Sign in to follow this  
நவீனன்

தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

Recommended Posts

தமிழக சட்டப்பேரவை ஜன.23-ல் கூடுகிறது: ஆளுநர் உரையாற்றுகிறார்

 

 
 
 
 
tn_secretariat_2_2358985f.jpg
 
 
 

தமிழக சட்டப்பேரவையை வரும் 23-ம் தேதி ஆளுநர் கூட்டியிருப்பதாக சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், 'தமிழக ஆளுநர் இந்திய அரசமைப்பு பிரிவு 174(1)-ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை - 600009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்.

இந்திய அரசமைப்பு, பிரிவு 176 (1)-ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் 2017-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 23-ஆம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெ. மறைவுக்குப் பின் முதல் கூட்டத்தொடர்:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் முதன்முறையாக தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. இதனால், கூட்டத்தில் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப் பட வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது. மேலும், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 5 நாட்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/தமிழக-சட்டப்பேரவை-ஜன23ல்-கூடுகிறது-ஆளுநர்-உரையாற்றுகிறார்/article9474551.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this