Jump to content

2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்


Recommended Posts

2017 உலகக்கிண்ணப்போட்டியில் இரண்டு கிளிநொச்சி மாணவிகள்

roll-ball-6.jpg

எதிர்வரும்   பெப்ரவரி 17ம் திகதி தொடக்கம் 23 வரை  பங்களாதேஸ் நாட்டில்  நடைபெறவுள்ள உலகக்கிண்ண  றோல் போல் போட்டியில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகனைகள்      உள்வாங்கப்பட்டு அவா்கள்   போட்டியில் பங்குபற்றவுள்ளனா்

கிளிநொச்சி  இந்துக்கல்லூரி  உயர்தர  மாணவிகளான துலக்சினி  விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன்  திவ்யா  ஆகியோரே  குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர்

அத்துடன் மிக  குறுகிய காலத்திற்குள்  பயிற்சிகளைப் பெற்று  கடந்தவருட  இறுதிப்பகுதியில்  நடைபெற்ற  தேசியரீதியிலான போட்டியில்  கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளன.  பெரியளவிலான  வசதிகள் எவையும்  இன்றியே  இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

IMG_1134.jpg
அத்துடன்  குறித்த  அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு  கிளிநொச்சியில் இவர்களுக்கான  ஒரு  பிரத்தியேக உள்ளரங்கம்  கூட  இல்லாதநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

http://globaltamilnews.net/archives/15956

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணப்போட்டி ; இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்த கிளிநொச்சி மாவட்ட தமிழ் மாணவிகள்

 

 

பங்களாதேஷில்  இம்மாதம் 17 தொடக்கம் 23 வரை நடைபெறவுள்ள உலக்கக்கிண்ணப் போட்டியில் றோல் போல் விளையாட்டில் இலங்கையின் றோல் போல் தேசிய அணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீராங்கனைகள் உள்வாங்கப்பட்டு அவா்கள் போட்டியில் பங்குபற்றவுள்ளனா்.

unnamed__14_.jpg

கிளிநொச்சி  இந்துக்கல்லூரி  உயர்தர  மாணவிகளான துலக்சினி  விக்னேஸ்வரன் ,சிறிகாந்தன்  திவ்யா  ஆகியோரே  குறித்த போட்டியில் பங்குபற்றுகின்றனர்.

unnamed__13_.jpg

அத்துடன் மிக  குறுகிய காலத்திற்குள்  பயிற்சிகளைப் பெற்று  கடந்தவருட  இறுதிப்பகுதியில்  நடைபெற்ற  தேசியரீதியிலான போட்டியில்  கிளிநொச்சி மாவட்ட றோல் போல் ஆண் பெண் ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. மேலும், பெரியளவிலான  வசதிகள் எவையும்  இன்றியே  இவர்கள் குறித்த பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.

unnamed__12_.jpg

அத்துடன்  குறித்த  அணியினர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு  கிளிநொச்சியில் இவர்களுக்கான  ஒரு  பிரத்தியேக உள்ளரங்கம்  கூட  இல்லாதநிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed__11_.jpg

unnamed__10_.jpg

unnamed__9_.jpg

http://www.virakesari.lk/article/16113

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பிள்ளைகாள், பங்களாதேஷிலும் உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வீராங்கனைகளாக வீடு திரும்புங்கள்....!

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உலகக்கிண்ண போட்டிகளுக்காக பங்களாதேஷ் பயணமாகினர் கிளிநொச்சி மாணவிகள்!

 

 

எதிர்வரும் 17ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண ரோல் போல் தொடருக்காக இலங்கை அணி சார்பில், தெரிவான கிளிநொச்சி மாணவிகள் பங்களாதேஷ்  பயணமாகினர்.

16730250_1907490999481373_53510449650785

கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி கற்கும் உயர்தர மாணவிகளான துலக்சினி விக்னேஸ்வரன், சிறிகாந்தன் திவ்யா ஆகியோரே குறித்த உலகக் கிண்ண ரோல் போல் போட்டியில் பங்குபற்றுபவராவார்கள்.

16729539_1907491009481372_55021449217809

மேலும் மிக குறுகிய காலத்திற்குள் பயிற்சிகளைப் பெற்று, கடந்த வருட இறுதிப் பகுதியில் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் கிளிநொச்சி மாவட்ட ரோல் போல் போட்டியில் தமது திறமையை வெளிப்படுத்தியிருந்தனர். 

1350370453Untitled-1.jpg

அத்தோடு பெரியளவிலான வசதிகளோ, பிரத்தியேக உள்ளரங்கமோ இல்லாதநிலையில் தமது பயிற்சியை மேற்கொண்டு  56 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ள உலக கிண்ண போட்டிவரை செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/16708

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு முறை பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள். 

வெற்றியோடு வருவதை இந்த அங்கிள் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Link to comment
Share on other sites

உலகக் கிண்ண ரோல்பந்துப் போட்டியில் வடக்கு மாணவர்களும் பங்கேற்பு

 

உலகக் கிண்ண ரோல்பந்துப் போட்டியில் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து 21 வீர, வீராங்கனைகள் பங்களாதேஷ் புறப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 தமிழ் வீர, வீராங்கனைகளும் இம்முறை உலகக்கிண்ண ரோல்பந்துப் போட்டிக்குத் தெரிவாகி பங்களாதேஷ் புறப்பட்டுள்ளனர்.

WhatsApp-Image-2017-02-16-at-4.13.10-AM

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.திவ்வியா (மன்னார் சித்திவிநாயகர் பாடசாலை), ஏ.திவ்யா (மன்னார் சித்திவிநாயகர் பாடசாலை), அண்டலின் (மன்னார் சென்.சேவியர் மகளிர் பாடசாலை), அருள் தர்சன் (மன்னார் சென். சேவியர் ஆண்கள் பாடசாலை) மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவிகளான லக்சினி விக்னேஸ்வரன், சிறீகாந்தன் திவ்யா ஆகியோர் இப்போட்டியில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் புறப்பட்டுள்ளனர்.

இம்மாணவர்கள் அனைவருக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் றிவ்கான் பதியுதீன் பண உதவி வழங்கிவைத்தார்.

http://onlineuthayan.com/sports/?p=4117

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.