• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Recommended Posts

மட்டக்களப்பு - மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது அப்பகுதியில் அத்துமீறி விகாரை அமைத்திருக்கும் பௌத்த பிக்குகள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்னையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில் கால்நடைகளை வளர்ப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மயிலத்தமடு மாதவணை பகுதிகளில் அத்துமீறி சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீதிமன்றத்தின் ஊடாக மகாவலி அபிவிருத்தி சபை பிறப்பித்துள்ள போதும், குறித்த பகுதியில் இன்னும் அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரை ஒன்றும், அதனை சுற்றி சில சிங்கள குடியேற்றங்களும் காணப்படுவதாக பண்னையாளர்கள் கூறியுள்ளனர்.

குறித்த பகுதியில் இன்று மாடு மேய்த்துக்கொண்டிருந்த வந்தாறுமூலை சித்தாண்டி பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று பண்னையாளர்கள் மீது அவ்விடத்திற்கு வருகை தந்து அத்துமீறி அமைக்கப்பட்ட விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த ஏனைய இரு பௌத்த பிக்குகளும் சேர்ந்து அந்த பகுதியில் மாடுகளை மேய்க்க கூடாது என கூறி கண்ணத்தில் அறைந்துள்ளனர்.

அத்துடன் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக, தாக்குதலுக்கு உள்ளான குமாரசாமி பேரின்பம் என்பவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மூன்று பண்னையாளர்கள் மீது குறித்த பௌத்த பிக்குகள் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் அடியை வாங்கிக்கொண்ட மூன்று பண்ணையாளர்களும் இன்று இரவு வீடு திரும்பியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மேலும்,சம்பவம் குறித்து கிழக்குமாகாண விவசாய அமைச்சரிடம் தெரிவித்துள்ளதுடன், நாளைய தினம் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/131254?ref=home

Share this post


Link to post
Share on other sites

தமிழ் பண்ணையாளர்களை தாக்கிய பிக்குமார்..! சம்பவ இடத்திற்கு விரைந்த வியாளேந்திரன் எம்.பி

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குப்பட்ட மயிலத்தமடு, மாதவணைப் பகுதியில் வைத்து மூன்று தமிழ் பண்ணையாளர்களை பிக்குமார் தாக்கிய சம்பவ இடத்திற்கு இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் சென்றிருந்தார்.

இதன்போது தாக்குதலுக்குள்ளான பண்ணையாளர்கள் உட்பட குறித்த பகுதியிலுள்ள பண்ணையாளர்களை சந்தித்ததுடன், சம்பவத்தையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது அங்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களில் இருந்து மயிலத்தமடு, மாதவணை கால்நடை பண்ணையாளர்களின் மாடுகளை துப்பாக்கியால் சுடுவது, கால்நடைகளை கடத்துவது, பெரும்பான்மை இனத்தவரினால் தமிழ் பண்ணையாளர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டுடிருக்கின்றது.

காலம் காலமாக குறித்த பகுதியில் கால்நடைப் பண்ணையாளர்கள் 372க்கு மேல் தங்களின் கால் நடைகளை வைத்துள்ளார்கள்.

கடந்த மஹிந்த ஆட்சி தொடக்கம் தற்போதைய மைத்திரி ஆட்சி வரை தமிழ் பண்ணையாளர்களின் சுமார் 1100 கால்நடைகளை கடத்தியிருக்கின்றார்கள்.

கடந்த வருடத்தில் கால் நடைக்கு தண்ணீர் கொடுக்க வந்த மற்றுமொரு தமிழ் பண்ணையாளர், பெரும்பான்மை இனத்தவரினால் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றார்.

மாந்திரி ஆற்றில் சட்ட விரோத மண் அகழ்வு இடம் பெறுகின்றது. இதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்...? மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மண்ணை சட்ட விரோதமாக பெரும்பான்மை இனத்தவர்கள் கொள்ளையடிக்கின்றார்கள்.

சட்டவிரோத மீள்குயேற்றப் பகுதிக்குள் இரண்டு விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. முற்று முழுதாக தமிழர்களின் காணிக்குள் சட்ட விரோதமான முறையில் விகாரைகள்.

குறித்த மயிலத்தமடு மாதவணைப் அண்மித்த பகுதிகளில் சட்ட விரோத குடியேற்றங்களையும், நிரந்த வீடுகளையும் அமைப்பதை நிறுத்த நீதிமன்ற தடை உத்தரவு இருந்தபோதும், குறித்த விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழர்கள் வாழ்ந்த, குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைகளை குறிக்க வேண்டும் என பலர் பேசுகின்றார்களே தவிர, அதற்கான முன்னெடுப்புக்கள் கடந்த காலங்களில் இருந்து முன்னெடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

மட்டக்களப்பின் எல்லை காவலர்களாக பல துன்பங்களையும், பிரச்சினைகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் எமது தமிழ் பண்ணையாளர்களுக்குரிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மயிலத்தமடு, மாதவணை பண்ணையர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ,அதற்கான தீர்வினை உடனடியாக முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

 

 

http://www.tamilwin.com/community/01/131394?ref=editorpick

Share this post


Link to post
Share on other sites

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

சும்மா... வாய் இல்லை, நாறல்  வாய். :grin:

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

மற்றவைக்கு சம் சும் இற்கு கழுவுவிடுவதிலேயே காலம் போகிறது

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, nunavilan said:

வியாழேந்திரன் மட்டும் தான் மக்களோடு நிற்கிறார். மிகுதி கூட்டமைப்புக்கு வாய் தான்.

அவையள் அங்கை கன கருமங்கள் பாக்கவேணுமெல்லோ.....இதுக்கெல்லாம் எங்கை நேரம்?.....ஆனால் ஒண்டு லெக்ஸன் வந்தால் நேரம் தானாய் தேடி வரும்...:grin:

Share this post


Link to post
Share on other sites

எல்லோருக்கும்  குளிர்விட்டுப்போச்சு.....

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this  

  • Similar Content

    • By போல்
      வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நேற்­று விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தென அர­சாங்கம் இறுதி நேரத்தில் சபையில் அறி­வித்­தி­ருந்­தது.
      பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்தின் இரண்­டா­வது வாசிப்பு மீதான விவாதம் நடத்­தப்­ப­டு­வ­தாக ஒழுங்­குப்­பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.
      இருப்­பினும் சபா­நா­யகர் அறி­விப்பு, மனுக்­களை தாக்கல் செய்தல், பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரம், வாய்­மூல விடைக்­கான கேள்­வி­நேரம் ஆகி­யன நிறை­வ­டைந்து சபையின் பிர­தான செயற்­பா­டுகள் ஆரம்­ப­மா­வ­தாக சபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய அறி­வித்தார்.
      இச்­ச­ம­யத்தில் எழுந்த சபை­மு­தல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் பணிப்­பாளர் நாய­க­மான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சரத் ஜய­மான்ன வகிக்கும் மேல­திக சொலிஷ்டர் பத­விக்­கான கொடுப்­ப­ன­வு­களை அங்­கீ­ரப்­ப­தற்­கான பிரே­ரணை முன் நகர்த்­து­வ­தாக கூறினார்.
      இதன்­போது எழுந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலம் இன்று(நேற்று) எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை. வெகு­வி­ரைவில் எடுத்­துக்­கொள்­ளப்­படும் என்றார்.
      சபை­மு­தல்­வரும், அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்­லவும் நாம் அதனை(வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்­தினை) விரைவில் கொண்­டு­வ­ருவோம் என்றார்.
      இதே­வேளை நேற்று முன்­தினம் சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் கூடிய நடை­பெற்ற பாரா­ளு­மன்ற அர­சியல் கட்­சித்­த­லை­வர்­களின் கூட்­டத்­தி­லேயே வலுக்­கட்­டா­ய­மாக காண­மல்­போக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களை பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாயச் சட்ட மூலத்­தினை இரண்டாம் வாசிப்­புக்­காக முன் நகர்த்­து­வ­தில்லை என்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.
      மேலும் நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் குறித்த சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் விவாதிப்பதை உடன் நிறுத்தப்படவேண்டும் என்ற ஏகோபித்த தீர்மானத்தினை எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
      http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-06#page-1
    • By போல்
      இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில்,
      இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வைத்திருக்க விடுமாறு கோரியுமே இராணுவத்தினரது ஒழுங்கமைப்பில் நாளை கிளிநொச்சியில் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
      வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு நாளை வரும்போது சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளது கணவனையும் அழைத்து வருமாறு போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
      நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கான அழைப்பையும் அறிவுறுத்தல் நினைவூட்டலையும் இன்றைய தினமும் தொலைபேசியூடாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
      வடமாகாணத்தில் பொதுமக்களது சிவில் அமைப்புக்களில் தேவையற்ற இராணுவத் தலையீடு தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறித்து இம்முறையும் ஜெனீவாவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
      அதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள முன்பள்ளிகளில் இராணுவத் தலையீடு அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
      இதற்கு முன்னரும் வடமாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் இராணுவம் தமது ஆமி ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஏதோ கற்பிக்க முற்பட்ட போதும் அதற்குக் கிழம்பிய கடும் எதிர்ப்புக் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
      காணாமல் போனோரது உறவினர்கள், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரி மற்றும் பட்டதாரிகள் எனப் பலரும் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
      வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக எவரும் போராடவில்லை வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக நீங்கள் போராடுங்கள் அதற்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு என போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
      இந்நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய முன்பள்ளிகளை தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டமைப்பின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சியாக நாளை இராணுவத்தினரது ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டம் நடைபெறவுள்ளது.
      http://www.tamilwin.com/community/01/143550?ref=home-feed
    • By போல்
      இலங்கை இராணுவத்தின் முக்கிய பதவியொன்றுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து யஸ்மின் சூக்கா கடும் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
      விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் 58வது படைப்பிரிவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமை தாங்கியிருந்தார்.
      குறித்த படைப்பிரிவு பெருமளவான போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்ததாக பரவலான குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் சவேந்திர சில்வா இராணுவத்திலிருந்து இராஜதந்திர சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டார்.
      ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிடப் பிரதிநிதி பதவி அவருக்கு வழங்கப்பட்டது.
      இந்நிலையில் தற்போது இராணுவத்தின் எஜுடன்ட் ஜெனரல் எனப்படும் இராணுவத் தலைமையக பிரதம நிர்வாக அதிகாரி பதவி சவேந்திர சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
      இது ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் உயர் அதிகாரிகளுள் ஒருவரான யஸ்மின் சூக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
      அவர் இது குறித்து ஐக்கிய- நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ரஆத் ஹுசைனிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
      போர்க்குற்றங்களில் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகள் வழங்குவதில்லை என்ற உடன்பாட்டை இலங்கை மீறி விட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
      இதற்கிடையே யஸ்மின் சூக்கா போர்க்குற்றங்கள் விடயத்தில் டயஸ்போராக்களுடன் இணைந்து இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
      http://www.tamilwin.com/politics/01/141668?ref=view-latest
    • By போல்
      கிளிநொச்சியில் இனம் தெரியாத இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் ஒருவரினால் கத்தி குத்துக்கு இலக்காகி வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வயோதிப பெண்ணை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பார்வையிட்டுள்ளார். குறித்த பெண்மனியை சிறீதரன் நேற்று நேரில் சென்று சந்தித்துள்ளார்.
      சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

      கடந்த வெள்ளிக்கிழமை சாந்தபுரம் கிராமத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த கேதீஸ்வரன் மாரியம்மா(வயது 65) என்ற வயோதிப பெண் மீது இராணுவ சிப்பாய் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் கத்தியால் குத்தியிருந்தார்.
      இதயைடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய பெண் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      இந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் குறித்த பெண்ணை நேரில் சென்று சந்தித்திருந்தார்.
      இதன்போது, பெண்மணி நாடாளுமன்ற உறுப்பினருடன் உரையாடுகையில்,

      இராணுவ சிப்பாயே தன்னை கத்தியினால் குத்தியதாக கூறியுள்ளதுடன், சாந்தபுரம் கிராமத்தை அண்டியுள்ள காட்டு பகுதியில் படையினர் காட்டு மரங்களை வெட்டி விற்பனை செய்துவருவதாகவும், அந்த விடயம் வெளியே தெரிந்த நிலையில் அந்த விடயத்தை ஆடு மேய்ப்பதற்காக செல்லும் நானே சொன்னதாக கூறப்படுவதன் அடிப்படையிலேயே இராணுவ சிப்பாய் தன்னை கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

      மேலும் தன்னை குத்திய இராணுவ சிப்பாய் தன்னிடம் 5 தடவைகளுக்கும் மேல் இராணுவ சீருடையில் காட்டுக்குள் நின்று வெற்றிலை வாங்கி போட்டதாகவும் கூறியுள்ளதுடன், குறித்த இராணுவ சிப்பாயை தன்னால் அடையாளம் காட்ட இயலும் எனவும் கூறியுள்ளார்.

      இந்நிலையில் அவதானமாக இருக்குமாறு குறித்த வயோதிக பெண்மணியை நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டு கொண்டுள்ளதுடன் விபரங்களையும் பெற்று கொண்டுள்ளதுடன் சம்பவ இடத்தை நேரில் பார்iயிட்டும் உள்ளார்.
       

      http://www.tamilwin.com/community/01/137787?ref=home
    • By போல்
      யாழ்ப்பாணம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “ஜனாதிபதிக்கு தெரிவியுங்கள்” எனும் மக்கள் குறைகேள் நிலையத்தை திறந்து வைத்துள்ளார்.
      யாழ். சாவகச்சேரியில் வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் உள்ள குறித்த நிலையத்தை இன்று காலை 11 மணியளவில் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.
      இதில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், அங்கஜன் ராமநாதன், மாவை சேனாதிராஜா. மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
      ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின்போது பலத்த வரவேற்பளிக்கப்பட்டதுடன் பல கலைநிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.




       
       
      http://www.tamilwin.com/politics/01/137670?ref=top-imp-flag
    • By போல்
      வவுனியா பிரதேசத்துக்குட்பட்ட நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் ஒலுமடுகிராமத்தில் 24.05.2016 அன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட 10வயது பாடசாலை சிறுமியின் வழக்கை நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகபதிவு செய்தமை அம்பலமாகியுள்ளது. இவ் வழக்கானது 03.03.2017 இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில்எடுத்துக்கொள்ளப்பட்ட போது நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாகசிறுமியை சந்தேகநபர் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
      அதேவேளை,, இப்பாலியல் குற்றவாளி ஆறு மாதங்களுக்கு முன்னரே பிணையில் விடுதலைசெய்யப்பட்டிருப்பதை அவதானித்த நீதிபதி மீண்டும் சிறுமி பாலியல் துஸ்பிரயோகவழக்கை கையேற்றதுடன், எதிர்வரும் 31.03.2017 அன்று நெடுங்கேணி பொலிசார் உட்படஅனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
      இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார்,நெடுங்கேணி பொலிசார் குற்றவாளிக்கு சார்பாக வழக்கை பதிவு செய்திருந்ததுடன்,நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியிருந்தமையை அவதானித்த நீதிபதி என்னிடமிருந்துவிஷேடமாக சாட்சியை கேட்டுப்பெற்றுக் கொண்டார்.
      பாதிக்கப்பட்ட எனது மகளின்விடயத்தை நெடுங்கேணி மற்றும் வவுனியா சிறுவர் நன்நடத்தை பிரிவு அதிகாரிகள்எனது மகள் பாதிக்கப்பட்டது தொடர்பாக எந்தவிதமான சட்டநடவடிக்கையையும்மேற்கொள்ளவில்லை என்பதுடன், எனது மகளுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல்களை கூடவழங்கியிருக்கவில்லை. என்றார்.
      அத்துடன் எனது மகள் பாதிக்கப்பட்டமை தொடர்பாக வன்னி மாவட்டங்களுக்கான பிரதிபொலிஸ்மா அதிபர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்த போது பிரதி பொலிஸ்மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில்விஷேடமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட போதும் அது தொடர்பாக எந்தவிதமானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தெரிவித்தார்.
      http://www.tamilwin.com/lifestyle/01/137551?ref=home
    • By போல்
      காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
      இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

      சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார். இருப்பினும் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
      இவ்வாறு கடந்த மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது இவர் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

      இந்த நிலையில் இன்னமும் இவருக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினை காணமுடிகின்றது.
      மேலும் குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
      பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

      ராணுவத்திடம் கையளித்த தமது பிள்ளைகளை தேடவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர், அவர்களை கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
      http://www.tamilwin.com/living/01/137550?ref=view-latest
    • By போல்
      காணாமல்போன தமது உறவுகளை தேடித் தருமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக காணாமல் போனவர்களின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த சத்தியாகிரக போராட்டமானது இன்று 12ஆவது நாளாக நீடித்து வருகிற நிலையில், குறித்த போராட்டத்தில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
      இந்த நிலையில் காணாமல் போன தனது மகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அருகில் நிற்பது போன்ற புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

      சிறுவர்களுடன் இணைந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் எப்போது வெளியாகியதோ, அன்று தொடக்கம் குறித்த தாய் இது தனது பிள்ளை என உரிமை கோரி வருகின்றார். இருப்பினும் குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை.
      இவ்வாறு கடந்த மாதம் இடம்பெற்ற போராட்டத்தின் போது இவர் தனது கைகளில் ஜனாதிபதிக்கு அருகில் தனது மகள் இருப்பது போன்ற புகைப்படத்தை வைத்திருப்பதாக சுட்டிக்காட்டிய வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன், குறைந்தபட்சம் குறித்த சிறுமி பற்றியேனும் ஆராய்ந்து அவரை அவரது தாயுடன் இணைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

      இந்த நிலையில் இன்னமும் இவருக்கான தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில் மீண்டும் அந்த புகைப்படத்தினை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையினை காணமுடிகின்றது.
      மேலும் குறித்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
      பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

      ராணுவத்திடம் கையளித்த தமது பிள்ளைகளை தேடவேண்டிய அவசியம் தமக்குக் கிடையாதென தெரிவித்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர், அவர்களை கையளிக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
      http://www.tamilwin.com/living/01/137550?ref=view-latest
    • By போல்
      தமிழர்கள் 11 பேரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில், சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 10 அதிகாரிகளை அடுத்த வாரத்துக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
      திருகோணமலையில் 5 பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை கடத்திச் சென்று கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற வலுவான சான்றுகள் உள்ள 11 கடற்படை அதிகாரிகளைக் கைது செய்யும் முயற்சியிலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இறங்கியுள்ளனர்.
      எனினும், எந்தவொரு கடற்படை அதிகாரியையும் கைது செய்யக் கூடாது என்று அரசியல் உயர்மட்டத்தில் இருந்து குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு உறுதியான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
      எவ்வாறாயினும், இந்தக் கடத்தல்கள் கொலைகளில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பான உறுதியான சான்றுகள் குறித்த சாதகமான தகவல்கள் எம்மிடம் உள்ள நிலையில், கடற்படையினரைக் காவலில் எடுப்பது தவிர்க்க முடியாது.
      அவர்கள் போர் வீரர்களாக இருந்தாலும், நாட்டில் உள்ள எவரையும் கொலை செய்வதற்கு உரிமையில்லை, இழிவான குற்றங்களில் ஈடுபடுவதற்கு சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது என்ற உண்மையை ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்.
      இந்த கடற்படையினர், தமது சீருடையின் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாரிய கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று நம்புகிறேன். ஏற்கனவே கடற்படை லெப்.கொமாண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
      ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கு அரசியல்மட்டத்தில் தடைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்தச் சூழலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
      அவ்வாறு நடந்து கொண்டால்,குற்றப் புலனாய்வுப் பிரிவின் மீதான நம்பிக்கையை மக்கள் இழப்பார்கள்.
      கடந்த வியாழக்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட  கோட்டே நீதிவான், சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.
      கப்டன் டி.கே.ஜே.தசநாயக்க, லெப்.கொமாண்டர் சம்பத் முனசிங்க, லெப்.கொமாண்டர் சுமித் ரணசிங்க  மற்றும் கடற்படையினரான,  உதய குமார, கே.விக்கிரமசிங்க  ஆகியோரே காவலில் வைக்கப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
      http://www.puthinappalakai.net/2017/02/15/news/21372