Jump to content

பச்சைக்கிளி


Recommended Posts

பச்சைக்கிளி - சிறுகதை

கண்மணிகுணசேகரன், ஓவியங்கள்: ஸ்யாம்

 

ந்திவெயில், நடையைத் தாண்டி அருகால் படியின்மேல் ஏறிக்கொண்டிருந்தது. கதவுக்கும் தெற்காலப் பக்கமாக மேற்கில் தலைவைத்து பச்சைக்கிளியைக் கிடத்தி, சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள். நூலாக நொடிந்துபோன தேகம், நைட்டிக்குள் ஒடுங்கிக்கிடந்தது. மக்கியக் கொழுக்கொம்பை வளைத்திருக்கும் காய்ந்த அவரைக்கொடிபோல், மெலிந்த கைகளில் லேசாகப் புடைத்தபடி நரம்புகள் ஓடியிருந்தன. வெளுத்த முடிகள், அழுக்கேறிய தலையணையில் பாவி இருந்தன. குடவுகொண்ட கண்களில் கோடாகத் தெரிந்த இடைவெளியில் மிகவும் பரிதாபமாக அவளின் விழிகள், பக்கத்தில் அமர்ந்திருந்த கொஞ்சிக் குப்பத்தார் இளைய பெருமாளைப் பார்த்து, திரும்பத் திரும்பக் கெஞ்சிக்கொண்டிருந்தன.

`வண்டிக்காரன் கூப்புடுறான். நான் போவுட்டுமா?’

தலையில் இருந்த முடிகள் எல்லாம் வழித்துத் துடைத்துக்கொண்டு முகத்தில் இறங்கி, அதுவும் வெள்ளடை பாய்ந்து, அறுபதின் முதுமையில் கொஞ்சிக்குப்பத்தார். பச்சைக்கிளியையே பார்த்துக்கொண்டிருந்த அவரின் கண்களில் கொப்புளித்துக் கொப்புளித்து தாடிக்குள் கசிந்துகொண்டே இருந்தது நீர். பிடிவாதமாகக் கெஞ்சிக்கொண்டிருந்த பச்சையின் கண்களை, அவரால் நேருக்குநேர் பார்க்க முடியவில்லை. கீழே குனிந்துகொண்டார். தாடியையும் தாண்டி சாணி மெழுகிய தரையில் கண்ணீர்த்துளிகள் சொட்டின.

திருவதிகைக் கோயிலில் தாலியைக் கட்டி, குழந்தைகளைப் பெற்று, கல்யாணம் காட்சிகளைச் செய்து, பேரப்பிள்ளைகளைத் தூக்கி மகிழ்ந்த பெருவாழ்வை, கடகந்தாயத்தில் தூக்கி எறிந்துவிட்டுப்போக விடாப்பிடியாக நின்றுகொண்டிருக்கும் தருணத்தில், அவளுக்கு என்ன சொல்வது எனத் தெரியாமல் விரல்கள் ஈரத்தரையைக் கீறிக்கொண்டிருந்தன.

p64.jpg

என்ன நினைத்தாரோ... கதவைப் பிடித்து எழுந்தவர், ஒன்றும் சொல்லாமல் சாமியா வீட்டுக்குப் போனார். சுவரில் மாட்டியிருக்கும் வடக்கு மலையான் பிள்ளையாரை விடுத்து, கொஞ்சிக்குப்பத்து அய்யனார் இருக்கும் சனிமூலைப் பக்கம் திரும்பி, உள்ளுக்குள் கதறியபடி கையைத் தலைக்கு மேல் தூக்கி, “அய்யனாரே... இம்மாங்காலம் எங்களுக்கு ஆதரவா இருந்த நீ, கடைசியில கைவுட்டுட்டியே! இருவத்தஞ்சு வருஷத்தைத் தாண்டி இப்படி வந்து அந்த வண்டிக்காரன் வாதிக்கிறான். உனக்கு நாங்க என்னா குறைவெச்சோம்? பதினைஞ்சு நாளா, `அவனக்கூடப் போறேன்... போறேன்'னு கண்ணால கேட்டுக் கேட்டுக் கொல்றா. நான் அவளுக்கு என்னா பதில் சொல்வேன்? அந்த வண்டிக்காரனுக்கு ஒரு கால்கட்டு, வாய்கட்டு கட்ட மாட்டியா? அவ மின்ன போனா, நான் பின்ன வரப்போறேன். இதுல குறைகாலத்துக்கும் நான் அவளை நினைச்சுக்கிட்டுக் கெடக்கிற மாதிரி ஒரு புண்ணியத்தைச் செய்ய மாட்டியா?” - கையை நீட்டி நீட்டிக் கவக்கழி செருகி இருக்கும் கூரையைப் பார்த்து, கடைக்கண்ணால் வழிந்தோடக் கேட்டுக்கொண்டே இருந்தார். மளமளவென முருங்கைக்கிளை முறிவதுபோல் சிதம்பரத்து மூலை மண்டுகழியில் சைனம் பொரிந்தது. ஒரு கணம் அப்படியே வெலவெலத்துப்போய்விட்டார். கட்டு சைனம், கலகத்தில்தான் கொண்டுபோய்விடும்.

திரும்பவும் பச்சையிடம் போய் உட்கார, அவருக்கு மனம் இல்லை. அதே நேரம் கேடுபாடாகக் கிடக்கும் அவளைக் கெடாசிவிட்டு வெளியே போகவும் கால் பாவவில்லை. ஆடலங்கழியாக நடந்துபோய், பச்சையின் கால்மாட்டில் தலையில் அடித்த மாதிரி நின்றுகொண்டே இருந்தார். இடையில் காணாமல்போய் திரும்பவும் அவரைக் கண்ட பச்சையின் கண்கள், பழையபடி ஆவலமாக ஏறிட்டு, `வண்டிக்காரன் வுடாமக் கூப்புடுறான் போவுட்டுமா?’ - கெஞ்ச ஆரம்பித்தன.

ணிக்கன்குப்பத்தில் பொங்கநாதன் என்றால், யாருக்கும் அவ்வளவாகத் தெரியாது. வண்டிக்காரன் என்றால், அறியாப்பசங்கக்கூட “தா… சர்க்காரு கெணறு இருக்கு பாரு. அதுக்கும் பக்கத்துல வாசல்ல டயர் வண்டி நிக்கிற வூடுதான்” எனக் கையைக் காட்டிவிடுவார்கள். குறிப்பாக, வயதுக்குவந்த, வரப்போகும் பெண்பிள்ளைகள் எல்லோருக்கும் அவன் மீது கொள்ளை ப்ரியம். எல்லோருடைய தோட்டத்திலும் விதவிதமான செடிகள், அவன் பெயரைச் சொல்லி பூத்துக்கொண்டிருந்தன.

மாஞ்செவலையாக நல்ல உயரம். சுருள் சுருளாக அடர்த்தியான முடிகளை அவன் வாக்கெடுத்துச் சீவியதே இல்லை. எப்போது பார்த்தாலும் ஈரிழைத் துண்டால் வளைத்து, தலைப்பாகையை இறுக்கமாகக் கட்டியிருப்பான். கைலி, பனியனில் பெரும்பாலும் வண்டியோடும் மாட்டோடும்தான் போகும் அவனுக்கான பொழுது. உச்சிக்கொம்புகொண்ட திருவண்ணாமலை மாடுகள், கொம்புகளில் மணிப்பரல்கள் உருளும் கொப்பிகள்,  நத்தைக்கூடுகளைக் கோத்தது மாதிரி தலைக்கயிற்றில் சின்னதாக சலங்கைச்சரம், கழுத்தில் பெருமணிகளாக வெண்டையங்கள் என வண்டி தெருவில் கடந்துபோகும்போது, அய்யனார் வேட்டைக்குப் போவது மாதிரியான சலங்கைச் சத்தங்களை ஞாபகப்படுத்தும். கண்ணபிரான் பட்டறையில் கோத்த டயர்வண்டியில், பண்ருட்டி பக்கம் போய் கறவை மாடுகள் வைத்திருப்பவர்களிடம் குப்பை எருவை விலைக்கு வாங்கி, நடைக்கு இவ்வளவு என முந்திரித் தோப்புக்காரர்களுக்கு வந்து கொட்டுவான். ஆள் வைக்காமல் இவனாகவே வெட்டி அள்ளிக் கொண்டுவந்து கொட்டி நித்தம் ஒரு நடை. பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் ரோட்டில் திருப்பிவிட்டால் போகும் லாரி, பஸ்கள் எதையும் பொருட்படுத்தாமல் தானாகவே பணிக்கன்குப்பத்துக்கு மண் ரோட்டில் திரும்பிக்கொள்ளும் மாடுகள். அதிகம் வெயிலில் அடிபடாத, சிரமம் இல்லாத வேலை.

ஆடி மாதம் முந்திரிக்கு எரு தெளித்துதான் ஏரோட்ட வேண்டும் என்பதால், வண்டிக்காரனுக்குக் கடுமையான வேலை இருக்கும். சளைக்காமல் நாளைக்கு இரண்டு நடை என அரிபிரியாக ஓட்டுவான். அதேபோன்று ஆடி மாதத்தில் வைக்கும் செடிகொடிகள் எளிதில் பிழைத்துக்கொள்ளும் என்பதால், ஊர் பெண்பிள்ளைகள் அவன் வண்டிக்காக எதிர்பார்த்துக் கிடப்பார்கள். எரு அள்ளப்போகும் தோட்டங்களில் பார்க்கும் பூஞ்செடிகளை வாங்கி வந்து, சளைக்காமல் எல்லோருக்கும் கொடுப்பான். நல்ல எருமைச் சாணி எருவாக, நடை வரும்போது வழி மறித்து முறத்தில் அள்ளிக்கொள்வார்கள்.

“செடியைக் கொண்டாந்து குடுத்துட்டா மட்டும் போதுமா? எருவுக்கு எங்கே போறது நாங்க?''

ஒன்றும் சொல்லாமல் சிரித்துக்கொண்டு போவான். பூக்களாலும் வயசுப் பெண் பிள்ளைகளாலும் சூழ்ந்த வாழ்வு, அவனுக்கு ரொம்பவும் ப்ரியம். அதிலும் கிழக்குத் தெருப் பச்சைக்கிளி என்றால், அவனுக்கு உயிர்.

பட்டுராசா மகள் பச்சைக்கிளிக்கு, பட்டாம்பூச்சியைப்போல் படபடக்கும் பருவம். அதிலும் அவளின் சின்ன மாமன் கொஞ்சிக்குப்பத்து இளையபெருமாள், அவள் வயதுக்கு வந்தபோது ப்ரியமாக வாங்கிக் கொடுத்திருந்த மயில் பாவாடையைக் கட்டிக்கொண்டு வரும்போதெல்லாம் திரும்பிப் பார்க்கவைக்கும் பேரழகு. அவளுக்கு கனகாம்பரம் என்றால் கொள்ளை ஆசை. தலைகொள்ளாமல் சூடியிருந்தாலும் வைத்திருக்கும் சுவடே தெரியாமல் மிக லேசாகக் காற்றில் ஆடும் கனகாம்பரத்துடன் அவளும் பறப்பாள். வண்டிக்காரனிடம் நடைக்கு நடை வம்படியாகப் பேசி, விதவிதமான கனகாம்பரக் கன்றுகளை வாங்கிவிடுவாள். மற்ற பிள்ளைகள்போல் வாங்கிய கன்றுகளில் பாதியைச் சாகடித்துவிட்டு, பொழக்கன்னுக்கு மீண்டும் அவனிடம் கையை நீட்டுவதுபோல் இல்லாமல் வைக்கும் எல்லா கன்றுகளும் பிழைத்துப் பூவைத்துவிடும் அவளின் அதிசயக் கைராசி. அவளுக்காகவே சந்தைக்குப் போய் அவள் மகிழ்கிற மாதிரி புது ரகக் கனகாம்பரக் கன்றுகளைக் காசுபோட்டு வாங்கிவந்து கொடுப்பான் வண்டிக் காரன். ஒவ்வொரு கன்றையும் கை நீட்டி வாங்கும்போது எல்லாம் பச்சக் குழந்தையைப்போல் அவள் முகம் கொள்ளும் பரவசம், மகிழ்வு. அந்த அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என, வண்டிக் காரனுக்குள் ஒரு பேராவல் பொங்கி எழும்.

கொண்டுவந்து கொடுத்த செடிகள் அனைத்தும் ஒருசேரப் பூத்துக் குலுங்கிய ஒரு காலை நேரத் தோட்டத்தில், மஞ்சள் பாவாடையும் கிளிப்பச்சை நிறத் தாவணியுமாக நின்றிருந்தவளைப் பார்த்தவன் அசந்துபோனான். நந்தவனத்தில் நிற்கும் தேவதையைப் போன்று நிற்கும் அவளை, `அந்தக் கணமே வேரடி மண்ணோடு பிடுங்கிவந்து, தனது தோட்டத்தில் நட்டுக்கொள்ள வேண்டும்' என எண்ணினான். அதற்குப் பிறகு, பூக்களைப் பார்க்கும்போது எல்லாம் அவனுக்கு அவள் முகமாகவே தெரிந்தது. பூத்துக்குலுங்கும் செடிகள் எல்லாம் அவளாகவே இருந்தாள்.

ஒரே சமூகம்தான் என்றாலும், காணி பூமியில் வலுத்த கையாக பச்சையின் குடும்பம் இருந்ததால், அவன் தயங்கினான். ஆனாலும், அவள் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்ற கணத்தில் துணிந்து, முந்திரிக்கொட்டை பொறுக்க சொரட்டுக் கழியோடு போனவளை வண்டிப்பாதையில் மறித்து, மனதில் கிடப்பதை வெடித்தான்.

“பச்ச, உன்மேல நான் உசுரயே வெச்சிருக்கேன். உங்க தோட்டத்துல நீ சிரிச்சுட்டு நிக்கிற மாதிரி காலத்துக்கும் எங்க வூட்லயும் நீ சிரிச்சுட்டு நிக்கணும். நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் பச்ச. நீ `ஊ'னு சொன்னின்னா, எங்க அம்மாவ உங்க வூட்டுக்கு வந்து பொண்ணு கேக்கச் சொல்றேன்.”

பச்சைக்கு வியர்த்து விறுவிறுத்தது. பூச்செடிகளோடு தொடங்கிய பழக்கத்தை, கடைசியில் இப்படிக் கொண்டுவந்து நிறுத்துவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. தலைகுனிந்து சடசடப்பில் நின்றுகொண்டிருந்தவளின் கண்களில், கட்டி இருந்த பாவாடை வறும்பில், மயில்கள் தோகையை விரித்து ஆட்டம்போட்டன. ப்ரியமாக வாங்கிக் கொடுத்த கொஞ்சிக்குப்பத்து தாய்மாமன் இளையபெருமாள், மனசுக்குள் வந்து சிரித்துக்கொண்டு நின்றான். அவ்வளவுதான் பாம்புப் படத்தைப் போட்டுவிட்டுப் போவதைபோல், அவனை ஏறெடுத்துக்கூடப் பார்க்காமல் சரசரவென பட்டிக்காட்டான் முந்திரிப்பக்கம் போய்க்கொண்டிருந்தாள்.

வண்டிக்காரனுக்கு, ஒரு கணம் அப்படியே குன்னிப்போய்விட்டது. முகம் சுண்டிப்போய் வண்டியின் கொலு சட்டத்தில் குந்தியிருந்தவாறே திரும்பி, கறாராகச் சொன்னான், “நெசமாலும்தான் பச்ச. உன்மேல நான் உசுரயே வெச்சிருக்கேன். நீ இல்லைன்னா நான் செத்துடுவேன்” எனச் சொல்லிக்கொண்டிருந்த அவனின் குரல், குறிபார்த்து எரிந்த கத்தாழை மடலின் கூர்முள்ளைப்போல் அவளை விடாமல் பின்தொடர்ந்தது.

தூண் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த சானகி, நெத்திமட்டச் சுவரில் சாய்ந்து இருந்த பவுனாம்பாளிடம் சொன்னாள், “என்னாடி பவுனு... மலை ஆத்தா கோயில் காட்டுல ஆடி மாசத்துல மொட்ட ஈச கோத்துக்கிட்டுப் போற மாதிரி, உன்னடி மண்ணடியா முந்திரிக் கொட்டை பொறுக்கிக்கிட்டுக் கெடப்பிங்களே! வாரம் பத்து நாளா அவ மனசுல என்னாத்த போட்டுக் குழப்பிக்கிட்டுக் கெடக்குறானு தெரியலை. கொஞ்சிக்குப்பத்தாரையே உருவ உருவப் பார்க்கிறா. என்னா ஏதுனு கிட்ட வந்து நீனாச்சும் ஒரு வார்த்தை கேட்டுப்பாரேன்டி.”

பவுனாம்பாளும் பச்சையைப்போலவே பேரப்பிள்ளைகளை எடுத்த ஒரே வயசுக்காரிதான். சானகி சொன்னதும் கிட்டவந்து குனிந்து, பச்சையின் தலையில் ஆதரவாகக் கை வைத்தபடி கேட்டாள், “என்னா பச்ச... உன் மாமனை யாரும் வுட்டுட மாட்டாங்க. நீ ஒண்ணும் பயப்படாத. இங்காண்ட சாஞ்சா கட்லு... அங்காண்ட சாஞ்சா மெத்தங்கிற மாதிரி தாங்கு தாங்குன்னு தாங்கிற மருமொவளைக் கொண்டாந்து வெச்சிருக்கிறேன். அதுக்கு மேல மொவங்காரன். மொவளுவோ, பேரப்புள்ளிவோனு கொஞ்சிக்குப் பத்தாருக்கு இங்க என்னா குறை? நீ இம்மாங்காலம் என்னா பார்த்துக்கிட்டு இருந்தியோ, அதே மாதிரி எல்லாரும் அவரைப் பார்த்துப்பாங்க. நீ எதையும் மனசுல போட்டுக் குழப்பிக்காத.”

பவுனாம்பாள் சொல்லி முடித்ததும், பச்சையின் பெரிய மகள் சேந்தநாட்டில் வாக்கப்பட்டவள். செகலட்சுமி, குபுக்கென உடைந்து அழுதாள். அவளின் அழுகையில் எல்லோருக்குமே கண்கள் பொசுக்கெனக் குட்டை கட்டிக்கொண்டன. தொம்பையில் சாய்ந்து உட்கார்ந்து இருந்த அடுத்த தெருக்காரி வேம்பாயிதான் சானகியை அதட்டினாள்.

“ஏண்டி, அவளைப் போட்டு இம்சகட்டி அடிக்கிறீங்க. வாயைத் தொறந்து சொல்ற மாதிரி இருந்தா சொல்லிட்டுப்போறா. காத்துசாட்ட புடிச்சவளைக் கேக்கிற மாதிரி கணதாண்டி கெடக்கிறவகிட்டப் போயி `என்னா குறை... என்னா குறை?'னு நோண்டிக்கிட்டே நிக்கிறீங்க.''

“நோண்டாம... என்னாதான் செய்யச் சொல்றே? இன்னியோட பாஞ்சி நாளாவுது. மேமுழி கீமுழி முழிச்சுக்கிட்டுத்தான் கிடக்குதே தவிர, இருந்தம்னு இல்லாம தீந்தம்னு இல்லாம… அது அது வூடு வாசலைப் போட்டுட்டு வந்து குந்திக் கெடக்குதுவோ” - சானகி சண்டைக்கு நிற்பதுபோல் சொல்லிவிட்டு, நடையில் குந்தியிருந்த பச்சையின் மகன் பரஞ்சோதியிடம் சொன்னாள், “எலேய் சோதி... இதுக்கு மேல நடக்கிறபடி நடக்கட்டும். எந்திரிச்சுப் போயி வேலையைப் பாருங்க. மாடு, வெயில்ல கட்டிக்கெடக்குது பாரு புடிச்சுக் கட்டு.”

கொஞ்சம் இடைவெளிவிட்டு திடுமென நியாயம் கேட்பது மாதிரி சோதியிடமே சொன்னாள், “அன்னிக்கி `வவுத்து வலிக்கிறப்ப எல்லாம் ஆஸ்பத்திரிக்குப் போவலாம்'னு கூப்பிட்டப்ப ஒண்ணும் இல்லை, பித்தம், சூடுன்னு தழதாம்ப அரைச்சுக் குடிச்சுக்கிட்டு நின்னா. நாமளும் அதை மீறி பண்ருட்டி நந்தகோபால்கிட்ட தூக்கிக்கிட்டுப் போய்தானே பார்த்தோம். முக்காலே மூணுவீசமும் முத்தின அப்புறம், அவன் என்னா கடவுளா? அந்த ஆளு கையை விரிச்சுட்டான். நாம என்னா பாக்கிலியா... போவுலியா? அவளா உண்டாக்கிக்கிட்ட வினை. என்னமோ இப்படிக் குறை மாசத்தை அவ தலையில எழுதிட்டான். நாம மட்டும் என்னா, ஆட்சா வைரமா இங்கேயேவா இருக்கப் போறோம். அவ பத்து பொழுது முன்னால போனா, நாம பத்து பொழுது பின்னால போவப்போறோம்” - சானகி, தெருவில் கொஞ்சம் நல்லது கெட்டது தெரிந்த வயதான கட்டை. கடந்து பேசினாள்.

“அந்த மாமன்கிட்ட என்னமோ சொல்லணும்னு நினைக்குது. ஆனா, அதால எதையும் சொல்ல முடியாம, கூழ்ல விழுந்த ஈயாட்டம் தவிக்குது. பாரு, என்னமோ வெச்சகண்ணு வாங்காமப் பார்த்துக்கிட்டுக் கலங்குறதை…” - பழைய கதையையே பவுனு மறுபடியும் சொல்லி முடித்ததும், முகத்தில் அடிக்கிற மாதிரி சானகி வீசினாள்.

“ஆமாண்டி. என்னமோ சொல்வாங்களே... வாழும்போது இல்லை... வாழப்பூ சித்தாட சாவும்போதுதான் தறி போட்டு நெய்றானாங்கிற மாதிரி, பேசப் புடிக்க இருக்கிறப்ப எல்லாம் ஒண்ணும் சொல்லலை. வாய் அடைச்சுப்போன அப்புறம்தான் சொல்லப்போகுது.”

சானகி சொல்லி முடிக்கவில்லை. கொஞ்சிக்குப்பத்தார் திடுமென உடைந்து பெருங்குரலில், “உன்னை வுட்டுக்குடுத்துட்டு எப்பிடி இருப்பேன் பச்ச?” - ஓவென அழுதார். எல்லோரையும் ஒரு கணம் குபீரென அழுகை வளைத்துக்கொண்டது. அழுகுரல் கேட்டு, தோட்டத்துக்குப் போக எழுந்த பரஞ்சோதியும் சாந்தமதியும் ``முடிஞ்சுட்டுதா…'’ எனத் தேங்கினார்கள்.

“எமன் வந்து கேக்கும்போது வுட்டுக்குடுக்காம என்னா செய்ய முடியும்? இல்லை... வூட்லியே புடிச்சுவெச்சுக்கிட்டுத்தான் இருக்க முடியுமா? யார் யாருக்கு என்னா எழுதியிருக்கோ, அதுபடிதான் நடக்கும்” - சானகி, கொஞ்சிக்குப்பத்தாரைச் சமாதானப் படுத்தினாள். வெகுநேரம் குலுங்கிக் குலுங்கி அழுதவர், கண்களைத் துடைத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போக எண்ணித் திரும்பினார். அப்போதும் `வண்டிக்காரன் கூப்பிடுறான். நா போவுட்டுமா?' - பச்சையின் கண்கள் அவரைக் கெஞ்சியபடி கூடவே பின்தொடர்ந்தன.

வெளியே தோட்டத்துப் பக்கம் வந்தார். `எமன் வந்து கேக்கும்போது வுட்டுக்குடுக்காம என்னா செய்ய முடியும்?' - சானகியின் குரல் திரும்பத் திரும்ப மனசுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எமனாக வந்து நிற்கும் வண்டிக்காரப் பயல். எல்லாவற்றையும் மறந்துவிட்டுப் போக சம்மதம் கேட்கும் பச்சை, `இம்மாங்காலம் கூட வாழ்ந்ததுல, அவ மனசுல நிக்கிற மாதிரி நாம் நடந்துக்காம வுட்டுட்டமோ' என நினைத்து நினைத்துக் குமுறினார்.

திரும்பவும் தானாகவே கொய்யா மரம் நிற்கும் சனிமூலை நோக்கி கொஞ்சிக்குப்பத்து அய்யனாரிடம் சரணாகதிக்காக கைகள் நீண்டன. கொய்யாபழத்துக்கு வந்திருந்த பச்சைக்கிளிகள், அவரின் அழுகை அரவத்தில், கிழக்கே உத்திமாகுளத்துச் சுடுகாட்டுப் பக்கம் பறந்தோடின.

“கொஞ்சிக்குப்பத்து அய்யனாரு, கொஞ்சிக்குப்பத்து அய்யனாருன்னு ஊரு உலகம் எல்லாம் நம்ப கோயில்ல வந்து சைனம், கணின்னு கேட்டுக்கிட்டுப் போவுதுவோ. நீங்க என்னாடான்னா… `சாதகம், கோயில், குளம்னு எதையுமே பார்க்க வேணாம். தேதியை வையு'ங்கிறீங்க. வாழுங்காலத்துப் பயிரு. எதுக்கும் சும்மா சாங்கியத்துக்குனாச்சும் அய்யனாருகிட்ட ஒரு ஓசன கேட்டுப்பார்க்கும்” - மூத்தக்கட்டை சிவநாதப் படையாட்சி சொன்னது எதையுமே இளையபெருமாளின் அண்ணன்மார்கள் காதில் வாங்கவில்லை.

“நாம போறது நல்ல வழின்னா, எந்தச் சாமிகிட்டயும் ஓசன கேக்க வேணாம் பெரியப்பா” - பெரியவன் கலியபெருமாள் மறித்துச் சொன்னான். நல்லுவன் தங்கபெருமாளும் அதையே ஆமோதிப்பது மாதிரி நின்றுகொண்டிருந்தான். சின்னவன் இளையபெருமாள்,  முந்திரிக்கொட்டை வாங்கும் சைக்கிளைப் பிடித்தபடி ஒன்றும் சொல்லாமல் அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

சிவநாது, திண்ணையில் போட்டுக் குந்தி இருந்த வேட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

“சரிடா, உங்க ப்ரியம். அதோட நீங்க சொல்ற மாதிரி அங்காண்டயும் செல்வாம்பா கூடப் பொறந்த பொறப்பு. ஆளு இல்லாத குடும்பம். வெச்சிருக்கிறதும் கறிவேப்பிலைக் கொழுந்து மாதிரி ஒரே ஒரு பொட்டப்புள்ள. நாம கொண்டாந்தா அதுக்கும் ஒரு ஆதரவாப் பூடும். நமக்கும்…” - அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் வாசலுக்கு இறங்கினார்.

அண்ணன்காரர்கள் இருவருக்கும் லேசான அதிர்வு. ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் பணிக்கன்குப்பத்தில் இருக்கும் தங்கச்சி, செல்வாம்பாள் மகள் பச்சைக்கிளியைத் தம்பிக்காரனுக்குக் கட்டிவைத்து, அந்தக் குடும்பத்துக்கு ஆதரவாக இருப்பது என்பது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ஆம்பளப்புள்ளை இல்லாத வீடு. இளையபெருமாளுக்குப் பச்சையைக் கட்டிவைத்து, அங்கேயே அவனைக் குடும்பம் வைத்துக்கொள்ள செய்துவிட்டால், அதையே காரணம் காட்டி இங்கு இருக்கும் சொத்தையும் வீட்டையும் பிரித்துக்கொள்ளலாம் என்ற கணக்கு. கோயில், குளம் எனப் போய், சைனமோ, சாதகமோ கொடுக்கவில்லை என்றால், வேறு இடத்தில் பெண் பார்த்து, கடைசியில் இருக்கும் சொத்துபத்தை மூன்றாகக் கோடு கிழிக்க வேண்டும் என்ற யோசனையில்தான், எதையும் பார்க்காமல் நேரடியாகக் கல்யாணம் என நின்றுகொண்டிருந்தது. இந்த உள்கருத்து தெரிந்துதான் சிவநாது கொஞ்சிக்குப்பத்து அய்யனாரை குறுக்கில் இழுத்துப் போட்டுப் பார்த்தார். அவர்கள் எவரும் இதற்கு மசிவதுபோல் தெரியவில்லை என்றதும் அவராகவே படி இறங்கிக்கொண்டார்.

p64a.jpg

வாசலில் நின்று மனம் கேட்காமல் திரும்பவும் “நான் எதுக்குச் சொன்னேன்னா, நம்ப சாமிகிட்ட…” - இளையபெருமாளைப் பார்த்துக்கொண்டே சொன்னவர், “சரி வேணாம்... எதுக்கும் கட்டிக்கப்போறவன் கிட்டயாச்சும் ஒரு வார்த்தை கேட்டுட்டு, அப்புறமா தேதி வெக்கிறது போறதுன்னு மேற்படி வேலையைப் பாருங்களேன்.”

பெரியவன் இரண்டு பேருக்கும் திக்கென உள்ளுக்குள் இடித்தது. `இளையபெருமாள் குறுக்குவசத்தில் தலையாட்ட மாட்டான்' எனத் தெரிந்துதான் இதில் இறங்கினார்கள். இருந்தாலும் பங்காளிக்குப் பல்லுல விஷம்கிற மாதிரி, சிவநாது அவனிடம் ஏதாவது இக்கு வைத்திருப்பாரோ என்ற பதற்றம். கலியபெருமாள் கடித்த வாய் துடைத்த மாதிரி பட்டெனச் சொன்னான், “என்ன பெரியப்பா, அவனைக் கேட்டுக்கிட்டு... கிளியாட்டம் பொண்ணு. கட்டிக்கிறதுக்கு என்னா அவனுக்குக் கசக்குது?”

கலியபெருமாள் சொன்னதைப் பொருட்படுத்தாமல், திண்ணையோரம் நின்றுகொண்டிருந்த இளைய பெருமாளைப் பார்த்துக் கேட்டார், “என்னாடா முந்திரிக்கொட்ட யேபாரி. உன் அக்கா மொவ பச்சக் கிளியைக் கட்டியாந்துடுவோமாடா?”

அண்ணன்களும் அதே குறியோடு அவனைப் பார்க்கவும் இளைய பெருமாளுக்கு அருகிளுப்பாக இருந்தது. ஆனால், மனசுக்குள் பச்சைக்கிளி வயசுக்கு வந்தபோது அவன் ஆசையாக வாங்கிக் கொடுத்த செட்டுப் பாவாடையின் மயில்கள் றெக்கைகள் விரிக்க ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தாள்.

மகிழ்வை அடக்கியபடி சொன்னான், “என்னை என்ன கேட்டுக்கிட்டு பெரியப்பா... எங்க அண்ணனுவோ என்னா சொல்றாங்களோ... அதுபடி போவ வேண்டிதான்.”

அவன் வாபொறப்பைக் கேட்ட பிறகுதான் அண்ணன்காரர்கள் முகத்தில் பதற்றம் மறைந்த பரவசம். பெருமூச்சு விட்டுக்கொண்டே, “சரி, அப்புறம் என்னா... பாக்கு மாத்துறது போறது வர்றதுன்னு ஒண்ணும் பெரகளப் படுத்திக்கிட்டு இருக்க வேணாம். பாவம், அங்காண்ட அது ஒரு ஒட்டிநாக்க வெச்சுக்கிட்டு, எங்கன்னு அலையும். பேசாம, கைத்தாம்பலமா மாத்தி, கல்யாணத்தை வெக்கிற வேலையைப் பாருங்க.”

வியாபாரத்துக்கு வைத்திருந்த சைக்கிளை திண்ணையோரம் சாய்த்துவிட்டு, பச்சையின் கையைப் பிடித்துக்கொண்டு முந்திரி மரங்களுக்கு உயரே பறந்தான் இளையபெருமாள்.

தேதி வைத்த பிறகு, கல்யாணக் களையில் இன்னும் அழகுப் பதுமையாக இருந்தாள் பச்சை. அதுவும் தனக்குப் பிடித்த மாமன் இளையபெருமாளைக் கட்டிக்கொள்வது அவளுக்கு மனங்கொள்ளாப் பூரிப்பு. மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என்றாலும் தாய்மாமன்காரர்கள் என்பதால், கொஞ்சிக் குப்பமே திரண்டு வந்து நலுங்கு வைத்திருந்த அழகான மாலை. சரசரக்கும் பட்டுப்புடவையோடு தோட்டத்துப் பக்கம் போனவளுக்கு, பூத்து நிற்கும் கனகாம்பரங்களைப் பார்த்ததும் பொசுக்கென அவளுக்குள் வண்டிக்காரன் வந்தான். `உம்மேல நான் உசுரையே வெச்சிருக்கேன் பச்ச' - வண்டிப்பாதையில் மறித்துச் சொன்னது, மூங்கில் சிம்பாய் மனதுக்குள் வந்து போனதும், சின்னதாக ஒரு நெருடல். தேதி வைத்த நாளாக வண்டிக்காரன் இந்தப் பக்கமே வராமல் இருப்பது அப்போதுதான் நினைவுக்கு வரவும், இன்னும் இடித்தது. “பச்ச… மாமனுவோ எல்லாம் கௌம்புது பாரு” - அம்மாவின் குரலால் எல்லாமும் விடுபட, வீட்டுப் பக்கம் போனாள்.

திருவதிகைக் கோயிலில்தான் கல்யாணம். கோயிலில் இருந்து நேராக பொண்ணு வீடான பணிக்கன்குப்பத்துக்குப் போவதற்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். கலவர முகத்துடன் அவசரமாக உள்ளே வந்த பச்சையின் அம்மா செல்வாம்பாள், வழியில் நின்ற கலியபெருமாளிடம் கமுக்கமாகச் சொன்னாள், “பொண்ணு-மாப்ளய நேரா கொஞ்சிக்குப்பத்துக்கு இட்டுக்கினு போங்க. நாள பின்ன பணிக்கன்குப்பம் வந்துக்கலாம். ஊர்ல ஒரு கெட்டத் தகவலு. மொத மொத எதுக்கு?”

“யாருக்கா?” எனப் பதற்றத்தோடு கேட்டான் பெரியவன். அதற்குள் புடவைக்கட்டைச் சரிசெய்ய தோழியுடன் தனி அறைக்குப் போயிருந்த பச்சைக்கும் செய்தி எட்டிவிட்டது. “வண்டிக்காரன் எருவு அள்ளிக்கிட்டு வரும்போது மெயின்ரோட்ல லாரியில அடிபட்டு வண்டிமாடுவுளோட ஆளும் அங்கேயே அவுட்டாம்.”

எரிந்துகொண்டிருக்கும் தாய்விளக்கை வாயால் ஊதி அணைத்த அதிர்வில் இருண்டு போய்விட்டாள் பச்சைக்கிளி.

`நீ இல்லைன்னா, நான் செத்துடுவன் பச்ச!' உள்ளுக்குள் மின்னலாக வந்து விளாசியது வண்டிக்காரனின் குரல்.

தெருக்கூத்து பார்க்க, பணிக்கன்குப்பமே கோயிலடியில் குவிந்திருந்த இரவில் தனித்த வீடு. துளிரடித்து நிற்கும் கன்று முந்திரியாகப் பசபசக்கும் ஆசைகளோடு புதுமாப்பிள்ளை இளையபெருமாள். பின்னலைத் தாண்டிய கனகாம்பரச் சரங்களோடு நின்ற பச்சையை முதன்முதலாக வாரி அணைத்தவன் அப்படியே அரண்டுபோய்விட்டான். விறகுக் கழியாக விறைத்துக்கொண்டு கிடக்கிறாள். “பச்ச… பச்ச… என்னாப்பா?” - பதற்றத்தில் கன்னங்களைத் தட்டிக் கேட்கிறான்.

மென்று தின்றுவிடுபவளாக முறைத்துப் பார்த்தவள், அவனிடம் சண்டைக்கு நிற்கிறாள். “இது நான் கட்டிக்க ஆசைப்பட்ட பொண்ணுடா. நீ எப்படி தாலிக்கட்டின?” - ஆண் குரலில் அடிக்காத குறையாகப் பேசுகிறாள். உடைந்து சிதறிப்போய்விட்டான். கூத்து பார்க்கப் போயிருந்த பச்சையின் அம்மாவை, ஓடிப்போய் அழைத்துவந்தான். “நம்ப புள்ள எல்லாம் அப்படிபட்ட புள்ள இல்லை சாமீ. வயசுப் புள்ளங்கிறதால, மேல ஏதோ காத்துசேட்ட அண்டிபோச்சு சாமீ” - அலமலண்டுபோய் கதறுகிறாள்.

உள்ளூரில் பட்டாளத்தானைக் கூப்பிட்டுவந்து பாடம் போட்டார்கள். வேப்பிலையின் தலையாட்டத்தில் பச்சையின் முடிகள் பறந்தன. “பயந்த குணம் மாதிரிதான் இருக்கு. மறுபடியும் வந்து அடங்காத மாதிரி ஒரு தடை போட்டு குடுக்கிறேன். இது மாதிரிதான் செலம்பிநாதம் பேட்டையில ஒரு பொண்ணு...” என ஆரம்பித்த பட்டாளத்தான், கழுத்தில் முடிச்சுகள் மிகுந்த ஒரு கயிற்றில் கோத்த தாயத்தைக் கட்டிக்கச் சொல்லிவிட்டுப் போனான். அடுத்து நடுவீரப்பட்டான் “காத்து சேட்டதான். இனிமே பறந்துடும்” அடுத்து கயிற்றைப் போட்டான். புதுக் கருக்கு மாறாத பாவு நூல் தாலிக்கயிற்றோடு முடிக்கயிறுகள் விழுந்துகொண்டே இருந்தன. கடைசியாக சொந்த ஊர் கொஞ்சிக்குப்பத்து அய்யனாரிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள். தாடியை உருவிவிட்டு எருக்கங்கழியை எடுத்து பூசாலியிடம்தான் அழுது அழுது சொன்னாள், “நான் வண்டிக்காரன். இது நான் கட்டிக்க ஆசைப்பட்ட பொண்ணு. எனக்குப் புடிச்ச பொண்ணை, நான் எப்படி இன்னொருத்தனுக்கு வுட்டுக்குடுப்பேன்?”

p64b.jpg

“சின்ன மாமன்னா உசுரா இருக்கிற ஏம்புள்ளைக்கு, இப்படிப்பட்ட பழிபாவத்தை நினைச்சுட்டான அந்த வண்டிக்காரப்பய. ஊரு புள்ளிவோ ஓடி ஆசையா வாங்கிற மாதிரிதான என் புள்ளையும் ஓடி பூஞ்செடிகளை வாங்கிச்சு. அந்தக் கம்னாட்டிப்பய இந்த மாதிரி கெட்ட எண்ணத்தோட இருக்கான்னு தெரிஞ்சிருந்தா, நான் அப்பவே வௌக்கமாத்தால அவனை வெலா கோலியிருப்பன்” - அழுது புலம்பிய செல்வாம்பாளை, எரித்துவிடுகிற மாதிரி பார்த்தாள் பச்சை. பூசாலி கடந்து வண்டிக் காரனுக்கு தடையைப் போட்டு “இனிமேல்பட்டு ஒண்ணும் பயப்பட வேணாம் போங்க” - தலை கொள்ளாமல் விபூதியை அள்ளிப் போட்டு அனுப்பிவைத்தான்.

தூக்கம் தூக்கமாகத் தூங்கிகொண்டிருந்தாள். பழையபடி பேசிக்கொள்ள இரண்டு மூன்று மாதங்களுக்குமேல் கடந்துபோனது. அப்போதும் இளையபெருமாளுக்கு கிட்ட நெருங்கவே அலட்டி. மீறி தொட்டாலும் எரிக்கிற மாதிரி முறைத்துக்கொண்டு நின்றாள். திடீர் திடீரென தூக்கத்தில் “நான் வல்ல. எங்க மாமன் வுடாது. போயிடு. நான் வல்ல'' - புதிதாகப் பெணாத்தல் வேறு. எழுப்பிக் கேட்டால், “ஒண்ணும் இல்லை மாமா…” - சொடுக்கமாகச் சொல்லிவிட்டு மீண்டும் படுத்துக்கொள்வாள். பனி நமுரைக்கூடக் காணாத காய்ச்சலில் இளையபெருமாளின் துளிரடித்திருந்த முந்திரிக்கொழுந்துகள் வதங்கிக்கொண்டிருந்தன.

“திரும்பத் திரும்ப அங்கியே இருந்துக்கிட்டு இருந்தா, அப்படித்தான் இருக்கும். நீங்க கொஞ்ச நாளைக்கு இப்படி வந்து இருங்க. நம்ப அய்யனாரைத் தாண்டி எதுவும் அடியெடுத்து வைக்க முடியாது” - பூசாலியின் யோசனையின் பேரில்தான் பணிக்கன்குப்பத்தை விட்டு சொந்த ஊரான கொஞ்சிக்குப்பம் வந்தார்கள். அய்யனார் புண்ணியத்தில் கிட்ட நெருங்கும் இரவில் எடுத்து எறியும் கோளாறுகள் சுத்தமாக இல்லாமல் மனசுக்குப் பிடித்தவளோடு ஆசை அன்பாகப் போய்க்கொண்டிருந்தது வாழ்க்கை.

கொஞ்சிக்குப்பம் வந்து சிக்கல் இல்லாமல் வாழ்க்கை கொஞ்சம் நகர ஆரம்பித்ததும் அண்ணன்மார்கள் லேசாக இடற ஆரம்பித்தார்கள். “அதான் சரியாப் பூட்டுதே. அம்மாஞ்சொத்தை பணிக்கன் குப்பத்துல போட்டுட்டு இங்க வந்து என்னா வெட்டியாக் குந்திக்கிட்டு” - முகத்தைக் காட்டினார்கள்.

பணிக்கன்குப்பத்துக்குத் திரும்பப் போய் வண்டிக்காரன் வளையத்துக்குள் பச்சையைச் சிக்கவைக்க இளையபெருமாளுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் விடாமல் அண்ணன்காரர்கள் சீண்டிக் கொண்டிருந்ததில், இவனும் ஒருநாள் தாண்டிவிட்டான். “எனக்கு இங்க இருக்கிறதுக்கு உரிமை இல்லையா? இல்லை சுந்தரமூர்த்தி படையாட்சிக்கு நீங்க மட்டும்தான் புள்ளைவுளா? நான் அவருக்கு பொறக்கலியா?” - நித்தம் சண்டை முகாம்தான்.

வேறு வழி தெரியாமல் பெருங்குதிரைகளைக் கொண்டிருந்த அய்யனாரிடமே வந்து விழுந்தான். “நம்ப கோயிலுக்கு வர்ற அங்குசெட்டிப் பாளையத்து செட்டியார் ஒருத்தருக்கு, மேற்கே மணக்கொல்லையில நெலம்பலம் இருக்கு. இங்க இருந்து போயி பார்க்கிறதுக்கு ஆளு இல்லாம குடுத்துடலாம்னு இருக்காரு. பேசாம வண்டிக்காரன், அண்ணன்காரன்னு எந்தச் சிக்கலும் இல்லாம பணிக்கன்குப்பத்துல இருக்கிறதை வித்துட்டு கண் மறைய அப்படிப் போயிடுங்க. ஓடினவனுக்கு ஒன்பதாம் எடத்துல குருங்கிற மாதிரி, நெல்ல மாதிரியா இருப்பீங்க?” -திரும்பவும் பூசாலிதான் வழியைக் காட்டினார்.

“போற எடத்துலயும் எங்களுக்கு எந்தக் குறையும் இல்லாம, யாரையும் எங்ககிட்ட எடங்க வுடாம நீதான் காபந்தா இருக்கணும் அய்யனாரே” - கொஞ்சிக்குப்பத்து அய்யனாரிடம் சோடியாக விழுந்து கும்பிட்டுத்தான் மணக்கொல்லைக்கு வண்டியைப் பூட்டினார்கள்.

ருட்டை இழைத்துப் பூசிக்கொண்டிருந்தது இரவு. வழக்கம்போலவே இரவுச் சாப்பாட்டை முடித்த கையோடு வந்து குந்தியிருந்த தெரு சனங்களும் வைத்த கண் வாங்காமல் இளையபெருமாளையே பார்த்துக்கொண்டிருந்த பச்சையைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டது. “கண்ண இழுக்குது. நாங்க போறோம். அப்புறம் அந்த அய்யனாரு வுட்ட வழி. படுங்க” - கிளம்பியிருந்தார்கள். பரஞ்சோதியும் வெளியே போட்டிருந்த கட்டிலுக்குப் போய்விட்டான். மருமகள், மகள்கள் என எல்லோரும் உட்கார்ந்த இடத்திலேயே சாய்ந்து கண் அயர்ந்திருந்தார்கள்.

கூடத்தில், ஒற்றைக் குண்டுபல்பு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. தலைமாட்டிலேயே கொஞ்சிக்குப்பத்தார் உட்கார்ந்திருந்தார். பச்சைதான் இந்த வீட்டை “வாழ்ந்து சலிச்சவங்க வூடு. இதை எதுக்கு இடிச்சுக்கிட்டு? மேல கழிமரத்தை மட்டும் செப்பனிட்டு வெழல் அடிச்சிக்கும்” எனச் சரிபண்ணச் சொன்னாள். அய்யனார் புண்ணியத்தில் வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது. பணிக்கன் குப்பத்தில் இருந்த பழைய கெளிவு இல்லை என்றாலும், படுக்கையில் பெணாத்தல், முறைத்தல் என எந்தச் சிக்கலும் இல்லாமல்தான் ஓட்டிக்கொண்டிருந்தாள் பச்சை. கொல்லைக் குடிகளும் நன்றாக விளைந்து புள்ளைக் குட்டிகளைப் பெற்று கல்யாணம் காட்சிகளைச் செய்து நிறைவாழ்வாக வாழ்ந்துகொண்டிருக்கும் தருணத்தில்தான், அவளுக்கு இந்த வயிற்றுவலி வந்தது. பித்தம், சூடு எனச் சாக்குப்போக்குச் சொல்லி, ஆஸ்பத்திரிக்குப் போகாமல் தழைதாம்புகளை அரைத்துக் குடித்துக் கொண்டிருந்தவள், திடுமென ஒருநாள் சுருண்டு விழுந்தேவிட்டாள். பண்ருட்டி நந்தகோபாலிடம் தூக்கிப்போனார்கள். கர்ப்பப் பையில் கெட்டக் காயலா. காலம் கடந்துவிட்டதில் கையை விரித்துவிட்டார்.

கேடுபாடாகப் போனது, பதினைந்து  நாளைக்கு முன்னால்தான். அரைகுறையாகப் பேச்சு வந்துகொண்டிருந்த கடைசி நேரம். திக்கித் திக்கி முகம் இறுகி அவரைப் பார்த்துத் தயக்கத்துடன், “வண்டிக்காரன் கூப்புடுறான். நான் போவுட்டா?” என்று கேட்டாள்.

பழுக்கக் காய்ச்சிய பாரையை உச்சந்தலையில் இறக்கியதுபோல் எரிந்துபோய்விட்டார் கொஞ்சிக்குப்பத்தார். அதே நேரம் அவசரமாக மகன், மருமகள் என யாராவது கவனிக்கிறார்களா எனச் சுற்றும் முற்றும் அவரின் கண்கள் பரபரக்கின்றன. மணக்கொல்லை வந்த இவ்வளவு நாளில் வெளியே தெரியாத வண்டிக்காரன் சங்கதி, கடைசிக் காலத்தில் தெரிந்து பச்சையைத் தப்பாக நினைப்பார்களோ எனப் பதறியது. தெரு சனங்களும் இல்லை. மகனும் மருமகளும் தோட்டத்தில் முந்திரிக்கொட்டை கூட்டிக்கொண்டிருந்ததில் பெருத்த ஆசுவாசம்.

p64c.jpg

“என்னா சொல்ற பச்ச? இம்மாம் நாளு கெடந்துட்டு, இப்படி எல்லாம் பேசுனா என்ன அர்த்தம் பச்ச? உனக்கு ஒண்ணும் ஆவாது. நான் இருக்கிறேன் பச்ச” - சத்தம் போடாமல் படபடப்போடு பேசுகிறார்.

இன்னும் கம்மலாகிப்போன குரலில் திரும்பவும் சொல்கிறாள். “இல்ல... வுட மாட்டேங்கிறான் வண்டிக்காரன். இதுக்கு மேலனாச்சும் என்கூட வந்து இருனு திரும்பத் திரும்பக் கூப்புட்டுக்கிட்டே இருக்கான். நான் போவுட்டுமா?” - இதுதான் பச்சை கடைசியாகப் பேசியது. அதற்குப் பிறகு விடாமல் கண்களாலேயே கெஞ்சல்.

`நான் போவுட்டுமா... போவுட்டுமா?'

குந்திய நிலையில் கண்ணை இழுத்துக் கொண்டுபோய், எப்போது தூங்கிப்போனார் எனத் தெரியவில்லை. திடுமென, பாதத்தை எதுவோ உரசுகிற மாதிரி படவும் பொட்டென விழிப்பு வந்தது. பச்சையின் கை தான். “என்னா பச்ச?” எனப் பதறியபடி கேட்டவர், அவளை உற்றுப்பார்த்தார். மலங்க மலங்க விழித்துக்கொண்டிருந்த அவளின் கண்கள், லேசாக தெருப் பக்கம் சாய்த்து சாடை காட்டியது. சாத்தியிருக்கும் கதவுப் பக்கம் திரும்பி, தெருவை நோக்கியவருக்கு உடல் எல்லாம் தடதடவென நடுங்குகிறது. பாடி தகட்டில் வளையங்கள் மோதும் ஓசையோடு வாசலில் டயர்வண்டி வந்து நிற்கும் சத்தம். சலங்கைகளின் நாவுகள் அடங்கிய மெளனம்.

“பச்ச… என்ன வுட்டுட்டுப் போயிடாத” - அவளின் கையை எடுத்து நெஞ்சில் அணைத்துக்கொண்டு கதறுகிறார். விரல்களைக் கோத்துப் பிடித்திருந்த அவரின் உள்ளங்கை, பச்சைக்கு விடைகொடுத்ததாக இருந்ததுபோலும். பட்டெனத் தெருவைப் பார்த்திருந்த அவளின் கண்கள் நிலைக்குத்தி நின்றன. “பச்ச... என்ன வுட்டுட்டுப் போயிட்டியா?” - கதறலில் எல்லோரும் வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார்கள்.

வெளியே கொப்பிமணிகளும் வெண்டய சலங்கைகளும் பூட்டிய மாடுகளின் சத்தம், தெருமுனை திரும்பி வண்டி கிழக்கே வேகமாகப் போய்க்கொண்டிருப்பது, அவருக்கு மட்டும் கேட்டது.

http://www.vikatan.com/anandavikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருதலையாய் காதலித்து ஒருத்தியின் வாழ்க்கையை பாழடித்த மாதிரி போகுது கதை .... அன்றைய கிராமத்து நிலைமையை அழகாய் சொல்லியிருக்கின்றார்....!   tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.