• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

வெளிநாடுகளுக்கு 10301 ஏக்கர் காணிகளை வழங்கிய மஹிந்த இன்று கூச்சலிடுகிறார் லசந்த கொலை வழக்கு விசாரணையில் திருப்தியில்லை என்கிறார் ராஜித

Recommended Posts

வெளிநா­டு­க­ளு­க்கு 10301 ஏக்கர் காணி­களை வழங்­கிய மஹிந்த இன்று கூச்சலிடு­கிறார்

 

லசந்த கொலை வழக்கு விசா­ர­ணையில் திருப்­தி­யில்லை என்­கிறார் ராஜித
(ரொபட் அன்­டனி)

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது ஆட்­சி­யின்­போது வெளிநா­டு­க­ளுக்கு 10301 ஏக்கர் காணி­களை வழங்­கி­யுள்ளார். அவற்றில் விற்­பனை செய்­யப்­பட்ட காணி­களும் உள்­ளன. அவ்­வாறு செய்­தவர் இன்று அபி­வி­ருத்தி செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக கூச்சலிடு­கின்றார் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.

லசந்த படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் திருப்­தி­க­ர­மாக இல்லை என்ற குற்­றச்­சாட்டை நானும் முன்­வைக்­கின்றேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யா ளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கேள்வி:- லசந்­தவின் படு­கொலை நினைவுத் தினத்­தின்­போது விசா­ரணை செயற்­பாடுள் தொடர்பில் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்பில்?

 பதில்: லசந்த படு­கொலை தொடர்­பான விசா­ர­ணைகள் திருப்­தி­க­ர­மாக இல்லை என்ற குற்­றச்­சாட்டை நானும் முன்­வைக்­கின்றேன்.

கேள்வி:- ஏன் இவ்­வா­றான நிலைமை காணப்­ப­டு­கின்­றது?

பதில்:- தெரி­ய­வில்லை. ஆனால் இது­போன்று அனைத்து விட­யங்­களும் தாம­த­மா­கவே இருக்­கின்­றன.

கேள்வி:- இது தொடர்பில் அமைச்­ச­ர­வை யில் பேசப்­பட்­டதா?

பதில்:- இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேசப்­ப­ட­வில்லை.

கேள்வி:- அம்­பாந்­தோட்டை காணி விவ­காரம் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ சீனத் தூது­வரை சந்­தித்து பேச்சு நடத்­தி­யுள்­ளாரே?

பதில்:- அவர்கள் பேசி­யி­ருப்­பார்கள். இந்த விட­யத்தில் கவ­லைப்­ப­ட­வேண்­டா­மென கூறி­யி­ருப்பார். ஆனால் கடந்த ஆட்­சிக்­கா­லத்தின் போது மஹிந்த வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு 10301 ஏக்கர் காணி­களை வழங்­கி­யி­ருக்­கிறார். இவற்றில் காணி விற்­ப­னை­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இவ்­வாறு செயற்­பட்ட மஹிந்த ராஜ­பக்ஷ இன்று கூச்­ச­லெ­ழுப்­பு­கிறார்.

கேள்வி:- அர­சாங்கம் எடுக்கும் முடி­வுகள் அமைச்­ச­ர­வையில் பேசப்­ப­டு­கி­றதா?

பதில்:- அர­சாங்கம் என்ன முடி­வெ­டுத்­தா லும் அது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேசப்­படும். அமைச்­ச­ர­வையில் கலந்­து­ரை­யா­டாமல் எந்­த­வொரு இறுதி முடிவும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது.

கேள்வி:- சீனா­விற்கு 15 ஆயிரம் ஏக்கர் காணி வழங்­கு­வது தொடர்­பான தீர்­மானம் பொரு­ளா­தாரக் கொள்கை தொடர்­பான கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்­றதே?

பதில்:- பொரு­ளா­தாரக் கொள்கைக் குழு வில் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­தாலும் இறு­தியில் அமைச்­ச­ர­வையில் தீர்­மானம் எடுக்­கப்­படும். தற்­போது மத்­தள விமான நிலையம் மற்றும் மாகம்­புர துறை­முகம் என்­பன நஷ்­டத்தில் இயங்­கு­கின்­றன. இவ ற்றை இலாபம் ஈட்டும் நிறு­வ­னங்­க­ளாக மாற்­ற­வேண்டும். அதற்கு இவ்­வா­றான திட்­டங்­க­ளுக்கு செல்­ல­வேண்­டி­யது அவ­சியம். இல்­லா­விடின் மக்­களின் வரியை அதி­க­ரிக்­க­ வேண்­டிய நிலைமை ஏற்­படும்.

கேள்வி:- பிணை முறி­­வி­வ­காரம் தொடர் பில் எந்த முன்­னேற்­றமும் இல்­லையே?

பதில்:- நீங்கள் அவ்­வாறு கூறமுடி­யாது. அது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­பட்டு தற்­போது அந்த அறிக்கை சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது. சட்­டமா அதிபர் திணைக்­களம் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்கும். உங்­க­ளதோ, எனதோ தேவைக்­காக சட்­டமா அதிபர் எத­னையும் செய்­ய­மாட்டார். அவர் சட்­டத்­தின்­படி நட­வ­டிக்கை எடுப்பார். தவ­றுகள் நிகழ்ந்­தி­ருப்­ப­தாக கண்­டு­பி­டிக்­கப்­பட்டு இரண்டு மாதங்­களே ஆகின்றன. எனவே அவர் தேவை­யா­ன­நே­ரத்தில் நட­வ­டிக்கை எடுப்பார்.

கேள்வி: குளி­யாப்­பிட்­டியில் அமைக்­கப்­பட்­டுள்ள வாகன உற்­பத்தி நிலையம் வொக்ஸ் வொகன் நிறு­வ­னத்­தி­னு­டை­யதா?

பதில்: யார் கூறி­யது? அங்கு வாகன உற்­பத்தி நிறு­வ­னமே தொடங்­கப்­ப­ட­வுள்­ளது. முதலில் வொ க்ஸ் வொகன் நிறு­வ­னத்­துடன் பேசப்­பட்­டது. ஆனால் பின்னர் அந்த நிறு­வனும் அதனை மறுத்­து­விட்­டது. தற்போது வேறு ஒரு நிறுவனம் அதனை செய்கின்றது. அவ்வளவுதான்.

கேள்வி: முதலீட்டுச் சபையின் இணை யதளத்தில் வொக்ஸ் வொகன் நிறுவனத்தின் முதலீடு என குறிப்பிடப்பட்டிருந்ததே?

பதில்: இலங்கையின் முதலீட்டுச் சபை யின் இணையத்தளம் என்பதனை மறக்க வேண்டாம். இதுபோன்ற காரணங்க ளி னால்தான் எமது நாடு இந்த நிலையில் இருக்கின்றது. இல்லாவிடின் உலகின் அனைத்து முதலீடுகளும் எமது நாட்டி லேயே இருக்கும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-2

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this