Sign in to follow this  
நவீனன்

ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி

Recommended Posts

ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன்: தோனி

 
 
பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி.
பயிற்சியில் தோனி. | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இந்தியா ஏ அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு தொடர்ந்து கேப்டனாக நீடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நீலச் சீருடையில் தோனி தனது கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய ஏ அணியை வழிநடத்துகிறார்.

இன்று டாஸ் சென்ற போது எல்.சிவராமகிருஷ்ணனிடம் தோனி கூறும்போது, “இது எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டி, கேப்டனாக (இந்தியா) எனது கடைசி போட்டி, ஆனால் ஐபிஎல் அணிக்கு கேப்டனாக நீடிப்பேன், ஜார்கண்ட் அணிக்கும் கேப்டன் பொறுப்பு வகிக்க வாய்ப்புள்ளது” என்று தோனி கூறியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து கேப்டன் பதவியைத் துறந்த தோனி இத்தனை ஆண்டுகளாக தனது பேட்டிங்கை கட்டுப்படுத்தும் சுமையை இறக்கி வைத்தது மூலம் சுதந்திரமாக தனது பழைய அதிரடி பாணிக்குத் திரும்புவார் என்று ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐபிஎல்-அணிக்கு-கேப்டனாக-நீடிப்பேன்-தோனி/article9470769.ece

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this