Jump to content

அம்மாவின் காதல்


Recommended Posts

அம்மாவின் காதல்

சிறுகதை: விநாயகமுருகன்

 

p77a.jpg

நான் உட்கார்ந்திருந்த இடத்துக்கு எதிரே இருந்த சுவரில் மாட்டியிருந்த நாள்காட்டி, ஜன்னலுக்கு வெளியே இருந்து வீசிய கடல்காற்று மோத படபடத்துக் கொண்டிருந்தது. நாள்காட்டியில் இருந்த கன்னிமேரி, கையில் இருக்கும் தனது குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டிருந்தார். பிரபஞ்சத்தின் முழு கருணையும் மேரியின் கண்களில் தெரிந்தது. நான் கையில் இருந்த அலைபேசியைப் பார்த்தேன். `இன்று காலை அம்மா இறந்துவிட்டார்.   உங்களை தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே நீங்கள் கிளம்பி வரவும்’ என இருந்தது. நேற்று முன்தினத்தில் இருந்து எத்தனை முறை இந்த வாட்ஸ்அப் தகவலைப் படித்திருப்பேன் எனத் தெரியவில்லை. அவளுக்கு நான் செய்திருக்கவேண்டிய நியாயமான இறுதிக் கடமைகளில் இருந்து தவறிவிட்டேன்.

அறைக்குள் வந்தவன் வெடவெடவென காது குடையும் குச்சிபோல தெரிந்தான். அவன் என்னை அற்பமாகப் பார்ப்பதுபோல தோன்றியது.

“மீண்டும் மன்னிக்கவும் சார். நாங்கள் உங்களை பலமுறை தொடர்புகொண்டோம். நீங்கள்தான் அலட்சியமாக இருந்துவிட்டீர்கள். உங்கள் அம்மாவின் ஆசைப்படித்தான் நாங்கள் இதைச் செய்தோம்.”
முன்னால் மேசையின் மீது படபடத்துக் கொண்டிருந்த கடிதத்தில், `நான் இறந்தால் எனக்கான இறுதிக் கடமைகளை டேனியல்தான் செய்ய வேண்டும்’ என அம்மாவின் கையெழுத்து இருந்தது.

ஏஞ்சலினா என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். ஏஞ்சலினாவின் கண்களை நேருக்குநேர் சந்திக்க எனக்குத் தயக்கமாக இருந்தாலும், என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை உணர்த்தவே நான் விரும்பினேன். ஆனால், தவறு என் மீதுதான். அம்மா இறந்த தகவலை எனக்கு அலைபேசியில் சொல்ல இவர்கள் முற்சித்தபோது, அமெரிக்காவில் காலை 10 மணி. நான் முக்கியமான ஒரு வாடிக்கையாளரின் மீட்டிங்கில் இருந்ததால், எனது அலைபேசியை அணைத்து வைத்திருந்தேன். அதனால் வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிவைத்தார்கள். நந்தினிக்காவது தகவல் தெரிவித்திருக்கலாம். இவர்களுக்குத்தான் நந்தினியின் அலைபேசி எண் தெரியாதே என நினைத்துக்கொண்டேன். செய்தியைப் படித்ததும் கிடைத்த விமானத்தில் அடித்துப் பிடித்து ஏறி வந்துவிட்டேன். பூமியின் ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு ஒருநாள் பயணித்து வந்துள்ளேன். இந்த நீண்ட பயணத்தில் ஒரே ஒரு கேள்விதான் எனக்குள் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தது. `இன்று காலை அம்மா இறந்துவிட்டார்' என வந்த செய்தியில், இன்று என்பது எந்த நாள். `நேற்றே இறந்துவிட்டாரா அல்லது இன்றா?’ என்ற குழப்பத்துடன் சென்னை விமான நிலையத்தில் இறங்கியதும், கடிகாரத்தின் முட்களை இந்திய நேரத்துக்கு மாற்றி வைத்தேன். அங்கு இருந்து வாடகை கார் பிடித்து ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு இருந்து மகாபலிபுரம் வரும் வரை இதே கேள்விதான் எனக்குள் இருந்தது. இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு சரியாக 10:30 மணிக்கு இறந்ததாக ஏஞ்சலினா சொன்னார்.

“ஜோசப்... இவரை டேனியல் சார்கிட்ட அழைச்சுட்டுப்போங்க” என்றார்.

நீண்ட நேரமாக ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்ததால் கால் மரத்துப்போயிருந்தது. எழுந்து அந்தக் கூடத்தைவிட்டு வெளியே வந்தேன். கடலைப் பார்க்க முடியாவிட்டாலும், இரைச்சல் காதுக்குள் ஒலித்தது. நாங்கள் நீண்ட காரிடாரில் நடந்து அந்த அநாதை விடுதியின் பின்புறம் வந்தோம். பனையோலை வேய்ந்த நூறு குடில்கள் அங்கு இருந்தன. வரிசைக்கு பத்து குடில்கள் வீதம் பத்து வரிசைகள் இருந்தன. ஒவ்வொரு குடிலுக்கும் இடையே இருபது அடி சீரான இடைவெளி இருந்தது. கவனமாகப் பராமரிக்கப்பட்ட பச்சைப் புல்வெளியோடு, மூங்கில் மரங்கள் நிறைந்திருந்த அந்த இடம் நிசப்தமாக இருந்தது. சுற்றிலும் மரங்கள். அந்த இடமே குளிர்ச்சியாக இருந்தது. ஒவ்வொரு குடிசைக்கு முன்பும் இரண்டு பிரம்பு நாற்காலிகள் போட்டிருந்தார்கள். வெளியில் இருந்து பார்க்க குடிசைபோல தெரிந்தாலும், உள்ளே ஏசி வசதி முதல் இன்டர்நெட் வரை சகலவசதியும் இருக்கும். சொல்லப்போனால் இதை `அநாதை விடுதி' எனச் சொல்வதைவிட `ஹோம்' என்றுதான் சொல்லவேண்டும்.

பெரும்பாலும் வெளிநாட்டில் வசிக்கும், வசதிமிக்கவர்களின் பெற்றோர்கள்தான் இங்கு வசிக்கிறார்கள்.

ந்தினிதான் இணையத்தில் தேடிப் பிடித்து எனக்கு இந்த விடுதி பற்றிச் சொன்னாள். `அமெரிக்க மதிப்பில் முந்நூறு டாலர்தானே...’ என்றாள். அம்மாவை ஹோமுக்கு அனுப்ப முடிவெடுத்த விஷயம், நாங்கள் சொல்லாமலேயே அம்மாவுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. ஆனால், அவள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. அடுத்த நாளில் இருந்து அவளது நடவடிக்கைகளில் என்னால் முழு வித்தியாசத்தை உணர முடிந்தது. ஊறவைத்திருந்த அரிசியை கிரைண்டரில் போட்டு அரைத்தாள். கிழிந்து இருந்த ஜன்னல் திரைகளைத் தைத்து முடித்தாள். மேற்கூரையில் படிந்திருந்த ஒட்டடையை அகற்றினாள். செய்வதற்கு வேலை இல்லாதபோது கழுவி வைத்த பாத்திரங்களையே மீண்டும் மீண்டும் கழுவினாள். இஸ்திரி செய்த துணிகளை மீண்டும் பிரித்து இஸ்திரி செய்தாள். எனக்கு, காரணமே இல்லாமல் அவள் மீது கோபம் வந்தது. எரிந்து விழுந்தேன். அவள் அமைதியாகவே இருந்தாள். அந்த அமைதி எனக்குள் இன்னும் அதிகமான எரிச்சலை ஏற்படுத்தியது. நாங்கள் சொல்லாமலேயே அம்மா எப்படி அதை உணர்ந்துக்கொண்டாள் எனத் தெரியவில்லை.

அம்மாவிடம் ஏதோ அதீத தெய்வ சக்தி இருப்பதாக கிச்சா மாமா எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. சிறுமியாக இருந்தபோது அம்மாவுக்கு சாமி வருமாம். ஊரில் இருப்பவர்களுக்கு அருள்வாக்கு சொல்வாளாம். அவை எல்லாம் அப்படியே பலிக்குமாம். ஊரில் ஆடு, மாடு திருடுபோனால் அம்மாவிடம்தான் குறிகேட்க வருவார்களாம். அம்மாவுக்குத் திருமணம் நடக்கும்போது மாப்பிள்ளை தேடுவதே சிரமமாக இருந்துள்ளது. சாமிப் பெண் என யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை என்றும், எப்படியோ கஷ்டப்பட்டுதான் மாப்பிள்ளையைச் சம்மதிக்கவைத்ததாகவும் சொன்னார்கள். அம்மா - அப்பாவைப் பற்றி அதிகமாக எதுவும் சொன்னது இல்லை. தனது திருமணத்தின்போது பதினாறு வயது எனச் சொன்ன நினைவு. அப்போது எல்லாம் பெண்களுக்கு பன்னிரண்டு வயதிலேயே திருமணம் முடித்துவிடுவார்களாம். திருமணத்தன்று வானில் புதிதாக நட்சத்திரம் ஒன்று உதித்ததாகவும் சொன்னார். அப்பாவுக்கு ஊரில் இருந்த பெருமாள் கோயில் ஒன்றின் மடப்பள்ளியில் சமையல் வேலை.

ஒருநாள் யாரோ ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டு ஓடிப்போனார். அப்போது எனக்கு இரண்டு வயது. அன்றில் இருந்து அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பிறகு, மாமாதான் என்னைப் படிக்கவைத்தார். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துவிட்டு, சென்னை வந்து கிடைத்த சிறுசிறு வேலைகளைச் செய்துகொண்டு பகுதி நேரமாக எம்.சி.ஏ படித்தேன். எப்படியோ மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அம்மாவை சென்னைக்கு அழைத்துவந்தேன். இரண்டு மூன்று வருடங்களில் இன்னொரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். லோன் எடுத்து நங்கநல்லூரில் ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கினேன். அந்த வருட இறுதியில் அமெரிக்கா சென்றுவிட்டேன். அங்கேதான் நந்தினியைச் சந்தித்தேன். நந்தினியின் அப்பா ஆந்திராவில் பெரிய தொழிலதிபர்.

வருடம் முழுக்க வெளிநாடுகளில் சுற்றிக்கொண்டிருப்பவர். அம்மா இறந்த பிறகு தன்  சித்திதான் அவளைக் கவனித்துக்கொண்டதாக நந்தினி சொன்னாள். எங்கள் திருமணத்துக்குக்கூட அவர்கள் செல்போனில் வாழ்த்து சொன்னார்கள். நான் சென்னைக்கு வந்து இறங்கும்போது வர்ஷினி ஆறு மாதக் கைக்குழந்தை. மாமிக்கு நான் அவரது மகளைத் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என வருத்தம். நான் அமெரிக்காவில் இருந்தபோது அவள்தான் அம்மாவுக்குத் துணையாக சென்னையில் தங்கியிருந்தாள். நான் வர்ஷினியுடன் திரும்பியபோது, மாமி என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. பிறகு அவர்களது தொடர்பே துண்டித்துப்போனது. எனக்கு அவர்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. நான் மாபெரும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவன். இந்தப் பந்தயத்துக்கு உதவிசெய்தவர்கள் வேண்டுமானால் அவர்களாக இருக்கலாம். ஆனால், நான் அவர்களையும் தூக்கிக்கொண்டு ஓட முடியாது அல்லவா?

எனது திருமணத்துக்குப் பிறகுதான் அம்மாவின் நடவடிக்கைகள் எல்லாமே எனக்குப் புதிராக இருந்தன. பகல் முழுவதும் ஓயாமல் வேலை செய்வாள். இரவில் மொட்டைமாடிக்குச் சென்று வானில் தெரியும் ஏதாவது ஒரு நட்சத்திரத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பாள்; தனக்குத்தானே பேசிக்கொள்வாள்; நட்சத்திரங்களை எண்ணுவாள். ஓவியன் தூரிகையால் வரைவதுபோல, விரலால் வானத்தில் எதையோ வரையத் தொடங்குவாள். அவளின் இந்த அர்த்தமற்றச் செய்கை எங்களுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. அம்மாவிடம் குழந்தையைக் கொடுக்க நந்தினி தயங்குவாள். ஆனால், அவள் பகலில் இயல்பாக இருப்பதைப் பார்க்க நிம்மதியாக இருக்கும். நந்தினிக்கு சென்னை பிடிக்கவில்லை. அடிக்கடி உடல்நலக் குறைவு உண்டானது. ஃபிளாட்டை விற்றுவிட்டு, அமெரிக்கா சென்று விடலாம் என ஓயாமல் நச்சரித்துக்கொண்டிருந்தாள்.

வ்வொரு குடிலின் கதவிலும் எண்கள் தெரிந்தன. பதினெட்டாம் எண் குடிலுக்கு முன்பாக நின்றோம். நான் இடதுபுறம் இருந்த பதினேழாம் குடிலைப் பார்த்தேன். பூட்டிக் கிடந்தது. அம்மாவின் குடில் அது.

“டேனியல்... டேனியல் சாரே” குடிலின் பிரம்புக் கதவில் இருந்த பித்தளைக் கைப்பிடியை ஜோசப் கதவில் அடித்தான்.

டேனியல் கதவைத் திறந்து வெளியில் வந்தார். எழுபது வயதிருக்குமா? தெரியவில்லை. முதுமையின் சுருக்கங்கள் முகம் எங்கும் தெரிந்தாலும் மனதளவில் உற்சாகமாக இருந்தார். பாப் மார்லேவின் உருவம் பொறித்த டிஷர்ட் அணிந்திருந்தார். மூக்குக்கண்ணாடி, கழுத்தில் சிலுவை போட்ட செயின் தெரிந்தது. அவர் மீது சுருட்டுப் புகை வாசம் வீசியது. ஜோசப் தலையைச் சொறிந்தான். டேனியல் அவனிடம் பத்து ரூபாய் கொடுத்து ``போய்க்கோடா...’' என்றார். என்னை உள்ளே அழைத்தார். உள்ளே சென்று நாற்காலியில் உட்கார்ந்தேன். எதிரே தொலைக்காட்சியில் ஏதோ மலையாள சேனலில் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. டேனியல் ரிமோட் எடுத்து ஒலி அளவைக் குறைத்துவிட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தார்.

“வாங்க...” என்றார்.

டேனியல் பேசிய தமிழ், சிக்கல் இல்லாமல் புரிந்தது.

டேனியல் நல்ல உயரம். வயதானாலும் இன்னமும் அவரது இளமைக் காலம் தோல் சுருக்கங்களை மீறியும் தெரிந்தது. இவரை இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். ஆனால், அவருடன் நான்கைந்து முறை பேசியுள்ளேன். ஆறு மாதங்களுக்கு முன்னர் அம்மாவுடன் ஸ்கைப்பில் பேசும்போதுதான் டேனியல் அறிமுகமானார். அம்மாவுக்கு இந்த அலைபேசி, இணையம் இவை எல்லாம் தெரியாது. டேனியல்தான் என்னைத் தொடர்புகொண்டு பேசி, எனது ஸ்கைப் ஐடி வாங்கினார். அம்மா பெயரில் ஒரு ஸ்கைப் ஐடி உருவாக்கித் தந்தார். அன்றில் இருந்து அம்மா வாரம் ஒரு முறையாவது இவரது அறைக்கு வந்து என்னுடன் பேசுவார். சிலமுறை டேனியலின் ஸ்கைப் ஐடியில் இருந்தும் பேசியது உண்டு. டேனியல் ஒரு மேஜிக் நிபுணர். கேரளாவில் பிறந்திருந்தாலும் சென்னையில் வந்து குடியேறி தமிழ் நன்றாகப் பேசக் கற்றுக்கொண்டவர். அவரது பிள்ளைகள் ஜெர்மனி, லண்டன் என வசிக்க, இவர் இங்கே ஹோமில் சேர்ந்துவிட்டார். அம்மாவைப்போல டேனியல் பஞ்சாங்கம் இல்லை என்றாலும், வெளிநாடு சென்று பிள்ளைகளுடன் தங்கி அவர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பவில்லை.

“எங்க தங்கியிருக்கீங்க?” - டேனியல் கேட்டார்.

கிண்டியில் இருக்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெயரைச் சொன்னேன்.

“நல்ல ஹோட்டல்தான். உங்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் எல்லாம் அங்கே கிடைக்கும்” எனச் சொன்னார்.

“ஏதாவது சாப்பிடுறீங்களா?”

“இல்ல. இப்பத்தான் தேநீர் அருந்தினேன்” என்றேன்.

என் வருகையை எதிர்பார்த்து நீண்டநேரமாக அறையில் காத்திருந்ததாகச் சொன்னார். எனக்கு அவரிடம் மேற்கொண்டு பேசத் தர்மசங்கடமாக இருந்தது. நான் தலையைத் திருப்பி அந்த அறையை நோட்டமிட்டேன். அறையின் மூலையில் சுவரை ஒட்டி ஒரு சிறு புத்தக அலமாரி. ஒரு புத்தகத்தின் அட்டையில் பி.சி.சர்க்காரின் புகைப்படம் இருந்தது. அலமாரிக்குப் பின்னால் இடுக்கில், திருட்டுத்தனமாக ஒளித்திருந்த ஒரு மதுப்புட்டியின் பாதி உடல் மட்டும் வெளியில் துருத்திக்கொண்டு தெரிந்தது. சற்றுத் தள்ளி மேசையில் ஒரு ஆப்பிள் மடிக்கணினி இருந்தது.

கடந்த வருடம் விடுமுறையில் ஊருக்கு வந்த தனது மகள் பரிசாகக் கொடுத்தது என டேனியல் ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஜெர்மனியில் இருக்கும் அவளுடன் டேனியல் அவ்வப்போது ஸ்கைப்பில் பேசுவது உண்டு. அறைக்குள் குளிர்சாதனப் பெட்டி இருந்தது. கட்டிலின் மீது ஏதோ ஒரு டி.வி.டி கவர் கிடந்தது. மேசையின் மீது ஒரு சின்ன டெலஸ்கோப் தவிர வித்தியாசமான தொப்பி, விநோதமான ஏதேதோ பொருட்கள் இருந்தன. எல்லா பொருட்களையும் தாண்டி அந்த அறைக்குள் அம்மாவின் வாசனை வீசிக் கொண்டிருப்பதாக எனக்குத் தோன்றியது.

“நான்தான் தகவல் சொன்னேன். சரி தூங்குறாங்கனுதான் நினைச்சேன். அப்புறம் சந்தேகம் வந்து பார்த்தேன் மூச்சு இல்ல.”

p77b.jpg

“ஏஞ்சலினா சொன்னாங்க.”

சில கணம் எங்களுக்குள் அமைதி நிலவியது. நான் விடுதியின் பின்புறம் தூரத்தில் தெரிந்த கடலையே பார்த்துக்கொண்டிருந்தேன். கடற்காற்று சன்னமாக வீசியது. `வாங்களேன் அப்படியே காலார நடந்துகிட்டே பேசலாம்' என டேனியல் அழைக்க, நாங்கள் கடற்கரைக்குச் சென்றோம். விடுதியின் பின்புறம் கடலை நோக்கி மேலே ஆஸ்பெஸ்டாஸ் கூரையுடன் ஒரு ஷெட் தெரிந்தது. அங்குதான் அம்மாவின் உடல் எரியூட்டப்பட்டதாக டேனியல் சொன்னார். `நீங்கள்தான் கொள்ளிவைத்தீர்களா?' எனக் கேட்கத் தோன்றினாலும் கேட்கவில்லை. மேற்கொண்டு என்ன பேசுவது எனத் தெரியாமல் வெகுநேரம் நாங்கள் அமைதியாக கடலையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தோம்.

நான் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பும்போது இருட்டிவிட்டிருந்தது. அங்கு இருந்த மதுவிடுதியில் குடித்துவிட்டு அறைக்குத் திரும்பினேன். எப்போது உறங்கினேன் எனத் தெரியவில்லை. டேனியல்தான் எனது அலைபேசியைத் தொடர்புகொண்டு அழைத்தார். குளித்துவிட்டு வெளியே வரும்போது எனக்காக ஹோட்டல் ஏற்பாடு செய்திருந்த வெள்ளை நிற வாடகை கார் வெளியில் நின்றிருந்தது. ஹோமுக்குச் செல்லும்போது டேனியல் எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்தது. பரந்தவெளியில் காற்று உக்கிரமாக வீசியது. அலைகளில் இறங்கும்போது திரும்பிப் பார்த்தேன். டேனியல் என்னையே குறுகுறுப்பாகப் பார்ப்பதுபோல தெரிந்தது. மண்கலயத்தின் மீது கட்டியிருந்த துணியை அவிழ்த்து உள்ளே பார்க்க யத்தனிக்கும்போது யாரோ என் பெயர் சொல்லி அழைப்பதுபோல் இருந்தது. திரும்பினேன். யாரும் இல்லை.

டேனியல்தான் சுருட்டு பற்றவைத்துக் கொண்டிருந்தார். சற்றுத் தள்ளி குருக்கள் உட்கார்ந்து, கண்மூடி ஏதோ மந்திரம் ஓதிக்கொண்டிருந்தார். மீண்டும் கடலை நோக்கித் திரும்பும்போது, எதிரே பிரமாண்ட அலை ஒன்று எழும்பி, முகத்தில் அறைந்தது. தடுமாறி பின்னால் விழுகையில் இருந்த மண்கலயத்தைத் தவற விட்டேன். கரையில் இருந்து கடலுக்குத் திரும்பிய அலைகளின் கரங்கள், கலயத்தைப் பற்றி எங்கோ கடலின் மையத்துக்கு இழுத்துச்சென்று காணாமலாக்கியது. கரையில் உட்கார்ந்திருந்த குருக்கள் என்னைப் பார்த்து `என்ன ஆச்சா..?’ என சைகையில் கேட்டார். அஸ்தியைக் கரைக்கும் வேலையைக்கூட நிதானமாகச் செய்ய லாயக்கற்றவன் ஆகிவிட்டேன்.

டேனியலின் அறைக்குச் சென்று ஈரக் காவி வேட்டியை மாற்றிக்கொண்டேன். ஏஞ்சலினா அம்மாவின் இறப்புச் சான்றிதழையும் ஒரு என்.ஓ.சி படிவத்தையும் என்னிடம் தந்தார். படிவத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு காருக்குத் திரும்பும்போது, டேனியல் விடுதியின் பிரதான கேட் அருகே நின்றிருந்தார். ``என் நண்பரின் வீடு பாலவாக்கத்தில் இருக்கிறது. நீங்கள் செல்லும் வழியில் இறக்கிவிட முடியுமா?’’ எனக் தயக்கத்துடன் கேட்டார். ``தாராளமாக வாங்க’’ என்றேன். பாலவாக்கம் நெருங்கும்போது ``நான் இங்கேயே இறங்கிடறேன்’’ என்றார்.

“பரவாயில்லை. உங்க நண்பர் வீடு எங்கேனு சொல்லுங்க. அங்கேயே இறக்கிவிடுறேன்” என்றேன்.

“இல்ல... உங்களுக்கு ஏன் சிரமம். இங்கே பக்கத்துலதான்.”

ஈ.சி.ஆர் சாலையோரமாக எதிரே தெரிந்த ஹோட்டல் அருகே, காரை நிறுத்தும்போதுதான் அலைபேசியைப் பார்த்தேன். மணி 2. சாப்பாடு நேரத்தைத் தாண்டிவிட்டது.

``சரி... வாங்க சாப்பிட்டுப் போகலாம்’’ என அழைத்தேன். நீண்ட வற்புறுத்தலுக்கு இணங்கி என்னுடன் வரச் சம்மதித்தார். ஓட்டுநர் தனியாக ஒரு மேசையில் உட்கார, நாங்கள் இருவரும் சற்றுத் தள்ளி இன்னொரு மேசையில் எதிரெதிரே உட்கார்ந்தோம். எங்களுக்குப் பரிமாற வந்த சர்வர் டேனியலைப் பார்த்ததும் ``என்ன சார்... அம்மா வரலையா?’' எனக் கேட்டார். டேனியல் பதில் சொல்லவில்லை.

``உங்களுக்குப் பிடித்த பீஃப் வறுவல் இருக்கு சார்’’ எனச் சொல்லிவிட்டு என்னிடம் ஆர்டர் கேட்டார். ``நீங்க வேணும்னா அசைவம் ஆர்டர் செஞ்சுக்குங்க’’ என டேனியலிடம் சொல்லிவிட்டு நான் சாம்பார்சாதம் ஆர்டர் செய்தேன். நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, எங்களைக் கேட்காமலேயே மாட்டுக்கறியை எடுத்து வந்து டேனியல் மேசை மீது வைத்துவிட்டு, ``சார், உங்க ஸ்பெஷல்’’ எனச் சிரித்துவிட்டுச் சென்றான். எனக்கு அருவருப்பாக இருந்தது. உண்மை என்னவென்றால், நான் இப்போது சைவம் இல்லை. அமெரிக்கா சென்ற பிறகு கோழி சாப்பிடப் பழகியிருந்தேன். ஏன் ஒருமுறை ஆட்டுக்கறிகூடச் சாப்பிட்டுள்ளேன். ஆனால், எப்போது சிக்கன் சாப்பிட்டாலும் உள்மனம் சின்னதாகச் சஞ்சலம் அடையும். அமெரிக்காவில் கோழியைவிட மாட்டுக்கறியும் பன்றிக்கறியும்தான் அதிகமாகக் கிடைக்கும். பன்றிக்கறி சாப்பிடுவர்களைக்கூட என்னால் சகித்துக்கொள்ள முடிந்தது. ஆனால், மாட்டிறைச்சியை மட்டும் எங்கு பார்த்தாலும் வாந்திவருவதுபோல உணர்ந்தேன். மேற்கொண்டு சாப்பிடப் பிடிக்காமல், ஸ்பூனைத் தட்டில் கிளறியபடி உட்கார்ந்திருந்தேன்.

திருமணத்துக்கு முன்னர் வரை நந்தினி மாட்டிறைச்சி சாப்பிடுவாள் எனச் சத்தியமாக எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் ஒருவேளை வாழ்க்கை வேறுவிதமாகக்கூடத் திசைமாறி யிருக்கலாம். இங்கு வந்த பிறகு அம்மாவுக்கும் நந்தினிக்கும் முதலில் சிறுசிறு விஷயங்களில்தான் சண்டை தொடங்கியது. நந்தினி எப்போது சீப்பை எடுத்தாலும் வீட்டுக்கு வெளியே நின்று தலைவாரும்படி அம்மா சொல்வாள். அவளுக்கு தரையில் சிறு துரும்பு கிடந்தாலும் பொறுக்காது. ஐந்தரை மணிக்குள் எழுந்து படுக்கையை மடித்து வைத்துவிட வேண்டும். அழுக்குத் துணிகளைத் தரையில் போடக் கூடாது.

குளித்துவிட்டுத்தான் அடுப்பைப் பற்றவைக்க வேண்டும்... என ஏகப்பட்ட கெடுபிடிகள். அந்தச் சண்டை இறுதியாக சாப்பாட்டு பிரச்னையில் வந்து முடிந்தது.

ஒரு நாள் பீனிக்ஸ் மால் சென்றிருந்தாள் நந்தினி. அங்கு ஏதோ ஒரு கடையில் விற்றார்கள் என மாட்டிறைச்சி வாங்கி வந்திருந்தாள். குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு அம்மா அதிர்ந்துபோனாள். ``இதெல்லாம் நல்ல குடும்பத்துல பொறந்தவங்க செய்ற வேலையா? இதுக்குதான் நம்ம ஊர்லயே ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கட்டியிருக்கணும்'’ என்றாள். ``அப்ப நான் என்ன ஊர் மேயிறவளா?'’ என நந்தினி கத்தினாள். முதல் முறையாக நந்தினியின் கோபத்தைப் பார்த்து எனக்குப் பயமாக இருந்தது. ``அம்மாவுக்குத் தெரியாமல் சாப்பிடலாம்ல...’' என்றேன். ``நான் எதைச் சாப்பிடுறதுனுகூட உங்க அம்மாவைக் கேட்டுத்தான் முடிவுசெய்யணுமா? இனியும் என்னால் பொறுக்க முடியாது'’ எனக் கத்தினாள். மறுநாள்தான் அம்மாவை ஹோமில் சேர்க்க முடிவுசெய்தோம்.

நந்தினியின் உலகம் வேறு... அம்மாவின் உலகம் வேறு. அம்மாவின் உலகத்துக்குள் நந்தினியின் உலகைக் கொண்டுவர முயன்றேன். முடியவில்லை. அம்மா புராதன காலம் ஒன்றின் தூசிகள் படிந்திருந்த இடத்தில் உறைந்து நின்றுபோயிருந்தாள். கடிகாரத்தில் நேரத்தை நகர்த்திவைத்தாலும் முட்களின் வேகம் அப்படியேதான் இருக்கும் என உணர்ந்துகொண்டேன். `நந்தினியின் உலகத்துக்குள் அம்மாவின் உலகம் ஒருபோதும் வர முடியாது' எனத் தீர்மானமாகத் தோன்றியது. வர்ஷினியை அம்மாதான் வளர்க்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், நந்தினி ஏதாவது ஒரு காரணம் சொல்லி, வர்ஷினியை எப்போதும் தனது அறையிலேயே வைத்துக்கொண்டாள்.

நினைவுகளில் இருந்து மீண்டு வலதுபுறம் தெரிந்த கடலைப் பார்த்தேன். டேனியல் சாப்பிட்டபடியே சொன்னார்... “இந்தப் பகுதியில இது நல்ல ஹோட்டல். கடலைப் பார்த்தபடியே சாப்பிடலாம். உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? உங்க அம்மாவும் நானும் பலமுறை இங்கே வந்திருக்கோம்.”

`ஹோமில் சாப்பாடு அவ்வளவாக நல்லா இருக்காது’ என அம்மா ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது. ஹோமில் எல்லோருக்கும் பொதுவான சமையல்தான். விரும்பினால் அவங்களே சமைச்சு சாப்பிடும் வசதியையும் அந்தந்தக் குடிலில் வைத்திருந்தார்கள். இன்டக்‌ஷன் ஸ்டவ் முதல் மைக்ரோ வேவ் ஓவன் வரை வைத்திருந்தார்கள். `அதற்குத்தானே முந்நூறு டாலர் வாங்குறாங்க?’ என நந்தினி கோபத்துடன் சொன்னது நினைவுக்கு வந்தது. இருந்தாலும் அம்மா எப்படி ஒரு கிறிஸ்துவ ஹோமில் எனத் தயங்கினேன்.

``இங்கே பாருங்க, அப்புறம் என்னைக் கொடுமைக்காரி, உங்க அம்மாவை அநாதை ஆசிரமத்துல தள்ளிட்டேன்னு திட்டக் கூடாது. தெரிஞ்ச இடத்துல விசாரிச்சுத்தான் நல்ல ஹைடெக் ஹோமா பார்த்திருக்கேன். அங்கே அவங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது’' எனக் கத்தினாள்.

டேனியல் சாப்ஸ்டிக்கால் நூடுல்ஸைக் கிளறியபடியே சொன்னார்.

“ஒருமுறை இங்கே வந்து சாப்பிட்டோம். உங்க அம்மாவுக்கு இந்த ஹோட்டல் ரொம்பப் பிடிச்சிருந்தது. மாலை நேரத்துல அடிக்கடி வருவோம். பீஃப் ஃபிரை இங்கே ஃபேமஸ்” என்றார்.

திகைப்பாகவும் குழப்பமாகவும் இருந்தது. தன்வாழ்நாள் எல்லாம் அவ்வளவு ஆச்சாரமாக இருந்த அம்மாவா, தனது இறுதி நாட்களில் இந்த மனிதரோடு சேர்ந்து மாட்டிறைச்சி தின்றாள்? என்னால் நம்பவே முடியவில்லை. மேற்கொண்டு சாப்பிடப் பிடிக்காமல் எழுந்து சென்று, கை கழுவித் திரும்பியதும் சர்வர் பில்லோடு ஒரு தட்டில் உலர்ந்த திராட்சைப் பழங்களையும் பாக்குத்தூளையும் கொண்டுவந்து வைத்தார். இரண்டு திராட்சைப் பழங்களை வாயில் போட்டு விழுங்க, கடைவாய் பல் கூசியது. எனது முகபாவனையைப் பார்த்துவிட்டு டேனியல் சிரித்தபடியே சொன்னார்... ``உலர்ந்த திராட்சையில் எப்போதும் தித்திப்பு அதிகம்.’’

டுத்த நான்கைந்து நாட்கள் அமெரிக்க விசா அலுவலகம், சென்னையில் இருந்த எனது வங்கிக் கிளைக்கு செல்வது, பழைய அலுவலக நண்பர்களைச் சந்திப்பது என்று ஓடியது. நந்தினி காலையும் மாலையும் என்னோடு அலைபேசியில் பேசுவாள். நான் எரிந்துவிழுவேன். வாக்குவாதம் முற்றி அவள் விம்மல் சத்தம் கேட்கும்போது, நான் அலைபேசி தொடர்பைத் துண்டித்துவிடுவேன். அவளுக்குள் வாழ்நாள் எல்லாம் குற்றவுணர்வு ஏற்பட வேண்டும் என மனதுக்குள் விரும்பினேன். டேனியல், இரண்டு முறை நான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார். எங்கள் சந்திப்புகளில் அவர் மிகவும் குறைவாகவே உரையாடினார். இறுதியாக என்னைச் சந்திக்க வந்திருந்தபோது அவரும் அம்மாவும் கேரளா சென்ற தகவலைச் சொன்னார். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் ஒரு பிரதியை எனக்குத் தந்தார். அவர் என்னிடம் இருந்து விடைபெறும்போது, ``நீங்க அமெரிக்கா திரும்பும்போது அவசியம் விமான நிலையம் வரை வந்து வழியனுப்புகிறேன்’’ எனச் சொன்னார். ஆனால், அவர் வரவே இல்லை. விமானத்தில் ஏறும்வரைகூட அவரிடம் இருந்து அழைப்பு எதுவும் வரவில்லை. நானே அவரைத் தொடர்புகொண்டு பேசலாம் என முயற்சிக்க, அவர் எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக மீண்டும் மீண்டும் பதில் வந்தது.

எனது மணிபர்ஸில் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். மூணாறில் எடுத்த புகைப்படம். படத்தில் பனி மேகங்கள் சூழ்ந்த உயர்ந்த மலைச்சிகரம் பின்னணியில் டேனியலுடன் அம்மா நின்றிருந்தார். அம்மா புடவைக்கு மேலே ஜெர்கின் கோட்டு அணிந்து அழகாகத் தெரிந்தார். எனக்குத் தெரிந்து அம்மா தனது சொந்த ஊரையும், பிறகு சென்னையையும் தவிர வேறு எங்கும் சென்றதே இல்லை. அம்மா தனது இறுதி நாட்களில் எப்படி தனது வாழ்க்கையை உணர்ந்திருப்பாள்? பாதுகாப்பின்மையின் கரங்கள் அவளது கழுத்தை நெரித்திருக்குமா? இல்லை. திறமையான ஓட்டுநரின் வாகனப் பின்னிருக்கையில் நிம்மதியாக அயர்ந்து உறங்கும் பயணிபோல இருந்தாளா?

அம்மாவை என்னால் இறுதிவரை புரிந்துகொள்ள முடியாமல்போனதை உணர்ந்தேன். எப்போதும் நமக்கு அருகில் இருக்கும் ஆட்களைப் பற்றி நாம் புரிந்துகொள்ளவே முடியாது. அருகில் இருப்பதாலேயே அவர்கள் சாதாரணமானவர்கள் என நினைத்து, ஒருவித அலட்சியத்தை அவர்கள்மீது செலுத்துகிறோம். தவிர, `நமது அருகில் இருப்பவர்களும் தங்கள் அசாதாரணங்களை நம்மிடம் வெளிப்படுத்த மாட்டார்கள்’ என டேனியல் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனால், இவற்றை எல்லாம் மீறியும் இறுதியாக டேனியலைச் சந்தித்த தினம் அன்று, அவர் சொன்ன ஒரு விஷயம் மட்டும்தான் எனக்குள் விநோதமாகவும் திகைப்பாகவும் இருந்தது.

“உங்க அம்மாவுக்கு மேஜிக் தெரியுமா? அவங்க எங்கேயாவது மேஜிக் கத்துக்கிட்டாங்களா?” எனக் கேட்டார்.

“புரியலை... மேஜிக்கா?”

“இவ்வளவு நாளா அவங்க கூடவே இருந்திருக்கீங்க. உங்களுக்கே உங்க அம்மாவை பற்றி தெரியலை. அவங்க என்னைவிட சிறந்த மேஜிக் கலைஞர். மிகப் பெரிய மெஜிஷியனா வந்திருக்கவேண்டியவங்க.”

அவர் அம்மாவைப் பற்றி சொன்னது எனக்கே புதிதாக இருந்தது.

``அம்மா, சிறுவயதில் ஊரில் குறி சொல்வார் என்றுதான் தெரியும். அதுவும் பின்னாட்களில் எதுவும் நடக்கவில்லை. சாதாரணமாகவே இருந்தார். எனது திருமணத்துக்குப் பிறகு மட்டும்தான் இரவுகளில் மொட்டைமாடியில் தனிமையில் உட்கார்ந்திருப்பார்’’ என்று சொன்னேன்.

``ஒருநாள் அவங்க என் அறைக்கு வந்திருந்தாங்க. நான் குளியல் அறையில் இருந்தேன். வெளியில் வந்து பார்க்கிறப்ப அவங்க கட்டிலில் உட்கார்ந்திருந்தாங்க. என்னோட சீட்டுக்கட்டு அவங்க கையில் இருந்தது. சீட்டு மேலே அவங்க கையால தடவியதும் அதுல இருந்த எழுத்து எல்லாம் மறைஞ்சு வெள்ளையா தெரிய ஆரம்பிச்சது. நான் பார்த்துப் பிரமிச்சுப் போயிட்டேன். அவங்களுக்கு மேஜிக் தெரியும்கிறதை விடுதியில இருக்கிற யார்கிட்டேயும் சொல்லக் கூடாதுனு எங்கிட்டே சத்தியம் வாங்கிட்டாங்க. அவங்க செஞ்சு காட்டின ஒரு மேஜிக் பார்த்து அசந்துட்டேன். அப்படி ஒரு மேஜிக் செய்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்கும் தெரியும். அறைக்குள்ள அவங்களை வெச்சுப் பூட்ட சொன்னாங்க. திரும்ப அறையைத் திறந்து பார்க்கிறப்ப அங்கே இரவு வானமும் நட்சத்திர மண்டலங்களும் தெரியுது. திகைச்சுப்போய் திரும்பிப் பார்க்கிறேன்... உங்க அம்மா ஹாலில் இருந்த நாற்காலியில் என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே உட்கார்ந்திருந்தாங்க.”

டேனியல் சொன்ன தகவல் எனக்கு விசித்திரமாகப்பட்டது. ஒருவேளை அவர் ஏதாவது உளறுகிறாரா என்றுகூடத் தோன்றியது. விடுதிக்குச் சென்ற முதல் தினம் `ஆயாள்... டேனியல் ஒரு பிராந்து சாரே’ என ஜோசப் சொன்னது நினைவுக்கு வந்தது.

``வானில் கண்ணுக்குத் தெரியும் நட்சத்திரங்களைப்போலவே கண்களுக்குத் தெரியாத நட்சத்திரங்களும் இருப்பதாக, உங்கள் அம்மா அடிக்கடி சொல்வார். அது உண்மைதான். ஏழு முனிவர்கள்தான் வானில் நட்சத்திரங்களாக ஜொலிப்பதாகவும் அவர்களோடு எட்டாவதாக ஒரு பெண் நட்சத்திரம் மட்டும், எப்போதும் மௌனமாக அழுதுகொண்டே இருப்பது யார் கண்களுக்கும் தெரியாது என்ற உண்மையையும் உங்கள் அம்மாதான் எனக்குச் சொன்னார்.’’

வர் இறுதியாகச் சொன்னதன் அர்த்தம் எனக்குப் புரியவே இல்லை. நான் எந்நேரமும் உடைந்து அழுதுவிடுவேன்போல் இருந்தது. எனக்கு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த இளைஞன் என்னையே பார்த்துக்கொண்டி ருந்தான். தூசி விழுந்ததை எடுப்பதுபோல அழுகையை நாசூக்காகத் துடைத்தேன். நந்தினியிடம் இருந்து அலைபேசி வந்தது.

“ஃப்ளைட் ஏறிட்டீங்களா?”

“ம்...”

“நான் கார் எடுத்துட்டு ஏர்போர்ட் வர்றேன்.”

“இல்லை. பனி அதிகமா பெய்யுறதா டி.வி-யில பார்த்தேன். வர்ஷினியை அழைச்சுட்டு வர வேணாம். நான் ஏர்போர்ட்ல இருந்து வாடகை கார் எடுத்துட்டு வர்றேன்.”

p77c.jpg

“ஏன்... உங்க குரல் ஒரு மாதிரியா இருக்கு, என்னாச்சு, எனிதிங் ராங்?”

விமானப் பணிப்பெண் அலைபேசியை அணைத்துவிட்டு, இருக்கையின் பெல்ட்டை அணியும்படி கண்டிப்பான தொனியில் மீண்டும் உத்தரவிட்டபடியே நடந்து சென்றாள்.

“ஐ மிஸ் யூ நந்தினி” எனச் சொல்லிவிட்டு அலைபேசியை ஃப்ளைட் மோடுக்கு மாற்றினேன்.

சற்றுநேரத்தில் விமானம் ஒரு பறவைபோல வானத்தில் வட்டமிட்டு, வங்கக்கடல் மீது பறக்க ஆரம்பித்தது. ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். வானில் திரண்டிருந்த கோடிக்கணக்கான நட்சத்திரங்களில் ஒன்று மட்டும் இப்போது அதிகமாகச் சுடர்விட்டு ஜொலிப்பதுபோல தெரிந்தது. அது பிரமையா என கண்களைக் கசக்கிக்கொண்டு மீண்டும் பார்த்தேன். பிரமை இல்லை. தெளிவாகவே தெரிந்தது. அமெரிக்காவில் நின்றுகொண்டு பார்த்தாலும் அந்த நட்சத்திரம் தெரியும்தானே!

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவை அனாதையாக்கியதற்கு அப்புறம்தான்  அநேகமானவர்களுக்கு அம்மாவின் அருமை புரியுது....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.