Jump to content

Recommended Posts

இலங்கையில் வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் இன்று புதன்கிழமை தமிழர்கள் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது.

வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அதிகார பகிர்வு கோரி போராட்டம்

 

திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாட்டில் திருகோணமலை நகரில் சட்ட உதவி மையத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது

வடக்கு - கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு , வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய கலப்பு நீதிமன்றம் உருவாக்கல், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுல், சகல அரசியல் கைதிகளும் வி்டுதலை செய்தல், உள் நாட்டில் நடந்தேறிய சித்திரவதைகள் , படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக சிறப்பு பொறி முறை , வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியும் இழப்பீடும் கிடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை சர்வதேச சமூகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தும் வகையிலான இந்தப் போராட்டத்தின் முடிவில் கத்தோலிக்க ஆயர் ஊடாக ஐ .நா செயலாளர் நாயகத்திற்கு மனுவொன்றும் ஏற்பாட்டாளர்களினால் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த மனு சட்ட உதவி மையத்தில் நடைபெற்ற இது தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்ட திருகோணமலை ஆயர் கிருஸ்டியன் நோயால் இம்மானுவேலிடம் கையளிக்கப்பட்டது.'

  வடக்கு - கிழக்கு பகுதிகளுக்கு அதிகார பகிர்வு கோரி போராட்டம்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு காணப்பட்டனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் . மனித உரிமை ஆர்வலர்கள் மத குருமார்கள் உட்பட பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38582216

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.