Sign in to follow this  
Followers 0
நவீனன்

ரவிராஜ் தீர்ப்பை இரத்து செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை

2 posts in this topic

ரவிராஜ் தீர்ப்பை இரத்து செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை
 
 
ரவிராஜ் தீர்ப்பை இரத்து செய்ய சட்டமா அதிபர் கோரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பை ரத்துச் செய்து விட்டு, வழக்கு விசாரணைகளை மீண்டும் நடத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
 
அறங்கூறனர் சபையின் முன் வழக்கை விசாரித்த விசேட மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கு சம்பந்தமான சட்டரீதியான விடயங்களை போதுமான வகையில் தெளிவுப்படுத்தவில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கூறியுள்ளார்.
 
அத்துடன் வழக்கு விசாரணைகளை நள்ளிரவு வரை நடத்தியதன் மூலம் முறைப்பாட்டாளர் தரப்பிற்கு அநீதி ஏற்பட்டுள்ளது எனவும் சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த டிசம்பர் 24ம் திகதி அதிகாலை வழங்கப்பட்டதுடன் குற்றம் சுமத்தப்பட்டிருந்த 5 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..

http://www.onlineuthayan.com/news/22537

Share this post


Link to post
Share on other sites

ரவிராஜ் எம்.பி. படுகொலை வழக்கில் மேன்­மு­றை­யீடு செய்தார் சட்­டமா அதிபர்

Sp06-d14e87d1a96d3ceeb1fb555c93282b0ce7e7f37e.jpg

 

(எம்.எப்.எம்.பஸீர்)

யாழ். மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நட­ராஜா ரவிராஜ் மற்றும் அவ­ரது மெய்ப்பாது­கா­வலர் பொலிஸ் கான்ஸ்­டபிள் லக் ஷ்மன் லொக்­கு­வெல்ல ஆகி­யோரின் படு­கொலை தொடர்பில் கொழும்பு மேல் நீதி­மன்றம் அளித்த தீர்ப்பை ரத்துச் செய்து மீள் விசா­ரணை ஒன்­றுக்கு உத்­த­ர­விட வேண்டும் என சட்­டமா அதிபர் ஜயந்த ஜய­சூ­ரிய மேன் முறை­யீடு செய்­துள்ளார்.  

இரு பிர­தான விட­யங்­களை சுட்­டிக்­காட்­டியே அவர் இம் மேன் முறை­யீட்டை அவர் செய்­துள்ளார்.

மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் அவர் இதனை தாக்கல் செய்­துள்ளார்.

குறித்த கொலை வழக்கை விசா­ரணை செய்த சிங்­களம் பேசும் விஷேட ஜூரிகள் சபை முன்­னி­லையில், நீதி­பதி சட்ட ரீதி­யி­லான விட­யங்­களை போது­மான அளவு சொல்­லிக்­கொ­டுக்­க­வில்லை எனவும் நள்­ளி­ரவு வரை வழக்கு விசா­ர­ணையை முன்­னெ­டுத்துச் சென்­றதால் முறைப்­பாட்­டாளர் தரப்­புக்கு அது பாதிப்­பாக அமைந்­து­விட்­டது எனவும் சுட்­டிக்­காட்­டியே வழக்கை மீள விசா­ர­ணைக்கு உத்­த­ர­வி­டு­மாறு சட்ட மா அதிபர் கோரி­யுள்ளார்.

 நேற்று முன் தினம் பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்பில் மேன் முறை­யீட்டு மன்றில் வழக்கை மீள விசா­ரணை செய்ய வேண்டும் என கோரி மேன் முறை­யீடு செய்­தி­ருந்­தது. இந் நிலை­யி­லேயே நேற்று சட்ட மா அதிபர் மேன் முறை­யீடு செய்­துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10 ஆம் திகதி ரவி­ராஜும் அவ­ரது மெய் பாது­கா­வ­லரும் அடை­யாளம் தெரி­யா­தோரால் நார­ஹேன்­பிட்டி மாதா வீதியில் வைத்து கொல்­லப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து குற்றப் புல­னா­யவுப் பிரி­வினர் சுமார் ஒரு தசாப்த காலம் விசா­ரணை செய்­தனர். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் ரவிராஜ் கொலை தொடர்பில் 6 சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ராக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்தார்.

இதில் முதல் பிர­தி­வா­தி­யான பழ­னி­சாமி சுரேஷ் இறந்து விட்­ட­தாக நீதி­மன்றம் சாட்­சி­யங்­களை வைத்து தீர்­மா­னிக்க, ஏனைய 5 பேருக்கும் எதி­ராக சிங்­களம் பேசும் ஜூரிகள் முன் விசா­ரணை இடம்­பெற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி அதிகாலை 12.20 மணிக்கு தீர்ப்பளிக்கப்பட்டு குற்றம் சாட்டப்பட்டிருந்த 5 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0