Sign in to follow this  
போல்

செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது!

Recommended Posts

போல்    337
நல்லிணக்க பொறிமுறை குறித்த செயலணியின் பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

இந்த பரிந்துரையின் ஊடாக படையினருக்கு பாரிய அவமரியாதை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட கடற்படை அதிகாரியான ரியர் அட்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

உலகின் எந்தவொரு நாட்டிலும் படையினருக்கு புனர்வழ்வு அளிக்கப்பட்டதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

படையினருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென்ற பரிந்துரையின் ஊடாக படைவீரர்கள் விசரர்கள் என்றே கருதுகின்றார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இராணுவத்திற்கு எதிராக பயங்கரமான சில பரிந்துரைகள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/131404?ref=home

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By போல்
   பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் கையேற்கப்பட்டதை எதிர்த்து பொதுமகன் ஒருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
   யாழ்ப்பாணம் கந்தர்மடம் பிரதேசத்தைச் சேர்ந்த நடராஜா குணசேகரம் என்பவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
   முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தற்போதைய பாதுகாப்புச் செயலாளர், இராணுவத் தளபதி, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட ஆறுபேர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
   பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை மற்றும் 1990களில் இருந்து அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் காரணமாக தான் உள்ளிட்ட மூவாயிரம் பேர் இடத்துக்கிடம் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ நேர்ந்துள்ளதாகவும்,
   அத்துடன் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் குறித்த பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டிருப்பதாகவும்,
   எனவே காணி கையகப்படுத்தலை தடை செய்து பொதுமக்களின் காணிகளை திரும்ப வழங்குமாறு உததரவிடக் கோரி இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
   எனினும் பதில் மனுதாக்கல் செய்திருந்த இராணுவத்தளபதி குறித்த பிரதேசம் பாதுகாப்பு ரீதியாக முக்கியமான பிரதேசம் என்றும்,
   காணி கையகப்படுத்தல் நடவடிக்கைகள் நல்லதொரு நோக்கத்திற்காக காணி கையப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் முறைப்படியே கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தார்.
   இதனையடுத்து முறைப்பாட்டாளர் தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதை சரிவர நிரூபிக்கவில்லை என்று தெரிவித்து உச்சநீதிமன்றம் குறித்த மனுவை நிராகரித்துள்ளது.
   http://www.tamilwin.com/development/01/155665?ref=home-feed
  • By போல்
   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார்.
   இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
   அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.
   குறிப்பிபாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
    
   http://www.tamilwin.com/special/01/149757?ref=home-feed
  • By போல்
   இராணுவத்தின் கஜபா படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளார்.
   கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   குறித்த படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் உதய பெரேரா பணியாற்றி வரும் நிலையில், இந்தவாரம் அவர் ஓய்வு பெறவுள்ளார்.
   இந்நிலையில், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   இதேவேளை, இராணுவத் தலைமையகத்தில் பொது உதவி அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
   இந்த நிலையில் அவருக்கு மீண்டும் உயர்பதவி வழங்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   எவ்வாறாயினும், இறுதி கட்ட போரின் போது 58வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   http://www.tamilwin.com/security/01/143540?ref=home-feed
  • By போல்
   தகவல் அறியும் சட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைக்கு கொண்டு வந்த சில மணித்தியாலங்களே கடந்த நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் செய்தி சேகரிக்க வவுனியா பிராந்திய ஊடகவியலாளருக்கு வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார இன்று தடை விதித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் தலைமையின் கீழ் இ.போ.சபையினர், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர், வவுனியா வர்த்தக சங்கத்தினர், மக்கள் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெறுள்ளது.
   இ.போ.சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டம் மற்றும் வவுனியா புதிய பேருந்து நிலைய பிரச்சினை தொடர்பில் இதில் ஆராயப்பட்டன.
   இதன்போது கூட்டம் ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்னதாக செய்தி சேகரிக்க அனுமதித்த வவுனியா அரச அதிபர் கூட்டம் ஆரம்பமாகியதும் வவுனியா பிராந்திய ஊடகவியலாளர்களை வெளியேற்றியுள்ளார்.
   இதேவேளை, அமைச்சர் றிசாட் பதியுதீன், வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் சென்ற அவர்களது பிரத்தியேக ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
   இதேபோல் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் அங்கு நடந்தவற்றை வீடியோ மூலமும், புகைப்படங்களாகவும் பதிவு செய்து வெளியிட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
   இந்த நிலையில் பிராந்திய ஊடகவியலாளர்களை மட்டும் வெளியேற்றியமை எவ்வகையில் நியாயமானது என ஊடகவியலாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
   மேலும், இலங்கையில் தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்த சில மணித்தியாலங்களில் பிராந்திய ஊடகவியலாளருக்கு எதிரான ஊடக அடக்குமுறைச் சம்பவமாக இது பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   http://www.tamilwin.com/community/01/134411?ref=morenews
  • By போல்

    
   சிறிலங்காவில் நீண்ட கால யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் அதற்குப் பின்னரும் பல ஊடகவியலாளர்களின் படுகொலை மற்றும் காணாமலாக்கப்பட்டதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை தற்போது ஏமாற்றத்தை உண்டுபண்ணுகிறது என மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் உறவினர்கள் கூறினார்கள்.
   ஜனவரி 2015ல் மகிந்த ராஜபக்சவை எதிர்த்து மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது தனது தேர்தல் பரப்புரைகளில் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பும் கலாசாரமானது முடிவிற்குக் கொண்டுவரப்படும் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.
   ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சித்திரவதைக்கும் உள்ளாக்கப்பட்டதுடன் இன்னும் சில ஊடகவியலாளர்கள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டை விட்டே வெளியேறினர்.
   அதிபர் சிறிசேனவின் கடந்த இரண்டு ஆண்டு கால ஆட்சியில் இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதற்கான அறிகுறி காணப்பட்டது. இவர்களுள் இராணுவத்தினரே அதிகமானவர்களாவர்.
   கடந்த செவ்வாயன்று, காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக கொழும்பில் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கான அதிபர் ஆணைக்குழு ஒன்றை சிறிசேன நியமிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி அஞ்சல் அட்டைகளை அனுப்பினார்கள்.

   ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை மற்றும் ஜனவரி 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் தொலைக்காட்சி கலையகங்கள் அழிக்கப்பட்டமை போன்றவற்றை நினைவுகூரும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்த மாதத்தை ‘கறுப்பு ஜனவரி’ எனப் பெயரிட்டு நினைவுகூர்ந்தனர்.
   இதில் பங்குபற்றியவர்களில் கடத்தப்பட்ட தனது கணவரான பிரகீத் எக்னெலிகொடவிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகக் கண்டறிவதற்காக ஏழு ஆண்டுகளாகப் போராடிய சந்தியா எக்னெலிகொடவும் ஒருவராவார்.
   கடத்தப்பட்ட ஊடகவியலாளரும் கேலிச்சித்திர வடிவமைப்பாளருமான பிரகீத் எக்னெலிகொட ஊழல் மோசடி தொடர்பாகவும் அதிகாரத்துவம் மற்றும் ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம்  தொடர்பாகவும் எழுதியிருந்தார்.  2010 அதிபர் தேர்தலில் ராஜபக்சவின் அணிக்கு ஆதரவளித்த எக்னெலிகொட தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர் கடத்தப்பட்டார்.
   ‘பிரகீத்திற்கு எதிரி என எவரும் கிடையாது. ஆகவே இவர் கடத்தப்பட்டதற்கு மகிந்தவே பொறுப்பாவார். மகிந்தவும் கோத்தபாயவும் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும்’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
   தனது கணவர் இறந்து விட்டதாகவே விசாரணையாளர்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கடத்தப்பட்ட பிரகீத் இராணுவ முகாம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டு கிழக்குக் கரையோரத்திற்கு மாற்றப்பட்டதாக இறுதியில் தகவல் ஒன்று கிடைத்ததாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

   ‘எக்னெலிகொட உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடனேயே எங்களால் வாழ முடிகிறது. அதேவேளையில், இதனை நம்ப முடியாமலும் உள்ளது. ஏனெனில் குற்றப் புலனாய்வுத் துறையினர் எனது கணவர் உயிருடன் இல்லை என்றே என்னிடம் தெரிவித்தனர்’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
   நீதிக்கான நம்பிக்கையை சிறிசேன அரசாங்கம் எமக்குத் தந்ததாகவும் ஆனால் இதனுடைய அண்மைய நகர்வுகள் தனது நம்பிக்கையை தளர்வடையச் செய்துள்ளதாகவும் திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
   பிரகீத் கடத்தப்பட்ட வழக்கில் சந்தேகிக்கப்பட்ட  இராணுவ வீரர்களை எவ்வித அவசியமுமின்றித் தற்போதும் காவற்துறையினர் தடுத்து வைத்துள்ளதாக சிறிசேன தனது உரை ஒன்றில் விமர்சித்திருந்தமை இவர் நீதியைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கையை தகர்த்தமைக்கான காரணங்களில் ஒன்றாக உள்ளதாக திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
   அதிபர் சிறிசேன இவ்வாறு அறிவித்ததற்கு மறுநாள் எக்னெலிகொடவின் கடத்தலுடன் தொடர்புபட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த இராணுவத்தினர் மீண்டும் அவர்களது பழைய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஆகவே இந்தச் சம்பவமானது எக்னெலிகொட கடத்தப்பட்ட சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு சிறிலங்கா அரசின் ஆதரவு வழங்கப்பட்டமை தெளிவாகிறது என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.
   ‘2015ல் அதிபர் சிறிசேனவை நாங்கள் ஆட்சிக்குக் கொண்டு வந்தபோது சிறிசேன கொண்டிருந்த மனப்பாங்கு தற்போது மாறுபட்டுள்ளமை தெளிவாகிறது’ என திருமதி எக்னெலிகொட தெரிவித்தார்.

   தனது உரையானது நீதிமன்றின் தீர்ப்பில் செல்வாக்குச் செலுத்துவதை நோக்காகக் கொண்டிருக்கவில்லை என சிறிசேன பின்னர் தெரிவித்திருந்தார்.
   இவ்வாறான வழக்குகள் தொடர்பான விசாரணைகள் ‘பெரும் அதிருப்தியை’ வழங்குவதாக பத்திரிகை ஆசிரியரும் செயற்பாட்டாளருமான K.W.ஜனரஞ்சன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களும் ஏனைய குடிமக்களும் அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இவர் வலியுறுத்தியுள்ளார்.
   ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில், ஊடகவியலாளர்கள் ஊடக நெறிகளின் மீது கவனம் செலுத்தியதை விட தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிகளவில் கவனம் செலுத்தியிருந்தனர் என ஊடகவியலாளரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான டில்ருக்சி ஹந்துநெத்தி தெரிவித்தார்.
   சிறிலங்காவில் 26 ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் பல்வேறு படுகொலைகள் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டனர். ஆகவே இவ்வாறான கடந்த கால மீறல்கள் விசாரணை செய்யப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என டில்ருக்சி தெரிவித்தார்.
   ஆங்கிலத்தில் – KRISHAN FRANCIS
   வழிமூலம்      – Associated Press
   மொழியாக்கம் – நித்தியபாரதி
   http://www.puthinappalakai.net/2017/01/27/news/20984
  • By போல்
   கொஸ்கம - சாலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த சொத்துக்களின் பெறுமதி ஆயிரத்து 329 மில்லியன் ரூபா என அரசாங்கம் மதிப்பிட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எஸ்.லியனவல தெரிவித்துள்ளார். இந்த நிலையில், சேதமடைந்த சொத்துக்களுக்கு இதுவரை ஆயிரத்து 41 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
   அனர்த்தத்திற்கு உள்ளான சிலர் இழப்பீட்டுத் தொகை போதாதென்று குறிப்பிட்டமையால் இரண்டு மூன்று தடவை மதிப்பீடுகளை மேற்கொள்ள நேர்ந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
   எஞ்சியுள்ள இழப்பீட்டுத் தொகையையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
   http://www.tamilwin.com/community/01/131959?ref=home
  • By போல்
   போர்க்குற்ற விசாரணைக்கு கலப்புப் பொறிமுறையை நல்லிணக்கச் செயலணியின் அறிக்கை பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் செய ல ணியின் உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செயலணியின் அறிக்கை வெளியீட்டில் ஜனாதிபதி மைத்திரிபால கலந்துகொள்ளவில்லை. செயலணியின் பரிந்துரைக்கு தேசிய அரசின் அமைச்சர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
   இவ்வாறானதொரு சூழலிலேயே, நல்லிணக்கச் செயலணியின் 11 உறுப்பினர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சந்திப்பு இடம்பெறப் போவதை, நல்லிணக்கச் செயலணியின் செயலாளர் பாக்கியசோதி சரவணமுத்து உறுதி செய்தார்.
   ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங் கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பொறிமுறைகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கருத்து அறிவதற்காக நல்லிணக்கச் செயலணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்டது.
   மக்கள் கருத்துக் கணிப்பு நடத்தி கடந்த நவம்பர் மாதம் 17ஆம் திகதி அறிக்கை தயாரிக்கப்பட்டது. அறிக்கை கையளிப்புக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பல தடவைகள் நேரம் கோரப்பட்டன.
   மூன்று தடவைகள் இறுதி நேரத்தில் அறிக்கை கையளிப்பு இடைநிறுத்தப்பட்டன. டிசம்பர் மாதம் 21ஆம் திகதி இறுதித் தடவையாக அறிக்கை கையளிப்பு ஒத்திவைக்கப்பட்ட போது, ஜனவரி 3 ஆம் திகதி அறிக்கை கையளிப்பதற்கு நேரம் ஒதுக்கப்பட்டது.
   அன்றைய தினமும் ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், அறிக்கை பகிரங்கப்படுத்தப்படும் என்று நல்லிணக்கச் செயலணி அறிவித்திருந்தது.
   ஜனவரி 3ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால அறிக்கையைப் பெற்றுக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதும், அந்த நிகழ்வில் அவர் பங்கேற்கவில்லை. ஆனாலும், அறிக்கை திட்டமிட்டபடி அவரின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
   போர்க்குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறைக்கு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேசிய அரசின் அமைச்சர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
   ஜனாதிபதி மைத்திரிபால மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமது நிலைப்பாட்டை இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடவில்லை.
   இந்த நிலையில் நல்லிணக்கச் செயலணி யின் உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
   http://www.tamilwin.com/politics/01/132000?ref=home
  • By நவீனன்
   சித்திரவதைகள் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வு போக்கும் பின்பற்றப்படாது – சட்ட மா அதிபர்

   குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
   சித்திரவதைகள் விவகாரத்தில் எவ்வித நெகிழ்வு போக்கும் பின்பற்றப்படாது என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார். சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் அமைப்புக் கூட்டத் தொடரில் பங்கேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
   மனித உரிமை பாதுகாப்பு அதனை மேம்படுத்துதல் தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தடுத்து வைக்கப்படும் போது இடம்பெறும் சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையானதும் சுயாதீனமானதுமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
   சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவான வகையில் மனித உரிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள சட்ட மா அதிபர்; பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் இதில் சித்திரவதைகளுக்கு எதிரான சரத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
   http://globaltamilnews.net/archives/7139
  • By போல்
   முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை மந்தநிலை அடைந்துள்ளதாக மீனவசமூகம் கருத்து வெளியிட்டுள்ளனர்.
   முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்து முகாம் அமைத்துள்ளதாகவும், இது உச்சநிலையை அடைந்துள்ளதாகவும் மீனவசமூகம் தெரிவித்துள்ளது.
   இந்நிலையில் குறித்த அளவுக் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி அளவீடு செய்ய முற்பட்ட போது மக்களின் எதிர்ப்பின் காரணத்தினால் நில அளவீடு கைவிடப்பட்டுள்ளது.
   அதன் பின்னர் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி பொலிஸாரின் பாதுகாப்புடன் அளவீடு செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட சமயம் அன்றைய தினமும் பொதுமக்களின் எதிர்ப்பு அதிகரித்ததன் காரணமாக மாவட்ட அரசாங்க அதிபர் தலையிட்டு அளவீடு செய்யும் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தினார்.
   கடந்த மாதம் ஒருங்கிணைப்புக் குழுகூட்டத்தில்(19-09-2016) குறித்த காணிகளை கடற்படையினருக்கு வழங்குவது தொடர்பான ஆவணங்கள் அதிகாரிகளினால் சமர்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் அதற்கான அனுமதிகளை வழங்கக் கூடாது என்று பொதுமக்கள் பிரதிநிதிகளால், உறுதிப்படுத்தப்பட்ட பொதுமக்களின் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளது.
   குறித்த காணிகளை கடற்படையினருக்கு வழங்குவதன் மூலம் ஒட்டுமொத்த கடற்தொழில் வளத்தையும் மீனவ சமூகம் இழந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனைத்தடுக்க பொதுமக்களின் 358 ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
   அதேவேளை இதில் உள்ள அரச காணிகள், கடற்தொழில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கடந்த மாதம் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   http://www.tamilwin.com/community/01/121511?ref=home
  • By போல்
   மன்னார் முசலி பிரதேச பகுதியில் இன்று ஏற்பட்டிருந்த பதற்ற நிலையை அடுத்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.
   குறித்த பகுதியில் இன்று இரவு ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கு பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
   குறித்த பகுதியில் அண்மைய நாட்களில் வீடுகளில் கொள்ளையிட்டு வந்த ஒருவரை இன்று பொது மக்கள் மடக்கி பிடித்துள்ள நிலையில், பொது மக்களுக்கும், கடற்படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
   இந்நிலையிலேயே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உண்மையில் அங்கு இடம்பெற்ற சம்பவம் என்ன..?
   தற்போது கடற்படையினருடைய நிலைப்பாடு எப்படியிருக்கின்றது..? மன்னார் மாவட்டத்தினுடைய தற்போதைய சூழ்நிலை எப்படியிருக்கின்றது..? போன்ற விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
    
   http://www.tamilwin.com/special/01/121489?ref=home