Jump to content

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!


Recommended Posts

நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர். நீரும் நெருப்புமான ஒரு வாழ்க்கைப் பயணம்..!

எம் ஜி ஆர்

சுமார் அரைநூற்றாண்டுக் காலம் தமிழகத்தில் சினிமா, அரசியல் இரண்டிலும் தனித்துவத்துடன் கோலோச்சிய ஆளுமை, எம்.ஜி.ஆர். அவருக்கு முன்னும்பின்னும் பல முதலமைச்சர்களை, ஆளுமைகளை தமிழகம் கண்டிருந்தாலும் எம்.ஜி.ஆர் ஒருவரே மக்களின் இதயங்களைத் தாண்டி இன்னமும் அவர்களது இல்லங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வறுமையினால் கலைத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் பல சோதனைகளுக்கு ஆளாகி, தன் மனிதநேயத்தால் மக்களின் இதயங்களைத் திருடி, பின்னாளில் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் ஆவதற்கு அவர் கையாண்ட வழிமுறைகள் என்ன... இந்த வெற்றிக்கு அடைந்த செய்த தியாகங்கள், அடைந்த துயரங்கள் என அவர் வாழ்வின் இன்னும் பல சுவாரஸ்ய பக்கங்களை சொல்கிறது இந்தத் தொடர். 

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்... ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்“ -  முன்னாள் ஜனாதிபதியான அப்துல் கலாம் இளைஞர்கள், மாணவர்களை ஊக்கப்படுத்த தான் ஏறிய மேடைகளில் தவறாமல் உதிர்த்த வார்த்தைகள் இவை. பல நூறு மேடைகளில் இதை அவர் தெரிவித்திருந்தாலும்... 2012-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்த மேடை, மிகப் பொருத்தமானது. ஆம் அவர் அப்படிப் பேசியது தனது பிறப்பை சம்பவமாகவும் இறப்பை வரலாறாகவும் மாற்றிக்கொண்ட ஒரு மனிதர் வாழ்ந்து மறைந்த இடத்தில் நின்றுதான்! அது, ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் காதுகேளாதோர் பள்ளி! அந்த மாமனிதர் மருதுார் கோபாலமேனன் ராமச்சந்திரன். ரத்தின சுருக்கமாக எம்.ஜி ஆர் என்றால் இந்தத் தலைமுறையின் எந்தக் குழந்தைக்கும் புரியும்.

இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என  பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார்.

அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாதநிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு  உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது. 

எம்.ஜி.ஆர்கோபாலன் நேர்மையான  மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகியபோது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம். 

அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய  ஒரு வழக்கில்... அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்துகொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் 'சம்பவம்' நிகழ்ந்தது. ஆம்...அன்றிரவு அந்தக் குடும்பத்தின்
5-வது குழந்தையை  சத்யபாமா பெற்றெடுத்தார்.  குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது.

ராம்சந்தர் பிறந்தநேரம் குடும்பம் மோசமான வறுமையில் சிக்கிக்கொண்டிருந்தது. ஆசிரியர் வருமானத்தில், குழந்தைகளைப் பராமரிக்க முடியாமல் திணறினார் கோபால மேனன். இந்தச் சமயத்தில் குழந்தைகளில் இருவர் இறந்ததாகச் சொல்லப்படுகிறது. மீண்டும் பாலக்காட்டுக்குத் திரும்பியது குடும்பம். குடும்பத்தின் சூழல் கொஞ்சம் முன்னேற்றம் கண்டது. ஆனால், உடல்நிலை சரியில்லாமல் போனது. பணி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும் கோபால மேனன் குழந்தைகளுக்குப் பிடித்தமானதை வாங்கிவந்து அவர்களின் படுக்கைத் தலையணைக்குக் கீழே வைத்துவிடுவார். காலையில் குழந்தைகள் எழுந்தவுடன் அதைப் பார்த்து மகிழ்வதைக் கண்டு ரசிப்பது அவர் வழக்கம். ராம்சந்தர் கைக்குழந்தையாக இருந்த சமயம் ஒருநாள் அப்படிக் குழந்தைகள் தங்கள் படுக்கையைத் தடவிப்பார்த்தபோது அங்கு எதுவும் வைக்கப்பட்டிருக்கவில்லை.

மூத்த பிள்ளை சக்கரபாணி வழக்கமாக தனக்குப்பிடித்த வாழைப்பழத்தைத் தேடுவார். அன்று கிடைக்காத ஏமாற்றத்துடன் தாயை பார்த்தார் அவர். “பசங்களா இனி தலையணையில் எதுவும் தேடாதீங்க...அப்பா உடம்பு சுகமில்லை. இனி அவர் வேலைக்குச் செல்லமாட்டார்’’ என சேலைத்தலைப்பை வாயில் பொத்தியபடி கூறிவிட்டுச் சமையற்கட்டுக்கு ஓடிச் சென்றார் சத்யபாமா.
 
குழந்தைகளுக்குப் பெரும் ஏமாற்றம். கொஞ்சநாளில் கோபால மேனனுக்கு உடல்நிலை ரொம்ப மோசமானது. ஒருநாளில் தன் பிள்ளைகளில் மூத்தவரான தங்கத்தை அழைத்த கோபால மேனன், “தங்கம்... அப்பா இனி பிழைக்கவழியில்லை. நீதான் இனி விபரம் தெரியாத அம்மா மற்றும் உன் சகோதரர்களைப் பொறுப்போடு பார்த்துக்கொள்ளவேண்டும். செய்வாயா” என மகளின் கையைப் பிடித்தபடி 'நாராயணா, நாராயணா' என மூன்று முறை சொன்னார். அவர் கை தளர்ந்து விழுந்தது. அந்த வீட்டில் பெருங்குரலெடுத்த ஓர் அழுகை புறப்பட்டது. அது சத்யபாமாவுடையது.

எம்.ஜி.ஆர்

வீட்டின் ஒரே வருவாய் ஆதாரம் மறைந்துவிட்டது. வறுமை வாணலியில், வறுபட ஆரம்பித்தது சத்யபாமா குடும்பம். உறவினர்களிட மிருந்து எந்த ஆதரவுமில்லை. அரிதாகச் சிலர் உதவினார்கள். ஆனால், உண்பதற்கு மீன் தருவதைவிட மீன் பிடிக்க கற்றுத்தருவதுதானே நிரந்தர உதவி. அப்படி நிரந்தரமாக அந்தக் குடும்பத்துக்கு வருவாய் ஏற்படுத்தித் தர உறவினர்கள் யாரும் உதவிட முன்வரவில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி தானே வேலைக்குச் செல்வதென முடிவெடுத்தார் சத்யபாமா. பாலக்காட்டில் ஒரு வசதியானவர் வீட்டுக்கு வேலைக்குச் சென்றார் அவர். ஆனால் கெளரவமாக இதுநாள் வரை குடும்பம் நடத்திவந்த அவருக்கு அங்குதான் சோதனைகள் உருவாகின. வேலைக்குச் செல்கிறபோது தன் கைக்குழந்தைக்கு பால் கொடுக்கும் பொருட்டு ராம்சந்தரை மட்டும் சத்யபாமா, வேலை செய்யும் வீட்டுக்குத் தூக்கிச் செல்வார். அதற்கு வீட்டுக்காரப் பெண்மணியிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. கொஞ்சநாட்களில் சத்யபாமாவை, ’’வாடி  போடி’’ என்ற தொனியில அந்த வீட்டுப்பெண்மணி கீழ்த்தரமாக அழைக்க ஆரம்பித்தார்.

பொறுத்துப்பார்த்து பொங்கித்தீர்த்துவிட்டார் சத்யபாமா. “இத பாரும்மா... நானும் உன்னைப்போல ஒருகாலத்துல வசதியாக மாட மாளிகையில வசித்தவதான். என் விதி என்னை இப்டி வீட்டு வேலை செய்ற நிலைக்குக் கொண்டுவந்துவிட்டது. ஆனா, நீ மனிதப்பிறவி போல என்னை நடத்தலை. எனக்கு சத்யபாமா, கண்ணச்சியம்மா, சின்னம்மா என ஒண்ணுக்கு மூணு பேர் இருக்கு. அதுல ஏதாவது ஒண்ணைவைத்துக் கூப்பிடு. இல்லைனா, இனி ஒரு நிமிஷம்கூட உங்கிட்ட வேலை பார்க்க முடியாது” என பொரிந்துதள்ளிவிட்டு குழந்தை ராம்சந்தரைத் துாக்கி இடுப்பில் துாக்கிவைத்தபடி வீட்டை நோக்கி நடந்தார் சத்யபாமா. 

உண்மையில் வீட்டுக்காரப் பெண்மணி சத்யபாமாவைக் கொடுமைப்படுத்தியதில் பின்னணியில் இன்னொரு காரணமும் உண்டு. குழந்தையில்லாத அவரது உறவினர் ஒருவர், சத்யபாமாவின் வறுமையைச் சுட்டிக்காட்டி குழந்தை ராம்சந்தரை தனக்கு தத்து கொடுத்துவிடும்படி முன்பு ஒருமுறை கேட்டிருந்தார். கோபமடைந்த சத்யபாமா, “எத்தனை கஷ்டம் வந்தாலும் குழந்தையை தத்து தர மாட்டேன்” என மறுத்துவிட்டார். இதுதான் வீட்டுக்கார அம்மாவின் கோபத்துக்குக் காரணம்.

அன்றிரவு குழந்தைகளைக் கட்டியணைத்தபடி பலப்பல சிந்தனைகள் தோன்றி மறைந்தன அவருக்குள். குழந்தைகளைக் காக்க தாமதிக்காமல் தமிழகத்துக்குச் செல்வது ஒன்றுதான் தனக்கு ஒரே தீர்வு என முடிவெடுத்தார். கடவுளை வேண்டியபடி பின்னிரவுக்குப்பிறகே உறங்கப்போனார். மறுநாள்,  அவரைத்தேடி வந்தார் வேலுநாயர். இவர் ஓய்வுபெற்ற போலீஸ்காரர். கோபாலனுடன் பணியாற்றியவர் என்பதோடு... அவருக்கு நெருங்கிய நண்பர். கோபாலன் இறந்த தகவல் கேட்டு விசாரிக்க வந்திருக்கிறார். குடும்பத்தின் நிலையை நேரில் பார்த்த அவர், கும்பகோணத்துக்கு தான் செல்லவிருப்பதாகவும்... அங்கு வந்தால், ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்ளலாமே என ஆறுதல் சொன்னதோடு... தன்னோடு வந்தால் தானே அதற்கு வழி செய்வதாகக் கூற, சில தினங்களில் மாட்டுவண்டியை ஏற்பாடு செய்துகொண்டு குழந்தைகளுடனும் கணவரின் புகைப்படங்களோடு அவரது நினைவுகளையும் சுமந்தபடி கும்பகோணத்துக்குப் பயணமானார் சத்யபாமா.

மாட்டுவண்டி கும்பகோணத்தை அடைந்தநேரம் விடிந்தும் விடியாத ஒரு விடியற்காலைப்பொழுது. 

எம்.ஜி.ஆர்

அந்த நேரம், தம் நடிப்பாலும் மனிதநேயப் பண்பாலும் ஓர் அரைநுாற்றாண்டு காலம் தமிழர்களின் உறக்கத்தைக் கலைக்கப்போகிற குழந்தை ராம்சந்தர் தாயின் மடியில் அமைதியாக  உறங்கிக்கொண்டிருந்தான். ராம்சந்தருக்கு அப்போது இரண்டேகால் வயது. 

(தொடரும்)

http://www.vikatan.com/news/coverstory/78948-life-history-of-mgr--episode-1.art

Link to comment
Share on other sites

“ராம்சந்தருக்கு பால் கொண்டு வாடா..!” எம்.ஜி.ஆருக்கு கிடைத்த முதல் கவுரவம்: நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 2

ராம்சந்தர்

பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக சத்யபாமா உழைக்க ஆரம்பித்தார். உடலை வருத்தி ஒரே நாளில் பல சிறுசிறு வேலைகளைச் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தார். ஆனாலும் வறுமை அந்தக் குடும்பத்தை முழுவதுமாகவிட்டு விலகி ஓடிவிடவில்லை. பள்ளிசேர்க்கும் வயது வந்தபோது கும்பகோணம் ஆனையடிப் பள்ளியில் பிள்ளைகள் சேர்க்கப்பட்டனர். பள்ளியில் ராம்சந்தர் படுசுட்டி. ஏதாவது குறும்பு செய்துவிட்டு ஓடி ஒளிந்துகொள்வான். பஞ்சாயத்து, அண்ணன் சக்கரபாணிக்கு போகும். தம்பியைக் கூப்பிட்டுக் கோபப்படுவதுபோல் நடிப்பார். புகார் சொன்னவர்கள் சமாதானம் அடைவர். பிறகு, ''ஏன் ராம்சந்தர்... இப்படிச் செய்றே? அம்மாவிடம் யாராவது இதைச் சொன்னா பிரம்படிதான் கிடைக்கும்” என தம்பி மீது இரக்கப்பட்டுப் பேசுவார் சக்கரபாணி. எம்.ஜி.ஆர் அவர்களிடமிருந்த  நல்ல பழக்கங்கள் பல சத்யபாமாவினால் வந்தவை. பிள்ளைகள் பொய்சொல்வதை, சொந்த சகோதரனாக இருந்தாலும் அனுமதியின்றி ஒருவர் பொருளை இன்னொருவர் எடுப்பதை அவர் அனுமதிக்கமாட்டார்.

இம்மாதிரி சமயங்களில்தான் சத்யபாமா பிரம்பைத் தூக்குவார்; படிப்பில் குழந்தைகள் சோடைபோனால்கூட மன்னிப்பார்; ஒழுக்கத்தில் குறை கண்டால் பொறுக்கமாட்டார். ஒழுக்கம்தான் பிள்ளைகளை உயர்த்தும் என்பதில் உறுதியான பெண்மணி அவர். சத்யபாமாவின் இந்தக் கண்டிப்புதான் சகோதரர்களை வறுமையிலும் செம்மையாக இருக்கவைத்தது. 

படிப்பு, அப்படி இப்படி என்றாலும் சகோதரர்களுக்கு நடிப்பு நன்றாக வந்தது. பள்ளியில் அந்த வருட விழாவில் அரங்கேற்றப்பட்ட 'லவகுசா' நாடகத்தில் ராம்சந்தருக்கு லவன் வேஷம் அளிக்கப்பட்டது. சிறுவன் பின்னியெடுத்துவிட்டான். அதுமுதல் ராம்சந்தருக்கு தடபுடல் மரியாதைதான் பள்ளியில். நாடக ஆசையில் கொஞ்சநாள் கனவிலும் நனவிலும் தன்னை ராஜா போன்று எண்ணிப் பேசிவந்தான். 

எம் ஜி.ஆர்

இப்படித்தான்  ஒரு விடுமுறை நாளில் சிறுவன் ராம்சந்தர் வில் அம்பு செய்து தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். சிறுவன் விட்ட அம்பு தெருவில் போய்க்கொண்டிருந்த ஒருவர் மீது பட்டு காலில் ரத்தம் கொட்ட ஆரம்பித்தது. குறிபார்த்து விட 'ராமச்சந்திர'னா என்ன; ராம்சந்தர்தானே! பயந்து வீட்டில்போய் பதுங்கிக்கொண்டான். ஆனாலும் அடிபட்டவர், கோபத்துடன் ராம்சந்தர் வீட்டுக்குள் நுழைந்து, ''கூப்பிடுறா... உன் அப்பா அம்மாவை'' என எகிற... அப்போது, எதேச்சையாக உள்ளே நுழைந்தார் வேலுநாயர். அடிபட்டவரை பார்த்து, ''வாரும்... எப்போ வந்தீர்... ஏன் இவ்வளவு தாமதம்... இது என்ன ரத்தம்” எனக் கேட்டார். ராம்சந்தருக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டுக்குள் இருந்துவந்த சத்யபாமாவுக்கும் ஒன்றும் புரியவில்லை. பின்னர்தான் புரிந்தது. வந்தவர் வேலுநாயரின் உறவினர். நாடகக் கம்பெனி ஒப்பந்ததாரர். பிள்ளைகள் இருவரும் படிப்பில் சற்று மந்தமாக இருந்ததால் சத்யபாமாவிடம் அனுமதி பெற்று அவர்களை நாடகக் கம்பெனியில் சேர்க்கத் திட்டமிட்டு வரச்சொல்லியிருக்கிறார். வந்த இடத்தில்தான் இந்த ரகளை.

எது எப்படியோ நாராயணன் நாயருக்கு (அடிபட்டவர்) சகோதரர்களைப் பிடித்துவிட்டது. சத்யபாமாவையும் பேசிக் கரைத்துவிட்டார் வேலுநாயர். புகழ்பெற்ற மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி அப்போது கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது. அன்றே சிறுவர்கள் அதில் சேர்த்துவிடப்பட்டனர். கும்பகோணத்தில் கொஞ்சநாள் பயிற்சி. பின்னர் பாண்டிச்சேரியில் நாடகம் போட கம்பெனி நிர்வாகம் முடிவெடுத்தது. முதல்முறையாகத் தாயைப் பிரிந்துசெல்கின்றனர் சகோதரர்கள். இரண்டு தரப்பிலும் கண்ணீர் வெள்ளம். “ எல்லாம் உங்க நன்மைக்குதானப்பா” பிள்ளைகளின் கண்ணீரைத் துடைத்தபடி சொன்னார் சத்யபாமா. பீறிட்டுக் கிளம்பிய ரயிலின் சத்தத்தில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் குறைவாகவே கேட்டது. 

எம்.ஜி.ஆர்நாடகக் கம்பெனியில், ராம்சந்தருக்கு  மகாபாரத நாடகத்தில் விகர்ணன் வேஷம் கொடுக்கப்பட்டது. கௌரவர்களில் ஒருவனே இந்த விகர்ணன். கண்பார்வையற்ற மன்னனான திருதராஷ்டிரனுக்கும், காந்தாரிக்கும் பிறந்த நூறு பிள்ளைகளுள் ஒருவன். சிறுவேஷம் என்றாலும் ராம்சந்தருக்கு தன்னை நிரூபிக்க அது போதுமானதாக இருந்தது. நாடக நுணுக்கங்களை ஓரளவு சகோதரர்கள் தெரிந்துகொள்ளத் தொடங்கினர். விகர்ணன் வேஷத்தில் நன்றாக நடித்ததால், அடுத்த முறை அதே நாடகத்தில்  அபிமன்யு வேஷம் தரப்பட்டது.

'நாடகத்தில் படையோடு எழுந்திடுவேன்' என அபிமன்யு பாடும் பாடல் ஒன்று உண்டு. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பாடுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. ரிகர்சலிலேயே கொஞ்சம் அப்படி இப்படித்தான் பாடினார். பாடலாசிரியரும் நாடகத்தின் நகைச்சுவை நடிகருமான பக்கிரிசாமி, “பையா நீ இந்தப் பாட்டை நாடகத்தில் நன்றாகப் பாடி முடித்துவிட்டால், உனக்கு என் பரிசு 1 ரூபாய். இல்லையென்றால் நான் தரும் தண்டனையை நீ வாங்கிக்கொள்ள வேண்டும்” எனக் கறாராகச் சொல்லிவிட்டார். 'இதென்னடா வம்பு, பாடினால் பரிசு... பாடாவிட்டால் தண்டனையா...'  சரியாக சிக்கிக்கொண்டோமா என்ற குழப்பத்துடனே ரிகர்சலில் ஈடுபட்டான் சிறுவன் ராம்சந்தர். 

தண்டனைக்காக அல்லாமல் தான் பாடத்தகுதியற்றவன் என்ற ஆசிரியரின் எண்ணத்தை மாற்றியாகவேண்டும் என முடிவெடுத்தான் ராம்சந்தர். பலநாட்கள் கடும் முயற்சியில் ரிகர்சலில் ஈடுபட்டான். நாடகத்தன்று நாடகக் குழுவில் இருந்த ராம்சந்தரின் நண்பர்கள் பதைபதைப்போடு மேடையை வெறித்துகொண்டிருந்தனர்.

ராம்சந்தர் பாடத் தொடங்கினான். எங்கும் சுருதி விலகவில்லை. வாத்தியாரின் எதிர்பார்ப்பையும் விஞ்சி உச்சஸ்தாயியில் பாடி முடித்தபோது... அரங்கமே அதிரும்படி கைதட்டல் எழுந்தது.
 

வாத்தியார் வைத்த பரீட்சையில் தன் தம்பி ஜெயித்துவிட்டதை மகிழ்ச்சியுடன் அரங்கின் ஓரத்தில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார் சக்கரபாணி . நினைத்ததை முடித்துவிட்ட மகிழ்ச்சியில், கூட்டத்தைப் பெருமிதத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான் ராம்சந்தர்.

அரங்கில் அன்று அவன் காதுகளில் முதன்முறையாக ஒலித்த கைதட்டல், அடுத்த பல பத்து ஆண்டுகளுக்கு தொடரப்போவதை காலம் மட்டுமே அன்று அறிந்திருக்கும். 

சில நிமிடங்களும் தாமதிக்கவில்லை. பக்கிரிசாமி, ராம்சந்தரை அழைத்து கட்டிப்பிடித்தபடி ஓங்கி குரல் கொடுத்தார். “ஏய் பையா, ராம்சந்தருக்கு பால் கொண்டுவாங்கடா..”- ராம்சந்தருக்கு இன்னும் மகிழ்ச்சி. ஆம் அன்றைய நாளில் பாய்ஸ் கம்பெனியில் ஒரு வழக்கம் உண்டு. அதாவது, நாடகத்தில் அப்ளாஸ் வாங்கும் அளவு சிறப்பாக நடிப்பவர்களுக்கு கம்பெனி உரிமையாளர் தன் கையால் நாடகம் முடிந்தவுடன் பாராட்டி பால் தருவார். கம்பெனியில் அது ஒரு கெளரவம். அதுவரை அரிதான சிலரே அப்படி கெளரவம் பெற்றிருந்தனர். முதன்முறையாக ராம்சந்தருக்கு அன்று, அந்தக் கெளரவம் கிடைத்தது.

எம்.ஜி.ஆர்

கம்பெனியில் நல்ல நடிகன் என பெயர் வாங்கியாகிவிட்டது. இப்போது முறைப்படி ராம்சந்தருக்கு 6 வருட அக்ரிமென்ட்டும், சக்கரபாணிக்கு 3 ஆண்டுகளும் என ஒப்பந்தம் கையெழுத்தானது. சகோதரர்கள்   தொடர்ந்து பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பாலபார்ட் நடிகனாக ராம்சந்தர் நடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ராஜபார்ட் நடிகராக இருந்தவர் அந்நாளைய சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான பி.யு.சின்னப்பா. கதாநாயக நடிகர் என்பதால், கம்பெனியில் ஏக மரியாதை அவருக்கு. அதைப் பார்க்கிறபோதெல்லாம் தானும் ஒருநாள் இப்படிப் பலரும் மதிக்கும் பெயரும் புகழும் பெற்ற நடிகனாக வேண்டும் என்ற வெறி சிறுவன் ராம்சந்தரின் மனதில் எழும். ராம்சந்தரின் ஆசை நிறைவேறியதா...?

http://www.vikatan.com/news/coverstory/79157-bring-a-cup-of-milk”-the-first-recognition-for-mgr-life-history-of-mgr-series-2.art

Link to comment
Share on other sites

“எம்.ஜி.ஆர். குருவிடம் அறை வாங்கியது ஏன்...?” நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 3

எம்.ஜி.ஆர்

ந்நாளில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் சேர்வது என்பது குதிரைக்கொம்பான விஷயம். திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே அங்கு கதவுகள் திறக்கப்படும். சச்சிதானம்பிள்ளை என்பவர் நடத்திவந்த இந்த நாடக கம்பெனியில் நடித்தவர்கள் பின்னாளில் புகழ்பெற்ற சினிமா நட்சத்திரங்களானார்கள். பி.யு சின்னப்பா, பி.ஜி. வெங்கடேசன், டி.எஸ் பாலையா, நன்னையா பாகவதர், கே.பி கேசவன், பிரபல நாடகாசிரியர் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே. ராதா, கே.ஆர் ராமசாமி , காளி என்.ரத்தினம் என இந்த பட்டியல் ரொம்ப நீளம். இந்த பட்டியலில் ராம்சந்தருக்கும் ஓர் இடம் இப்போது.

பாய்ஸ் கம்பெனியில் சேர வெறும் கலை ஆர்வமும் நடிப்புத்திறனும் மட்டுமே தகுதிகளில்லை. கிட்டதட்ட அது ஓர் குருகுல வாசம்போல. நடிப்புப் பயிற்சிக்கு முன்னதாக அவர்களுக்கு அடிப்படை படிப்பு சொல்லித்தரப்படும். விடியற்காலை எழுந்ததும் தேகப்பயிற்சி, பின்னர் வீர திர விளையாட்டுப்பயிற்சி, நாடக வசனங்களை பாடம் செய்தல், பாடும் பயிற்சி, நடனப்பயிற்சி என  கிட்டதட்ட ஒருவனை நாடகத்துறையில் சகலகலா வல்லவனாக்கும் முயற்சிகள். அதேசமயம்  இத்தனை பயிற்சிக்குப்பின்னும் நாடகத்தில் சொதப்பினால் அதற்கு தண்டனைகளும் உண்டு.  அந்த தண்டனைக்கு பயந்தே நடிகர்கள் கண்ணும் கருத்துமாக பயிற்சிகளை செய்வார்கள். உடலையும் உள்ளத்தையும் உறுதியாக்க பாய்ஸ் கம்பெனி இட்ட இந்த உரம்தான் பின்னாளில் ராம்சந்தரை 'எம்.ஜி.ஆர்' ஆக ஆக்கியது என்பதில் சந்தேகமில்லை. 

எம்.ஜி.ஆர்ராம்சந்தர் இப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் ஒப்பந்த நடிகன். கம்பெனியில் சேர்ந்தபோது மாத சம்பளம் நாலணா. இப்போது 5 ரூபாய். சக்கரபாணிக்கும் அதேதான். பெருமிதமான இந்த அங்கீகாரத்துடன் தனது திறமையை மட்டுப்படுத்திக்கொள்ளாமல் இன்னும் புகழடையவேண்டும் என்ற எண்ணம் ராம்சந்தருக்கு தீவிரமானது. அந்நாளில் கம்பெனியில் எம்.ஜி.ஆருக்கு குருவாக இருந்தவர் எம்.கந்தசாமி முதலியார். இவர் தமிழகத்தில் நாடக வளர்ச்சிக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். 

நாடகங்கள் குறித்த முக்கியத்துவம், நடிகர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றை ராம்சந்தருக்கு உணர்த்தியவர் எம்.கே என்றால், ஒரு நடிகன் கதாபாத்திரத்தில் சோபிக்க என்னவெல்லாம் தியாகம் செய்யவேண்டும், எப்படியெல்லாம் தன்னை கதாபாத்திரத்திற்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதை ராம்சந்தருக்கு சொல்லிக்கொடுத்தவர் காளி என்.ரத்தினம். எம்.ஜி.ஆரின் நடிப்புக்கு ஆதாரமானவர்கள் இவர்கள் இருவரும். உதாரணமாக இவர்களுடனான ராம்சந்தரின் ஒரு அனுபவத்தை சொல்லலாம். 

ராம்சந்தர் அப்போது ராஜேந்திரன் என்ற நாடகத்தில் நடித்துவந்தார். ஊதாரித்தனமாக செலவு செய்யும் பெரும் பணக்கார வாலிபன் வேடம் அவருக்கு தரப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் மகனின் ஊதாரித்தனத்தால் அவனுக்கு தன் கணக்கில் வங்கியில் பணம் தர வேண்டாம் என அவரது தந்தை வங்கிக்கு அறிவுறுத்தியிருந்தார். இதுதெரியாமல் சென்று 'செக்' கிற்கு பணம் கேட்க வங்கி மறுக்கிறது. கோபமடைந்த வாலிபன் தன் செருப்பை கழற்றி வங்கி அதிகாரிகளை அடிப்பதுபோல்  ஓங்கியபடி வெறியாட்டம் போடுகிறான். நாடகத்திற்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தவர் காளி.என். ரத்தினம். 

முதல்நாள்  நாடக அரங்கேற்றம் நடந்து முடிந்து ஓய்வாக வந்து தன் இருக்கையில் வந்து அமர்ந்தார் ராம்சந்தர். அப்போது வேகமாக அவரை நோக்கி முன்னேறி வந்த கந்தசாமி முதலியார் ராம்சந்தரின் முகத்தில் ஒங்கி ஒரு அறை விட்டார். அதிர்ந்துபோயினர் அங்கிருந்தவர்கள். கந்தசாமி முதலியார் நடிப்பு விஷயங்களில் கொஞ்சம் முரட்டுமனிதர். அதனால் அவரிடம் சென்று ராம்சந்தரை அறைந்ததற்கான காரணம் கேட்க யாருக்கும் தைரியமில்லை. எந்த தவறும் செய்யாத தன்னை ஏன் வாத்தியார் அடித்தார் என கன்னத்தை பிடித்தபடி நின்றான் ராம்சந்தர். தந்தை என்பதால் எம்.கே.ராதா மட்டும் துணிந்துகேட்டார்.  எதற்காக அவனை அடித்தீர்கள் நன்றாகத்தானே நடித்தான்...?

“முட்டாள்தனமான நடிப்பு...எந்த பணக்காரனாவது பொது இடத்தில் இப்படி செருப்பை கழற்றி அநாகரீகமாக நடந்துகொள்வானா...ஏற்ற பாத்திரத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டாமா... இப்படி நடித்தால் நாடகம் பார்ப்பவர்கள் என்னையும் நம் நாடக குழுவையும்தானே தவறாக பேசுவார்கள். ரத்தினம் என்ன பாடம் சொல்லிக்கொடுத்தான் இவனுக்கு! ” என்று பொரிந்து தள்ளினார் கந்தசாமி முதலியார். ராம்சந்தருக்கு எந்த கோபமும் எழவில்லை. காரணம் தந்தையை இழந்து தாயை பிரிந்து வறுமைக்காக கலைத்துறையில் ஈடுபட்டிருக்கும் தனக்கு எல்லாமுமாக இருந்து இதுநாள் வரை வழிநடத்தி வருபவர் எம்.கே முதலியார் என்பதால், அவர்   எதை செய்தாலும் அது தன் வளர்ச்சிக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்ததே. நல்ல படிப்பினையாக அந்த சம்பவத்தை எடுத்துக்கொண்டான் ராம்சந்தர்.

எம்.கே ராதா

அதேசமயம் தன்னை வாத்தியார் அடித்ததை யாரும் தட்டிக்கேட்க துணிவில்லாதபோது தைரியமாக தனக்காக தன் தந்தையையே எதிர்த்து கேள்வி கேட்ட எம்.கே.ராதாவின் அன்பில் நெகிழ்ந்துபோனார் எம்.ஜி.ஆர். தன் சொந்த சகோதரர் சக்கரபாணிக்கு இணையான பாசத்துடன் இறுதிவரை அவரையும் தன் சொந்த சகோதரர் போன்றே மதித்து   பாசத்துடன் பழகினார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருக்கு முன்னரே சந்திரலேகா, அபுர்வ சகோதரர்கள் பாசவலை போன்ற படங்களில் நடித்து பின்னாளில் புகழ்பெற்றவர் எம்.கே.ராதா. திரையுலகில்  புகழடைந்ததற்கு பின், எம்..ஜி.ஆர் பொது இடங்களில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து வணங்கியது அரிதான சந்தர்ப்பங்களில்தான். அணணா கூட இடம்பெறாத இந்த பட்டியலில் எம்.கே ராதாவும், சாந்தாராமும் இடம்பெற்றிருந்தனர். தன் வாழ்நாளில் முக்கியமான எந்த நிகழ்வுகளுக்கும் எம்.கே.ராதாவை தேடிச்சென்று ஆசிபெறுவதை இறுதிவரை கடைபிடித்தார் எம்.ஜி.ஆர். எம்.கே.ராதாவின் மீது அத்தனை மரியாதையும் அன்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.

இனி நடிப்பில் சோடைபோகக்கூடாது. வாத்தியாரிடம் அடி வாங்கக்கூடாது என அன்றே உறுதி எடுத்துக்கொண்டார் ராம்சந்தர். தொடர்ந்து மனோகரா உள்ளிட்ட பல நல்ல நாடகங்கள் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடத்தப்பட்டன. இந்த நேரத்தில் பி.யு சின்னப்பாவை போல் பெரிய நடிகர் ஆக வேண்டும் என்ற ராம்சந்தரின் ஆசை ஒருநாள் கைக்கூடிவந்தது. 

எம்.ஜி.சக்கரபாணி

அப்போது  பாய்ஸ் கம்பெனி 'தசாவதாரம்' என்ற நாடகத்தை நடத்திவந்தது. சென்னையில் பல நாட்கள் தொடர்ந்து நடந்த வெற்றிகரமான நாடகம். பின்னர் பாலக்காட்டில் நடத்தப்பட்டது. இதில் பரதனாக பி.யு சின்னப்பா நடித்தார். ராம்சந்தருக்கு சத்ருகன் வேடம். பெயருக்குத்தான் வேடம்; அதில் நடிப்புத்திறமையை காட்டும் வாய்ப்பு துளியும் இல்லை. வேண்டா விருப்பமாகவே நடித்துவந்தார் ராம்சந்தர். ஒருநாள் புதுக்கோட்டையில் இருந்து பாலக்காட்டுக்கு பறந்து வந்தது அந்த 'அதிர்ச்சி' தந்தி. தந்தி சொன்ன சேதி என்ன...?

http://www.vikatan.com/news/coverstory/79209-this-is-why-m-kandhasamy-slapped-mgr--life-history-of-mgr--chapter-3.art

Link to comment
Share on other sites

'கதர் பக்தியும் காந்தி தரிசனமும்..!' நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்! அத்தியாயம் - 4

எம்.ஜி.ஆர்

பாலக்காட்டில் நடந்த 'தசாவதாரம்' நாடகம் பி.யு சின்னப்பாவின் புகழை  அதிகப்படுத்தியது. சென்ற இடங்களில் எல்லாம் பாராட்டு மழை. ஆனால் அது நிலைக்கவில்லை. ஆம், நாடக குழு தங்கியிருந்த வீட்டிற்கு பறந்துவந்தது ஒரு தந்தி. சின்னப்பாவின் தாய் மறைந்துவிட்டதை சொன்னது அது. 

அழுதபடி ஊருக்கு புறப்பட்டார் சின்னப்பா. வெளி மாநிலம். நாடகத்திற்கு நல்ல வசூல். தொடர்ந்து இன்னும் சில தினங்கள் நடத்தினால் நல்ல வசூலாகலாம். கம்பெனி நிர்வாகிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. “கே.ஆர் ராமசாமியை கூப்பிடுவோமா அவசரத்துக்கு” என்றார் வாத்தியார். “அவனை தேடி கண்டுபிடிச்சி ஒத்திகை நடத்தி...விடிஞ்சிடும் போ...”கவலையுடன் சொன்னார் முதலாளி. பலரும் பலரை பரதன் பாத்திரற்கு பரிந்துரைத்தார்கள்.

முதலாளிக்கு திடீரென ஒரு யோசனை உதித்தது. “ஆமாம் அந்த ராம்சந்தர் எங்க இருக்கான் கூப்பிடு அவனை”. ஆரம்பத்திலிருந்தே சின்னப்பாவுடனேயே வருவதால் எப்படியும் பரதன் வேடத்திற்கான வசனங்கள் அத்துபடியாகி இருக்கும். எனவே ராம்சந்தர்தான் சரியான மற்றும்  விரைவான தேர்வு என அவர் தீர்க்கமாக முடிவெடுத்தார். 

எம் ஜி ஆர்உடனடியாக நாடக குழுவினர் தங்கியிருந்த வீட்டுக்கு ஆள் அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு ராம்சந்தர் இல்லை. விசாரித்ததில், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர் ஒருவரை பார்க்க சென்றுவிட்டதாக சொன்னார்கள். முதலாளியிடம் சென்று தகவல் சொன்னபோது, “என்ன செலவானாலும் சரி, ராமசாமியை உடனே கிளம்பி பாலக்காடு வரச்சொல்லு” என்றார் கொதிப்பான குரலில். அதே நேரம் அந்த இடத்திற்கு வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்துகொண்டிருந்தார் ராம்சந்தர். 

எல்லோர் முகத்திலும் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் உண்டானது. முதலாளி முகத்தில் கொள்ளை சந்தோஷம். “டேய்... போய் பரதன் பாடத்தை படி...இன்னிலேர்ந்து நீதான் பரதன்”- அசரீரி போல முதலாளி சொன்னதைக் கேட்டு தன்னையே கிள்ளிப்பார்த்துக்ககொண்டார் ராம்சந்தர்.

பாலக்காட்டின் இன்னொரு மூலையில் இருந்து முதலாளியைத் தேடி ராம்சந்தர் அத்தனை சீக்கிரம் வந்தது எப்படி..?

வீட்டில் ராம்சந்தரை தேடி வந்ததை பார்த்த அவரது சக நடிகனான நண்பன், விஷயத்தை கேட்டு தெரிந்துகொண்டு தம் நண்பனுக்கு வந்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என வாடகை சைக்கிள் பிடித்து அழைத்துவந்திருக்கிறார். நண்பனால் ராம்சந்தரின் கனவு நனவானது அன்று. 

“பாடம் படி, போ" என காளி. என்.ரத்தினம் சொன்னபோது, “தேவையில்லை அண்ணே... என் பாடத்தோட அவர் பாடத்தையும் நான் படிச்சி வெச்சிருக்கேன். ஒருதடவை ஒத்திகை பார்த்தால் போதும்”- நெகிழ்ந்தார் ரத்தினம். இதுதான் எம்.ஜி.ஆர்!

 'வாய்ப்புகள் வரும்... போகும். அல்லது எப்போதாவது வரலாம். அதற்காக தகுதியை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டுமே தவிர வாய்ப்பு வரவில்லை என சுணங்கிவிடக்கூடாது. சுணங்கினால் வாய்ப்பு வரும்போது அதை பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போய்விடும். திரைத்துறையில் அரசியலிலும் எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் இதுதான் காரணம். பாலக்காட்டில் பரதன் என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக கதாநாயகன் வேடம் ஏற்றார் எம்.ஜி.ஆர். 

பி.யு.சின்னப்பா நடித்த பாத்திரத்தில் ராம்சந்தர். மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்ற ஐயம் முதல்நாளிலேயே தீர்ந்தது. சின்னப்பாவுக்கு வந்த அதே கைதட்டல். பத்துநாட்கள் மட்டுமே நடத்த திட்டமிட்டிருந்த நாடகம் அடுத்த பத்து பத்து நாட்கள் கூடுதலாக நடந்தது. கதாநாயகனாக வெற்றிபெற்றார் எம்.ஜி.ஆர்.

ஆயினும் சின்னப்பா திரும்பி வந்ததால் கடைசி 2 நாட்கள் அவரே மீண்டும் பரதனாக நடித்தார். ஆனாலும் முதலாளி கடைசி நாளன்று எம்.ஜி.ஆரின் அருகே வந்து  அவரது  காதுகளில் மெதுவாக சொன்னார் இப்படி, “ டேய் ராம்சந்தர், வாய்ப்பு விட்டுப்போச்சுன்னு கவலைப்படாதேடா...சின்னப்பாவின் எல்லா பாடத்தையும் நேரம் கிடைக்கும்போது படிச்சி வெச்சிக்கடா...பின்னாடி பயன்படும்”- முதலாளி வாக்கு பலித்தது ஒருநாள்.

தற்காலிகமாக வந்த கதாநாயகன் வாய்ப்பு நிரந்தரமாகும் காலம் கைக்கூடிவந்தது சில மாதங்கள் கழித்து. ஆம், 'தசாவதாரம்' முடிந்து கம்பெனியின் அடுத்தடுத்த நாடகங்கள் பல அரங்கேற்றப்பட்டன.  அதில் ஒன்று 'சந்திரகாந்தா'. அதில் சுண்டூர் இளவரசன் வேடத்தில் சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். பாய்ஸ் கம்பெனிக்கும் தனிப்பட்ட முறையில் சின்னப்பாவுக்கும் புகழ் தந்த நாடகங்களில் ஒன்று இது.

பி.யு சின்னப்பா

ஆந்திர மாநிலம் சித்துாரில் இந்த நாடகம் நடந்துகொண்டிருந்தபோது சின்னப்பாவுக்கு மகரக்கட்டு பிரச்னை வந்தது. இதனால் நாடகத்தில் அவரால் பாடி நடிக்கமுடியாத நிலை. இதனால் நாடகம் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டது. அதற்குள் சின்னப்பாவால் குரலை தேற்ற முடியவில்லை. கொஞ்சநாளில் மனக்கசப்பும் உருவாகவே சின்னப்பா கம்பெனியை விட்டு விலகுவதென முடிவெடுத்தார். அவர் விலகியதையடுத்து முக்கிய கதாநாயகன் பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கும், கம்பெனியின் மற்றொரு நடிகரான கே.எம்.கோவிந்தன் என்பவருக்கும் பிரித்தளிக்கப்பட்டன.

இதில் எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டவை முக்கிய கதாபாத்திரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மனோகராவில் மனோகரன், சந்திரகாந்தாவில் சுண்டூர் இளவரசன், பதிபக்தியில் வீரமுத்து, இப்படி! பாத்திரங்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரமாகின; நிரந்தரம் என்றால் பெயரளவில் இல்லை. ராஜபார்ட் நடிகர்களுக்கு கம்பெனி தரும் சிறப்பு சலுகைகளும் சிறப்பு மரியாதைகளும் எம்.ஜி.ஆருக்கு இப்போது கிடைத்தன. 

ஆனாலும் கதாநாயகனாத்தான் நடிப்பேன் என எம்.ஜி.ஆர் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவில்லை. ராஜபார்ட், ஸ்திரீ பார்ட் என எதிலும் தன்னை நிரூபித்தார். மகழ்ச்சியாக சென்றன நாட்கள். 

இந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கு 'கதர் பக்தி' என்ற  நாடகத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாடகத்தின்  முடிவில் நிஜமாகவே காந்தியத்தின் மீதும், காந்தியின் மீதும் காதல் உண்டானது. இதனால் கதர்த்துணிகளையே உடுத்த ஆரம்பித்தார். காரைக்குடியில் அவரது நாடகம் ஒன்று நடத்தப்பட்டபோது போராட்டம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக காந்தி அங்குவந்திருந்தார்.

எம்.ஜி.ஆர்விஷயம் அறிந்த எம்.ஜி.ஆர், தன் ஆதர்ஷ நாயகனை நேரில் பார்ப்பதென முடிவெடுத்து காந்தி கலந்துகொண்ட கூட்டத்திற்கு ஆர்வத்துடன் சென்றார். காந்தியை நேரில் சந்தித்தார். புகழ்பெற்ற நடிகரான பின் ஒருமுறை காந்தியை சந்தித்த தன் அனுபவத்தை இவ்வாறு விவரித்திருந்தார்.

"நான் அப்போது இளைஞன்தான். காங்கிரஸ் கட்சியில் நான் இருந்தேன். கதராடையே அணிந்து வந்தேன். காரைக்குடிக்கு காந்தியடிகள் வந்து ஒரு மேடை மீது நின்று, மக்களுக்கு தரிசனம் தந்தார். அமைதியும், எளிமையும் உருவான அவரைப் பார்த்ததும் ஏதோ செய்வத்தன்மை பொருந்திய ஒருவரைப் பார்ப்பது போன்ற பக்தி உணர்வுதான் ஏற்பட்டது.

அந்தப் புன்சிரிப்பும், அவரது நடையும், குனிந்த தலையும் என் உள்ளத்தில் இன்னும் சித்திரமாகப் பதிந்திருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஒரு மூலையில் நின்றபடி பார்த்தேன் இந்த பார் முழுதும் போற்றும் மகானை. அப்போது மக்களுக்கு என்னை அதிகம் தெரியாது."

காலத்தின் விளையாட்டு, பின்னாளில் காந்தி வளர்த்தெடுத்த, அவரது கொள்கைகளை முன்னெடுத்த காங்கிரஸ் கட்சியையே அவர் எதிர்க்க நேர்ந்ததுதான்.

மீண்டும் நாடக கம்பெனிக்கு வருவோம்... சினிமா படங்கள் தோன்றி மவுனப்படங்களாக வெளிவந்து மக்களுக்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டிருந்த காலம் அது. தமிழகத்தில் மவுனப்பட காலம் முடிந்து பேசும்படங்கள் தயாரிக்கும் முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்துகொண்டிருந்தன. 

இந்த நேரத்தில்தான் கம்பெனியின் முக்கிய நடிகர்கள் பலரும், குறிப்பாக வாத்தியார் எம்.கந்தசாமி முதலியார், எம்.கே.ராதா போன்றோர் சினிமா ஆசையில் கம்பெனியில் இருந்து விலகிச் சென்றிருந்தனர். 

கம்பெனியில் ராஜபார்ட் நடிகர், சகலவிதமான மரியாதைகள், கணிசமான சம்பளம் என விரும்பியதெல்லாம்  கிடைத்தாலும் சகோதரர்கள் தனிமையை உணர ஆரம்பித்தனர் கொஞ்சநாளில்...

http://www.vikatan.com/news/coverstory/79363-mgr-meets-gandhiji---life-history-of-mgr--episode-4.art

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் அழுத ரகசியம்!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்..! அத்தியாயம் -5

எம்.ஜி.ஆர்

கம்பெனியில் இருந்த தனது நலன் விரும்பிகள் வெளியேறிவிட்ட கவலையில் நாடகங்களில் பங்கெடுத்துவந்த ராம்சந்தருக்கு இன்னொரு பிரச்னை உருவானது. ஆம் பி.யு.சின்னப்பாவுக்கு வந்த அதே மகரக்கட்டு பிரச்னை. பாடி நடிக்கும் குரல்வன்மை போனதால் ஒரேநாளில் எல்லாமே தலைகீழானது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதுபோல் சின்னப்பாவிடமிருந்து ராம்சந்தருக்கு வந்த ராஜபார்ட் வேடங்கள் இப்போது இன்னொருவருக்கு அளிக்கப்பட்டது.

மகரக்கட்டு என்பது ஆண்களுக்கு பருவ வயதின் துவக்கத்தில் குரல்வளம் கடினமாக மாறிவிடும் தன்மை. சிறுவர்கள் பெரியவர்களாகிவிட்டதற்கான அடையாளம் அது. இயல்பான மனிதர்களுக்கு அதில் சிக்கலில்லை. தொழில்முறை நாடக நடிகர்களுக்கு அது வனவாசம் போன்ற காலகட்டம். எந்த பாத்திரத்திற்கும் அந்த குரல் பொருந்திவராது. இக்காலகட்டத்தில் நடிகர்கள் பெரும்பாலும் வேறு தொழிலுக்கோ அல்லது நாடக குழுவிலேயே வேறு பிரிவுக்கோ மாறிவிடுவர். மகரக்கட்டினால் பாட வாய்ப்பில்லாத சில பாத்திரங்கள் மட்டுமே ராம்சந்தருக்கு ஒதுக்கப்பட்டன. சக்கரபாணி தன் தம்பியின் நிலை கண்டு வருந்தினார்.

'தொடர்ந்து கம்பெனியில் தங்கி தம் திறமையை மழுங்கடித்துவிடக்கூடாது. அதேசமயம் கம்பெனியை விட்டு முற்றாக வெளியேறிவிடுவதும் புத்திசாலித்தனம் இல்லை' என சிந்தித்த சகோதரர்கள், குரல் வன்மை திரும்ப வரும்வரை முதலாளிக்கு தெரியாமல் வேறு கம்பெனியில் சேர்ந்து நடிப்பது என முடிவெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் தெரிந்த நண்பர்கள்தான். நாடக குழுக்களின் அறிமுகம் எதுவும் கிடையாது. கம்பெனியின் பழைய வாத்தியாரான எம்.கந்தசாமி முதலியார், மொய்தீன் என்ற நாடக ஒப்பந்ததாரருடன் இணைந்து சிங்கப்பூரில் நாடகம் போட்டுவந்த தகவலை அப்போதுதான் சக்கரபாணியின் நண்பர் ஒருவர் சொன்னார்.

எம் ஜி ஆர்சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. நம் மீது அன்பு கொண்ட வாத்தியார் எப்படியும் நமக்கு ஒரு வழிகாட்டுவார் என்ற எண்ணத்துடன் அவரை நேரில் சந்தித்தனர். 'பசங்களா எப்படிடா இருக்கீங்க...' என நலம் விசாரித்த கையோடு சகோதரர்களின் பிரச்னைக்கும் தீர்வு சொன்னார் எம்.கே.

மொய்தீன் குழுவில் சகோதரர்களை சிங்கப்புர் அழைத்துச்செல்வதென முடிவெடுக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் 12 நாட்கள் நாடக ஒத்திகை நடந்தது. ஆனால் அன்றைய அரசியல் சூழலால் அந்த பயணம் ரத்தானது. அதற்கு பதிலாக பர்மா பயணமாக முடிவானது.

பர்மா செல்லும் நாள் வந்தது. அந்நாளில் நாடக குழுக்களில் நடிப்பவர்கள் அவ்வப்போது நாடக குழுக்களை மாற்றிக்கொள்வது சகஜம் என்றாலும் தமக்கு ஆதரவளித்த கம்பெனிக்கு துரோகம் செய்துவிட்டு வேறு குழுவுக்கு வந்தது சகோதரர்களுக்கு உறுத்தியது. அப்படி தம்முடன் பழைய குழுவில் இருந்த யாரேனும் நம்முடன் வந்து நம்மை அடையாளம் கண்டுவிடுவார்களோ என்ற அச்சம் சக்கரபாணியை விட ராம்சந்தருக்கு அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் உண்டு.

பாய்ஸ் கம்பெனியில் முதலாளி சச்சிதானந்தம் கோபக்காரர்தான். ஆனால் பேச்சோடு அவர் கோபம் நின்றுவிடும். ஆனால் வாத்தியார் காளி.என்.ரத்தினம் அப்படியல்ல; கோபம் வந்தால் தாறுமாறாக அடித்துவிடுவார். பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்த புதிதில் ராம்சந்தர் நல்லதங்காள் நாடகத்தில் நடித்தார். அதில் வறுமையினால் தன் குழந்தைகளை ஒவ்வொருவராக கிணற்றில் வீசிவிடுவாள் நல்லதங்காள். கடைசி குழந்தை ராம்சந்தர். கடைசி குழந்தையை வீசும் முன் அந்த குழந்தை அம்மாவிடம் தன்னை கொன்றுவிடாதே என்றும் தான் குடும்பத்தை காப்பாற்றுவதாகவும் அழுதபடி கூறவேண்டும்.

ஆனால் ராம்சந்தருக்கு அப்போதிலிருந்தே அழுகை மட்டும் கொஞ்சம் சிக்கல் தரும் விஷயம். ஒத்திகையின்போதே டயலாக் பேசுவார். அழுகை வராது. அழவில்லையென்றால் அந்த காட்சி உருக்கமாக இருக்காது. இதற்காக காளி.என்.ரத்தினம் ஓர் உபாயம் செய்தார். முதல்நாள் நாடக அரங்கேற்றத்தின்போது அந்த காட்சியில் ராம்சந்தரை வசனம் பேசியபடி நாடக மேடையின் ஓரமாக வரச்சொல்லியிருந்தார் ரத்தினம்.  

வாத்தியார் கூப்பிடுகிறாரே என சிறுவன் ராம்சந்தர் வசனம் பேசியபடி மேடையின் ஓரம் வர, திடடமிட்டபடி அங்கு மறைந்திருந்த ரத்தினம் ராம்சந்தரின் தலையில் ஒங்கி ஒரு குட்டு வைத்தார். உயிர் போகும் வலி. ராம்சந்தர் நிஜமாகவே அழுதபடி வசனம் பேச, அதை சிறுவனின் யதார்த்தமான நடிப்பு என நம்பி, “அடடா, என்னமா நடிக்கிறான்யா பையன்! ” என அரங்கில் பலத்த கைதட்டல். வலியினால் நாடகம் முடிந்தபின்னும் அழுதுகொண்டிருந்தான் ராம்சந்தர். இப்படி நாடகத்தின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பவர் காளி.என். ரத்தினம்.

காளி என்.ரத்தினம்

கப்பல் பயணத்தில் இந்த சம்பவம்தான் திரும்ப திரும்ப நினைவில் வந்து ராம்சந்தரை பயமுறுத்திக்கொண்டிருந்தது.
யாராவது பார்த்துவிட்டு முதலாளியிடம் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே பர்மா பயணமானார்கள் சகோதரர்கள். பர்மாவில் நாடகம் துவங்கியது. ஒருநாள் நாடகத்தின் க்ளைமேக்ஸ் காட்சி நடந்துகொண்டிருந்தது. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

http://www.vikatan.com/news/coverstory/79452-this-is-why-mgr-cried-life-history-of-mgr--chapter-5.art

Link to comment
Share on other sites

‘எம்.ஜி.ஆரை சிறைக்கு அனுப்பிய காந்தி!’- நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் -அத்தியாயம்-6

mgr_100__head_13079.jpg

மகரக்கட்டினால் கம்பெனியிலிருந்து வெளியேறி பர்மாவில் வேறொரு குழுவுடன் நாடகம் நடிக்கச் சென்றிருந்த ராம்சந்தர் நாடகத்தன்று முதன்முறையாக  பூகம்பம் என்ற ஒன்றை நேரில் உணர்ந்தார்கள்

ஆம் நாடக மேடையில் நாடகம் நடந்துகொண்டிருந்தபோது கட்டிடம் ஒரு கணம் குலுங்கி  நின்றது. அதிர்ச்சிக்கு ஆளானார்கள் அத்தனைபேரும். என்னவாயிற்று என்பதை உணர்வதற்குள் இன்னொரு முறை நிகழ்ந்தது அந்த சம்பவம். பதறியபடி தெருக்களில் சிதறி ஓடினர் நாடகம் பார்க்கவந்தவர்கள். சக்கரபாணி, தம்பியை தேடினார். சிறிதுநேரத்திற்குப்பின்னர்தான் தம்பியை கண்டுபிடித்தார். இது  பூமி அதிர்ச்சி என்றார்கள். சகோதரர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள சில தினங்கள் பிடித்தன. 

எம்.ஜி.ஆர்பர்மாவில் நாடகம் நடந்துகொண்டிருந்த சமயம் பி.யு.சின்னப்பாவும் பல இடங்களில் வாயப்புத் தேடி அலைந்து திரிந்து இறுதியாக மொய்தீன் குழுவில் நடிக்க பர்மாவுக்கு வந்திருந்தார். குறைவான ஆட்களே அழைத்துவரப்பட்டிருந்ததால் சமயங்களில் ராம்சந்தரே பெண் வேடமிட வேண்டியிருந்தது  ஒருநாடகத்தில் பி.யு.சின்னப்பா ராஜபார்ட்டாகவும் ஸ்திரீ பார்ட்டாக ராம்சந்தரும் நடித்தனர். பர்மாவில் வெற்றிகரமாக நாடகங்கள் முடிந்து 6 மாதங்களுக்குப்பின் சென்னை வந்துசேர்ந்தனர் நாடக குழுவினர். அப்போது சென்னை யானைக்கவுனியில் ராம்சந்தர் குடும்பம் வசித்தது.

சொல்பேச்சு கேளாமல் இப்படி கண்டபடி அங்கும் இங்கும் திரிவது சத்தியபாமாவுக்கு அறவே பிடிக்கவில்லை. பிள்ளைகளை திட்டித்தீர்த்தார். அடுத்து என்ன செய்வது என்பது பற்றி எந்த திட்டமும் இல்லை சகோதரர்களிடம். ஆனாலும் அவர்கள் நாடகங்களை பார்ப்பதை கைவிடவில்லை. சென்னையில் எங்கு நாடகங்கள் நடந்தாலும் சகோதரர்கள் போய் பார்ப்பார்கள். வீட்டிற்கு வந்தபின் நடிகர்களின் நடிப்பை விமர்சனம் செய்வர். ஒரு மாதம் கழிந்த நிலையில் ஒருநாள் வேலுநாயர் ராம்சந்தரின் வீட்டுக்கு வந்தார். 

குடும்பத்தின் நலத்தை விசாரித்தவர், சகோதரர்களின் செயலை கண்டித்ததுடன், முதலாளி இன்னமும் அவர்கள் மீது அக்கறையாக இருப்பதை சுட்டிக்காட்டி திரும்ப பாய்ஸ் கம்பெனிக்கு வரும்படி அழைத்தார். அப்போதெல்லாம் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் மாதம் 30 நாட்களும் நாடகங்கள் நடக்கும். வேலுநாயர் ராம்சந்தர் - சக்கரபாணியை சந்தித்த நேரத்தில் அங்கு பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் நடத்திவந்தது. இதனால் வேலுநாயருடன் அன்றே முதலாளியை பார்க்க கிளம்பினர் சகோதரர்கள். 

முதலாளியை பார்த்ததும் சகோதரர்களுக்கு ஒன்றும் பேச முடியவில்லை. “ஏம்பா நான் உங்களுக்கு என்ன குறைவெச்சேன். ஒழுக்கமான பசங்க நீங்க... குரல் கெட்டா என்ன கொஞ்சநாள் சாதகம் பண்ணி சரியாக்கிட்டா பழையபடி நடிக்கவேண்டியதுதானே...அதுக்காக கம்பெனியை விட்டு ஒடுறதா...சரி இனிமே அப்படி செய்யாதீங்க..போய் பாடத்தை படிங்க“ என பெரிய மனதுடன் பேசிவிட்டு கிளம்பினார். 

மீண்டும் உற்சாகத்துடன் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர் சகோதரர்கள். கதர்பக்தி நாடகம் இப்போது மீண்டும் நடத்தப்பட்டது. எம்.ஜி.ஆர் கதர்த்துணி உடுத்த ஆரம்பித்த காலகட்டம் அது.

mgr_devar_murugar_17514.jpgஒரு பக்கம் காந்தியத்தின்மீது பற்று. அதன்பேரில் காந்தியக்கொள்கைகளில் தீவிர பிடிப்பு உண்டாகி இக்காலத்தில் நிறைய புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தார். மற்றொரு பக்கம் எம்.ஜி.ஆர் தீவிர ஆத்திகராகவும் இக்காலத்தில் இருந்தார். சத்தியபாமா குடும்பத்தினரின் குலதெய்வம் காளி. என்றாலும் சிவனையும் நாராயணனையும் அவர்கள் தீவிரமாக வணங்கிவந்தனர். இதனால் இயல்பாகவே தாயின் வழக்கம் பிள்ளைகளுக்கு தொற்றிக்கொண்டது. எம்.ஜி.ஆர் வெங்கடேசபெருமாளை வணங்கும் வழக்கம் கொண்டிருந்தார். அக்காலத்தில் அவரது கழுத்தில் தாமரை மணி மாலை ஒன்று எப்போதும் அவரது கழுத்தை அலங்கரிக்கும். பாய்ஸ் கம்பெனியில் பாலநடிகனா இருந்தபோது சிலமுறை திருப்பதிக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் அவர்.

"நான் ஒரு நாத்திகன் என்று பலரும் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு, எழுதிவருகிறார்கள். உண்மையாகவே நான் ஒரு நாத்திகன் அல்ல. எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஒருவனே தேவன் என்ற கொள்கையுடையவன் நான். நமக்கெல்லாம் மீறிய ஒரு பெரிய சக்தி இருக்கிறது. அதைத்தான் கடவுள் என்று சொல்கிறோம். வழிபடுகிறோம். பலர் இந்தச் சக்திக்கு உருவம் கொடுத்து, பெயர்கள் தந்து கடவுளாக வணங்கி வழிபடுகிறார்கள்.

நான் என் தாயின் உருவத்தில் அந்தச் சக்தியை இப்போது வழிபாட்டு வருகிறேன். அப்படியானால் நான் கோயிலுக்குப் போனது கிடையாதா? போயிருக்கிறேன். அங்கிருந்த தெய்வங்களை வணங்கி இருக்கிறேன். 'மர்மயோகி' படம் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாராகி வந்த சமயம், நான் பழநிக்குப் போய் முருகனைத் தரிசித்து இருக்கிறேன். அப்போது நான் மட்டும் தனியே போகவில்லை.
நண்பர் எம்.என்.நம்பியாரும் வந்திருந்தார். அவரின் மூத்த மகனை (சுகுமாரன் நம்பியார்) என் தோளிலே தூக்கிக்கொண்டு மலைக்குச் சென்றேன். அந்தக் குழந்தைக்கு அன்று நானே பெயரும் சூட்டினேன்.

ஒரு சமயம் திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க நடந்தே போயிருக்கிறேன். இரண்டாவது முறையாக திருப்பதிக்குச் சென்றபோது தான் என் உள்ளத்தில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. நண்பர்கள் சிலருடன், வாடகை காரில் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். ஏராளமான பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த தர்ம தரிசன வரிசையில் போய் நின்றுகொண்டோம்.

சற்றுநேரத்தில் எங்களுடன் வந்து பிரிந்துபோன நண்பர் ஒருவர், எங்களிடம் வந்தார். வரிசையிலிருந்து பிரிந்து எங்களுடன் வரும்படி அவர் எங்களையெல்லாம் அழைத்தார். நாங்களும் வெளியே வந்தோம்.  அவர், "உள்ளே சென்று வணங்கிவர நமக்கு பிரத்தியேகமான அனுமதி கிடைத்துவிட்டது. வரிசையில் காத்திருக்க வேண்டாம். தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் ஒருவரிடம் கொடுத்து ஏற்பாடு செய்துவிட்டேன்"... என்றார் அந்த நண்பர்.

என் உள்ளத்தில் இது ஒரு பெரிய கேள்வியையே எழுப்பிவிட்டது. 

'ஏழுமலையானைத் தரிசனம் செய்ய வந்திருக்கும் புனிதமான இடத்தில் இப்படி ஒரு முறையற்ற செயலா?' என்ற கேள்வியும் 'தெய்வத்தைத் தரிசிக்க லஞ்சமா?' என்ற வேதனையும் என் நெஞ்சத்தைப் போர்க்களமாக்கிவிட்டன. இதுபோன்ற வழிகளில் தான் தெய்வத்தைத் தரிசிக்க வேண்டுமா?

எனக்கு அது பிடிக்கவில்லை. என் மனம் அதற்கு இடம் தரமறுத்துவிட்டது. அன்று தான் நான் கடைசியாகக் கோயிலுக்குப் போனது. அதன்பிறகு நான் கோயிலுக்குச் சென்றது கிடையாது. அதனால் தெய்வம் என்று ஒன்று இருக்கிறது என்பதை நான் மறுப்பவனாக எண்ணிவிடக்கூடாது."- 1968-ல் நாடகம் ஒன்றுக்கு தலைமை வகித்துப் பேசிய அவர் தன் கடவுள் நம்பிக்கை பற்றி இப்படி குறிப்பிட்டார்.

mgr_sathyabama_17401.jpg

கடவுள் மறுப்புக்கொள்கையில் தீவிரமாக இருந்த பெரியாரின் மீதும், அவரின் தளபதியாக விளங்கிய அண்ணாவின் மீதும் பி்ன்னாளில் எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு உருவானபோதும் கூட  எம்.ஜி.ஆர் தன் ஆத்திக கொள்கையை விட்டுவிடவில்லை. அண்ணா உருவாக்கிய திமுகவில் அவர் இணைந்தார். பெரியார் அளவுக்கு நாத்திக கொள்கையில் அண்ணா உறுதியாக இல்லாதது  திமுகவில் எம்.ஜி.ஆர் சேர ஒரு முக்கிய காரணமானது எனலாம். ஆனால் எக்காலத்திலும் அவர் கடவுளை மறுத்ததில்லை. ஆனால் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்கள் கொண்ட படங்களை பலமுறை தவிர்த்திருக்கிறார். சிவாஜி நடித்த காத்தவராயன் உள்ளிட்ட பல படங்கள் இதற்கு உதாரணம். 

எம் ஜி ஆர்பாய்ஸ் கம்பெனிக்கு திரும்ப வருவோமே...கதர்பக்தி நாடகம் திரும்ப நடத்தப்பட்டபோது எம்.ஜி.ஆர் உள்ளத்தில் காந்தியக்கொள்கைகள் கனன்று கொண்டிருந்தது. 

காரணம் சுதந்திரத்திற்கான போராட்டங்கள் தமிழகத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த அந்நாளில் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்கள் துவங்கும் முன் “மகாத்மாக காந்திக்கு”....என மேடையில் இருந்து குரல் வரும். பார்வையாளர்கள் ஜே என்பார்கள். நாடகத்தின் கதையும் குடிப்பழக்கத்தின் தீமையை சொல்வது.

'சுதந்திரத்துக்காக இந்த தள்ளாத வயதில் காந்தி போராட்டங்களை நடத்தும்போது இளம்வயதில் நாம் பொறுப்பற்று இருக்கிறோமே' என்ற எண்ணம் அவரது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒருகடடத்தில் நாமும் எதையாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, ராம்சந்தர் காங்கிரஸில் காலணா உறுப்பினராக சேர்ந்தார்.

சேர்ந்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அதையும் மீறி எதையாவது செய்யும் எண்ணம் அவருக்குள் தீவிரமானது... அது, இறுதியில் அவரை சிறைக்குக் கொண்டு போய் நிறுத்தியது...என்ன நடந்தது?

http://www.vikatan.com/news/coverstory/79554-mgr-turned-to-freedom-fightera-life-history-of-mgr-episode--6.art

Link to comment
Share on other sites

கண்ணில் பட்ட 'அது'... கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்! - நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர்- அத்தியாயம் 7

எம் ஜி ஆர்

நடிகர்கள் பொதுவாக உணர்ச்சியவயப்படுபவர்கள். நாடகத்தின் பெயர் கதர் பக்தி; கதாநாயகன் காந்தியின் கொள்கைகளை கொண்டாடுபவன். மதுவிலக்கை வலியுறுத்தி பக்கம் பக்கமாய் வசனங்கள்... கதாநாயகன் ராம்சந்தரின் மனசுக்குள் காந்தி வந்து அமர இது போதாதா?! காங்கிரஸின் காலணா உறுப்பினராகும் அளவு அவரது காந்தியப்பற்று வளர்ந்தது. காந்தியையும் நேரிலும் தரிசித்திருந்ததால் அது இன்னும் உச்சத்திற்கு போனது.

அப்போதெல்லாம் கள்ளுக்கடை மறியல் போராட்டங்கள் தீவிரமாக காங்கிரஸ் மற்றும் பல அமைப்புகளால் நடத்தப்பட்டு வந்தன. மறியல் நடப்பதும் அதை போலீஸார் தடியடி நடத்தி கலைப்பதும் வாடிக்கையாக இருந்த காலம். மறியல் போராட்டங்களில் சாரிசாரியாக இளைஞர்கள் சிறையில் அடைபட்டு வந்தனர். யானைக்கவுனியில் ராம்சந்தர் வீடருகே, இயங்கிவந்த கள்ளுக்கடை முன் காங்கிரஸ் தொண்டர்கள் அன்று மறியல் செய்ய இருப்பதாக சொல்லப்பட்டது. “என்னண்ணே உங்க தம்பி கூட மறியல்ல கலந்துக்க போறாமே!  தேசபக்தி முத்திடுச்சா” - போகிற போக்கில் ஒரு நடிகர், சக்கரபாணியிடம் சொல்லிவிட்டுப் போனார். 

எம் ஜி ஆர்ராம்சந்தராவது போராட்டத்தில் கலந்துகொள்வதாவது என மனதிற்குள் சிரித்துக்கொண்டு வேறு வேலையில் ஈடுபட்டார் சக்கரபாணி. தகவலை அவர் உறுதிபடுத்தாதற்கு காரணம் சத்தியபாமா. வறுமையினால் ஊர் விட்டு ஊர் வந்து படிப்பையும் துறந்து  நாடகத்தில் நடிக்கும் தம் பிள்ளைகள் சுதந்திரப்போராட்ட உணர்வுகளுக்கு ஆட்படுவதை அவர் ஆரம்பத்திலிருந்தே விரும்பவில்லை. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த ஒரு தாயின் கவலை அது. தனது கவலையை தொடர்ந்து பிள்ளைகளிடம் அவர் வலியுறுத்திவந்திருக்கிறார். இதனால் அம்மாவின் பேச்சுக்கு மாறாக ராம்சந்தர் அப்படிப்பட்ட விஷயங்களில் ஈடுபடமாட்டான் என்பதில் சக்கரபாணிக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது.

நாடக கொட்டகைக்கு கிளம்பிவந்தவர் ஒத்திகையில் மூழ்கினார். ஆனால் கொஞ்சநேரத்தில் மனதில் ஏதோ நெருடியது. வீட்டிலிருந்து தனக்கு முன்பு கிளம்பிய தம்பி எங்கே? ....மனது தேடத்துவங்கியது. கொட்டகையில் விசாரித்ததில் எல்லோரிடமும் ஒரே பதில் “ராம்சந்தரா... காலையிலிருந்தே அவனைப் பார்க்கலையே...” பகீர் என்றது சக்கரபாணிக்கு. 'நமக்கு வந்த தகவல் உண்மைதானா...' பதறியபடி மறியல் நடந்த கள்ளுக்கடைக்கு விறுவிறுவென சென்றார். 

சந்தேகம் உறுதியானது. மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை தடியடி நடத்தி போலீஸார் ஜீப்பில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அவர்களின் மத்தியில் குல்லா போடாத ஒரு இளைஞனும் வண்டியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தான். அது ராம்சந்தரேதான்.

வண்டி புறப்பட்டது. அதை பின்தொடர முடியவில்லை. கடைசியில் ராம்சந்தரை  பூக்கடை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றதாக தெரிந்து அங்கு சென்றார் சக்கரபாணி. காவல்நிலையத்தில் சிரித்தபடி நின்றிருந்தார் ராம்சந்தர். “ஏண்டா உனக்கு இந்த வேலை...அம்மா சொன்னதைப்பற்றி கொஞ்சமும் கேட்கலை இல்லையா? ...சரி வா பெயில் எடுக்கிறேன்” என கடுங்கோபத்துடன் அவரை திட்டினார். “தேவையில்லை ஏட்டா... அவ்வளவு பெரிய பெரிய தலைவர்களாலேயே இன்னும் சுதந்திரம் வாங்க முடியலை...நீ போராடி என்னத்தை வாங்கப்போறே” என இன்ஸ்பெக்டர் கேஸ் எழுதாமல் தன்னை வெளியே அனுப்பிவிட்டதை ராம்சந்தர் சொல்ல... அத்தனை மணிநேர பதற்றத்தை மீறி சிரிக்கத்துவங்கினார் சக்கரபாணி. 

எம்.ஜி. சக்கரபாணிராம்சந்தரின் மதுவிலக்குப் போராட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததா என்றால் இல்லை!..மதுவிலக்குக்காக தெருவில் இறங்கி ஒரு பக்கம் ராம்சந்தர் கொடிபிடித்துக்கொண்டிருக்க, அவருக்கு அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று அவரது வீட்டிலேயே பல மாதங்களுக்குப்பின் நடந்தது.  ... அப்போது சக்கரபாணிக்கு திருமணமாகிவிட்டிருந்தது. ஒருநாள் செலவிற்கு பணம் இல்லாமல் வீட்டில் துழாவிக்கொண்டிருந்தார் ராம்சந்தர். வழக்கம்போல அம்மாவின் பீரோவிலும் தேடியபோது துணி அடுக்கவைக்கப்பட்ட அடுக்கில் துணிகளுக்கு மத்தியில் ஏதோவொன்று அவர் கைக்கு தட்டுப்பட்டது.

வழக்கத்துக்கு மாறான பொருளாக தென்படவே,  ஆவலுடன் அதை உள்ளேயிருந்து எடுத்த ராம்சந்தர் அதிர்ச்சியின் விளிம்புக்கே சென்றுவிட்டார்... அது பாதி குடிக்கப்பட்டு மீதம் இருந்த ஒரு மது பாட்டில். மதுவிலக்கை வலியுறுத்தி நாடகங்களும், தெருவில் இறங்கி போராட்டங்களும் நடத்திவர, சொந்த வீட்டிலேயே மது பாட்டில் இருந்தது கோபத்தை உண்டுபண்ணியது. மூக்கை பரபரபரவென தேய்த்துவிட்டுக்கொண்டு வீட்டின் நடுஹாலுக்கு வந்தார். 

அங்கே தாயும் அண்ணியாரும்  பிறந்த குழந்தையான மணியை கொஞ்சிக்கொண்டிருந்தனர்.

“ யாரு இங்க மது குடிச்சது...”உச்சஸ்தாயியில் கத்தினார் எம்.ஜி.ஆர். ஒருவரிடமும் பதிலில்லை. என்னடா இது இப்படி அசிங்கமா சத்தம் போடறே... அக்கம்பத்தினர் கேட்டா என்ன நினைப்பாங்க... போய் வேலையைப் பாரு....” - சத்தியபாமாவின் பேச்சு இன்னும் கொதிப்பை ஏற்படுத்த, “ஓஹோ குடிக்கிறது தப்பு இல்லை. அது மத்தவங்களுக்கு தெரியறதுதான் உங்களுக்கு பிரச்னையா” - பதிலுக்கு எகிறினார் ராம்சந்தர்.

“இது உன் அண்ணன் வாடகை தர்ற வீடு... உனக்கு பெரியவனே சும்மா கிடக்கான். நீ என்னமோ எகிறுறியே.. இஸ்டமிருந்தால் இரு இல்லேன்னா வெளியே போ...”சத்தியபாமா மகனுக்கு சளைக்காமல் குரலை உயர்த்திப் பேசினார். தாயின் பேச்சில் கொதிப்படைந்த ராம்சந்தர், கையிலிருந்த பாட்டிலை தரையில் ஓங்கி அடித்துவிட்டு சட்டையை மாற்றிக்கொண்டு ஒரு முடிவோடு  விறுவிறுவென

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்... அவரது கால்கள் கடற்கரையை நோக்கி நடந்தன...

http://www.vikatan.com/news/coverstory/79907-this-is-why-mgr-got-anger---life-history-of-mgr-7.art

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் இவரிடம் தான் நடிப்பு கற்றார்!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 9

எம் ஜி ஆர்

எம்.கந்தசாமி முதலியார்... உட்பட எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில் பல்வேறு நபர்கள் வெவ்வேறு காலகட்டங்களில் ஆளுமை செலுத்தியிருக்கிறார்கள். அவர்களில் எம்.கந்தசாமி முதலியார் முக்கியமானவர். வறுமையினால் பள்ளிப்படிப்பைத் துறந்து எம்.ஜி.ஆரும் அவர் சகோதரரும் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்தபோது கம்பெனியின் நாடகங்களை எழுதி இயக்கிக்கொண்டிருந்தவர்தான் எம்.கந்தசாமி முதலியார். சத்தியபாமா தன் இரு மகன்களை ஒப்படைத்தது இவரிடம்தான். அப்போது சத்தியபாமாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு, “உங்க பிள்ளைங்க குறித்து இனி கவலைப்படாதீங்கம்மா... இனி அவங்களுடன் சேர்த்து எனக்கு 3 பிள்ளைங்க. எதிர்காலத்தில் அவுங்க நல்ல நிலைக்கு வர நான் பொறுப்பு” என ஆறுதல் சொன்னவர் எம்.கந்தசாமி முதலியார்.

அந்தக் காலத்திலேயே பி.ஏ பட்டதாரியான எம்.கந்தசாமி முதலியார், புராண நாடகங்கள் மட்டுமே போடப்பட்டுவந்த காலத்தில் சமூக நாடகங்களைத் துணிச்சலுடன் அரங்கேற்றியவர். நாடகத்தில் பகல் காட்சி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். படிக்கும் காலத்திலேயே கல்லூரி முதல்வர் முல்லர் என்பவரால் நாடகத்தின் மீது ஈடுபாடு கொண்டு பின்னாளில் அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இவருடைய புதல்வர்தான் ஜெமினி நிறுவனத்தில் ’சந்திரலேகா’, ’அபூர்வ சகோதரர்கள்’ படங்களில் நடித்துப் புகழ்பெற்ற எம்.கே ராதா.

எம் ஜி ஆர்தந்தையில்லாத எம்.ஜி.ஆர் சகோதரர்களை, சத்தியபாமாவுக்கு வாக்கு கொடுத்தபடியே தம் பிள்ளைகளில் ஒருவராகப் பாவித்தார் எம்.கே. நாடகம் மட்டுமின்றி அச்சு, விளம்பரம் போன்ற துறைகளிலும் ஞானம் பெற்றவர் எம்.கே. 

நாடகக் குழுவில், தாய் தந்தையைப் பிரிந்து வந்திருக்கும் சிறுவர்களுக்குத் தந்தையைப்போல் இருந்து பாதுகாத்தவர் அவர். அவரது பிள்ளையான எம்.கே.ராதாவுக்கும் தந்தையில்லாமல், தாயைப் பிரிந்துவந்தவர்கள் என்பதால் எம்.ஜி.ஆர் சகோதரர்கள் மீது ஓர் இனம்புரியாத ஒரு பாசம் இருந்தது.  

தந்தையுடன் எங்கு சென்றாலும் சகோதரர்களுக்கும் சேர்த்து தின்பண்டங்களை வாங்கி மறைத்துவைத்துக்கொண்டு கொட்டகைக்கு வந்தபின், சகோதரர்களுக்குத் தருவார் அவர். இது மற்ற பிள்ளைகளுக்கு வருத்தத்தைத் தந்தது. வாத்தியார் மகன் நம்மைவிட ராம்சந்தருக்கும் சக்கரபாணிக்கும் தனிக் கவனிப்பு தருகிறாரே என்ற தங்கள் ஆதங்கத்தை ஒருமுறை வாத்தியாரிடமே தெரிவித்தனர்.

மகனை அழைத்த எம்.கே., ’’நண்பர்களிடம் பேதம் காட்டக் கூடாது. உனக்கு ராம்சந்தர் சகோதரர்கள் மீது அதிக பாசம் இருப்பது தவறில்லை. ஆனால், அதை நீ இப்படி வெளிப்படையாக காட்டக் கூடாது. ஒருவர் மீது அதிகம் பிரியம் காட்டினால், அது மற்றவர்களை ஒதுக்குவதுபோல் ஆகிவிடும். இனி அப்படிச் செய்யாதே” என அறிவுரை கூறினார். இப்படி நாடகக் குழுவில் அனைவரையும் அரவணைத்துச் சென்றவர் எம்.கே. 

நாடகக் குழுவில் சிறுவர்கள் யார் தவறு செய்தாலும் தன் பிள்ளை எம்.கே.ராதாவைத்தான் அடிப்பார், எம்.கே. அப்படிக் கண்டிப்பதைப் பார்த்து அடுத்தமுறை அந்தத் தவற்றைச் செய்யமாட்டார்கள் என்பது அவரின் கணக்கு. “யாரோ செய்கிற தவறுக்கு என்னை ஏன் கண்டிக்கிறீர்கள்” என ஆற்றாமையாக ஒருநாள் கேட்டார் எம்.கே.ராதா. அதற்கு, “தாய் தந்தையரைப் பிரிந்து பல மைல் துாரங்களில் இருந்துவந்து எப்போது வீடு திரும்புவோம் எனத் தெரியாமல் நம்முடன் தங்கியிருக்கிறார்கள். தவறுக்காக அவர்களைக் கண்டித்தால் அவர்கள் யாரிடம் ஆறுதல் தேடிப்போவார்கள். நானும் அம்மாவும் உன்னுடன் இருப்பதால், உனக்கு அது பெரிய வருத்தத்தைத் தராது. அதனால், நீ பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.” - தந்தையின் மனிதநேயத்தைப் புரிந்துகொண்டு அமைதியானார் எம்.கே.ராதா.

எம் ஜி ஆர்

ராம்சந்தர் சகோதரர்கள் பாய்ஸ் கம்பெனியில் இணைந்தபோது... ஆரம்பத்தில் போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் அவர்களுக்குள் இருந்தது. சமூக நாடகங்களில் முதன்முதலாகப் பிரதான வேடங்களை அவர்களுக்கு அளித்து உற்சாகப்படுத்தியதும் கந்தசாமி முதலியார்தான். கம்பெனி  உரிமையாளரிடம் கோபித்துக்கொண்டு எம்.கே. மற்றும் அவரது மகன் எம்.கே.ராதா வேறு குழுவில் இடம்பெற்று வெளிநாடுகளில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ராம்சந்தர் சகோதரர்களையும், தங்களுடன் இணைத்துக்கொள்ள பல முறை முயன்றனர். ஆரம்பத்தில் சகோதரர்கள் மறுத்தனர். ஆனால், பின்னாளில் சகோதரர்களுக்குக் குழுவைவிட்டுப் பிரியும் மனநிலைக்கு வந்தபோது அவர்களுக்குக் கைகொடுத்தவர் எம்.கே-தான். அவர்களுடனான முதல் பயணமே பர்மா.

கந்தசாமி முதலியாரைத் தவிர, வேறு யாராக இருந்தாலும் கடல்கடந்த அந்தப் பயணத்துக்கு அனுமதித்திருக்கமாட்டார் சத்தியபாமா. அத்தனை நம்பிக்கை கொண்டிருந்தார் கந்தசாமி முதலியார் மீது.

எம். கந்தசாமி முதலியார்தந்தைக்கு நிகராக அவரது தனயனும் சகோதரர்கள் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார். பின்னாளில் புகழ்பெற்ற நடிகரான எம்.ஜி.ஆர்., ’’தனக்கு எம்.கே.ராதாவுடன் சேர்த்து இரண்டு அண்ணன்கள்’’ என்று வாஞ்சையுடன் புகழ்ந்தார். முன்னரே குறிப்பிட்டபடி எம்.ஜி.ஆரால் பொதுமேடையில் காலில் விழுந்து வணங்கப்பட்டவர்களில் ஒருவர் எம்.கே.ராதா. இன்னொருவர் சாந்தாராம். அத்தனை மரியாதைக்குரிய இடத்தில் எம்.கே.ராதாவை வைத்திருந்தார்.

பின்னாளில், எம்.ஜி.ஆர் முதல்வரான சமயம்... முதன்முதலில் அவர் வீடு தேடிச்சென்று வாழ்த்து பெற்றது எம்.கே.ராதாவிடம்தான். சுமார் ஒரு மணிநேரம் அவரது வீட்டில் இருந்து பூஜையறையில் இருந்த கந்தசாமி முதலியார் படத்தின் முன் 10 நிமிடங்கள் நின்று வணங்கிவிட்டுத் திரும்பினார்.

“நாடகத்துல நடிக்கும் காலத்திலேயே தம்பி, தான் நடித்து முடித்துவிட்டாலும் அங்கிருந்து போய்விடாமல் மற்றவர்களின் நடிப்பை அரங்கின் ஓரமாக நின்று ரசிக்கும். அபாரமான பாடம் செய்யும் சக்தியும், கேள்விஞானமும் அதிகம் அவருக்கு. உடன் நடிப்பவர்களுக்கு உதவுவதில் முன்நிற்பார். மனிதநேயம், விடாமுயற்சி, அயராத உழைப்பு, தன்னம்பிக்கை இவைதான் அவரை இந்த உயரத்துக்குக் கொண்டுவந்தன” 70-களின் மத்தியில், தம்பி  எம்.ஜி.ஆரை சிலாகித்துச் சொன்னவர் எம்.கே.ராதா.

எம்.கந்தசாமி முதலியார் எம்.ஜி.ஆருக்கு நாடகக் குரு மட்டுமல்ல; அவரது திரையுலகப் பிரவேசத்துக்கும் அவர்தான் வித்திட்டார்.

எம்.ஜி.ஆரின் முதல்படமான 'சதிலீலாவதி' யில் நடிக்கும் வாய்ப்பு பெற்றுத்தந்தவர் அவரே... ராம்சந்தருக்கு முதல்பட வாய்ப்பு எப்படிக் கிடைத்ததுத் தெரியுமா...?

http://www.vikatan.com/news/coverstory/80256-he-is-the-guru-of-mgr----life-history-of-mgr--episode-9.art

Link to comment
Share on other sites

முதலாளியால் சிறைவைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்..! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -10

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆரின் முதற்படம் 1936 ம்ஆண்டு வெளியானது. இந்தியத் திரைப்படங்கள் மௌனம் கலைந்து பேச ஆரம்பித்த காலத்தில் நாடக நடிகர்கள் மெல்ல திரைப்பட ஆசையில் திளைக்க ஆரம்பித்தனர். பார்வையாளர்களின் கைதட்டலையும் கூச்சலையும் நேரில் கண்டு அனுபவித்தவர்கள், சினிமா மாயைக்குள் சிக்குண்டனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெறுவது அவர்களின் கனவாக ஆனது. ராம்சந்தர் சகோதரர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. என்றாலும் அவர்கள் திரைத்துறையில் எளிதாக வாய்ப்பு பெறும் அளவு நாடகத்துறையில் புகழ்பெற்றவர்களாக அப்போது இல்லை. இளமையும் நடிப்புத்திறமையும் அவர்களிடம் மூலதனமாக இருந்தபோதும் சினிமா வாய்ப்பு பெறும் அளவுக்கு பரவலான நட்புவட்டத்தை பெற்றிருக்கவில்லை அவர்கள். வெளியுலகத்தைப்பற்றியோ, மனிதர்களின் சுபாவம் பற்றியோ பெரிய அளவில் அறிந்துகொள்ளாத பக்குவம்தான் அவர்களுக்கு இருந்தது. உலக அனுபவமும் அவ்வளவாக பெற்றிருக்கவில்லை. 'நாடகத்தில் நடிக்கிறோம், பணம் கிடைக்கிறது, குறைந்தபட்ச வசதியான வாழ்க்கை' இப்படித்தான் கழிந்தன ராம்சந்தரின் நாடக வாழ்க்கை. 

திரைப்பட ஆசையில் நாடக கம்பெனியில் இருந்து ஒவ்வொருவராக கழன்று சென்றுகொண்டிருந்தனர். ஆசான் எம்.கந்தசாமி முதலியார், அவரது மகன் எம்.கே.ராதா, கே.பி கேசவன், பி.யு சின்னப்பா, கே.ஆர். ராமசாமி...என அந்நாளில் புகழ்பெற்ற நாடகக்கலைஞர்கள் மற்றும் இன்னும் பலர் அப்படி விலகியிருந்தனர். சினிமா ஆசை சகோதரர்கள் மனதில் மெல்லத் துளிர்விட ஆரம்பித்தது. அரைகுறை மனதுடன் நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வந்தது சகோதரர்களுக்கு. ஆம் நாடக கம்பெனியின் முதலாளி சொந்தமாக திரைப்படம் எடுக்கப்போகிறார் என்ற தகவல்.

எம் ஜி ஆர்

சகோதரர்களுக்கு மகிழ்ச்சி. ஆஹா, நாமும் திரைப்பட நடிகர்களாகப்போகிறோம். கும்பிடப்போன காமிரா குறுக்கே வந்ததுபோல், துள்ளிக்குதித்தனர் இருவரும். 

அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி 'பதிபக்தி' என்ற நாடகத்தை நடத்திவந்தது. தமிழகத்தில் அந்த நாடகம் நடக்காத ஊர் இல்லை என்ற அளவுக்கு பெரும் வரவேற்பை பெற்றது அந்த நாடகம். அதன் விளைவாக அதை படமாகத் தயாரிக்க திட்டமிட்டது நாடக கம்பெனி. அதேசமயம் நாடகக்குழுவை கலைத்துவிடவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. அது, சகோதரர்கள் மனதில் பயத்தை உண்டுபண்ணியது. காரணம் அக்காலத்தில் சினிமா தயாரிப்பு என்பது புனே, மும்பை என சில குறிப்பிட்ட  இடங்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டன. சென்னையில் அந்நாட்களில் வசதியான ஸ்டுடியோக்கள் அரிதாகவே இருந்தன. இதனால் ஒரு படத்தை தயாரித்து முடிக்க பல மாதங்கள் ஆகின. 'நாடகம் தினமும் நடக்கிறது. தினமும் நிச்சயமான வருமானம். ஆனால் சினிமாவில் ஒரு படத்திற்கான குறைவான சம்பளத்தில் வருடம் முழுக்க உழைப்பையும் நேரத்தையும் செலவிடவேண்டியதிருக்கும். அப்படியானால் நாடகத்தை முற்றாக துறக்கவேண்டும். இதுதான் கவலை தந்தது சகோதரர்களுக்கு. சினிமாவை நம்பி நிரந்தர வருமானத்தை இழக்கமுடியாது. எப்படியோ மனதை தேற்றிக்கொண்ட நேரத்தில் இடியென வந்தது அந்த தகவல்.

முதற்படம் என்பதால் ஏற்கெனவே சினிமாவில் பிரபலமானவர்களைக் கொண்டே தயாரிக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதேசமயம்  எம்.ஜி.ஆர்  சகோதரர்கள் தொடர்ந்து கம்பெனி நாடகங்களில் நடிக்கவேண்டும் என கம்பெனி முடிவெடுத்த தகவல் அது. .நொந்துபோனார்கள் சகோதரர்கள். 

எம் ஜி ஆர்இத்தனை வருடங்கள் கம்பெனிக்காக உழைத்த நமக்கு கம்பெனியின்  சொந்தப்படத்தில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்படும்போது தொடர்ந்து இங்கு நம் உழைப்பை வீணாக்கவேண்டுமா என்ற எண்ணம் ராம்சந்தர் மனதில் தோன்றியது. கம்பெனியை விட்டு விலகுவதென சகோதரர்கள் முடிவெடுத்தனர். ஆனால் அதிலும் ஒரு சிக்கல். முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை ரொம்ப கறார் பேர்வழி. விருப்பப்பட்ட நேரத்தில் விடுமுறையே அளிக்கமாட்டார். விலகுவதென்றால் விடுவாரா...அதுவும் கம்பெனியில் ஆட்கள் இல்லாத இந்த நேரத்தில். 

ஒருமுறை வேலுாரில் முகாம் போட்டிருந்த நேரம், ஊரெல்லாம் காலரா பரவியது. பலர் இறக்கவும் நேரிட்டது. உச்சகட்டமாக நாடகக்குழுவில் இருந்த ஒருவரும் காலரா பாதிப்பில் இறந்தார். ஊரை உடனே காலி செய்வது நல்லது என குழுவினர்  முடிவெடுத்தனர். ஆனால் முதலாளி சச்சிதானந்தம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. திட்டமிட்டபடி ஒப்பந்தம் முடிந்த பின்னரே செல்வது என உறுதியாக இருந்தார். இத்தனைக்கும் ராம்சந்தரே கூட காலராவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அத்தனை முரட்டு மனிதர் அவர். சகோதரர்களுக்கு இப்போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்து கிலி தந்தது. 

மன உளைச்சலுக்கு ஆறுதல் தேடி அவர்கள் சென்ற இடம் எம்.கந்தசாமி முதலியார் வீடு. தங்கள் பிரச்னைகள் முழுவதையும் அவரிடம் சொல்லி அழுதனர். இளமையும் அழகும் கொண்ட தங்கள் எதிர்காலம் நாடகத்திலேயே முடங்கிவிடக்கூடுமோ என்ற தங்கள் அச்சத்தை சொல்லி வேதனைப்பட்டனர். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட எம்.கே. மனதில் ஒரு திட்டத்துடன் சகோதரர்களிடம், கம்பெனியை விட்டு வந்துவிடுங்கள்...உங்களுக்கு நான் ஒரு வழி செய்கிறேன்”- எம்.கே வின் வார்த்தைகளில் ஆறுதலடைந்து வீடு திரும்பினர் சகோதரர்கள்.

என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு மறுநாள் முதலாளி முன்போய் நின்று தங்கள் முடிவை சொன்னார்கள். “ஏலே பயலுகளா...நல்லா நடிச்சி பேரு கிடைச்சி, நாலு காசும் பார்த்தபின்னாடி திமிரு வந்திடுச்சா...கம்பெனியில ஆளு குறைவா இருக்கு. உங்களை வெளிய அனுப்பமுடியாது. அப்படி தெரியாம ஓடிப்போக நினைச்சிங்கன்னா,  கம்பெனி சாமான்களை திருடிட்டுப் போயிட்டதா போலீஸ்ல புகார் தந்து புடிச்சி கொடுத்திடுவேன். ஜாக்கிரதை”- முதலாளியின் பேச்சால் அதிர்ந்தனர் சகோதரர்கள். 

சினிமா வாய்ப்பும் மறுக்கப்பட்டதோடு, விரும்பியபடி வெளியேறவும் செல்லமுடியாமல் கிட்டதட்ட சிறைக்காவல் போல தாங்கள் வைக்கப்பட்டதை நினைத்து இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சகோதரர்கள் சத்தியபாமாவிடம் அதைச் சொல்லி வேதனைப்பட்டனர். “அட, இதற்காகவா விசனப்பட்டு உட்கார்ந்திருக்கிறீர்கள். என் பிள்ளைகளை மிரட்டறானா அந்த முதலாளி.. போய் ஒரு வெள்ளைத்தாளை கொண்டுவாங்கடா, சீக்கிரம்...” அம்மா ஏன் வெள்ளைத்தாளை கொண்டுவரச் சொல்கிறார்" என்ற குழப்பத்துடன் தாயாரைப் பாரத்தார்கள் சகோதரர்கள்...அம்மா சொன்ன அதிரடி யோசனையை கேட்டு அதிர்ந்து நின்றனர் இருவரும். 

http://www.vikatan.com/news/coverstory/80618-mgr-held-by-drama-troop-director-life-history-of-mgr---episode-10.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆருக்கு தியேட்டரில் கிடைத்த தெளிவு! -நுாற்றாண்டு நாயகர் எம்.ஜி.ஆர் - அத்தியாயம்- 11

எம் ஜி ஆர்

நாடக முதலாளியால் தன் பிள்ளைகள் மிரட்டப்பட்டதைக் கேள்விப்பட்டு பொங்கி எழுந்தார் சத்தியபாமா. “அவரு என்னடா புகார் தர்றது...நாம தருவோம் அவர் மேல...”-  எம் ஜி ஆர் பேப்பர் கொண்டுவர, விடுவிடுவென சொல்லச் சொல்ல சக்கரபாணி எழுத ஆரம்பித்தார். 

“மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துவரும் எங்களுக்கு கம்பெனி எடுக்கும் சொந்தப் பணத்தில் வாய்ப்பு தராததோடு தொடர்ந்து தங்கள் நாடகத்தில் நடிக்கவேண்டும் எனவும், மறுத்தால் கம்பெனி சாமான்களை திருடிச்சென்றுவிட்டதாக எங்கள் மீது முதலாளி பழிபோட்டு சிறைக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டுகிறார். எங்களை இந்த இக்கட்டிலிருந்து காக்கவேண்டும்.”  இதுதான் கடிதத்தின் சாராம்சம். 

தாயின் சொல்படி, கடிதத்தை உள்ளுர் காவல்நிலையத்திற்கு பதிவுத்தபாலில் அனுப்பிவைத்தனர் சகோதரர்கள். “இப்போ போய் சினிமாவாய்ப்பை தேடுங்கடா...உங்க முதலாளி என்ன பண்ணிடுவார்னு பார்ப்போம்” - தாயின் சாதுர்யமான முடிவை எண்ணி வியந்த சகோதரர்கள், மனநிம்மதியுடன் வாய்ப்பு தேடும் முடிவுக்கு வந்தனர்.  

எம் ஜி ஆர்அப்போது அவர்களுக்கு நினைவுக்கு வந்தவர், நாடக உலகில் மேடைப் புலி என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட கே.பி கேசவன். அவரது நாடகத்திற்கு நிச்சயமான வசூல் என்பது அந்நாளில் உறுதி. பாய்ஸ் கம்பெனியில் இருந்தபோது சகோதரர்களுடன் நெருங்கிப்பழகியவர். அழகும், கணீர்க்குரலில் அவர் பேசும் வசனமும் அப்போது நாடகமேடையில் அவரை பிரபலப்படுத்தியிருந்தது.  நாடகத்துறையில் இருந்து விலகி சினிமாப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், ராஜ்மோகன் என்ற படத்தில் கதாநாயகனாக அப்போது நடித்துக்கொண்டிருந்தார். கம்பெனியில் இருக்கும்போது அத்தனை பேரும் புகழும் பெற்றிருந்த அவர், “ராம்சந்தரா உன் அழகுக்கும் கலருக்கும் நீ ஒருநாள் இந்த சினிமாவை ஆளப்போறேடா”- என எம்.ஜி.ஆரை பார்க்கும்போதெல்லாம் சொல்வார். அப்போதெல்லாம் வெட்கப்பட்டு சிரிப்பார் எம்.ஜி.ஆர். காரணம் சினிமாவில் நடிப்பது குதிரைக்கொம்பான காலம் அல்லவா.

ஆனால் பின்னாளில் அதுதானே நடந்தது. பின்னாளில் பெரும் போராட்டங்களுக்கிடையில் சினிமா உலகில் தனக்காக ராஜ்ஜியத்தை உருவாக்கிக்கொண்ட எம்.ஜி.ஆர், அங்கு தொடர்ந்து நிலைத்து நிற்கவும் கே.பி கேசவனே காரணமானார். 

சினிமா உலகில் புகழின் உச்சியை தொட்டபோதும், தன்னைச்சுற்றி ஒளிவட்டம் இருப்பதாக எம்.ஜி.ஆர்  கற்பனை செய்துகொள்ளவில்லை. வெற்றிகளின்போது வெறி கொண்டு ஆடாமலும், தோல்விகளின்போது துவண்டுவிடாமல் போராடவும் இருக்க அவருக்கு பாடமாக இருந்தவர் கே.பி கேசவன்தான். 

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் நடந்தது. சென்னை 'நியூ எல்பின்ஸ்டன்' தியேட்டரில் அப்போது 'இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. அதில் கதாநாயகனாக நடித்தவர் அன்றைய பிரபல நடிகர். நாடக மேடையிலும் சினிமாவிலும் நடித்து பெரும் புகழ்ப் பெற்றிருந்த அவருடன் எம்.ஜி.ஆரும் வேறு சிலரும் படத்தைப் பார்க்க சென்றிருந்தனர். 

இடைவேளையின்போது, படத்தின் கதாநாயகனே படம் பார்க்க வந்த தகவல் ரசிகர்களுக்கு எட்டியது. ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி வாழ்த்துக் கோஷமிட ஆரம்பித்தார்கள். அந்தப் படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த எம்.ஜி.ஆர், இதைத் திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருந்தார். கதாநாயகனை தங்கள் அன்பில் திளைக்கவைத்தனர் ரசிகர்கள். இத்தனை ஆதரவும், செல்வாக்கும் பெற்ற ஒரு நடிகனின் அருகில் தான் அமர்ந்திருந்தது பெருமையாக இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

படம் முடிந்த பின் புறப்பட்டால் ரசிகர்கள் அன்பிலிருந்து விடுபடமுடியாது என்பதால் கதாநாயக நடிகர் அதற்கு முன்பே புறப்பட்டார். ஆனால் அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். கதாநாயக நடிகர் மேலே இருந்து படி இறங்கி கீழே வருவதற்க்குள்  ரசிகர்கள் அவரை சூழந்துக் கொண்டு ஆட்டோகிராப் கேட்டு அன்புத்தொல்லை கொடுத்தனர். அவர்களிடம் இருந்து அவரை பெரும் சிரமத்துடன் காப்பாற்றி அன்று பாதுகாப்பாக காருக்கு அழைத்துச் சென்று அனுப்பி வைத்தது எம்.ஜி.ஆர்தான்.  

அன்று மக்களுக்கு எம். ஜி.ஆர் என்ற துணைநடிகரைத் தெரியாது. ரசிகர்களிடம் அவர் சண்டையிட்டு கதாநாயக நடிகரை மீட்டபோது கூட அவரும் அந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ஒருவர் என்பதை அவர்கள் அறியவில்லை. அன்றைக்கு எம்.ஜி.ஆரின் பிரபல்யம் அவ்வளவுதான். 

எம் ஜி ஆர்

காலச் சக்கரம் சுழன்றது. அதற்குப் பல ஆண்டுகளுக்கு பின், எம்.ஜி.ஆர் நடித்த 'மர்மயோகி' திரைப்படம் வெளியானது. படத்தின் வெற்றியால் மூலைமுடுக்கெல்லாம் எம்.ஜி.ஆரின் வாள்வீச்சும், அநாயாசமான நடிப்பும், இளமையும், அழகும் மக்களால் சிலாகிக்கப்பட்டது. அப்போது சென்னை 'நியூ குளோப்' தியேட்டரில் அதே கதாநாயக நடிகருடன் ஓர் ஆங்கிலப் படம் பார்க்கச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். 

இடைவேளையின்போது 'மர்மயோகி' எம்.ஜி.ஆர் படத்திற்கு வந்திருந்த தகவல் அறிந்து ரசிகர்கள் எழுந்து கூச்சல் போட்டார்கள். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த முன்னாள் கதாநாயக நடிகரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவரைத் தள்ளிக்கொண்டுச் சென்று எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கினர் ரசிகர்கள். பலர் அந்த முன்னாள் கதாநாயக நடிகரிடமே தங்கள் நோட்டுப்புத்தகங்களை தந்து எம்.ஜி.ஆரிடம் ஆட்டோகிராப் வாங்கித்தரக்கோரினர். பொறுமையுடன் அதை செய்தார் அவர். அந்த அளவிற்கு அந்த முன்னாள் கதாநாயகன் மக்களின் மனங்களில் இருந்த மறக்கப்பட்டிருந்தார். 

படம் முடிந்து வெளியே வந்தபோது மக்கள் கூட்டம் எம்.ஜி.ஆரை சூழ்ந்தது. அந்த ரசிகர் கூட்டத்திடமிருந்து எம்.ஜி.ஆரைக் காப்பாற்றி ஒரு டாக்ஸியில் ஏற்றி அனுப்பினார் அந்த 'முன்னாள்'. எம்.ஜி.ஆர் ஏறி அமர்ந்த டாக்ஸி அங்கிருந்து சீறிக்கிளம்பியது. வண்டியின் பின் கண்ணாடி வழியாக எம்.ஜி.ஆர் திரும்பிப்பார்த்தார். திரண்டு நின்ற மக்கள் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அந்த முன்னாள் கதாநாயகனும் பரிதாபமாக நின்றுகொண்டிருந்தார். இத்தனைக்கும் அந்த நடிகருக்கு வயதாகிவிடவுமில்லை; நடிப்பு வன்மையும் குறைந்துவிடவில்லை. 

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆர் மனதில் இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அன்றுதான், எவ்வளவுதான் புகழ் கிடைத்தாலும் அதன் போதைக்கு அடிமையாகிவிடக்கூடாது என தீர்க்கமான முடிவுக்கு வந்தார். 

“எந்த மனிதனும் அவனுடைய வாழ்க்கையில் உச்ச நிலைக்குப் போய்விட்டதாக நினைப்பது, தோல்வியான ஒரு சூழ்நிலையில் தோன்றும் திகைப்பேயாகும். கலைஞர்களுக்கு உச்சநிலை, தாழ்ந்தநிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் ஒரு மயக்க நிலை. அவ்வளவுதான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது. சூழ்நிலை அவனை உயர்த்தும்; தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு! - என 1968 ம்ஆண்டு ஏப்ரலில்  சினிமா இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  மேற்சொன்ன சம்பவங்களைக் கூறி பேட்டியளித்தார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆருக்கு படிப்பினையை ஏற்படுத்திய அந்த கதாநாயக நடிகர் வேறு யாருமல்ல; சினிமா வாய்ப்புக்காக முதன்முதலாக எம்.ஜி.ஆர் நாடிச் சென்ற அதே கே.பி.கேசவன்தான்! 

வாய்ப்பு பெற்றுத்தந்தாரா கே.பி கேசவன்?...

http://www.vikatan.com/news/coverstory/81039-mgr-got-enlighted-in-theatre---life-history-of-mgr--episode-11.html

Link to comment
Share on other sites

எஸ்.எஸ். வாசன் கதையில் திரைப்பட வாழ்வைத் துவக்கிய எம்.ஜி.ஆர்! - நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் - 12

எம் ஜி ஆர்

சினிமா வாய்ப்புக்காக கே.பி.கேசவனை எம்.ஜி.ஆர் சகோதரர்கள் அவரது வீட்டில் சந்தித்தபோது, அப்போது தான் நடித்துவரும் நேஷனல் ஸ்டுடியோ தயாரிப்பான ராஜ்மோகன் என்ற படத்தில் வாய்ப்பு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார் அவர். ஆனால் அதற்கு பல மாதங்கள் கடந்தன. சகோதரர்கள் சோர்ந்த ஒரு சமயம், கம்பெனியில் தன்னைவிட காளி.என் ரத்தினத்துக்கு நல்ல வாய்ஸ் இருப்பதால் அவரை சென்று சந்திக்கும்படி சொன்னார் அவர். சகோதரர்களுக்கு உதறல் கண்டுவிட்டது. நாடக கம்பெனியில் ஏற்கனவே அவருக்கும் சகோதரர்களுக்கும் ஏழாம் பொருத்தம். இதில் எங்கே நமக்கு உதவப்போகிறார் என நம்பிக்கை இழந்தனர்.

தன் தாயாரிடம் இதை சொல்லி வருத்தப்பட்டனர். “டேய் பெரிய மனுஷங்க எப்போதும் கோபத்தை மனசில வெச்சிக்க மாட்டாங்கடா...குழம்பாம கேசவன் சொன்னமாதிரி ரத்தினத்தை போய்ப் பாருங்க...” தாயார் தந்த தைரியத்தில் சகோதரர்கள், காளி.என் ரத்தினத்தை சந்திக்க முடிவெடுத்தனர். தாயாரின் வாக்கு பலித்தது. ரத்தினம் அன்பொழுகப் பேசினார். படத்தின் இயக்குனரிடம் சகோதரர்களை அறிமுகப்படுத்தி வாய்ப்பு தரும்படிகேட்டார். 

எம்.ஜி.ஆரை பல கோணங்களில் பரிசோதித்துவிட்டு நடித்துக்காட்டச் சொன்னார் இயக்குனர். மனோகரன் நாடகத்தின் பாடங்களை பேசி பல பாவத்துடன் நடித்துக்காட்டினார் எம்.ஜி.ஆர். கிட்டதட்ட ஒருமணிநேரத்திற்கு மேலாக இதுதொடர்ந்தது. எப்படியும் வாய்ப்பு கிடைத்துவிடும் என நம்பிக்கை பிறந்தது எம்.ஜி.ஆருக்கு.

எம். கந்தசாமி முதலியார்

ஆனால் நடந்தது வேறு. “தம்பி நல்லா நடிக்கிறே...அழகா இருக்க...ஆனால் உன் தாடையில் ஒரு சின்ன பள்ளம் இருக்கே. அது காமிராவில் எடுப்பா தெரியும்...போய் வாங்க பார்ப்போம்” - இதயத்தில் எரிமலைக் குழம்பை ஊற்றியதுபோன்ற அதிர்ச்சிக்கு ஆளானார்கள் சகோதரர்கள். வீடு திரும்பும் வரை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. பேசவும் முடியவில்லை! இருவரிடமும் அத்தனை இறுக்கம். சக்கரபாணிக்கு அதை ஜீரணிக்க கஸ்டமாக இருந்தது. “பிறந்தது முதல் எம்.ஜி.ஆரை கொஞ்சுபவர்கள் அவரது தாடையில் இருக்கும்  பள்ளத்தைக் கிள்ளி முத்தமிடுவர். ராம்சந்தருக்கு இது ராசியானது என்பார்கள். ஆனால் இன்று சினிமா இயக்குனர் சொன்னது அவன் எதிர்கால வாழ்க்கையையே அல்லவா கேள்விக்குறியாக்கியிருக்கிறது. அப்படியானால் தம்பியின் எதிர்காலம் அவ்வளவுதானா...” சக்கரபாணி உள்ளத்தில் ஆயிரம் சிந்தனைகள்.

வீட்டிற்கு வந்தபின் வழக்கம்போல் தாயிடம் பேசி ஆறுதலடைந்தார்கள். இப்போது எம்.கந்தசாமி முதலியாரை சென்று சந்திப்பதென முடிவெடுத்தனர். அவருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. வழக்கம்போல் ஆறுதலாகப் பேசியவர், சகோதரர்களின் நிலை குறித்து விசாரித்தார். 

சதி லீலாவதி

அப்போது, தான் பங்கேற்றிருக்கும் ஒரு படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு பெற்று தருவதாக வாக்குறுதி அளித்தார். எம்.ஜி.ஆரின் திரைப்பட வாய்ப்பு கனிந்தது.

ஜெமினி அதிபர் எஸ்.எஸ் வாசன் கதையில், அமெரிக்க இயக்குனர் எல்லிஸ் ஆர் டங்கனின் இயக்கத்தில், எம்.கந்தசாமி முதலியார் கதை வசனத்தில் உருவான சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது...

தன் முதல் பட வாய்ப்பு குறித்து எம்.ஜி.ஆர் என்ன சொல்கிறார் என பார்ப்போமா...

http://www.vikatan.com/news/coverstory/81180-mgr-started-his-movie-career-in-sathi-leelavathi.html

Link to comment
Share on other sites

முதல் படத்தில் எம்.ஜி.ஆரின் சம்பளம் எவ்வளவு? - நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-13

எம் ஜி ஆர்

கே.பி கேசவன் மூலம் தேடிவந்த வாய்ப்பு, தன் முகவாய்கட்டையில் இருந்த தழும்பினால் தவறிப்போன வருத்தத்துடன் இருந்த நேரத்தில்தான், எம்.கந்தசாமி முதலியாரைச் சந்தித்தனர் எம்.ஜி.ஆர் சகோதரர்கள். அவர்களின் நலம் விசாரித்த எம்.கே, உடனடியாக அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர முன்வந்தார். தங்களின் நாடக குரு மூலம் ராம்சந்தர் முதன்முதலாக படத்தில் நடிக்கும் வாய்ப்புப் பெற்றாலும், அத்தனை எளிதாக அது கைகூடவில்லை. படத்தின் படப்பிடிப்பு துவங்கும்வரை, அதில் தான் நடிப்போமா இல்லையா என்று குழப்பத்தின் உச்சிக்கே செல்லும்படி பல சம்பவங்கள் நடந்தேறின. 1966 -ம் ஆண்டில், தான் பொறுப்பாசிரியராக இருந்து நடத்திய சமநீதி இதழில் சுவாரஸ்யமான அந்த சம்பவங்களை எழுதியிருக்கிறார் எம்.ஜி.ஆர். 

பதவிப் போராட்டம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், சதி லீலாவதி செய்த சதிகளை சுவாரஸ்யமாக எழுதுகிறார் இப்படி...
நான் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் நடித்துக்கொண்டிருந்த நேரம். வெளியுலகத்தைப் பற்றியோ, மக்கள் மனோபாவம் எப்படியிருக்கும் என்பதையோ, எந்தெந்தக் குணத்தினர், எப்படிப்பட்ட தரத்தினர் என்பதையோ சிறிதும் தெரிந்துக்கொள்ளாத, தெரிந்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். (இப்போது எல்லாம் தெரிந்துகொண்டுவிட்டேன் என்று கருதுவதாக யாரும் எண்ண வேண்டாம்.) உலக அனுபவம் சிறிதும் பெறாத நிலையில் இருந்தேன் என்பதையே குறிப்பிடுகிறேன்.

எம் ஜி ஆர்அந்தப் பருவத்தில், அதுவரை எனக்குக் கிடைத்திருந்த அனுபவமெல்லாம், “நாடகத்திலே நடிக்கிறோம்; பணம் கிடைக்கிறது. கிடைக்கிற பணம் வாழ்க்கைக்குப் போதாது. அதிகப் பணம் தேவை. அந்த அதிகப் பணத்திற்காக ,அதிகச் சம்பளம் வாங்குவதற்கு வேறு கம்பெனிக்குப் போக வேண்டுமென்றால், அதற்கு வேண்டிய தகுதிகள் இல்லை. ஏதோ கிடைத்ததைக்கொண்டு, இதாவது கிடைக்கிறதே என்று வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டு போகவேண்டியதுதான்” என்று சுற்றிச்சுற்றி இந்தப் பிரச்னையிலேயே உழன்று கொண்டிருந்தேன்.

இப்போது சில சமயம் வேலை செய்வதற்கு நேரம் போதவில்லையே என்ற கவலை! அப்போது நிறைய நேரமிருக்கிறது, வேலையில்லையே என்ற கவலை.

இத்தகைய நிலையில், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நல்ல வசூலோடும், வெற்றியோடும் நடத்திக்கொண்டிருந்த 'பதிபக்தி' என்ற நாடகத்தைச் சினிமாவாக எடுக்கத் தீர்மானித்துவிட்டார்கள். வெகு விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது என்ற செய்தி விபத்தைப்போல எங்கள் செவிகளில் விழுந்தது. படம் எடுப்பதனால் நாடகக் கம்பெனியை நிறுத்திவிடப்போவதாகவும், அவர்களை ஒவ்வொன்றாகத் தொடர்ந்து படமெடுக்கத் தீர்மானித்துவிட்டதாகவும் சொல்லப்பட்டதுதான் அந்தச் செய்தி. அது, விபத்தைப் போன்று என்னையும், என் தமயனாரையும் உலுக்கியது.

“ஆமாம், நாடகக் கம்பெனியை நிறுத்திவிட்டால் என்ன? படம்தான் எடுக்கிறார்களே! அதில் வேலை (வேடம்) கிடைக்காதா என்ன? அந்த நம்பிக்கை இருக்குமல்லவா?”: என்று கேட்டுவிடாதீர்கள்! நாடகக் கம்பெனி என்றால், தினமும் நாடகம் நடக்கும். மாதா மாதம் சம்பளமும் கிடைக்கும். எப்போதோ படம் எடுப்பார்கள்; என்றோ ஓரிரு நாள் வேலையிருக்கும். மாதச் சம்பளம் எப்படிக் கிடைக்கும்! அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால், எதிர்பார்க்காவிட்டால் எப்படித்தான் வாழ்வு..? எங்களுக்கு இந்த நல்ல குணம் (தேவையற்ற குணம்) யாரிடமாவது சென்று வேலை கேட்கும் பழக்கமும் கிடையாது; எப்படிக் கேட்பது என்றும் தெரியாது. அழுதபிள்ளைதான் பால்குடிக்கும்! சரி, பால் எந்தத் தாயிடமிருந்து கிடைக்கும் என்றாவது குழந்தைக்குத் தெரிய வேண்டுமே!

வறுமையின் காரணமாக பால் கொடுக்கும் சக்தியை இழந்துவிட்ட ஒரு தாயிடம், அதன் குழந்தை எவ்வளவு பெரியதாக அழுதால்தான் என்ன, எத்தனை நேரம் அழுதால்தான் என்ன? அந்த நிலையில் உள்ள குழந்தைகளைப் போன்றவர்களானோம் நாங்களும். ஒரு நாள் ,எதிர்பாராதவிதமாக எங்களுடைய நாடக ஆசிரியரும், எம்.கே.ராதா அவர்களின் காலஞ்சென்ற தந்தையுமான எம்.கந்தசாமி முதலியார் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்... எதிர்காலத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று எப்போதும்போல அக்கறையோடும், அன்போடும் அவர் விசாரித்தார். “படம் எடுக்கப்போகிறார்கள்... அதிலே ஏதாவது வேடம் கிடைக்குமென்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” இதுவே எங்கள் பதில்.

‘இல்லை’ என்று சொல்வதற்கும் வெட்கம்! “இருக்கிறது” என்று சொல்வதற்கும் அச்சம்!    

அவர் சொன்னார், “நல்லவேடம் கொடுத்தால் நடிக்கலாம் இல்லையா? ஒரு பட முதலாளி ‘சதிலீலாவதி’ என்ற படத்தை எடுக்கவிருக்கிறார். அதற்கு நான்தான் உரையாடல் எழுதப்போகிறேன்! எல்லிஸ் ஆர்.டங்கன் என்கிற அமெரிக்க டைரக்டர் படத்தை இயக்கப்போகிறார். அதில் ஒரு துப்பறிபவன் வேடம் இருக்கிறது. சண்டைக் காட்சிகள் எல்லாம் அந்த வேடத்திற்கு உள்ளன. நீ வருவதாயிருந்தால், அந்த வேடத்தை உனக்குத் தர ஏற்பாடுசெய்கிறேன்” என்றார்.

எம் ஜி ஆர்

கரும்பு தின்னக் கூலியா கேட்போம்! 'பத்தோடு பதினொன்று அத்தோடு இதொன்று' என்ற நிலையிலிருந்த எனக்குத் துப்பறிபவன் வேடம்!
'பதிபக்தி' என்ற நாடகத்திலும் 'துப்பறியும் சந்தானம்' என்ற ஒரு வேடம் உண்டு. அந்த வேடத்தை ஏற்று நடிப்பவர் எனக்கு நடிப்புக் கற்றுக் கொடுத்த ஆசிரியரான காளி என். ரத்தினம் அவர்கள். அந்த நாடகம் பெருமை பெறக்காரணமாக இருந்த சிறப்புகளில் ஒன்று காளி. என். ரத்தினம். அவர்கள் தாம் ஏற்றுக்கொண்ட துப்பறியும் வேடத்திற்கேற்ப நாடகத்தின் இறுதிக்கட்டத்தில் போடும் சண்டைக் காட்சி தவிர கே.பி. கேசவன் அவர்களின் குடிகார நடிப்பும், நல்ல கதையமைப்பும் அதன் வெற்றிக்குக் காரணங்களாகும்.

'சதிலீலாவதி' யின் கதையும் ‘பதிபக்தி’போன்றே ஒரே மாதிரியான பல சம்பவங்களைக் கொண்ட கதைதான். 'பதிபக்தி' யின் கதாசிரியர் தெ.பொ.கிருஷ்ணசாமி பாவலர். “சதிலீலாவதி”யின் கதை ஆசிரியர் எஸ்.எஸ். வாசன். என்னுடைய ஆசிரியர் நடிக்கிற அதே வேடம். அதேபோன்ற படத்தில் எனக்குக் கிடைக்கிறதென்றால் எப்படி அதை வரவேற்காமல் இருக்க முடியும்? “எப்பொழுது வரவேண்டும்?” என்றுதான் என்னால் கேட்க முடிந்தது. “முதலாளி வந்துவிடுவார்கள்; வந்ததும் பாரு, ஒப்பந்தம் செய்து வைக்கிறேன் ’’ என்றார்.

அதன்பின், படத்தின் முதலாளி வந்துவிட்டார் என்ற செய்தி வருகிற ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது என்றால் மிகையாகாது.

எஸ்.எஸ். வாசன்எங்கள் நாடக் கம்பெனி நாடகங்கள் சென்னை ராயல் தியேட்டரில் (சால் கொட்டர்ஸ்) தொடர்ந்து நடந்துக் கொண்டிருந்தது. நாங்கள் வேறொரு கம்பெனிக்கு ஒப்பந்தம் செய்யப்படப் போகிறோம் என்ற செய்தி எங்கள் இருவரையும், எங்கள் தாயாரையும் தவிர வேறு யாருக்கும் சொல்லப்படவில்லை. நாங்களும் சொல்லவில்லை. வேண்டுமென்றேதான் மறைத்து வைத்திருந்தோம். ஒருநாள் ஆசிரியர் எம்.கே. அவர்களிடமிருந்து தகவல் கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட நாளில் எங்களை அழைத்துப்போய் ஒப்பந்தம் செய்துவைத்து முன்பணம் வாங்கித் தருவதாக கிடைத்த தகவல்.

எங்களுடைய மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காத்திருந்தோம்; காலமும் வந்தது, கைநீட்டிப் பணம் வாங்க நானும், என் தமையனாரும் நாடக ஆசிரியரோடு சென்றோம். ஒரு ஓட்டலில் அந்த முதலாளி தங்கியிருந்தார். அவர் பெயர் மருதாசலம் செட்டியார்; கோவையைச் சேர்ந்தவர்; நல்ல உயரம், உயரத்திற்கு ஏற்ற பருமன், உருவத்திற்கு ஏற்றவாறு கணீரென்று ஒலிக்கும் குரல். அவர் வந்தார். எங்கள் இருவரையும் பார்த்தார்.

பிறகு ஆசிரியரும், அவரும் பேசினார்கள். எங்களுக்கு ஒரு சம்பளமும் நியமிக்கப்பட்டது. முதலாளி முன்பணம் கொடுப்பதற்காகப் பணமெடுக்க விரைந்து சென்றார். சட்டைக்கெல்லாம் நூறு ரூபாய் நோட்டு என்று சொல்லப்படும் ஒரு தாளுடன் அவர் வந்தார். அவர் எங்களிடம் அதைக்கொடுக்க வந்தபோது நாங்கள் ஆசிரியரைப் பார்த்தோம். ஆசிரியர் எங்களுடைய எண்ணத்தைப்புரிந்துக் கொண்டு அதைத் தம்கையில் வாங்கி எங்களிடம் கொடுத்தார். ஆசிரியர் “உங்களுக்கு நூறு ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருக்கு. இது உங்களுக்கு முன்பணம்‘ என்று சொன்னார். என் காதுகளை என்னால் நம்ப முடியவில்லை. நாடகத்திலே ஆயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு நூறு ரூபாய் நோட்டை கூடக் கண்டதில்லை. அதிலும் ஒரே நேரத்தில் மொத்தமாக நூறு ரூபாய் முன் பணம்! நெஞ்சிலே ஏதோ ஒன்று கிளர்ந்து நெஞ்சை முன்னால் தள்ளியது போன்ற உணர்ச்சி. இதற்குத்தான ‘மகிழ்ச்சி விம்மல்’ என்று பெயரோ?

அண்ணனை நான் பார்த்தேன். அண்ணன் என்னைப் பார்த்தார். மருதாசலம் செட்டியார் என்ன நினைத்தார் என்று தெரியாது. முதல் படம் தானே! கொடுக்கிறதை வாங்கிக்குங்க முன்னே பின்ன இருந்தாலும் ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கத்தான் வேணும் ...அப்புறம் தருவோம். நல்லா நடிச்சுப்பெயர் வாங்குங்க...” என்று கூறினார் அவர். அவர்கள் இருவருக்கும் நமஸ்காரத்தைச் சொல்லி விட்டுப் புறப்பட்டோம். “வணக்கம்“ சொல்வதற்கு எங்களுக்கு என்ன தெரியும்? ஆசிரியர் கீழே வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

எம் ஜி ஆர்

எங்களுக்கு இப்படிப்பட்ட பேருதவியைச் செய்தாரே, அதற்காக அவர் எங்களிடமிருந்து உபசாரத்திற்காக நாங்கள் சொல்லவேண்டிய ஒரு நன்றி வார்த்தையைக் கூட எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு உதவிசெய்ய வேண்டியது ஒரு கடமை என்று கருதியவராக எந்தவித மறுமொழியையும் எதிர்பார்க்காமல் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார். நாங்கள் வண்டியில் செல்வதாவது? அதற்கு ஏது எங்களிடம் காசு! நானும் அண்ணனும் நடந்தே வீடுநோக்கி புறப்பட்டோம். 

வீடு செல்லும் வழியில் எம்.ஜி.ஆருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. என்ன அது?...

http://www.vikatan.com/news/coverstory/81626-do-you-know-mgrs-salary-for-his-first-film-sathi-leelavathi-life-history-of-mgr--episode--13.html

Link to comment
Share on other sites

ஒரு வேடத்துக்கு இருவர்...‘சதி லீலாவதி’யில் சதி!... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-14

எம் ஜி ஆர்

நாடகத்திலிருந்து திரைப்பட உலகுக்குள் நுழையும் பெரும் கனவு, அந்நாளைய நாடக நடிகர்களைப் போலவே எம்.ஜி.ஆர் சகோதரர்களுக்கும் இருந்தது. பல போராட்டங்களுக்கிடையில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப்பெற்றார்கள். அதற்கு நுாறு ரூபாய் சம்பளமும் பெற்றார்கள் ஆனால் அதைத் தக்கவைத்துக்கொள்ள முடிந்ததா?... அதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன...தொடர்ந்து பேசுகிறார் எம்.ஜி.ஆர்.

”செல்லும் வழியில் நான் தமயனாரிடம் கேட்டேன். “ஏன் அண்ணே! இது உண்மையான நோட்டா இருக்குமா? சரியான நூறு ரூபாய் நோட்டுதானே?“ என்று.

'இதுக்கு முன்னாலே நான் எங்கேடா பார்த்தேன்?' என்று சொன்ன அண்ணன், 'ஆமாம் உனக்கு ஏன் திடீர் சந்தேகம்?' என்று கேட்டார்.
'ஏன் அண்ணே நீங்க கவனிக்கலையா? நூறு ரூபாய் முன்பணம் கொடுத்தாரே! அவர் போட்டுக்கிட்டிருந்த சட்டையிலே கைப் பொத்தான் கிடையாது. கயிறுதான் கட்டியிருந்தாரு. பாத்தீங்க இல்லே? அதனால்தான் சந்தேகம். நூறு ரூபாய் முன்பணம் கொடுக்கிறவர் ஏன் பொத்தான்கூடப் போட்டுக்காம கயிற்றைக் கட்டிக்கிட்டிருக்காரு?' என்றேன்.

எம் ஜி ஆர்'நானும் கவனிச்சேன். இந்தக் கயிறு கட்டினதுனாலே அவரு முதலாளியா இருக்கக் கூடாதுங்கறது இல்லையே! நிறைகுடம் தளும்பாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஒன்றுமில்லாதவங்கதானேடா வெளிச்சம் போடணும்! நாமெல்லாம் நல்ல சட்டை, வேட்டியில்லாம போனா கேலி பண்ணுவாங்க! அதுக்காக எல்லாம் சரியாப் போட்டுக்கிட்டுப் போகவேண்டியிருக்கு. அவங்களை யாரு கேள்விகேட்க முடியும்? யாரு கேலி பேச முடியும்?' என்றார் அண்ணன். அதுவும் சரியான நியாயமாகத்தான் எனக்குப்பட்டது.

வீட்டுக்குப்போய் தாயாரிடம் நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தோம். அப்போது இரவு நேரம். அவர்கள் நோட்டைப் பார்த்தார். பார்க்கும்போதே என்னுடைய சந்தேகத்தை அண்ணன் தாயாரிடம் சொன்னார். தாயார் உடனே விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார்கள். 'நீரோட்டம் இருக்கேடா! எப்படிப் பொய்யாக முடியும்?' என்று சொல்லிவிட்டார்.

அந்த நோட்டை அப்படியே எடுத்துத் தாயார் அவர்கள் எப்போதும் வணங்கும் விஷ்ணுவின் படத்தடியில் வைத்துவிட்டு, 'நாளைக் காலையில் இதைப்போய் மாத்திக்கிட்டு வரலாம்' என்றார். அந்த இரவெல்லாம் எனக்குத் தூக்கமே இல்லை. வீடு நிறையப் பணமாக இறைந்து கிடப்பதுபோல ஒரு பிரமை. நடப்பதற்குக்கூட இடமில்லாதபடி வெள்ளி ரூபாய்களாகக் குவிந்து கிடப்பது போல எனக்குத் தெரிந்தது.

தூங்கினேனோ, இல்லையோ தெரியாது. விடிந்து எழுந்தேன். உடனே நாடகக் கம்பெனிக்குச் சென்று எல்லோரையும் பார்க்கவேண்டுமென்ற ஆசை. என் சக நண்பர்களிடம் போய் இந்த முன்பணம் சமாச்சாரத்தைச் சொல்ல வேண்டுமென்று பேராவல்.

எப்படித்தான் தாயார் என் மனக்குறிப்பைத் தெரிந்துக் கொண்டார்களோ, அறியேன். சட்டையைப் போட்டுக் கொண்டு நான் புறப்பட்டபோது அழைத்தார்கள்; சென்றேன்.

“நான் சொல்ற வரைக்கும் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது. நாடகக் கம்பெனி முறையெல்லாம் தெரியுமில்லே? ஜாக்கிரதை!” என்றார்கள். எவ்வளவு பெருமையோடு புறப்பட்டேனோ அவ்வளவுக்கவ்வளவு தாழ்ந்து, குறுகி, சோர்ந்து ஒரு மூலையில் போய் உட்கார்ந்தேன்.

ஒருநாள் நாடகத்தின்போது நாடகக் கொட்டகைக்குப் போனேன். என் நண்பர்களையெல்லாம் பார்த்தேன். என் தோழர்கள் எவ்வித மாற்றத்தோடும் இல்லை; எப்போதும் போலத்தான் இருந்தார்கள். ஆனால், என் கண்களுக்கு அவர்கள் என்னைவிடத் தகுதி குறைந்தவர்களாகத் தோன்றினார்கள்! ஏனென்றால் நூறு ரூபாய் முன்பணம் வாங்கினவன் அல்லவா நான்!
அவர்கள் என்னிடம் ஏதோ ஒரு மாற்றத்தைக் கண்டுவிட்ட நிலையில் ஏதேதோ கேட்கத் தொடங்கினார்கள்.
நான் சொல்லவும் முடியாமல், மனதிலே வைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறினேன். நெருங்கிய நண்பன் ஒருவனிடமாவது சொல்லலாமா என்று ஆசை. 

எம்.ஜி சக்கரபாணிதாயாரின் கட்டளையை நினைத்தவுடன் ஆசை எப்படி பறந்தோடிற்றோ எனக்குத் தெரியாது. ஒருநாள் எங்கள் நாடகத்தின்போது காலஞ்சென்ற ஜட்ஜ் எம்.வி.மணி ஐயர் என்பவர் கொட்டகைக்கு வந்தார். எங்கள் நாடகக் கம்பெனியிலேயே நாங்கள் சேர்வதற்கு முன்பு நடித்துக் கொண்டிருந்தவர் அவர். ஜட்ஜாக நடித்து மக்களால் பாராட்டப்பட்டதன் காரணமாக ‘ஜட்ஜ் எம்.வி. மணி ஐயர்’ என்ற பட்டப்பெயர் சூட்டப்பட்டது. அவரிடம் காளி என். ரத்தினம் அவர்கள், 'ஏன் மணி எங்கே வந்திருக்கே?' என்று கேட்டார்.

“சினிமாப் படத்திலே நடிக்க வந்திருக்கேன். உங்க ‘பதிபக்தி’ மாதிரிதான்; சதிலீலாவதி. அந்தப் படத்திலே நடிக்க வந்திருக்கேன்” என்றார். எங்களுக்கு ஒரே பயம். எங்கே நாங்கள் ஒப்பந்தமாகியிருக்கும் விஷயத்தைச் சொல்லி விடுவாரோ என்ற திகில். ஆனால், அவர் மேலும் பேசுவதற்குள் டி.ஆர்.பி. ராவ் அவர்கள் அவரைக் கேட்டார். “நீ என்ன வேஷம் போடப் போகிறாய்?” என்று 'துப்பறியும் வேடம்' என்றார் அவர். அவ்வளவுதான்! என் தலை சுற்றுவதுபோல் இருந்தது.  அந்த வேடத்துக்குத்தானே சம்பளம் பெற்று வந்திருக்கிறோம். “சரி இந்த வேடம் நமக்குக் கிடைக்காதோ என்னவோ, என்ன ஆனாலும் மறுநாள் ஆசிரியரைப் பார்த்து விடுவது” என்று முடிவெடுத்தேன்.

ஜட்ஜ் எம்.வி. மணி இந்தச் சேதியைச் சொன்ன பிறகு சிறிது நேரத்துக்கு முன்னால் எந்த நண்பர்கள் என்னைவிடத் தாழ்ந்தவர்களாக என்முன் தெரிந்தார்களோ, அதே நண்பர்கள் இப்போது என்னைவிட உயர்ந்தவர்களாகத் தெரிந்தார்கள் எனக்கு! மனிதனுடைய மனம் எத்தனை பலவீனமானது என்பதை அப்போது தான் ஒரு சிறிது நேரத்தில் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மனதின் உள்ளம் மிகக் கடினமானது, வலிவுமிக்கது, எதனாலும், யாராலும் கலங்கவோ, கலக்கப்படவோ முடியாத சக்தி வாய்ந்த ஒன்று என்பது பல புராணக் கதைகள் மூலமாகவும், வீரப் பெருமக்களின் சரிதை மூலமாகவும், என் தாயின் வாய்மொழி வழியாகவும் ஓரளவு புரிந்துக்கொண்ட முடிவாகும்.

இளகிய மனம் படைத்தவர்கள் பலரை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன். ஏன், என் தாயார் செய்த பல அருஞ்செயல்களை  மகனான நான் கண்முன் அறிந்து உணர்ந்திருக்கிறேன்.

இந்த சம்பவம் சில ஆண்டுகளுக்குப் பின்னர் நடந்ததொரு நிகழ்ச்சிக்கு என் மனம் என்னை ஈர்த்துச் செல்கிறது. இங்கே அதை வெளியிடவும் விரும்புகிறேன்.

அந்தச் சமயம் நாங்கள் குடியிருந்த வீட்டில் இன்னும் சில குடித்தனக்காரர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் ‘டீ’ விற்கும் தொழிலாளி; அவருக்கு தொழில் செய்யும் உபகரணங்கள் சேதமாகிவிட்டது ஒருநாள். தாயாருக்கு இந்தச் செய்தி தெரியவந்தது. தொழில் செய்யத்துடிக்கும் அந்த எளியவர்களுக்கு அதற்குத் தேவையான கருவி இல்லாமல் பிழைப்பே கெட்டுப்போகிறதே என்று அவர்களின் அல்லலை நினைத்து அனுதாபத்தோடு வேதனையும் அடைந்தார். அந்தக் காலத்தில் நாங்கள் உயர்ந்த நிலையில் வசதியோடு இருந்தோம் என்று யாரும் தப்புக்கணக்குப் போட்டுவிட வேண்டாம். எப்படியோ சிரமத்துடன் ஒருவிதமாய்க் காலம் ஓடிக்கொண்டிருந்து பட்டினி கிடக்கவில்லை என்பதுதான் அப்போதைய நிலைமை.

அந்தத் தொழிலாளருக்கு உதவுவேண்டும் என்ற நல்ல எண்ணம் தாயாருக்குப் பிறந்தது. எண்ணம் பிறந்தால் போதுமா! செயல்படுத்துவதற்கு வாய்ப்பு அதாவது, பணம் வேண்டாமா? பணம் தான் இல்லையே!

நாங்கள் பற்று வரவுக் கணக்கில் கடையில் வாங்கும் உணவுப் பண்டங்களை வேண்டுமானால் கொடுக்கலாம். எத்தனை நாளைக்கு முடியும்? அப்படியும் கொடுத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பின்புதான் கடைசியாக முடிவுக்கு வந்து எங்களுக்குக்கூடத் தெரியாமல் பணம் ஏற்பாடு செய்து அவருக்குத் தேவையான அந்தப் பணத்தைக்கொடுத்திருக்கிறார். இதன்பின் அந்தக் குடும்பத்தினர் டீ விற்பதையும், சம்பாதிப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் எப்படித்தான் அவர்களின் வாழ்க்கை நடந்து வருகிறது என்பது தெரியாது.

எம் ஜி ஆர்

ஒருநாள் வீடு திரும்பிய நேரத்தில் ஆறு மாதக் கடன்காரன் என்று அழைக்கப்படுகிற ஈட்டிக்காரனுக்கும், தாயாருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கக் கண்டோம்.

ஒன்றுமே புரியவில்லை. எங்களுக்கு ஈட்டிக்காரன் என்றாலே பிடிக்காது. அவன் பயங்கரமானவன் என்ற எண்ணமுள்ளவர்கள் நாங்கள். அவன் வீட்டுக்கு வருவதே தலைகுனிவு என்பதும் எங்கள் முடிவு. அப்படிப்பட்ட ஒருவன் என் தாயிடம் வந்து 'பணத்தை வைத்துவிட்டு மறுவேலை பார்' என்றால் அதை எப்படி நாங்கள் சகித்துக் கொள்வோம்.  அதுவரை நாங்கள் தாயாரை எதிர்த்துப் பேசியதோ, முரண்பாட்டுடன் பார்த்ததோ கிடையாது. என்னவென்று விசாரித்தோம். எங்கள் உணர்ச்சிக் கொந்தளிப்பைப் பார்த்துப் புரிந்துக்கொண்ட தாயார் தம் கையில் போட்டிருந்த தங்கக் காப்பைக் கழற்றி அவன் மேல் விட்டெறிந்து 'இதை எடுத்துக் கொண்டு போய் விற்று உன் பணம்போக மீதத்தைக்கொண்டு வந்து கொடு' என்றார்கள்.

இதைச் சிறிதும் எதிர்பார்க்காத அந்த ஈட்டிக்காரன், 'நாளைக்கு வரேன். நீங்களே நாளைக்குக் கொடுங்க' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான். அதோடு காலையில் 10 மணிக்கு வந்துவிடுவேன் என்று எச்சரிக்கையும் செய்தான். அவன் போனதும் நாங்கள் தாயாரைப் பார்த்தோம். அழுகையோடும்; ஆத்திரத்தோடும் எங்கள் வார்த்தைகள் வெளிப்பட்டன. தாயார் அவர்கள் சிறிதும் சலனமுறவில்லை. 'நான் கைநீட்டி வாங்கினேன் திருப்பிக் கொடுக்கலன்னா அவன் திட்டத்தானே செய்வான்.' 

சத்தியபாமா'எதுக்காக வாங்கனும்? அவன் கிட்டே எதுக்காக வாங்கினீங்க?'- கொஞ்சம் அதிகமாகவே வார்த்தைகள் எங்களிடமிருந்து வெளிவந்தன. எதுக்காகவோ வாங்கினேன்; ஏன் எனக்காகத்தான் வாங்கினேன்! அதை யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.' 
இழிவான, கேவலமான வார்த்தைகள் அல்ல. 'நீங்கள் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் என்று கண்டிக்கும் வார்த்தைகள்'. இதுவரை அவர்கள்தான் எங்களைக் கேட்டதும், கண்டிப்பதும் வழக்கம்.

இப்போது நாங்கள் கேட்கும் படியாக நேர்ந்ததை எங்களாலேயே பொறுத்துக் கொள்ளமுடியாதபோது தாயாருக்கு அதை எப்படித் தாங்கிக்கொள்ள முடியும்! ஆனாலும் கடைசி வரையில் அவர்கள் எதற்குப்பணம் வாங்கினார்கள் என்பதைத் தெரிவிக்கவே இல்லை. இந்தக் குழப்பத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தொழிலாளியின் மனைவி எங்களிடம் வந்து அழுதபடியே உண்மையைச் சொன்னார். 

அவர்களுக்குக் கெட்டிலுக்குப் பணம் தருவதற்காகவும், வியாபாரம் நன்றாக நடப்பதற்காகவும் அவர்கள் மீது ஈட்டிக்காரனுக்கு நம்பிக்கையில்லாத காரணத்தால் என் தாயார் தன் பேரில் கடன் வாங்கி அவர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அவர்களால் திருப்பிக்கொடுக்க முடியவில்லை. வரவுக்கும், செலவுக்கும் தான் சரியாக இருக்கிறதே! எப்படிக் கொடுப்பார்கள். அதனால் தாயார் ஈட்டிக்காரனுக்குப் பதில் சொல்லக்கூடிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட இளகிய மனத்தையும் நாங்கள் கண்டிருக்கிறோம்.

மேலே நான் குறிப்பிட்ட நிகழ்ச்சி என்னுடைய பதவிப் போராட்ட காலத்துக்குப் பின்னால் சில ஆண்டுகள் கழித்து நடந்ததுதான் என்றாலும் இன்றைய சூழ்நிலையில் இதை நினைவுப்படுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று.

எப்படியோ ஆசிரியரின் மனத்தை எங்கள் பக்கம் திருப்பி எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டும் இருந்து கொண்டிருந்தது.

http://www.vikatan.com/news/coverstory/81701-mgrs-efforts-on-his-first-film-sathi-leelavathi---life-history-of-mgr---episode-14.html

Link to comment
Share on other sites

எனக்கு இழைக்கப்பட்ட அநீதி!... எம்.ஜி.ஆரின் முதல்பட அனுபவம்! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம்- 15

எம் ஜி ஆர்

நாடக ஆசிரியர் எம்.கந்தசாமி முதலியார் மூலம் எஸ்.எஸ் வாசன் எழுதிய கதையான சதிலீலாவதி திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு முதன்முதலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் அந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு  அவர் பல சிரமங்களைச் சந்திக்கவேண்டியதிருந்தது. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து விவரிக்கிறார் இங்கே...

“அந்த நேரத்தில் நாடக் கம்பெனியில் ஆசிரியருடைய மகன் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா போன்றவர்கள் நடித்துக் கொண்டிருந்தார்கள். அரக்கோணத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்த நேரம். அரக்கோணத்துக்குப் போய்ப்பார்க்க எங்களுக்கு நேரம் இல்லை.சென்னையிலேயே தினமும் எங்கள் கம்பெனி நாடகம் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் அங்கே போகமுடியவில்லை. கடைசியாக நாங்கள் எங்கள் கம்பெனியைவிட்டு விலகி சினிமா கம்பெனி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டுக்கே போய்ச் சேரவேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுவிட்டது.

நாங்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியிலிருந்து எப்படி அங்கே குடி போனோம் என்பதே நெருக்கடி நிறைந்த ஒரு நல்ல நிகழ்ச்சியாகும். அதைப் பிறகு சொல்வோம். நாங்கள் ஆழ்வார்ப் பேட்டையிலிருந்த அந்தக் கம்பெனி வீட்டில் குடிபுகுந்தோம். வேடத்தைப் பற்றிய பிரச்னை எங்கள் முன்னால் பெரிய உருவெடுத்துச் சோதனைக் குறியாக நின்று கொண்டிருந்தது.

எம் ஜி ஆர்ஒருநாள் நாங்கள் அரக்கோணத்துக்குச் சென்று ஆசிரியரைச் சந்தித்தோம். அங்கு சதிலீலாவதி நாடகம் நடந்துகொண்டிருந்தது. என்னை வற்புறுத்தினார்கள் சண்டைக் காட்சிகளில் நடிக்கும்படியாக. நான் நடிக்கவும் செய்தேன். மறுநாள் ஆசிரியரிடம் நாங்கள் எங்கள் அச்சத்தைச் சொன்னோம். எனக்குக் குறிப்பிட்ட வேடத்தை எம்.வி. மணி அவர்களுக்குக் கொடுக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாமே, என்னுடைய நிலைமைதான் என்ன, எனக்கு என்னதான் வேடம் என்று நேரிடையாகவே கேட்டுவிட்டேன்.

ஆசிரியருக்குத் தெரியாமலேயே பட முதலாளிகள் எம்.வி. மணி அவர்களுடைய நடிப்பை வேறு கம்பெனி நடத்திய பதிபக்தி என்ற நாடகத்தில் கண்டு வியந்து அவரை ஒப்பந்தம் செய்துவிட்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்ததாம். 

இதைச் சொல்லிவிட்டு அந்த வேடம் கிடைக்க முடியாமல் போய்விட்டதாலும், அதைப்போலவே இன்னொரு வேடம் இருக்கிறது. அதை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று கூறினார்.  அவர் குறிப்பிட்ட வேடம் உண்மையிலேயே நல்ல வேடம் தான்.  கதாநாயகனால் கொல்லப்பட்டதாகக் கருதப்பட்டவர். அந்தக் கதாநாயகனுடைய நெருங்கிய நண்பர். கதாநாயகனுக்கு தொல்லை வரக்கூடாது என்பதற்காகவும், கொலையாளிகளைப் போலீசிடம் ஒப்படைப்பதற்காகவும் மாறு வேடத்தில் இருந்து கொண்டே நண்பருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வழக்கு மன்றத்தில் உண்மையை நிரூபித்து நண்பரைக் காப்பாற்றும் ஒரு நல்ல பாத்திரம். மனத்துக்கு ஒரு பெரிய நிம்மதி. மகிழ்ச்சியோடு நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தோம்.

விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கிற செய்தி வெளிவந்தது. படப்பிடிப்புத் துவங்க ஒருசில நாட்களுக்கு முன்பு எங்களுக்குக் கிடைத்த செய்தி குழப்பத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியது. ஆசிரியர் அவர்களுடைய கம்பெனியில் அவர் மகனுடன் கதாநாயகியாக நடித்த நண்பர் நம்மாழ்வார் என்பவருக்கு சதிலீலாவதி படத்தில் எந்த வேடமும் குறிப்பிடப்படவில்லை என்பதாகவும், அதனால் ஆசிரியருக்கும், அவருக்கும் மனத்தாங்கல்கூட ஏற்பட்டுக்கொண்டிருப்பதாகவும் வந்த செய்திதான் அது.

நம்மாழ்வார் என்பவர் பல ஆண்டுகள் நாடக மேடையில் நடித்து அனுபவம் பெற்றவர் என்பது மட்டுமல்லாமல் ஆசிரியருக்கு வலதுகை போல் இருந்து எவ்வளவு துன்பங்கள் ஏற்பட்டாலும் ஆசிரியரை விட்டுப் பிரியாது அந்தக் கம்பெனியிலேயே இருந்து நிறையச் சேவை செய்தவர். ஆசிரியருடைய நன்மதிப்புக்கும், நன்றிக்கும்கூடப் பாத்திரமாகும் தகுதியைப் பெற்றவர். இந்த உண்மையை நாங்கள் முன்பே நன்றாக அறிந்தவர்கள்.

அனுதாபத்தின் பேரால் வேலைகொடுக்கப்பட்ட எனக்கே வேடம் மாற்றப்படுகிறது என்ற செய்தியை தாங்க முடியாதிருக்கும்போது பல ஆண்டுகளாக ஓடாக்கிக் கொண்டவருக்கு வேலையே இல்லை என்றால் எப்படி அவரால் தாங்கிக்கொள்ளமுடியும்!
அவர் விரும்பியதோ, கேட்டதோ நியாயம் என்று இப்போதுதான் தெரிகிறது. ஆனால், அப்போது அதைப்பற்றிச் சிந்திக்க நேரமும் இல்லை. மனதில் அந்த எண்ணத்துக்கு இடமும் இல்லை.

அவருடைய நியாயமான வாதத்தை உணர்ந்த ஆசிரியர், நம்மாழ்வாருக்குச் செய்யவேண்டிய கடமையைச் சரிவரத்தான் செய்தார். ஆனால், அது சரிவரச் செய்ததாக என் உள்ளத்துக்கு எப்படித் தோன்ற முடியும்!

ஏனெனில், அந்தத் தீர்மானத்தால் பாதிக்கப்பட்டவன் நான் எப்படியெனில் எனக்கு என்று சொல்லப்பட்ட\இரண்டாவது முறையாகத் தீர்மானிக்கப்பட்ட “பரசுராமன்” (கதாநாயகனின் நண்பன்) என்ற வேடம் நம்மாழ்வாருக்கு என்று முடிவு செய்யப்பட்டுவிட்டது.
இது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நான் கருதினேன். நீதியோ, அநீதியோ முடிவாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. எனக்கு அந்த வேடம் இல்லையென்று. வேடம் இல்லை என்று சொல்லிவிட்டால் போதுமா! என் வேதனையைத் தீர்க்க யாரால் மருந்து கொடுக்க முடியும்?

எம் ஜி ஆர்

தாயாரிடம் போய்ச் சொல்வதற்கும் எங்களுக்குத் துணிவில்லை; அவரைத் தவிர நாங்கள் போய் எங்கள் குறைகளைச் சொல்ல வேறு யாருமில்லை.

எப்படியோ மனதில் இருக்கிற பாரம் குறையவேண்டும். மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் கொட்டி விடவேண்டும். திறந்த மனதோடு கொட்டப்படுகிற அந்த வார்த்தைகளில் எந்தவிதமான இடையூறும் வந்துவிடக்கூடாது. சே இவ்வளவு மோசமா! என்று கேலியும் வந்துவிடக்கூடாது. கேலி செய்யப்பட்டால் அவமானம் மிஞ்சும். அதனால் சொல்லப்படுகிற திசையிலிருப்பவரிடமிருந்து எந்தவித மறுமொழியும் இல்லாதிருக்கவேண்டும். ஆனால், ஒருவரிடம் மனச்சுமையை இறக்கிவிட்டோம். அதாவது நம் குறைகளைக் கொட்டிவிட்டோம். அவர்கேட்டுவிட்டார் என்கிற நம்பிக்கை பிறக்கவேண்டும். அந்த நேரத்தில் முறையீட்டைக் கேட்டவரிடமிருந்து வந்த மறுமொழியும் இல்லாவிட்டாலும் பின்பு என்றைக்காவது அவரால் ஒருவழி காட்டப்பட்டே தீரும் என்ற நம்பிக்கை உதயமாகும்.
இதற்கு ஏற்ற ஒரே இடம் கடவுள் சிலைதான் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

எங்களுக்கு ஆறுதலோ, தேறுதலோ உண்டாக வேண்டுமானால் எங்கள் தாயாரிடமிருந்துதான் உண்டாக வேண்டும். உண்டாவது வழக்கம். அவர்கள் சொல்கிற பதில் எப்போதும் உறுதியூட்டுவதாகவும், தன்னம்பிக்கையை உண்டாக்குவதாகவும் இருக்கும்.

அம்மாவிடம் சொல்லாமல் இருக்க முடியாது. சொன்னால் அவர்களுடைய முகபாவம் நிச்சயமாக அவருடைய துன்பத்தையும், வேதனையையும் அல்லவா வெளிக்காட்டும்!

எம் ஜி ஆர்

கடவுள் சிலையைப் போல் மவுனமாக இருக்க அவர்களால் முடியாதே! தன்னுடைய மகனுக்கு ஏற்படும் இன்னலை எப்படி ஒரு தாயால் பதில் உணர்வைக் காட்டாமல் மறைத்துக் கொள்ளமுடியும். ஆனால், சொல்லாமலிருக்க முடியாதே! தாயிடம் கூறினோம். நாங்கள் சொல்லுவதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டேயிருந்தார். தாயார் அவர்கள் என்ன சொல்வார்களோ, வேதனைப் படுவார்களோ என்று அவர் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்...

பிள்ளைகளிடம்  என்ன சொன்னார் சத்தியபாமா?

அடுத்த அத்தியாயத்தில்....

http://www.vikatan.com/news/coverstory/82134-mgr-was-inspector-in-his-first-movie-sathi-leelavathi.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் முதற்படத்தின் படப்பிடிப்பில் இதுதான் நடந்தது! : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்-16

எம்.ஜி.ஆர்

ன் முதல்பட வாய்ப்பு குறித்து கனவில் மிதந்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு அவருக்கு அளிக்கப்பட்ட வேடத்துக்கு வேறு ஒருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்ட தகவல் அறிந்து கலங்கிப்போனார். வழக்கம்போல் அந்த கவலையை தாயார் சத்தியபாமாவிடம் பகிர்ந்துகொண்டபோது மகனின் கவலையை அவரது தாயார் எப்படி தீர்த்தார் என தொடர்ந்து சொல்கிறார் எம்.ஜி.ஆர். 

...“கடைசியாக இப்ப என்னதான் வேஷம் கொடுத்திருக்கிறார்கள் என்று கேட்டார் என் தாயார். இன்ஸ்பெக்டர் வேஷம் என்று சொன்னேன். ஒரு நீண்ட பெருமூச்சோடு எங்களைத் திரும்பிப் பார்த்தார். எங்களுடைய விழிகளிலிருந்து எங்களை அறியாமல் கண்ணீர் விழுந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்துவிட்டு கேலி நிறைந்த ஓர் அலட்சியச் சிரிப்போடு என் கண்களைத் துடைத்தபடி சொன்னார். 'போடா, ரொம்ப லட்சணம்! வானம் இடிந்து விழப் போகுதுன்னு முட்டையினாலே தடுத்து நிறுத்த யாராவது முயற்சி செய்வார்களா! முட்டையும், பூமியும் கிட்டத்தட்ட ஒரே வடிவம் தாண்டா அதைப் போலத்தானே நாமும் நம்ம நிலைமையிலே இதையெல்லாம் எப்படித்தடுக்க முடியும். நடக்கிறது நடந்தே தீரும். அதுக்காக ஏக்கப்பட்டு கண்ணீர் விட்டால் முடிவு மாறியா போயிடும்!

பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவங்க பலபேருக்கு இந்த வேடம் கூடக் கிடைக்கலே, இல்லையா! உனக்காவது இந்த வேடம் கிடைச்சிருக்கே! அதுக்குச் சந்தோஷப்படு. எப்போ கிடைக்குமோ, அப்போதுதான் எதுவும் கிடைக்கும் வர்றதை தடுக்க முடியாது; வராததைக் கொண்டு வாழ்ந்துட முடியாது. கிடைச்ச வேஷத்துல உன் திறமையைக் காட்டு' என்றார்.

எம்.ஜி.ஆர்

இப்போது உணர்கிறேன். நான் பம்பாய்க்குப் போனபோது எனக்குக் கொடுக்கப்படுவதாக இருந்த வேடம் பாலையா அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று எழுதியிருந்தேனே அந்த வேடத்தையோ, அல்லது இங்கே குறிப்பிட்டு இல்லை என்று ஆன அந்த வேடத்தையே ஏற்று நான் நடித்திருந்தால் நிச்சயமாக நானும் தோல்வி அடைந்திருப்பேன்; அந்தப் படமும் தோல்வி கண்டிருக்கும்.

மனிதனுக்கு ஆசை தோன்ற வேண்டியது தான். முன்னேற வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தே தீரவேண்டிய ஒன்று தான். ஆனால், எதிரியோடு போராடப் போகிற ஒருவன் தன் பலத்தையும், எதிரியின் பலத்தையும் தெரிந்து போராடப் போகவேண்டும் என்று சொல்லியிருபதுபோல் தன்னுடைய சக்தியையும், அந்தப் பாத்திரத்தின் தகுதியையும் உணர்ந்து விருப்பம் கொள்ளாவிட்டால் எத்தனை பேருக்கு அதனால் எப்பேர்பட்ட விளைவு உண்டாகுமென்பதை அன்று என்னால் உணரமுடியவில்லை. இன்று உணர முடிகிறது!"- இப்படி தன் முதல்படமான சதி லீலாவதி குறித்து எழுதியிருந்தார் எம்.ஜி.ஆர். 

'இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி'...என தன் படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் வரிகளை அன்றே அனுபவபூர்வமாக தாய் சத்தியபாமா எம்.ஜி ஆருக்கு உணர்த்தியதால் எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை 1936-ம் ஆண்டு வெற்றிகரமாக துவங்கியது. 

எம் ஜி ஆர்

சதி லீலாவதி படம் எம்.ஜி.ஆருக்கு மட்டுமல்ல; பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் வள்ளல்குணத்துக்கு ஆதர்ஷமாக விளங்கியவரும் தமிழக மக்களால் கலைவாணர் என அழைக்கப்பட்ட நகைச்சுவை மேதை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் அதுதான் முதற்படம். குணச்சித்திர நடிகர் டி.எஸ் பாலய்யா அறிமுகமானதும் இந்த படத்தில்தான்.திரையுலகில் எம்.ஜி.ஆர் சகாப்தம் துவங்கியது.

சதி லீலாவதி படத்தின் படப்பிடிப்புக் காட்சி

 

 

 

http://www.vikatan.com/news/coverstory/82304-this-is-what-happened-in-mgrs-first-film-sathileelavathi-shooting-life-history-of-mgr--episode-16.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் முதல் காதல்..! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -17

எம் ஜி ஆர்

நாடகத்தில் இருந்து சினிமாவுக்கு வந்ததால் எம்.ஜி.ஆருக்கு சில பிரச்னைகள் இருந்தன. 'சதி லீலாவதி' படப்பிடிப்பின் ஆரம்ப நாட்களில் பெரும் சிரமப்பட்டார் எம்.ஜி.ஆர். சினிமாவைப்பற்றிய அடிப்படை புரிதல்கள் அவருக்கு கைவரவில்லை.

பார்வையாளர்களுக்கும் நாடகமேடைக்கும் பல அடி துார இடைவெளி இருக்கும் என்பதால்  அந்நாளைய நாடக நடிகர்கள் வசனங்களையும் பாடல்களையும் உச்சஸ்தாயியில் பாடி நடிப்பார்கள். சினிமாவும் புதிது; சினிமாவுக்கு எம்.ஜி.ஆரும் புதிது. சொல்லவேண்டுமா எம்.ஜி.ஆர் நிலையை?...நாடக பாணியிலான நடிப்பை திரைப்படத்துக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளப் பெரிதும் சிரமப்பட்டார் அவர்.

வழக்கம்போலவே சினிமா வசனங்களையும் நாடக பாணியிலேயே உரத்தக் குரலில் பேசினார். சினிமாவின் நுணுக்கங்களை அவரால் முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கனுக்கும் இது முதல் படம்தான் என்றாலும், அமெரிக்கரான அவர் மேலைநாடுகளின் மென்மையான வசனபாணியைப் பின்பற்றி படத்தை இயக்கிக்கொண்டிருந்தார். அத்தகையவருக்கு எம்.ஜி.ஆரின் நாடக பாணி நடிப்பும், வசன உச்சரிப்பும் எரிச்சலைத் தந்தது. ஆவேசத்தோடு இப்படி பேசுகையில் நடிப்பும் மிகையாக வெளிப்பட்டது. டங்கன் பலமுறை சொல்லியும் எம்.ஜி.ஆர் திருத்திக்கொள்ளவில்லை.

எம் ஜி ஆர்ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு எம்.ஜி.ஆரை தனியே அழைத்துச்சென்று, “மிஸ்டர் ராமச்சந்திரன், சினிமா  மனித உழைப்பினால் மட்டும் உருவாவது அல்ல; பல்வேறு தொழில்நுட்ப விஷயங்களின் ஒருங்கிணைப்பில் உருவாகிறது. நீங்கள் இயல்பாக பேசி நடியுங்கள். நான் பார்வையாளனுக்கு தக்கபடி அதைக் கொண்டு சேர்க்கிறேன். இது தொடர்ந்தால் உங்கள் சினிமா வாழ்வு பாதிக்கப்படும்” என மென்மையாக சொல்லிப் புரியவைத்தார். 

இத்தனை அல்லல்களுக்கு மத்தியில் கிடைத்த அரியவாய்ப்பை இழக்க விரும்பாத எம்.ஜி.ஆர் பெரும் முயற்சிகளுக்குப்பின் நாடக பாணி நடிப்பிலிருந்து வெளிவந்தார். சில நாட்களில் இயக்குநர் டங்கனே ஆச்சர்யப்படும்வகையில் எம்.ஜி.ஆரின் நடிப்பு மிளிர்ந்தது.

திரைப்படத்தின் நுணுக்கங்களை புரிந்துகொண்டாலும் நாடகத்தைத்தான் எம்.ஜி.ஆர் மிகவும் நேசித்தார். சினிமாவின் யதார்த்தங்களை உணர்ந்ததால் அவர் சினிமாவுக்குரிய உடல்மொழியில் நடித்து வெற்றிபெற்றார். ஆனால் அது எம்.ஜி.ஆருக்கு திருப்தியளித்த விஷயமல்ல. சினிமாவின் வெற்றிக்காக அவர் விருப்பமின்றி சில விஷயங்களை தியாகம் செய்யவேண்டியதானது.

'எம்.ஜி.ஆரின் அழுகை நடிப்பு சோபிக்காது என்றும், அழுகிற காட்சிகளில் அவர் முகத்தை காமிராவுக்கு காட்டமாட்டார்' என அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர் ஆரம்பநாட்களில் நாடகங்களில் கூட கிளிசரின் பயன்படுத்தமாட்டார். இயல்பாக நடிப்பதையே அவர் விரும்பினார். 'என் தங்கை' நாடகத்தில் துயரமான காட்சிகளுக்குத் தக்கபடி முகத்தில் உணர்ச்சிகளை வரவழைத்துக்கொண்டு அவர் அழும்போது அவரின் அழுகை பார்வையாளர்களை உருகவைத்துவிடும். சினிமாவிலும் அப்படியே நடிக்க அவர் ஆசைப்பட்டார். ஆரம்பத்தில் சில படங்களில் கிளிசரினை பயன்படுத்தாமல் இயற்கையாகவே அழுகை காட்சிகளில் நடித்தார். ஒரு படத்தில் நடித்துமுடித்து 'ரஷ்' பார்த்தபோது அவரது அழுகை நடிப்பு சோபிக்கவேயில்லை. காரணம் படமாக்கப்பட்டபோது இருந்த மின்விளக்கின் சூட்டினால் அவரது கன்னத்தில் வழிந்த நீர் உடனடியாக காய்ந்து உலர்ந்துபோனது. காட்சி எடுபடாமல் போனது. நாடகம் வேறு, சினிமா வேறு என்பதை அன்றுதான் முழுமையாக புரிந்துகொண்டார் எம்.ஜி.ஆர். 

சதி லீலாவதி திரைப்படம் வெளியாகி அபார வெற்றிபெற்றது. படத்தின் வெற்றியைவிட திரையுலகில் நாமும் நுழைந்துவிட்டோம் என்பதில் எம்.ஜி.ஆருக்கு பெரும் மகிழ்ச்சி. சதி லீலாவதியைத் தொடர்ந்து 'இரு சகோதரர்கள்' வாய்ப்பு. முதல் இரண்டு படங்களுக்குப்பின் வாய்ப்பின்றி இருந்தவருக்கு மீண்டும் எம்.கே.ராதா மூலம் 3-வது படவாய்ப்பு கிடைத்தது. 1938-ம் ஆண்டு 3-வது படமாக 'தட்சயக்ஞம்' வெளியானது.  இதில் கதாநாயகன் தட்சனாக எம்.ஜி.நடராஜபிள்ளை என்பவர் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருக்கு மகாவிஷ்ணு வேடம். படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் கல்கத்தாவிலேயே நடந்தது. இது கம்பெனி தயாரித்த மாயா மச்சீந்திரா படத்திலும் எம்.ஜி.ஆருக்கு ஒரு வேடம் கிடைத்தது. அதற்கு முன் அவர் நடித்து வெளியான படம் வீர ஜெகதீஸ்....இந்த படம் வெளியான சமயம் எம்.ஜி.சக்கரபாணிக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் பிறந்திருந்தது. 

எம் ஜி ஆர்இதனால் பெரியவனைப்போல் சின்னவனுக்கும் திருமணம் முடித்து விடவேண்டும் என்ற எண்ணம் சத்தியபாமாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படவில்லை. “சினிமாவில் பேரும் புகழும் பெறவேண்டும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். திருமணம் அதற்குத் தடையாக இருக்கும். சினிமாவில் அப்படி ஒரு நிலையை எட்டியபின்தான் திருமணத்தைப் பற்றி சிந்திப்பேன்” என உறுதியாக தெரிவித்துவிட்டார். 

உள்ளம் உறுதி காட்டினாலும் 22 வயது வாலிபனால் இயற்கையான உணர்ச்சிகளை ஒளித்துவைக்கமுடியுமா?... அப்போது எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம்பெண் வசித்துவந்தார். இளமையும் அழகும் இணைந்த வசீகரமான இந்த இளம்பெண் மீது எம்.ஜி.ஆருக்கு  ஒருவித ஈர்ப்பு இருந்தது.

படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வில் இருக்கும் சமயங்களில் அந்தப் பெண் எம்.ஜி.ஆர் வீட்டுக்குள் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வருவார். அப்போது அவளைக் கவர்வதற்காக எம்.ஜி.ஆர் ஒரு ஆர்மோனியப் பெட்டியை எடுத்துவைத்துக்கொண்டு ஏதாவது கத்திப்பாடுவார். அதை அந்தப் பெண் ஓரக்கண்ணால் பார்த்தபடி செல்வதைக் கண்டு ரசிப்பார் எம்.ஜி.ஆர்.

கொஞ்சநாளில் இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்ளத்துவங்கினர். அரசல் புரசலாக சத்தியபாமாவின் காதுகளுக்கு இந்த சேதி வந்துசேர்ந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருந்தால் என்ன ஆகும் என பழுத்த அனுபவசாலியான அவருக்குத் தெரியாதா?! கொஞ்சநாட்களில் அந்த வீட்டை காலி செய்துகொண்டு வேறு இடத்துக்கு குடிபுகுந்தார்.எம்.ஜி.ஆர் தாடிவிட ஆரம்பித்தார்.

அதன்பின் தீர்க்கமாக ஒரு முடிவெடுத்தார் சத்தியபாமா. சக்கரபாணியுடன் கலந்துபேசியவர், எம்.ஜி.ஆரின் 'வீரஜெகதீஷ்' பட ஸ்டில் ஒன்றைப் பையில் பத்திரப்படுத்தியடி பாலக்காட்டுக்கு ரயில் ஏறினார்...

சத்தியபாமா எதற்கு பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்...

http://www.vikatan.com/news/coverstory/82420-first-love-of-mgrlife-history-of-mgr--series--17.html

Link to comment
Share on other sites

'இழந்த காதலும்' எதிர்பாராமல் நடந்த எம்.ஜி.ஆரின் திருமணமும்... நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 18

எம்.ஜி.ஆர்

21 வயதில் எம்.ஜி.ஆருக்கு அந்த வயதுக்கே உரிய காதல் எண்ணம் அரும்பியது. திரைப்படங்களில் கதாநாயகிகளை உருகி உருகி காதலித்து வெற்றிபெற்ற எம்.ஜி.ஆரால் தன் முதல் காதலில் வெற்றிபெற முடியாமல் போனது ஆச்சர்யமல்ல. தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாயிற்றே! 

இளைய மகனும் திருமண வயதை எட்டிவிட்டதை உணர்ந்த சத்தியபாமா, பெரிய பிள்ளையைப் போன்றே ராம்சந்தருக்கும் உறவிலேயே பெண் பார்த்து திருமணத்தை முடித்துவைக்க முடிவெடுத்தார். பாலக்காட்டில் சில நாட்கள் தங்கி அப்படி ஒரு பெண்ணை தேடிப்பிடித்தார். 

பாலக்காட்டில் துாரத்து உறவினர் ஒருவருடைய மகள்தான். பெயர் பார்கவி. நல்ல கோதுமை நிறம். கேரளாவுக்கே உரிய அழகு. மகனுக்கு நிச்சயம் பிடித்துவிடும் என்ற நம்பிக்கையில் திருமணத் தேதியையே குறித்துவிட்ட சத்தியபாமா, “என்ன செய்வாய் என்று தெரியாது. தம்பியை உடனே பாலக்காட்டிற்கு அனுப்பிவை. நீயும் வந்துவிடு”- என நிலைமையைச் சொல்லி சக்கரபாணிக்கு கடிதம் எழுதினார். ஆனால் தம்பியின் சுபாவம் அறிந்தவரான சக்கரபாணி, திருமணம் நிச்சயமான தகவலை சொன்னால் கோபப்படுவானே தவிர ஒப்புக்கொள்ளமாட்டான் என்பதை உணர்ந்திருந்தார்.

எம் ஜி ஆர்அம்மாவின் கடிதத்தை கையில் வைத்துக்கொண்டு அன்றிரவு முழுவதும் யோசித்து ஒரு தீர்வு கண்டார். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்றுதான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே...பெரியவர் சக்கரபாணி சொன்னது ஒரே பொய்தான். 

“ஊருக்கு போன இடத்தில் அம்மாவுக்கு உடல் சுகமில்லையாம். உடனே உன்னையும் மணியையும் பார்க்கனும்னு புலம்பறதா உறவினர்கள்ட்ட இருந்து தபால் வந்திருக்கு. உடனே புறப்பட்டுப் போ... நானும்  அண்ணியும் பின்னாடியே வர்றோம்” 

'அம்மாவுக்கு உடல் சுகமில்லையா'

- அதிர்ந்துபோன எம்.ஜி.ஆர் அடுத்த ரயிலிலேயே பாலக்காட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு போனபின்தான் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து தாயிடம் கோபப்பட்டார். 'திருமணத்திற்கு சம்மதிக்கவில்லையென்றால் தான் பாலக்காட்டிலேயே செத்துப்போவேன் என சத்தியபாமா மிரட்டிப் பணியவைத்தார். ஆனாலும் கோபம் இருந்தது. எல்லாம் பார்கவியை பார்க்கும்வரையில்தான். மணமேடையில் பார்கவியை பார்த்தபின் அவரது கோபம் போன திசை தெரியவில்லை.

'திருமண உடையாக தான் கதர்தான் அணிவேன்' என்ற ஒற்றை நிபந்தனையுடன் பார்கவி கழுத்தில் தாலி கட்டினார் எம்.ஜி.ஆர். (பார்கவியுடனான எம்.ஜி.ஆரின் திருமணம் நடந்தது 1939 ம் ஆண்டின் பிற்பகுதி என்றே கணிக்கமுடிகிறது. அதுபற்றிய தெளிவான குறிப்பு எங்கும் கிடைக்கப்பெறவில்லை.)

சென்னையில் எம்.ஜி.ஆரின் இல்லற வாழ்வு துவங்கியது. அப்போதுதான் எம்.ஜி.ஆர் நடித்து 'மாயா மச்சீந்திரா' படம் வெளியாகி இருந்தது. அப்போதுதான் தனது கணவர் சினிமா நடிகர் என்ற விஷயமே பார்கவிக்கு தெரியவந்தது. 

சுத்த சைவமான பார்கவி கணவருக்காக சைவ உணவுகளை சமைக்கக் கற்றுக்கொண்டார். சக்கரபாணி குடும்பத்தினருடன் எளிதாக ஒட்டிக்கொண்டார். எந்த மனவேறுபாடுமின்றி இயல்பாக அவர் எல்லோரிடமும் பழகிய விதம் சத்தியபாமாவுக்கு மகிழ்ச்சியளித்தது. மகனுக்கு நல்லதொரு மனைவி வாய்த்ததில் அவருக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி. தனது மகள் தங்கமணி உயிரோடு இருந்தால் எப்படியெல்லாம் இருப்பார் என கற்பனை செய்திருந்தாரோ அப்படியே பார்கவியின் குணம் இருந்ததும் அவருக்கு கூடுதல் சந்தோஷம். 

இதனால் மருமகளை தங்கமணி என்ற தனது மகளின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார். பார்கவி என்ற தனது சொந்தப் பெயரையே மறந்துவிடும்படி கொஞ்சநாளில் உறவினர்கள் அனைவராலும் தங்கமணி என்றே அழைக்கப்பட்டார் பார்கவி.

எம்.ஜி.ஆர்இல்லற வாழ்க்கை இனிதாக கடந்துகொண்டிருந்தாலும் எம்.ஜி.ஆரின் சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. அரிதாகவே வாய்ப்புகள் வந்தன. அதுவும் சிறுசிறு பாத்திரங்கள். கதாநாயகன் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு அவை வெறுப்பையே தந்தன. என்றாலும் பொருளாதார சூழலுக்காக அவற்றில் நடித்துவந்தார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அவர் எதிர்பார்த்த கதாநாயகன் கனவு நிறைவேறும் நாள் வந்தது. 

நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது. கோவை சென்ட்ரல் ஸ்டுடியோவில் இதன் படப்பிடிப்பு துவங்கிய சிலநாட்களில் தயாரிப்பாளருக்கும் படத்தின் இயக்குனர் நந்தலால் என்பவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 

இன்னொரு பக்கம் எம்.ஜி.ஆருக்கும் மனவருத்தமடையச் செய்யும் சில சம்பவங்கள் நடந்தன. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார். கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த  அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.

அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து, 'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட, எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார். எம்.ஜி.ஆர் மனதில் இது நீங்காத காயத்தை ஏற்படுத்திவிட்டது. ஆயினும் அரிதாக கிடைத்த கதாநாயகன் வாய்ப்பை அவசரப்பட்டு இழந்து எதிர்காலத்தை கெடுத்துக்கொள்ளக்கூடாது என தன் வேதனையை வெளிக்காட்டாமல் தொடர்ந்து நடித்தார்.

ஆனால் விதி வேறுவிதமாக வேலை செய்தது. அடுத்த சில நாட்களில் தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் இடையே மோதல் முற்றி படமே நின்றது. கதாநாயகன் கனவு கலைந்த விரக்தியில் எம்.ஜி.ஆர் வீட்டில் முடங்கிக்கிடந்தார் சில மாதங்கள். அதேசமயம் அவருக்கு சினிமாத்துறை மீது கோபமும் எழுந்தது.  அந்தக் கோபத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முடிவெடுத்தார் அவர்.

என்ன முடிவு அது..?

http://www.vikatan.com/news/coverstory/82552-mgrs-first-marriage-held-at-palakkad---life-history-of-mgr--episode--18.html

Link to comment
Share on other sites

"சினிமாவை வெறுத்து இராணுவத்தில் சேரப்போன எம்.ஜி.ஆர்” : நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் 19

எம் ஜி ஆர்

சினிமா வாய்ப்புகள் இல்லாததும், கதாநாயகனாக நடிக்க கிடைத்த வாய்ப்பும் கடைசி நேரத்தில் கைநழுவிப்போன விரக்தியில் எம்.ஜி.ஆர் தீவிர சிந்தனை வயப்பட்டார். 'திருமணமாகிவிட்டதால் அடுத்தடுத்து குடும்பத்தில் பொருளாதார சிக்கல்கள் அதிகரிக்கலாம்;  நாடக சம்பாத்தியத்தில் அவற்றை ஈடுகட்டமுடியாது. அதேசமயம், “டேய் நம்ம ராம்சந்தர் சினிமாவில் நடிக்கிறான்டா” என அவனது நண்பர்கள் அவரை உயரத்தில் வைத்து கொண்டாடிக்கொண்டிக்கிறார்கள். இந்த நேரத்தில் சினிமாவில் கிடைத்த தோல்வியோடு நாடகத்திற்கே திரும்பினால் அவர்கள் முகங்களில் எப்படி விழிப்பது”.. 'ராம்சந்தர் தோத்துட்டான்டா' என அதே வாயால் அவர்கள் கேலி செய்ய மாட்டார்களா..' பல இரவுகள் எம்.ஜி.ஆருக்கு இதே சிந்தனை. தீவிர சிந்தனைக்குப்பின் சினிமா சாராத ஒரு தொழிலுக்கு சென்றுவிடுவதென்ற ஒரு தீர்மானத்திற்கு வந்தார். அதாவது யாருக்கும் தெரியாமல் சினிமாவை விட்டே முற்றாக விலகுவது என்ற முடிவு!

சென்னையில் அப்போது இரண்டாம் உலகப்போருக்கான சூழல் நெருங்கிக்கொண்டிருந்த நேரம் என்பதால் ராணுவத்திற்கு ஆட்கள் தேர்வு செய்துகொண்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்துவிட்டால் எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று எம்.ஜி.ஆர் நம்பினார். ராணுவத்திற்கான தேர்விலும் பங்கேற்றுவிட்டு கடிதத்திற்காக காத்துக்கொண்டிருந்தநேரத்தில்  மீண்டும் ஒரு சினிமா தயாரிப்பு கம்பெனியிலிருந்து அழைப்பு வந்தது அவருக்கு. சாதாரண வேடம் இல்லை... கதாநாயகனாக! 

எம்.ஜி.ஆர்அதேசமயம் எம்.ஜி.ஆர் ராணுவத்தில் வேலைக்கு சேருவதென எடுத்த முடிவு தாயார் சத்தியபாமாவுக்கு தெரியவர கொதித்துப்போனார். “ தங்கம்போல இரண்டு பசங்களை பெத்திருக்கேன். எங்கேயோ கண்காணாத இடத்துல போய் நீ இருக்கியா இல்லையான்னு சந்தேகத்தோட நான் என் வாழ்க்கையை வாழனுமா...அப்படி ஒண்ணும் நீ லட்சம் லட்சமாக சம்பாதிக்கத்தேவையில்ல...இங்கவே இரு....”

மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார் எம்.ஜி.ஆர். ஆனால் சொன்னபடி வாய்ப்பு தரவில்லை அந்த சினிமா நிறுவனம். ஆனால் இந்த முறை விரக்தியடையவில்லை, சினிமா வாய்ப்புகளுக்காக  ஸ்டுடியோக்களின் கதவுகளைத் தட்ட ஆரம்பித்தார். 

அப்படி கிடைத்ததுதான் அசோக்குமார் பட வாய்ப்பு. அன்றைய சூப்பர் தியாகராஜ பாகவதருடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு எம்.ஜி.ஆருக்கு மகிழ்ச்சியளி்த்தது. அந்த காலகட்டத்தில் வாழ்க்கை ஏற்ற இறக்கத்துடன் இருந்ததால் பார்கவியுடனும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தமுடியவில்லை அவரால். அத்தனை மன்ச்சோர்வுக்குள்ளாகியிருந்தார் அக்காலத்தில். இருந்தாலும் 'சினிமாவில் என்றாவது ஒருநாள் நாம் வென்றுவிடுவோம்' என்ற நம்பிக்கை மட்டும் மனதில் கனன்றுகொண்டேயிருந்தது. 

அப்போது இரண்டாம் உலகப்போருக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன. போரின் விளைவாக சென்னை நகரத்தின் மீது குண்டுகள் பொழியும் என்று பீதி மக்களிடையே பரவலாக பேசப்பட்டது. சென்னையின் பிரபலஸ்தர்கள் பலரும் வந்தவிலைக்கு தங்கள் சொத்துக்களை விற்றுவிட்டு ரயில் ஏறினார்கள் சொந்த ஊருக்கு. சத்தியபாமாவும் அந்த யோசனையை தெரிவித்தார் மகன்களிடம். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. சினிமாவில் வெற்றிபெறுவதற்கான காலம் கனிந்துவரும் சூழலி்ல் உயிருக்கு பயந்துபோய் ஓடிவிடுவதா என சகோதரர்கள் இருவருமே தெளிவாக சொன்னார்கள். சத்தியபாமா, “குறைந்தது மருமகள் பிள்ளைகளை மட்டுமாவது பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பிவிடலாம். போர் முடிந்து ஆபத்து இல்லையென்பது முடிவானபின் அழைத்துக்கொள்ளலாம்” என்று யோசனை சொன்னார். அதை ஏற்றார்கள் மகன்கள்.

ஆனால்கணவரைப் பிரிய இரு மருமகள்களுமே சம்மதிக்கவில்லை. இறுதியாக ஒப்புக்கொண்டனர். ரயில் நிலையத்தில் தங்கமணியும், சக்கரபாணி மனைவி நாணிக்குட்டியும் அழுது அழுது விங்கிய கண்களுடன் பாலக்காட்டிற்கு புறப்பட்டனர். பாலக்காட்டிலிருந்து தங்கமணி கணவருக்கு கடிதம் எழுதியபடியே இருந்தார். பார்கவி புறப்பட்டுச் சென்ற 20 வது எம்.ஜி.ஆருக்கு திடீரென மனைவியின் ஞாபகம் நினைவில் வந்துவந்து சென்றது. மறுநாள் அம்மாவிடம் சொல்லிவிட்டு பாலக்காட்டிற்கு புறப்பட்டு சென்றார். சென்னையில் எம்.ஜி.ஆர் புறப்பட்ட அதேநேரத்தில் பாலக்காட்டிலிருந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு தந்தி அனுப்பப்பட்டது.

தந்தி சென்னை வந்துசேர்ந்த சமயம் எம்.ஜி.ஆர் பாலக்காட்டில் தங்கமணி வீட்டை அடைந்துவிட்டார். மகிழ்ச்சியான மனநிலையில் வீட்டிற்குள் நுழைந்தவருக்கு அதிர்ச்சி. தங்கமணியின் படத்திற்கு மாலைபோட்டி வத்தி ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. 'ஐயோ' என்று அலறியபடி கீழே விழுந்தார் எம்.ஜி.ஆர். சக்கரபாணி மனைவி நாணிக்குட்டி மச்சினரைத் தேற்றி விஸயத்தைச் சொன்னார்.

எம்.ஜி.ஆர்

முன்தினம் காலை மார்பு வலிப்பதாக சொல்லி தண்ணீர் வாங்கிக்குடித்த தங்கமணி சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்து இறந்திருக்கிறார். உடனடியாக எம்.ஜி.ஆருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்கள். தந்தி வருவதற்கு முன்பே எம்.ஜி.ஆர் கிளம்பிவிட்டதால் இந்த விபரங்கள் தெரியாமல் அவர் வந்து சேர்ந்திருக்கிறார். நாயர் வகுப்பினரின் குல வழக்கப்படி உடலை சீக்கிரம் புதைத்துவிட்டிருக்கிறார்கள். பேரிடியாக சொல்லப்பட்ட இந்த தகவலால் நொந்துபோனார் எம்.ஜி.ஆர். மனைவியின் உடலைக்கூடபார்க்கமுடியாமல் போன சோகத்திலிருந்து அவர் மீள பல மாதங்கள் ஆனது.  

இதனிடையே சினிமா வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. சிறுசிறுவேடங்கள் என்றாலும் நடிக்க ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் தமிழறியும் பெருமாள்,  தாசிப்பெண், ஹரிச்சந்திரா படங்கள் வெளியாகின. இதன்பிறகு சாலிவாஹனன். எம்.ஜி.ஆருக்கு இந்த படத்தினால் பெரிய புகழ் ஒன்றும் கிடைத்துவிடவில்லை என்றாலும் வேறொரு வகையில் இந்தப் படம் எம்.ஜி.ஆர் வாழ்வி்ல் முக்கியத்துவம் பெற்றது. ஆம்... இந்த படத்தில்தான் தன் வாழ்வின் பிற்பகுதியில்  தன்னுடைய நெருங்கிய நண்பராகப்போகிற முக்கிய நபர் ஒருவரை அவர் சந்தித்தார். அந்த சந்திப்பிற்குப்பிறகு எம்.ஜி.ஆர் தன் திரைப்பட வாழ்வின் வளர்ச்சிக்கான  முக்கியமான முடிவுகளை எடுத்தார். 

யார் அவர்....

தொடரும்..

http://www.vikatan.com/news/coverstory/82866-mgr-fed-up-planned-to-leave-cinema-industry-life-history-of-mgr---episode-19.html

Link to comment
Share on other sites

“எம்.ஜி.ஆரைக் கண்டு பிரமித்த சின்னப்பா தேவர்” : நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் : அத்தியாயம்-20

எம் ஜி ஆர்

1945 ல் வெளியான 'சாலிவாஹனன்' எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் பெரிய அளவு அந்தஸ்து அளித்த படம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திரையுலகில் வெற்றிபெறுவதற்காக எம்.ஜி.ஆர்  சில முன்னெடுப்புகளை எடுத்துக்கொள்ளக் காரணமான படம் எனலாம். பின்னாளில் தன் திரைப்பட வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறப்போகும் தயாரி்ப்பாளர் ஒருவரை சாதாரண நடிகராக இந்தப் படத்தயாரிப்பின்போதுதான் எம்.ஜி.ஆர்  சந்தித்தார். அவர் சாண்டோ எம்.எம்.ஏ சின்னப்பா தேவர்! 

எம்.ஜி.ஆர் தன் நெருங்கிய நண்பர்களில் சிலரைத்தான் 'முதலாளி' என அழைப்பார். அந்த அரிதான மனிதர்களில் சின்னப்பா தேவர் குறிப்பிடத்தக்கவர். தேவர், எம்.ஜி.ஆரை 'ஆண்டவனே' என்று அழைப்பார். அத்தகைய நெருக்கமான நட்பு கொண்டிருந்தனர் ஒருவருக்கொருவர். 

கோவை ராமநாதபுரத்தில் 1915 ஜுன் 28-ம் தேதி பிறந்தவர், மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் என்கிற எம். எம். ஏ சின்னப்பா தேவர். பெரும் முதலாளிகள் கோலோச்சி வந்த திரையுலகில், அரைகுறை ஆங்கிலமும் கொச்சைத் தமிழுமாக திரையுலகில் வெற்றிகரமான தயாரிப்பாளராக விளங்கியவர் அவர். 

எம் ஜி ஆர்வறுமையினால் ஐந்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல்,கோவை "ஸ்டேன்ஸ் மோட்டார் கம்பெனி" யில் தொழிலாளியாக சேர்ந்து, தொடர்ந்து  பால் முகவர், அரிசி வியாபாரி என அடுத்தடுத்து பல தொழில்களில் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் நட்டமடைந்து பிறகு சோடா கம்பெனி ஒன்றையும்  கொஞ்ச காலம் நடத்தியவர். ஆனால் சோர்ந்துபோகாமல் தன் உழைப்பின்மீது நம்பிக்கையோடு தொடர்ந்து உழைத்தவர் சின்னப்பா தேவர்.

இயல்பிலேயே வீர தீர விளையாட்டுகளில் ஆர்வமுடையவரான சின்னப்பா தேவர், தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து "வீரமாருதி தேகப் பயிற்சி சாலை" என்ற உடற்பயிற்சி நிலையத்தையும் தன் இளமைப் பருவத்தில் நடத்தியவர். ஓய்வு நேரங்களில் மல்யுத்தம், கத்திச்சண்டை, கம்புச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதனால் கட்டு மஸ்தான தேகத்துடன் கம்பீரமாக இருப்பார். இதுவே அவரது வாழ்க்கையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. 

நாடக உலகிலிருந்து சினிமாவுக்கு நடிகர்கள் ஊர்ந்துகொண்டிருந்த அக்காலத்தில், நாடக உலகில் வரவேற்பு பெற்றிருந்த புராண இதிகாச படங்களே, திரைப்படங்களாக மீண்டும் தயாரிக்கப்பட்டன. இது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றன. புராண வேடங்களுக்கு ஏற்ற உடற்கட்டு மிக்க நடிகர்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவைப்பட்டனர். புராண படங்களை எடுப்பதில் அப்போது புகழ்பெற்றிருந்த 'ஜுபிடர் பிக்சர்ஸ்' நிறுவனம் அப்போது வரிசையாக அம்மாதிரி திரைப்படங்களைத் தயாரித்து வந்தது. பின்னாளில்  பிரபலமாக விளங்கிய கலைஞர்கள் பலர் அந்நாளில் ஜுபிடரில் மாதச் சம்பள ஊழியர்கள். சின்னப்பா தேவருக்கு அந்த நிறுவனத்தின் படங்களில் சிறுசிறு வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. மற்ற சில நிறுவனங்களிலும் அவர் தொடர்ந்து நடித்துவந்தார்.

அப்படி கிடைத்த ஒரு வாய்ப்புதான் 'சாலிவாஹனனி'ல் பட்டி என்கிற வேடம். முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் இணைந்த அவர் அந்தப் படத்தில், தான் எம்.ஜி.ஆரை சந்தித்த அனுபவத்தை அந்நாளைய பத்திரிகை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்...

“கோவையில் 'சாலிவாஹனன்' படம் தயாராக ஆரம்பித்திருந்த சமயம், விக்ரமாதித்தனுக்கு துணையான பட்டி வேஷத்தை எனக்கு அதில் கொடுத்திருந்தார்கள். ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து முருகா என்று சொல்லியபடி வேஷம் அணிந்து வெளியே வந்தபோது, எதிரே கம்பீரத்துடன் ராஜ உடையில்  ஒருவர் நின்றிருந்தார். பார்த்த மாத்திரத்திலேயே வசீகரப்படுத்தும் உருவம். தங்கத்தை ஒத்த மினுமினுப்பான தேகம்.உள்ளத்தின் தெளிந்த நிலையையும், களங்கமற்றத் தன்மையையும் காட்டும் முகம். கருணை கொண்ட ஒளி வீசும் கண்கள். நான் ஒரு வினாடி நின்றுவிட்டேன். என்னைப் பார்த்த அவரும் அப்படியே நின்றுவி்ட்டார். என் கண்கள் முதலில் பேசின. உதடுகள்மெல்ல அசைந்தன. 'நீங்கதான் பட்டியாக இதில் நடிக்கிறீர்களா...' குரலில் வெண்கலத்தின் எதிரொலி.

'ஆமாம்.' 

மேலே நான் ஏதோ கேட்க விரும்புகிறேன் என்பதை அவர் எப்படியோ புரிந்துகொண்டுவிட்டார். 

'நான்தான் இதிலே விக்கிரமாதித்தன். என் பெயர் எம்.ஜி. ராமச்சந்திரன். உங்கள் பெயரை நான் தெரிந்துகொள்ளலாமா?' என்றார் அடக்கத்துடன்.

ஆச்சர்யம் விலகாமல் என் பெயர் ஊர் வகுப்பு இவற்றை சொல்ல ஆரம்பித்தேன். 

அப்போது நான் நல்ல திடகாத்திரமாக இருப்பேன். அகன்ற மார்பு, குன்றுகளை நிகர்த்த தோள்கள் என்றெல்லாம் சொல்வார்களே அதேபோல எனது தேகமும் இருக்கும். இதற்குக் காரணம்  நான் செய்துவந்த தேகப்பயிற்சியும் கலந்துகொண்ட விளையாட்டுக்களுமே.

எனது தேகத்தை பார்த்த எம்.ஜி.ஆர், 'உங்க பாடியை நன்றாக வைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேகப்பயிற்சி செய்கிறீர்களா' என்று வினவினார். 'ஆம்' என்றேன். இப்படி எங்களது அறிமுகம் எங்களுக்குள்ளேயே நடந்தது. வேறு யாரும் எங்களை அறிமுகம் செய்து வைக்கவில்லை. வணக்கம் என்ற வார்த்தையுடன் அன்று நாங்கள் பிரிந்தோம். ஆனால் அதே வார்த்தையுடன் மறுநாள் மீண்டும் சந்தித்தோம்.

எம் ஜி ஆர்

தொடர்ந்து எங்களைப்பற்றிய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டோம். எங்கள் நட்பு வளர ஆரம்பித்தது. ஆலவிருட்சத்தின் வேர்களைப் போன்று ஆழமாகப் பதிந்து அதன் விழுதுகளைப்போல படர ஆரம்பித்தது.

கோவை ராமநாதபுரத்தில் வீரமாருதி தேகப்பயிற்சி சாலை என ஒன்றுள்ளது. அங்கு அடிக்கடி நான் போய் தேகப்பயற்சி செய்வேன். எம்.ஜி.ஆருடன் அறிமுகமானபின் அங்கு நாங்கள் சேர்ந்தே செல்வோம். எம்.ஜி.ஆர் அங்கு அடிக்கடி வந்து பலவிதமான தேகப்பயிற்சிகளை செய்வார். பளுதூக்குதல், பார் வேலைகள் செய்தல், மல்யுத்தம், குத்துச்சண்டை கத்திச்சண்டை சிலம்பம், கட்டாரி இப்படியாக பலப் பயிற்சிகளில் ஈடுபடுவார். 

அவர் மட்டுமே பயிற்சிகளைச் செய்துவிட்டு போக மாட்டார். அங்கு பயிற்சிக்கு வரும் மாணவர்களுக்கும் இவற்றை பொறுமையுடன் சொல்லிக்கொடுப்பார். அவர் கற்றுக்கொடுப்பாரே தவிர, அவருக்கு யாரும் எதையும் கற்றுக்கொடுத்து நான் பார்த்ததில்லை. இவற்றையெல்லாம் நான் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கும் இம்மாதிரியான ஸ்டண்ட் வேலைகளில் விருப்பம் அதிகமுண்டு என்பதை தெரிந்துகொண்ட அவர், என்னை அழைத்து. 'சினிமாவில் இப்படித்தான் கத்திச்சண்டை இருக்கவேண்டும். கம்புச் சண்டைகளும் சிலம்புச் சண்டைகளும் இப்படித்தான் அமைக்கவேண்டும்' என்று சொல்வார். 

குறிப்பாக சினிமாவில் ஸ்டண்ட் காட்சிகளை எப்படி புகுத்தவேண்டும் எந்த இடத்தில் புகுத்தவேண்டும், எப்படி அமைக்கவேண்டும் என்பதையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தவர் அவர்தான்.

எம்.ஜி.ஆர்கோவையில் என் வீடும் அவர் தங்கியிருந்த இடமும் சில அடி தூரங்களில்தான் இருந்தது. படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நாங்கள் உலாவுவோம். அப்படி பல சமயங்களில் மருதமலை முருகன் கோவிலுக்குப் போவோம். 

ஜுபிடரில் ஸ்ரீமுருகன் படத்தில் நடித்து முடித்தபின் அவருக்கு 'ராஜகுமாரி' வாய்ப்பு வந்தது. ஆனால் அத்தனை எளிதாக அது கிடைக்கவில்லை. போராடித்தான் அப்படியொரு வாய்ப்பை பெற்றார். அதுவும் நிச்சயமானதா என்று நிலையில்லை.

அந்த படத்தில் கதாநாயகனுடன் சண்டையிடும் ஒரு முரடன்வேடம் உண்டு. 'அதில் நீங்கள்தான் நடிக்கவேண்டும்' என்றார். எனக்கு மகிழ்ச்சிதான். மறுநாள் தயாரிப்பாளர்களை சந்தித்து என்னை அந்த வேடத்துக்குப் போடும்படி சிபாரிசு செய்தார். 
'உங்களை கதாநாயகனாகப்போட்டு படம் எடுப்பது இதுதான் முதல்தடவை. அப்படியிருக்க பிரபலமில்லாத  ஒருவரைப்போய் நீங்கள் இப்படி சிபாரிசு செய்யலாமா?... பெரிய ஆளாகப்போட்டு எடுத்தால் நல்ல விளம்பரம் கிடைக்கும்' என்று அவர்கள் எதிர்வாதம் செய்தார்கள். 
ஆனால் எம்.ஜி.ஆர் விடவில்லை. 

'நம்மிடையே திறமையுள்ளவர்கள் இருக்கும்போது வெளி ஆள் எதற்கு? படம் எடுத்துப்பார்ப்போம். திருப்தியாக இருந்தால் வைத்துக்கொள்வோம். எந்தவித வாய்ப்பும் தராமல் ஒருவரின் திறமையை எடைபோட்டுவிடக்கூடாது தேவரையே போடுங்கள்' என்று ஆணித்தரமாக சொல்லிவிட்டார்.  தனது நிலையே  ஆட்டம் கண்டுகொண்டிருக்கும் நேரத்தில் எதிராளிக்கு சிபாரிசு செய்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு நடிகரை அப்போதுதான் முதன்முறையாகப் பார்த்தேன்.  

இறுதியாக அந்த வேடத்தை எனக்கே தந்தார்கள். 

'அண்ணே இந்த ஃபைட்டிங் சீன்ல பிச்சு உதறுறீங்க.. பிரமாதமாக செய்யுங்க...' என்று படம் முழுக்க உற்சாகப்படுத்தினார்.

முன்னுக்கு வரவேண்டும் என்ற ஆர்வம். அதேசமயம் எனக்கும் அவருக்கும் சேர்ந்து கிடைத்திருக்கும் முதல் பெரிய சந்தர்ப்பம். இரண்டும் எங்கள் உற்சாகத்தை வளர்த்தன.”  

இப்படி தான் புகழடையாத காலத்திலேயே மனிதாபிமானம் மிக்கவராக எம்.ஜி.ஆர் திகழ்ந்ததை விவரித்திருக்கிறார் தேவர். 
எம்.ஜி.ஆரின் ஆரம்ப கால நண்பரான தேவர் பின்னாளில் படத்தயாரிப்பாளராக மாறி படங்களைத் தயாரித்தபோது எம்.ஜி.ஆர் மீதான ஒரு அவப்பெயரை நீக்கி எம்.ஜி.ஆரின் வாழ்வில் முக்கியமான ஒரு நபராகவும் மாறினார். 

திரையுலகில் எம்.ஜி.ஆருக்கு இருந்த அவப்பெயர் என்ன...அதை தேவர் எப்படி நீக்கினார்?...

http://www.vikatan.com/news/coverstory/83520-chinnappa-devar-admires-mgr-life-history-of-mgr-episode-20.html

Link to comment
Share on other sites

தேவருடன் எம்.ஜி.ஆர் செய்துகொண்ட ஒப்பந்தம்; நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்- 21

எம் ஜி ஆர்

'சாலிவாஹனன்' படத்தின் படப்பிடிப்பில் சந்தித்துக்கொண்ட சாண்டோ சின்னப்பா தேவர் - எம்.ஜி.ஆர் நட்பு இறுகி இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். பிரபலமாகாத காலத்தில் பழக்கமான இருவரும் புகழடைந்தபின்னும் அதைத் தொடர்ந்தனர். நடிகரிலிருந்து தயாரிப்பாளராக உயர்ந்த சின்னப்பா தேவர் எம்.ஜி.ஆரைக்  கொண்டே தன் முதற்படத்தைத் துவக்கினார். தேவர் படங்களில் தொடர்ந்து நடித்ததன்மூலம் திரையுலகில் எம்.ஜி.ஆர் தன்மீதிருந்த அவப்பெயரை நீக்கிக்கொண்டார். 

ஆம், 'எம்.ஜி.ஆர் படங்கள் குறித்த தேதியில் வெளிவராது. அந்தளவுக்கு கால்ஷீட் சொதப்புவார். தன் விருப்பம்போல்தான் படத்தைத் திரையிட அனுமதிப்பார். தயாரிப்பாளரை படுத்தி எடுத்துவிடுவார். மொத்தத்தில் எம்.ஜி.ஆரை வைத்துப் படமெடுப்பது லாபம்தான் என்றாலும் அது யானையைக் கட்டித் தீனிபோடுவது போன்ற பெரும் பணி' - இவைதாம் அந்தப் புகார்கள். எம்.ஜி.ஆருக்கு இருந்த இந்தக் களங்கத்தைத் துடைத்தவர் சின்னப்பா தேவர்தான். 50 களின் மத்தியில் தேவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்திருந்தது. அதேசமயம் கையில் கொஞ்சம் காசும் இருந்தது. தன் தம்பி திருமுகமும் சினிமாவில் எடிட்டிங் மற்றும் இயக்கத்தில் அனுபவம் பெற்றிருந்ததால் சினிமாப்படங்கள் தயாரிப்பதென்ற முடிவுக்கு வந்தார். முடிவெடுத்ததும் நேரே போய் அவர் நின்றது எம்.ஜி.ஆரின் லாயிட்ஸ் சாலை இல்லத்தில்தான்.

எம்.ஜி.ஆர்வீட்டின் வாசலில் சில நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரிடம், “முருகா நான் படம் தயாரிக்கிறேன். நீங்கதான் ஹீரோ. நல்லபடியா நடிச்சுக்கொடுங்க... இந்தாங்க அட்வான்ஸ்” என வெள்ளந்தியாக சொன்ன தேவரை ஆச்சர்யத்துடன் பார்த்தார் எம்.ஜி.ஆர். காரணம் எம்.ஜி.ஆருக்கு அப்போது கொஞ்சம் மார்க்கெட் குறைந்திருந்த நேரம். தன் படங்கள் சரிவர போகாத நேரத்திலும் தன் மீது நம்பிக்கை வைத்து தேவர் தன்னை ஒப்பந்தம் செய்யவந்ததே எம்.ஜி.ஆரின் ஆச்சர்யத்துக்கு காரணம்.

அதேசமயம் மார்க்கெட் குறைந்திருந்த அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்போது தேவை ஒரு நல்ல கதையும் அதை எடுக்க சினிமாவில் அனுபவமும் நிர்வாகத்திறமையும் கொண்ட ஒரு பெரிய நிறுவனம். இதனாலேயே பல சிறுநிறுவனங்கள், அனுபவமில்லாதவர்களிள் வாய்ப்புகளை ஒப்புக்கொள்ளாமல் அப்போது தவிர்த்துவந்தார் எம்.ஜி.ஆர்.  மீண்டும் திரையுலகில் புகழ்வெளிச்சம் கிடைக்க ஒரு பெரிய நிறுவனத்தை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் முன்பணத்துடன் அவரைத்தேடி வந்தார் தேவர்.

படம் இல்லாத நேரத்தில் வரும் பட வாய்ப்பை ஒப்புக்கொள்வது புத்திசாலித்தனம் என்றாலும், 'சினிமா தயாரிப்பில் தேவருக்கு இது முதல்முயற்சி.. சினிமா தயாரிப்புக்கு முற்றிலும் புதியவர். ஏற்கெனவே, தான் ஆரம்பித்த சில தொழில்களில் நட்டங்களை சந்தித்தவர். அனுபவமிக்க புகழ்பெற்ற நிறுவனங்களே வெற்றியைத் தக்கவைக்கமுடியாமல் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில் தேவர் படம் தனக்கு எந்தளவுக்கு வெற்றியைத் தரும்' என்ற சிந்தனை எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. ஆனாலும் யோசித்து நேரம் கடத்தவில்லை. தேவர் மீது முழு நம்பிக்கையோடு மறுபேச்சின்றி வீட்டின் வாசலிலேயே வைத்து அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் இந்த உடனடி சம்மதத்திற்குப் பின்னணி ஒன்றுண்டு. 

அது என்ன பின்னணி?!

எம்.ஜி.ஆரும் தேவரும் தொடர்ந்து படங்களில் இணைந்து நடித்துக்கொண்டிருந்த நேரம் அது. 'மர்மயோகி' படத்தில் தேவரும் எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்துக்கொண்டிருந்த போது இருவருமே சினிமாவில் வெற்றிக்கோட்டைத் தொடப் போராடிக்கொண்டிருந்தார்கள்.

கோவையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் இருவருக்கும் ஓய்வு கிடைத்தால் மருதமலைக்குச் செல்வார்கள். ஒருமுறை அப்படிச் சென்றபோது, “முருகா, திறமையும் உழைப்பையும் போட்டு சினிமாவுல நாம் போராடுகிறோம். ஒருநாள் நாம இதில் கண்டிப்பாக வெற்றிபெறுவோம். அப்படி நம்மில் யார் ஒருவர் நல்ல நிலைக்கு வந்தாலும் மற்றொருவரை மறக்காமல் கைதூக்கிவிடவேண்டும்”- என்றார் தேவர். அதற்கு எம்.ஜி.ஆர், “கண்டிப்பாண்ணே” என உறுதி கொடுத்தார். தேவர் தன்னை ஒப்பந்தம் செய்ய வந்தபோது இந்த 'பழைய ஒப்பந்தம் எம்.ஜி.ஆரின் நினைவில் ஒருகணம் வந்துபோயிருக்கவேண்டும். அதனால்தான் படத்தின் வெற்றி தோல்வியைப்பற்றி சிந்திக்காமல் 'தாய்க்குப்பின் தாரம்' என்ற அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். 

எம்.ஜி.ஆர்

இரண்டு நண்பர்களின் நம்பிக்கையும் வீண்போகவில்லை. 'தாய்க்குப்பின் தாரம்' வெளியானபின் எம்.ஜி.ஆரின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்தது. மீண்டும் பெரிய தயாரிப்பாளர்களின் கார்கள் லாயிட்ஸ் சாலையில் அணிவகுக்க ஆரம்பித்தன. தேவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். பெரிய பெரிய நிறுவனங்களே மூக்கில் விரல்வைக்கும் அளவுக்கு படத்தயாரிப்பில் தேவர் ஒரு விஷயத்தைச் செயல்படுத்திக் காட்டினார். ஆம், தன் படங்களின் பூஜையன்றே அதன் வெளியீட்டுத்தேதியையும் அறிவிப்பார். ஒருநாள் முன்னதாகவோ தள்ளியோ இன்றி, குறித்தநேரத்தில் அது வெளியாகும். பெரிய நிறுவனங்களே பின்பற்றமுடியாத இந்த விஷயத்தை தேவர் எளிதாக சாத்தியப்படுத்தினார்.

தாய்க்குப்பின் தாரம் படத்தில் துவங்கி 1973 ல் வெளியான நல்லநேரம் வரை மொத்தம் 16 படங்கள் தேவர் ஃபிலிம்சுக்கு நடித்துக்கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். 

எம்.ஜி.ஆர்

ஆச்சர்யம் என்னவென்றால், 'படத்தைத் தாமதமாக முடித்துக்கொடுப்பார்’ என்றும் ’சரியான ஒத்துழைப்பு தரமாட்டார்' என்றும் கூறப்பட்ட எம்.ஜி.ஆரின் இந்தப் படங்கள் அனைத்தும் குறித்த தேதியில் வெளியாயின என்பதுதான். இதில் 'தேர்த்திருவிழா' என்ற படம் 16 நாட்களில் தயாரிக்கப்பட்டு வெளியானது என்பது திரையுலகம் இன்றும் நம்பாத விஷயம். இப்படி எம்.ஜி.ஆரை வைத்து, தான் தயாரித்த படங்களை குறித்த தேதியில் வெளியிட்டு அவருக்கு இருந்த அவப்பெயரை நீக்கினார் தேவர். எம்.ஜி.ஆர் படங்கள் தாமதமாவதற்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணமில்லை என்று திரையுலகம் அப்போதுதான் உணர்ந்தது.

தன் திரையுலக வாழ்க்கையில் ஒரு தயாரிப்பாளரின் படங்களில்  எம்.ஜி.ஆர் அதிகம் நடித்திருக்கிறார் என்றால் அவர், சின்னப்பா தேவர் ஒருவர்தான். எம்.ஜி.ஆர், ஜானகியை மணந்தபோது சாட்சிக் கையெழுத்திட்டதும் தேவர்தான் என்பது பலரும் அறியாத செய்தி.

http://www.vikatan.com/news/coverstory/83586-agreement-between-mgr-and-sandow-chinnappa-devar-a-life-history-of-mgr-series--20.html

Link to comment
Share on other sites

“எம்.ஜி.ராமச்சந்திரன் போடும் கத்திச்சண்டை பரவாயில்லை”- குத்தாத குண்டூசி!  நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம் -22

 

எம் ஜி ஆர்

சாலிவாஹனன் படத்தின் கதாநாயகன், ரஞ்சன். வில்லன், டி.எஸ் பாலையா. கதாநாயகிகள் அன்றைக்கு கவர்ச்சிக்கன்னி என ரசிகர்களால் சிலாகிக்கப்பட்ட டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் கே.எல்.வி வசந்தா. கதாநாயகன் ரஞ்சன், தமிழ்சினிமாவின் முதல் அஸ்டாவதானி நடிகர்.

விமானம் ஓட்டுவார். பரதம் ஆடுவார். பாடல் பாடுவார். உடலை வில்லாய் வளைத்து சண்டைபோடுவார். வாள் சண்டை, கத்திச் சண்டை என சகல துறையிலும் திறமைபெற்ற ஒருவர். மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற அவரது படங்கள் அன்றைக்கு மாஸ்டர் பீஸ் படங்கள். ஒருவகையில் எம்.ஜி.ஆருக்கு போட்டியாளர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சகலகலாவல்லவர் என்று சொல்லக்கூடியவராக இருந்தவர் ரஞ்சன். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி பின்னாளில் ஜெமினி தயாரித்த 'சந்திரலேகா' படத்தின்மூலம் இந்தித்திரையுலகிலும் நுழைந்து புகழடைந்தவர்.

தன் இறுதிக்காலத்தில் திரைத்துறையில் இருந்து விலகி அமெரிக்காவில் வசித்தபோதும் நடனம் கற்றுக்கொள்வதற்காக விமானம் பிடித்து சென்னைக்கு பறந்துவந்தவர். அந்தளவுக்கு கலைகளின் காதலன். மொத்தத்தில் மாஸ்டர் ஆஃப் ஆல் என்று சொல்லலாம். அப்படிப்பட்டவர் நடிப்பில் சாலிவாஹனன் திரைப்படம் 1945-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. படம் மக்களால் ரசிக்கப்பட்டபோதும் சில காரணங்களால் கடும் விமர்சனத்திற்குள்ளானது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல, படத்துக்கு அன்றைய பிரபல சினிமா இதழான குண்டூசி எழுதிய விமர்சனத்தை பார்க்கலாம். 

எம்.ஜி.ஆர்

“இந்தக் கதையை டைரக்டர் சீர்படுத்தவும் முயற்சிக்கவில்லை. அதற்குப் பதிலாக  அந்தக் காதல் நோய் பிடித்த காமிரா, நடிகைகளின் மார்பகங்களையே பார்த்துக்கொண்டு பதிவு செய்வதில் சிரத்தை காட்டியிருக்கிறார். கே.எல். வி வசந்தாவை வெறுக்கத்தக்கபடி மேலாடை தரிக்கச் செய்திருக்கிறார். மண்மிதிக்கும்போது வசந்தாவின் மார்பகங்களையே சில நிமிஷநேரம் குளோஷப்பில் காட்டச் செய்திருக்கிறார் டைரக்டர். ராஜகுமாரி தோற்றமும் இதுபோலவே படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.

ரஞ்சனுக்கு வேஷம் துளிக்கூடப் பொருத்தமில்லை. அவரது முகத்தோற்றம் அவருக்கு எதிராக நிற்கிறது. மேக் அப் சகிக்கக்கூடியதாக இல்லை. முகத்தில் வீரத்துக்குப் பதில் அசடும் அறியாமையும் தாண்டவமாடுகின்றன. அவர் தன் படங்களில் கூட நடிக்கும் நடிகைகளை வாரித்துாக்குவதை அவர் தனது டிரேட் மார்க் ஆக ஆக்கிக்கொள்ள விரும்புகிறார்.  அவருடன் காதல் காட்சிகளில் டி.ஆர். ராஜகுமாரி நன்றாக நடித்திருக்கிறார்.....”-  நீளமான இந்த விமர்சனத்தின் இடையே அந்த பத்திரிகை ஒரு கதாபாத்திரத்தை மட்டும் பட்டும் படாமல் ஒரேவரியில் பாராட்டியிருந்தது. 

அது, எம்.ஜி.ஆர் பற்றியதுதான். “எம்.ஜி.ராமச்சந்திரன் போடும் கத்திச்சண்டை பரவாயில்லை.” என்ற அந்த ஒருவரியினால் உச்சிக்குளிர்ந்துப்போனது எம்.ஜி.ஆருக்கு. கதாநாயகனை கண்டமேனிக்கு சாடியும் அதேசமயம் துணைபாத்திரத்தை பாராட்டியும் எழுதப்பட்ட இந்த விமர்சனம், 'வெறும் நடிப்புத்திறமையும் அழகும் மட்டுமே சினிமாவுக்கான மூலதனம் இல்லை. பல விசயங்களிலும் நம்மை மெருகேற்றிக்கொண்டால் மட்டுமே மற்றவர்களிடமிருந்து தாம் தனித்துத் தெரிவோம்' என்ற எண்ணத்தை எம்.ஜி.ஆர் மனதில் இன்னொரு முறை ஆழமாக விதைத்தது. அந்த உறுதியோடு முன்னைவிடவும் சுறுசுறுப்போடு தன் தகுதிகளை வளர்த்துக்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடத்துவங்கினார் எம்.ஜி.ஆர். 

டி.ஆர்.ராஜகுமாரி

இந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு இரண்டாவது திருமணம் நடந்துமுடிந்திருந்தது. முதல் மனைவி பார்கவி இறந்து ஒருவருடம் ஆன நிலையில் எம்.ஜி.ஆர் விரக்தியான மனநிலையில் காலம் கழித்துவந்தார். திரைப்பட வாய்ப்புகள் அவரின் மனதை முழுமையாக மாற்றிவிடவில்லை. இதனால் குடும்பத்தினர் ஒன்றுகூடிப்பேசி அவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்தனர். 
கேரளாவில் குழல்மன்னம் பகுதியைச் சேர்ந்த சதானந்தவதி என்ற பெண்ணை எம்.ஜி.ஆருக்கு பேசி முடித்தனர். குழல்மன்னத்தில் எரகாட் என்ற வகுப்பைச் சேர்ந்த சதானந்தவதி குடும்பம் அப்பகுதியில் வசதியான குடும்பம். அவர்களுடன் ஒப்பிட்டால் எம்.ஜி.ஆர் குடும்பம் மிக சாதாரணமானதுதான்.

எம்.ஜி.ஆர் குடும்பத்தின் பொருளாதார நிலையை கேட்டறிந்த சதானந்தவதியின் உறவினர்கள் இந்த வரனை தவிர்க்க அறிவுறுத்தினர். 'இன்னும் பெரிய இடம் சதாவுக்கு கிடைக்கலாமே' என அவர்கள் அறிவுரை வழங்கினார்கள் அவர்கள். இதனால் சதானந்தவதியின் குடும்பம் குழப்பத்தில் இருந்தபோது, சென்னையில் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து வந்த எம்.ஜி.ஆரின் புகைப்படம் எல்லா குழப்பத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. அது 'சீதா ஜனனம்' படத்தின் ஸ்டில்.“ஆயிரம் சொத்துக்களோட மாப்பிள்ளைங்க வரலாம். ஆனா ராஜாப்போல இப்படி ஒரு ஒருத்தன் எம்பொண்ணுக்கு கிடைக்கமாட்டான்” என உறவினர்களின் வாயை அடைத்தார் சதானந்தவதியின் தாயார் மூகாம்பிகை அம்மாள். நீண்ட வற்புறுத்தலுக்குப்பின் எம்.ஜி.ஆரும் இரண்டாம் திருமணத்துக்குச் சம்மதிக்க, குழல்மன்னத்தில் பெண் வீட்டில் 1942-ம் ஆண்டு பிற்பகுதியில் எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தின்போது சதானந்தவதிக்கு 14 வயது. எம்.ஜி.ஆருக்கு 26 வயது.

எம்.ஜி.ஆர்

திருமணத்திற்குப்பிறகு சிலமாதங்கள் சதானந்தவதி தாய்வீட்டிலேயே தங்கியிருந்தார். பின்னர் வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர் தங்கியிருந்த வீட்டுக்கு குடிபுகுந்தார். கணவர், மூத்தார் சக்கரபாணி, அவரது மனைவி, மாமியார் சத்தியபாமா மற்றும் அவரது பேரப்பிள்ளைகள் என கூட்டுக்குடித்தன வாழ்க்கை சதானந்தவதிக்கு பிடித்திருந்தது. பல விஷயங்களில் முதல்மனைவி தங்கமணியின் குணங்களை ஒத்திருந்ததால் சத்தியபாமா குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் தன் பழைய கவலைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார். எம்.ஜி.ஆரின் இல்லறம் இனிதாக சென்றுகொண்டிருந்தது. எல்லாம் அந்த அதிர்ச்சியான செய்தி சதானந்தவதிக்கு தெரியவரும்வரைதான். அதன்பின் எல்லாம் மாறிவிட்டது..

சதானந்தவதிக்கு அதிர்ச்சி தந்த செய்தி என்ன?

http://www.vikatan.com/news/coverstory/83662-mgr-stunt-scenes-are-better-said-in-gundoosi-magazine.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரை சங்கடப்படுத்திய மனைவியின் கேள்வி ! நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் அத்தியாயம்- 23

எம் ஜி ஆர்

திருமணம் முடிந்து சிலமாதங்கள்  தாய்வீட்டிலேயே தங்கியிருந்த சதானந்தவதி சில மாதங்களுக்குப்பின் வால்டாக்ஸ் ரோட்டில் இருந்த எம்.ஜி.ஆர் வீட்டுக்கு குடிபுகுந்தார். கணவர் குடும்பத்தினரின் அன்பான அணுகுமுறை சதானந்தவதிக்கு பிடித்திருந்தது. பல விஷயங்களில் எம்.ஜி.ஆரின் முதல்மனைவி தங்கமணியின் குணங்களை ஒத்திருந்ததால் சத்தியபாமா குடும்பத்தினருக்கு அளவில்லா மகிழ்ச்சி. எம்.ஜி.ஆர் தன் பழைய கவலைகளில் இருந்து முழுமையாக விடுபட்டு தொழிலில் கவனம் செலுத்தத் துவங்கினார். எம்.ஜி.ஆரின் இல்லறம் இனிதாக சென்றுகொண்டிருந்த வேளையில் சதானந்தவதி ஒருநாள் எம்.ஜி.ஆரைப்பார்த்து, "உங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதா ?” - துாக்கிவாரிப்போட்டது எம்.ஜி.ஆருக்கு. 

அவர் குழப்பத்துடன் தன் அம்மாவைப்பார்த்தார். அப்போதுதான் தனக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி இறந்துவிட்டதை மறைத்து தனக்கு பெண் பார்த்த விஷயம் தெரியவந்தது. ஏற்கெனவே திருமணமானவன் என்பது தெரிந்தால் எங்கே பெண்தரமாட்டார்களோ என்ற அச்சத்தில் அது நேர்ந்துவிட்டதாக சத்தியபாமா சொல்ல, எம்.ஜி.ஆர் மனைவியை சங்கடத்துடன் பார்த்தார். வெகுசாதாரணமாக அவர் தன் வேலையில் ஈடுபட ஆரம்பித்தார். 

சதானந்தவதியின் இந்த மவுனமான மன்னிப்புக்கு காரணம், அதுவரை கணவரின் குடும்பத்தார் தன்னிடம் காட்டிய அன்பும் அணுகுமுறையும்தான். அவரது அந்த எண்ணம் சரியானது என்பதை இறக்கும்வரையில் அவர் நேரடியாக உணர்ந்தார். 
சதானந்தவதி எம்.ஜி.ஆர் வாழ்வில் வந்தபின் எம்.ஜி.ஆர் வாழ்க்கை எப்படி இருந்தது என எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியின் மகன் ராஜேந்திரனிடம் கேட்டோம். 

எம்.ஜி.சி ராஜேந்திரன்“முதல்மனைவி பார்கவி மீது அதிக அன்பு வைத்திருந்ததால் அவர் இறந்தபின்  இரண்டாம் திருமணம் செய்யமாட்டேன் என அடம்பிடித்த சித்தப்பாவை என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் சில திரையுலக நணபர்கள் வற்புறுத்தித்தான் சம்மதிக்கவைத்தனர். எரகாட் குடும்பத்தைச் சேர்ந்த சதானந்தவதியை என் பாட்டியே தேடிப்பிடித்து கல்யாணம் செய்துவைத்தார். விரக்தியான மனநிலையில் இருந்த சித்தப்பா இதற்குப்பின்தான் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வந்தவராக தொழிலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சதானந்தவதி  சித்தி மிக எளிமையானவர். யாருடனும் அதிர்ந்துகூட பேசமாட்டார். குழந்தைகள் இல்லாததால் எங்கள் அனைவரின்மீதும் அவருக்கு அதீத பாசம். குறிப்பாக என்னையும் என் தம்பி பாலுவையும் ரொம்பப் பிடிக்கும். எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கவேண்டும் என்பது எங்களுக்கு சித்தப்பாவின் கட்டளை. ஆனால் அப்பாவும் சித்தப்பாவும் சூட்டிங் சென்றுவிட்டால் நாங்கள் சித்தியின் அறைக்குச் சென்று விளையாடிக்கொண்டிருப்போம். வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்வது அவருக்கு பிடித்த விஷயம். என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் அவர், நாங்கள் கட்டிலில் ஏறி விளையாடுவதை மட்டும் அனுமதிக்கமாட்டார்.

வீட்டின் சமையல் பொறுப்பு அவரும் என் அம்மாவும்தான். படப்பிடிப்பிலிருந்து சித்தப்பா என்ன சமையல், எத்தனை பேருக்கு வேண்டும் என்பதை உதவியாளர் சபாபதி மூலம் சொல்லி அனுப்புவார். அதனை பார்சல் செய்து கொடுத்து அனுப்புவது சித்தியின் வேலை. சமயங்களில் சித்தி, தான் செய்த சமையல்தான் இன்று நன்றாக இருந்தது என என் அம்மாவிடம் விளையாட்டாக வம்பு செய்வார்.  அப்போது என்னைத்தான் மத்தியஸ்தத்துக்கு கூப்பிடுவார்கள். நான் என் தாயாரை விட்டுக்கொடுக்காமல் பேசுவேன். கோபப்படமாட்டார் சித்தி. 

சித்தப்பா புகழ்பெற்ற நடிகரானபின்னாலும் ஆரம்பத்தில் இருந்த அதே எளிமையை கடைபிடித்தார் சித்தி. வீட்டுக்கு வருவோரிடம் பந்தா இன்றி பழகுவார். லாயிட்ஸ் சாலை வீட்டிலேயே அப்போது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அலுவலகமும் எம்.ஜி.ஆர் நாடக மன்ற அலுவலகமும் இயங்கிவந்தது. பெரும்பாலும் நாடக ரிகர்சல் அங்குதான் நடக்கும். வீட்டுப்பெண்கள் அங்கு வரக்கூடாது என்பதற்காக வீட்டின் நடுவே கோடு போட்டு வைத்திருந்தார் சித்தப்பா. ஆனால் இரண்டுக்கும் ஒரே பாத்ரூம். அதனால் என் அம்மா, சித்தியுடன் பேச விரும்பும் நடிகைகள் சகுந்தலா, இந்திரா, புஷ்பலதா போன்றோர் பாத்ரூம் போவதாகச் சொல்லிவிட்டு வந்து பேசிவிட்டுச் செல்வார்கள். 


திருமணமான கொஞ்ச வருடங்களில் சித்திக்கு உடல்சுகம் இல்லாமல் போய்விட்டது. இதனால்  கவலையடைந்த சித்தப்பா படப்பிடிப்பு, கட்சிப்பணி இல்லாத நேரங்களில் வீட்டில் சித்தியுடன்தான் நேரம் செலவழிப்பார். சித்திக்கு அவர் செய்த பணிவிடைகள் போல் இன்னொருவர் தன் மனைவிக்கு செய்திருப்பாரா என்பது சந்தேகமே. ஆண்டுக்கு ஒரு முறை சித்தப்பா குடும்பமும் நாங்களும் மகாபலிபுரம் செல்வோம். அங்குள்ள ஒரு விடுதியில் சில நாட்கள் தங்கி பொழுதுபோக்குவோம். நேரம் கிடைத்தால் சித்தப்பா வருவார். ரொம்ப மகிழ்ச்சியாக கழியும் அந்நாட்கள். சித்தி சித்தப்பாவுடன் எங்கள் குடும்பம் கூட்டுக்குடித்தனமாக இருந்த அந்த நாட்களை என்றும் மறக்கமுடியாது” என நெகிழ்ந்தார் ராஜேந்திரன்.

எம்.ஜி.ஆர்

சதானந்தவதிக்கு முதன்முறை கர்ப்பம் தரித்தபோது அது தவறுதலாக கர்ப்பப்பையின் வாசலிலேயே உருவானது. இது அவர் உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் ஒரு முடிவோடு அதைக் கலைத்தனர். தொடர்ந்து சதானந்தவதிக்கு காசநோய் உருவானது. இதனால் அவர் உடல் பலவீனமடைந்தது. இதனால் அவர் இயல்பான இல்லற வாழ்க்கை வாழ்வது  அவர் வாழ்நாளை குறைத்துவிடும் என குடும்ப மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனால் எம்.ஜி.ஆர், திருமணம் ஆனபின்னாலும் பிரம்மச்சாரியாகவே காலம் கழிக்க நேர்ந்தது. ஆனாலும் திரையுலகில் ஒரு அந்தஸ்தை அடையவேண்டும் என்ற லட்சியத்தை அவர் கைவிடாமல் தொடர்ந்து தன் சினிமா முயற்சிகளை தொடர்ந்தார். எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவை நிறைவேறும் நாள் கூடிவந்தது ஒருநாள்...
என்ன நடந்தது...?

http://www.vikatan.com/news/coverstory/83949-mgr-shocked-by-his-wifes-question-mgrs-birth-anniversary-special-episode-23.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரை பழிவாங்கிய ஹீரோ... நூற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் - அத்தியாயம் - 24

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆரின் திரைப்பட வாழ்வில் தவிர்க்கமுடியாத பெயர் ஜூபிடர் பிச்கர்ஸ். 1936-ம் ஆண்டு தமிழ்த்திரையுலகில் அறிமுகமான எம்.ஜி.ஆர், கதாநாயக நடிகனாக ஆவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆகின. 1946-ம் ஆண்டு, 'ராஜகுமாரி' என்ற தனது திரைப்படத்தில் எம்.ஜி.ஆரை முதன்முறையாகக் கதாநாயகனாக அறிமுகம் செய்தது ஜூபிடர் பிச்கர்ஸ். இடைப்பட்ட 10 வருடங்களில் திரையுலகில் தனக்கென ஒரு ஸ்தானத்தை அடைய எம்.ஜி.ஆர் மேற்கொண்ட போராட்டங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல. முள்ளில் படுக்கைப்போல தினம் தினம் அவர் சந்தித்த அவமானங்கள், புறக்கணிப்புகளை வேறொருவர் சந்தித்திருந்தால், சொந்த ஊருக்கு வண்டி ஏறியிருப்பார்கள். ஆனால், எம்.ஜி.ஆர் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே மனசஞ்சலம் அடைந்திருக்கிறார். அதுவும் ஆரம்ப நாட்களில்! 

போராட்டமான அந்தக் காலத்தில் 'சாலிவாஹனன்' படத்தில் நடித்தபோது கதாநாயகன் ரஞ்சனுடன் வாள்போரிட்டபோது... ரஞ்சனை மறந்து எம்.ஜி.ஆரின் வாள்வீச்சில் மெய்மறந்துபோனார்கள் ரசிகர்கள். இத்தனைக்கும் வாள்சண்டைக்கு பெயர்பெற்றவர் ரஞ்சன். எம்.ஜி.ஆரின் வாள்வீச்சுத் திறமையை கண்டு பொறாமைகொண்ட ஒரு படத்தின் கதாநாயகன், தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி எம்.ஜி.ஆருடன் தான் மோதும் வாள் சண்டைக்காட்சியைக் கொளுத்தும் வெயிலில்... பாறையின் மீது எம்.ஜி.ஆர் படுத்தபடி சண்டையிடுவதாக அமைத்தார். காட்சி சரியாக அமைந்தபின்னும் வேண்டுமென்றே பல டேக்குகள் அதை எடுக்கவைத்தார். எம்.ஜி.ஆரை மனதாலும் உடலாலும் காயப்படுத்துவதற்காகவே அவர் அப்படிச் செய்தார் என்று காரணம் சொல்லப்படுகிறது.

எம் ஜி ஆர்கடைசி டேக் முடிந்துவந்தபோது எம்.ஜி.ஆரின் டெர்லின் மேலங்கி, பாறையின் மீதிருந்த வெயிலினால் உருகியிருந்தது. கதாநாயகனின் கெட்ட உள்நோக்கத்தை எம்.ஜி.ஆர் புரிந்துகொண்டாலும் வலியைப் பொறுத்துக்கொண்டு அந்தக் காட்சியில் நடித்துமுடித்தார். எம்.ஜி.ஆர் வலியுடனும் வேதனையுடனும் அந்தக்காட்சியில் நடித்ததைப் பார்த்த பின்னாளில்... அவருக்கு நெருக்கமான தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறிய ஒரு நடிகர், “ராம்சந்தர், எப்போ உங்களை ஒருத்தர் சினிமாத்தொழில்ல இருந்து ஒழித்துக்கட்ட நினைக்கிறாங்களோ, அப்பவே நீங்க அவுங்களுக்குப் போட்டியான ஒரு நடிகர்ங்கறதை அவங்க ஒப்புக்கறாங்கன்னு அர்த்தம். அதனால இந்தச் சோதனைகளுக்கெல்லாம் மனசு கலங்காதிங்க. ஒருவகையில் நீங்க சந்திக்கிற இந்தச் சவால்கள்தான் பெரிய நடிகராகணும்ங்கற உங்க லட்சியத்துக்கு உரமாக மாறி, இந்தச் சினிமா உலகத்துல உங்களை ஒருநாள் ஜெயிக்கவைக்கும்” என அறிவுரை சொன்னார்.

சொன்னதுபோலவே அந்தப்படம் வெளியானபோது, அதுவரை அந்த நாலெழுத்து கதாநாயகனுக்கு இருந்த பெயர் புகழ் குறைந்து எம்.ஜி.ஆரின் வாள்சண்டை பிரமாதமாகப் பேசப்பட்டது. வீரதீர சாகசப்படங்களில் நடிக்கத் தகுதியான நடிகர் எனத் தயாரிப்பாளர்கள் உணர அந்தப் படம் காரணமானது. இப்படிப் பல சம்பவங்கள்...

நீண்ட போராட்டத்தின் முடிவில் எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவை நனவாக்கிய ஜூபிடர் பிச்கர்ஸ் நிறுவனம் அவருக்கு மட்டுமல்ல;  தமிழ் சினிமாவின் வரலாற்றிலும் தவிர்க்கவியலாத பெயர். ஆரம்பகால தமிழ் சினிமாவின் தேர்ந்த பத்துப் படங்களைப் பட்டியலிட்டால், அதில் பாதிக்கும் மேல் இந்த நிறுவனம் தயாரித்தவையே இடம்பெறும்.  

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமான 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஜூபிடர் பிச்கர்ஸ் நிறுவனம். இதன் உரிமையாளர்கள் எஸ்.கே மொஹிதீன் - எம் சோமசுந்தரம். நேர்மைக்கும் கண்ணியத்துக்கும் பெயர்பெற்ற இவர்கள், மதங்களைக் கடந்தும் அப்பழுக்கற்ற நட்புகொண்ட நண்பர்கள். சினிமாவை நேர்த்தியாகத் தயாரித்தவர்கள். தங்களின் இறுதிக்காலம்வரை நட்புடன் படங்களைத் தயாரித்தவர்கள்.  தானியக்கொள்முதல் நிறுவனத்தில் ஒரு குமாஸ்தாவாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் எஸ்.கே. மொஹிதீன். அந்த நிறுவனத்தின் பாகஸ்தர்களில் ஒருவர், மற்றொரு பாகஸ்தரான முத்துசாமி செட்டியார் என்பவருக்குத் தெரியாமல் கணக்கு வழக்குகளிலும் தனிப்பட்ட சில செயல்பாடுகளிலும் பல தவறுகள் செய்ய, அதைத் தட்டிக்கேட்டார் மொஹிதீன்.

இதனால் ஆத்திரப்பட்ட அவர், ''கூலிக்கார பயல் என்னைக் கேள்வி கேட்பதா'' என ஆத்திரமுற்று மொஹிதீனை வேலையைவிட்டுத் துரத்தினார். விஷயம் முத்துசாமிக்கு தெரியவந்து விசாரணை நடத்தியதில், நடந்த அனைத்தும் தெரியவர தன் பாகஸ்தரை விரட்டிவிட்டு, தவறுக்குத் துணைபோகாமல் நேர்மையாக வாதிட்ட மொஹிதீனை தன் பாகஸ்தராகச் சேர்த்துக்கொண்டார். முத்துசாமி செட்டியாரின் காலத்துக்குப்பின், அவரது மகன் எம்.சோமசுந்தரத்துடன் மொஹிதீன் நட்பானார். இந்த நட்பில்  பூத்ததுதான்,  ஜூபிடர் நிறுவனம். 

somu

ஆரம்பத்தில் மொஹிதீனும் சோமுவும் இணைந்து 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ்' என்ற பெயரிலேயே படங்களைத் தயாரித்து வெளியிட்டனர். 1935-ல் வெளியான,'மேனகா' படம்தான் இவர்களின் தயாரிப்பில் வெளியான முதல்படம். என்.எஸ்.கிருஷ்ணன் நடித்து வெளியான இந்தப்படமே தமிழ்த்திரையுலகின் முதல் சமூகப்படம் என்ற பெருமைக்குரியது. 'வேலைக்காரி' படத்தின் மூலம் அண்ணாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியது.

'என் அரசியல் வாழ்விலிருந்து என் கலையுலக நுழைவு மூலம் ஓர் இதம் தரும் சூழலில் நான் புகுந்திருப்பது ரணங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் உள்ளது. என் அரசியல் வாழ்வில் எத்தனை நண்பர்கள் இருந்தாலும் கலையுலகில் என் ஒரே நண்பர்கள் ஜூபிடர் இரட்டையர்கள்தான். எஸ்.கே-வின் நேர்மை, கண்ணியம், வெளிப்படையான பேச்சு... இவை என் போற்றுதலுக்குரியது. சோமசுந்தரம் கலை ரசனைக்காரர்; எல்லோரையும் கவரும் தன்மை கொண்டவர்; அவருடைய புன்சிரிப்புக்கு மயங்காதவர் யாருமிருக்க முடியாது; நான் ஆண்களை குறிப்பிடுகிறேன்” என, 'வேலைக்காரி' திரைப்படத்தின் வெற்றிவிழாவில் அண்ணா தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் குறிப்பிட்டார்.

கருணாநிதியின் ஆரம்பகால வளர்ச்சியில் பெரும்பங்களிப்பு ஜூபிடருக்கு உண்டு. இப்படி 3 முதல்வர்களின் வாழ்வில் முக்கிய இடம்பெற்றது ஜூபிடர் நிறுவனம். 

c.n annadurai

கலைமேதை ராஜா சாண்டோவை அறிமுகப்படுத்திய சந்திரகாந்தா, பி.யு.சின்னப்பா நடித்து பெரும்வெற்றிபெற்ற 'கண்ணகி' மற்றும் 'மஹாமாயா', எம்.ஜி.ஆரின் 'ஸ்ரீமுருகன்', 'ராஜகுமாரி', அண்ணா கதை - வசனம் எழுதிய 'வேலைக்காரி', 'அபிமன்யு', 'மோகினி', 'நாம்', 'மனோகரா', 'அரசிளங்குமரி' போன்றவை எந்தக் காலத்துக்கும் ஜூபிடர் பெயர் சொல்லும் படங்கள். 1960-களின் முற்பகுதிவரை சினிமா தயாரிப்பில் வெற்றிகரமாக இயங்கிவந்த ஜூபிடர் நிறுவனம் காலமாற்றம், தலைமுறை இடைவெளி போன்ற காரணங்களால் 1964-ல் என்.டி ராமராவ் நடித்த 'மர்மயோகி' (தெலுங்கு) படத்துடன் தன் சினிமா சேவையை முடித்துக்கொண்டது. 

ஜூபிடரின், 'ராஜகுமாரி'யில் கதாநாயகனாக அறிமுகமாகும் முன்பே, அந்த நிறுவனத்தில் 'ஸ்ரீமுருகன்' என்ற படத்தில் நடித்திருந்தார் எம்.ஜி.ஆர். அந்த வாய்ப்பு அவரைத் தேடி வந்தது எப்படி?

http://www.vikatan.com/news/coverstory/84990-jupiter-pictures-introduced-mgr-as-hero-for-the-first-time-life-history-of-mgr-series--24.html

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆர் ஆடிய 'ருத்ரதாண்டவம்'...நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் தொடர் அத்தியாயம் - 25

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆரை கதாநாயகனாக அறிமுகம் செய்த ஜூபிடர் நிறுவனம், 'ஸ்ரீமுருகனில்' அவருக்கு சிவனாக நடிக்கும் ஒரு சிறுவேடத்தை அளித்தது. அந்த வேடத்தைப் பெறுவதற்கு அவர் கையாண்ட சாதுர்யமும், அதைத் தொடர்ந்து அதே நிறுவனத்தில் கதாநாயகனாக அறிமுகமானதும் எப்படி...?

ஜூபிடர் நிறுவனம் பி.யு.சின்னப்பாவை வைத்து தயாரித்த படத்தில் எம்.ஜி.சக்கரபாணிக்கு பிரதான வில்லன் வேடம் கிடைத்தது. தரமான படங்களைத் தயாரித்து வந்த ஜூபிடர் நிறுவனத்தின் மேல் எம்.ஜி.ஆருக்கு ஒருவித காதல் இருந்த காலம் அது. தரமான படங்களைத் தயாரித்து வந்த அந்த நிறுவனத்தின் ஒரு படத்தில் நடித்து விட்டால் தனக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமையும் என்ற நம்பிக்கை அவர் மனதில் ஆழமாக இருந்தது. இதனால் அண்ணனைப் பார்க்கும் சாக்கில் நேரம் கிடைத்தபோதெல்லாம் 'மஹாமாயா' செட்டுக்குப் போய் விடுவார் எம்.ஜி.ஆர். ஜூபிடர் நிறுவன உரிமையாளர்கள் வரும்போதும், போகும்போதும் அவர்கள் பார்வையில் படும்படியான இடத்தில் நிற்பார். அழகும், மிடுக்கும் இணைந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி தென்படுவதைக் கண்டு, ஒருநாள் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சோமசுந்தரம், அவர் யார் என தயாரிப்பு நிர்வாகியிடம் கேட்க, 'சக்கரபாணியின் தம்பி' என அவரை அறிமுகப்படுத்தி வைத்தார் நிர்வாகி.

எம் ஜி ஆர்சக்கரபாணியும் தன் பங்குக்கு எம்.ஜி.ஆரின் முந்தைய படங்களைப் பற்றி எடுத்துக்கூறி, "நல்ல திறமைசாலி. வாய்ப்பு கிடைச்சா ஒரு நல்ல நிலைக்கு வந்திடுவான். என்ன நேரமோ அப்படி வாய்ப்புகள் இதுவரை வரலை” என சோமுவிடம் சொல்லி வைத்தார். எம்.ஜி.ஆரும் சோமுவிடம் தன் மனதில் இருந்த ஆசையை வெளிப்படுத்தினார். சகோதரர்களின் வேண்டுகோளை மனதில் குறித்து வைத்துக்கொண்டார் சோமு. என்றாலும் ஜூபிடர் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான 'என் மகன்' படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏற்றவேடம் இல்லாததால் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இங்கு நாம் தெரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு விஷயம்...எம்.ஜி.ஆரின் கதாநாயகன் கனவு 10 வருடங்கள் தள்ளிப்போனதற்கு அவர் மட்டுமே காரணம் அல்ல; அன்றைய திரைப்படச் சூழல் அப்படி இருந்தது. தமிழ் சினிமா வளர ஆரம்பித்த காலகட்டத்தில் பாடல்களே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தன. பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்து படங்கள் தயாரிக்கப்பட்டன. நன்கு பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே திரைப்படங்களில் நடித்தனர். கதாநாயக நடிகர், நடிகைகள் தங்களுக்கான பாடல்களைத் தாங்களே பாடினர். இதனால் இயல்பாக பாடும் திறமை பெற்ற நடிகர்களே மக்களின் அபிமானம் பெற்றவர்களாக சினிமாவில் ஜெயிக்க முடிந்தது. நடிப்புத் திறமைக்காக மட்டுமின்றி, அவர்களின் குரல்வன்மைக்காகவும் கொண்டாடப்பட்டனர். அன்றைய படங்களின் விளம்பர சுவரொட்டிகளில், 'கான மழையில் நனையுங்கள்' என்றும் '47 பாடல்கள் அடங்கிய இனிய குடும்ப சித்திரம்' என்றும் வாசகங்களை இடம்பெறச் செய்வர். பாடல்களின் எண்ணிக்கையே படங்களின் வெற்றியைத் தீர்மானித்தன. அந்த அளவுக்குப் பாடல்கள் அந்தக் காலகட்டத்தில் மக்களால் ரசிக்கப்பட்டன. தங்களுக்கு இருந்த அபரிதமான பாட்டுத்திறமையினால் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, இவர்களுக்கு அடுத்தபடியாக ஹொன்னப்பா பாகவதர், டி.ஆர். மகாலிங்கம் போன்றவர்கள் ரசிகர்களை தங்களின் பாடல்களாலும், நடிப்பாலும் கட்டிப்போட்டிருந்தனர்.

இதனால் அபரிதமான திறமைகள் பெற்றிருந்தும் பாடி நடிக்க முடியாத நடிகர்கள், அவர்களை மீறி முன்னணி நடிகர்களாக வர முடியவில்லை. அவர்களுடன் ஒரு படத்தில் துண்டுக்காட்சியில் நடிப்பதே தங்களின் அதிகபட்ச பெருமையாக சிலர் கருத வேண்டியிருந்தது. அப்படி சோர்ந்து போன நடிகர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். (ஆனால் மற்றவர்களில் இருந்து எம்.ஜி.ஆர் முற்றிலும் வேறுபட்டவர். திறமையிருந்தும் தனக்கான வாய்ப்பு தள்ளிப்போவதை உணர்ந்த எம்.ஜி.ஆர், எவ்வளவு காலமானாலும்  வாய்ப்பு கனிந்துவரும்போது அதற்கு தகுதியானவனாக தான் இருக்கவேண்டும் என்பதற்காக, அந்த பத்து ஆண்டுகளில் சினிமாத்துறைக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டார். எம்.ஜி.ஆரின் வெற்றிக்கு முக்கியமான காரணம் இது). 

அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தியாகராஜ பாகவதருடன் 'அசோக் குமார்' என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடித்துள்ளார். சிறிய வேடம்தான் என்றாலும் தியாகராஜ பாகவதரின் நண்பராக உருக்கமாக நடித்திருந்தார். நன்றாக பேசப்பட்ட வேடம் அது. அந்தப் படத்துக்குப்பிறகு எம்.ஜி.ஆரின் மீது அன்பு கொண்ட பாகவதர், "யார் இந்தப் பையன், நல்லா நடிக்கிறான். முயற்சித்தால் நல்லா வருவான்" என்று படத்தின் இயக்குநரிடம் பாராட்டிச் சொன்னாராம். 

எம் ஜி சக்கரபாணி1940-களின் மத்தியில், சினிமாவில் பின்னணி பாடும்முறை அறிமுகமானது. இதனால் சினிமாவில் புதிய அலை ஒன்று உருவானது. பாடும் திறமையைத் தவிர்த்து மற்ற திறமைகள் கொண்ட நாடக நடிகர்கள் மெல்ல சினிமா ஆசையில் ஸ்டுடியோக்களில் வாய்ப்புத் தேட ஆரம்பித்தனர். இது எம்.ஜி.ஆரின் மனதில் சினிமாவின் மீது ஓர் அழுத்தமான நம்பிக்கையை விதைத்தது. இப்படிச் சோதனையான காலகட்டத்தில்தான் எம்.ஜி.ஆருக்கு 'ஸ்ரீமுருகன்' பட வாய்ப்பு வந்தது. சென்ட்ரல் ஸ்டுடியோ என்ற பெயரில் வால்மீகி, ஸ்ரீமுருகன் என்ற இரு படங்களை 1945-ம் ஆண்டு தயாரிக்க திட்டமிட்டது ஜூபிடர் நிறுவனம். ஸ்ரீமுருகனில் கதாநாயகனாக முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எம்.கே.டி பாகவதர். பாகவதரின் முந்தைய படமான 'ஹரிதாஸ்' மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த நேரம். இதனால் புகழின் உச்சியில் இருந்த அவர், ஸ்ரீமுருகனில் நடிப்பதற்காக விதித்த நிபந்தனைகள், தயாரிப்பாளர்களை மிரளச் செய்தன.

படத்தின் கதாநாயகி தேர்வு வரை பாகவதரின் தலையீடு இருந்தது. படத்தில் வள்ளியாக வசுந்தரா தேவியையும் (வைஜெயந்தி மாலாவின் தாயார்) தெய்வானையாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்யச் சொன்னார் பாகவதர். மிக சொற்பமான படங்களை மட்டுமே ஒப்புக்கொள்ளும் பாகவதர் தங்கள் நிறுவனத்தின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே ஜூபிடர் உரிமையாளர்களுக்கு பெருமிதமாக இருந்தததால், அவரது நிபந்தனைகளை ஏற்றனர். ஆனால் டி.ஆர். ராஜகுமாரி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஜூபிடரில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்ததோடு, பாகவதரின் வெற்றிப்படமான ஹரிதாஸிலும் கதாநாயகியாக நடித்துள்ள அவர், 'தெய்வானை கதாபாத்திரத்தில் நடிக்கமாட்டேன்' என உறுதியாகத் தெரிவித்து விட்டார். தர்மசங்கடத்தில் நெளிந்தனர் தயாரிப்பாளர்கள். இதன் நடுவே ஒருநாள் ஜூபிடர் நிறுவனத்தில் அதன் உரிமையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த பாகவதர், புகழ்போதை தலைக்கேறிய நிலையில், "என் வாழ்வில் மிகக் குறைந்த படங்களில் நடித்து யாரும் அடையாத புகழை அடைந்து விட்டேன். இப்போது உங்கள் படமான ஸ்ரீமுருகனையும் சேர்த்து, என்னிடம் 10 படங்கள் உள்ளன. இதற்குமேல் படங்களை ஒப்புக்கொள்ளப் போவதில்லை. இன்னும் 10 வருடங்களுக்கு நான் படத்துறையில் பிஸியாக இருப்பேன்" என தெரிவித்தார். அவரது பதில், தயாரிப்பாளர்களுக்கு தலைசுற்றலை ஏற்படுத்தியது. "பத்து படங்கள் முடிக்க 10 வருடம் என்றால் கடைசியாக புக் ஆன ஸ்ரீமுருகன் வர 10 வருடங்கள் காத்திருக்க வேண்டுமா?" என அதிர்ச்சியடைந்தனர். ஆனால், ஜூபிடர் உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல; பாகவதருக்கும் ஒரு பேரதிர்ச்சி காத்திருந்தது... தமிழ்சினிமா உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய அந்த விஷயம்...லட்சுமிகாந்தன் கொலைவழக்கு!

தன்னை இன்னும் 10 வருடங்களுக்கு யாரும் அசைத்துப் பார்க்க முடியாது என கர்வத்துடன் தெரிவித்து வந்த பாகவதரின் கணக்கை, காலம்போட்ட கணக்கு வேறுவிதமாக மாற்றி அமைத்துவிட்டது. சினிமா நடிகர், நடிகைகளை பல வருடங்களாக அவதூறாக எழுதி வந்த லட்சுமிகாந்தன் என்ற பத்திரிகையாளர் நடுத்தெருவில் சிலரால் குத்தப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மறுநாள் மரணமடைந்தார். இந்த வழக்கில் அன்றைய மூன்று சினிமா பிரபலங்கள் மீது வழக்கு போடப்பட்டது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், பக்ஷிராஜா ஸ்டுடியோ அதிபர் ஸ்ரீராமுலு நாயுடு, மூன்றாமவர் வேறு யாருமல்ல, அடுத்த 10 வருடங்களுக்கு சினிமாவில் தானே ராஜா என்று பெருமிதப்பட்ட தியாகராஜ பாகவதர்தான். இந்தக் கொலைவழக்கில் அவர் கைது செய்யப்பட்டதை அடுத்து திரையுலகில் பல மாற்றங்கள் நடந்தேறின. பக்ஷிராஜா அதிபர் வழக்கின் ஆரம்பத்திலேயே விடுவிக்கப்பட கலைவாணரும், தியாகராஜ பாகவதரும் தங்களது படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பியளித்துவிட்டு சிறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. 

தியாகராஜ பாகவதர்

'ஸ்ரீமுருகனில்' முருகன் வேடத்தில் தியாகராஜ பாகவதருக்குப் பதிலாக ஹொன்னப்ப பாகவதர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் சிவன் வேடத்துக்கு யாரைப் போடலாம் என பேசப்பட்டபோது, சோமுவுக்கு எம்.ஜி.ஆர் நினைவில் வந்தார். அப்படத்தில் எம்.ஜி.ஆர் ஒப்பந்தமானார். அவருக்கு ஜோடி தெலுங்கு நடிகை மாலதி. இருவருக்கும் படத்தில் நடனங்கள் உண்டு. குறிப்பாக எம்.ஜி.ஆர் இதில் ருத்ரதாண்டவம், ஆனந்த தாண்டவம் என இரு நடனங்களை ஆடியிருப்பார். சண்டை, வாள்வீச்சு என சகல துறைகளிலும் பயிற்சி பெற்றுவந்த எம்.ஜி.ஆர் இந்தப் படத்துக்காக நடனமும் கற்றுக் கொண்டார். இந்த இரண்டு நடனங்களுக்காக எம்.ஜி.ஆர் சுமார் 6 மாத காலம், குமார ஆசான் என்ற நடன ஆசிரியரிடம் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார். இது எம்.ஜி.ஆரின் தொழில் சிரத்தை என்பதோடு ஜூபிடர் தந்த வாய்ப்பு என்ன காரணத்துக்காகவும் கைவிட்டுப் போய்விடக்கூடாது என்ற அவரது ஜாக்கிரதை உணர்வும்கூட. 

எம்.ஜி.ஆர்ஒரு பாடலுக்காக இத்தனை கர்ம சிரத்தை எடுத்துக்கொண்டதும், தொழிலில் சுறுசுறுப்பும் அர்ப்பணிப்புமாக அவர் செயல்பட்ட விதமும் ஜூபிடர் உரிமையாளர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. ஸ்ரீமுருகன் படம் தயாரிப்பில் இருந்தபோதே அந்நிறுவனம், வித்யாபதி, ராஜகுமாரி என இரு படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது. அதற்கான நடிகர்கள் தேர்வு நடந்தபோது ஸ்ரீமுருகனில் எம்.ஜி.ஆர் தந்த ஒத்துழைப்பு சோமுவின் நினைவில் வந்துபோக, ராஜகுமாரியில் கதாநாயகனாக அவரையே போடுவது என தீர்மானித்தனர் மொஹிதீனும், சோமுவும். 

இயக்குநர் ஏ.எஸ்.ஏ. சாமியும் எப்போதோ ஒருமுறை சக்கரபாணியிடம் எம்.ஜி.ஆருக்கு கதாநாயகன் வாய்ப்பு பெற்றுத் தருவதாக உறுதியளித்தி ருந்தார். இதனால் அவரும் எந்த மறுப்புமில்லாமல் தயாரிப்பாளர்களின் முடிவை ஏற்றுக்கொண்டார். 

ஒப்பந்தப் பத்திரம் தயாராகி எம்.ஜி.ஆருக்கு தகவல் வந்துசேர்ந்தபோது, அதைக் கொண்டாடுவதா, வேண்டாமா என்ற குழப்பமே வந்தது. காரணம் கதாநாயகன் வாய்ப்பு நான்காவது முறையாக வந்து கதவைத் தட்டுகிறது. ராஜகுமாரிக்கு முன்பே அவர் கோவிந்தன் கம்பெனி தயாரிப்பில் ஒரு படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். 'மருதநாட்டு இளவரசி' என்ற அந்த படம் பின்னாளில் வெளியாகி வெற்றிபெற்றது என்றாலும், எம்.ஜி.ஆர் அட்வான்ஸ் பெற்ற கொஞ்ச நாட்களிலேயே படம் வெளியாகுமா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு அந்தப் படத்துக்குப் பல தடைகள் உருவாகின.

கடந்த காலங்களில் தான் கதாநாயகனாக ஒப்பந்தமானதைச் சொல்லி, பின்னாளில் அது நிறைவேறாமல் போய், அவமானப்பட நேர்ந்ததால் ராஜகுமாரி வாய்ப்பு வந்தபோது கொஞ்சம் அடக்கியே வாசித்தார் எம்.ஜி.ஆர். 

ஆனால் 'ஸ்ரீமுருகன்' படத்துடன் 'ராஜகுமாரி'-யும் விறுவிறுவென தயாரானபோதுதான் 'நிச்சயம் இந்த முறை கதாநாயகனாவோம்' என்ற நம்பிக்கை எம்.ஜி.ஆருக்குப் பிறந்தது.

1946-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி, 'ஸ்ரீமுருகன்' படம் வெளியானது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றியைத் தரவில்லையென்றாலும், மக்களிடையே எம்.ஜி.ஆர் ஆடிய ருத்ரதாண்டவம் பெரிதும் பேசப்பட்டது. நடனக்காட்சியில் அவர் காட்டிய வேகம், மக்களிடம் இன்னும் நெருக்கமாக ரசிகர்களிடம் அவரைக் கொண்டு சேர்த்தது. 

இதனிடையே ராஜகுமாரி படமும் விறுவிறுவென தயாராகிக் கொண்டிருந்தது.

http://www.vikatan.com/news/coverstory/85057-mgr-lauded-for-his-performance-in-srimurugan-film-life-history-of-mgr---series---25.html

Link to comment
Share on other sites

ராமச்சந்திரனுடன் மோதிய ராமச்சந்திரன்.. நுாற்றாண்டு நாயகன் எம்.ஜி.ஆர் - அத்தியாயம் - 26

எம் ஜி ஆர்

எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதல் படமான 'ராஜகுமாரி', '1001 அரேபியன் இரவுகள்' கதையை அடிப்படையாக வைத்து சிலசில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்ட கதை. மாய மந்திரக் கதைகளுக்கு அன்று மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பினால் ஜூபிடர் நிறுவனம் ஸ்ரீமுருகனுக்குப்பின் தான் எடுக்கவிருந்த திரைப்படத்திற்கு இப்படி ஓர் கதையை தேர்வுசெய்திருந்தது.

எம்.ஜி.ஆர் முதன்முதலாக கதாநாயகனாக அறிமுகமான படத்தின் சுவாரஸ்யமான கதை இதுதான்...

உலகிலேயே பெரிய அழகியை அடைந்து பெரும் சக்தியை அடையவேண்டும் என்ற வெறியுடன் அப்படி ஓர் அழகியைத் தேடி தனது மாயா சக்தியுடன் உலகை வலம் வருகிறான் ஓர் மந்திரவாதி (எம்.ஆர். சாமிநாதன்). இந்திய தேசத்தில் அப்படி ஓர் அழகியை கண்டுபிடிக்கிறான். அவள் அந்நாட்டின் அப்பாவி மன்னனின் மகள். ராஜகுமாரியான மல்லிகா (கே.மாலதி) அறிவிலும் அழகிலும் தேர்ந்தவள். ராஜாவின் அப்பாவித்தனத்தை பயன்படுத்தி பல தவறுகளை செய்துவருபவன் ஆளகாலன் என்ற கொடூர எண்ணம் கொண்டவன் (டி.எஸ்.பாலையா). அவனுக்கு ராஜகுமாரி மீது ஒரு கண். ஒருநாள் வேட்டைக்காக  காட்டுக்குச் சென்ற இடத்தில் சுகுமாரன் (எம்.ஜி.ஆர்) என்ற கட்டழகனை சந்தித்து காதல் கொள்கிறாள் மல்லிகா. மல்லிகாவின் மனதை மாற்றுவதற்காக மாயசக்தியை தேடிச்செல்லும் ஆலகாலன் மாயாவிளக்கு மந்திரவாதியை சந்திக்கிறான். 

எஆனால் மல்லிகாவின் அழகில் மயங்கிய மந்திரவாதி, ஆலகாளனை ஏமாற்றிவிட்டு மல்லிகாவை ஜாலத்தீவு எனும் தன் இடத்திற்கு துாக்கிச்செல்கிறான். மகளை கண்டுபிடித்து தருபவருக்கே அவளை மணமுடித்து தருவதாக அறிவிக்கிறார் மன்னன். இதைக் கேள்வியுற்று காதலி மல்லிகாவை தேடிச் செல்கிறான் சுகுமாரன். மல்லிகா ஜாலத்தீவில் இருப்பதை அறிந்து அவளைத்தேடிச்செல்கையில் வழியில் சர்ப்பத்தீவு ஒன்று வருகிறது. அந்த தீவின் ராணியான விஷாராணி, அவன் மேற்கொண்டு பயணம் செய்யாதபடி தடுக்கிறாள். சர்ப்பத்தீவில் நண்பராகும் பாம்பாட்டி பஹ் (நம்பியார் ) என்பவன் விஷாராணி (தவமணிதேவி)நடத்தும் போட்டியில் வென்றால் ஜாலத்தீவு செல்ல கப்பல் கிடைக்கும் என வழிசொல்கிறான். 

அதேசமயம் சுகுமாரனுக்கு போட்டியாக மல்லிகாவைத்தேடி வரும் ஆலகாலனும் இதேபோல் சர்ப்பத்தீவில் சிக்கிக்கொள்ள, ராணி நடத்திய போட்டியில் அவன் தோற்றுவிட சுகுமாரன் வெல்கிறான். காலையில் கப்பல் கிடைத்து ஜாலத்தீவு சென்று மல்லிகாவை மீட்டுவிடலாம் என கற்பனையில் மிதக்கும் சுகுமாரனுக்கு மீண்டும் சிக்கல் வருகிறது. அவனது கட்டழகில் மயங்கும் விஷாராணி, தன்னை ஓர் இரவு திருப்திப்படுத்தினால்தான் ஜாலத்தீவு செல்ல கப்பல் ஏற்பாடு செய்வதாக நிபந்தனை விதிக்கிறாள். கற்பு நெறியில் வாழ்ந்துவரும் சுகுமாரன் அதை மறுக்கிறான். இதனால் விஷாராணியால் பல தொல்லைகளுக்கு ஆளாகும் சுகுமாரன் மல்லிகாவை மீட்கிறானா இல்லையா என்பதுதான் ராஜகுமாரி படத்தின் கதை. எஸ்.ஏ.சாமியின் இயக்கத்தில் பல ட்விஸ்ட்டுகளுடன் படம் வெளியானது. 

கதாநாயகன் என்றாலும் கதாநாயகி மாலதிக்கு வழங்கப்பட்டதில் பாதிதான் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு சம்பளமாக தரப்பட்டது. டி.எஸ். பாலையா அன்று புகழ்மிக்க நடிகர் என்பதால் எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்டதை விட 5 மடங்கு ஊதியம் அதிகமாக வழங்கப்பட்டது. 

ராஜகுமாரி படத்தின்போது சுவாரஸ்யமான ஓர் சம்பவம் அரங்கேறியது. ராஜகுமாரி படத் தயாரிப்பில் இருந்தபோது வழக்கம்போல் விநியோகஸ்தர்கள் படங்களை ஒப்பந்தம் செய்ய ஸ்டுடியோவிற்கு வந்தனர். அவர்களில் பெங்களுரைச் சேர்ந்த நாகண்ணா என்ற பிரபல விநியோகஸ்தரும் ஒருவர். பல வருடங்களாக  ஜூபிடருடன் தொழில் தொடர்பில் இருப்பவரான அவர் டி.ஆர்.ராமச்சந்திரனின் 'வித்யாபதி'  படத்தை அதிக விலைக்கு ஒப்பந்தம் செய்தார். காரணம் டி.ஆர்.ராமசந்திரன் அன்று பிரபலமாக இருந்ததே. 

1945 ம் ஆண்டு ஏ.வி.எம் செட்டியார் தம் பிரகதி ஸ்டுடியோ மூலம் டி.ஆர் ராமச்சந்திரனைக் கொண்டு ஸ்ரீவள்ளி என்ற திரைப்படத்தை 2 லட்சம் ரூபாய் முதலீட்டில் தயாரித்தார். அந்நாளில் அதன் வசூல் 20 லட்ச ரூபாய். அந்நாளில் தயாரிப்பாளருக்கு பெரும் லாபம் அது. மதுரை சென்ட்ரல் சினிமா தியேட்டரில் ஸ்ரீவள்ளி திரைப்படம் 55 வாரங்கள் தொடர்ந்து ஓடியதாக புள்ளிவிபரம் சொல்கிறது ஒரு சினிமா இதழ். 

'வித்யாபதி' படத்திற்கு அவருக்கு அளிக்கப்பட்ட சம்பளம், ராஜகுமாரியின் கதாநாயகனான எம்.ஜி.ஆருக்கு அளிக்கப்பட்டதைவிட பத்து மடங்கு அதிகம் என்பதிலிருந்தே இரண்டு ராமசந்திரன்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்ளமுடியும். ('அன்பே வா' திரைப்படத்தில் சரோஜாதேவிக்கு தந்தையாக நடித்தவர்)

எம்.ஜி.ஆர்

நாகண்ணாவிடம் எஸ்.கே, ராஜகுமாரி படத்தைப்பற்றியும் சொல்ல, படக்காட்சிகளைப்பார்த்த நாகண்ணா, 'யாருப்பா இது?...பாகவதரோ, இல்ல சின்னப்பாவோ நடிக்கவேண்டிய படத்துல யாரோ முன்பின் தெரியாத ஆளைப் போட்டிருக்க, அதை வாங்கிட்டுப்போய் நான் நஷ்டமடையணுமா? என எரிச்சலாக மறுத்துவிட்டார். 'வித்யாபதி வாங்கிக்கொண்டால் ராஜகுமாரியை குறைந்தவிலைக்கே தருகிறேன்' என எஸ்.கே. சொன்னபோது கோபமடைந்த நாகண்ணா, 'என்ன எஸ்.கே உன் பழைய பார்ட்னரான என்னிடமே உன் தொழில் புத்தியை காட்டறியா...நீ சும்மா தந்தாலும் அந்தப்படம் வேண்டாம்'  என 'வித்யாபதி'யுடன் ஊர் போய் சேர்ந்தார். 'வித்யாபதி', 'ராஜகுமாரி' திரையிடப்பட்டன. ராஜகுமாரி அபார வெற்றி. வித்யாபதிக்கு போட்ட முதலீடு கூட கிடைக்கவில்லை. இதுதான் சினிமா எனும் வர்த்தக விளையாட்டு. 

ராஜகுமாரி பற்றி அன்றைய பிரபல சினிமா இதழான குண்டூசி, “ராஜகுமாரியில் ராமச்சந்திரனை பிரதம பாகத்திற்கு தேர்ந்தெடுத்த ஏ.எஸ்.ஏ சாமியை பாராட்டவேண்டும். சரியான பாகத்தைக் கொடுத்து அவரது திறமையை வெளிக்கொணர்ந்த பெருமை அவரையும்  ஜூபிடர் பிக்சர்ஸாரையுமே சாரும்” என வாழ்த்துக்களை அள்ளிக்கொட்டியிருந்தது எம்.ஜி.ஆர் மீது.

எம் ஜி ஆர்

எப்படியோ ராஜகுமாரியின் வெற்றி, எம்.ஜி.ஆரின் பத்தாண்டுக் கனவை ஒரு பகல்பொழுதில் நனவாக்கியது. எல்லா ஆண்களின் வெற்றிக்கு பின்னாளும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். எம்.ஜி.ஆர் திரையுல வெற்றியின் பின்னணியாக இருந்தது ஒரு 'ராஜகுமாரி'!
'ராஜகுமாரி' திரைப்படம் எம்.ஜி.ஆர் வாழ்வில் மட்டுமல்ல எம்.ஜி.ஆரின் எதிர்கால அரசியலில் நீரும் நெருப்புமாக பயணிக்கப்போகும் இன்னொரு பிரபலத்துக்கும் சினிமா வாயிலை திறந்துவிட்ட படம் எனலாம். படத்தின் இயக்குனராக ஏ.எஸ்.ஏ சாமிக்கு கதை -வசனத்தில் உதவியாக இருந்து அந்த படத்தின் பாட்டுப் புத்தகங்களில் 'உதவி ஆசிரியர்' என குறிப்பிடப்பட்ட அந்த 'பிரபலம்' யார் தெரியுமா...

http://www.vikatan.com/news/coverstory/85098-ramachandran-vs-ramachandran-life-history-of-mgr-series-26.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
    • இவர்கள் student visaவில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், நீதிமன்றத்துக்கு போனால் இவர்களின் விசாவிற்கு பிரச்சனை வரலாம், record இல் வந்தால் பிற்காலத்தில் green card எடுக்கும்போது பிரச்சனை வரும், தேவையற்ற சில்லறைக்கு ஆசைப்பட்டு பெரிய பிரச்சனையை சந்திக்கிறார்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.