Jump to content

ஜனாதிபதி வரும் போது அமைதியாக இருக்க வேண்டும்! - கேப்பாபிலவு மக்களுக்கு படையினர் எச்சரிக்கை!


Recommended Posts

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தரும்போது, கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தக் கூடாது என படைத்தரப்பினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

இந்த உத்தரவை மீறி செயற்பட்டால்,உங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்காது எனபடைத்ரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஜனாதிபதி இந்த மாதம் 25 ஆம் திகதி வருகை தருவார், மாற்றுக் காணிகள் மற்றும் 25 லட்சம் ரூபா செலவில் வீட்டுத் திட்டங்களையும் வழங்கிவைப்பார்.

இவற்றை பெற்றுக் கொண்டு அமைதியாக இருப்பதே நல்லது என படையினர் எச்சரிக்கைவிடுத்தனர் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

கேப்பாபிலவு கிராம மக்களுக்கு சொந்தமான 524 ஏக்கர் காணி,போரின் பின்னர்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஏழு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் அம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு படையினர் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கேப்பாபிலவு கிராம மக்கள் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilwin.com/security/01/132512?ref=home

Link to comment
Share on other sites

மக்களை அடக்கும் இந்த சட்டாம்பி வேலைகளை  முடிவுக்கு கொண்டுவர ஜனநாயக சிங்கம் சம்பந்தன் ஐயா என்ன செய்யப்போகிறார்.?

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் நடக்கப்போவது என்ன?

கேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தில் தற்காலிகமாக வாழ்ந்துவரும் 287 குடும்பங்களை சேர்ந்த மக்களின் காணிகள் மீளக்கையளிக்கப்படும் காணிகளுக்குள் உள்வாங்கப்படவில்லை.

இதனால் ஜனாதிபதி வரும்போது இராணுவத்தினரால் கையகப்படுத்தபட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்திருந்த 59 ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், ஜனாதிபதி வரும்போது கேப்பாப்புலவு மாதிரி கிராம மக்களை எந்தவொரு போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என வலியுறுத்தியுள்ளதாக கேப்பாப்புலவு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியிருக்கும் இராணுவத்தினர் தமது காணிகளை விடுவிக்க கோரி ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்து முற்படும் மக்களை தடுப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நல்லாட்சி அரசாங்கத்திலும் இராணுவத்தினர் இவ்வாறான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள விடயம் அரசாங்கத்திற்கு தெரியாமல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போதைய எளிமையான நல்லாட்சி அரசு இந்த விடயத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதே இன்றைய முக்கிய கேள்வியாக உள்ளது.

இதேவேளை வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் ஆக்கப்பட்டோர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் பொதுமக்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் மைத்திரிபாலசிறிசேனவின் முல்லைத்தீவு விஜயம் எப்படி அமையப்போகின்றது. அவர் எவ்வாறு காணிகள் மீளக் கையளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த போகின்றார் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது தமிழ் சமூகம்.

 

http://www.tamilwin.com/community/01/132999?ref=editorpick

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.