Jump to content

ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா!


Recommended Posts

ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் ரெய்னா!

raina_batting_07300.jpg

இந்தியா - இங்கிலாந்து மோதிய முதல் டி20 போட்டி, நேற்று கான்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட்களை இழந்து 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ரெய்னா, 23 பந்துகளில் அதிரடியாக 34 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸர் அடங்கும். இவர் தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து, விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த உதவியதுடன், அணியின் ரன் ரேட்டையும் அதிகரித்தார்.

raina_fielding_07035.jpg

148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து, ஆரம்பத்தில் இருந்தே அலட்டிக் கொள்ளாமல் அடித்து ஆடியது. இந்நிலையில் 4-வது ஓவரைப் பந்துவீச வந்த சாஹல், ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை (இங்கிலாந்து துவக்க ஜோடி) எடுத்து அசத்தினார். பொதுவாகவே ஒருவர் போட்டியில் அரைசதம்/கேட்ச்/விக்கெட் எடுக்கும்போது, அந்த வீரருக்கு முதல் க்ளாப்ஸ், விசில் கிளம்புவது ரெய்னாவிடமிருந்துதான். நேற்றும் அதே போல அசத்திய சாஹலை முதல் ஆளாகக் கட்டிப் பிடித்து பாராட்டினார். மேலும் ஃபீல்டிங்கிலும் அசத்திய ரெய்னா, இயான் மார்கன் அடித்த சிக்ஸரைத் தடுத்தது வேற லெவல்! களத்திலும், டிரெஸ்ஸிங் ரூமிலும் 'டீம் ஸ்பிரிட்’ தக்க வைப்பதில் புகழ்பெற்ற ரெய்னா, தற்போது ட்விட்டரில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார்! 

 

http://www.vikatan.com/news/sports/78888-suresh-raina-shines-in-the-field.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.