Jump to content

ஏழாவது நாள் ஏழரை ஆனது எப்படி?


Recommended Posts

போலீஸ் மெரினா போராட்டக் குழுவைக் கலைத்தது இப்படித்தான்! #SpotReport

 

ஜல்லிக்கட்டு

ன்று காலை சரியாக 4 மணிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார்  ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய இளைஞர்கள் குழுமி இருந்த விவேகானந்தர் இல்லம் அருகே வந்து இறங்கினர். அதே நேரத்தில் மெரினா கடற்கரைக்கு வரக்கூடிய  வாலாஜா சாலை, பாரதியார் சாலை, அன்னி பெசன்ட் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தடுப்புகள் அமைத்து அங்கேயும் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

விவேகானந்தர் இல்லம் அருகே குழுமியிருந்தவர்களிடம் மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தார்.  அவர், “ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது. உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுவிட்டது. இன்று அதற்கான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. நீங்கள் கலைந்து செல்லலாம்” என்று சொல்லிவிட்டு அதுகுறித்த சில ஆவணங்களை இளைஞர்களிடம் கொடுத்தார். ஆனாலும் அங்கிருந்த இளைஞர்கள் கலைந்து செல்லாமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். 

இந்நிலையில் 6.30 மணியளவில் அங்கே தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்த மைக்செட் வேனில் ஏறி நின்ற பாலகிருஷ்ணன் மைக் பிடித்து பேச ஆரம்பித்தார், “நாங்கள் பொறுப்பான துறையில் இருந்து கொண்டு, உங்களிடம் ஜல்லிக்கட்டு தொடர்பான ஆவணங்களைக் கொடுத்துள்ளோம். அதை நீங்கள் நம்ப வேண்டும். சட்டமன்றம், நாடாளுமன்றம் கூட்டத்தொடர் இல்லாதபோது அவசரச் சட்டம்தான் கொண்டு வரப்படும். அது பின்னர் சட்டமன்றத்தில் வைத்து நிரந்தரம் ஆக்கப்படும். இதுதான் நடைமுறை. மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்தச் சட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை. நீங்களாகவே கலைந்து செல்லுங்கள்” என்றார்.

01_09487.jpg

 

அதன்பிறகு இளைஞர்கள், “சட்டசபையில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்த பிறகு கலைந்து செல்கிறோம்” என்றனர். போலீஸார் இதைக் கேட்பதாக இல்லை. “உடனே கலைந்து செல்லுங்கள்” என்று மீண்டும் எச்சரித்தனர். இளைஞர்கள், “கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. உடனடியாக கலைந்து செல்ல முடியாது.  அவகாசம் தாருங்கள்” என்றனர். முதலில் 8 மணி நேரம் அவகாசம் கேட்டவர்கள், போலீஸாரின் விடாப்பிடி எச்சரிக்கைக்குப் பிறகு,  “2 மணி நேரமாவது அவகாசம் தாருங்கள்... நாங்கள் கலைந்து சென்று விடுகிறோம்” என்றார்கள். ஆனால்,  “போலீஸார் அவகாசம் தர முடியாது” என்றனர்.

உடனே இளைஞர்களைச் சுற்றி வளைத்த போலீஸ் படை கூட்டத்துக்குள் புகுந்து இளைஞர்களை இழுத்து, வெளியே விட்டது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  

Jallikatti_001_09152.jpg

 

இளைஞர்கள், “நாங்கள்தான் கலைந்து சென்றுவிடுகிறோம் என்கிறோமே... கொஞ்சம் அவகாசம் தானே கேட்கிறோம்... அதைத் தர உங்களைத் தடுப்பது எது...?  2 மணிநேரத்தில் நாங்களே கலைந்து சென்றுவிடுகிறோம்” என்றார்கள். 

போலீஸார் இதை கேட்கத் தயாராக இல்லை.  இளைஞர்களை வெளியேற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது. இதை அறிந்து வெளியே சென்ற இளைஞர்களும், கடற்கரையை நோக்கி வர ஆரம்பித்தனர். அவர்களைத் தடுக்கும் போது, திருவல்லிகேணியில் போலீஸார் தடியடி நடத்தத் துவங்கினர். 
போலீசாரின் இந்த அணுகுமுறையால் கோபமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடற்கரை  பக்கம் ஓடி. அதன் ஓரமாக ஒன்று சேர்ந்து மனிதச் சங்கிலி அமைத்து, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து கோஷமிட்டப்படி நிற்கிறார்கள். 

“நாங்கள் இரண்டு மணி நேரம்தான் அவகாசம் கேட்டோம். அந்த நேரத்துக்குள் நாங்களே கலைந்து சென்று இருப்போம்... அறவழியில் போராடிக் கொண்டிருக்கும் எங்கள் மீது ஏன் இந்த வன்முறை” என்று கொந்தளித்தபடி கடலில் கைகோர்த்து நிற்கிறார்கள்.

அறவழியில் அமைதியாக போராட்டம் நடந்துக் கொண்டிருந்த இடம்.. இப்போது போர்க்களம் போல் உள்ளது.

http://www.vikatan.com/news/coverstory/78472-this-is-what-happened-in-marina-spotreport.art

மெரினாவிலிருந்து கட்டாயமாக வெளியேற்றும் காவல்துறை: கலையமறுக்கும் இளைஞர்படை (படங்கள்)

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வுகோரி மெரினா கடற்கரையில் குழுமியிருக்கும் இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர்.

மெரினாவில் இளைஞர்கள்

ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.

M_2_08454.jpg

அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன்  செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. 

M_3_08047.jpg

இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று திரண்டு வருகின்றனர். அவர்களில் பலர் மெரினாவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

M_4_08028.jpg

மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளன.

 

Link to comment
Share on other sites

கலவரக் காடானது மெரினா: கண்ணீர் புகை வீச்சு - வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இன்று போலீஸ்-பொதுமக்கள் மோதலாக மாறியதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.

 
 
 
 
கலவரக் காடானது மெரினா: கண்ணீர் புகை வீச்சு - வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
 
சென்னை:

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலையில் இருந்து காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல தொடர்ந்த மறுத்துவரும் இளைஞர்கள், கடற்கரையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மெரினாவில் ஆங்காங்கே கூட்டமாக இளைஞர்களும், பெண்களும் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களை நெருங்கி வந்து கலைக்க முயற்சித்தால் நாங்கள் கடலுக்குள் சென்று விடுவோம் எனவும் அவர்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர். இருப்பினும் பெண்களையும், குழந்தைகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, காலை 9 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி சாலை வழியாக மெரினா கடற்கரையை நோக்கி செல்ல முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அனுப்பினர்.

அவ்வழியாக மெரினா கடற்கரைக்கு செல்ல முயன்ற ஜல்லிக்கட்டு ஆர்வலரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் உள்பட பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்ட களத்தில் குதித்தனர். திருவல்லிகேணி மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் போலீசார் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

தங்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டே போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சில பெண் போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கற்களை எரிந்து தாக்கியதை காண முடிந்தது. இந்த மோதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.

நிலைமை கைமீறி போனதால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்துபோக மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பிரயோகித்து வருகின்றனர்.

இதனால், மெரினா கடற்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கலவரக் காடாக மாறியுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/23104528/1063692/police-hurl-tear-gas-on-marina-protesters.vpf

 

 

 

 

 

மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டக்காரர்கள் வெளியேற்றம்: போலீஸார் குவிப்பு; போர்க்களமானது போராட்டக் களம்

 

 
 
 
 
போராட்டக்காரர்களை வெளியேற்றும் காவல்துறை. படம்: எல்.சீனிவாசன்
போராட்டக்காரர்களை வெளியேற்றும் காவல்துறை. படம்: எல்.சீனிவாசன்
 
 

கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் சென்னை காவல்துறையால் முடக்கம்

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்யக் கோரியும் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். கடற்கரைக்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார்.

ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.

மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்

மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தனர்.

போர்க்களமான மெரினா

இந்நிலையில் இன்று (திங்கள்கிழமை) காலையில் மெரினாவில் நூற்றுக்கணக்கான போலீஸார் திரண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களிடம் போராட்டத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தனர். மாணவர்கள், இளைஞர்கள் மறுப்பு தெரிவித்த நிலையில், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் தொடங்கினர். முதலில், பெண்கள், குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சிலர் தாங்களாகவே வெளியேறினர். ஆனால், போராட்டக்காரர்கள் பலரும் கடலை நோக்கி ஓடினர். அங்கேயே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மெரினா கடற்கரை போராட்டக்களம் சில மணித்துளிகளில் போர்க்களமானது.

1_3121883a.jpg

தற்கொலை மிரட்டல்

மாணவர்கள் சிலர் கடலில் இறங்கி போராடி வருகின்றனர். காவல்துறையினர் நெருங்கினால் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டி வருகின்றனர்.

படகுகள் மூலம் உணவு, தண்ணீர்

சென்னை மெரினாவில் கடலுக்கு அருகே மனிதச் சங்கிலி அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு படகுகள் மூலம் உணவு, குடி தண்ணீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினர் தங்களை நெருங்கவிடாமல் போராட்டக்காரர்கள் மணலை வாரி வீசுவதாகக் கூறப்படுகிறது.

பறக்கும் ரயில் சேவை ரத்து

மெரினாவில் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மீண்டும் கூட்டம்கூடுவதை தடுக்கும் வகையில் சென்னை வேளச்சேரி - கடற்கரை இடையேயான பறக்கும் ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/மெரினாவில்-ஜல்லிக்கட்டுப்-போராட்டக்காரர்கள்-வெளியேற்றம்-போலீஸார்-குவிப்பு-போர்க்களமானது-போராட்டக்-களம்/article9496561.ece?homepage=true

 

 

 

மீண்டும் மெரினாவில் உட்கார்ந்த மக்கள்... #Liveupdates

பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  திருவல்லிக்கேனியில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மெரினாவில் மக்கள் அமர்ந்தனர்

M_12_10063.jpg

பல்வேறு திசைகளில் இருந்து மீண்டும் போராட்டகாரர்கள் மெரினாவில் திரண்டுவருகின்றனர்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மெரினா சாலை

மெரினா கடற்பகுதி அருகே போராட்டத்தை தொடரும் இளைஞர்களிடம், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மெரினாவுக்குள் மேலும் போராட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது மெரினா சாலைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடற்பகுதியில் அமர்ந்து போராட்டம் தொடர்பவர்களிடம் போலீசார் அமைதியாக கலைந்து செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.

ராயபுரம் - துறைமுகம் பாலத்தின் முன் பொதுமக்கள் சாலை மறியல்.

Marina protest
 

மெரினா கடற்கரையை நோக்கி வந்த இளைஞர்கள் ராயப்பேட்டையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

மெரினா கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் திரண்டிருந்து இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை வீசி கலைக்க முயன்று வருகின்றனர்.

கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் காவல்துறை கண்ணீர் புகை வீசி போராட்டம் செய்பவர்களை கலைத்து வருகின்றனர்.  

தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, இளைஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

217_09268.jpg

மெரினாவில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

கடல் வழியாக போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய மீனவர்கள்

மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் தண்ணீர், உணவு இல்லாமல் திண்டாடி வந்த நிலையில் கடல் வழியாக மீனவர்கள் போராட்டக்காரர்களுக்கு உணவு அளித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

போராட்டம் செய்தவர்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்ததால், மெரினாவுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தடைந்துள்ளது.

மெரினாவில் இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பயனில்லை. காவல்துறையினர் கவனமான முறையில் இளைஞர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மெரினாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற் பகுதி அருகே சென்று ஒன்றுகூடிவிட்டனர். காவல்துறை அருகில் வந்தால் கடலில் இறங்கி விடுவோம் என மிரட்டல்விடுத்து வருகின்றனர்
 

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அவர்களை அப்புறப்படுத்த போலீஸ் திணறி வருகின்றனர். அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

காவல்துறையினர் மெரினாவில் குழுமியிருக்கும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.

214_08574.jpg

அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன்  செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று அவர்கள் திரண்டு வருகின்றனர்.
மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளது.

c4cc21eb-ab03-4e04-b923-dca0bf14d284_072

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தி வருபவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் மெரினாவில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள் கலைய மறுத்து வருகின்றனர். கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள்  கடற் பகுதி அருகே ஒன்று திரண்டு வருகின்றனர். மனிதச் சங்கிலி அமைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் கடலுக்குள் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். மீடியாவையும் வெளியேற்ற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம், 7-வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், ' உங்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. எனவே மெரினாவை விட்டுக் கலைந்து செல்லுங்கள். எங்களிடம் லத்தி இல்லை, தவிர யாரும் உங்களை அடிக்கப்போவதில்லை'' என போலீஸார் ஒலிபெருக்கியில் கூறிவருகின்றனர். ஆனால் இளைஞர்களோ நிரந்தரச் சட்டம் வரும்வரை ஓயமாட்டோம் எனத் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்ற முற்பட்ட போது, அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

afbf29f8-202f-4936-b396-06a1fc091806_061

இதனைத் தொடர்ந்து, கூட்டத்துக்குள் நுழைந்த போலீஸார், அங்கிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து வெளியேற்றத் துவங்கியுள்ளனர். மேலும் பாரதி சாலை, பீட்டர்ஸ் சாலை, வாலாஜா சாலை அனைத்தும் போலீஸ் காவலில் இருப்பதுடன், மெரினா செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாக இருந்த அனைவரையும் போலீஸார் கலைத்துவிட்ட நிலையில், அவர்கள் மறுபக்கம் இன்னொரு பெரிய கூட்டமாகச் சேர்ந்துவிட்டனர். அவர்களிடத்தில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்டத்தைப் பற்றி விளக்கி வருகிறார். 

30bdd112-6ceb-441b-a65f-88d257f59f84_064

 

இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்து, கடல் நோக்கி நகர்கின்றனர். அனைவரும் கைகோர்த்து நின்று மனித சங்கிலி அமைக்க முயற்சித்து வருகின்றனர்!

http://www.vikatan.com/news/tamilnadu/78467-youth-denying-to-move-out-of-marina.art

Link to comment
Share on other sites

நம் உயிர் நமக்கு முக்கியம்; தண்ணீரில் இறங்காதீர்கள்: மெரினா இளைஞர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

 

 
 
 
 
ராகவா லாரன்ஸ் | படம் உதவி: ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கம்.
ராகவா லாரன்ஸ் | படம் உதவி: ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கம்.
 
 

இளைஞர்களே தயவுசெய்து தண்ணீருக்குள் மட்டும் இறங்கிவிடாதீர்கள். நம் உயிர் நமக்கு முக்கியம் என்று ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரி மெரினாவில் போராட்டம் நடத்திய இளைஞர்களை போலீஸார் வெளியேற்றி வருவதை அடுத்து இவ்வாறு லாரன்ஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொலியை வெளியிட்டுள்ளார் லாரன்ஸ். அதில் அவர் கூறியதாவது:

காலையில் ஆறு மணிக்கு போலீஸார் போராட்டத்தைக் கலைத்துவிட்டார்கள் என்று எனக்கு போன் வந்தது. உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் இருந்த என்னை இளைஞர்கள் வந்து பார்த்தார்கள். அப்போது காலையில் பேசி ஒரு நல்ல முடிவுக்கு வரவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைத்தோம். காலை 10 மணிக்கு வழக்கறிஞரின் உதவியோடு கலந்து பேசலாம் என்று நினைத்திருந்தோம்.

திடீரென்று பார்த்தால் இப்படி ஒரு தகவல் வந்தது. தொலைக்காட்சியை ஆன் செய்தேன். எல்லோரும் ஓடுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு பெண் தொலைபேசியில் அழைத்து, 'அண்ணே, என்னை அடிக்கிறாங்க, கொஞ்சம் வாங்கண்ணே!' என்று சொன்னபோது என்னால் தாங்கவே முடியவில்லை.

உடனே கிளம்பி மெரினாவுக்குச் சென்றேன். எந்தப் பக்கமும் என்னை விடவில்லை. போலீஸிடம் கைகூப்பி கெஞ்சிப் பார்த்தேன். ''பசங்க தண்ணிக்குள்ள போறாங்க சார், அவங்களை விட்ருங்க சார். எனக்குக் கொஞ்சம் டைம் கொடுங்க, நான் சொன்னால் பசங்க கேட்பாங்க சார்'' என்றேன். ஆனால் என்னை உள்ளே விடவில்லை.

இதில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் என்னுடன்தான் இருக்கிறார்கள். யாரும் பயப்படாதீர்கள்.

இளைஞர்களே தயவுசெய்து தண்ணீருக்குள் மட்டும் இறங்கிவிடாதீர்கள். நம் உயிர் நமக்கு முக்கியம். எப்படியாவது மெரினாவுக்கு வருவேன். தயவுகூர்ந்து யாரும் பயப்பட வேண்டாம்.

குழந்தைகள் தலையில் அடித்துக்கொண்டு அழுவதைத் தொலைக்காட்சிகளில் பார்க்கிறேன். அவர்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். யாராவது அடிக்கிறார்கள் என்றால் ஓரமாகப் போய் நின்றுகொள்ளுங்கள். உங்கள் உயிர்தான் முக்கியம் என்று லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/நம்-உயிர்-நமக்கு-முக்கியம்-தண்ணீரில்-இறங்காதீர்கள்-மெரினா-இளைஞர்களுக்கு-லாரன்ஸ்-வேண்டுகோள்/article9496777.ece?homepage=true

போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து பயணிகள் ரெயிலை மீட்ட போலீசார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 4 நாட்களாக போராட்டக்காரர்கள் பிடியில் இருந்த பயணிகள் ரெயிலை போலீசார் இன்று மீட்டனர்.

 
 
 
 
போராட்டக்காரர்கள் பிடியில் இருந்து பயணிகள் ரெயிலை மீட்ட போலீசார்
போராட்டக்காரர்கள் பிடியில் இருந்த கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் இன்று போலீசாரால் மீட்கப்பட்டது.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் கடந்த 8 நாட்களாக தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்ட நிலையில், நிரந்தர சட்டம் இயற்றும் வகையில் போராட்டத்தை தொடர போராட்டக்காரர்கள் திட்டமிட்டனர். ஆனால் இன்று அதிகாலை போலீசார் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை தடுத்து நிறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

மதுரையில் தமுக்கம், ரெயில் நிலையம், பெரியார், காளவாசல், அரசரடி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தமுக்கம் சாலையை தவிர மற்ற இடங்களில் போராட்டக்காரர்களை போலீசார் வெளியேற்றி உள்ளனர்.

மதுரை ரெயில் நிலையத்தில் திருச்செந்தூர்- பாலக்காடு பயணிகள் ரெயில் மற்றும் வைகை பாலத்தில் கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயில் ஆகியவற்றை போராட்டக்காரர்கள் கடந்த 4 நாட்களாக சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை ரெயில்வே மற்றும் அதிரடிப்படை போலீசார் போராட்டக்காரர்களை வெளியேற்றி ரெயில்களை மீட்டனர்.

மேலும் போராட்டக்காரர்கள் அமைத்த பந்தல் மற்றும் தடுப்புகளையும் போலீசார் அப்புறப்படுத்தினர். மீண்டும் போராட்டக்காரர்கள் அங்கு வராதப்படி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரெயில் நிலையம் மற்றும் வைகை மேம்பாலத்தில் ரெயில்களுக்கான சிக்னல் எந்திரங்கள் போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டு இருந்தது அதனையும் ரெயில்வே ஊழியர்கள் சரி செய்தனர்.

கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்ட மதுரை ரெயில் போக்குவரத்து இன்று முதல் சீராகும் என தெரியவந்துள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/23110012/1063696/Jallikattu-favour-protest-Madurai-Passenger-train.vpf

Link to comment
Share on other sites

சென்னை: போலீஸ் நிலையம் முன்பு வாகனங்களுக்கு தீ வைப்பு!

chennai_fire_11543.jpg

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று காலை அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையத்துக்குள் தீ பரவியதால் உள்ளே இருந்த காவலர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/78484-fire-at-ice-house-police-station-near-marina-beach-police-disperse-protesters.art

'முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களே... தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள் !' - கொந்தளிப்பு அடங்காத மெரினா

marina1_11198.jpg

ல்லிக்கட்டுக்காக மெரினாவில் கூடிய கூட்டத்தை ஆயுதங்களின் துணையோடு அப்புறப்படுத்தத் தொடங்கிவிட்டது காவல்துறை. 'மக்கள் மத்தியில் வெறுப்பு அதிகரிக்கும் சூழலில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்காக வன்முறையைக் கட்டவிழ்த்துள்ளது தமிழக அரசு' எனக் கொந்தளிக்கின்றனர் மாணவர்கள். 

தமிழக சட்டசபை இன்று கூடியுள்ளது. ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கு சட்ட வடிவம் கொடுக்கும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. 'நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் அகல மாட்டோம்' என மாநிலம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். 'மெரினாவை சுத்தப்படுத்தினால்தான், குடியரசு தினத்தை நடத்த முடியும்' என்பதால், நேற்று நள்ளிரவு முதல் கூட்டத்தைக் கலைக்கும் பணியில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ' போலீஸாரின் நடவடிக்கை பெரும் கலவரத்தில் முடியலாம்' என அரசியல் கட்சித் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

"மாணவர்களிடம் பேசுவதற்கான முயற்சியை எடுத்தோம் என காவல்துறை அதிகாரிகள் சொல்கின்றனர். போராட்டக் களத்தில் இருப்பவர்கள், வாட்ஸ்அப் மூலம்தான் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்கின்றனர். ஒரு தலைவர் இல்லாத கூட்டத்தில், யாரிடம் சென்று இவர்கள் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒட்டுமொத்த கூட்டத்துக்கும் கேட்கும்விதமாக, மைக் வைத்துப் பேசியிருக்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஜனநாயகரீதியான எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதைப் புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் ஒதுங்கியுள்ளன. இதுவரையில், நல்லமுறையில் செயல்பட்டுக் கொண்டிருந்த நேற்று முதல் தேச விரோதி என முத்திரை குத்துவதை, திட்டமிட்ட சதியாகத்தான் பார்க்கிறோம். இது பா.ஜ.க அரசின் தோல்வி என்று சொல்வதற்கு முதலமைச்சர் பன்னீர்செல்வம் மறுக்கிறார்" எனக் கொதிப்புடன் பேசினார் சி.பி.எம் கட்சியின் சிந்தன். தொடர்ந்து நம்மிடம் பேசியவர், " மத்திய  அரசுதான் சட்டம் போட வேண்டும். அதைச் செய்யவில்லை. அவசரச் சட்டத்தில் உள்ளவற்றை வெளியில் சொல்லுங்கள் என்கிறோம். அதைச் செய்யவில்லை. அரசாணையை மட்டும் காட்டுகிறார்கள். நேற்று நான்கு பேர் கொடுத்த பேட்டியிலும், என்னென்ன விதிகள் திருத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லவில்லை. 'ஜனாதிபதியின் பார்வைக்குச் செல்லும்' என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதன்மூலம், ஜனாதிபதி கையெழுத்துப் போடவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வளவு கொந்தளிப்புக்கு மத்தியில் குடியரசு தினவிழாவைக் கொண்டாட வேண்டிய அவசியம் ஏன் வந்தது? 

marina_11436.jpg

மக்களை வேதனையில் வைத்துவிட்டு, விழாவைக் கொண்டாடி என்ன பயன்? மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டால், மக்களோடு நின்று மாநில அரசு போராடும். ஆனால், இங்கே மக்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பதோடு, மாநில உரிமைக்கான கோரிக்கையும்கூட. என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் உள்ளவர்கள் பதறுகிறார்கள். மாணவர்களை பாதுகாக்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் போலீஸார் கைகளில் அடிபடும்போது, தேசிய கீதம் பாடுகிறார்கள், வந்தே மாதரம் எனக் கோஷம் எழுப்புகிறார்கள். தேசிய கீதம் பாடினால், போலீஸார் அடிக்க மாட்டார்கள் என sindhan1_11034.jpgவாட்ஸ்அப்பில் வந்ததை அவர்கள் நம்புகிறார்கள். அத்தனை பேரும் தேசிய கீதம் பாடுகிறார்கள். இவர்களா தேச விரோதிகள்? தேசத்தை மதித்துத்தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு எதிராகப் பேசினாலே, தேச விரோதிகள் ஆகிவிடுவார்கள். 'அராஜகத்தால் வீழ்த்தலாம்' என அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. முதல்வர் செய்யத் தவறியதை ஒப்புக் கொள்ள வேண்டும். 'உங்களுக்காக நான் போராடுகிறேன். எங்கள் மீது அவநம்பிக்கை வேண்டாம்' என பொதுமக்களிடம் வந்து நேரிடையாகப் பேசுவதில் முதல்வருக்கு என்ன தயக்கம்?" என்றார் ஆதங்கத்துடன். 

" உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு ஜல்லிக்கட்டு தீர்ப்புக்காக ஒரு வாரம் அவகாசம் கேட்டதில் இருந்தே துரோகத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மக்கள் விரும்பும் வகையில், ஆறு கோரிக்கைகளுக்குத் தீர்வு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்; மிருகவதை சட்டத்தின் காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும்; 1960-ம் ஆண்டின் மிருகவதை தடுப்புச் சட்டத்தில் தகுந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டினை தமிழர்களின் பாரம்பர்ய பண்பாட்டு விளையாட்டு என அங்கீகாரம் வழங்கி, மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்; மேற்படி சட்டமானது உச்ச நீதிமன்றத்தின் வரம்பிற்குள் வராமல் இருக்க, அரசியலைமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும்; மத்திய அரசின் விலங்குகள் நல வாரியத்தால், பீட்டாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்; மேற்கண்ட எங்களுடைய கோரிக்கைளை நிறைவேற்ற மத்திய அரசுக்குத் தமிழகஅரசு வலியுறுத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும் வரையில் எங்களை ஒடுக்க நினைக்கும் அரசின் முயற்சிகள் நிறைவேறாது" எனக் கொந்தளிக்கிறார் கல்லூரி மாணவர் ஒருவர். 

ஒரு கிராமத்திற்குள் முதல்வரையே அனுமதிக்காத சூழலை நேற்று பார்த்தோம். இன்று காலை முதல் மெரினாவில் தடியடி நீடித்துக் கொண்டே இருக்கிறது. சட்டசபைக் காட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். 

http://www.vikatan.com/news/tamilnadu/78482-dear-cm-accept-your-failure-on-jallikattu-protest.art

அலங்காநல்லூரில் கலவரம்!

Alanganallur protest

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி அறிவித்தை தொடர்ந்து, அங்கு போராட்டம் செய்த ஒரு தரப்பினர்  வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். ஊர் கமிட்டி போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர், தற்போது அங்கு போராட்டக்காரர்களின் ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுப்பட்டு வருவதால் அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பலர் காயம் அடைந்துள்ளனர். பொதுமக்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/78486-riot-erupted-in-alanganallur.art

Link to comment
Share on other sites

சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

 

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக இன்று சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

 
 
சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
 
சென்னை:

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக இன்று சென்னையின் பல பகுதிகளில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகிவரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.

சென்னை அண்ணா சாலை, ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை உள்ளிட்ட நகரின் பல முக்கிய சாலைகளில் இன்று பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DEE32FDA-18E2-400E-96DE-161ED5CD1D59_L_s

அவ்வழியா கடந்து சென்ற வாகனங்களை வழிமறித்த சிலர், ‘நாங்கள் தமிழர்களாக போராடுகிறோம், நீங்களும் தமிழனாக இருந்தால் இங்கே எங்களுடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து போராடுங்கள். இல்லாவிட்டால், ஓரமாக நின்று வேடிக்கை பாருங்கள் என்று அறிவுறுத்தினர்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/23114136/1063706/Chennaites-stage-sudden-Road-block-protest.vpf

விரட்டி அடிக்கும் போலீஸ்... எதிர்த்து நிற்கும் இளைஞர்கள்!⁠⁠⁠⁠

மெரினா

துரையில் ஜனவரி 16-ம் தேதி ஏற்றி வைத்த ஜல்லிக்கட்டு போராட்ட எழுச்சித் தீப்பொறி, தமிழகம் முழுவதும் பரவி சென்னை மெரினா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் அருகே கடந்த 6 நாட்களாக அமைதியாக மையம் கொண்டு இருந்தது. லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் 24 மணி நேரமும் அறவழியில் நடத்தி வந்த போராட்டத்தை 23-ம் தேதி அதிகாலையில் போலீசார் உள்ளே புகுந்து தமிழகத்தையே பதற்றத்துக்கு உள்ளாக்கி விட்டார்கள்.

'சட்டமன்றத்தில் முதல்வரின் அறிவிப்பை பார்த்துவிட்டு, போராட்டத்தை வாபஸ் வாங்குகிறோம்' என்று மெரினாவில் கூடியிருந்த இளைஞர்கள் கேட்டுக் கொண்டும். அதற்கு சம்மதிக்காமல் போலீசார் எடுத்த அதிரடியால் 6 நாட்களாக அமைதியாக இருந்த மெரினா கடற்கரை ஜனவரி 23-ம் தேதி காலையில் போர்க்களம்போல மாறியது. விடாப்பிடியாக மாணவர்களை அங்கிருந்து அகற்றுவதில் குறியாக இருந்த போலீசாரின் அவசரமே, இந்த சூழ்நிலைக்குக் காரணம் என்கிறார்கள் பல்வேறு தரப்பினரும்.

விவேகானந்தர் இல்லம் அருகே இளைஞர்களின் மையப் புள்ளியாக கூடியிருந்த இடத்தை போலீசார் தங்களது கட்டுபாட்டுக்குள் இன்று அதிகாலையிலேயே கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து விரட்டப்பட்ட இளைஞர்கள், கடலை நோக்கியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, அவ்வை சண்முகம் சாலை, பெசன்ட் சாலை, பாரதியார் சாலை, வாலாஜா சாலை என்று ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் பிரிந்து சென்றனர். இவர்களில் கடற்கரை ஓரத்தில் கடல் அலையை நோக்கியிருந்த இளைஞர்கள் கறுப்புக் கொடியுடன் தொடர்ந்து எதிர்ப்புக் குரல் கொடுத்தனர். 

போலீஸ் தடியடி

அதே நேரத்தில், மெரினா கடற்கரைக்கு வரும் ஐந்து முக்கிய சாலைகளிலும் ஒதுங்கி இருந்த இளைஞர்களை அங்கிருந்து விரட்டி அடிக்கும் வேலைகளில் போலீசார் ஈடுபட்டதால் இருதரப்புக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. போராட்டக் களத்தில் 5 முறை கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்து இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சிதறி ஓடினர். அவ்வை சண்முகம் சாலையில் போலீசார் நடத்திய தடியடி காரணமாக 30-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. லத்தியடியில் இளைஞர்களின் முதுகு பழுத்துப் போனது. அப்போது, அருகிலிருந்த குடிசைப் பகுதிகளில் இருந்து வீசி எறிந்த கல் வீச்சில் இன்ஸ்பெக்டர், ஒரு பெண் போலீஸ் உள்பட 5 போலீசார் காயமடைந்தனர்.

எனவே, திருவல்லிக்கேணி பகுதி தொடர்ந்து பதற்றமாகவே காணப்படுகிறது. போராட்டக் களத்தில் இருக்கும் மாணவர்களுக்கு ஆதரவாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருந்து வரும் இளைஞர்களை ஆங்காங்கே போலீசார் சோதனை செய்து தடுத்து நிறுத்துவதுடன், திருப்பி அனுப்பி வருகின்றனர். ஆனாலும், அதை எல்லாவற்றையும் மீறி இளைஞர்கள் வருகை அதிகரித்து வருகிறது. மெரினா கடற்கரை, மெரினாவுக்கு வரும் சாலை சந்திப்புகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளர். அந்தப் பகுதி முழுவதும் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. 

“வலிமையான, வீரியமான, நம்பத்தகுந்த துணிச்சலான இளைஞர்கள்தான் இன்றையத் தேவை. அப்படிப்பட்ட 100 இளைஞர்களை என்னிடம் தாருங்கள். உலகை மாற்றிக் காட்டுகிறேன்” என எழுச்சி உரை ஆற்றினார் சுவாமி விவேகானந்தர். மெரினாவில் விவேகானந்தர் இல்லம் அருகே மையம் கொண்டிருந்த போராட்டம் முன்பைவிட மிகவும் வலுவாக மாறி வருகிறது.  

http://www.vikatan.com/news/tamilnadu/78479-police-action-and-protesters-fightback-in-marina.art

'அரசு அல்லது லாரன்ஸ் வந்து பேச வேண்டும் ' - மெரினா போராட்டக்காரர்கள் நிபந்தனை

balakrishnan-veliah-jallikattu_12270.jpg

மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் உடனடியாக கலையுமாறு கூறினர். அதற்கு போராட்டக்காரர்கள், அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும் அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் தாங்கள் கலையத் தயார் என கூறியுள்ளனர். மைலாப்பூர் துணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன்தான் லாரன்ஸிடம் பேசியுள்ளதாகவும், அவர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். 

இப்போது மெரினாவில் திருநங்கைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, போராட்டக்காரர்களை கண்காணித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர்.  

marina-jallikattu-helicopter_12044.jpg

மெரினாவில் இந்த நேரத்திலும் போராட்டக்காரர்கள் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். 

http://www.vikatan.com/news/support-jallikattu/78487-marina-protestors-want-govt-representative-or-raghava-lawrence-to-mediate-the-standoff.art

Link to comment
Share on other sites

வன்முறைக் களமான மெரினா; இரு பெண்களைக் குறிவைத்து தாக்கிய போலீசார்!

மெரினா

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 6 நாட்களாக போராட்டம் அமைதியாக  நடைபெற்றது. இன்று போலீசார் புகுந்து போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தத் தொடங்கியதும், இருதரப்பினருக்கும் இடையே மோதலாக மாறியது. 

விவேகானந்தர் இல்லம், அவ்வை சண்முகம் சாலை, வாலாஜாசாலை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார், போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் போலீசாரின் தடியடி மற்றும் அராஜகத் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பங்கேற்ற 5 இளம்பெண்களில் அஞ்சலி, லிடியா என்ற 2 பேரை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து லத்தியால் தாக்கியுள்ளனர். அந்தப் பெண்கள் இருவரையும் சிவாரசபுரம் குப்பத்து மக்கள் போலீசாரிடன் இருந்து மீட்டு, அங்குள்ள ஒரு வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.

219_13281.jpg

அங்கிருந்த மக்கள் அந்த இரு பெண்களுக்கும் சாப்பிட உணவு கொடுத்துள்ளனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்குள் போலீசார் அத்துமீறி நுழைந்து, அந்தப் பெண்களை மீண்டும் வெளியே இழுத்து வந்துள்ளனர். அந்த வீட்டையும் அடித்து நொறுக்கியுள்ளனர். காவல்துறையினர் தொடர்ந்து இந்த பெண்களைத்தான் குறிவைத்து தாக்கியதாக அந்தப் பெண்கள் கூறுகிறார்கள். மீண்டும் அந்தப் பெண்களை காவல்துறையினரிடம் இருந்து மீட்டு பாதுகாப்பு அளித்தனர்.

224_13042.jpg

இதுகுறித்து பாதிக்கப்பட்ட கீதா அஞ்சலி கூறுகையில், "காவல்துறை எங்களின் முகத்தைப் பார்த்தாலே துரத்தி அடிக்கிறார்கள். ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், எங்களுடைய முகத்தை நன்றாக போலீசார் தெரிந்து வைத்திருந்தனர். இதனால், எங்களைக் குறிவைத்து அடிக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

லீடியா என்ற பெண் விமான பணிப்பெண் வேலைக்குப் படித்து விட்டு, பணிக்காக் காத்துக் கொண்டிருக்கிறார்.

போராட்டக்களம் வேகமாக வேறு முகத்தை எட்டியிருப்பது, தமிழக காவல்துறைக்கும், அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்பதை உணர்ந்து, தமிழக அரசு செயல்பட வேண்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/78488-riot-in-marina-jallikattu-protest-police-attacks-women-brutally.art

 

 

 

 

லாரன்ஸ் முயற்சி வீண்? - மெரினா போராட்டம் தொடர்கிறது!

மெரினாவில் இன்று போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மெரினா வந்துள்ளார். அப்போது, 'போராட்டத்தில் வெற்றி அடைந்ததை கொண்டாட வேண்டிய நேரமிது. தயவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கலைந்து செல்லுங்கள்.' என்று கூறினார். 

raghava-lawrence-marina-beach-jallikattu

 

மேலும், 'மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ்பெற வேண்டும், போலீஸ் செயலால் காயம் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சட்டமுன்வடிவு நகல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார். 

லாரன்ஸ் பேசிய பிறகும் திருப்தியடையாததால் போராட்டக்காரர்கள் கலைய மறுத்து அங்கேயே அமர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/78502-raghava-lawrence-asks-marina-beach-protestors-to-disperse.art

 

 

 

கொந்தளிக்கும் மெரினா... #Liveupdates

லாரன்ஸ்-செய்தியாளர்கள் சந்திப்பு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் சார்பாக, தற்போது, ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

225_14251.jpg

வன்முறை சம்வங்கள் ஜல்லிக்கட்டுக்காகப் பேராடிய மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது அல்ல என விளக்கமளித்து வருகிறார்.

போராட்டக்காரர்கள் கலைய மறுப்பு

மெரினாவில் இன்று போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் மெரினா வந்துள்ளார். அப்போது, 'போராட்டத்தில் வெற்றி அடைந்ததை கொண்டாட வேண்டிய நேரமிது. தயவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் கலைந்து செல்லுங்கள்.' என்று கூறினார். 

raghava-lawrence-marina-beach-jallikattu

 

மேலும், 'மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய போலீஸ் மன்னிப்பு கேட்க வேண்டும், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் வாபஸ்பெற வேண்டும், போலீஸ் செயலால் காயம் பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், சட்டமுன்வடிவு நகல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும்.' என்று பேசியுள்ளார். 

லாரன்ஸ் பேசிய பிறகும் திருப்தியடையாததால் போராட்டக்காரர்கள் கலைய மறுத்து அங்கேயே அமர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சென்னை சைதாப்பேட்டையில் சாலை மறியல்: வீடியோ: விக்னேஷ்

 

 

‘அரசு அல்லது லாரன்ஸ் வந்து பேச வேண்டும்’ - மெரினா போராட்டக்காரர்கள் நிபந்தனை

balakrishnan-veliah-jallikattu_12270.jpg

மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் உடனடியாக கலையுமாறு கூறினர். அதற்கு போராட்டக்காரர்கள், அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும் அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் தாங்கள் கலைய தயார் என கூறியுள்ளனர். மைலாப்பூர் துணை கமிஷனர் வி.பாலகிருஷ்ணன்தான் லாரன்ஸிடம் பேசியுள்ளதாகவும், அவர் வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். 

இப்போது மெரினாவில் திருநங்கைகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடற்படை ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து, போராட்டக்காரர்களை கண்காணித்து வருகிறது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் போராட்டக்களத்துக்கு வந்துள்ளனர்.  

marina-jallikattu-helicopter_12044.jpg

மெரினாவில் இந்த நேரத்திலும் போராட்டக்காரர்கள் கடற்கரையில் உள்ள குப்பைகளை சுத்தப்படுத்தி வருகின்றனர். 

chennai_fire_11543.jpg

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி சென்னை மெரினாவில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இன்று காலை அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள காவல் நிலையம் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல் நிலையத்துக்குள் தீ பரவியதால் உள்ளே இருந்த காவலர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளியேறினர். தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பறக்கும் ரயில் சேவை நிறுத்தம்

சென்னையில் நிலைமையை கட்டுப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  திருவல்லிக்கேனியில் காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

பறக்கும் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் மெரினாவில் மக்கள் அமர்ந்தனர்

M_12_10063.jpg

பல்வேறு திசைகளில் இருந்து மீண்டும் போராட்டகாரர்கள் மெரினாவில் திரண்டுவருகின்றனர்.

காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் மெரினா சாலை

மெரினா கடற்பகுதி அருகே போராட்டத்தை தொடரும் இளைஞர்களிடம், காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மெரினாவுக்குள் மேலும் போராட்டக்காரர்கள் நுழையாத வண்ணம் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. தற்போது மெரினா சாலைகள் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடற்பகுதியில் அமர்ந்து போராட்டம் தொடர்பவர்களிடம் போலீசார் அமைதியாக கலைந்து செல்ல வலியுறுத்தி வருகின்றனர்.

ராயபுரம் - துறைமுகம் பாலத்தின் முன் பொதுமக்கள் சாலை மறியல்.

Marina protest
 

மெரினா கடற்கரையை நோக்கி வந்த இளைஞர்கள் ராயப்பேட்டையில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.

மெரினா கடற்கரைக்குச் செல்லும் சாலைகள் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் திரண்டிருந்து இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டை வீசி கலைக்க முயன்று வருகின்றனர்.

கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு!

சென்னை அவ்வை சண்முகம் சாலையில் காவல்துறை கண்ணீர் புகை வீசி போராட்டம் செய்பவர்களை கலைத்து வருகின்றனர்.  

தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடற்கரையில் திரண்டுள்ள இளைஞர்கள் அங்கிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

காவல்துறையினர் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, இளைஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

217_09268.jpg

மெரினாவில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்து வருகின்றனர்.

கடல் வழியாக போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கிய மீனவர்கள்

மெரினாவில் போராட்டம் நடத்தி வருபவர்கள் கலைந்து செல்ல மறுத்து வருகின்றனர். போராட்டக்காரர்கள் தண்ணீர், உணவு இல்லாமல் திண்டாடி வந்த நிலையில் கடல் வழியாக மீனவர்கள் போராட்டக்காரர்களுக்கு உணவு அளித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

போராட்டம் செய்தவர்களில் ஒரு சிலர் மயங்கி விழுந்ததால், மெரினாவுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்தடைந்துள்ளது.

மெரினாவில் இளைஞர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பயனில்லை. காவல்துறையினர் கவனமான முறையில் இளைஞர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர்.

நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

மெரினாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனாலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடற் பகுதி அருகே சென்று ஒன்றுகூடிவிட்டனர். காவல்துறை அருகில் வந்தால் கடலில் இறங்கி விடுவோம் என மிரட்டல்விடுத்து வருகின்றனர்
 

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அவர்களை அப்புறப்படுத்த போலீஸ் திணறி வருகின்றனர். அங்கு பதற்றம் அதிகரித்து வருகிறது.

காவல்துறையினர் மெரினாவில் குழுமியிருக்கும் இளைஞர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயன்றனர். ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த இளைஞர்கள் கடற்கரையை ஒட்டி குழுமியிருக்கின்றனர்.

214_08574.jpg

அவர்களை காவல்துறையினர் தகாத வார்த்தைகளில் திட்டிவருகின்றனர். அத்துடன்  செய்தியாளர்களையும் அப்பகுதிக்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. 

இந்நிலையில், விரட்டப்பட்ட ஏராளமான இளைஞர்கள் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிக்குச் சென்று அவர்கள் திரண்டு வருகின்றனர்.
மெரினாவுக்கு செல்லும் பாதைகள் முடக்கப்பட்டுள்ளது.

c4cc21eb-ab03-4e04-b923-dca0bf14d284_072

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்தி வருபவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. நெல்லை, திருத்தணி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால் மெரினாவில் ஒன்றுதிரண்ட இளைஞர்கள் கலைய மறுத்து வருகின்றனர். கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மெரினாவில் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த இளைஞர்கள்  கடற் பகுதி அருகே ஒன்று திரண்டு வருகின்றனர். மனிதச் சங்கிலி அமைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் கடலுக்குள் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். மீடியாவையும் வெளியேற்ற காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். போராட்டம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

மெரினாவில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டம், 7-வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், ' உங்கள் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. எனவே மெரினாவை விட்டுக் கலைந்து செல்லுங்கள். எங்களிடம் லத்தி இல்லை, தவிர யாரும் உங்களை அடிக்கப்போவதில்லை'' என போலீஸார் ஒலிபெருக்கியில் கூறிவருகின்றனர். ஆனால் இளைஞர்களோ நிரந்தரச் சட்டம் வரும்வரை ஓயமாட்டோம் எனத் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஒலிப்பெருக்கிகளை அகற்ற முற்பட்ட போது, அங்கே சலசலப்பு ஏற்பட்டது.

afbf29f8-202f-4936-b396-06a1fc091806_061

இதனைத் தொடர்ந்து, கூட்டத்துக்குள் நுழைந்த போலீஸார், அங்கிருந்த இளைஞர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்து வெளியேற்றத் துவங்கியுள்ளனர். மேலும் பாரதி சாலை, பீட்டர்ஸ் சாலை, வாலாஜா சாலை அனைத்தும் போலீஸ் காவலில் இருப்பதுடன், மெரினா செல்லும் அனைத்து சாலைகளும் முழுதாக அடைக்கப்பட்டுள்ளது. தற்போது விவேகானந்தர் இல்லத்துக்கு முன்பாக இருந்த அனைவரையும் போலீஸார் கலைத்துவிட்ட நிலையில், அவர்கள் மறுபக்கம் இன்னொரு பெரிய கூட்டமாகச் சேர்ந்துவிட்டனர். அவர்களிடத்தில் துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அவசர சட்டத்தைப் பற்றி விளக்கி வருகிறார். 

30bdd112-6ceb-441b-a65f-88d257f59f84_064

 

இளைஞர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற மறுத்து, கடல் நோக்கி நகர்கின்றனர். அனைவரும் கைகோர்த்து நின்று மனித சங்கிலி அமைக்க முயற்சித்து வருகின்றனர்!

http://www.vikatan.com/news/tamilnadu/78467-youth-denying-to-move-out-of-marina.art

 

#Jallikattu தேனியில் போராட்டக்காரர்கள் கைது! #LiveUpdates

திருச்சி போராட்டம் முடிவுக்கு வந்தது.

அலங்காநல்லூாில் கலவரத்துக்கு பின் மோசமான சூழ்நிலை நிலவுவதால் பத்திரிக்கையாளர்களை போலீசார் பாதுகாப்புடன் வெளியேற்றினர்.

போராட்டம்  நடத்திய  மாணவர்கள் மீது  தாக்குதல் நடத்திய காவல்துறையை  கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள், நீதிமன்ற முன்பு சாலை மறியல் போராட்டம்  நடத்தினர். அதில் வழக்கறிஞர்களுக்கும்  காவல்துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 2 வழக்கறிஞர்களை போலீசார் பிடித்து சென்றனர். கார்த்திகேயன்

05fff9b1-a962-4d4e-8d55-cb626984e541_135

திருச்சி ஈ.வே.ரா கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்குள் வகுப்பு புறக்கணித்து போராட்டம்.

தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியை காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தேனியில் போராட்டக்காரர்கள் கைது.

அலங்காநல்லூரில் கலவரம்:

Alanganallur protest

அலங்காநல்லூரில் பிப்ரவரி 1ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊர் கமிட்டி அறிவித்தை தொடர்ந்து, அங்கு போராட்டம் செய்த ஒரு தரப்பினர்  வன்முறையில் ஈடுப்பட்டுள்ளனர். ஊர் கமிட்டி போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர், தற்போது அங்கு போராட்டக்காரர்களின் ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுப்பட்டு வருவதால் அங்கு பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பலர் காயம் அடைந்துள்ளனர். பொதுமக்களில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

மதுரை தமுக்கத்தில் கமிஷனர் தலைமையில் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. கலைந்து செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டும் மாணவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்கின்றனர். கோரிப்பாளையம் சிக்னல் முதல் தமுக்கம் வரை பேரிகாடை அமைத்து வருகிறது போலீஸ். சல்மான், படம் : சிதம்பரம்.

14085ca5-8a7f-4b67-953b-89b6f961df21_122

அலங்காநல்லூரில் தடஅடி ஆரம்பம், கல்வீச்சு: அலங்காநல்லூரில் 90 % கூட்டம் கலைக்கப்பட்டது: சே.சின்னதுரை

a3c81563-f960-44f9-9773-7909cce3086e_120

79bfda9f-7103-48ce-92a1-779dc3f5c526_112

1_11094.jpg

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் அலங்காநல்லூர் மக்களிடம் கிராமத் தலைவர்கள், ஜல்லிக்கட்டு விழா குழுவினர் பேச்சுவார்த்தை. வீடியோ: இ.ஜே.நந்தகுமார்

 

 

அலங்காநல்லூரில் ஜல்லைக்கட்டு நடத்த கிராம கமிட்டி முடிவு. வருகிற ஒன்றாம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு. போராட்டம் நடத்திய மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். இத்துடன் போராட்டம் முடிவுக்கு வருகிறது.

alangar_10414.jpg

கோவை வலுக்கட்டாயமாக போராட்டகாரர்களை அகற்றம் போலீஸார்

kovai_10380.jpg

 

சேலத்தில் போராட்டக்காரர்களிடம் இருந்து கடந்த ஐந்து நாட்களாக சிறைபிடிக்கபட்ட ரயில் மீட்பு. போலிசார் மாணவர்களை அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

train_10100.jpg

மதுரை தமுக்கம் மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்.

madurai5_09579.jpg

 

மதுரை தல்லாக்குளத்தில் போராட்டத்தைக் கைவிடும்படி காவல்துறை வலியுறுத்தல் வீடியோ:நந்தக்குமார்.

 


மதுரை

 

கடலூரில் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக போலிஸ் வெளியேற்றம்.

 

கடலூர்

கோவையில் போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள். கோவை வ உ சி மைதானத்தில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 250 மாணவர்கள் காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து அவினாசி சாலையில் மனிதசங்கிலி மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

 

சேலத்தில் ஜல்லிக்கட்டுக்காக நடைபெற்ற போராட்டத்தை வலுகட்டாயமாக முடித்து வைக்கின்றனர்

salem_09419.jpg

சேலம்

ஜல்லிக்கட்டுக்காக தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டம் அமைதியா முறையல் முடிக்கப்பட்டது

_09327.jpg

தூத்துக்குடி

மதுரையில் மீண்டும் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டம்

madurai3_09223.jpg

 

ஜல்லிக்கட்டுக்காக தூத்துக்குடியில் நடைபெற்று வந்த போராட்டம் அமைதியா முறையல் முடிக்கப்பட்டது

outsutive1_08211.jpg

 

 

நெல்லை, திருத்தணி,கிருஷ்ணகிரி, திண்டுக்கல், சிவகாசி, இராமநாதபுரம், அரியலூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

கோவை வா.உ.சி மைதானத்தில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மதுரையில் தமுக்கம் பகுதியில் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மெரினாவில் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும்  பயனில்லை. இளைஞர்கள் கடற்பகுதி அருகே திரண்டு போராட்டத்தை தொடர்கின்றனர்.

படம்: தி.விஜய்

02MA_BALAMDU_07047.jpg

சென்னை மெரினாவில் போராட்டத்தில் இருந்த இளைஞர்களிடையே, இன்று காலை 6.30 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்தவெளியில், வேனில் நின்ற வண்ணம், மைக்கில்  பேசினார். அவர் பேசியதாவது,' ஜல்லிக்கட்டு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையோடு, உங்களது போராட்டம் மிக அமைதியான முறையில் நடந்துகொண்டிருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கிவிட்டது.  ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசரசட்டம் குறித்த  நகல், உங்களுக்கு இங்கே தரப்பட்டுள்ளது.

216_08065.jpg


அது உண்மையானது தான். அதில் சந்தேகம் வேண்டாம். நாங்கள் பொறுப்புள்ள பதவியில் இருக்கிறவர்கள். தவறான தகவல்களை, உங்களிடம்சொல்ல மாட்டோம். காளை என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டம் இயற்ற மத்திய , மாநில அரசுகள் இணைந்துப் பணியாற்றவேண்டும். அதன்படி, மத்திய அரசு துறைகளிடம் வாங்கவேண்டிய அனுமதிகளை வாங்கிதான், இந்த அவசரசட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

213_07049.jpg


சட்டமன்றமோ, நாடளுமன்றமோ கூட்டத்தொடரில் இல்லாதபோது, முதலில் அவசர சட்டம் தான் இயற்ற முடியும். அதன் பிறகு, சட்டமன்றத்தில் வைத்து, சட்டம் ஆக்குவார்கள். அந்த நடைமுறை தான், இப்போதும் பின்பற்றப்பட்டுள்ளது. உங்களது போராட்டம் வெற்றிபெற்றுவிட்டது. உங்களது கோரிக்கை நிறைவேறிவிட்டது. இதை உணர்ந்து, அமைதியாக கலைந்து செல்லவேண்டும். காவல்துறையினர் யாரும் உங்கள் கூட்டத்துக்குள் வரமாட்டார்கள். நீங்களே, தன்னார்வத்தொண்டர்களை வைத்துள்ளீர்கள். நீங்களே தயவுசெய்து கலைந்துசெல்லுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்துபேசினார்'.

இதைத்தொடர்ந்து சிலர் தானாகவே கலைந்து செல்லத்தொடங்கினர். சிலர், முடியாது.  சட்டமன்றத்தில் முதல்வரின் அறிவிப்பைப் பார்த்துவிட்டுத்தான் கலைந்துசெல்வோம்  என்று கூறினார்கள். இதற்கிடையில், அங்கே குவிக்கப்பட்ட போலீஸார் மாணவர்களிடையே புகுந்து, அவர்களை ஒவ்வொரு நபர்களாக வெளியேற்றினர். இதனால் ,கடந்த 7 நாட்களாக நடந்த மெரினாபோராட்ட களத்தில், முதல்முதலாக போலீஸார் வெளிப்படையாக போராட்டத்தை முடித்துக்கொள்ளுங்கள் என்று எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று அதிகாலைமுதல், சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்லக்கூடிய வாலாஜாசாலை, பாரதியார் சாலை, விவேகாநந்தர் இல்லம் , டிஜிபி அலுவலகம், சாந்தோம் சர்ச், பட்டினப்பாக்கம் பஸ்நிலையம் போன்ற பகுதிகளில் போலீஸார் தடுப்புவளையங்களை அமைத்து  புதிதாக மக்கள் யாரும் செல்லாத வகையில் தடுத்துள்ளனர். அதே நேரத்தில், மெரினாவில் இளைஞர்கள் கூடியிருந்த பகுதி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கப்பட்டு, போராட்டத்தின் மையப்பகுதியாக இருந்த விவேகாநந்தர் இல்லத்தின் சுற்றுவட்டாரப்பகுதி இளைஞர்களை படிப்படியாக காலை 7.25 மணிக்கு வெளியேற்றி முடித்தனர்.

எனினும் மக்கள் மெரினாவின் பிற பகுதிகளில் ஆங்காங்கே கலையமறுத்து குழுமி வருகின்றனர். 

http://www.vikatan.com/news/tamilnadu/78469-dispose-immediately-it-is-police-warning-at-marina.art

Link to comment
Share on other sites

ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: மெரினா போராட்டக்காரர்கள் 2 மாதம் காத்திருக்க முடிவு

 

 
மெரினா போராட்டக் களம். | படம்: எல்.சீனிவாசன்
மெரினா போராட்டக் களம். | படம்: எல்.சீனிவாசன்
 
 

மெரினா போராட்டத்தை தள்ளிவைப்பதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

முன்னதாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வந்த பகுதிகளில் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது. அதன் முழு விவரம் > ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் நடவடிக்கைக்குப் பிந்தைய கொந்தளிப்பு தமிழகம்

இதன் தொடர்ச்சியாக, ஆளுநர் உரை, சட்ட வரைவு நகல் ஆகியவற்றை மயிலாப்பூர் காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக் குழுவினரிடம் வழங்கினார்.

இந்நிலையில், போராட்டத்தைக் கைவிடுமாறு நடிகர் ராகவா லாரன்ஸ் இளைஞர்களிடம் நேரில் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் லாரன்ஸ் கூறியதாவது:

''ஜல்லிக்கட்டுக்காகவே மெரினாவில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம் இயற்றிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி.

ஜல்லிக்கட்டுக்காக போராடினோம். அதற்கு நிரந்தர தீர்வு கிடைத்துவிட்டது. ஆனால் இங்கு சிலர் வேறு விஷயங்களை பேசுகிறார்கள்.போராட்டத்தில் தேவையற்ற சிலர் நுழைந்தனர்.

எங்கள் போராட்டத்தின் போது தனி நபர்கள் மீதான தாக்குதலை ஒரு போதும் அனுமதிக்கவில்லை . மாணவர்களை தாக்கியதும், காவல் நிலையங்கள் தாக்கப்பட்டதும் வருத்தம் அளிக்கிறது'' என்றார்.

இளைஞர்கள் கூறுகையில், ''ஆளுநரின் கையெழுத்து மற்றும் சீலிட்ட அவசர சட்டத்தின் நகல் எங்களிடம் வழங்கப்பட்டது. இரண்டு அல்லது மூன்று மாதங்கள் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க முடிவு செய்துள்ளோம். அதுவரையில் இந்தப் போராட்டத்தை தள்ளி வைக்கிறோம்'' என்று கூறினர்.

முன்னதாக, தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கினார். இதனால், ஜல்லிக்கட்டு மீதான தடை உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மதுரை புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதுரை அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போராட்டம் வாபஸ் பெறவில்லை. ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

போராட்டத்தைக் கைவிட வேண்டுகோள்

மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா உள்ளிட்ட பலர் வேண்டுகோள் விடுத்தனர்.

இளைஞர்கள் போராட்டத்தை மார்ச் 31 வரை தள்ளிவைக்க வேண்டும் என்று காங்கேயம் காளை அறக்கட்டளை தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார். அதற்குப் பிறகும் இளைஞர்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை

http://tamil.thehindu.com/tamilnadu/ஜல்லிக்கட்டு-போராட்டம்-தள்ளிவைப்பு-மெரினா-போராட்டக்காரர்கள்-2-மாதம்-காத்திருக்க-முடிவு/article9497121.ece?homepage=true

’முதல்வரிடம் பேசினேன், பிரதமருக்கு தகவல் தெரிவித்திருக்கிறேன்!’ - கமல்

Kamal Haasan

இன்று காலையிலிருந்து தன் ட்விட்டர் பதிவுகள் மூலம் மெரினாவில் நடந்துவரும் சம்பவங்களுக்கு தன் கருத்தை பதிவிட்டு வருகிறார் நடிகர் கமல்ஹாசன். தற்போது, 'நடக்கும் சம்பவங்கள் குறித்து எனக்கு தெரிந்தவர்களை வைத்து பிரதமரை தொடர்பு கொண்டேன். நீதி கேட்பவர்கள் பொறுமை காப்பது அவசியம்.' என்று பதிவிட்டுள்ளார். 

 

Have informed our Honrbl.PM through the best of my connections. The Honrbl. Justice seekers will have to maintain peace

— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017


மேலும், 'மாண்புமிகு முதல்வருடன் பேசியுள்ளேன். கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் விரைவில் பதில் கூறுவார். உங்களை திருப்திப்படுத்த அவர்கள் தயாராகவே உள்ளனர். பொறுமை காக்கவும்' என்று கூறியுள்ளார்.

 

Spoke to the Honrbl.CM of TN. The looming question has been asked of him. He will answer soon. They're eager to satisfy you. Stay calm

— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2017

http://www.vikatan.com/news/tamilnadu/78509-have-spoken-to-cm-stay-calm-says-kamal.art

தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்

தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 
 
 
 
தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும்: வீரேந்திர சேவாக் வேண்டுகோள்
 
புது டெல்லி:

மெரினா கடற்கரையை விட்டு கலைந்து செல்ல மாட்டோம் என ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு என போலீசார் இன்று எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் மெரினாவில் உள்ள ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னைவாசிகளும் இன்று போராட்டக் களத்தில் குதித்தனர்.

இதனால் சென்னையில் பேருந்து மற்றும் மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தைக் கைவிட வேண்டும் என நடிகர் ராகவா லாரன்ஸ் மெரினா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த கிரிக்கெட் வீரர் சேவாக் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து சேவாக் கூறும்போது '' தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தங்களது அறவழிப் போராட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தை வைத்து மற்றவர்கள் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம்'' என்று கூறியிருக்கிறார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/23151912/1063766/Request-for-Peace-in-Tamil-Nadu-says-virender-sehwag.vpf

Link to comment
Share on other sites

போராட்டக் குழுவினர் யார் சொன்னால் கேட்பார்கள்? போலீஸ் அதிகாரிகள் அவசர ஆலோசனை

chennai_protest_jan_21a_15540.jpg

மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டக்குழுவினர், யார் சொன்னால் கேட்பார்கள் என்பதில் போலீஸார் தீவிர கவனம் செலுத்திவருகின்றனர். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா முதல் குமரி வரை போராட்டம் நடந்தது. அமைதியாகவும், அறவழியில், தலைமையே இல்லாமல் நடந்த போராட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. அதே நேரத்தில் மத்திய, மாநில அரசுக்கு இந்த போராட்டம் கடும் நெருக்கடியை கொடுத்தது. இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால், இந்த சட்டத்தை போராட்டக்குழுவினர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தினர். 

குடியரசு தின விழா நிகழ்ச்சி ஆண்டுதோறும் சென்னை மெரினாவில் நடத்தப்படும். இந்த முறை ஜல்லிக்கட்டு போராட்டம் காரணமாக அந்த விழாவிற்கான ஏற்பாடுகள், ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. இதற்கிடையில் தேசிய இறையான்மைக்கு எதிராகவும் போராட்டக்குழுவிலிருந்து குரல் கேட்கத் தொடங்கியது. இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்பினர். 
 
இதுவே போராட்டக்குழுவை கட்டுப்படுத்த சரியான தருணம் என்று போலீஸ் கருதியது. இதுதொடர்பாக ஆட்சியாளர்களுடன் ஐ.பி.எஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி பேச்சுவார்த்தையில் தமிழக போலீஸார் ஈடுபட்டனர். 

மெரினாவை பொறுத்தவரைக்கும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு திரண்டதால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படக்கூடாது என்பதில் போலீஸார் அதிக கவனம் செலுத்தினர். இதனால் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்குழுவினர் கலைந்து செல்லவில்லை. இதனால் மெரினாவுக்கு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சென்னையில் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மெரினாவில் போராட்டக்குழுவின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இந்த சமயத்தில் போலீஸாருக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே நடந்த மோதலில் லத்திசார்ஜ் நடத்தப்பட்டது. இருப்பினும் போராட்டக்குழுவினர் கடற்கரையில் கூடினர். அதற்கு மேல் போலீஸாரால் போராட்டக்குழுவினரை கட்டுப்படுத்த முடியவில்லை. 

இந்த சமயத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் போலீஸ் உயரதிகாரி பேசினார். ஏற்கெனவே போராட்டக்களத்துக்கு செல்ல தன்னை அனுமதிக்க வேண்டும் என்ற போலீஸாரிடம் கேட்ட ராகவா லாரன்ஸ், மெரினாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். அங்கு சென்ற அவர், நம்முடைய போராட்டத்துக்கு வெற்றி கிடைத்து விட்டது. இதனால் போராட்டத்தை கைவிடுமாறு பேசினார். ஆனால் அவரது பேச்சை கேட்க ஒரு பகுதியினர் மெரினாவிலிருந்து கிளம்பினர். ஆனால் மற்றொரு தரப்பினர் அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்பின் இயக்குநர் கௌதமன்,  போராட்டக்களத்துக்குள் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் போராட்டக்குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

 
கடற்கரை ஓரத்தில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருவது போலீஸாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. அந்த போரட்டக்குழுவினரை எப்படி அங்கிருந்து அகற்றுவது என்று ஐ.பி.எஸ். அதிகாரிகள் உடனடியாக ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் விவரங்கள் குறித்து சேகரித்து அதற்குப்பிறகு களத்தில் இறங்கலாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டது. அதற்கெல்லாம் இப்போது நேரமில்லை. இன்று மாலைக்குள் போராட்டக்குழுவினரை மெரினாவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இதனால் காலதாமதமில்லாமல் போராட்டக்குழுவினரை வெளியேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுடன் போலீஸாருக்கு வேண்டப்பட்டவர்களை களமிறக்கி அதன்மூலம் இந்த போராட்டத்துக்குத் தீர்வு காணலாம். இல்லையென்றால் அரசிடமிருந்து அதிகாரத்தை பெற்று போராட்டக்குழுவினரை அகற்ற வேண்டும் என்று ஆலோசனையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஆட்சியாளர்களிடம் சொன்னபோது எந்தக்காரணத்தைக் கொண்டும் இத்தகைய முடிவுகளை போலீஸார் எடுக்கக்கூடாது என்று ஆட்சியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போலீஸ் அதிகாரிகள் அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கெனவே 6 நாட்களாக மெரினா போராட்டக்களத்திலேயே 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியிலிருந்த போலீஸார், எப்போது இயல்பு நிலைமை திரும்பும் என்று எதிர்பார்த்து இருக்கின்றனர். இதற்காக அவர்கள்  உயரதிகாரிகளின்  உத்தரவுக்காக காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, " போராட்டக்குழுவினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களது பேச்சுவார்த்தைக்கு வெற்றி கிடைத்து வருகிறது. விரைவில் மீதமுள்ளவர்களையும் மெரினாவிலிருந்து இன்று அகற்றி விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/78508-senior-police-officials-on-discussion-over-who-can-convince-protesters-.art

Link to comment
Share on other sites

'போராட்டத்தில் ஊடுருவிய விஷமிகள்தான் பிரச்னைக்கு காரணம்!' - களத்தில் இருந்த பெண்ணின் சாட்சி

மெரினா போராட்டக்களத்தில் இளைஞர்கள்

ல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வை பெறும் நோக்கில் தமிழகம் முழுக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திய போராட்ட எழுச்சியால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஒரு தீர்வுக்களம் ஏற்பட்டுள்ளது. அதில் மெரினா கடற்கரையில் குழுமிய இளைஞர்களின் பங்கு அளப்பறியது. போராட்டம் ஆரம்பமான முதல் நாளில் இருந்து இன்று காலை வரை தொடர்ந்து களத்தில் தானும் ஒருவராக கலந்து கொண்டவர் விஜே விலாசினி. தன்னுடைய எண்ணங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''மெரினாவுல தொடங்கின முதல் நாள் போராட்டத்துல இருந்து இன்னைக்கு அதிகாலை 5 மணி வரைக்கும் தினமும் 22 மணி நேரம் அங்கதான் இருந்தேன். காலையில 8 மணிக்கு மெரினா வந்தா, அடுத்த நாள் காலையில 6 மணிக்குதான் வீட்டுக்குப் போவேன். இளைஞர்களுடன் மற்றும் மாணவ, மாணவிகளோட சேர்ந்து போராட்டக் களத்துல நானும் போராடினேன். ஆரம்பக் கட்டத்துல போராட்டக் குழு சார்பா அமைச்சர்களோட பேச்சுவார்த்தையில ஈடுபட்டத்துல நானும் ஒருத்தி. 

Vj Vilashiniமுதல் இரண்டு நாள் நல்லா அமைதியான முறையில போயிட்டு இருந்த போராட்டத்தில், மூணாவது நாள்ல இருந்து அரசியல் கலக்க ஆரம்பிச்சுது. இதுதான் இப்போ வெடிச்சு இருக்குற பிரச்னைக்கு மூலக்காரணம். மூணாவது நாள்ல இருந்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பின்புலம் மற்றும் தூண்டுதல்களால் உள்ளே நுழைஞ்ச நபர்கள் தேவையில்லாத கமெண்ட், ஆபாச வார்த்தைகள், அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் அசிங்கமா பேசுறதுன்னு தேவையில்லாத வேலைகளை செய்ய ஆரம்பிச்சாங்க. நம்ம போராட்டத்துல கட்சிக்காரங்களை உள்ளே விடாத மாதிரி, எந்த கட்சி மற்றும் கட்சித் தலைவரையும், ஆபாச வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்த வேண்டாம். இதெல்லாம் நம்ம போராட்டத்துக்கு தீர்வா இருக்காது. நம்ம பெயரையும், போராட்டத்தின் நோக்கத்தையும் கெடுத்துடும்னு நானும் சக நண்பர்களும் சொன்னோம். இதையெல்லாம் சொல்ல நீ யார்னு கேட்டாங்க. கூடவே விஜேவா நான் இதுக்கு முன்னாடி நிறைய அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களை சந்திச்சு பேட்டி எடுத்து இருக்கேன். அவங்களோட என்னை சேர்த்து வெச்சுப் பேசி, என் மேலயும் அரசியல் சாயம் பூசிட்டாங்க. இந்த போராட்டத்தோட ஆரம்பக்கட்டத்துல நான் ரொம்பவே தீவிரமா போராடினது பலருக்குமே தெரியும். இருந்தாலும், இவங்க வேணும்னே பண்றாங்கன்னு எனக்கு நல்லாவே புரிஞ்சுடுச்சு. அதனால தொடந்து நான் எதுவும் சொல்லாம, ஜல்லிக்கட்டு நோக்கம் நிறைவேறினா போதும்னு நினைச்சு, அமைதியா போராட்டத்துல மட்டும் கலந்துகிட்டு இருந்தேன்.

நல்ல நோக்கத்துல போயிட்டு இருந்த போராட்டத்துல எனக்குத் தெரிஞ்ச நிறைய பெண்களையும், நண்பர்களையும் போராட்டத்துல கலந்துக்க வைச்சேன். அடிப்படை பிரச்னைகளைப் பத்தி எல்லா நிலை மக்களுக்கும் புரிஞ்சிருக்குனு காட்டுனது இந்த போராட்டம். 

நம்ம நாட்டுல எந்த ஒரு அடிப்படை தேவைக்கும், உரிமைக்கும் நாம போராட்டம் நடத்திதான் வெற்றி பெறணும்ங்கிற ஒரு நிலை இருக்கு. இதுல நாட்டு மாடுகளின் பால்தான் தங்களோட குழந்தைகள் மற்றும் குடும்பத்தார் உடல்நலத்துக்கு நல்லதுனு பெண்களுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் வீதியில இறங்கி தைரியமா போராட்டம் நடத்தினாங்க. இளம் பெண்களும் அவர்களின் பெற்றோர்களின் ஆதரவோடு போராடினது சந்தோஷத்தைக் கொடுக்குது. இப்படி நல்ல உணர்வுடன் போராடிய போராட்டத்துக்கு, ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும்னு வெற்றிச் செய்தியும் கிடைச்சு இருக்கு. இனி தொடர்ந்து தங்களோட நியாயமான கோரிக்கைகளுக்காக பெண்களும், குழந்தைகளும், மாணவர்களும், பொது மக்களும் போராடுவாங்க என்பதுல சந்தேகம் இல்லை. 

ஆனா இந்த சந்தோஷத்துக்கு நடுவுல, அரசியல் பின்புலம் கொண்ட போலியான போராட்டக்காரர்களை விட்டுட்டு, நியாயமா போராடிய மாணவர்களை போலீஸ் தடியடி நடத்தி கலைச்சு இருக்காங்க. அதிகாலையில பெற்றோர், குழந்தைகள், பெண்களை கலைந்து போக சொல்லிட்டு, அப்புறம் போகாம இருந்த மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினாங்க. விரட்டியடிச்சாங்க. 

இன்னைக்கு காலையில 5 மணி வரைக்கு கூட்டத்தோட கூட்டமா இருந்த அவங்க போலீஸ் எங்ககிட்ட பேச ஆரம்பிச்சதும் அவங்க வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ் எங்ககிட்ட கலைஞ்சு போயிடுங்கனு சொன்னதும் நாங்க கலைய ஆரம்பிச்சுட்டோம். ஆனா தேவையில்லாத வார்த்தைகள், களத்துக்கு சம்பந்தமில்லாத டாபிக் எல்லாம் போராட்டக்காரர்கள் பேச ஆரம்பிச்சாங்க.  அவங்கதான் கண்டிப்பா போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைச்சிருக்கணும். 5 நாளா கடைப்பிடிச்சிட்டு இருந்த கண்ணியத்தை, அதுவும் போலீஸ்காரங்களே வியந்து பார்த்த கண்ணியத்தை ஒரே ஒரு நாளுக்காக நாங்க ஏன் விட்டுக் கொடுக்கணும். இப்ப புரியுதா இது கண்ணியத்தை காத்த இளைஞர்களோட வேலையில்லனு. கூட்டத்துல கலந்த விஷமிகள் திட்டமிட்டே இளைஞர்களோட பேரை கெடுக்க நினைச்சிட்டாங்க. அதான் இவளோ கீழ்த்தரமாக இறங்கி செயல்பட்டுட்டு இருக்காங்க. தயவு செஞ்சு நம்பாதீங்க. எங்க போராட்டத்தோட வெற்றிதான் முதமைச்சர் அறிவிச்ச அவசர திட்டம். அது எங்களுக்கு நல்லாவே தெரியும்" என்று தன் வருத்தங்களை இறக்கி வைத்தார் விலாசினி.

http://www.vikatan.com/news/tamilnadu/78516-students-are-not-the-cause-for-violence-statement-of-lady-protester.art

முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை #Liveupdates

முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்கள் தற்போது ஜல்லிக்கட்டு அவசர சட்டம் பற்றி மெரினாவில் போராடும் மாணவர்களுக்கு விளக்கி பேசிக்கொண்டிருக்கிறார்.ஆ.முத்துக்குமார்  

81113bfc-dd9e-49d3-bc7b-843b526e6493_174

முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன், தியாகு ஆகியோர் பேச்சுவார்த்தை. ஆ.முத்துக்குமார்  

174dcfdb-b885-4444-875f-4bffeeb26dc2_175

Panner Selvam

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

இதனையடுத்து, தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்து டிஜிபி, தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இயக்குநர் கவுதமன், ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் ஆகியோர் தலைமைச் செயலகம் சென்றனர்.

முன்னதாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஹிப்ஹாப் ஆதி, ராஜசேகர், ராஜேஷ், சிவசேனாபதி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
 

collage_16397.jpg

collage1_16389.jpg

 

http://www.vikatan.com/news/tamilnadu/78467-youth-denying-to-move-out-of-marina.art

Link to comment
Share on other sites

மெரினா போராட்டக் களத்தின் கடைசி நிமிடங்கள்: லாரன்ஸ் விளக்கம்

 

 
 
 
 
ராகவா லாரன்ஸ் | படம் உதவி: ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கம்.
ராகவா லாரன்ஸ் | படம் உதவி: ராகவா லாரன்ஸ் முகநூல் பக்கம்.
 
 

மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வருத்தமாக உள்ளது என்று மெரினா போராட்டக் களத்தின் கடைசி நிமிடங்களை லாரன்ஸ் பகிர்ந்துகொண்டார்.

இது தொடர்பாக சென்னை மெரினாவில் செய்தியாளர்களிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதாவது:

''பாரம்பரிய விளையாட்டை நாம் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே இந்தப் போராட்டத்துக்கான முக்கிய நோக்கம். இந்தப் போராட்டத்துக்கு மாணவர்கள் மிகப் பெரிய அளவில் ஆதரவு அளித்தனர்.

மாணவர்களின் இந்த ஆதரவு உலக அளவில் பேச வைத்தது. மாணவர்கள் கலந்துகொண்ட பின்பு அவர்களது பெற்றோர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அது மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. போராட்டத்துக்கான ஆதரவு, அதிகரிக்க அதிகரிக்க நிச்சயம் ஜல்லிக்கட்டும் நடைபெறும் என்ற நம்பிக்கையும் உருவானது.

நம்முடைய முக்கிய கோரிக்கை என்ன? ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என்பதுதானே.. அதற்கு முதல்படியாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு நமது அரசசாங்கத்துக்கு நமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினோம். வன்முறையில் ஈடுபடுவது போராட்டத்தின் நோக்கம் அல்ல.

கடந்த ஏழு நாட்களாக நான் இங்கு இருக்கிறேன். மாணவர்களிடம் இந்தப் போராட்டம் இருக்கும்வரை பிரமாதமாக போய் கொண்டிருந்தது. ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே மாணவர்கள் கஷ்டப்பட்டு போராடினர். மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் ஜல்லிக்கட்டுக்காகவே தொடர்ந்து போராடினர். அரசாங்கத்திடமும் இதையே வலியுறுத்தினோம்.

அரசாங்கம் நம் போராட்டத்தின் வலிமையை உணர்ந்தவுடனே மத்திய அரசை அணுகினர். அதன்பின் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வந்துவிட்டோம் என்று சொன்னார்கள்.

சொன்னவுடம் ஒத்துக் கொண்டோமா? மாணவர்கள் ஒத்துக் கொண்டார்களா? எங்களுக்கு அவசர சட்டம் எல்லாம் வேண்டாம். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த வருடம் ஜல்லிக்கட்டு நடத்திவிட்டு, அடுத்தவருடம் ஜல்லிக்கட்டை பார்க்க முடியாமல் எங்களால் இருக்க முடியாது. என் குழந்தை, பேரன் என அனைவரும் பார்க்க வேண்டும். எல்லோரும் ஜல்லிக்கட்டை பார்க்கும்வரை இந்தக் கூட்டம் கலையாது என்று சொன்னோம் இதுதான் நேற்றிரவுவரை இருந்தது.

மாணவர்களிடத்தில் போராட்டம் இருக்கும்வரை போராட்டத்தில் ஒரு கட்டுப்பாடு இருந்தது. திடீரென்று சம்பந்தமே இல்லாமல் வேறொன்றைத் திணிக்க ஆரம்பித்தார்கள் போராட்டத்தின் உள்ளே. நாங்கள் ஒரே நிலைப்பாட்டில் இருந்தோம். நமக்கு தேவை ஜல்லிக்கட்டு. அதுதான் மாணவர்கள் மற்றும் தமிழக மக்களின் ஆசையும்கூட.

நேற்றிரவு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனைக்குச் சென்றேன். எனினும். என் மனசெல்லாம் இங்கேதான் இருந்தது மாணவர்கள் அங்கு என்ன செய்து கொண்டிருகிறார்களோ என்று.

இன்று காலை 6 மணிக்கு நான் எழுந்திருக்கிறேன். மாணவர்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஓடுகிறார்கள். பெண்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உடனே நான் மருத்துவமனையிலிருந்து வண்டியை எடுக்கச் சொல்லி கிளம்பினேன். வரும் வழியிலேயே என் அம்மா என்னை செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இருப்பினும் நான் சென்றேன்.

ஆனால் என்னை மெரினாவுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இந்தக் கலவரம், பிரச்சினைகளை எல்லாம் மாணவர்கள் செய்ய மாட்டார்கள். மாணவர்களைப் பற்றி எங்களுக்கு தெரியும். வேறு அமைப்புகள்தான் உள்ளே சேர்ந்து மாணவர்களின் பெயரை சொல்லி கலவரங்களில் ஈடுபடுகின்றனர். இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தவர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டேன் இதற்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று கூறினேன். ஆளுநரே அவசர சட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டார் நிரந்தர தீர்வு வந்துவிட்டது என்று கூறினர்.

எனக்கு மிகுந்த மிகிழ்ச்சியாகவும் இருந்தது. இதனை மாணவர்களிடத்தில் புரிய வைக்கலாம் என்று கேட்டதற்கு, அப்போது உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறினார்கள்.

நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டது. மெரினாவில் ஏழு நாட்கள் நாம் கஷ்டப்பட்டோம். இப்போது நமக்கு வெற்றி கிடைத்திருக்கிறது இதனை நாம் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும். எல்லோரையும் வரச் சொல்லி சந்தோஷமாக கொண்டாட வேண்டிய தருணத்தில் இப்படி கலவரங்கள் நடந்து கொண்டிருப்பதை கண்டு மாணவர்களிடத்தில் இதைக் கூற வேண்டும் என்று நினைத்தேன்.

கடந்த இரண்டு மணி நேரமாக நானும் போராடினேன் ஆனால் முடியவில்லை. அதன்பிறகு எப்படியோ நான் உள்ளே வந்து சேர்ந்துவிட்டேன். நிரந்தரத் தீர்வு வந்துவிட்டது. நாம் வெற்றி பெற்றுவிட்டோம். இதனை மகிழ்ச்சியாக மாணவர்களிடம் கூறி, கொண்டாடுவதற்கு கேக் எல்லாம் ஆர்டர் செய்தார்கள்.

நான் மாணவர்களிடத்தில் இதனைப் பற்றி விளக்கும்போது அவர்கள் அதை கவனமாகத்தான் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சிலர் சம்பந்தமே இல்லாமல் எழுந்து குரல் எழுப்பினர். இது வேண்டும்! அது வேண்டும் என்று குரல் எழுப்பினர். அவ்வாறு குரல் எழுப்பியது மாணவர்கள் அல்ல.

மாணவர்களிடத்தில் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு தமிழக அரசுக்கும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்து இதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கூறினேன்.

இங்கு போரட்டத்தில் கூடிய அனைவருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். அவர்கள் படிக்க வேண்டும், வேலைக்குச் செல்ல வேண்டும். நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பிறகும் தொடர்வது தவறான பாதையாகும்.

மாணவர்கள் ஆளுநர் கையெழுத்திட்ட ஆவணத்தைக் கேட்டனர். ஆனால் எங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்தில் கையெழுத்து இல்லை. எங்களுக்கு கிடைத்த வெற்றியை இன்று கொண்டாட நினைத்ததே எங்களது நோக்கமாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது வருத்தமாக உள்ளது'' என்று லாரன்ஸ் கூறினார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/மெரினா-போராட்டக்-களத்தின்-கடைசி-நிமிடங்கள்-லாரன்ஸ்-விளக்கம்/article9497569.ece

Link to comment
Share on other sites

மெரினா புரட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த அந்த 18 மணி நேரம்! #SpotReport

2017 ஜனவரி 17-ம் தேதி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கியது. அடுத்தடுத்த நாட்களில் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது. பீட்டாவுக்கு எதிராகவும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் களத்தில் இருந்தவர்கள் தீவிரமாக முழுங்கினர்.  அறப்போராட்டம் ஒரு கொண்டாட்டமாக மாறியது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டு தமிழக அரசு சார்பில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதனை ஏற்க இந்த இளைஞர்கள் கூட்டம் மறுத்தது. 'எங்களுக்கு அவசரச் சட்டம் தேவையில்லை. நிரந்தரத் தீர்வே வேண்டும்' என விடாமல் போராடினார்கள். ஏழு நாட்கள் நீடித்த போராட்டம் இன்று இறுதிக்கட்டத்தை எட்டியது. நேற்று நள்ளிரவு முதல் இன்று மாலை வரை, மெரினாவில் நடந்தவை அனைத்தும் அப்படியே இங்கே...

மெரினா புரட்சியின் கடைசி 18 மணி நேரம்

22.01.2017

ஞாயிறு இரவு 10.30 மணி : 

மறுநாள் பொழுது விடிவதற்குள் மெரினா கடற்கரையைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனஆளும் அரசும், அதிகார வர்க்கமும் விரும்புகின்றன என்பதை அங்குள்ள சூழல்களே உணர்த்தின. கடந்த ஆறு நாட்களாக இல்லாத அளவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையின் நடமாட்டம் மெரினா முழுவதும் அதிகரித்தது. சிலர், மஃப்டியிலும் போராட்டக்காரர்களின் மத்தியில் உலாவி மாணவர்களின் மனநிலையை மோப்பம் பிடித்தனர். 

நள்ளிரவு 12 முதல் 2 மணி வரை : 

களத்தில் இருந்த மாணவர்களும் தங்களைக் காவல்துறையினர் அப்புறப்படுத்தும் சூழல் இருப்பதை அறிந்தே இருந்தனர். அதனால், வயதான பெரியவர்களையும், குழந்தைகளையும், பெண்களையும் வீட்டுக்குச் செல்லும்படி கூறினார்கள். போக விருப்பம் இல்லாதவர்களைக் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். 

23.01.2017

திங்கள் அதிகாலை 3:30  மணி

அங்கிருந்த போராட்டக்காரர்களை அகற்ற காவல்துறையினர் தடியடி நடத்தப்போவதாக தகவல் மெள்ள மெள்ள அங்கு இருப்பவர்களிடம் பரவியது. மைக்கில் எழுச்சியாகப் பேசிக்கொண்டிருந்த மாணவர்களில் சிலர், "எல்லாரும் சுற்றி அமருங்கள். காவல்துறை நம்மை எதுவும் செய்யமாட்டார்கள். இங்கிருந்து யாரும் கலைந்து செல்லக்கூடாது" என்று பேச, கடல் அலைகளை மீறிக் கைதட்டல்கள். 

3:40 மணி

போராட்டக் களத்தில் இருந்தவர்கள்... தங்கள் நண்பர்களுக்கு எல்லாம் செல்போனில் தொடர்ந்து அழைப்பு விடுத்தனர். உடனே மெரினா வரும்படி வாட்ஸ்அப் முதல் பல சமூகவலைதளங்களைப் பயன்படுத்தியும் வரச் சொன்னார்கள்.

4 மணி : 

பல்வேறு இடங்களில் இருந்தும் காவல்துறையினர் மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு அருகில் குவியத் தொடங்கினார்கள். அதற்கு முன் ஆறு நாட்களில் இல்லாத அளவுக்கு அவர்கள் கைகளில் லத்திகள் முளைத்திருந்தன. 

4.20 மணி : 

மாணவர்களுக்கும் இந்த தகவல்கள் வந்தன. "நம் மீது லத்தி சார்ஜ் நடத்தினால் கலையக்கூடாது. அப்படி தடியடி நடத்தினால், அவனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசிய கீதமும் பாட வேண்டும்." என மைக்பிடித்து அங்கிருந்த அனைவருக்கும் சொல்லிக்கொண்டிருந்தனர். இதற்கும் ஆதரவு தருவதாக கோஷங்கள் எழும்பின. 

மெரினா புரட்சியின் கடைசி 18 மணி நேரம்

4.33 மணி : 

"காவல்துறையினர் அடித்தால் திருப்பி அடிப்போம். அன்பால், திருப்பி அடிப்போம்" என கோஷங்கள் எழுப்பினர்.

4.40 மணி : 

மெரினாவில் இருந்து கலைந்து செல்லும்படி காவல்துறையினர் சார்பாக பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது. அதில், 'மெரினா கடற்கரையில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளீர்கள். இந்தப் போராட்டமானது மிகவும் கட்டுப்பாட்டுடனும், அமைதியாகவும் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்றது. தமிழக அரசின் முயற்சியால், ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று நடைபெற்றது. போராட்டத்தின் குறிக்கோள் நிறைவேறியுள்ளதால் அனைவரும் மெரினா கடற்கரையிலிருந்து உடனடியாக கலைந்து செல்லும்படி, சென்னை பெருநகர காவல்துறை உங்களை கேட்டுக்கொள்கிறது' என செய்தி வெளியானது. ஆனால், இந்த செய்தி மாணவர்களுக்குப் போய்ச் சேரவில்லை. 

அப்போதும் போராட்டக் களத்தில் இருந்தவர்கள் "நம் பாதுகாப்புக்கு மட்டுமே காவல்துறையினர் வந்துள்ளார்கள். அவர்கள் நம் நண்பர்கள். அவர்களுக்கும் குடிக்க தண்ணீர் தாருங்கள்... உணவு தாருங்கள்..." என அன்போடு ஒருவர் மைக்கில் சொல்ல... உடனே காவல்துறையினரைத் தேடித்தேடி தண்ணீர் பாட்டில்களும், பிஸ்கட் பாக்கெட் போன்றவற்றையும் கொடுத்தார்கள். காவல்துறையினரும் அதை வாங்கிக்கொண்டார்கள். 

4.50 மணி : 

மெரினா முழுவதிலும் காவல்துறையினர் சூழ்ந்தார்கள். விவேகானந்தர் இல்லம், கண்ணகி சிலை, சென்னைப் பல்கலைக்கழகம், லைட் ஹவுஸ் என அனைத்து இடங்களிலும் காவலர்களுக்கு வழிமுறைகள் தரப்பட்டன. அவர்கள் கைகளில் லத்திகளும் கொடுக்கப்பட்டன. 
அந்த சமயத்தில் கூட்டத்தில் இருப்பவர்களிடம் "யாரும் எழுந்து நிற்காதீர்கள். உட்காருங்கள்" என்றவாறு நின்றவர்களை மாணவர்களே அமர வைத்தனர். மேலும், கர்ப்பிணிப்பெண்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள் இருப்பதால் கூட்டத்துக்குள் போலீஸ் நுழையக்கூடாது." என காவல்துறையினருக்கு வேண்டுகோளும் விடுத்தனர்.  

5 மணி : 

முக்கிய காவல்துறை அதிகாரிகள் மெரினா முழுவதும் அவர்களது சைரன் வாகனத்தில் சுற்றிச்சுற்றி வந்தனர். 

5.30 மணி : 

காவல்துறையினரிடம் தரப்பட்ட லத்திகள் அவர்களிடம் இருந்து திடீரென வாங்கப்பட்டன. ஆனால், பெரியார் மாளிகைக்கு எதிரில் திடீரென நான்கு காவலர்கள் வேகமாக கூட்டத்துக்குள் நுழைய மாணவர்கள் பெரும் கூச்சல் போட்டார்கள். உடனே, போலீசார் பின் வாங்கினார்கள். 

6.00 மணி : 

இரண்டு குழுக்களாக மெரினாவில் மாணவர்கள் அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இல்லத்திற்கு நேர் எதிரிலும், பெரியார் மாளிகைக்கு நேர் எதிரிலும் இருந்தனர். அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் அப்புறப்படுத்தப்பட்டன. 

 

 

பெரியார் மாளிகைக்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவர்கள் முன்தான் முதலில் காவல்துறை சென்றது. மைக் கட்டிய ஆட்டோவில் காவலர் ஒருவர், "மாணவக் கண்மணிகளே... இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. நீங்கள் வென்றுவிட்டீர்கள். நேற்றே ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழகம் முழுவதும் நடந்தது. கலைந்து செல்லுங்கள். எங்கள் கைகளில் லத்தி கூட கிடையாது." என்று சொல்லியவாறே மாணவர்களை நெருங்கினார். மாணவர்கள் வைத்திருந்த மைக்குகள் பிடுங்கப்பட்டன. மைக் செட்டுகளும் உடனடியாக அகற்றப்பட்டன. மைக் செட்காரரை மிரட்டி அகற்றினார்கள்.  

6.05 மணி : 

கொஞ்சம் கொஞ்சமாகக் காவல்துறையினர் கூட்டத்துக்குள் நுழைந்தார்கள். ஐந்து நிமிடம் கூட அவர்களுக்கு அவகாசம் தரவில்லை போலீஸ்காரர்கள். அதற்குள் மாணவர்கள் ஒருவருவருக்கு ஒருவர் கைகள் பற்றி இறுக அணைத்து அமர்ந்தார்கள். ஆனால் அவர்களை மூர்க்கமாகத் தரதரவென இழுத்து தூக்கி வீசினார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலரை பெண் காவலர்கள், தலைமுடியைப் பிடித்து இழுத்தார்கள். கன்னத்தில் அறைந்தார்கள். மீடியாகாரர்கள் இதனைப் படம் பிடிக்க முயற்சிக்க, 'அந்தப் பக்கமா போங்க...' என்று  போலீஸார் ஆக்ரோஷ குரல் கொடுத்தார்கள். 

6.15 மணி : 

பெரியார் மாளிகை முன் அமர்ந்த மொத்தக் கூட்டத்தையும் கலைத்தார்கள். ஆனால், அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விவேகனாந்தர் இல்லத்திற்கு எதிரில் அமர்ந்திருந்த மாணவக் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டார்கள். முன்பைவிட இரண்டுமடங்கானது கூட்டம். 

மெரினா புரட்சியின் கடைசி 18 மணி நேரம்

6.25 மணி : 

மைக் கட்டிய வேனில் ஏறிய காவலர், மொத்த பிரச்னையையும், ஆரம்பத்தில் இருந்து சொல்லி, தமிழக அரசு என்னென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது ஜல்லிக்கட்டுக்கான அவரச சட்டம் என்றாலும் நிரந்தர சட்டம்தான்' என்று பாயிண்ட் பை பாயிண்டாக பேசினார். சின்னச் சத்தம் கூட இல்லாமல் அனைத்தையும் கேட்ட மாணவர்கள். "நாங்கள் கலைந்து செல்கிறோம். ஆனால், எங்கள் சட்ட வல்லுனர்களிடம் பேச கொஞ்சம் அவகாசம் தாருங்கள். குறைந்தபட்சம் அரைநாளாவது வேண்டும் என்றார்கள். இதற்குக் காவல்துறையின் உயர் அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்க.. 'குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது தாருங்கள்' என கெஞ்சினார்கள். கேட்கவில்லை. அதற்குள் கூட்டத்துக்குள் காக்கிகள் சூழ்ந்தன. 

கைகளில் லத்திகள் இல்லை என்றாலும் கண்மூடித்தனமாக மாணவர்களைக் கையாண்டது காவல்துறை. கர்ப்பமாக இருந்த ஒரு பெண்மணியையும் சேர்த்து கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களைக் கைகளைப் பிடித்து இழுத்து தள்ளினார்கள். அப்போது சில காக்கிகளிடம் மட்டும் லத்திகள் இருந்தன. மீடியா கவரேஜ் இல்லாத இடத்தில் அவர்கள் தங்கள் லத்திகளைப் பயன்படுத்தத் தயங்கவில்லை. மாணவர்கள் கடலை நோக்கி ஓடினார்கள். அவர்களைத் துரத்திக்கொண்டு காவல்துறையும் ஓடியது. சில மாணவர்கள் காவல்துறையின் அடுக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கதறி அழுதார்கள்.

6.30 மணி : 

இதை கவரேஜ் செய்ய கடற்கரை நோக்கி ஓடிய மீடியாவை தடுத்து நிறுத்தினார் ஒரு முக்கிய காவல்துறை அதிகாரி. முக்கியமாக, ‛விகடன்’ என்றதும் கட்டாயமாக உள்ளே விட மறுத்தார்கள். வாக்குவாதம் ஆனது. வேறு மீடியாவைச் சேர்ந்தவர்கள் என்ன பிரச்னை என கேட்கவும்... அவர்கள் விலகிச் சென்றார்கள். 

6.40 மணி : 

கடற்கரை நோக்கி ஓடிய மாணவர்களைப் பிடிக்க முயல... 'நாங்கள்  கடலுக்குள் சென்று தற்கொலை செய்வோம்." என அவர்கள் கூட்டமாய்க் குரலெழுப்ப, காவலர்கள் பின்வாங்கினார்கள். அதற்குள் ஒட்டுமொத்த கூட்டமும் கடற்கரைக்கு சென்றுவிட்டது. காக்கிகள் அருகில் வந்தாலே, கடலுக்குள் காலடி எடுத்து வைத்தனர். 

6.50 மணி : 

மெரினாவுக்குள் நுழையும் அனைத்து வழிகளிலும் தடுப்பரண்கள் அமைத்துத் தடுத்தது காவல்துறை. ஐஸ் அவுஸ் வழியாக மெரினாவுக்கு வரும் வழியில் பலரும் குவிந்தாலும் இவர்களை மீறி ஒரு அடி கூட முன் வைக்க முடியவில்லை. 

7.30 மணி : 

லைட்அவுஸ் அருகில் வசிக்கும் மக்கள் கும்பலாக கடற்கரை ஓரமாக... போராட்டக்காரர்களை நோக்கி ஓடி வந்தனர். அவர்களைத் தடுக்க காவல்துறையினரால் முடியவில்லை. கூட்டம் அதிகமானது. சிலர் தள்ளுமுள்ளுவில் மயங்கி விழ... உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

8.30 மணி : 

படகுகளில் உணவுகளும், குடிநீரும் போராட்டகாரர்களுக்காக வந்தன. அங்கிருந்த பெண்களுக்காக அங்கு கிடந்த தார்ப்பாய்களை எல்லாம் எடுத்து சிலர் உடனடிக் கழிப்பறைகள் அமைத்துத் தந்தார்கள்.
மெரினா கடற்கரைச் சாலைகளில் இருந்து யாராவது ஒருவர் ஓடிவந்தாலே, அவர்களைப் பார்த்து மொத்தக் கூட்டமும் "வா... வா..." என வரவேற்றது. அவர்களில் சிலரைக் காவல்துறை லத்தியால் விரட்டி அடித்தது. 

9.00 மணி : 

காவல்துறையினர் சென்று போராட்டக்காரர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால், யாரும் கேட்பதாக இல்லை. காவல்துறையினர் பின் வாங்கினார்கள். 

10.15 மணி : 

அனைத்து ஊர்களிலும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் வன்முறை தூண்டிவிட்டதாக செய்தி பரவியதும்... பீட்டாவுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் போட்டனர். 

10.30 மணி : 

மாணவர்கள் அமைதியாக அமர... காவலர்களும் அவர்களைச் சுற்றி நின்றனர். சிலருக்குத் தண்ணீர் எடுத்துவர அவர்களை தடுத்தது போலீஸ். இதனால், ஆத்திரம் அடைந்தவர்கள் வெறித்தனமாக கத்தவும்... தண்ணீரை எடுத்துச் செல்ல அனுமதித்தது போலீஸ்.

11:30 மணி : 

லாரன்ஸ் வர இருப்பதாக தகவல் பரவியது. அதற்குள் திருவல்லிக்கேணி ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் தீ வைக்கப்பட்ட செய்தி அங்கு இருக்கும் காவலர்கள் மத்தியில் பரவியது. சிறப்பு காவல் படையினர் வந்து சேர்ந்தார்கள்... மெரினாவில் நின்று கொண்டிருந்த அனைவருக்கும் லத்திகள் வேக வேகமாகத் தரப்பட்டன. "கையில மட்டும் எவனாது சிக்கட்டும். அடி பொளந்துடுட வேண்டிதான்." என்ற ரீதியில் காவல்துறையினர் பேசுவதையும் கேட்க முடிந்தது. தண்ணீர் மற்றும் உணவு இல்லாமல் சிலர் மயங்கி விழுந்தனர். ஒருசிலர் கலைந்து சென்றனர். 

11.50 மணி : 

மீண்டும் போராட்டக்கார்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியது போலீஸ். "அரசின் சார்பில் யாராவது வந்து பேச வேண்டும். அல்லது ராகவா லாரன்ஸ் வந்து தங்களிடம் பேசினால் கலையத் தயார்." என நிபந்தனை வைத்தனர்.

12.30 மணி : 

மெரினா வந்தார் லாரன்ஸ். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. "போராட்டத்தில் வெற்றி அடைந்ததைக் கொண்டாட வேண்டிய நேரம் இது. தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்." என்றார். ஆனால் யாரும் அசைய மறுத்தார்கள். 

1.30 மணி : 

மீண்டும் காவல்துறையின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. பல்வேறு இடங்களிலும் வன்முறை வெடிக்கிறது என கூறியும் கலைய மறுத்தார்கள். 'நாங்கள் இரண்டு மணி நேரம் தானே தொடக்கத்தில் கேட்டோம். தந்தீர்களா?" என்று கோபக்குரல் எழுப்பினார்கள்.

மெரினா புரட்சியின் கடைசி 18 மணி நேரம்


2.30 மணி : 

சிலர் தண்ணீர் மட்டும் கொண்டு செல்வதற்கு காவல்துறையினர் அனுமதி தந்தனர். காவல்துறையை சேர்ந்த சிலர் மஃப்டியில் இருப்பதாக கூட்டத்தில் தகவல் பரவியதால் சின்ன சலசலப்பு ஏற்பட்டது.

3.15 மணி : 

'நாம் தமிழர்' கட்சியின் சீமான் வருகை தந்தார். ஆனால், போராட்டக்காரர்கள் பேச மறுத்தனர்.  

3.45 மணி : 

ஆர்.ஜே.பாலாஜி வந்தார். அவருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவரும் கிளம்பினார். 

5.15 மணி : 

ஜல்லிக்கட்டுக்கான அவசரச் சட்டம் முன்வடிவு சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தடையை முற்றிலும் நீக்கும் இந்த ஜல்லிக்கட்டு சட்ட மசோதா, பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

5.45 மணி : 

முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன், ஜல்லிக்கட்டு பிரச்னைகளை பற்றியும், அதன் சட்டச் சிக்கல்களையும் விரிவாக விளக்கினார். 'போராட்டத்தைத் தொடர்வதா? வேண்டாமா? என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் சொன்னார். அதன்பின்னரும் போராட்டக்காரர்கள் தொடர்வதாக சொன்னார்கள். 

மெரினா புரட்சியின் கடைசி 18 மணி நேரம்

6.15 மணி : 

ஒருசிலர் அரி பரந்தாமன் கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. மாபெரும் அறப்போராட்டம் முடிவுக்கு வந்தது. 

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இளைஞர்களின்  'மெரினா புரட்சி'  வரலாற்றில் அழுந்தப் பதியப்பட்டது. 

http://www.vikatan.com/news/coverstory/78545-last-18-hours-of-marina-protest.art

Link to comment
Share on other sites

'அத்துமீறியது சமூக விரோதிகளே' - கமிஷனர் ஜார்ஜ்

george

சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'இன்று காலை போராட்ட களத்தில் மூத்த காவல்துறை அதிகாரிகள் பொறுமையாக பேசி மாணவர்களை கலந்து போகச் சொல்லினர். மக்களை அமைதியாக கலைக்கவே விரும்பினோம். ஆனால், கூட்டத்தில் உள்ள ஒரு பகுதியினர் இதை எதிர்த்தனர்.

சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டக்குழுவில் சிலர் அச்சுறுத்தல் விடுப்பதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தன. சமூக விரோத சக்திகள் உள்ளே புகுந்ததால் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை. சென்னையில் 7000 காவலர்கள், 1000 துணை ஆய்வாளர்களும் கண்காணிப்பு பணியில் உள்ளனர். சென்னையில் நாளை காலை இயல்பு நிலை திரும்பும் ' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/78548-chennai-police-commissioner-george-press-meet-on-marina-protest.art

Link to comment
Share on other sites

திட்டமிடாத போலீசால் திணறிய சென்னை
 
 
 

ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாற, உளவுத் துறை தோல்வியே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Tamil_News_large_169617020170123232028_318_219.jpg

ஜல்லிக்கட்டு போராட்டத்தை நிறுத்த, ஜன., 17 முதல், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை, திடீரென மெரினாவிலும், மற்ற இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு, சாலைகள், 'சீல்' வைக்கப்பட்டன. கடற்கரை சாலையிலும், அதை ஒட்டிய சாலைகளிலும்,வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

 

கலவரமாகமாறியது


காலை, 6:00 மணிக்கு, கடற்கரைக்குள் போலீசார் நுழைந்து, போராட்டக்காரர்களை வெளியேற்ற முயற்சித்தனர். இந்த முயற்சி எதிர் விளைவை ஏற்படுத்தி, கலவரமாக மாறியது; காவல் நிலையம் கொளுத்தப்பட்டது.கலவரத்தை கட்டுப்படுத்த, போலீசாரால் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இளைஞர்கள், கடலுக்குள் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
சென்னை முழுவதும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன; கடைகள் அடைக்கப்பட்டன; மறியல், தடியடி என, சென்னையே திணறியது. இந்த மோசமான

 

நிலைக்கு, போலீசாரின் திட்டமிடாத செயல்பாடும் காரணம். போராட்டத்தின் பின்னணி மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் குறித்து, உளவுத் துறையினர், எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், திட்டமின்றி களத்தில் இறங்கியதால், இந்த பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது.
- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1696170

Link to comment
Share on other sites

போராட்ட களத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் யார்?
ஆதி முதல் அந்தம் வரை போலீஸ் அதிகாரி 'பளிச்'
 
 
 

ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையை தமிழகத்தின் பக்கம் திருப்பிய, கல்லுாரி மாணவர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு அறவழிப் போராட்டம், திடீரென திசைமாறி கலவரத்தில் முடிய காரணம் என்ன; போராட்டக்காரர்களுடன் ஊடுருவிய நபர்கள் யார்? அவர்களது திட்டம் என்னவாக இருந்தது என்பது குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tamil_News_large_1696325_318_219.jpg

தமிழக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தின் முதல், மூன்று நாட்கள் எவ்வித பிரச்னையும் இல்லை. நான்காம் நாள் நக்சல் ஆதரவு, இனவாத, மதவாத போக்கு கொண்ட நபர்கள் கூட்டத்திற்குள் ஊடுருவினர்.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம், மெல்ல மெல்ல பிரதமர் மோடி, முதல்வர் பன்னீர்செல்வத்தை வசைபாடும் களமாக மாறியது. மோடியை குறி வைத்து, ஒரு கூட்டம் இயங்கத் துவங்கியது. அவர்கள், சர்வதேச மத பயங்கரவாதி படத்துடன் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் மக்களுக்கு, ஆட்சேபனைக்குரிய கருத்துக்களுடன் கூடிய துண்டு பிரசுரங்கள், ஆயிரக்கணக்கில் வினியோகிக்கப்பட்டன.
 

சமூக வலைதளங்கள்


சென்னை, மெரினா, கோவை, வ.உ.சி., மைதானத்திலும் இது போன்ற பிரசாரங்கள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பரப்பினர். போராட்ட களங்களில் ஊடுருவிய இளைஞர்கள் சிலர் மைக், ஒலிபெருக்கி வசதிகளை தாங்களாகவே ஏற்படுத்தி, தனித்து இயங்க ஆரம்பித்தனர். மேடை பேச்சுக்குரிய நாகரிகமின்றி, ஆட்சியாளர்களை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர்; மோடியை ஒருமையில் விமர்சித்தனர்.
ஏற்கனவே, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, 'இவ்வாறெல்லாம் நாகரிகமின்றி பேசக்கூடாது' என, அறிவுறுத்தியபோது எதிர்த்து மிரட்டியுள்ளனர். தங்களின் அறவழி போராட்ட நோக்கம் சிதைந்து விடக்கூடாது என்பதால், மாணவர்கள் அமைதி காத்தனர்.

இதை தங்களுக்கு சாதகமாக்கிய ஊடுருவல்காரர்கள், போராட்டம் நடந்த இடத்துக்கான பாதுகாப்பு வளையத்திலும் இடம்பிடித்தனர். போக்குவரத்து சீரமைப்பு, உணவு வழங்கல், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் என, அனைத்திலும், தங்களது ஆட்களை ஈடுபடுத்தினர்.

ஊடுருவல்காரர்களே தீர்மானித்து


ஒரு கட்டத்தில், இவர்களை மீறி யாரும் அங்கே இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. 'ஹிப் ஹாப் தமிழா' ஆதிக்கு கோவை வ.உசி., பூங்காவில் நேர்ந்த அவமரியாதையும்,
மிரட்டலும் இதற்கு உதாரணம். அவர் எந்த மேடையில் நின்று, என்ன பேச வேண்டும் என்பதையும் ஊடுருவல்காரர்களே தீர்மானித்து, அவர் மீது திணித்தனர். அவர் மறுத்ததால், அவமானப்படுத்தினர். வெறுப்படைந்த அவர் வெளியேறினார்.
தனக்கு நேரிட்ட மிக மோசமான அனுபவத்தை, வீடியோ வாக்குமூலமாக, 'பேஸ்புக்'கிலும் பதிவிட்டார். ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை, தமிழக அரசு அறிவித்ததும், போராட்டம் முடிவுக்கு வரும் என்றே பலரும் நம்பினர். ஆனால், போராட்டத்தை இறுதி செய்ய விடாமல், சில சக்திகள் முட்டுக்கட்டை போட்டன.ஜல்லிக்கட்டு கோரிக்கையுடன், மேலும் பல கோரிக்கைகளையும் முன் வைத்து கூட்டத்தை கலையாமல் பார்த்துக் கொண்டனர்.
சென்னை, மெரினா கடற்கரையில் திரண்டிருந்த பல லட்சம் மக்களின் பிரதிநிதியாக செயல்பட்ட சிலர், தங்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தனர். 'அதிகாரப்பூர்வ கமிட்டி' ஒன்றை அமைத்து, வெளிப்படையாக அறிவியுங்கள். அந்த கமிட்டியில் உள்ளவர்களுடன் அரசு பேச்சு நடத்தும்' என்று தெரிவித்தோம்.பல லட்சம் பேரில், யாரை, கமிட்டியில் சேர்ப்பது என்ற குழப்பம் அவர்களுக்கு. அதனால், அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஓரிரு முக்கிய நபர்களுடன் தொடர்ந்து பேசி வந்தோம்.

 

எச்சரிக்கை


'நாங்கள் சொன்னால் இங்கே யாரும் கேட்க மாட்டார்கள்; அறிவுரை கூறினால், நாங்கள் விலை போய் விட்டதாக குற்றம் சாட்டுவர்' என, அவர்களும் நழுவினர். கடைசிகட்டமாக, போராட்ட குழுவின் முக்கிய நபர்களுடன் பேசினோம். 'இனவாத, மதவாத நபர்கள், உங்களது குழுவில் ஊடுருவியிருக்கின்றனர்; அவர்கள், போராட்டத்தின் போக்கையே மாற்றுவர்; சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் நேரிடலாம். உடனடியாக அந்த நபர்களை, அந்த அமைப்பினரை வெளியேற்றுங்கள்' என எச்சரித்தோம்.சில அமைப்புகள், சில நபர்களின்

 

பெயர் விபரங்களையும் அளித்தோம். போராட்ட குழுவினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதிலும், நிலைமை எல்லை மீறிவிட்டது. ஊடுருவிய சிலர், பலர் ஆகி, நுாற்றுக்கணக்கில் வலுத்து நிலை பெற்று விட்டனர்.

தனி தமிழ்நாடு, தமிழ் தேசியம், புரட்சி கோஷங்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கின. மோடிக்கு எதிராக, மத துவேஷத்தை துாண்டும் கோஷங்களும் அதிகரித்தன. அதன்பின் விழித்துக் கொண்ட போராட்டக்காரர்கள் அந்த கும்பலை, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்; அது முடியாமலே போய் விட்டது. போராட்டத்தின் போக்கு திசைமாறுவதை கணித்தோம். தடுப்பு முயற்சி தோல்வி அடைந்துவிட, விளைவை எதிர்கொள்ள, போலீசாரை ஆயத்தப்படுத்தினோம்.
தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் வரலாறு காணாத மக்கள் எழுச்சியை, மத்திய அரசுக்கு எதிராக திசை திருப்பி விடும் திட்டமே, ஊடுருவல்காரர்களின் முக்கிய அம்சமாக இருந்தது.ஊடுருவல்காரர்களின் சதி திட்டம் நிறைவேறிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில் தான், தமிழக அரசு, அவசரச் சட்டம் பிறப்பித்ததும், போராட்ட களத்தை விட்டு கலைந்து செல்லுமாறு மக்களை, குறிப்பாக, மாணவர் களை வலியுறுத்தினோம்.
 

எல்லை மீறியது


போராட்டக்காரர்கள் கள நிலவரத்தை உணர்ந்து கொள்ளாமல், போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்தே, போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினோம். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையின் போது கையில் லத்தி, துப்பாக்கி, ஷீல்டு போன்றவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்றே போலீசாரை அறிவுறுத்தியிருந்தோம். நிலைமை எல்லை மீறி போனதும் தான், குறைந்தபட்ச பலப்பிரயோகம் செய்ய வேண்டியதாயிற்று. இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1696325

Link to comment
Share on other sites

சென்னை வடபழனியில் துப்பாக்கிச்சூடு! #Update

_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0

சென்னை, வடபழனியில்  காவல்துறைக்குச் சொந்தமான வாகனத்தில் சிலவிஷமிகள் தீ வைத்துள்ளனர்.  மேலும்  தீவைத்த விஷமிகள், அருகிலுள்ள கடைகளின் கதவுகளை உடைத்து, வடபழனி போலீஸ் நிலையத்தையும் முற்றுகையிட முயன்றனர். இதனால், அங்கு ஒரு பதட்டமான சூழல் உருவானது. இதை உடனடியாக தடுக்க எண்ணிய போலீஸார், பொதுமக்கள் அதிகம் இருக்கும் சாலைப்பகுதி என்றுகூடபாராமல் , வானத்தை நோக்கி 5 முறை சுட்டுஉள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த பரபரப்பையும் அச்சத்தையும்  ஏற்படுத்தியுள்ளது.

http://www.vikatan.com/news/tamilnadu/78559-gunfire-in-chennai-vadapalani--update.art

Link to comment
Share on other sites

ஆறு நாள் மக்களின் நண்பன்.. ஏழாவது நாள் என்ன ஆயிற்று காவல்துறைக்கு? #Marina

தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்காக ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களும் போராட எவ்வளவு எழுச்சி பெறுவார்கள், அரசாங்க இயந்திரத்தை அசைத்துப்பார்ப்பார்கள் என நாம் யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடக்கும் அலங்காநல்லூரில் தொடங்கிய போராட்டம்... விறுவிறுவென தமிழகம் முழுவதிலும் தீயாக பரவியது.

காவல்துறை

இளைஞர்கள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். அறவழியில் களம் இறங்கினார்கள். தமிழக அரசாங்கம் 'ஜனநாயகம்' என்ற போர்வையில், போராட்டம் நடத்தவந்த அனைவருக்கும் காவல்துறையை ஏவிவிட்டு பாதுகாப்பு வழங்கியது. 'நாங்களும் தமிழர்கள்தான். நீங்க போராட்டம் நடத்துங்க. உங்க பாதுகாப்புக்காக நாங்க இருக்கோம்' என போராட்டத்தின் ஆரம்ப நாட்களில் முதுகில்  தட்டிக்கொடுத்தவர்கள்.  அதே காவல்துறை முதுகில் குத்தவும் என்பது இப்போது தெள்ளத் தெளிவாக தெரிந்துவிட்டது.

ஜனவரி 17-ம் தேதி இருபது, முப்பது இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து மெரினாவில் போராட்டம் நடத்தலாம் என முடிவெடுத்து பதாகைகளுடன் களத்தில் இறங்க அதுவே 'மெரினா புரட்சி'யின் தொடக்கப்புள்ளியானது. மாணவர்களுக்கு இந்தச் செய்தி பரவப்பரவ மெரினாவில் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்தது. அவர்கள் அனைவரையும் சின்ன எதிர்ப்பு கூட இல்லாமல், சிறு இடைஞ்சல் கூட ஏற்பட்டுவிடாமல், களத்திற்குப் போக அனைத்து வசதிகளை செய்து கொடுத்தது இதே காவல்துறை.

காவல்துறை

போராட்டத்தை ஆதரிக்கச் சென்ற ஸ்டாலினையும், அ.தி.மு.க எம்.எல்.ஏ-களையும் மாணவர்கள் கடுமையாக எதிர்க்க.. 'மாணவர்கள் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்' என பேட்டி மட்டும் கொடுத்துச்சென்றார்கள். அப்போதும் காவல்துறை 'பாருங்க... நாங்க உங்கபக்கம். ஆளும் கட்சி. எதிர்க்கட்சி. என்ற பாகுபாடு இந்த காக்கி உடைக்கு கிடையாது. உங்களுக்காகவே நாங்கள்' என்ற ரீதியில்தான் அவர்களது மொத்த செயல்பாடுகளுமே இருந்தன. தமிழக அரசை க் கடுமையாக விமர்சித்தபோதும், மத்திய அரசை வார்த்தைகளால் வறுத்து எடுத்தபோதும்... கண்டுகொள்ளாமல் குறிப்புகள் மட்டுமே எடுத்துகொண்டது உளவுத்துறை. 

கொஞ்சம் கொஞ்சமாக மெரினா கடற்கரையின் களம் பெரிதானது... எங்கும் காணும் இளைஞர்களின் தலைகள். இருசக்கர வாகனங்கள், கார்கள் என வாகனங்களும் பெருகியது. இது அத்தனையும் ஒருங்கிணைக்க அவ்வளவு காவல்துறை பணியில் அமர்த்தப்படவில்லை. ஒரு பகுதி மாணவர்களே களத்தில் இறங்கி காவல்துறைக்குப் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதில் தொடங்கி, பாதுகாப்புப் பணி வரைக்கும் உதவியாக இருந்தனர். 'நமக்கும் வேலை மிச்சம்.' என மரத்தடியில் ரெஸ்ட் எடுக்க தொடங்கினார்கள் சில காக்கிகள். போராட்டக்காரர்களுக்கு வரும் உணவு, தண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள் வரை அனைத்தும் இவர்களுக்கு ஓடி வந்து... ஓடி வந்து கொடுத்தனர். 'நாம் இவர்களிடம் எது கேட்டலும் உடனே கிடைக்கும்.' என்னும் அளவுக்கு காவல்துறையை நினைக்க வைத்தார்கள். அவ்வளவு பெரிய இரண்டாவது கடற்கரையில்.. விவேகானந்தர் இல்லம், லைட் ஹவுஸ் சில இடங்களில் மட்டும் தற்காலிக முகாம் அமைத்துத் தங்கினார்கள். 'எவ்வளவோ டியூட்டி பார்த்திருக்கோம். இதுமாதிரி ஜாலியா நாங்க இருந்ததில்லை.' என்று இங்கு டியூட்டியில் இருக்கும் சில காவலர்களே வெளிப்படையாகச் சொன்னார்கள். 

காவல்துறை

ஒருநாள் காலை வேளையில், ஒரு காவலர் மைக் பிடித்து 'நானும் தமிழர்தான். நாங்க இந்த உடை போட்டு இருந்தாலும். நாங்களும் உங்க போராட்டத்தில் தான் இருக்கோம். நான் ஒட்டுமொத்த காவல்துறை சார்பாக பேசுகிறேன்.' என மாணவர்கள் முன் வீர உரை நிகழ்த்த அவரைக் கொண்டாடித் தீர்த்தார்கள் இளைஞர்கள். மெரினா இளைஞர்கள் மத்தியில் காவல்துறையின் இமேஜ் இரண்டுமடங்கானது. இந்த நேரத்தில்தான் ஓ.பி.எஸ் சென்னை டூ டெல்லி பயணம் முடித்து வந்தார். 'அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். இதுவே ஜல்லிக்கட்டுக்கான நிரந்திர சட்டம்.' என்றார். அதை மாணவர்கள் ஏற்கவில்லை. போராட்டம் தொடர்ந்தது.  மெரினாவில் இருந்து யாரும் கலையவில்லை.  

'நானே ஜல்லிக்கட்டை நடத்தி வைப்பேன்.' என்று கூறி மதுரைக்கு முதல்வர் ஒ.பி.எஸ் சென்ற அதே நாளில்தான்... ஒ.பி.எஸ் அலுவலகம் இயங்கும் தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு அருகே இருக்கும் மெரினாவில் மூன்று லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள். மெரினாவே மிரண்டது. அப்போதும் அமைதிகாத்தது காவல்துறை. அலங்கநால்லூரில் ஒ.பி.எஸை ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் திருப்பி அனுப்பினார்கள் அங்கிருந்த போராட்டக்காரர்கள். தமிழக அரசு இதை ஈகோ பிரச்னையாகதான் பார்த்தது. அன்று இரவுதான் மெரினாவின் சூழல் மாறியது. 

காக்கிகள் தலையீடு அதிகரித்தது. அடுத்தநாள் காலை 'லத்தி சார்ஜ்' நடக்கலாம் என்ற சூழல் நிலவியபோது கூட, சில மாணவர்கள்... 'ச்சே... அப்படி எல்லாம் பண்ணமாட்டாங்க. ஆறு நாட்கள் நமக்காக நம்முடன் இருந்தவர்கள். நம்மை எப்படி அடிப்பார்கள்?' என்ற ரிதீயில்தான் பேசினார்கள்.  23-ம் தேதி அதிகாலை மூன்று மணி முதலே காவல்துறையினரின் வருகை அதிகரித்தது. இதை உணர்ந்த மாணவர்கள் அப்போதும் காவக்துறைக்கு 'டீ, காபி கொடுங்க. பிஸ்கட் கொடுங்க.' என சொல்லி ஓடியோடி கொடுத்தனர். காவல்துறையை சேர்ந்த சிலரும் அதை வாங்கி அருந்தினார்கள். அடுத்த ஒரு மணி நேரத்தில் இவர்கள் சந்திரமுகியாக மாறுவார்கள் என சொன்னால், கடற்கரைக் காற்றே அதை மறுத்திருக்கும். ஆனால், காக்கிகளின் உண்மையான முகம், கோர முகம் அடுத்த சில நிமிடங்களில் வெளிப்பட்டுவிட்டது. 

காவல்துறை

மெரினா இளைஞர்கள் கூட்டத்தைக் கலைக்க... எங்கள் கைகளில் லத்தி இல்லை என்று சொல்லி மாணவர்கள் கூட்டத்திற்குள் புகுந்தாலும்... ஒரு மணி நேரத்துக்கும் மாணவர்கள் கொடுத்த பிஸ்கெட் பாக்கெட், தண்ணீர் பொத்தல்களை வாங்கிய கைகளாலேயே அவர்களை அறைந்தார்கள். தாக்கினார்கள். இழுத்து எட்டி உதைத்தார்கள். ஏழு நாட்கள் பொறுத்தவர்களுக்கு, அந்த இளைஞர்கள் கேட்ட 'இரண்டு மணி நேர' அவகாசத்தைத் தரவும் மறுத்தார்கள். மீடியாவின் கண்படாத பக்கம் லத்தி வைத்து தாக்கினார்கள். இது மெரினாவில் காவல்துறைகளால் நடந்த அராஜகம் என்றால்...  இன்னொரு பக்கம் போராட்டக்காரர்கள் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டார்கள், பைக்குகளை அடித்து நொறுக்கிறார்கள்  என்று செய்திகளும் பரவின. ஆனால், கிளைமேக்ஸ் காட்சியாக ஆட்டோவுக்குத் தீ வைத்ததும்,  வாகனங்களை அடித்து நெறுக்கியதும் அதே காக்கி உடை போட்ட காவலர்கள்தான் என்பது வெளியாகி கொண்டே இருக்கும் வீடியோவிலே தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு மீனவர்கள் உதவிகள் செய்தற்காக அவர்கள் வீடு புகுந்து தாக்குவதும் இவர்கள் தானே.

ஆனால், சப்பைக்கட்டுக்காக, நேற்று இரவு ஜார்ஜ் 'சமூக விரோதிகள் சிலர் கூட்டத்துக்குள் நுழைந்ததே பிரச்னைக்கு காரணம். அவர்கள் கண்டறியப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றவர் 'சென்னை மாநகரில் காவல்துறையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்கள் அச்சப்படத் தேவையில்லை.' எனவும் சொல்லி இருக்கிறார். எல்லாம் சரிதான்.  ஆனால், இந்த வீடியோவை எல்லாம் பார்த்த பின் மக்கள் அச்சப்படுவதே காவல்துறையை பார்த்துதான் என்பது காவல்துறைக்குத் தெரியாதா என்ன? லட்சம் இளைஞர்கள் திரண்டபோது நுழையாத சமூக விரோதிகள்... காவல்துறை தலையிட்ட பின் நுழைகிறார்கள் என்றால், யார் திறமை அற்றவர்களாக இருக்கிறார்கள்? 

போராட்டம் தொடங்கப்பட்டபோது அரசியல் என்றால் என்ன, காவல்துறை என்ன எல்லாம் செய்யும் என்பதை அறியாதவர்களாகதான் பலர் இருந்தார்கள். இப்போது காவலர்கள் யார், அவர்களின் உண்மையான முகம் என்ன என்பது போராட்டக் களத்தில் நின்றவர்களுக்கு இன்று புரிந்திருக்கும். எதிர்காலப் போராட்டங்களுக்கு இந்தப் பாடம் நிச்சயம் உதவும். 

காவல்துறை

அரசாங்கமும், காவல்துறையும் சேர்ந்து... தெரிந்தோ தெரியாமோ 'போராட்டம்' என்னும் விதையை மாணவர்கள் மத்தியில் விதைத்துவிட்டார்கள். இந்த விதை என்ன வெல்லாம் செய்யும் என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்து பார்ப்போம். 

http://www.vikatan.com/news/tamilnadu/78639-what-happened-to-tamil-nadu-police-on-seventh-day-marina.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மெரினாவில் தடியடிக்கு முன் நடந்தது என்ன

 மெரினாவில் நடப்பது என்ன 

தமிழச்சி ஆதிக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலையாளி ஜோர்ஜ், தமிழர் உணர்வுறுவதை பொறுக்க முடியாமல் பண்ணிய நாதாரி வேலை.

இவர் இதற்கு முன்னர் மலையாளிகளினால் சென்னையில் நாடாத்தப் படும் பாடசாலை ஒன்றுக்கு சிக்கல் வந்தபோது, பக்கச்சார்பாக நடந்தார் என்ற குற்றச்சாட்டு உண்டு. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.