Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சந்தியா -


Recommended Posts

சந்தியா - சிறுகதை

அவள் அறிமுக எழுத்தாளர் - புவனா ஸ்ரீதர்

 

விமானம் ஒரு மணி நேரம் தாமதம். அதுவரை மொபைல்தான் துணை. ஃபேஸ்புக்கில் சந்தியா புகைப்படத்துக்கு லைக் போட்ட படி, ‘எப்படி இருக்க வேண்டியவ... அடையாளம் தெரியாத அளவு மாறிட்டா...’ என நினைத்துக் கொண்டேன்..

p74a.jpg

சந்தியாவைப் பார்க்கத்தான் கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நானும் என் எட்டு வயது மகளும் பயணப்படுகிறோம். அப்படியே சந்தியாவின் நினைவில் மூழ்கினேன்...

இன்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு. சந்தியாவுக்கு பெஸ்ட் அவுட்கோயிங் ஸ்டூடன்ட் அவார்ட் கிடைத்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் இருவரும் ஒரே கம்பெனிக்குத் தேர்வானோம்.

சந்தியா, வசதியான குடும்பத்தில் ஒரே பெண். என் குடும்பத்தில் நான் வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். பயிற்சி முடித்து, பெங்களூரில் வேலை கிடைத்தது. வழக்கம்போல இங்கேயும் சந்தியா சாதித்துக்காட்டினாள். அவள் உருவாக்கிய `மொபைல் ஆப்’ சர்வதேச அளவில் கம்பெனிக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்தது. பதவி உயர்வும், லட்சங்களில் சம்பளமும் கிடைத்தன. அந்த நேரத்தில்தான் எங்கள் டீமில் புதிதாக வந்துசேர்ந்தார்கள் எழில், நிதின். இருவரும் திறமைசாலிகள். மெள்ள மெள்ள எங்களோடு நண்பர்கள் ஆனார்கள்.

``ஏங்க, இனிமே நாமெல்லாம் சேர்ந்து லஞ்ச் சாப்பிடலாமா?’’ - எழில் கேட்டான்.

``அதெல்லாம் ஒண்ணும் வேணாம்” - சந்தியா சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

“ப்ளீஸ்ங்க, உங்க ஃப்ரெண்டுகிட்ட சொல்லுங்க...” - நிதினும் எழிலும் என்னுடன் வந்தார்கள்.

“சரி, கேட்டுப் பார்க்கறேன்...”

“சந்தியா... இன்னிக்கு மட்டும் நம்மோட சாப்பிடட்டுமே...” என்றேன்.

“என்னமோ பண்ணு...” - சொல்லிவிட்டு நடந்தாள் சந்தியா.

“எழில் 70-80களில் வந்த இளையராஜா பாடல்களை அருமையா பாடுவான், கேட்டுப் பாருங்க” என்றான் நிதின். p74c1.jpg

“ராஜராஜசோழன் நான்... எனை ஆளும் காதல் தேசம் நீதான்...”

- அவ்வளவு துல்லியமாக, அழகாகப் பாடினான்.

தினமும் எங்களுடனே சாப்பிட வந்தார்கள். ஒருநாள் நிதின் என்னிடம் தன் காதலைச் சொன்னான். என் குடும்பச்சூழலுக்கு நிதின் மாதிரி நல்ல பையன் கிடைக்க மாட்டான் என்று எண்ணியே சம்மதம் சொன்னேன்.

ஒருநாள், “சந்தியா... நாம் மேரேஜ் பண்ணிக்கலாமா?” - கேட்டேவிட்டான் எழில்.
“என் பெற்றோர் பார்க்கும் வரன்தான் என் கணவன். வேறு யாரையும் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை” - சொல்லிவிட்டு சந்தியா வெளியேறினாள்.

ஒரே வாரத்தில் சென்னைக்கு மாற்றல் வாங்கினாள். பாவம்... எழில்தான் சோகமே உருவாக இருந்தான். ஆறு மாதத்துக்குப் பிறகு ஒருநாள், சந்தியா ஆபீஸ் வந்தாள்.

“எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை தஞ்சாவூர் பக்கம் ஒரு கிராமத்தில் அரசு ஆசிரியர். என் வேலையை விட்டுட்டேன்” என்றாள். எல்லாரும் அமைதியானோம்.

“சந்தியா... கடைசியா ஒரு பாட்டு பாடிக்கிறேனே” என்றான் எழில்.

“வேண்டாம்... நான் கிளம்பறேன்” என்று சந்தியா புறப்பட்டாள்.

“என்ன அழுத்தம் பாரு... ஒரு ஆணின் வலிகளை இவள் புரிந்துகொள்ளவே இல்லை...” - நிதின், சந்தியாவைத் திட்டினான்.

என்னையும், நிதினையும் கனடா ஆபீஸுக்கு அனுப்பினார்கள். பெற்றோர் எதிர்ப்பை மீறி, திருமணம் செய்துகொண்டு கனடா சென்றோம். பங்களா, ஆளுக்கு ஒரு கார் என வாங்கினோம். எந்தக் கவலையும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம். என் குழந்தை பிறக்கும்வேளையில் என் அம்மாவையும் நிதின் அம்மாவையும் கெஞ்சி வரவழைத்தோம். பணம் சம்பாதிப்பது, ஜாலியாக பார்ட்டிக்கு போவது என எட்டு வருடங்கள் ஓடின. இதோ, இந்தியா வருகிறோம்...

விமான நிலையத்துக்கு சந்தியா கார் அனுப்பி இருந்தாள். தஞ்சை நெருங்க நெருங்க சாலையின் இருபுறமும் வயல்வெளிகள். டிரைவர் கேட்டார்... “என்னம்மா எங்க ஊரு எப்படி இருக்கு?”

“அருமையா, அமைதியா இருக்கு” என்றேன்.

“மழை இல்ல... காவேரில தண்ணி இல்ல...

ஊரே காஞ்சு போச்சு. மூணு விவசாயிங்க மன சொடிஞ்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. சந்தியா அம்மாதான் ஊர் மக்களைக் கூட்டி ஏரி, குளம், ஆத்துப் பகுதியைத் தூர் வாரினாங்க. கைத்தொழில் கத்துத்தந்தாங்க. பொண்டுக எல்லாம் மெழுகுவத்தி, ஊதுவத்தி, பேப்பர் கப் செஞ்சுச் சம்பாரிக்க வழிசெஞ்சாங்க. சந்தியா அம்மாதான் எங்க எல்லாருக்கும் குலசாமி!”

டிரைவர் சொல்லி முடிக்கவும் வீடு வந்தது. சந்தியா, அவள் கணவன், மாமனார், மகன் என எல்லோரும் அன்போடு உபசரித்தார்கள்.

“நீ அசதியா இருப்பே... இந்த வேப்பமர நிழலில் படுத்துப்பாரு, அருமையா தூக்கம் வரும்...”

சந்தியா சொன்னதுபோலவே படுத்தவுடன் தூங்கினேன். சட்டென என் மகள் நினைவு வர, கண் விழித்தேன்.

“என்னம்மா நல்லா தூங்குனீங்களா... வயல்ல வேல செய்யறேன் தாயி. எங்க முதலாளி யம்மாதான் என் புள்ளய பத்தாப்புல இருந்து படிக்க வெச்சாங்க. இப்ப எம்புள்ள தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரில கடைசி வருஷம் படிக்குது தாயி” என்றாள்.

“என்னது, உன் பையன் டாக்டரா!” என்றேன் ஆச்சர்யமாக.

“எம் புள்ள மட்டும் இல்ல... எங்க ஊர்ல உள்ள அம்புட்டு பயலுங்களும் டாக்டரு, இன்ஜினீரு, வக்கீலுனு படிக்குதுங்க தாயி...”

அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சந்தியா வந்தாள்.

“எப்படி... ஊர்மக்கள் எல்லாம் உன்னை இப்படி புகழ்றாங்க...” என்றேன் சந்தியாவிடம்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லடி. கல்யாணம் முடிச்சு இங்கே வந்ததும் விவசாயிங்க  நிலைமை மோசமா இருந்தது. இதுக்கு என்ன தீர்வுனு யோசிச்சேன். அவங்களுக்கு உதவற மாதிரி ஒரு `மொபைல் ஆப்’ உருவாக்கினேன். அதன்மூலமா விளைபொருட்களை நேரடியா விற்பனை செய்தோம். அடுத்ததா என் கணவர், பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குப் படிப்போட அவசியத்தைப் புரியவெச்சார். இப்ப எங்க ஊர்ப்பசங்க டாப் காலேஜ் எல்லாத்துலயும் படிக்கறாங்க. ஊர்ப்பசங்க, அவங்க நண்பர்கள் எல்லாம் சனி, ஞாயிறு விடுமுறையில இங்கே வந்து உதவி செய்றாங்க. ஒவ்வொரு மாணவனும் இங்கே ஒரு விவசாயிதான். பெண்கள் சிறுதொழில் செய்து சம்பாரிக்க வழி பண்ணினோம்...” - சந்தியா நிதானமாகச் சொல்லி முடித்தாள்.

p74b1.jpg

“கார், பங்களா, அந்நியதேச வாழ்க்கைதான் சொர்க்கம்னு சுயநலமா, குருட்டுத்தனமா வாழ்ந்துட்டு இருக்கற நான் எங்கே? உன் சொந்த மண், மக்களைக் காப்பாத்தவும், வருங்காலத் தலைமுறை மாணவர்களுக்குக் கல்வியையும், விவசாயத்தையும் கத்துத் தர்ற நீ எங்கே? உன்னைப் பார்த்தா பெருமையாவும், பொறாமையாவும் இருக்கு!”

சந்தியாவை அணைத்துக்கொண்டேன்.

சட்டென மகள் நினைவு வர, “என் மகள் எங்கே? அவளுக்குத் தமிழ்கூட தெரியாதே”

- நான் பரபரக்க, “பயப்படாதே... உன்னைவிட இந்த ஊர் மக்கள் உன் குழந்தையை நல்லாவே பார்த்துப்பாங்க” என்றாள் சந்தியா.

ஒரு வீட்டின் திண்ணையில் ஏழெட்டுக் குழந்தைகளோடு சந்தியாவின் மகனுடன், என் மகளும் இருந்தாள். சந்தியாவின் மகன், என் மகளிடம், `திஸ் இஸ் ஃபஸ்ட் லெட்டர் இன் தமிழ்... அ... அம்மா டெல்...' என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

என் மகள் முதன்முறையாக,  “அம்மா” என்றாள். கண்ணில் நீர் வழிய, குழந்தைகளை அணைத்துக்கொண்டேன்.

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளமான சிக்கல் இல்லாத சிறுகதை ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஒரு கதையாக மட்டும் வாசிதுவிட்டு.செல்ல முடிய.இதில நாங்கள் யோசிப்பதற்க்கு நிறய இருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.