Jump to content

யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை


Recommended Posts

யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை
 
 
யாழில் மாமர செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை
யாழில் மாமரச் செய்கையை ஊக்குவிக்க மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளததாக. யாழ். மாவட்ட விவசா யத் திணைக்களத்தின் மேற்பார்வையாளர் இளங்கோபன் தெரிவித்தார். இது பற்றி அவர்மேலும் தெரிவிக்கையில்
 
யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாமரச்செய்கையை இவ் வருடம் ஊக்குவிக்கும் முகமாக மாகாண நிதி முலம் 2 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு 440 மாமரக்கன்றுகள் நடுகைசெய்யப்பட்டுள்ளது.மாமரமானது 25க்கு 25 அடி என்ற இடைவெளியில் நடுகை செய்யப்பட்டு பெரும் விருட்சங்களாக வளர அனுமதிக்கப்படுகின்றது. இதனால் மாம ரத்தில் சகல கிளைகளுக்கும் போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காத காரணத்தினால் அவற்றின் ஒளித்தொகுப்பானது குறைவ டைந்து மாமரங்கள் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.
 
இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான மரக்கிளைகளை கத்தரித்து முழுக்கிளைகள் மீதும் சூரிய ஒளியை பரவச் செய்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யப்பட்டது. தற்போது செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்கு செறிவான மாமரச் செய்கை எனும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்த முறையில் மாமரங்களுக்கு இடையில் 10 க்கு 10 அடி என்னும் இடைவெளியில் நடுகை செய்யப்படும். அத்துடன் மரக்கன்றுகள் நடுகை செய்து அது வளர்ச்சியடைந்து ஏறத்தாழ இரண்டரை அடி உயரம் அடையும்போது உரிய பயிற்றுவித்தல் மேற்கொள்ளப்பட்டு மாமரத்தின் அதி உச்ச வளர்ச்சியாக 15 அடி உயரத்தில் வைத்து பராமரிக்கப்படும். இந்த முறையில் மாமரக்கன்றுகளுக்கு ஏற்படும் நோய், பூச்சி பீடைகளை இலகுவான முறையில் முகாமை த்துவம் செய்யமுடியும்.
 
இதனால் ஒரு மரத்திலிருந்து பெறப்படும் மாம்பழங்களின் உற்பத்தியும் அதி உயர்வாகக் காணப்படும். செறிவான மாமரச் செய்கை திட்டத்தின் கீழ் கைதடி, சாவகச்சேரி, உடுவில், சண்டிலிப்பாய்,தெல்லிப்பழை புத்தூர் ,உரும்பிராய் போன்ற இடங்களில் 80 பயனா ளிகள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் 110 தொம் ஈயேசி ஒட்டு மாங்கன்றுகள் படி  மொத்தமாக 8 ஆயிரத்து 800 கன்றுகள் 50வீத மானிய அடிப்படையில் வழங்கப்பட்டன. 
 
நடுகை செய்யப்பட்ட மாமரக்கன்றுகளை உரிய முறையில் பயிற்றுவிப்பதற்கு கத்தரிக்கும் கருவிகள் 50 வீத மானிய அடிப்படை யில் தெரிவு செய்யப்பட்ட 24 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சொட்டு நீர்ப்பாசனத் தொகுதி 50 வீத மானிய அடி ப்படையில் 13 பயனாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
 
இதன்முலம் இனிவரும் காலங்களில் மாமரசெய்கை யைஅதிகரிக்கமுடியும்.அதேவேளை சிறந்த தரமான மாம்பழங்களையும் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

http://www.onlineuthayan.com/news/22527

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.