Jump to content

டெலிபோன் கால்


Recommended Posts

டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி

 

பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள்.

‘ஹலோ’

‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது.

‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் சீரியஸாக இருக்கிறதுஎன்று தானே சொல்லப் போகிறீர்கள்?’

‘சாரி! சியாமள்!...வந்து நான்….’

அதற்கு மேல் அந்தப் பசப்பு வார்த்தைகளைச் செவிமடுக்க முடியாதபடி அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. ரிஸீவரை ‘க்ளக்’ என்று கிரேடிலில் அறைந்துவிட்டுச் சோபாவில் சாய்ந்தாள். ஏக்கம் அவள் நெஞ்சைப் பிழிந்தது.

IMG_20160415_155936750.jpg 

மனத்துயரை மறக்கும் ஆவலுடன் புத்தக அலமாரியிலிருந்து டெனிஸ் ரோபின்ஸின் நாவல் ஒன்றை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள் அவள்.

ஒரு பக்கம் படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வரிக்கு வரி அவளைப் போலவே கணவனின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிக் கொந்தளிப்பு! மேற்கொண்டு படித்தால் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்துவிடும் போல் தோன்றியது. புத்தகத்தை வீசிவிட்டு ஜன்னல் அருகே நகர்ந்தாள் அவள். ‘டாக்டர்கள் என்றால் இப்படித்தானா? உணர்ச்சிகள் மரத்துப் போய்விடுமா? உடலின் புதிர்களுக்கு விடை காண்கிற வேகத்தில் உடலுக்குள் உள்ளம் என்று ஒன்று இருப்பதே மறந்து போய்விடுமா?’ இதயம் அங்கலாய்த்தது. ‘ஒரு வேளை, அவருக்கு இன்னொருத்தி..?’ நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அறையில் நிலவிய மெல்லிய வெளிச்சத்தில் அங்கும் இங்கும் அலைந்த பார்வை மேஜை மீதிருந்த டைம்பிஸில் ஒரு கணம் நிலைத்தது. முட்களின் மினுமினுப்பு மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தியது. சியாமளாவுக்கு இன்னும் தூக்கம் வந்தபாடில்லை. அருகே மெய்மறந்து உறங்கும் கணவனை அவள் ஏற இறங்கப் பார்த்தாள். ‘இப்படியும் ஒரு கல் நெஞ்சமா? சாப்பிடும் போதாகட்டும், படுக்கையறைக்கு வந்த பிறகாகட்டும், ஒரு வார்த்தை பேச வேண்டுமே? ஊஹும், நினைக்க நினைக்க அவளுக்குத் துக்கம் தொண்டையை அழுத்தியது.

அந்த லேசான விசும்பல் ஒலி கிருஷ்ணனின் தூக்கத்தை கலைத்துவிட்டது. விளக்கின் விசையை அழுத்திவிட்டு மனைவியை முறைத்துப் பார்த்தான் அவன். அந்தக் கூர்மையான பார்வையில் பளபளப்பது பரிவா இல்லை, வெறுப்பா…? சியாமளாவுக்கு ஒரே தவிப்பாகப் போய்விட்டது.

‘உங்களுடன் சினிமாவுக்குப் போக முடியாது என்கிற ஏமாற்றத்திலிருந்து எனக்கு கோபம் கோபமாய் வந்துவிட்டது! நீங்கள் பேசி முடிப்பதற்குள்…நான்..ஃபோனை டக்கென்று வைத்தது தப்புதான்!...என்னை மன்…’

அதற்கு மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளது கரங்கள் பேச முடியாத நிலையில் நெடுநாளைக்கப்புறம் பெருக்கெடுத்து வரும் இந்த உரிமையையும் பரிவையையும் எண்ணி அவள் உள்ளம் ஒரு துள்ளு துள்ளியது. மெய் மறந்தவளானாள்.

‘ட்ரிங்…ட்ரிங்…’

கீழே ஹாலில் எழுந்த டெலிபோன் ஒலி இருவரது கிளுகிளுப்பையும் கலைத்தது.

‘ஓ! எக்ஸ்டென்ஷனுக்குக் கனெக்‌ஷன் போட மறந்து போயிருக்கிறேன்!’ மேஜை மீதிருந்த போனை வெறித்துப் பார்த்தபடி சொன்ன கிருஷ்ணன் கீழே செல்ல ஆயத்தமானான். ஆனால் அதற்குள் இன்னதென்று இல்லாத ஒரு துடிப்பு சியாமளாவை ஆட்டி வைத்தது.

IMG_20160415_160000386.jpg 

‘நான் போய் கனெக்ட் பண்ணுகிறேன். இங்கிருந்தே பேசுங்களேன்!’ என்று மொழிந்து விட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அவள்.

‘ஹலோ!’

‘டாக்டர் கிருஷ்ணன்ரெ வீடல்லே’

‘ஹும்’

‘இவிடே முல்லைக்கல் அம்பலத்தினடுத்து லாரியும் ஸ்கூட்டரும் கூட்டி முட்டி ஓர் ஆக்ஸிடென்ட்! ஸ்கூட்டரில் வன்ன ஆள் வளரெ ஆபத்திலாணு! டாக்டர் கிருஷ்ணனெ விளிக்கணும் என்னு என்று அயாள் பறஞ்சு!... ஞங்கள் இப்போள் ஆம்புலன்ஸினு போன் செய்திட்டு காத்திருக்குன்னு!.. ஏதாயாலும் டாக்டர் கிருஷ்ணன் இவிடெவன்னால் நல்லது!’

பேசிய குரலில் கலவரமும் வருத்தமும் தொனித்தன. எனினும் சியாமளாவுக்கு ஆத்திரம்தான் வந்தது. ஆலப்புழையில் இவர் ஒருவர்தானா டாக்டர்? ஜலதோஷத்திலிருந்து ஆக்ஸிடெண்ட் வரை எதற்கும் இவர் போய்த்தான் ஆகவேண்டுமா?’

‘ஐயோ!’ டாக்டரும் குடும்பமும் திருவனந்தபுரத்தேக்கு போயிருக்குக்யாணல்லோ! நாளை ராவிலேயே வரு!’ ஒப்பிப்பதை கேட்க அவளுக்கே வியப்பாக இருந்தது.

‘ஆராணு சம்சாரிக்குன்னது?’

‘வேலைக்காரி!’

மறுகோடியில் ரிஸீவரை வைக்கும் சத்தம் கேட்டது. வேண்டா வெறுப்போடு எக்ஸ்டென்ஷனுக்கு கனெக்‌ஷனைப் போட்டுவிட்டு, ஓட்டமும் நடையுமாய் மாடிக்குத் திரும்பினாள் சியாமளா.

கிருஷ்ணன் மனைவியை ஆவலுடன் பார்த்தான்.

‘மிஸ்டர் ராங் நம்பர் தான் அவசரமாய் அழைத்தார்! என்று சொன்னபடி படுக்கையில் பொத்தென்று விழுந்தாள் அவள்.

நல்ல வேளை. மீண்டும் தொலைபேசி தொல்லை கொடுக்கவில்லை.

பொழுது புலர்ந்தது. சியாமளாவுக்கு ஒரே குதூகலம். அங்குமிங்கும் ஓடியாடுவதும் வேலைக்காரர்களை மேற்பார்வை பார்ப்பதுமாய் பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள் அவள். ஒன்பது மணிக்கெல்லாம் கிருஷ்ணன் நர்ஸிங் ஹோமுக்குச் சென்றுவிட்டான்.

என்றைக்கும் இல்லாத கவர்ச்சியோடு சுவரில் மாட்டியிருந்த காலண்டர் சியாமளாவின் கருத்தைக் கவர்ந்தது. இதயத்தின் ஆழத்தில் இனிய கற்பனை ஒன்று விரிந்தது. இதுபோல் மூக்கும் விழியுமாய் கொழுக் மொழுக் என்று குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கு அழகாய் கணேஷ் என்று பெயர் வைக்க வேண்டும்.

 

வாசலில் என்னவோ பரபரப்பு. பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சியாமளா திடுக்கிட்டு எழுந்தாள். அவளது நீள் விழிகள் அகன்று விரிந்தன.

வாசலில் ஆம்புலன்ஸ் நிற்கிறது.

கணவர் இறங்குகிறார்.

ஸ்ட்ரெச்சரில் ஓர் உருவத்தை தூக்கி வருகிறார்கள்.

சியாமளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணுக்கும் மனத்துக்கும் தொடர்ந்து விட்ட, உணர்ச்சிகள் இல்லாத, துடிப்புகள் இல்லாத ஒரு நிலை.

கிருஷ்ணன் அதிர்ந்து நிற்கும் மனைவியை அணுகினான்.

’ஃபேட், சியாமள் ஃபேட்! டாக்டர் நம்பியாரைப் பார்ப்பதற்காக டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். அங்கே இந்த நிலையில் இவன்…! இரண்டு மணிக்கே உயிர் பிரிந்திருக்கிறது. அடுத்த தெருவில் தான் ராத்திரி ஆக்ஸிடெண்ட் நடந்திருக்கிறது. நமக்குத் தெரியாமல் போய்விட்டது. சரியான முதலுதவி கிடைத்திருந்தால் பாவம், புது ஸ்கூட்டர் வாங்கிய பெருமிதத்தில் பறந்து வந்திருக்கிறான் போலும்! நூறு மைல் ஒழுங்காய் வந்தவன் கடைசி நிமிடத்தில் இப்படி…’

கிருஷ்ணனுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டுவிட்டது.

சிலைபோல் சமைந்திருந்த சியாமளாவின் உடல் திடீரென்று நடுங்கியது. உள்ளம் கடல்போல் கொந்தளித்தது. தலையிலும், நெஞ்சிலும், கால்களிலும், கட்டுக்களுடன் உயிர்த் துடிப்பிழந்து பிணமாய்க் கிடக்கும் அந்த உருவத்தை அவள் ஏறெடுத்துப் பார்த்தாள்.

‘அண்ணா! கணேசன்னா!’ தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த துக்கத்தை உடைத்துக் கொண்டு அவளது வேதனைக் குரல் ஒலித்தது.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.