• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா!

Recommended Posts

#ObamaFarewell அதிபராக இறுதி உரையிலும் தன் மனைவிக்கு மதிப்பளித்த ஒபாமா!

Obama

அமெரிக்க அதிபர் ஒபாமா சிக்காகோவில் ’Farewell’ உரையாற்றி வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20-ம் தேதி நிறைவடைகிறது. அதிபராக ஒபாமா பேசும் கடைசி உரை என்பதால் ஒபாமாவுக்கு பிரியாவிடையளிக்க  ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டுள்ளனர். ஒபாமா பேசத் தொடங்கியதும், திரண்டிருந்த மக்கள் ’மேலும் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருங்கள் ஒபாமா’, என்று கோஷமிட்டனர். அதற்கு சிரித்து கொண்டே மறுப்பு தெரிவித்துவிட்டார்.

ஒபாமா பேசுகையில்,’ கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவில் எந்த பயங்கரவாத தாக்குதல் நடைபெறவில்லை. முன்பை விட அமெரிக்கா வலிமை அடைந்துள்ளது. அமெரிக்காவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டு உணர்வை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்’, என்றார்.

தனது மனைவியை பற்றி பேசிய ஒபாமா,’ மிச்செல் .. கடந்த 25 ஆண்டுகளாக நீ என் பிள்ளைகளுக்கு தாயாகவும், எனக்கு மனைவியாகவும் மட்டுமல்ல..என் சிறந்த தோழியாக இருந்தாய். நீ என்னையும் நம் நாட்டையும் பெருமைப்பட செய்திருக்கிறாய். இனி வரும் தலைமுறையினருக்கு நீ சிறந்த முன்மாதிரியாக இருப்பாய்.!’, என்று நெகிழ்ந்தார் இந்த அமெரிக்காவின் நம்பிக்கை நாயகன்.

Obama

http://www.vikatan.com/news/world/77528-obamafarewell-obama-delivering-farewell-speech-praised-michelle.art

Share this post


Link to post
Share on other sites

இஸ்லாமியரிடம் பாகுபாடு வேண்டாம் - பிரியாவிடை உரையில் ஒபாமா

 
 

கடந்த 20008-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள சூழலில், சிகாகோவில் ஆற்றிய தனது பிரியாவிடை உரையில் .அமெரிக்க அதிபராக தான் பதவி வகித்த காலத்தை நினைவு கூர்ந்தார்.

சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய ஒபாமா
 சிகாகோவில் பிரியாவிடை உரை நிகழ்த்திய ஒபாமா

தனக்கும், தனது மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமாவுக்கும் ''எல்லாம் எங்கு தொடங்கியதோ'' , அந்த இடத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று தான் விரும்பியதாக தனது உரையில் ஒபாமா தெரிவித்தார்.

தனது பிரியாவிடை உரையை அமெரிக்க அதிபர் மாளிகைக்கு பதிலாக சிகாகோவில் நிகழ்த்தினார்.

நம்பிக்கை மற்றும் மாற்றத்தை கொண்டு வருவோம் என்ற முற்போக்கான செய்தியை முன்வைத்து கடந்த 2008-ஆம் ஆண்டில் நாட்டின் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவருக்கு வயது 55.

அண்மைய அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஹிலரி கிளிண்டனை, டொனால்ட் டிரம்ப் வென்ற பிறகு , சிகாகோவில் தனது பிரியாவிடை உரையை ஒபாமா நிகழ்த்தினார் .

''நமது நாட்டை அச்சறுத்தி வந்த தீவிரவாத சக்திகள் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளன'' என்று ஒபாமா அக்கூட்டத்தில் தெரிவித்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது அமெரிக்கா ஒவ்வொரு அம்சத்திலும் அமெரிக்கா முன்னேறியுள்ளதாகவும், தற்போது அமெரிக்கா ஒரு வலுவான நாடாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.

''இந்த எட்டு ஆண்டுகளில் எந்த தீவிரவாத அமைப்பும் அமெரிக்காவை தாக்கவில்லை'' என்று தனது உரையில் குறிப்பிட்ட ஒபாமா, அமெரிக்காவுக்கு வெளியில் இருந்து வரும் தாக்குதல்களில் இருந்து நாட்டின் ராணுவம் மக்களை காப்பாற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், ''ஆனால், அமெரிக்கர்களான நாம், நம்மிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். இஸ்லாமியர்கள், பெண்கள் மற்றும் ஒரு பாலுறவுக்காரர்களை பாகுபடுத்தி பார்க்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/global-38579666

Share this post


Link to post
Share on other sites

இறுதி உரை: மக்கள் மத்தியில் உணர்ச்சிவசப்பட்ட ஒபாமா

 

 

இன்னும் சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் இருந்து விலகவிருக்கும் பராக் ஒபாமா, மக்கள் மத்தியிலான தனது கடைசி உரையை நேற்றிரவு ஆற்றினார். புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப்பின் பெயரைக் கூட உச்சரிக்காத ஒபாமா, ட்ரம்ப்புக்கான எச்சரிக்கைகளை தனக்கேயுரிய பாணியில் வெளியிட்டார்.

 

 

அவரது சொந்த ஊரான சிக்காகோவில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஒபாமா மேடையேறியபோது, “மேலும் நான்கு வருடங்கள்” என்று மக்கள் கூட்டம் ஒரு மந்திரம் போலத் தொடர்ந்து உச்சரித்தது. எவ்வளவு முயன்றும் அதை ஒபாமாவால் நிறுத்த முடியவில்லை.

“என்னை ஒரு நொண்டி வாத்து என்று நீங்கள் குறிப்பிடலாம். ஏனென்றால் நான் சொன்னதன் படி யாரும் நடந்துகொள்ளவில்லை. நொண்டி வாத்துக்கு அவ்வளவுதான் மரியாதை” என, நகைச்சுவையாக தனது பேச்சை ஆரம்பித்த ஒபாமா, கண்ணீருடன் தனது பேச்சை நிறைவுசெய்தார்.

“எனது ஆட்சிக்காலத்தில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பை நான் சிறப்பாகச் செய்து முடித்திருக்கிறேன் என்பதை உங்கள் மூலமாக அறிய முடிகிறது. எனினும், சில ஏமாற்றங்களும் இருப்பதை நான் அறிவேன். கடந்த எட்டு ஆண்டுகளில், உங்களுக்குத் தரப்பட்ட பல உறுதிமொழிகள் அவ்வண்ணமே நிறைவேற்றப்பட்டபோதிலும், சில உறுதிமொழிகளைக் காப்பாற்ற முடியாமல் போனதையும் நான் அறிவேன். 

“இந்நாட்டின் தலைமை இன்னும் சில நாட்களில் மாறப்போகிறது. ஜனநாயக முறையில் அதனை செயற்பட அனுமதித்தால் மட்டுமே அதன் பலம் மக்களாகிய உங்களுக்குப் புரியும். உங்களது அரசியல் நாகரீகமே நம் நாட்டு அரசியலில் பிரதிபலிக்கும். கட்சி, இன வேறுபாடுகள் இன்றி செயற்பட்டால் மட்டுமே மனிதாபிமானத்தை நிலைநிறுத்த முடியும்.

“இன்னும் பத்து நாட்களில் எமது ஜனநாயகத்தின் மாண்பை சர்வதேசமுமே பார்க்கப்போகிறது. இனம், சமயம், மொழி, பால் வேறுபாடுகள் இவை எவையும் அமெரிக்காவின் எந்தவொரு குடிமகனையும் பொருளாதார ரீதியிலான வாய்ப்புகளைத் தடுத்துவிடக் கூடாது. கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டு வசதி, குற்றத் தடுப்புச் சட்டங்கள் என்பனவும் எல்லோருக்கும் சமமானதாகவே இருக்கவேண்டும்.

“நாம் இருக்க வேண்டிய இடம் இதுவல்ல. அந்த இடத்தை அடைவதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின்போது யாரையும் பாரபட்சமாக நடத்தக்கூடாது. அப்படி நடத்தப்பட்டால் குறித்த இடத்தை நம்மால் அடைய முடியாது போய்விடும். இதனால்தான் அமெரிக்கா வாழ் முஸ்லிம்கள் குறித்த பாகுபாடுகளை நான் வெறுக்கிறேன்.

“ஐஎஸ் பயங்கரவாதம் எமது மக்களைக் கொல்ல முயற்சிக்கும். ஆனால் அமெரிக்காவை அதனால் வெல்ல முடியாது. ரஷ்யா, சீனா போன்ற போட்டி நாடுகளால் உலக அரங்கில் எம்மைப்போல் செல்வாக்குச் செலுத்த முடியாது. ஆனால், நாம் நம் நாட்டு மக்களையே சிறுபான்மை என்று கூறிக்கொண்டு அவர்களை நசுக்கும் முயற்சியிலேயே ஈடுபடத் தொடங்கினால் இந்த நிலை மாறலாம்.

“எனது ஆட்சிக்காலத்தில் நீங்கள் தந்த ஆதரவாலும், ஒத்துழைப்பாலுமே என்னால் இவ்வளவு தூரம் இந்த நாட்டை நிர்வகிக்க முடிந்தது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது பணியின் தன்மையைப் புரிந்து என்னுடன் ஒத்துழைத்த எனது மனைவி மிஷேல், பிள்ளைகள் மற்றும் துணை ஜனாதிபதி ஜோ பிடேன் ஆகியோருக்கும் நன்றி” என்று கூறிய ஒபாமா தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே மேடையை விட்டு இறங்கினார்.

தனது பேச்சில், புதிய அரசு என்ற வார்த்தையை ஒபாமா குறிப்பிட்டபோதெல்லாம், கூடியிருந்த மக்கள் கூட்டம் “இன்னும் நான்கு ஆண்டுகள்” என்று கோஷமிட்டன. என்றாலும், “உங்கள் விருப்பத்தை என்னால் நிறைவேற்ற முடியாது. ஒரு ஜனாதிபதியிடமிருந்து மற்றொரு ஜனாதிபதிக்கு அதிகாரம் கைமாறும்போது அதை அமைதியாக வரவேற்பதே நமது நாட்டின் பலம்” என்று குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/15329

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this