Jump to content

வடமாகாண விளையாட்டு செய்திகள் 2017


Recommended Posts

யூனியன் கல்லூரியை வீழ்த்தி கிண்ணத்தை சுவீகரித்தது மானிப்பாய் இந்துக் கல்லூரி

 
BB12-696x463.jpg
icc-clips-728-90-newest.jpg

தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மற்றும் மானிப்பாய் இந்துக் கல்லூரி அணிகளுக்கு இடையில் முதல் முறையாக இடம்பெற்ற நீலங்களின் சமரில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்திய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களினால் அபார வெற்றியைப் பெற்றுள்ளது.

இரண்டு நாட்களாக இடம்பெற்ற இந்தப் போட்டி தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் வெகு விமர்சையான ஆரம்ப நிகழ்வுகளுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

 

அதன் பின்னர் இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் தலைவர் சுஜீபன் முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

அதன்படி களமிறங்கிய மானிப்பாய் இந்துக் கல்லூரி அணியின் முன் வரிசை வீரர்கள் சிறந்த முறையில் பிரகாசிக்கத் தவறினர். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு அவ்வணி தள்ளப்பட்டது.

எனினும் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த அனோசன் மற்றும் நிரோஜன் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்பதற்காக சிறந்த முறையில் தமக்கிடையே 89 ஓட்டங்களைப் பகிர்ந்துகொண்டனர். அரைச் சதம் கடந்த அனோசன் வெறும் 32 பந்துகளை எதிர்கொண்டு, 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்களாக 58 ஓட்டங்களை குவித்தார். நிரோஜன் 24 ஓட்டங்களைப் பெற்றார்.

அதன் பின்னர் பின் வரிசை வீரராக வந்த கனிஷ்டன் மிகவும் அபாரமாக ஆடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை விரைவாக உயர்த்தினார். எதிரணியின் பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக இருந்த இவர், 78 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 103 ஓட்டங்களைப் பெற்றார்.

இவருக்கு பங்களிப்பு வழங்கிய ஏனைய பின்வரிசை வீரர்களான சுலக்ஷன் 23 ஓட்டங்களையும், துசிந்தன் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். எனவே, அவ்வணி தமது முதல் இன்னிங்சிற்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ஓட்டங்களைப் பெற்றுகொண்டது.

பந்து வீச்சில் யூனியன் கல்லூரி சார்பாக வகீசன் 56 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், மதீசன் 58 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் அதிக பட்சமாகக் கைப்பற்றினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த யூனியன் கல்லூரி வீரர்கள், மானிப்பாய் தரப்பினரின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அவ்வணியின் முன்வரிசை வீர்ர்கள் உட்பட அனைத்து வீர்ர்களும் மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல, தனி ஒருவராக இருந்து போராடிய திவ்யனாத் 36 ஓட்டங்களை அதிக பட்சமாகப் பெற்றார்.

 

இதன் காரணமாக 31 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த யூனியன் கல்லூரி 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்து வீச்சைப் பொருத்தவரை, துடுப்பாட்டத்தில் சதம் கடந்த கனிஷ்டன் 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், அணித் தலைவர் சுஜீபன் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதன் காரணமாக யூனியன் கல்லூரி பலோவ் ஓன் முறையில் மீண்டும் துடுப்பாட வேண்டிய நிலைக்கு உள்ளாகியது. இரண்டாவது இன்னிங்சிலும் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பந்து வீச்சு அபாரமாக இருந்தமையினால் யூனியன் கல்லூரி வீரர்களால் ஓட்டங்களைப் பெற முடியாமல் போனது.

அவ்வணியின் முன் வரிசை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து அரங்கு திரும்ப, லவன்ராஜ் மாத்திரம் தனித்து நின்று நீண்ட நேரம் களத்தில் இருந்து அரைச் சதம் கடந்தார். 66 பந்துகளை எதிர்கொண்ட அவர் நிதானமாக ஆடி 11 பவுண்டரிகள் அடங்களாக 52 ஓட்டங்களைப் பெற்றார்.

இதன் காரணமாக யூனியன் கல்லூரி வீரர்கள் 140 ஓட்டங்களை மாத்திரமே இரண்டாவது இன்னிங்சுக்காகப் பெற்று, இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

பந்து வீச்சில் துல்லியமாக செயற்பட்ட விக்னேஷ்வரன் 46 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளைப் பதம் பார்த்து இரண்டாவது இன்னிங்சில் அணிக்கு பெரிதும் பங்களிப்புச் செய்தார்.

போட்டியின் சுருக்கம்

மானிப்பாய் இந்துக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 337/10 – கனிஷ்டன் 103, அனோசன் 58, துசிந்தன் 46, வகீசன் 56/4, மதீசன் 58/3

யூனியன் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்): 113/10 – திவ்யனாத் 36, கனிஷ்டன் 38/4, சுஜீபன் 17/3

யூனியன் கல்லூரி (இரண்டாம் இன்னிங்ஸ்): 140/10 – லவன்ராஜ் 52, விக்னேஷ்வரன் 46/ 7

போட்டியின் முடிவு – மானிப்பாய் இந்துக் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 84 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 78
  • Created
  • Last Reply

தனிக் காட்டாவில் அஜந்தினி தங்கம்

தனிக் காட்டாவில் அஜந்தினி தங்கம்
 

வட­ மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 18 வயதுக்குட்­பட்ட பெண்­களுக்கான தனிக் காட்­டா­வில் கைதடி நவீல்ட் பாட­சா­லையை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வை.அஜந்­தினி தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற போட்­டி­யில் கைதடி நவீல்ட் பாட­சா­லையை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வை.அஜந்­தினி தங்­கப் பதக்­கத்­தை­யும் முத்­துத் தம்பி மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த டி.தனு­சிகா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் வை.யசோதா வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

 

 

இறம்­பைக்­கு­ளம்  மக­ளிர் ம.வி. காட்­டா­வில் வென்­றது தங்­கம்

 
 
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 16 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான தனிக் காட்­டா­வில் வவு­னியா இறம்­பைக்­கு­ளம் மக­ளிர் மகா வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த எல்.டெய்சி யூலி­யட் எமில்டா தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. வவு­னியா இறம்­பைக்­கு­ளம் மக­ளிர் மகா வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த எல்.டெய்சி யூலி­யட் எமில்டா தங்­கப் பதக்­கத்­தை­யும் கைதடி நவீல்ட்­பாட­லையைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.லக்­சனா வெள்­ளிப் பதக்­கத்தை ­யும் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.அபிரா வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

 

 

நிவே­த­னுக்­கு தங்­கம்

 
 
நிவே­த­னுக்­கு  தங்­கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 16 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான தனிக் காட்­டா­வில் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.நிவே­தன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற போட்­டி­யில் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.நிவே­தன் தங்­கப் பதக்­கத்­தை­யும் வி.திரு­சாந் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், தும்­பளை சிவப்­பி­ர­காச மகா வித்­தி­யா­ல­யத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.சோபி­கன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­யுள்­ள­னர்.

 

 

சென். ஜோன்ஸ் வென்றது தங்கம்

 
சென். ஜோன்ஸ் வென்றது தங்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான குழு காட்­டா­வில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி தங்­கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­தது.

நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி உள்­ளக விளை­யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்ற போட்­டி­யில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி தங்­கப் பதக்­கத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், கைதடி நவீல்ட் பாட­சாலை அணி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­யுள்­ள­ன.

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தடகளத் தொடர் நாளை ஆரம்பம்

 
 
தடகளத் தொடர் நாளை ஆரம்பம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­ யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரையப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நாளை ஆரம்­ப­மா­கி­றது. நாளை ஆரம்­ப­மா­கும் இந்­தத் தொடர் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி வரை நடை­பெ­றும்.

வட­மா­காண கல்வி பணிப்­பா­ளர் செ.உத­ய­கு­மார் தலை­மை­யில் நடை­பெ­றும் முதல்­நாள் நிகழ்­வுக்கு விருந்­தி­னர்­க­ளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்­சர் சி.தண்­டா­யு­த­பாணி மற்­றும் வட­மா­காண கல்வி அமைச்­சர் சர்­வேஸ்­வ­ரன் ஆகி­யோர் கலந்து கொள்­ள­வுள்­ள­னர்.

நாளைய போட்­டி­க­ளாக 12 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்­கு­மான 60 மீற்றர் ஓட்­டம், ஆண்­க­ளுக்கான நீளம் பாய்­தல், பெண்­களுக்கான உய­ரம் பாய்­தல், 14 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்­கு­மான 80 மீற்­றர் ஓட்­டம், பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­தல், 16 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்­கு­மான 200 மீற்­றர் ஓட்­டம், 800 மீற்­றர் ஓட்­டம், ஆண்­க­ளுக்­கான குண்­டெ­றி­தல், பெண் க­ளுக்­கான தட்­டெ­றி­தல், நீளம் பாய்­தல் போட்­டி­க­ளும், 18 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்­கு­மான 200 மீற்­றர், 800 மீற் றர் ஓட்­டம், ஆண்­க­ளுக்­கான நீளம் பாய்­தல், பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­தல் போட்­டி­க­ளும், 20 வய­துக்­குட்­பட்ட இரு­பா­லா­ருக்­கு­மான 200 மீற்­றர், 800 மீற்­றர், ஆண்­க­ளுக்­கான நீளம் பாய்­தல், பெண்­க­ளுக்­கான குண்டு எறி­தல் ஆகிய போட்­டி­க­ளும் நடை­பெ­ற­வுள்­ளன.

http://uthayandaily.com/story/9452.html

இன்­றைய மோதல்­கள்

 
 
 

தாச்­சித் தொடர்

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் 98 ஆவது ஆண்டு நிறை­வை முன்­னிட்டு மின்­னொ­ளி­யில் நடத்­தப்­ப­டும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலைய மைதா­னத்­தில் இடம்பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை மாலை 6 மணிக்கு இடம்­பெ­றும் காலி­று­தி­யாட்­டத்­தில் கைதடி வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சண்­டி­லிப்­பாய் வசந்­த­சிறி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

உத­ய­தா­ரகை வி.க.
கால்­பந்­துத் தொடர்

கற்­கோ­வ­ளம் உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கந்­த­சாமி ஆறு ­மு­கம் ஞாப­கார்த்த வெற்­றிக் கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை பி.ப. 3.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் சென். பீற்­றர்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சிவ­ கு­ம­ரன் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. மாலை 4.30 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் நக்­கீ­ரன் விளை ­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

சென். மைக்­க­லின்
கால்­பந்­துத் தொடர்

உரும்­பி­ராய் சென். மைக்­கல் விளை­யாட்­டுக் கழ­கம் மின்­னொ­ளி­யில் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் உரும்­பி­ராய் இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று புதன்­கி­ழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும் ஆட்­டத்­தில் குறிஞ்­சிக் கும­ரன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து யாழ். பாரதி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. இரவு 8 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் நாவாந்­துறை சென். நீக்­கி­லஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அச்­செழு வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

சென். அன்­ர­னி­ஸின்
கால்­பந்­துத் தொடர்

இர­ணைப்­பாலை சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அம­ரர் ஜோன் கில்­லறி ஞாப­கார்த்த கிண்­ணத்­துக்­கான கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மை தா­னத்­தில் இடம்­பெற்று வரு கின்­றன. இந்­தத் தொட­ரில் இன்று மாலை 4 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்டத்­தில் முள் ளி­ய­வளை வளர்­மதி விளை ­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து அண்ணா விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது. மாலை 5 மணி மணிக்கு இடம்­பெ­றும் ஆட் டத்­தில் நண்­பர்­கள் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சென். யூட் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

http://uthayandaily.com/story/9445.html

Link to comment
Share on other sites

வடக்கு அணி சம்பியனானது

வடக்கு அணி சம்பியனானது
  •  

தேசி­ய­மட்ட சைக்­கிள் ஓட்­டத்­தில் வட­மா­காண பெண்­கள் அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­துள்­ளது.

மகி­யங்­க­னை­யில் நேற்­று­முன்­தி­னம் இந்­தப்­போட்டி நடை­பெற்­றது. இதில் வட­மா­கா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த முள்­ளி­ய­வ­ளை­யைச் சேர்ந்த ராதிகா 5ஆம் இடத்­தை­யும், வவு­னி­யா­வைச் சேர்ந்த தர்­சிகா ஆறா­மி­டத்­தை­யும், உடை­யார்­கட்­டை­ச் சேர்ந்த கேமா ஏழா­மி­டத்­தை­யும்,
யாழ்ப்­பாண மாவட்­டத்­தைச் சேர்ந்த பிர­சாந்தி ஒன்­ப­தா­மி­டத்­தை­யும் பெற்­ற­னர்.

தனி­ந­பர் பெறு­பே­று­க­ளின் அடிப்­ப­டை­யில்
வடக்­கின் சிறந்த பெறு­பேறு 5ஆவது இட­மாக இருந்த போதி­லும், விதிப்­படி முதல்
10 இடங்­க­ளுக்­குள் 4 வீராங்­க­னை­கள் நிர்­ண­யிக்­கப்­பட்ட தூரத்தை வெற்­றி­க­ர­மாக நிறை­வு­செய்த கார­ணத்­தால் வடக்கு சம்­பி­ய­னா­னது.

http://uthayandaily.com/story/9455.html

Link to comment
Share on other sites

ஆண்களில் யாழ். மத்தி; பெண்களில் யாழ். பல்கலைக்கழகம் சம்பியனாகின
 


யாழ். மாவட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டியில், ஆண்களில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும், பெண்களில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் சம்பியனாகின.  

மாவட்ட மட்ட கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகள், கடந்த மாதம் 26, 27ஆம் திகதிகளில், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றன.   

இதில், ஆண்கள் பிரிவில், 107 புள்ளிகளைப் பெற்று, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது. 76 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும், 41 புள்ளிகளைப் பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி மூன்றாமிடத்தையும், 39 புள்ளிகளைப் பெற்ற பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி நான்காமிடத்தையும் பெற்றன. 38 புள்ளிகளைப் பெற்ற சென்.ஜோன்ஸ் கல்லூரி ஐந்தாமிடத்தையும், 26 புள்ளிகளைப் பெற்ற மகாஜனாக் கல்லூரி ஆறாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.   

பெண்கள் பிரிவில், 57 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முதலிடத்தையும், 43 புள்ளிகளைப் பெற்ற மகாஜனாக் கல்லூரி இரண்டாமிடத்தையும், 32 புள்ளிகளைப் பெற்ற உடுவில் மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தையும் பெற்றன. 30 புள்ளிகளைப் பெற்ற யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி அணி நான்காமிடத்தையும்  25 புள்ளிகளைப் பெற்ற ஸ்கந்தவரோதயக் கல்லூரி ஐந்தாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.   

 
 
 
அரையிறுதிப் போட்டியில் இந்து இளைஞர்
 

 image_61bf0c14fb.jpg

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு மூன்று தொடரில், கிளிநொச்சி இந்து இளைஞர் அணி, கிளிநொச்சி நியூஸ்ரார் அணியை வென்றதன் மூலம், அரையிறுதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.  

இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்து இளைஞர் அணி, 46 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 250 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில், டினேஸ் 45, சஞ்சை 31, கீர்த்தன் 28 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், தினேஸ், சுதன் ஆகியோர் தலா 3, எட்வின், சாபிதன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.  

பதிலுக்குத் துடுப்பாடிய நியூ ஸ்ரார் அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து, 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, 115 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில், எட்வின் 49, ரேகன் 30 ஓட்டங்களைப் பெற்றனர்.பந்துவீச்சில், மயூரன் 4, தர்சன் 2, றொஸ்கோ, அகிலன், பார்த்தீபன் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர்.   

இலங்கை கிரிக்கெட் சபையின் பிரிவு 3 தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, இந்து இளைஞர், யுனைட்டட், ப்ரிஸ், புதியபாரதி ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.  

 
 
 
 
கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருக்கு செல்வம் எம்.பி வாழ்த்து
-

image_5e67960fa7.jpg

இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத்தின் உபதலைவராக, மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் (ஜெறாட்) தெரிவு செய்யப்பட்டுள்ளமையின் மூலம், தமிழ்த் தலைமைத்துவத்துவத்துக்கு, மீண்டும் ஓர் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.   

இவ்விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,  
“இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் 2017ஆம் ஆண்டு தொடக்கம் 2021ஆம் ஆண்டு வரையான புதிய நிர்வாகத்துக்கான தெரிவுக் கூட்டமானது, அகில உலக, ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனங்களின் பிரதிநிதிகள் முன்னிலையில், இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் ஒன்று கூடல் மண்டபத்தில், கடந்த சனிக்கிழமை (01) நடைபெற்றுள்ளதாக அறிகிறேன்.  

“இத்தேர்தலில், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட லீக்கின் தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன், உப தலைவர் பதவிக்கு போட்டியிட்டு இலங்கை முழுவதுமாக பலமாக இருந்த எதிரணியாகிய றஞ்சித் றொட்றிகோ அணியைத் தோற்கடித்து உப தலைவராகத் தெரிவாகி, மன்னார் மாவட்டத்துக்கும் வட மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளளார்.  

“வடக்கு, கிழக்கில் உள்ள 17 லீக்குகளும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டுள்ளதன் காரணத்தினால், தமிழராக ஒருவர், வட மாகாணத்தில் இருந்து, அதுவும் மன்னார் மாவட்டத்தில் இருந்து இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

“குறித்த தெரிவுக்காக, ஆதரவு வழங்கிய வடக்கு, கிழக்கு உள்ளிட்ட லீக் பிரதிநிதிகளுக்கு, எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவராக, வடக்கில் உள்ள தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை பாரிய அதிர்ஷ்டமாகவே நான் கருதுவதோடு, தமிழ் தலைமைத்துவத்துத்துக்கு மீண்டும் ஓர் அங்கிகாரம் கிடைத்துள்ளதாக நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.    

 
 
 
சம்பியனாகியது அராலி களுவாத்துறை வி.க
 

- கே கண்ணன்

image_6d18101f7a.jpg

image_86d95a47d9.jpgimage_b4f41ce808.jpgimage_09c042efa2.jpg

திக்கம் மத்திய சனசமூக நிலையம், தமது வைர விழாவினை முன்னிட்டு நடாத்திய, யாழ். மாவட்ட கழகங்களுக்கு இடையிலான பெண்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில், அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி சம்பியனாகியது.   

குறித்த தொடரின் இறுதிப் போட்டி, திக்கம் இளைஞர் விளையாட்டுக் கழக மைதானத்தில், நேற்று (30) நடைபெற்றது.   

இறுதிப் போட்டியில், யாழ். வின்ஸ்ரார் அணியை எதிர்த்து, அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி மோதியது.   

போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய அராலி களுவாத்துறை விளையாட்டுக் கழக அணி, 28-21 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனாகியது.   

இறுதிப் போட்டியின் நாயகியாக, அராலி களுவாத்துறை அணியை சேர்ந்த பாலசுமதி தெரிவாகியதோடு, தொடரின் நாயகியாக, அமுதினி தெரிவாகினார்.   

இத்தொடரில் மூன்றாமிடத்தை, அராலி சரஸ்வதி மகா வித்தியாலய அணி பெற்றது. 

http://www.tamilmirror.lk

Link to comment
Share on other sites

மகாஜனாவின் ஹெரீனா வென்றார் தங்கம்

மகாஜனாவின் ஹெரீனா வென்றார் தங்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடையி­லான தட­க­ளத் தொட­ரில் 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த சி.ஹெரீனா தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மா­கி­யது. முத­லாம் நாள் போட்­டி­க­ளில் ஒன்­றாக 18 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­தல் நடை­பெற்­றது.

தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த சி.ஹெரீனா 1.53 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார். கிளி­நொச்சி இரா­ம­நா­த­பு­ரம் கிழக்கு அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த பி.பவித்ரா 1.53 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.நிசாந்­தினி 1.35 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

http://uthayandaily.com/story/9901.html

 

விக்­ரோ­றியா வென்­றது தங்­கம்

 
விக்­ரோ­றியா வென்­றது தங்­கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் விக்­ரோ­றியா கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.குக­சாந்­தன் வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

20 வய­துக்­குட்­பட்ட ஆண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் விக்­ரோ­றியா கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம்
செய்த எம்.குக­சாந்­தன் 6.71 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச்
சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரியைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த பி.கஜ­லக்ஸ்­மன் 6.62 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் எஸ்.எக்­னோ­ராஜ் 6.59 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

 

 

நயினாதீவு சிறிகணேசா வரலாற்றின் முதல் தங்கப்பதக்கம் நேற்றுப் பதிவு

போதிய வாய்ப்பு இல்லை என்று சாதனை மங்கை சுட்டிக்காட்டல்

 
 
நயினாதீவு சிறிகணேசா வரலாற்றின்  முதல் தங்கப்பதக்கம் நேற்றுப் பதிவு
 

 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வயது பெண்கள் பிரிவு உயரம் பாய்தலில் நயி­னா­தீவு சிறி­ க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­துவம் செய்த எஸ்.துயா­ளினி தங்­கப் பதக்­கத்­தை­யும் வர்­ணச் சான்­றி­த­ழை­யும் கைப்­பற்­றி­னார்.

இந்­தப் பாட­சா­லை­யில் வர­லாற்­றில் அதற்­குக் கிடைத்த முத­லா­வது தங்­கப்­ப­தக்­கம் இதுவே.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மா­கி­யது.

இந்­தத் தொட­ரின் முதல் நாள் நிகழ்­வி­லேயே நயி­னா­தீவு சிறி­க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தின் வர­லாற்று அடைவு பதி­வா­னது.

இது தொடர்­பாக எஸ். துயா­ளினி கருத்­துத் தெரி­விக்­கை­யில், ‘‘எனது குடும்­பம் வறு­மைக் கோட்டுக்குக் கீழுள்ள குடும்­ப­மா­கும்.

எனது அப்பா கடற்றொழிலை பிர­தான தொழி­லாக கொண்­டுள்­ளார். இத­னால் பயிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தும் பாத­ணி­கள் எது­வு­மின்­றியே எனது பயிற்­சியை தொடர்ந்­துள்­ளேன்.

இது தவிர உய­ ரம் பாய்­தல் மெத்தை எமது பாட­சா­லை­யில் இல்லை. மாகாண மட்டப் போட்­டி­யில் முதன் முறை­யா­கத்­தான் மெத்­தை­யில் பாய்ந்­துள்­ளேன்.

இது எனக்கு புதிய அனு­ப­வம் ஆகை­யால் முத­லில் பயத்­தோடு பாய்ந்தேன். பாட­சா­லை­யில் மணற்­கு­வி­ய­லில் பாயும் போது விபத்­துக்­குள்­ளா ­ன­தில் சில வேளை­க­ளில் பயிற்சி தடைப்­பட்­ட­துண்டு.

ஆனால் அதைப் பொருட் படுத்­தா­மல் பயிற்சி எடுத்­த­தால் வெற்­றி­யின் சிக­ரத்தை அடைந்­துள்­ளேன். இது எனக்கு மட்­டற்ற மகிழ்ச்­சி­யைத் தரு­கின்­றது. சாதனை வீராங்­க­னை­யாக மாற்­றிய எமது பாட­சாலை உடற்­கல்வி ஆசி­ரி­ய­ருக்­கும் ஆத­ரவு தந்த அதி­ப­ருக்­கும் இத்­த­ரு­ணத்­தில் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்­ளேன்.

உரி­ய­வர்­கள் கவ­ன­மெ­டுத்து வச­தி­வாய்ப்­புக்­களை பெற்­றுத்­தந்­தால் தேசிய மட்­டத்­தில் சாதனை படைக்க முடி­யும்.

அத்­தோடு எனது இலட்­சி­யம் சிறந்த வீராங்­க­னை ­யாக வரு­வது. இதற்­காக இப்­போ­தி­ருந்தே என்­னைத் தயார்­ப­டுத்தி வரு­கின்­றேன். என்­னைப் போல் பல வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை ­கள் எமது பிர­தே­சத்­தில் இருக்­கின்­றார்­கள்.

அவர்­க­ளுக்கு போதிய வசதி வாய்ப்­பு­கள் வழங்­கி­னால் தீவக கல்வி வலய மாண­வர்­க­ளும் தட­க­ளத்­தில் சாதிப்­பார்­கள் என்­பது உறுதி’’ என்­றார்.

இந்­தப் போட்­டி­யில் நானாட்­டான் மகா வித்­தி­யா­லய மாணவி ருக்­சா­யினி 1.14 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப் பத்­கத்தை வென்­றார்.

தட்­டு­வன் கொட்டி அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சாலை மாணவி பிர­பா­ளினி 1.11 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தன­தாக்­கி­னார்.

 

 

நீளம்பாய்தலில் சென். ஜோன்ஸ் தங்கத்தை தனதாக்கியது

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 18 வயது ஆண்­க­ளுக்­கான நீளம் பாய்­த­லில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரிக்கு தங்­கப் பதக்­கம் கிடைத் தது.

யாழ்ப்­பா­ணம் துரையப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மான இந்­தத் தொடர் எதிர்­வ­ரும் 10ஆம் திகதி திங்­கட்­கி­ழமை வரை­யும் நடை­பெ­ற­வுள்­ளது.

நேற்று நடை­பெற்ற 18 வயது ஆண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த சி.தனுஜன் 6.58 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

மன்­னார் கற்­க­டந்­த­கு­ளம் அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த வி.புனி­த­ராஜ் 6.43 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த கே.டிலக்­சன் 6.42 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

சாதித்துக் காட்டியது நானாட்டான் ம.வித்தியாலயம்

 
 
சாதித்துக் காட்டியது நானாட்டான் ம.வித்தியாலயம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வயது பெண்கள் பிரிவு குண்­டெ­றி­த­லில் மன்­னார் நானாட்­டான் மகா வித்­தி­யா­ல­யத்­துக்குத் தங்­கப் பதக்­கம்
கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மான
இந்­தப் போட்­டி­கள் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை வரைக்­கும் நடை­பெ­ற­வுள்­ளன.

மன்­னார் நானாட்­டன் மகா வித்­தி­யா­லத்­தைச் சேர்ந்த எம்.மனுஜா 7.96 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.தர­ணியா 7.78 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த ப.அஜித்தா 7.58 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தம­தாக்­கி­னர்.

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

சுண்டுக்குழிக்கு தங்கப்பதக்கம்சுண்டுக்குழிக்கு தங்கப்பதக்கம்

 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் இடம்­பெற்று வரு­கி­றது. நேற்று நடை­பெற்ற 20 வயது பெண்­கள் பிரிவு 4 வீரா­ங்கனை ­கள் பங்­கு­பற்­றும் 100 மீற்­றர் அஞ் சல் ஓட்­டத்­தில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி அணிக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

சுண்­டுக்­குழி அணி 57.10 செக்­க­னில் ஒடி முடித்து தங்­கப்­ப­தக்­கத்தையும், வவு­னியா சைவ­பி­ர­காச மக­ளிர் கல்­லூரி அணி 57.09 செக்­க­னில் ஒடி முடித்து வெள்­ளிப் பதக்கத்தையும், உடுப்­பிட்டி மக­ளிர் கல்­லூரி அணி 58.90 செக்­க­னில் ஒடி முடித்து வெண்­க­லப் பதக்­கத்தையும் பெற்­ற­னர்.

தங்கம் வென்றார் எ.சிந்துஜா

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளத் தொடரில் தொண்டமானாறு வீரகத்தி மகாவித்தியாலய மாணவி எ. சிந்துஜா 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கத்தை வென்றார்.

12 வயது பெண்களுக்கான பிரிவு 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ள இவர் 14.8 செக்கன்களில் ஓடி முடித்தார்.

பாடசாலை வரலாற்றில் தங்கம் வென்றமை இதுவே முதல் தடவையாகும்.

உயரம்பாய்தலில் மடுக்கரை அ.த.க.

 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 14 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் மன்­னார் மடுக்­கரை அ.த.க. பாட­சா­லை­யைச் சேர்ந்த என்.கோகு­லன் தங்­கப் பதக்­கம் வென்­றார்.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றது. 14 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் மன்­னார் மடுக்­கரை அ.த.க. பாட­சா­லை­யைச் சேர்ந்த என்.கோகு­லன் 1.56 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து தங்­கப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

சாவ­கச்­சேரி டிறி­பேக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஆர்.கிசான் 1.52 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வெள் ளிப் பதக்­கத்­தை­யும் கிளி­நொச்சி மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எஸ்.அபி­மன்யு 1.50 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தம­தாக்­கி ­னர்.

5,000 மீற்றர் ஓட்டம்; கற்சிலை மடுவுக்கு தங்கப்பதக்கம்

 
5,000 மீற்றர் ஓட்டம்;  கற்சிலை மடுவுக்கு தங்கப்பதக்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற பெண்­கள் பிரிவு 5ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் கற்­சி­லை­மடு அர­சி­னர் தமிழ்­க­ல­வன் பாட­சா­லைக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. பெண்­க­ளுக்கான 5 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் கற்­சி­லை­மடு அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைச் சேர்ந்த எஸ்.விது­சனா 21 நிமி­டங்­கள் 31 செக்­கன்­கள் 4 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து தங்­கப்­ப­தக்­கத்தைச் சுவீ­க­ரித்­தார்.

உடை­யார் கட்டு மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த சுடர்­மதி 22 நிமி­டங்­கள் 24 செக்­கன்­கள் 40 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பி.லக்­சனா 22 நிமி­டங்­கள் 32 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

ஆண்கள் 5,000 மீற்றரில் வவு. தமிழ் மத்தி தங்கம்

ஆண்கள் 5,000 மீற்றரில் வவு. தமிழ் மத்தி தங்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற ஆண்­கள் பிரிவு 5ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­லய அணி தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­யது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்டி நடை­பெற்­றது. வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எஸ்.கிந்­து­சன் 16 நிமி­டங்­கள் 41 செக்­கன்­கள் 30 மில்­லி­செக்­க­னில் ஒடி­மு­டித்து தங்­கப் பதக்­கத்தைச் சுவீ­க­ரித்­தார்.

அவ­ருக்கு வர்ண விரு­தும் கிடைத்­தது. ஒட்­டி­சுட்­டான் மகா வித்­தி­யா­ ல­யத்­தைச் சேர்ந்த பி.ஐனந்­த­னன் 17 நிமி­டங்கள் 15 செக்­கன்­கள் 40 மில்­லி­செக்­கன் க­ளில் ஒடி­மு­டித்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எம்.அனோ­ஐன், 17 நிமி­டங்­கள் 19 செக்­கன்­கள் 80 மில்­லி­செக்­க­னில் ஒடி­மு­டித்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு

 
தீவக கல்வி வலயம் தடகளத்தில் சாதிப்பு
 

வட­மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் முன்­னேற்­றம் காண்­கி­றது தீவக கல்வி வலய அணி.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­ க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கி­றது.

இதில் தீவ­க கல்வி வல­யம் நேற்­றும் நேற்­று­முன்­தி­ன­மும் நடை­பெற்ற தட­க­ளத்­தில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் நயி­னா­தீவு சிறி­க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.துயா­ளினி தங்­கப் பதக்­கத்­தை­யும் நேற்று நடை­பெற்ற 18 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் வேலணை மத்­திய கல்­லூ­ரியை பிர­தி­நி­தித் து­வம் செய்த பி.சுபீ­ஜன் தங்­கப் பதக்­கத்­தை­யும், நெடுந்­தீவு மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.திருட்­சிகா 800 மீற்­றர் மற்­றும் 200 மீற்­றர் என்­ப­வற்­றில் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், 12 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு நீளம் பாய்­த­லில் நயி­னா­தீவு சிறி­க­ணேசா கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எம்.முப்­லிகா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

கடந்த ஆண்டு நடை­பெற்ற தட­க­ளத்­தில் தீவ­கம் கல்வி வல­யம் இரு பதக்­கங்­களை மாத்­தி­ரம் கைப்­பற்­றி­யது. கடந்த வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் நடப்பு வரு­டத்­தில் அந்த அணி மிகச் சிறந்த முன்னேற்­றத்­தைக் கண்­டுள்­ளது.

மகாஜனக் கல்லூரியின் மிரட்டல் தொடருமா?

 
மகாஜனக் கல்லூரியின் மிரட்டல் தொடருமா?
 

பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான மாகாண மட்­டத் தட­க­ளத் தொட­ரில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு 4 வீராங்­க­னை­கள் பங்­கு­பற்­றும் 50 மீற்­றர் அஞ்­ச­லோட்­டத்­தில் மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் சிறப்­பான பெறு­பேறு இன்­றும் தொட­ருமா என் பது தொடர்­பில் பெரும் எதிர்­பார்ப்பு ஏற்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்ற வரு­கின்­றன. நேற்று நடை­பெற்ற 12 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான 4 வீராங்­க­னை­கள் பங்­கு­பற்­றும் 50 மீற்­றர் தெரி­வுப் போட்­டி­யில் சிறப்­பான அஞ் சல் கோல் மாற்­றத்­தால் ஏனைய வீராங்­க­னை­களை விட சுமார் 15 மீற்­றர் முன்­னி­லை­யில் தமது பெறு­பேற்­றைக் காட்­டி­யி­ருந்­த­னர்.

பார்­வை­யா­ளர்­கள் அனை­வ­ரை­யும் கவர்ந்த இந்த ஓட்­டத்­தின் இறு­திப் போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ள­தால் அனை­வ­ரது எதிர்­பார்ப்­பும் தெல்­லிப்­பளை மகா­ஜ­னக் கல்­லூரி அணி மீது விழுந்­துள்­ளது.

ராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை தங்கம்

 
ராமநாதபுரம் கிழக்கு அ.த.க பாடசாலை தங்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 18 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான நீளம் பாய்­த­லில் கிளி­நொச்சி ராம­நா­த­பு­ரம் கிழக்கு அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­க்குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மான இந்­தத் தொடர் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை வரை நடை­பெ­று­கி­றது.

கிளி­நொச்சி ராம­நா­த­பு­ரம் கிழக்கு அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைச் சேர்ந்த பி.பவித்ரா 5.37 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்ண விரு­து­டன் தங்­கப்­ப­தக்­கத்­தைத் தன­தாக்­கி­னர்.

கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த என்.விது­சனா 5.13 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வெள்­ளிப்­ப­தக்­கத்தை பெற்­ற­து­டன் வர்ண விரு­தி­னை­யும் தன­தாக்­கி­னார்.

உடுப்­பிட்டி மக­ளிர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஏ.அபி­னயா 4.88 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்தை வென்­றார்.

ஈட்டி எறி­தல் போட்டி; சோமஸ்­கந்தா தங்­கம்

ஈட்டி எறி­தல் போட்டி; சோமஸ்­கந்தா தங்­கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 20 வயது பெண் கள் பிரிவு ஈட்டி எறி­த­லில் புத்­தூர் சிறி சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரிக்­குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­ யாட்டு மைதா­னத்­தில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. புத்­துர் சோமஸ்­கந்­தாக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த வை.யாழினி 26.46 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்ண விரு­து­டன் தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

வவு­னியா தர­ணிக்­கு­ளம் கணேஸ் வித்­தி­யா­ல­யத்தை சேர்ந்த எம்.சாருசா 25.82 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்தைச் சுவீ­ க­ரித்­து­டன் வர்ண விரு­தை­யும் வென்­றார்.

கிளி­நொச்சி வட்­டக்­கச்சி மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.நிதுஜா 25.34 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­னர்.

http://uthayandaily.com/story/10070.html

Link to comment
Share on other sites

உயரப் பாய்ந்தது வேலணை மத்தி.

 
உயரப் பாய்ந்தது வேலணை மத்தி.
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 18 வய­துப் பிரிவு ஆண்களுக்கான உய­ரம் பாய்­த­லில் வேலணை மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.சுபீ­ஜன் வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கம் வென்­றார்.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் தொடர் நடை­பெற்று வரு­கி­றது. நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற 18 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் வேலணை மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.சுபீ­ஜன் 1.84 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச்­சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

சாவ­கச்­சேரி டிறி­பேக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ஏ.திலீப்­கு­ம­ரன் 1.82 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் மன்­னார் நானாட்­டான் மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எஸ்.அபி­மன்யு 1.78 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வெண்­க­லப் பதக்­கத்­தைப் பெற்­றுக்­கொண்­டார்.

கொக்குவில் இந்துவுக்கு தங்கப்பதக்கம்

 
 
கொக்குவில் இந்துவுக்கு தங்கப்பதக்கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான நீளம்­பாய்­த­லில் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பி.பிர­ண­வன் வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கம் வென்­றார்.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரையப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கிறது. 12 வய­துப் பிரி­வு ஆண்­க­ளுக்­கான நீளம் பாய்­த­லில் பி.பிர­ண­வன் 4.45 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

முல்­லைத்­தீவு கற்­சி­லை­மடு அ.த.க. பாட­சா­லை­யைச் சேர்ந்த ஜே.கலைக்­கு­ம­ரன் 4.28 மீற்­றர் தூரத்துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் மன்­னார் கட்­டை­ய­டம்­பன் றோ.க.த.க. பாட­சாலையைச் சேர்ந்த எஸ்.ரஜி­தன் 4.26 மீற்­றர் தூரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெண்­க­லப் பதக்­கத்­தையு।ம் தமதாக்­கி­னார்.

விபுலானந்தாவுக்கு கிடைத்தது தங்கம்

 
 
விபுலானந்தாவுக்கு கிடைத்தது தங்கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்று நடை­பெற்ற 18 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான குண்டு எறி­த­லில் வவு­னியா விபுலா­னந் தாக் கல்­லூ­ரிக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன. விபு­லா­னந்­தாக் கல்­லூ­ரி­யைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கே.கிங்ஸ்லி றெஜி­னோல்ட் 13.05 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைப் பெற்­றார்.

தும்­பளை சிவப்­பி­ர­காச வித்­தி­யா­ ல­யத்­தைச் சேர்ந்த வி.சானு­ஜன் 12.55 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த பா.ஆனந் 12.19 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.

http://uthayandaily.com/

Link to comment
Share on other sites

குண்டெறிதலில் தங்கம் வேம்படிக்கு கிடைத்தது

 
குண்டெறிதலில் தங்கம் வேம்படிக்கு கிடைத்தது
  •  

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற 16 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான குண்­டெ­றி­த­லில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லைக்கு தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெ­று­கின்­றன. வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த கே.பைரவி 10.15 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வர்­ண­வி­ரு­து­டன் தங்­கப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் மக­ளிர் வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த ஜே.சுக­னியா 8.30 மீற்­றர் தூரத்துக்கு எறிந்து வெள் ளிப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார். சில்­லாலை ஆர்.சியைச் சேர்ந்த ரி.பவிதா 8.12 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண் க­லப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார்.

http://uthayandaily.com/story/10521.html

Link to comment
Share on other sites

பெண்கள் பிரிவில் மகாஜனா ஆதிக்கம்

 
 
பெண்கள் பிரிவில் மகாஜனா ஆதிக்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில், பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி முத­லி­டத்­தில் நீடித்து வரு­கி­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. நேற்­றைய நான்­காம் நாள் முடி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி 94 புள்­ளி­க­ளைப் பெற்று முத­லா­மி­டத்­தை­யும், அரு­ணோ­த­யக் கல்­லூரி மற்­றும் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரி­ என்பன 63 புள்­ளி­களைப் பெற்று இரண்­டா­மி­டத்­தை­யும், மன்­னார் கற்­க­டந்­த­கு­ளம் றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­சாலை 62 புள்­ளி­களை பெற்று நான்­கா­மி­டத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மற்­றும் யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­ என்பன 41 புள்­ளி­களைப் பெற்று ஐந்­தா­மி­டத்­தை­யும் பெற்­றுள்­ளன.

 

 

 

சிவப்பிரகாச வித்­தி­யா­ல­யத்­துக்­குத் தங்கம்

 
சிவப்பிரகாச வித்­தி­யா­ல­யத்­துக்­குத்  தங்கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வயது பெண்­கள் பிரிவு உய­ரம் பாய்­த­லில் தும்­பளை சிவப் பி­ர­காச வித்­தி­யா­ல­யத்­துக்­குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் கடந்த வியா ­ழக்­கி­ழமை முதல் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதில் நேற்று இடம்­பெற்ற 20 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான உய­ரம் பாய்­த­லில் தும்­பளை சிவப்­பி­ர­காச வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த க.நிரோ­சினி 1.45 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச்­சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கத்­தைப் பெற்­றுக் கொண்­டார்.

யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த அ.நர்­மதா 1.43 மீற்­றர் உய­ரத்­துக்­குப் பாய்ந்து வர்­ணச்­சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­ப் பெற்றார். பளை மத்­திய கல்­லூ­ரி­க்கு வெண்­க­லப் பதக்­கம் கிடைத்தது.

 

 

உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் அஞ்சல் ஓட்டத்தில் சாதித்தது

 
 
உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் அஞ்சல் ஓட்டத்தில் சாதித்தது
 

வட­ மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­ யி­லான விளை­யாட்டு விழா­வில் 14 வய­துப்­பி­ரிவு ஆண்­க­ளுக்­கான 4 வீரர்­கள் பங்­கு­பற்­றும் 100 மீற்­றர் அஞ்­சல் ஓட்­டத்­தில் சாதித்­துக் காட்­டி­யது உடுப்­பிட்டி அமெ­ரிக்­கன் மிசன் கல்­லூரி.

யாழ்ப்­ப­ாணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் போட்­டி­யில் 54.70 செக்­கன்­க­ளில் ஓடிய உடுப்­பிட்டி அமெ­ரிக்­கன் மிசன் கல்­லூரி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைப் பெற்­றுக் கொண்­டது. 55.10 செக்­கன்­க­ளில் ஓடி முடித்த யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் 55.30 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து ஹாட்லிக் கல்­லூரி அணி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றின.

வசதிகள் தந்தால் தேசியமட்டத்தில் பதக்கம் வரும்;

கலைமகள் வித்தியாலயத்தின் கிரிசாளினி சபதம்

 
வசதிகள் தந்தால் தேசியமட்டத்தில் பதக்கம் வரும்;
 

 

வட­ மா­காண. பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொட­ரில் 16 வயது பெண்­கள் பிரி­வில் பண்­டத்­த­ரிப்பு பிரன்­பற்று கலை­ம­கள் வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கிரி­சா­ளினி 800 மீற்­றர், 300 மீற்­றர் தடை தாண் டல் இரண்­டி­லும் தங்­கப் பதக்­கத்­தை­யும், 400 மீற்­றர் ஓட்­டத்­தில் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னார்.

கலை­ம­கள் வித்­தி­யா­ல­யத்­தின் வர­ லாற்­றில் கிடைத்த முதல் தங்­கப் பதக்­கம் கிரி­சா­ளி­னி­யின் மூலம் கிடைத்த பதக்­கங்­களே. இதை­ய­டுத்து உத­ய­னுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி­யி­லேயே, கிரி­ சா­ளினி, தேசி­யத்­தில் பங்­கு­பற்­றக் கூடிய வசதி வாய்ப்­புக்­களை வட­மா­காண வீரர் மற்­றும் வீராங்­க­னை­ க­ளுக்கு ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும் என்­ப­தைச் சுட்­டிக்­காட்­டி­ னார்.

‘‘எனது அப்பா சார­தி­யாக கட­மை­யற்றி வரு­கி­றார். எனது பாட­சா­லை­யில் பயிற் சிக்­கு­ரிய வச­தி­கள் ஏதும் இல்லை, எனது பயிற்­று­னர் சதீஸ்­கு­மார் ஆசி­ரி­யர் எனது பயிற்­சிக்­கான செல­வு­களை வழங்­கு­வ­து­டன் பயிற்­சி­க­ளை­யும் வழங்கி வரு­கின்­றார். எனக் கான வச­தி­கள் செய்து தரப்­ப­டு­மா­யின் தேசிய மட்ட போட்­டி­யி­லும் நான் தங்­கப்­ப­தக்­கம் பெறு­வேன்’’ – என அவர் மேலும் தெரி­வித்­தார்.

20170709_165918.jpg

 

 

யாழ். மத்திய கல்லூரி முதலிடம்

 
யாழ். மத்திய கல்லூரி முதலிடம்
  •  

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான தட களத் தொடரில் பாடசாலைகளின் பெறுபேறுகள் மட்டில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நேற்றைய நான்காம் நாள் நிறைவில் முதலிடத்தில் இருந்தது.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 102 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தையும், பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி 101 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், தெல்லிப் பழை மகாஜனக் கல்லூரி 99 புள்ளி களைப் பெற்று மூன்றாமிடத்தை யும், மன்னார் சென். ஆன்ஸ் மத் திய மகா வித்தியாலயம் 82 புள்ளி களைப் பெற்று நான்காமிடத்தை யும், மன்னார் பற்றிமா முஸ்லிம் மகா வித்தியாலயம் 79 புள்ளி களைப் பெற்று ஐந்தாமிடத்தையும், கொக்குவில் இந்துக் கல்லூரி 53 புள்ளிகளைப் பெற்று ஆறாமி டத்தையும், நெல்லியடி மத்திய கல்லூரி 48 புள்ளிகளை பெற்று ஏழாமிடத்தையும், மன்னார் அரிப்பு றோமன் கத்தோலிக்க தமிழ் கல வன் பாடசாலை 43 புள்ளிகளை பெற்று எட்டாமிடத்தையும், சாவகச் சேரி இந்துக் கல்லூரி 41 புள்ளி களை பெற்று ஒன்பதாமிடத்தை யும், யாழ்ப்பாணம் சென். பற் றிக்ஸ் கல்லூரி மற்றும் சென். ஜோன்ஸ் கல்லூரிகள் 40 புள்ளி களை பெற்று பத்தாமிடத்தையும் பெற்றன.

தடகளத் தொடர்; யாழ். முன்னிலை

 
தடகளத் தொடர்; யாழ். முன்னிலை
  •  

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் நேற்­றைய நான்­காம் நிறை­வில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் முன்­னி­லை­யில் உள்­ளது.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வியா­ழக் கிழமை ஆரம்­ப­மாகி தொடர்ந்து நடை­பெற்று வரு­கி­றது. இதன் இறு­தி­ நாள் இன்­றா­கும்.

இது­வரை பெற்ற ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பாணக் கல்வி வல­யம் முத­லி­டத்­தில் உள்­ளது. இதன்­படி அந்த வல­யம் 517 புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது.

இம்­முறை, இது­வரை கால­ மும் இல்­லாத அள­வுக்கு மன்­னார் ஆதிக்­கம் செலுத்­து­கி­றது. இதன்­படி அந்த வல­யம் 489 புள்­ளி­களை இது­வரை பெற்று இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது.

வலி­கா­மம் கல்வி வல­யம் 467 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­மி­டத்­தை­யும், வட­ம­ராட்சி கல்வி வல­யம் 306 புள்­ளி­க­ளைப் பெற்று நான்­கா­மி­டத்­தை­யும், வவு­னியா தெற்கு கல்வி வல­யம் 192 புள்­ளி­களை பெற்று ஐந்­தா­மி­டத்­தை­யும் பெற்­றுள்­ளன.

கிளி­நொச்சி கல்வி வல­யம் 163 புள்­ளி­களை பெற்று ஆறா­மி­டத்­தை­யும், முல்­லைத்­தீவு கல்வி வல­யம் 144 புள்­ளி­களை பெற்று ஏழா­மி­டத்­தை­யும், தென்­ம­ராட்சி கல்வி வல­யம் 130 புள்­ளி­களை பெற்று எட்­டா­மி­டத்­தை­யும், மடு கல்வி வல­யம் 112 புள்­ளி­களை பெற்று ஒன்­ப­தா­மி­டத்­தை­யும், துணுக்­காய் கல்வி வல­யம் 99 புள்­ளி­களை பெற்று பத்­தா­மி­டத்­தை­யும், தீவ­கம் கல்வி வல­யம் 69 புள்­ளி­களை பெற்று பதி­னோரா­மி­டத்­தை­யும், 20 புள்­ளி­களை பெற்று வவு­னியா வடக்கு கல்வி வல­யம் பன்­னிெரண்­டா­மி­டத்­தை­யும் பெற்­றன.

 

 

 

 

பிரியங்காவின் மிரட்டல் தொடர்ந்து செல்கிறது

 
பிரியங்காவின் மிரட்டல் தொடர்ந்து செல்கிறது
  •  

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரி­வில் மன்­னார் தட்­சணா மரு­த­மடு மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த பா.பிரி­யங்கா 400 மீற்­றர் சட்­ட­வேலி, 800 மீற்றர், 1500 மீற்­றர் போன்­ற­வற்­றில் தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார்.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நடை­பெற்று வரு­கின்­றது.

மன்­னார் தட்­சணா மரு­த­மடு மகா வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த பா.பிரி­யங்கா 400 மீற்­றர் சட்­ட­வேலி ஓட்­டத்­தில் 1:13:6 செக்­கன்­க­ளில் ஓடி­யும், 800 மீற்­றர் ஓட்­டத்­தில் 2 நிமி­டம் 37 செக்­கன்­க­ளில் ஓடி­யும், 1500 மீற்­றர் ஓட்­டத்­தி­லும் தங்­கப் பதக்­கத்­தை­க் கைப்­பற்­றி­யுள்­ளார்.

மூன்று தங்­கப்­ப­தக்­கங்­க­ளைக் கைப்­பற்­றி­யமை தொடர்­பில் உத­ய­னுக்கு வழங்­கிய பிரத்­தி­யெக செவ்­வி­யில், ‘‘எனது பாட­சாலை தேசிய மட்­டத்­தில் எது­வித பதக் கத்­தை­யும் பதிவு செய்­ய­வில்லை. அதற்­காக போராடி வரு­கின்­றேன்.

எனது இலட்­சி­யம் பிர­தேச செய­லா­ள­ராக வரு­வது. கல்­விக்கு இடை­யூறு இல்­லா­மல் எனது விளையாட்டைத் தொடர்ந்து வரு­கின்­றேன். எனது அண்ணா எனக்­கான உத­வி­க­ளைச் செய்து வரு­கின்­றார்.

கடந்த வரு­டம் நடை­பெற்ற வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் மேற்­கு­றித்த நிகழ்ச்­சி­ யில் புதிய சாத­னையை பதிவு செய்­துள்­ளேன். இந்த ஆண்டு வய­துப் பிரிவு மாற்­றத்­தால் சாதனை படைக்­க இய­லா­மல் போனது. எனி­னும் தங்­கப் பதக்­கத்தை சுவீ­க­ரித்­துள்­ளேன்.

எமது கல்­லூ­ரி­யில் தடை தாண்டல் உப­க­ர­ணங்­கள் இல்லை. பிர­தேச செய­ல­கத்­தி­லி­ருந்தே உதவி பெற்று பயிற்சி எடுத்து வரு­கின்­றேன். ஒவ்­வொரு பாட­சா­லைக்­கும் தகுந்த உப­க­ர­ணங்­கள் வழங்­கி­னால் அவர்­க­ளும் சாத­னை­யா­ளர்­க­ளாக மாறு­வார்­கள்.

என்னை சாதனை வீராங்­க­னை­யாக மாற்­றிய எமது பாட­சா­லை­யின் உடற்­கல்வி ஆசி­ரி­யர் ஜெ.எம்.அருள்­ராஜ் மற்­றும் அதி­பர் பாட­சாலை சமூ­கம் ஆகி யோருக்கு நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்’’ எனத் தெரி­வித்­தார்.

பிரி­யங்கா கடந்த வரு­டம் நடை­பெற்ற தட­க­ளத் தொட­ரில் மூன்று போட்­டி­க­ளில் கள­மி­றங்கி மூன்­றி­லும் சாத­னை­யு­டன் தங்­கப்­ப­தக்­கம் கைப்­பற்­றி­யமை குறிப்­பி­டத் தக்­கது.

1-2-1.jpg

 

 

 

வீரகத்திப்பிள்ளை ம.வித்தி தங்கத்தை தனதாக்கியது

 
 
வீரகத்திப்பிள்ளை ம.வித்தி தங்கத்தை தனதாக்கியது
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­க­ளுக்­கான 100 மீற்­றர் ஓட்­டத்­தில் தொண்­டை­மா­னாறு வீர­கத்­திப்­பிள்ளை மகா வித்­தி­யா­ல­யத்­துக்­குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

வீர­கத்­திப்­பிள்ளை மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த அ.சிந்­துஜா 14.8 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தைத் தன­தாக்­கி­னார். வவு­னியா பரக்­கும் வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எம்.ஜய­சுந்­தர 15.10 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், மானிப்­பாய் சென்.

ஆன்ஸ் றோ.க.த.க. பாட­சா­லை­யைச் சேர்ந்த எஸ்.ஜசிப்­பி­ரியா 15.20 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்றித­ழு­டன் வெண் க­லப் பதக்­கத்­தையும் பெற்றனர்.

 

 

எதிர்பார்ப்பை நிறைவேற்றியது மகாஜனாவின் அஞ்சல் அணி

 
 
எதிர்பார்ப்பை நிறைவேற்றியது மகாஜனாவின் அஞ்சல் அணி
  •  

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வய­துக்­குட்­பட்ட பெண்­கள் பிரிவு அஞ்­சல் ஓட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி எதிர்­பார்த்­த­தைப் போன்று மிகப்­பெ­ரும் இடை­வெ­ளி­யில் வெற்­றி­பெற்று தங்­கப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இந்த இறு­திப் போட்டி நடை­பெற்­றது. முன்­ன­தாக நடை­பெற்ற தெரி­வுப் போட்­டி­யில் சிறப்­பான அஞ்­சல் கோல் மாற்­றத்­தால் பார்­வை­யா­ளர்­க­ளின் கவ­னத்தை ஈர்த்த தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி அணி இறு­திப் போட்­டி­யில் 30.90 செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும் பெற்­றது.

மானிப்­பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க. பாட­சாலை அணி 31.80 செக்­கன்­க­ளில் ஓடி வெள்­ளிப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும், மன்­னார் கற்­க­டந்­த­ கு­ளம் றோ.க.த.க. பாட­சாலை அணி 31.80 செக்­கன்­க­ளில் ஓடி வெண்­கலப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும் பெற்­றன.

 

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

100 மீற்றர் ஓட்டத்தில் சதுர்ஜனுக்கு தங்கம்

தசைப்பிடிப்புடன் சாதித்துள்ளார் என்று பயிற்சியாளர் பெருமிதம்

 
 
100 மீற்றர் ஓட்டத்தில் சதுர்ஜனுக்கு தங்கம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 16 வயது ஆண்­கள் பிரிவு 100 மீற்­றர் ஓட்­டத்­தில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் வீரன் சதுர்­ஜன் தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.

அவர் போட்­டிக்கு முன்­னைய நாள் அதா­வது நேற்­று­முன்­தி­னம் இரவு தசைப் பி­டிப்­பால் அவதிப்­பட்­டார் என்ற தக­வல் பயிற்­சி­யா­ள­ரால் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இது தொடர்­பில் சதுர்­ஜ­னின் பயிற்­சி­யா­ளர் மயில்­வா­க­னம் கருத்­துத் தெரி­விக்­கை­யில்: ‘‘நேற்­று­முன் தி­னம் நடை­பெற்ற 200 மீற்­ற­ரில் சதுர்­ஜன் தங்­கம் வென்­றார்.

அத­னைத் தொடர்ந்து நடை­பெற்ற 100 மீற்­றர் தெரிவு மற்­றும் 4 வீரர்­கள் பங்­கு­பற்­றும் 100 மீற்­றர் தெரி­வுப் போட்­டி­க­ளில் பங்­கு­ பற்­றிய பின்­னர் இடுப்­பி­லி­ருந்து முழங்­கால் வரைக்­கும் தசை­பி­டிப்பு ஏற்­பட்­டது.

குறித்த மாண­வனை இரவு மருத்­து­வ­ ம­னைக்கு கொண்டு சென்று இன்று (நேற்று) போட்­டிக்கு ஏற்ற வகை­யில் தயார் செய்­தோம்.

சாதிக்க முடி­யுமா என்ற சந்­தே­கத்­து­ட­னும், கவ­லை­யு­ட­னும் போட்­டி­யில் கலந்து கொண்­டார். அவர் தங்­கப் பதக்­கத்­தைப் பெற்­ற­போது கண்­ணீர் மேலிட்­டது’’ என அவர் மேலும் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/10774.html

கந்­த­ரோடை ஸ்கந்­தாவுக்கு தங்­கப்­ப­தக்­கம்

கந்­த­ரோடை ஸ்கந்­தாவுக்கு தங்­கப்­ப­தக்­கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 14 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான 4 வீராங்­க­னை­கள் பங்­கு­பற்­றும் 100 மீற்­றர் தொடர் ஓட்­டத்­தில் சாதித்­துக் காட்­டி­யது கந்­த­ரோடை ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­ யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்­தப் போட்­டி­யில் 58.40 செக்­கன்­க­ளில் ஓடிய ஸ்கந்­த­வ­ரோ­தயக் கல்­லூரி தங்­கப் பதக்­கத்­தைப் பெற்­றுக் கொண்­டது.

58.90 செக்­கன்­க­ளில் ஓடி முடித்த மன்­னார் கற்­க­டந்­த­கு­ளம் றோ.க.த.க. பாட­சாலை அணி வெள்­ளிப் பதக்­கத்­தை­யும் 58.90 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்த வவு­னியா தர்­ம­பால வித்­தி­யா­ல­ய அணி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றின.

யாழ். வலயம் சம்பியனானது

 
யாழ். வலயம் சம்பியனானது
 

வடமா­கா­ணப் பாட­சா­லை­ க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் கிண்­ணம் வென்­றது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 10ஆவது தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வியா­ழக்­கி­ழமை ஆரம்­பித்து நேற்று வரை நடை­பெற்­றது.

ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் 650 புள்­ளி­க­ளைப் பெற்று யாழ்ப்­பாணக் கல்வி வல­யம் கிண்­ணம் வென்­றது.

மன்­னார் கல்வி வல­யம் 601 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­வது இடத்­தில் உள்­ளது. வலி­கா­மம் கல்வி வல­யம் 545 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­வது இடத்­தில் உள்­ளது.

இந்த மூன்று வல­யங்­க­ளுமே 500 இற்­கும் மேல் புள்­ளி­க­ளைப் பெற்ற வல­யங்­க­ளா­கும். வட­ம­ராட்சி கல்வி வல­யம் 346 புள்­ளி­க­ளு­டன் நான்­கா­வது இடத்­தி­லும், வவு­னியா தெற்கு கல்வி வல­யம் 228 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன.

கிளி­நொச்சி கல்வி வல­யம் 190 புள்­ளி­க­ளு­டன் 6ஆவது இடத்­தி­லும், முல்­லைத்­தீவு கல்வி வல­யம் 188 புள்­ளி­க­ளு­டன் ஏழா­வது இடத்­தி­லும், தென்­ம­ராட்சி கல்வி வல­யம் 157 புள்­ளி­க­ளு­டன் எட்­டா­வது இடத்­தி­லும், மடு கல்வி வல­யம் 130 புள்­ளி­க­ளு­டன் ஒன்­ப­தா­வது இடத்­தி­லும், துணுக்­காய் கல்வி வல­யம் 109 புள்­ளி­க­ளு­டன் பத்­தா­வது இடத்­தி­லும் உள்­ளன. அடுத்த இரு இடங்­க­ளி­லும் முறையே தீவ­கம், வவு­னியா வடக்கு ஆகிய கல்வி வல­யங்­கள் உள்­ளன.

http://uthayandaily.com/story/10782.html

Link to comment
Share on other sites

மகாஜனக் கல்லூரி முதலிடம்

 
மகாஜனக் கல்லூரி முதலிடம்
 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஆண்­கள், பெண்­கள் என இரு­பால் பிரி­வு­க­ளி­லும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி முத­லி­டம் பிடித்­தது.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் நேற்று வரை நடை­பெற்­றது.

ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி 129 புள்­ளி­க­ ளைப் பெற்று முத­லா­மி­டத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 128 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­மி­டத்­தை­யும், பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூரி 117 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­மி­டத்­தை­யும், மன்­னார் சென்.

ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம் 112 புள்­ளி­க­ளைப் பெற்று நான்­கா­மி­டத்­தை­யும், மன்­னார் பற்­றிமா மத்­திய மகா வித்­தி­யா­ல­யம் 91 புள்­ளி­க­ளைப் பெற்று ஐந்­தா­மி­டத்­தை­யும், கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி 70 புள்­ளி­க­ளைப் பெற்று ஆறா­மி­டத்­தை­யும், நெல்­லி­யடி மத்­திய கல்­லூரி 51 புள்­ளி­களை பெற்று ஏழா­மி­டத்­தை­யும், மன்­னார் அரிப்பு றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­சாலை 50 புள்­ளி­க­ளைப் பெற்று எட்­டா­மி­டத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி 48 புள்­ளி­க­ளைப் பெற்று ஒன்­ப­தா­மி­டத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி 44 புள்­ளி­க­ளைப் பெற்று பத்­தா­மி­டத்­தை­யும் பெற்­றன.

பெண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி 110 புள்­ளி­க­ ளைப் பெற்று முத­லா­மி­டத்­தை­யும், சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி 104 புள்­ளி­களை பெற்று இரண்­டா­மி­டத்­தை­யும், அரு­ணோ­த­யாக் கல்­லூரி 65 புள்­ளி­க­ளைப் பெற்று மூன்­றா­மி­டத்­தை­யும், மன்­னார் கற்­க­டந்­த­கு­ளம் றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­சாலை 63 புள்­ளி­களை பெற்று நான்­கா­மி­டத்­தை­யும், புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூரி 54 புள்­ளி­களை பெற்று ஐந்­தா­மி­டத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி 51 புள்­ளி­க­ளைப் பெற்று ஆறா­மி­டத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி 41 புள்­ளி­க­ளைப் பெற்று ஏழா­மி­டத்­தை­யும், மன்­னார் கௌரி அம்­பாள் றோமன் கத்­தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­சாலை 40 புள்­ளி­களை பெற்று எட்­டா­மி­டத்­தை­யும், பிரான்­பற்று கலை­ம­கள் வித்­தி­யா­ல­யம் 37 புள்­ளி­க­ளைப் பெற்று ஒன்­ப­தா­மி­டத்­தை­யும், பளை மத்­திய கல்­லூரி 36 புள்­ளி­க­ளைப் பெற்று பத்­தா­மி­டத்­தை­யும் பெற்­றன.

http://uthayandaily.com/story/10794.html

Link to comment
Share on other sites

6 hours ago, நவீனன் said:

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஆண்­கள், பெண்­கள் என இரு­பால் பிரி­வு­க­ளி­லும் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி முத­லி­டம் பிடித்­தது.

Bilderesultat for hats off

வாழ்த்துக்கள் மகாஜனா 

6 hours ago, நவீனன் said:

ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி 129 புள்­ளி­க­ ளைப் பெற்று முத­லா­மி­டத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 128 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­மி­டத்­தை­யும்

வாழ்த்துக்கள் மகாஜனா + மத்திய கல்லூரி 

கலந்து திறமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

சுண்டுக்குழிக்கு தங்கப்பதக்கம்

 
சுண்டுக்குழிக்கு தங்கப்பதக்கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 18 வய­துப் பிரிவு பெண்­க­ளுக்­கான 100 மீற்­றர் ஓட்­டத்­தில் சுண்­டுக் கு­ழிக் குத் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்­கில் நேற்­று­முன்­தி­னம் இந்­தப் போட்டி நடை­பெற்­றது. 18 வய­துப்­பி­ரிவு பெண்­கள் பிரி­வில் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த மேரி தர்­சிகா 13:70 செக்­கன்­க­ளில் இலக்கை அடைந்து தங்­கப்­ப­தக்­கத்தை வென்­றார்.

கிளி­நொச்சி கிழக்கு அர­சி­னர் தமிழ் கல­வன் பாட­சா­லை­யைச் சேர்ந்த ஜி.பி.பவித்­திரா 13:90 செக்­கன்­க­ளில் ஒடி முடித்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், முருங்­கன் மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த ஜி.எம்.ஜெறோ­மிக்கா 14:40 செக்­கன்­க­ளில் ஓடி­மு­டித்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

http://uthayandaily.com/story/10983.html

சாவகச்சேரி இந்துவுக்கு தங்கம்

 
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்­கி­ட­ல­யி­லான தட­க­ள தொட­ரில் 20 வயது ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் சட்­ட­வேலி ஓட்­டத்­தில் சாவ­கச்­சேரி இந் துக் கல்­லூ­ரிக்கு வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த விது­சன் தங்­கப் பதக்­கத்­தை­யும், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யைச் சேர்ந்த ரி.செந்­துர்­ஜன், வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், மன்­னார் பற்­றிமா மத்­திய மகா வித்­தி­யா­ல­ யத்­தைச் சேர்ந்த ஏ.அபி­னஸ் வெண் க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

வடக்குத் தடகளத்தில் 80 பேருக்கு உபாதை

 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் சுமார் 80 வீர,வீராங்­க­னை­கள் உபா­தைக்கு உள்­ளா­கி­னர் என்று தெரி­ய­வ­ரு­கி­றது.

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யிலா தட­க­ளத் தொடர் யாழ்ப் பாணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் கடந்த வியா­ ழக்­கி­ழமை முதல் நேற்று வரை நடை ­பெற்­றது. சுமார் 80 வீர­ வீ­ராங்­க­னை­கள் உபா­தைக்கு உள்­ளா­கி­னர் என்று யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் இயன் மருத்­து­வர் ரி.சஞ்­சீ­வன் தெரி­வித்­தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கை­யில்: ‘‘வீரர்­கள் பலர் தசை­பி­டிப்பு, மயக்­கம், மூச்­சுத் திண­றல் போன்ற விபத்­திற்கு உள்­ளா­கி­யுள்­ள­னர்.

இதற்குக் கார­ணம் அவர்­கள் பயிற்­சி­யின் போதும் விளை­யாட்­டில் பங்கு பற்­றும் போதும் சரி­யான உஸ்­ணப்­ப­டுத்­தும் முறையைக் கடைப்பிடிக்காமை முக்­கிய கார­ண­மாக அமை­கி­றது. பயிற்­சி­யில் ஈடு ­ப­டும் போது போதிய உடற்­ப­யிற்சி செய்த பின்­னரே போட்­டி­க­ளில் பங்­கு­பற்ற வேண்­டும். அதே­போல் போட்டி நடை­பெ­று­வ­தற்கு முன்­னர் குறிப்­பிட்ட நேரத்­தில் உடற்­ப­யிற்சி செய்­தி­ருக்க வேண்­டும்.

அத்­தோடு போட்­டி­யில் பங்கு பற்­றும் வீரர்­கள் தமது போட்டி தொடர்­பாக முன்­கூட்­டியே பயிற்சி எடுப்­பது சிறந்­தது. அதா­வது நெடுந்­தூர வீரர்­கள் குறிப்­பிட்ட தூரத்தை ஓடி பயிற்சி எடுத்­தி­ருக்க வேண்­டும். இவ்­வா­றான பயிற்­சி­கள் இல்­லா­மல் கள­மி­றங்­கிய வீரர்­கள் மற்­றும் வீராங்­க­னை ­களே உபா­தைக்கு உள்­ளா­கி­யமை அதி­கம்’’ என அவர் மேலும் தெரி­வித்­தார்.

http://uthayandaily.com/story/10797.html

Link to comment
Share on other sites

சிறந்த தடகள வீரராக மன்­னார் எஸ்.கலை­வேந்­தன் குரூஸ்

 
சிறந்த தடகள வீரராக மன்­னார் எஸ்.கலை­வேந்­தன் குரூஸ்
 

வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ ரில் ஆண்­கள் பிரி­வில் சிறந்த தடகள வீர­ராக மன்­னார் சென். ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கலை­வேந்­தன் குரூஸ் தெரிவு செய்­யப்­பட்­டார்.

 

 

சிறந்த தடகள வீராங்கனையாக கிளி. மாணவி பி.பவித்ரா

 
 
சிறந்த தடகள வீராங்கனையாக கிளி. மாணவி பி.பவித்ரா
 

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொட ரில் பெண்கள் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனையாக கிளி நொச்சி இராமநாதபுரம் கிழக்கு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையைப் பிரதிநிதித்துவம் பி.பவித்ரா தெரிவு செய்யப்பட்டார்.

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துவுக்குப் பதக்கம்

அருணோதய, மகாஜனக் கல்லூரிகளின் ஏக ஆதிக்கம் இம்முறை தகர்ந்தது

 
 
கோலூன்றிப் பாய்தல் போட்டியில் சாவகச்சேரி இந்துவுக்குப் பதக்கம்
 

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி, அள­வெட்டி அரு ணோதயக் கல்­லூ­ரி­க­ளின் ஏக ஆதிக்­கம் இம்­முறை இருக்­க­வில்லை. இதன்­படி சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி போதிய பிர­தி­நி­தித்­து­வத்தை இம்­முறை பெற்­றது.

யாழ்ப்­பா­ணம் துரைப்பா விளை­யாட்டு அரங்­கில் கடந்த வியா­ழக்­கி­ழமை முதல் திங்­கட்­கி­ழமை வரை இந்­தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

18 வய­துப்­பி­ரிவு பெண்­க­ளுக்­கான கோலூன்­றிப் பாய்­த­லில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மாணவி சங்­கவி முத­லா­மி­டத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லுரி மாணவி சி.ஹரினா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மாணவி டக்­சிதா வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.

20 வயது பெண்­கள் பிரி­வில் அள­வெட்டி அரு­ணே­த­யக் கல்­லூரி மாணவி சாத்­விகா தங்­கப் பதக்­கத்­தை­யும், சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மாணவி பி.கிரிசா வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லுரி மாணவி எஸ்.டிலானி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.

18 வய­துப் பிரிவு ஆண்­கள் பிரி­வில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி மாண­வன் எ.புவி­த­ரன் தங்­கப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லுரி மாண­வன் எஸ்.கபி­லக்­சன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி மாண­வன் கே.கேது­சன் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

20 வயது ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் எஸ்.டிலக்­சன் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், அரு­ணோ­த­யக் கல்­லூ­ரி­யின் நெப்­தலி ஜொய்­சன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் ரி.சியா­னஸ் வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் கைப்­பற்­றி­னர்.

கடந்த வரு­டம் மகா­ஜனா மற்­றும் அரு­ணோ­த­யக் கல்­லூ­ரி­களே கோலூன்­றிப் பாய்­த­லில் பெரு­ம­ளவு பதக்­கங்­க­ளைச் சுவீ­க­ரித்­தி­ருந்­தன.

ஆனால் இம்­முறை இந்த இரு கல்­லூ­ரி­க­ளி­ன­தும் பதக்­க­வேட்டை ஒப்­பீட்­ட­ள­வில் பர­வ­லாக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி கணி­ச­மான பதக்­கங்­களை சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி பெற்­றுக்­கொண்­டது.

http://uthayandaily.com/story/11225.html

Link to comment
Share on other sites

யாழ். கல்வி வலயம் முதலிடம் பிடித்ததில் சுண்டுக்குழி மகளிர். மத்தியின் பங்கு அதிகம்

மொத்தமாகக் கிடைத்த புள்ளிகளில் மூன்றில் ஒருபங்கு இவற்றிடமிருந்து

 
யாழ். கல்வி வலயம் முதலிடம் பிடித்ததில் சுண்டுக்குழி மகளிர். மத்தியின் பங்கு அதிகம்
 

வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் முத­லி­டத்தைப் பிடித்­த­மைக்கு யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மற்­றும் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி என்­ப­வற்­றின் மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு முக்­கிய கார­ண­மாக இருந்­தது.

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு அரங்­கில் கடந்த வியா­ழக்­கி­ழமை தொடக்­கம் கடந்த திங்­கட்­கி­ழமை வரை நடை­பெற்­றது. ஒட்­டு­மொத்­த­மாக 650 புள்­ளி­க­ளைப் பெற்று யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் முத­லி­டம் பிடித்­தது.

இதில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி மற்­றும் சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி என்­ப­வற்­றின் மிகப்­பெ­ரிய பங்­க­ளிப்பு முக்­கிய கார­ண­மாக இருந்­தது. அதே­நே­ரம் கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி தன்­னா­லான சிறிய பங்கை ஆற்­றி­யுள்­ளது.

மாண­வர்­கள் தொகையை அதி­கம் கொண்ட யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி, யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூரி, யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி, வேம்­படி மக­ளிர் உயர்­த­ரப் பாட­சாலை, யாழ்ப்­பா­ணம் திருக்­கு­டும்­பக் கன்­னி­யர்­ம­டம் போன்­றன போதிய புள்­ளி­ க­ளைப் பெற­வில்லை.

யாழ்ப்­பா­ணக் கல்வி வல­யம் பெற்ற 650 புள்­ளி­க­ளில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 128 புள்­ளி­க­ளை­யும், சுண்­டுக்­குழி மக­ளிர் கல்­லூரி 104 புள்­ளி­க­ளை ­யும் பெற்­றுக் கொடுத்­த­தோடு கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி 70 புள்­ளி­க­ளை­யும் பெற்­றுக் கொடுத்­தது. யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூரி 41 புள்­ளி­க­ளை­யும் சென். ஜோன்ஸ் கல்­லூரி 40 புள்­ளி­க­ளை­யும் பெற்­றன.

ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் யாழ்ப்­பா­ணம் கல்வி வல­யம் முத­லி­டம் பிடித்­தது என்று கூறிக்­கொள்­ள­
லாம். ஆனால் அதன் பின்­னர் ஒரு சில பாட­சா­லை­க­ளின் பங்­க­ளிப்பே அதி­க­ள­வில் உள்­ளது.

யாழ்ப்­பா­ணம் கல்வி வல­யத்­தில் சிறப்­பான மைதா­னம் உப­க­ர­ணங்­கள் மற்­றும் பயிற்­று­நர்­க­ளோடு யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தை­யும் பயன்­ப­டுத்­தக் கூடிய வச­தி­கள் காணப்­பட்ட போதும் தட­க­ளத்­தில் முக்­கிய பாட­சா­லை­கள் பெரி­ ய­ள­வில் சாதிக்­கா­தமை அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 

 

வடக்கு மாகாணத் தடகளத்தில் 12 வயதுப்பிரிவில் சாதித்தோர்

 
வடக்கு மாகாணத் தடகளத்தில்  12 வயதுப்பிரிவில் சாதித்தோர்
  •  
  •  

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 12 வய­துப் பிரி­வில் தடம் மற்­றும் களம் ஆகி­ய­வற்­றில் சிறந்த பெறு­பேற்றை வெளிப்­ப­டுத்­தி­ய­வர்­க­ளின் விவ­ரம் வரு­மாறு.

20170710_180022_resized.jpg

 

வட­மா­காண பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொடர் யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்­றது. 12 வய­துப் பிரி­வில் சிறந்த தட வீர­ராக உடுத்­துறை மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.இந்­து­ஜன், சிறந்த கள வீர­ராக கொக்­கு­வில் இந்­துக் கல்­லூ­ரியை பிர­தி­நி­தித்­து ­வம் செய்த பி.பிர­ண­வன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

20170710_180043_resized.jpg

பெண்­கள் பிரி­வில் சிறந்த தட வீராங்­கனை­யாக தொண்­டை­மா­னாறு வீர­கத்­திப் பிள்ளை மகா வித்­தி­யா­ல­ யத்தை பிர­தி­நி­தித்து ­வம் செய்த ஏ.சிந்­துஜா, சிறந்த கள வீராங்­கனை ­யாக மன்­னார் கருங்­கண்­டல் றோமன் கத்தோ­லிக்க தமிழ் கல­வன் பாட­ சாலையை பிரதி­நிதித்­து­ வம் செய்த எஸ்.யாழ்­மதி ஆகி­யோர் தெரிவு செய்­யப்­பட்­ட­னர்.

 

 

20170710_180059_resized.jpg


 

சென். ஆன்ஸுக்கு தடைதாண்டலில் தங்கப்பதக்கம்

சென். ஆன்ஸுக்கு தடைதாண்டலில் தங்கப்பதக்கம்
 

வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 400 மீற்றர் சட்­ட­வேலி ஓட்­டத்­தில் மன்­னார் சென். ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­ யத்­துக்­குத் தங்­கப் பதக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்­தப் போட்டி நடை­பெற்­றது. மன்­னார் சென். ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தைப் பிர­தி­நி­தித் து­வம் செய்த ஏ.அபிக்­சன் 58.20 செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும், மன்­னார் பற்­றிமா மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்தை பிர­தி­நி­தித்­து­வம் செய்த என்.நசாத்­கன் 59.00 செக்­கன்­க­ளில் ஓடி வெள்­ளிப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும், மன்­னார் சென். ஜோசப்­வாஸ் மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­ வம் செய்த எஸ். டிலக்­சன் 59.60 செக்­கன்­க­ளில் ஓடி வெண்­க­லப் பதக்­கத்­து­டன் வர்­ணச் சான்­றி­த­ழை­யும் கைப்­பற்­றி­னர்.

சாவகச்சேரி இந்து வென்றது தங்கம்

 
சாவகச்சேரி இந்து வென்றது தங்கம்
 
  •  

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வய­துப் பிரிவு ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் ஓட்­டத்­தில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி தங்­கப்­ப­தக்­கத்­தைக் கைப்­பற்­றி­யது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்­தப் போட்டி நடை­பெற்­றது. சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரியைச் சேர்ந்த ரி.விது­சன் 51.50 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப் பதக்­கத்­தை­யும், மன்­னார் பற்­றிமா மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த எஸ்.ஏ.அபி­னாஸ் 52.90 செக்­கன்­க­ளில் ஓடி வெள்­ளிப் பதக்­கமும், யாழ். மத்­திய கல்­லூ­ரியை சேர்ந்த எஸ். செந்­தூ­ரன் 52.40 செக்­கன்­க­ளில் ஓடி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­ற­னர்.

அருணோதயக் கல்லூரி அணி அஞ்சலோட்டத்தில் சாதித்தது

 
 
அருணோதயக் கல்லூரி அணி அஞ்சலோட்டத்தில் சாதித்தது
  •  

வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு விழா வில் 16 வயதுப்பிரிவு பெண்களுக் கான அஞ்சலோட்டத்தில் அளவெட்டி அருணோதயக் கல்லூரி அணி தங் கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

யாழ்ப்பாணம் துரையப்பா விளை யாட்டரங்கில் அண்மையில் இந்தப் போட்டி நடைபெற்றது. 56.70 செக் கன்களில் ஓடி அருணோதயக் கல் லூரி தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது.

57.30 செக்கன்களில் ஓடி முடித்த தெல்லிப்பழை மகாஜ னக் கல்லூரி அணி வெள்ளிப் பதக்கத்தையும், 58.80 செக்கன் களில் ஓடி முடித்த யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் அணி வெண் கலப் பதக்கத்தையும் கைப்பற்றின.

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

நல்லூர் றோட்டறக் கழகத்தின் துடுப்பாட்டம் நாளை ஆரம்பம்

நல்லூர் றோட்டறக் கழகத்தின் துடுப்பாட்டம் நாளை ஆரம்பம்
 

நல்லூர் றோட்டறக் கழகம் நடத்தத் திட்ட மிட்ட அணிக்கு 6 வீரர்கள் பங்குபற்றும் 6 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் கொண்ட துடுப்­பாட்­டத் தொடர் நாளை ஆரம்­ப­மா­கி­றது.

நவாலி அட்­ட­கிரி மைதா­னத்­தில் காலை 9 மணி முதல் இந்த ஆட்­டங்­கள் அனைத் தும் நடை­பெ­ற­வுள்­ளன.

 

 

வலைப்­பந்­தாட்­டம் நாளை ஆரம்­பம்

 
வலைப்­பந்­தாட்­டம் நாளை ஆரம்­பம்
 யாழ்ப்­பாண மாவட்ட வலைப்­பந்­தாட்­டச் சங்­கத்­தி­னால் நடத்­தத் திட்­ட­மிட்ட வலைப்­பந்­தாட்­டத் தொடர் யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை ­யில் நாளை சனிக்­கி­ழமை காலை 8 மணிக்கு ஆரம்­ப­மா­கி­றது.

இந்த நிகழ்­வுக்கு தலைமை விருந்­தி­ன­ ராக சிவன் அறக்­கட்­டளை நிதி­யத்­தின் இணைப்­பா­ளர் கே.சதீஸ் கலந்து கொள்­ள­வுள்­ளார்

 

 

இன்­றைய மோதல்­கள்

 
இன்­றைய மோதல்­கள்
  •  

ஐக்­கி­யத்­தின்
கப­டித் தொடர்

பருத்­தித்­துறை ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கப­டித் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் வல்வை விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து துள்­ளு­மீன் விளை­யாட்­டுக் கழக அணி மோத­வுள்­ளது.

இரவு 8 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் ஐக்­கி­யம் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சித்­தி­வி­நா­ய­கர் அணி மோத­வுள்­ளது.

யங்­ஹென்­றி­ஸின்
கால்­பந்­தாட்­டம்

இள­வாலை சென். ஹென்­றிஸ் கல்­லூ­ரி­யின் மறைந்த முன்­னாள் கால்­பந்­தாட்­டப் பயிற்­று­னர் அம­ரர் அரு­ளா­னந்­தம் ஞாப­கார்த்­த­மாக யங்­ஹென்­றிஸ் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தத் திட்­ட­மிட்ட கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் இள­வாலை சென்.

ஹென்­றிஸ் கல்­லூரி மைதா­னத்­தில் இன்று ஆரம்­ப­மா­கி­ன்றன.
அணிக்கு 7 வீரர்­கள் கொண்­ட­தாக நடை­பெ­றும் இந்­தத் தொட­ரில் ஒட்­டு­மொத்­த­மாக 16 அணி­கள் பங்­கு­பற்­று­கின்­றன.

காலை 8.30 மணிக்கு இடம்­பெ­றும் முத­லா­வது ஆட்­டத்­தில் இள­வாலை சென். லூட்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து கம்­பர்­மலை யங்­கம்­பன்ஸ் விளை­யாட்­டுக் கழ­க­ம் மோத­வுள்­ளது. அடுத்­த­டுத்த ஆட்­டங்­க­ளில் அராலி பாரதி விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து பாசை­யூர் சென்.

அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­க­மும், வதிரி டய­மன்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து தெல்­லிப்­பழை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­க­மும், வேலணை ஐய­னாரை எதிர்த்து சக்­கோட்டை சென். சேவி­யர் விளை­யாட்­டுக் கழ­க­மும், மல்­லா­கம் நியூ­வொரி­யஸ் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து பலாலி விண்­மீன் விளை­யாட்­டுக் கழ­க­மும் மணற்­காடு சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து நாவாந்­துறை சென்.

நீக்­கி­லஸ் விளை­யாட்­டுக் கழ­க­மும், சண்­டி­லிப்­பாய் கல்­வளை விநா­ய­கர் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து கர­ண­வாய் கொலின்ஸ் விளை­யாட்­டுக் கழ­க­மும், ஊரெழு றோயல் அணியை எதிர்த்து அராலி அண்ணா விளை­யாட்­டுக் கழ­க­மும் மோத­வுள்­ளன.

 

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

சென்றலைட்ஸ் கழகம் அரையிறுதிக்குத் தகுதி

 
சென்றலைட்ஸ் கழகம் அரையிறுதிக்குத் தகுதி
 

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான துடுப்­பாட்­டத் தொட­ரில் சென்­ற­லைட்ஸ் அணி அரை­யி­று­திக்­கத் தகுதி பெற்­றுள்­ளது. யாழ்ப்­பா­ணம் சென். பற்­றிக்ஸ் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்பெற்ற இந்த ஆட்­டத்­தில் சென்­றல் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய சென்­றல் அணி நிர்­ண­யிக்­கப்­பட்ட 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 8 இலக்­கு­களை இழந்து 237 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ரஜூவ் குமார் 73 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

பந்­து­வீச்­சில் கிருபா 3 இலக்­கு­க­ளை­யும், எரிக் துசாந் 2 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர். 237 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் வெற்­றி­யென்ற இலக்­கு­டன் பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 46 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 4 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. செல்­ரன் 125 ஓட்­டங்­க­ளை­யும், பிரி­ய­லக்­சன் 42 ஓட்­டங்­க­ளை­யும், இய­ல­ர­சன் 40 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

http://uthayandaily.com/story/11650.html

Link to comment
Share on other sites

யாழ்ப்பாண மத்தியின் இலக்குத் தவறியது ஏன்?

 
யாழ்ப்பாண மத்தியின் இலக்குத் தவறியது ஏன்?
 

வட­மா­காணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் ஆண்­கள் பிரிவு ஒட்­டு­மொத்­தப் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முத­லி­டம் பிடிப்­ப­தற்கு யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி கடு­மை­யாக முனைப்­புக் காட்­டிய போதி­லும் இறு­தி­யில் ஒரு புள்ளி வித்­தி­யா­சத்­தில் மகா­ஜ­ன­வி­டம் அந்த இடத்தை இழந்­தது. மத்­தி­யின் இலக்­குத் தவ­றி­யது ஏன் என்று பரி­சீ­லித்­துப் பார்த்­தால் அந்த அணி பதக்­கங்­க­ளைக் குறி­வைத்­ததே தவிர நான்­காம், ஐந்­தாம் இடங்­க­ளைக் கைப்­பற்­று­வ­தில் அதிக ஆர்­வம் காட்­ட­வில்லை என்­பது புலப்­ப­டு­கி­றது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்­தப் போட்டி கள் நடை­பெற்­றன. ஒட்­டு­மொத்­த­மாக 129 புள்­ளி­க­ளைப் பெற்று மகா­ஜ­னக் கல்­லூரி முத­லி­டம் பிடித்­தது. யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 128 புள்­ளி­க­ளைப் பெற்று இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தது. ஹாட்­லிக் கல்­லூரி 117 புள்­ளி­க­ளு­டன் மூன்­றா­வது இடத்­தை­யும், மன்­னார் சென். ஆன்ஸ் மத்­திய மகா வித்­தி­யா­ல­யம் 112 புள்­ளி­க­ளு ­டன் நான்­கா­வது இடத்­தை­யும், மன்­னார் பத்­திமா மகா வித்­தி­யா­ல­யம் 91 புள்­ளி­க­ளு­டன் ஐந்­தா­வது இடத்­தை­யும் பிடித்­தன.

ஆண்­கள் பிரி­வில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூரி 14 பதக் கங்­க­ளை­யும், யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி 18 பதக்­கங்­க­ளை ­யும் பெற்­றுள்­ளன. எனி­னும் புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் மத்­தி வெறும் ஒரு புள்­ளி­யால் மகா­ஜ­னா­வி­டம் தனது முத­லிட அந்­தஸ்­தைப் பறி­கொ­டுத்­தது. இதற்கு மத்­திய கல்லூரி பதக்­கங்­க­ளைக் கைப்­பற்ற வேண்­டும் என்­ப­தில் அதிக அக்­க­றை­யு­டன் செயற்­பட்­டதே தவிர 4ஆம், 5ஆம், 6 ஆம் இடங்­க­ளைக் கைப்­பற்­று­வதை கருத்­தில்­கொள்­ள­வில்லை அல்­லது அந்த இடங்­க­ளைக் கைப்­பற்ற ஆர்­வம் காட்­ட­வில்லை என்று எண்­ணத் தோன்­று­கி­றது.

பதக்­கங்­க­ளுக்கு நிக­ராக ஏனைய இடங்­க­ளி­லும் மத்­திய கவ­னம் செலுத்­தி­யி­ருந்­தால் புள்­ளிப்­பட்­டி­ய­ லில் கடந்த இரு வரு­டங்­க­ளைப் போன்று இந்த வரு­ட­மும் முத­லி­டத்­துக்கு வந்­தி­ருக்க அதிக வாய்ப்பு இருந்­தி­ருக்­கும்.

http://uthayandaily.com/story/11654.html

Link to comment
Share on other sites

சென்றலைட்ஸ் அணி இறுதிக்குச் சென்றது

சென்றலைட்ஸ் அணி இறுதிக்குச் சென்றது
 

இலங்கை கிரிக்­கெட் சபை நடத்­தும் மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் யாழ்ப் பாணம் சென்­ற­லைட்ஸ் அணி இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

சுன்­னா­கம் ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மைதா­னத்­தில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் சென்­ற­லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வட்­டுக்­கோட்டை ஒல்­கோல்ட்ஸ் அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய வட்­டுக்­கோட்டை ஓல்­கோல்ட்ஸ் அணி 50 பந்­துப்­ப­ரி­மாற்­றங்­கள் நிறை­வில் 9 இலக்­கு­களை இழந்து 202 ஓட்­டங்­களைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக பிரி­ய­லக்­சன் 75 ஓட்­டங்­க­ளை­யும், நிறோ­சன் 30 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் கிரு­பா­ க­ரன், அலன்­ராஜ் இரு­வ­ரும் தலா 3 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னர்.

பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய சென்­ற­ லைட்ஸ் விளை­யாட்­டுக் கழக அணி 41.4 பந்­துப் பரி­மாற்­றங் களில் 9 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஜேம்ஸ் 52 ஓட்­டங்­க­ளை­யும், எடின் 27 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

 

 

 

இந்து இளைஞர் சம்பியன்

 
இந்து இளைஞர் சம்பியன்
 

இலங்கை கிரிக்­கெட் சபை மூன்­றாம் பிரிவு அணி­க­ளுக்கு இடை­யில் நடத்­தும் தொட­ரில் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கிளி­நொச்சி இந்து இளை­ஞர் அணி சம்­பி­ய­னா­னது.

கிளி­நொச்சி இந்­துக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன் தினம் நடை­பெற்ற இறு­தி­யாட்­டத்­தில் பரிஸ் அணியை எதிர்த்து இந்து இளை­ஞர் அணி மோதி­யது. முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய பரிஸ் அணி 22.2 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 122 ஓட்­டங்க­ளைப் பெற்றது. அந்த அணி­யின் சார்­பில் கஜன் 38 ஓட்­டங் க­ளை­யும், அர­விந்த் 17 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் இந்து இளை­ஞர் அணியின் சார்­பில் றொஸ்கோ
4 இலக்­கு­க­ளை­யும் அகி­லன், மயூ­ரன் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.
பதி­லுக்­குத் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்து இளை­ஞர் அணி 21.1 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 4 இலக்­கு­களை இழந்து 123 ஓட்­டங்களைப் பெற்று 6 இலக்­கு­க­ளால் வெற்­றி­யீட்­டி­யது. துடுப்­பாட்­டத்தில் றொஸ்கோ ஆட்­ட­மி­ழக்­கா­மல் 30 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

 

 

 

டயமன்ஸ் -– றோயல் இறுதியில் மோதல்

 
டயமன்ஸ் -– றோயல் இறுதியில் மோதல்
 

நவிண்­டில் கலை­மதி விளை­யாட்­டுக் கழ­கம் யாழ்ப்­பாண மாவட்ட ரீதி­யாக நடத்­திய கால்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டத்­தில் வதிரி டய­மன்ஸ் அணி­யும், ஊரெழு றோயல் அணி­யும் இன்று மோத­ வுள்­ளன.

இமை­யா­ணன் மத்­திய விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இன்று இரவு 7 மணிக்கு இந்த ஆட்­டம் நடை­பெ­ற­வுள்­ளது. இறுதி­யாட்­டத்­துக்கு முன்­ன­தாக இடம்­பெ­றும் மூன்­றாம் இடத்­துக்­கான ஆட்­டத்­தில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் விளை­யாட்­டுக் கழ­கத்தை எதிர்த்து குப் பி­ளான் குறிஞ்சிக்கும ரன் விளை­யாட்­டுக் கழ­கம் மோத­வுள்­ளது.

http://uthayandaily.com/

Link to comment
Share on other sites

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன்

 
வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி சம்பியன்
 

யாழ்ப்­பாண மாவட்ட கூடைப்­பந்­தாட்­டச் சங்­கம் நடத்­தும் கூடைப்­பந்­தாட்­டத் தொட­ரில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி சம்­பி­ய­னா­னது.

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் கூடைப்­பந்­தாட்­டத் திட­லில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணியை எதிர்த்து உடு­வில் மக­ளிர் கல்­லூரி அணி மோதி­யது.

முதல் பாதி­யின் முடி­வில் 8:5 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னிலை வகித்­தது வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சாலை அணி. அந்த அணி தொடர்ந்­தும் ஆதிக்­கம் செலுத்தி முடி­வில் 23:15 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது.

சென். ஜோன்ஸ் மகுடம் சூடியது

 
சென். ஜோன்ஸ் மகுடம் சூடியது
 

யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கத்தினால் நடத் தப்பட்ட 15 வயதுப்பிரிவு அணிகளுக்கு இடையிலான தொடரில் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி கிண்ணம் வென் றது. யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரியின் மைதானத்தில் நேற்றுமுன்தினம் இந்த இறுதியாட்டம் நடைபெற்றது.

சென். ஜோன்ஸ் கல்லூரியை எதிர்த்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல் லு।ரி அணி களத்தடுப்பைத் தீர்மானித்தது. இதன்படி தனது முதலாவது இன்னிங் ஸுக் காகத் துடுப்பெடுத்தாடிய சென். ஜோன்ஸ் 5 இலக்குகளை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை இடை நிறுத்தியது. டினோசன் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் நிகேஸ் 2 இலக்குகளையும், கனிஸ்ரன், யதுசன் இருவரும் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தினர்.

தனது முதலாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி 112 ஓட்டங்களில் சகல இலக்குகளையும் இழந்தது. 92 ஓட்டங் களால் வெற்றிபெற்று கிண்ணம் வென்றது சென். ஜோன்ஸ். பந்துவீச்சில் டினோசன், சங்கீத்தனன், அனுசன் மூவரும் தலா 3 இலக்குகளைக் கைப்பற்றினர்.

http://newuthayan.com/

Link to comment
Share on other sites

யாழ்ப்­பா­ணம் மத்தி. இறு­திக்­குத் தகுதி

 
யாழ்ப்­பா­ணம் மத்தி. இறு­திக்­குத் தகுதி
 

யாழ்ப்­பாண மாவட்ட துடுப்­பாட்­டச் சங்­கம் நடத்­திய 17 வய­துக்­குட்­பட்ட ஆண்­க­ளுக்­கான துடுப்­பாட்­டத் தொட­ரில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இறு­தி­யாட்­டத்­துக்­குத் தகுதி பெற்­றது.

ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி மைதா­னத்­தில் அண்­மை­யில் நடை­பெற்ற அரை­யி­று­தி­யாட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணியை எதிர்த்து ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி மோதி­யது.

முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஸ்கந்­த­வ­ரோ­த­யக் கல்­லூரி அணி 26.5 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 95 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. அதி­க­பட்­ச­மாக விஜ­யன் 28 ஓட்­டங்­க­ளை­யும், கனிஸ்­ரன் 22 ஓட்­டங்­க­ளை­யும், தாசன் 12 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

பந்­து­வீச்­சில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி சார்­பில் மது­சன் 6 இலக்­கு­க­ளை­யும், திவா­க­ரன் 3 இலக்­கு­க­ளை­யும், இய­ல­ர­சன் ஒரு இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர். பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா ­டிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி 13 பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 2 இலக்­கு­களை இழந்து வெற்­றி­பெற்­றது. அதி­க­பட்­ச­மாக ஜெய­தர்­சன் 38 ஓட்­டங்­க­ளைப் பெற்­றார்.

http://uthayandaily.com/story/13252.html

Link to comment
Share on other sites

பெனால்டியில் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது யங்ஹென்றீசியன்
20292766_1093493737448037_23209352449754

பெனால்டியில் வென்று கிண்ணத்தை சுவீகரித்தது யங்ஹென்றீசியன்

Match-Replays-Site-banner-728.jpg

விறுவிறுப்பிற்குப் பஞ்சம் இன்றி நடைபெற்று முடிந்த வலிகாமம் உதைப்பந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவர் அமரர் .நவரட்னராசா அவர்களது ஞாபகார்த்தமானதலைவர் கிண்ணசுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியில் ஐயனார் விளையாட்டுக் கழகத்தை பெனால்டியில் வென்ற இளலாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம் தமது கனவுக் கிண்ணத்தை வென்றுள்ளது.  

வலிகாமம் கால்பந்து லீக்கின் ஏற்பாட்டில் கடந்த மாதம் ஆரம்பமாகிய இந்த சுற்றுப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் உள்ள பலம்மிக்க 10 அணிகள் தெரிவு செய்யப்பட்டு நொக் அவுட் முறையில் மோதல்கள் இடம்பெற்றன.  

தொடரில் பங்குகொண்ட அணிகள்

  • வதிரி டயமன்ஸ் வி.
  • இளவாலை யங்ஹென்றீசியன் வி.  
  • மணற்காடு சென் அன்ரனிஸ் வி.
  • அராலி பாரதி வி.
  • வேலணை ஐயனார் வி.  
  • குருநகர் பாடும்மீன் வி.  
  • பலாலி விண்மீன் வி.  
  • ஊரெளு றோயல் வி.  
  • கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.  
  • புங்குடுதீவு சண் ஸ்ரார் வி.

இதில், இடம்பெற்று முடிந்த தீர்மானம் மிக்க அனைத்து ஆட்டங்களினதும் நிறைவில், பலம் மிக்க அணிகளான துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் மற்றும் இளம் வீரர்களை அதிகமாகக் கொண்ட இளவாலை யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம் என்பன இறுதிப் போட்டிக்குத் தெரிவாகின.   

ஐயனார் விளையாட்டுக் கழகம் தமது அரையிறுதியில் டயமன்ஸ் விளையாட்டுக் கழகத்தை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது. அதே போன்று, யங்ஹென்றீசியன் அணி விளையாடிய ஊரெளு றோயல் அணியுடனான விறுவிறுப்பான அரையிறுதியில், 2-2 என போட்டி சமநிலையடைய, பெனால்டி உதையில் 4-2 என யங்ஹென்றீசியன் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.  

கடந்த வாரம் இடம்பெற்ற அமரர் அருளானந்தம் ஞாபகார்த்த கிண்ணத் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சூட்டோடு ஐயனார் அணியும், தேசிய அணி வீரர் ஞானரூபன் வினோத் காயத்திலிருந்து மீண்டு அணியில் இணைந்த தைரியத்துடன் யங்ஹென்றீசியன் அணியினரும் இறுதி மோதலில் களமிறங்கினர். இறுதிப் போட்டியானது, பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களின் வருகையுடன் துரையப்பா விளையாட்டரங்கில் மின்னொளியின் கீழ் ஆரம்பமானது.

ஆரம்பம் முதலே இரு தரப்பினரும் பலமாக மோதி முதல் கோலுக்கான முயற்சியை மேற்கொண்டனர். எனினும் தடுப்பு வீரர்களின் சிறப்பாட்டம் காரணமாக கோலுக்கான வாய்ப்பு இரு தரப்பினருக்கும் கிடைக்காமலேயே போனது.  

இவ்வாறான ஒரு நிலையில் முதல் பாதி, கோல்கள் இன்றி சமநிலையில் நிறைவுறும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். எனினும், அவ்வாறான எதிர்பார்ப்பிற்கு மாற்றமாக போட்டியின் 43ஆவது நிமிடத்தில் யங்ஹென்றீசியன் வீரர் டிலுக்ஷன் தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக்கொடுத்து, முதல் பாதி நிறைவின்போது அணியை முன்னிலைப்படுத்தினார்.

முதல் பாதி : யங்ஹென்றீசியன் வி.  1 – 0 ஐயனார் வி.

பின்னர் ஆரம்பமாகிய இரண்டாவது பாதியானது, முதல் பாதியை விட முழுமையாக மாற்றமாக அமைந்தது. இரு அணி வீரர்களினதும் வேகமான விளையாட்டு, அபாரமான தடுப்புகள் மற்றும் கோல் முயற்சிகள் அனைத்தும் அவர்களது கிண்ணத்திற்கான கனவை பிரதிபளிக்கும் விதத்தில் இருந்தன.

அந்த வகையில் ஆட்டத்தின் 58ஆவது நிமிடத்தில் சுபராஜ் மூலம் தமக்கான முதல் கோலைப் பெற்ற ஐயனார் அணி, கோல்கள் எண்ணிக்கையை சமப்படுத்தியது.

எனினும் அவர்களது சமநிலை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அடுத்த 3 நிமிடங்களில் அல்பரட் தனேஷ் மூலம் யங்ஹென்றீசியன் அணி தமக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொண்டது.

அதன் பின்னர் 20 நிமிடங்களுக்கு எந்த தரப்பினராலும் கோல்கள் பெறப்படவில்லை. இந் நிலையில், 81ஆவது நிமிடத்தில் திலக்ஷனுக்கு ஐயனார் வீரர் விதுஷன் மூலம் பெனால்டி பெட்டி எல்லையில் வைத்து முறையற்ற தடுப்பு மேற்கொள்ளப்பட்டமைக்காக, அவருக்கு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டதுடன், யங்ஹென்றீசியன் அணிக்கு பெனால்டி (தண்ட உதை) வாய்ப்பும் வழங்கப்பட்டது.

குறித்த உதையைப் பெற்றுக்கொண்ட தேசிய அணி வீரர் ஞானரூபன் வினோத், தனது வாய்ப்பை கோலாக மாற்றி அணியை 2 கோல்களினால் முன்னிலைப்படுத்தினார்.  

எனினும் அதற்கு அடுத்த நிமிடமே, அதற்கான பதில் கோல் ஐயனார் தரப்பினரால் கொடுக்கப்பட்டது. இந்தியாவில் விளையாடிய அனுபவம் கொண்ட அகீபன் தனது அணிக்கான இரண்டாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். யங்ஹென்றீசியன் அணியின் பின்கள வீரர்கள் விட்ட தவறை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அவர் சிறந்த முறையில் இப்போட்டியில் தனது முதல் கோலைப் பதிவு செய்தார்.  

இதன் காரணமாக இறுதிப் போட்டியின் கடைசிப் பத்து நிமிடங்களும் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தாகவே அமைந்தது.

இவ்வாறான ஒரு நிலையில் போட்டியின் 89ஆவது நிமிடம் ஆட்டத்தை மாற்றியமைக்கும் ஒரு தருணமாய் இருந்தது. பெனால்டி எல்லையில் வைத்து யங்ஹென்றீசியன் வீரர் அனோஜனின் கையில் பந்து பட, எதிரணிக்கு பெனால்டி உதைக்கான வாய்ப்பு கிடைத்தது.

இந்த உதையைப் பெற்ற அகீபன், அந்த வாய்ப்பின்மூலம் தனது அடுத்த கோலையும் பெற்று, கோல்கள் எண்ணிக்கையை சமப்படுத்தவே, மைதானத்தில் இருந்து வெளியே செல்ல எத்தணித்திருந்த அனைவரும் மீண்டும் பெனால்டி உதையைப் பார்ப்பதற்காக அங்கேயே நின்றனர்.

அதனைத் தொடர்ந்து மேலதிக நேரமும் நிறைவடைய, ஆட்டம் சமநிலையடைந்தமையினால், கிண்ணத்திற்கான வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கான பெனால்டி (சமநிலை தவிர்ப்பு உதை) வழங்கப்பட்டது.

முழு நேரம் : யங்ஹென்றீசியன் வி.  3 – 3 ஐயனார் வி.

பெனால்டி உதையின்போது

யங்ஹென்றீசியன் வி.க O O X O X
ஐயனார் வி.க X X O O  O

இரு அணிகளும் தமது முதல் 5 பெனால்டி உதைகளையும் நிறைவு செய்ததன் பின்னர் கோல்களின் எண்ணிக்கை 5-5 என சமநிலையில் இருந்தது. இதன் காரணமாக இறுதி உதையை ஐயனார் வீரர்கள் கோலாக்கினால் அவ்வணி வெற்றி பெறும், மாறாக அதனை மறைக்கும் பட்சத்தில் யங்ஹென்றீசியன் அணி வெற்றி பெறும் என்ற தீர்க்கமான நிலை ஏற்பட்டது.

எனவே, குறித்த உதையை மறைப்பதற்காக, கோல் காப்பாளர் அமல்ராஜனின் பொருப்பை அல்ப்ரட் தனேஷ் பெற்றார். இதற்கு முன்னர் இடம்பெற்ற பல போட்டிகளில் பெனால்டி உதையின்போது, கோல் காப்பாளராக செயற்பட்டு அணியை வெற்றிபெறச் செய்த அனுபவத்தின் அடிப்படையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.

 

அது போன்றே, அந்த முயற்சிக்கு சிறந்த பயனைக் கொடுக்கும் விதத்தில் இறுதி உதையை மறைத்த தனேஷ், யங்ஹென்றீசியன் அணியை அமரர் .நவரட்னராசா அவர்களது ஞாபகார்த்தமானதலைவர் கிண்ணசம்பியன்களாக மாற்றினார்.

இந்த வெற்றியின்மூலம் அணிக்கு 11 பேர் கொண்ட மாவட்ட மட்டப் போட்டியொன்றில் 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பியன் பட்டத்தை வென்று புதிய பதிவொன்றை யங்ஹென்றீசியன் அணி நிலைநாட்டியது.

இப்போட்டியின் ஆட்ட நாயகனான, போட்டி ஆரம்பித்தது முதலே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்து ஐயனார் விளையாட்டுக் கழகத்தின் அகீபன் தெரிவு செய்யப்பட்டார்.

கோல் பெற்றவர்கள்

யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம்

டிலுக்ஷன் 43’,   அல்ப்ரட் தனேஷ் 61’, ஞானரூபன் வினோத் 82’

ஐயனார் விளையாட்டுக் கழகம்

சுபராஜ் 58’, அகீபன் 83’ & 89’

மஞ்சள் அட்டை

யங்ஹென்றீசியன் விளையாட்டுக் கழகம்

ஜூட் சுபன் 56

ஐயனார் விளையாட்டுக் கழகம்

இதயதீபன் 69’, விதுஷன் 81’

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

தெல்லிப்பழை யூனியன் மாவட்டச் சம்பியன்

 
தெல்லிப்பழை யூனியன்  மாவட்டச் சம்பியன்

யாழ்ப்­பா­ண வலைப்­பந்­தாட்­டச் சங்­கத்­தால் நடத் தப்­பட்ட வலைப் பந்­தாட்­டத் தொட­ரில் தெல்­லிப்­பழை யூனி­யன் விளை­யாட்­டுக் கழ­கம் சம்­பி­ய­னா­னது. யாழ்ப்­பா­ணம் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப்பாட­சா­லை­யில் நேற்று மாலை இடம்­பெற்ற இந்த இறுதி ஆட்­டத்­தில் தெல்­லிப்­பழை யூனி­யன் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து வின்ஸ்­ரார் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.முதல் பாதி­யின் முடி­வில் யூனி­யன் அணி 16:11 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் முன்­னிலை பெற்­றது. அந்த அணி தொடர்ந்­தும் தனது ஆதிக்­கத்­தைத் தக்­க­வைத்து முடி­வில் 34:29 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் வெற்­றி­பெற்­றது.

முதன்மை விருந்­தி­னர்­க­ளாக வலி­கா­மம் கிழக்கு பிர­தேச செய­ல­ளர் திரு­மதி சுபா­சினி மதி­ய­ழ­க­னும், சிவன் அறக்­கட்­டளை நிறு­வ­ன­த்தின் இயக்­கு­நர் கணேஸ்­வ­ரன் வேல­யு­த­மும், சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக யாழ். வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யின் அதி­பர் வேணுகா சண்­மு­க­ரெத்­தி­ன­மும், பவுண்­டே­சன் ஒவ்­குட்­நஸ் நிறு­வ­னத்­தின் வடக்கு மாகா­ணத்­தின் இணைப்­ப­ளர் எட்­வேட் எடி­னும் கலந்துகொண்ட னர்.

 

1-lead-5.jpg

 

 

 

 

வடக்குக்கு வெண்கலம்

 
வடக்குக்கு வெண்கலம்
 

தேசியமட்ட கரம் தொட­ரில் பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் வட­மா­கா­ணத்­துக்கு வெண்­க­லப் பதக்­கம் கிடைத்­துள்­ளது. கொழும்பு டொறிங்­டன் உள்­ளக விளை­ யாட்­ட­ரங்­கில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­மி­ டத்­துக்­கான ஆட்­டத்­தில் வட­மா­கா­ணத்தை எதிர்த்து மத்­திய மாகாண அணி மோதி­யது.

இதில் வட­மா­கா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த கொக்­கு­வில் இந்­துக் கல்­லூரி மாணவி இலங்­கேஸ்­வ­ரன் டிசாந்தி மத்­திய மாகாண அணியை பிர­தி­நி­தித்­து­வம் செய்த கஜானி ரண­சிங்­கவை 2:1 என்ற செற் கணக்­கில் வீழ்த்தி வெண்­க­லப் பதக்­கத்­தைக் கைப்­பற்­றி­னார். தங்­கப் பதக்­கத்தை மேல் மாகாண அணி­யும், வெள்­ளிப் பதக்­கத்தை சப்­ரக­முவ மாகாண அணி­யும் பெற்­றன.

 

 

இந்து இளைஞர் ‘ஏ’, ‘பி’ கிண்ணத்தை கைப்பற்றின

 
இந்து இளைஞர் ‘ஏ’, ‘பி’ கிண்ணத்தை கைப்பற்றின
 
 

கைதடி சரஸ்­வ­தி­யின் கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் ‘ஏ’, ‘பி’ அணி­கள் கிண்­ணங்­க­ளைத் தம­தாக்­கின. கைதடி சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் ஆண்டு விழாவை முன் னிட்டு இரண்டு பிரிவு களாக நடத்­தப்­பட்ட கரப்­பந்­தாட்­டத் தொட­ரின் இறு­தி­யாட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றன.

‘பி’ பிரிவு
இறு­தி­யாட்­டம்

முத­லில் இடம்­பெற்ற பி பிரிவு அணி­க­ளுக்கு இடை­யி­லான இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் அணி­யும் அச்­சு­வேலி கலை­ம­கள் அணி­யும் பலப்­ப­ரீட்சை நடத்­தின. 5 செற்­க­ளைக் கொண்­ட­தாக ஆட்­டம் அமைந்­தது.

முத­லா­வது செற்றை 25:19 என்ற புள்­ளி­ க­ளின் அடிப்­ப­டை­யில் இந்து இளை­ஞர் அணி கைப்­பற்­றி­யது.
அடுத்த இரு செற்­க­ளை­யும் 25:22, 25:23 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கலை­ம­கள் அணி தன­தாக்­கி­யது. நான்­கா­வது செற்­றில் ஆக்­ரோ­ச­மாக விளை­யா­டிய இந்து இளை­ஞர் அணி 25:20 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் அந்த செற்­றைக் கைப்­பற்­றி­யது.

முதல் நான்கு செற்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் தலா இரு செற் களைப் பெற்­றி­ருந்­த­மை­யால் ஐந்­தா­வது செற்­றில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அந்த செற் 16:14 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் இந்து இளை­ஞ­ரின் வச­மாக முடி­வில் 3:2 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று தொட­ரைக் கைப்­பற்­றி­யது இந்து இளை­ஞர் ‘பி’ அணி.

‘ஏ’ பிரிவு இறு­தி­யாட்­டம்

தொடர்ந்து இடம்­பெற்ற ‘ஏ’ பிரிவு அணி­க­ளுக்­கி­டை­யி­லான இறு­தி­யாட்­டத்­தில் ஆவ­ரங்­கால் மத்­திய விளை­யாட்­டுக் கழ­க­மும் ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் விளை­யாட்­டுக் கழ­க­மும் பலப்­ப­ரீட்சை நடத்­தின.
5 செற்­க­ளைக்­கொண்ட இந்த ஆட்­டத்­தில் முதல் மூன்று செற்­க­ளை­யும் முறையே 25:18, 25:20, 25:19 என்ற புள்­ளி­க­ளின் அடிப்­ப­டை­யில் கைப்­பற்றி 3:0 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்று கிண்­ணம் வென்­றது ஆவ­ரங்­கால் இந்து இளை­ஞர் ‘ஏ’ அணி.

http://uthayandaily.com/story/category/sports

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.