Sign in to follow this  
நவீனன்

தற்போதைய காலநிலையை கருதி பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரிக்கை

Recommended Posts

தற்போதைய காலநிலையை கருதி பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரிக்கை
 
 
தற்போதைய காலநிலையை கருதி பாடசாலை நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கோரிக்கை
நாடளாவிய ரீதியில் நிலவும் அசாதாரண காலநிலையைக் கருத்திற்கொண்டு பாடசாலைகளை ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்ற த்தைக் கொண்டுவருவது குறித்து கல்வி அமைச்சு சாதகமாகப் பரிசீலிக்க வேண்டுமென கோரிக்கையொன்று முன்வைக்கப்ப ட்டுள்ளது. 
 
இது தொடர்பான கோரிக்கையை இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகளின் கிழக்கு மாகாண சங்கம் விடுத்துள்ளது. இது தொடர்பாக கல்வி  அமைச்சுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 
நாடளாவிய ரீதியில் தற்போது மிகவும் குளிரான காலநிலை நிலவுகிறது. குளிர்காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் ஏற்படு கின்றன. பாடசாலை மாணவர்கள் முதல் அரச ஊழியர்கள் வரை நேர காலத்துக்கு தமது கடமைகளுக்குச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
 
தற்போதைய குளிரான காலநிலை காலை 8.30 மணிக்குப் பின்னரே ஓரளவு தணிகிறது. பின்னர் மாலை நான்கு மணியானதும் மீண்டும் குளிர் காலநிலையேற்படுவதுடன் சளி, காய்ச்சல் என்பன ஏற்படுகின்றது. 
 
பாடசாலை மாணவர்கள் குறிப்பாக ஆரம்ப வகுப்பு மாணவர்கள் அதிகாலை வேளையில் நித்திரை விட்டெழும்பி காலை 7.30மணிக்கு  பாடசாலைக்குச் செல்வதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
 
எனவே பாடசாலைகள் தொடங்கும் நேரத்தையும் முடியும் நேரத்தையும் காலநிலை மாற்றத்திற்கேற்ப மாற்றியமைக்குமாறும் இவ்வாறான மாற்றங்கள் உலக நாடுகளில் காலநிலைக்கு ஏற்றவாறு மாற்றப்படுவதாகவும் மேற்படி சங்கச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்

http://onlineuthayan.com/news/22574

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this