்ஸ் இதெல்லாம் உங்க உடம்பிற்கு ஒப்புக்காது. டாக்டர் சுத்தமான மலைக்காற்று வேணுன்னு சொன்னதால்தான் நீங்க கோயம்புத்தூர் எஸ்டேட்டிலேயே இருங்கன்னு சொன்னேன். நான் என்ன சின்னப்பையனா ?"

"எத்தனை வயசானாலும் தாய்க்குப்பிள்ளை குழந்தைதான்டா! எனக்கென்ன பத்தா பனிரெண்டா? நீ மட்டும் தானேடா?! சரி உடம்பை நல்லா பார்த்துக்கோ அங்கலாய்ப்போடு போனை வைத்துவிடுவார். ஒரே பிள்ளை கவனிக்க முடியவில்லையே என்ற எண்ணம். எத்தனையோ முறை இந்த உத்தியோகம் உனக்குத் தேவையா? என்றிருக்கார்!"

"இல்லேம்மா...!" உன் அளவிற்கு நான் இத்தொழிலை நேசிக்கிறேன். அது உங்களுக்கேத் தெரியுமேம்மா!" என்று கெஞ்சிக் கொஞ்சிய பிறகுதான் டிரான்ஸ்பருக்கே சம்மதித்தார். ஏனோ பழகிய ஊர் உறவுகள் மற்றும் அன்னையை விட்டு முதலில் மனம் இடம் தரவில்லை என்றாலும், மனம் தனிமையைத்தான் எதிர்பார்த்தது.

 

அமைதி, தனிமை இவை இரண்டு மட்டுமே அப்போதைக்கு தனக்கு நிம்மதி தரும் என்பதை அவன் உணர்ந்தான். இங்கு வந்த சில வருடங்களில் முதலில் போலீஸ் குவாட்டர்ஸில் தங்கினான். தொழில் முறையில் எதையும்¨தைரியத்தோடு செய்து நேர்மையான குணமும் இவற்றாலும், மேன்மேலும் உயர்ந்தான். சக ஆபீஸர்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத் தந்ததோடு பிரமோசனும் வந்தது.

 

என்கெளண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரும் வந்தது. குவாட்டர்ஸிலும் எல்லோரும் அன்பாய் பழகிய போதும் யாரிடமும் அதிகம் ஒட்டாமலேயே இருந்தான் ஈஸ்வர். காலை உடற்பயிற்சி, தியானம் டிபன் ஆபீஸ் என்று வேலை எல்லாம் முடித்து இரவு நேரம் முழுவதுமே அவனுடைய நேரம் அங்கு மட்டுமே அவன் மனம் விரும்பியபடி நடக்க முடியும். எல்லாருக்கும் கருப்பு பக்கங்கள் இருக்கும் இல்லையா?

நம்மில் அனைவருக்குமே ஏன் உலகிற்கு வெகு பரிச்சயமான செலிபரிட்டீஸ் இவர்களுக்கு கூட கருப்புப்பக்கங்கள் உண்டு. நம் அடிதட்டு மனதில் எத்தனையோ ஆசைகள் புதைந்திருக்கும். அவை அனைத்துமே நிறைவேறி இருக்காது. அப்படி நிறைவேறாத நிகழ்களை மனிதன் தனிமையில் நிறைவேற்றிக் கொள்வான் .அல்லது அவை நிறைவேறுவதாய் கற்பனையாவது செய்வான். மனோதிட இயல்புப்படி, மனிதன் அது ஆணோ அல்லது பெண்ணோ வீட்டிலோ அல்லது தனக்கு தன் செயல்களுக்கு பாதுகாப்பான இடம் என்று உணரும் இடங்களில் தங்களின் உண்மை நினைவுகளை வெளிப்படுத்துவார்கள். ஆசைகளுக்கு அஸ்திவாரம் போடுவார்கள்.

(தொடரும்)


Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kakithapookkal-new-story-series-21-283413.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.