Sign in to follow this  
நவீனன்

இனவாதத்தை தூண்டாமலிருப்பது கடினமாயின் கடலில் குதியுங்கள்

Recommended Posts

இன­வா­தத்தை தூண்­டா­ம­லி­ருப்­பது கடி­ன­மாயின் கடலில் குதி­யுங்கள்

mano2-deb8dc752211f9c8ea4e4677da4a9b9d22dd0cea.jpg

 

இன­வா­தி­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்­து­விட்­டது என்­கிறார் மனோ
(க.கம­ல­நாதன்)

தமிழ், சிங்­கள, முஸ்லிம் என இன­வா­திகள் எவ ராக இருப்­பினும் அவர்­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­ளாது, அவர்­களை வலுப்­ப­டுத்­திய காலம் மறைந்து போய்­விட்­டது. எனவே, இன­வா­திகள் நாட்டை சீர­ழிக்க இட­ம­ளிக்கக் கூடாது.

அவ்­வாறு இன­வாதம் பேசி நாட்டை சீர­ழிக்­காமல் இருப்­பது தமக்கு கடினம் என்று நினைப்­ப­வர்கள் கடலில் சென்று குதி­யுங்கள் என தேசிய சக­வாழ்வு, நல்­லி­ணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். 

ஹெக்டர் கொப்­பே­க­டுவ கம­நல ஆராச்சி மத்­திய நிலை­யத்தின் கேட்போர் கூடத்தில் அர­ச­கரும் மொழிகள் அமைச்சின் ஏற்­பாட்டில் இடம்­பெற்ற 50 கொழும்பு மாவட்ட பாட­சா­லை­களின் நூல­கங்­க­ளுக்கு புத்­த­கங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

இன்று ஜன­நா­ய­கத்­திற்கு முர­ணாக அர­சாங்­கத்­தினை மாற்­றி­ய­மைக்கும் முயற்­சிகள் இடம்­பெற்று வரு­கின்­றன. ஆனால் நாம் தொடர்ந்தும் அர­சி­யலில் நீடிக்கும் நோக்கில் மக்கள் இருக்­கு­மாறு கூறி­னாலும் உரிய தரு­ணத்தில் அர­சியல் வாழ்க்­கைக்கு விடை கொடுப்பேன்.

காரணம் புதி­ய­வர்­களை அர­சியல் களத்தில் உள்­நு­ழைக்கும் போது மாத்­திரம் தான் புதிய விட­யங்கள் உரு­வாகும். அதனால் தான் இந்த நாட்­டினை பிளவு படா­தா­கவும் ஒற்­றுமை மிக்­க­தா­கவும் மாற்ற முடியும்.

வர­லாற்றில் இந்த விட­யத்தில் தான் நாம் தவ­றி­ழைத்தோம். எனவே அந்த விட­யங்­களை மீள் திருத்­தி­ய­மைக்க முயற்­சிக்­கின்ற நாம் மீண்டும் அந்த தவ­று­களை செய்ய எவ­ருக்கும் இட­ம­ளிக்க கூடாது. எனவே இனம், மதம் உள்­ளிட்ட விட­யங்­களை கடந்து இலங்­கையர் என்ற கூறையின் கீழி­ருந்து நாம் செயற்­பட வேண்டும்.

கடந்த காலங்­களில் இலங்­கையர் என்­ப­தி­லி­ருந்து விலகி தமது தனிப்­பட்ட இன அடை­யா­ளங்­களை முன்­னிலை படுத்திச் செயற்­பட முனைந்­த­மை­யி­னா­லேயே பல நெருக்­க­டிகள் ஏற்­பட்­டன.தற்­போது இலங்­கையில் 19 மொழி­களை பேசு­கின்ற மக்கள் வாழ்­கின்­றனர் பிர­தான மொழிகள் நான்கு உள்­ளன. இவர்­களின் தனித்­து­வங்­க­ளையும் அடை­யா­ளப்­ப­டுத்திக் கொண்டு இலங்­கையர் என்று வாழ­வேண்டும்.

எவ்­வா­றா­யினும் தற்­போ­துள்ள பெரி­ய­வர்­களை திருத்­து­வதும் அவர்­க­ளது எண்­ணப்­பா­டு­களில் மாற்றம் செய்­வதும் கடி­ன­மாகும் அதனால் அவர்­களை விடுத்து எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு சிறந்த பாடங்­களை கற்­பித்து அவர்­களை வலுப்­ப­டுத்த வேண்­டி­யதே மிக அவ­சி­ய­மா­ன­தாகும்.

இல்­லா­விடின் நாடு துண்­டாகி போகும் அதற்கு அர­சாங்கம் ஒரு­போதும் இடம்­பெ­றாது.

அதனால் தற்­போது எமது நாட்டில் உள்ள தமிழ,முஸ்லீம்,சிங்­கள இன­வா­தி­களை அர­சாங்கம் கண்­டு­கொள்­வ­தில்லை தமிழ் அவ­ரு­களை வலுப்­ப­டுத்தி காலம் மறைந்­து­விட்­டது. எனவே தொடர்ந்தும் நாட்டை சீர­ழிக்கும் நோக்கில் இன­வாதம் பேசு­ப­வர்கள் அந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து விடு­பட வேண்டும். அவ்­வாறு முடி­யா­தாயின் இன­வாத்­தினை பரப்­பாமல் இருக்க முடி­யா­தாயின் கடலில் குதி­யுங்கள்.

இவர்கள் அம்­பாந்­தோட்டை விவ­கா­ரத்­தை­னயும் பெரி­து­ப­டுத்தி உரு­வாக்­கப்­ட­வுள்ள புதிய தொழில் வாய்ப்­புக்­களை தடுக்கும் முயற்­சியில் இவர்கள் ஈடு­பட்­டுள்­ளனர். அம்­பாந்­தோட்டை மக்­க­ளுக்கு அந்த அபி­வி­ருத்தி அவ­சியம் இல்லை எனின் அதனை கொழும்பில் வாழும் மக்­க­ளுக்கு செய்­துக்­கொ­டுக்க வேண்டும்.

அதனால் எதிர்­கால சந்­த­தி­யி­ன­ருக்கு செய்­யப்­படும் சேவை­க­ளு்­ககு முட்­டுக்­கட்­டை­யாக எவரும் செயற்­ப­டக்­கூ­டாது. அதேபோல் கடந்த காலங்­களில் வடக்கில் உள்ள தமி­ழர்­களும் கிழக்கில் உள்ள சிங்­க­ள­வர்­களும் தமது பிர­தி­நி­தி­க­ளாக செய்த அர­சி­யல்­வா­திகள் தமிழ் சிங்­கள விவ­கா­ரங்­களை பெரி­து­ப­டுத்தி தமிழர் தமிழ் மாத்திரம் தான் கற்க வேண்டும் சிங்களவர் சிங்களம் மாத்திரம் தான் கற்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

அவர்களின் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி ஆங்கிலம் கற்பித்தனர். அதனால் அவர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட மக்கள்தான் நெருக்கடிகளை சந்திக்கின்றனர். அதனால் எதிர்காலத்திலும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க கூடாது என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this