Jump to content

ஐ. சி. சி.யில் முழு அந்தஸ்து பெற ஆப்கானிஸ்தான் விருப்பம்


Recommended Posts

ஐ. சி. சி.யில் முழு அந்­தஸ்து பெற ஆப்­கா­னிஸ்தான் விருப்பம்
 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் முழு அந்­தஸ்து பெறு­வ­தற்­கான தனது விருப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. எனினும் இதற்­கான விண்­ணப்­பத்தை ஆப்­கா­னிஸ்தான் இன்னும் சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மாக சமர்ப்­பிக்­க­வில்லை.

 

ஆப்­கா­னிஸ்தான் தனது விண்­ணப்­பத்தை அடுத்த மாதம் சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. அதன் பின்னர் இந்த விண்­ணப்பம் குறித்து சர்­வ­தேச கிரிக்கெட் பேரவைக் கூட்­டத்தில் கலந்­தா­லோ­சிக்­கப்­படும்.

 

21761afghanistan.jpg

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் திருப்­திக்­கு­ரிய தேவைகள் அடங்­கிய விரி­வான அறிக்கை ஒன்றை ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் சபை தயா­ரித்து வரு­கின்­றது.

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் முழு அந்­தஸ்து பெற­வேண்­டு­மானால் அதற்­காக விண்­ணப்­பிக்கும் நாடு சகல வச­தி­க­ளை­யும்­கொண்ட கிரிக்கெட் மற்றும் நிரு­வாகக் கட்­ட­மைப்பைக் கொண்­டி­ருப்­பது மிகவும் அவ­சி­ய­மாகும்.

 

டெஸ்ட் கிரிக்கெட் விளை­யாட்டில் ஈடு­ப­டு­வ­தற்கு முன்னர் ஒரு நாடு உள்­ளூரில் 3 அல்­லது 4 நாள் முதல் தர கிரிக்கெட் போட்­டி­களை தொடர்ச்­சி­யாக நடத்­தி­யி­ருக்க வேண்டும் என்­பது ஐ. சி. சி.யின் நிய­தி­களில் ஒன்­றாகும்.

 

உயர் மட்ட கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டு­வ­தற்­காக பல அணி­க­ளையும் பன்­ம­டங்கு வீரர்­க­ளையும் ஒரு நாடு கொண்­டி­ருக்­வேண்டும் என்­பது சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் நிய­தி­களில் ஒன்­றாகும்.

 

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் இணைக்­கப்­பட்ட நாடாக 2001இல் சேர்க்­கப்­பட்ட ஆப்­கா­னிஸ்தான் 12 வரு­டங்கள் கழித்து இணை உறுப்பு நாடாக அந்­தஸ்து பெற்­றது.

 

ஆப்­கா­னிஸ்தான் இது­வரை 70 சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யாடி 35 போட்­டி­களில் வெற்­றி­பெற்­றுள்­ளது. 2015இல் நடை­பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளிலும் ஆப்­கா­னிஸ்தான் பங்­கேற்­றி­ருந்­தது.

 

51 சர்­வ­தேச இரு­பது கிரிக்கெட் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள ஆப்­கா­னிஸ்தான் அவற்றில் 32 போட்­டி­களில் வெற்­றியை சுவைத்­துள்­ளது. நான்கு உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயங்களில் விளையாடியுள்ள ஆப்கானிஸ் தான், சர்வதேச ஒருநாள் தரநிலை வரிசையில் 10ஆம் இடத்திலும் உலக இருபது 20 தரநிலை வரிசையில் 9 ஆம் இடத்திலும் இருக்கின்றது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21761#sthash.0cIHG89f.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.