Sign in to follow this  
நவீனன்

தீபாவுக்கு குவியும் ஆதரவு: அதிர்ச்சியில் சசி வட்டாரம்

Recommended Posts

தீபாவுக்கு குவியும் ஆதரவு:
அதிர்ச்சியில் சசி வட்டாரம்
 
 
 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், தீபாவுக்கு, 60 சதவீத, அ.தி.மு.க., தொண்டர்களும், 50 சதவீத பெண்களும், தங்கள் ஆதரவை தெரிவித்துள்ள தாக, உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

 

Tamil_News_large_168880320170112001048_318_219.jpg

இதனால், கதி கலங்கியுள்ள, சசி வட்டாரம், மாவட்டம் தோறும் சமாதான முயற்சியை தீவிரப்படுத்த, மாவட்ட செயலர்களுக்கு, அ.தி.மு.க., தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.சேலம், வேலுார், மதுரை, ஈரோடு, நெல்லை, துாத்துக்குடி உட்பட, தமிழகம் முழுவதும், தீபா பேரவை துவங்கி, உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. 'வாட்ஸ் ஆப்' வழியாகவும், ஆதரவு பெருகுகிறது.

அ.தி.மு.க.,வில் பதவியில் உள்ளவர்கள், தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதாக தெரிவித்தபோதும், ரகசியமாக குழி பறிக்கும் வேலையையும் செய்து வருவதாக கூறப்படு கிறது. பல இடங்களில், தீபா பேரவைக்கு தேவையான நிதி மற்றும் ஆதரவை, மறைமுக மாக வழங்குவதாக, தகவல் பரவி வருகிறது.

இதுகுறித்து, சந்தேகம் எழுந்ததும், சசி வட்டாரத்திற்கு, நெருக்கமான தனியார் ஏஜென்சி ஒன்று, ஜன., 1 - 9 வரை, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் ரகசியமாக ஆய்வு நடத்தியது. அதை மோப்பம் பிடித்த உளவு துறையினர், தனியார் நிறுவனத்துடன் கைகோர்த்து, தங்கள் தரப்பிலான அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.

அதில், தமிழகத்தின், 12 மாநகராட்சிகளில், வார்டு வாரியாக, இரண்டாம் கட்ட நிர்வாகிகள் இணைந்து, ஆங்காங்கே தீபா பேரவையை உருவாக்கி வருகின்றனர். அவர்களுக்கு, 60

சதவீத அ.தி.மு.க., தொண்டர்கள் ஆதரவும், 50 சதவீத பெண்கள் ஆதரவும் கிடைத்துள்ளது. அதே போல், கட்சி நிர்வாக ரீதியாக பிரிக்கப் பட்டுள்ள, 54 மாவட்டங்களில், பல மாவட்ட முதல் கட்ட தலைவர்கள் கூட, தீபாவுக்கு மறைமுக ஆதரவு அளிக்கின்றனர்.

இந்நிலையில், ஜெயலலிதா இறந்து, ஒரு மாதம் கூட முடியாத நிலையில், பொதுச்செயலர் பதவியை சசிகலா ஏற்றதை பட்டாசுகள்வெடித்தும், இனிப்பு வழங்கியதும், பெண்கள் மத்தியில், கோபத்தை ஏற்படுத்தி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த தலைமை, ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட செயலர்கள் மட்டுமின்றி, மாஜி நிர்வாகிகளை அழைத்து, தீபா ஆதரவாளர் களை வளைத்துபோட உத்தரவிட்டுள்ளது.

பல மாவட்ட செயலர்கள், தீபா ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தோல்வியை சந்தித்துள்ள தால், மாவட்ட செயலர்களே அணி மாறுவது குறித்து, ஆலோசிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கட்சியை மீட்க...:

கரூர் மாவட்ட தீபா ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம், காமராஜபுரத்தில் நேற்று நடந்தது. 'எம்.ஜி.ஆரின், 100வது பிறந்த நாளை கொண்டாடு வது; அ.தி.மு.க.,வை, தீபா வழி நடத்த வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், முன்னாள் எம்.எல்.ஏ., சவுந்திரராஜன் பேசுகையில்,''ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சி யின் தலைமை தகுதி இல்லாதவர்களிடம் சென்று விட்டது. இதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு தொண்டனுக்கும் உண்டு. அதற்கு, ஜெயலலிதாவின் உண்மையான வாரிசான, தீபா தலைமையை தொண்டர்கள் ஏற்கவேண்டும்,'' என்றார்.

ஈரோட்டில், புதிய கட்சியை தொடங்கிய, ஜெயலலிதாவின் விசுவாசிகளை சந்திப்பதற்காக, தீபா நேற்று நேரம் ஒதுக்கியிருந்தார். ஆனால், ஒரு நாள் முன்னதாக, நேற்று முன் தினம் இரவே, சந்தித்து,பத்திரமாக ஊருக்கு செல்ல அறிவுறுத்தி னார். தீபாவை நேரில் சந்தித்த, ஈரோட்டை சேர்ந்த பாரூக் என்பவர் கூறுகையில்,''ஒரு நாள்

 

முன்ன தாகவே, திடீரென அழைத்தார். உடனடியாக சென்று சந்தித்தோம். 15 நிமிடங் கள் கலந்துரையாடி னார். அரசியல் தாண்டி ஒவ்வொருவரின் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்,'' என்றார்.

தீபா ஆதரவாளர்கள் விபரம் சசி குடும்பத்தினர் சேகரிப்பு

தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் நிர்வாகிகள் குறித்த விபரங்களை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.ஜெ., அண்ணன் மகள் தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும், தீபா பேரவை என்ற பெயரில், உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

பல்வேறு மாவட்டங்களில், தீபா பேரவை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. தீபா ஆதரவாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது, சசிகலா குடும்பத்தினரிடையே, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், தீபாவிற்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகள் யார் என்ற விபரத்தை, சசிகலா குடும்பத்தினர் சேகரித்து வருகின்றனர்.

இதை தீபா ஆதரவாளர்கள், தங்களது, 'வாட்ஸ் ஆப்' குழுவில் பகிர்ந்துள்ளனர். அதில், 'விரை வில், சசி குடும்பத்தினர் மிரட்டலில் ஈடுபடுவர்; யாரும் பயப்பட வேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1688803

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this