Jump to content

மண் வீடு

Recommended Posts

இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற  இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. 

உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால்  அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. 

மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம்.
- ஆடம்பரம் கௌரவம்
- மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை
- இயற்கை வளங்கள் இயற்கை மாசுபடுதல் பற்றிய போதிய அறிவூட்டல் இல்லாமை

களி மண்ணால் சீமெந்து போல் அடுக்கு மாடிகள் கட்ட முடியாவிடினும் மரப் பலகையையும் சேர்த்தால் விசாலமான மாடி வீட்டினை அமைக்கலாம்.

மண் வீடுகளின் அனுகூலங்கள் சில
- 100 வீதம் இயற்கையானது
- இலவசமானது
- வீடு கட்ட வேண்டிய இடத்திலேயே தாராளமாகப் பெற்றுக் கொள்ளலாம்
- சுகாதாரமானது
- சீமெந்தை விடச் சுலபமாகக் கையாளலாம்
- மண் சுவர் வீட்டினுள் காற்றின் ஈரப் பதனைச் சீராக்கும்
- தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவி இல்லாமல் நாமே கட்டிக் கொள்ளலாம்
- மண்சுவர் சிறந்த ஒலித் தடுப்பைக் கொண்டது
- 0 வீதமான CO2 வெளியேற்றப் படுவதால் சுற்றாடலையும் பாதுகாக்கிறது

இவை எல்லாவற்றையும் விட இயற்கையோடு இணைந்த வாழ்வு என்ற திருப்தியைத் தரும்.

பாதகங்கள் சில
- வெள்ளப்பெருக்கைத் தாக்குப் பிடிப்பது கடினம் 
- சுவர்கள் அகலமாக இருக்கும்
- கூரை சற்று அகலமானதாக இருக்க வேண்டும்
- சீமெந்து வீட்டை விடப் பராமரிப்பு அதிகமாக இருக்கும்

வாசித்து அறிந்து கொண்டவற்றையும் எனது மிகச் சிறிய அனுபவம் ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்றோ ஒரு நாள் 100 வீதம் இயற்கையான பொருட்களைக் கொண்டு நானே ஒரு வீடு கட்டிக்கொள்ள வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஆவலையும் இந்த அனுபவம் தந்துள்ளது.

maison.jpg

- தொடரும் - 

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

பனையோலை அல்லது தென்னோலையால் வேயப்பட்ட மண் வீட்டில் இருக்கும் சுவாத்தியம் வேறு எந்த வீட்டிலையும் கிடையாது. அனுபவத்தில் கண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.

ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..

oekohaus-in-erbach-8367733a-1fb9-492a-96a1-266600472762.jpg?width=1000

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

6 hours ago, குமாரசாமி said:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, முனிவர் ஜீ said:

வைக்கோலினால் மேயப்பட்ட வீடுகளும் களி மண் போட்டு தரையை சாணத்தினால் மெழுகப்பட்ட வீடுகளுக்கு எந்த ஏசி வீடுகளும் ஈடு கொடுக்க முடியாது 

ஆனால் புதிய சந்ததி இதை ஏற்றுக்கொள்ளாது  

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.

ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

ஏன் தங்கச்சி! கல் வீடெண்டால் பாம்பு பூச்சி கரப்பான் நட்டுவக்காலி ஒண்டும் வராதோ? அல்லது வந்ததாய் சரித்திரமே இல்லையோ?

சுவருக்கு இடையிலை வைக்கல் கம்பு தும்புகளை வைச்சு கட்டுகிறார்கள்.... அதுவும் வைக்கோல் ஒரு இயற்கை தந்த கொடை......வெப்பத்தை தரவல்லது. நாங்கள் ஊரிலை மாம்பழம் பழுக்க வைக்க வைக்கோலை பயன்படுத்துவோமே.....

அது வீடு திருத்தும் போது எடுத்தபடம்......வெளிப்பூச்சு பூசியபின் அழகாக தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

Bildergebnis für denkmal hause in deutschland

Bildergebnis für denkmal schutz hause in deutschland

ரதி... இப்படியான வீடுகள், ஜேர்மனில்  உள்ள எல்லா ஊர்களிலும் சில  காணப்படும்.
இரண்டு உலகப் போர்களில்.... தப்பிப் பிழைத்த வீடுகள் என்பதால்,
அதன் வெளித் தோற்றத்தை மாற்ற, அந்த வீட்டு  எவ்வளவு தலைகீழாக நின்றாலும்,    அனுமதி கிடைக்காது.

இருந்த மாதிரியே....  திருத்த வேலைகளை செய்ய வேண்டும்.
வீட்டிற்குள்... என்ன நவீன பொருட்களையும்  பொருத்துவதற்கு, அனுமதிப்பார்கள்.
வெளியில்.... கைவைக்க, நகர சபையின் ஒப்புதல் வேண்டும். :)

ஜேர்மனியில்.... பாம்பு, பூச்சி எல்லாம் மிருகக் காட் சி  சாலையில் தான் இருக்கும். 
வீ ட்டுக்குள்... நாய், பூனை  மட்டுமே வரும்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பகட்டு வாழ்க்கையை பாமரமக்களிடம் விதைத்து விட்டார்கள்....

விதைத்துக்கொண்டே வருகின்றார்கள்.

ஆனால் ஐரோப்பாவில் வாழும் இளயசமுதாயம் சிந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பிளாஸ்ரிக் பைகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வருகின்றார்கள்.பதிலாக துணியிலான அல்லது கடுதாசி பைகளை பாவிக்க ஆரம்பித்து வருகின்றனர்.
தாம் கஸ்ரப்பட்டாலும் முக்கியமாக தங்களுக்கு பின் வரும் அடுத்த சந்ததியை பற்றி அதிகம் சிந்திக்கின்றனர்.செயல்படுகின்றனர்.

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

13 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

21 hours ago, நந்தன் said:

ஆனா அடிக்கடி புழுதி கிளம்பும், சாணி போட்டு மெழுகணும்

மண் வீடு என்றவுடன் ஓலைக் குடிசைதான் எல்லோருக்கும் நினைவில் வரும். பழமைக்குள் புதுமையைப் புகுத்தி காலத்திற்கேற்றவாறு மெருகேற்ற வேண்டும். மாற்றம் இல்லாத எதுவும் காலப்போக்கில் காணாமல் போய்விடும். வீட்டின் பயன்பாடு 100 வருடங்களுக்கு முன்னர் இருந்ததுபோல் இன்று இல்லை.  

சாணி போட்டு மெழுகுதல் என்பது ஒரு தெரிவு மட்டுமே.

Link to comment
Share on other sites

21 hours ago, குமாரசாமி said:

நான் இயற்கையின் கொடையை நூறுவீதம் அனுபவித்தவன்.

மண்வீட்டை ஒரு இழக்காரமாக பார்க்கும் சமூகத்தில் தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்..

ஆனால் அதன் பக்கவிளைவுகள் இல்லாத பலாபலன்களை மக்கள் சிந்திக்க மறுக்கின்றார்கள். வியாபாரிகளினால் உருவாக்கப்பட்ட போலியான பகட்டு வாழ்க்கைக்கு அடிமைப்படுதப்படுகிறார்கள்.

ஜேர்மனியில் இன்றும் பல இடங்களில் இயற்கையான பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகள் கம்பீரமாகத்தான் இருக்கின்றது வெளிப்பூச்சு எதுவுமின்றி வீட்டின் உண்மையான தோற்றம்..
 
உண்மை குமாரசாமி.

ஐரோப்பாவில் நவீன கட்டடங்களை அமைத்து பெரும்பாலானோர் வாழ்ந்தாலும் சிலர் இயகையை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். உணவு முதல் அனைத்துத் தேவைகளிலும் மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். 

பிரபஞ்சத்தில் சாதாரண துகள்களாக இருந்த மனிதன் இன்று தன்னைச் சுற்றி இருந்து ஆட்சி செய்யும் இயற்கையின் நுணுக்கங்களை அறிந்து கொள்ளும் அளவு முன்னேறி வெற்றிவாகை சூடினான். 

இயற்கையை மனிதன் ஆதிக்கம் செலுத்த முயன்றதன் பலனை உலகம் உணரத் தொடங்கியுள்ளது. இயற்கையோடு ஒன்றிய வாழ்வின் அவசியம் உணரப்படுகிறது. நாங்களும் எல்லாவற்றையும் கோட்டை விட்டு இறுதியில் ஏங்குவதை விட இப்போதே முயற்சி செய்ய வேண்டும்.

இயற்பியலாளர் Stephen Hawking எமக்கு 1000 வருட அவகாசம் தருகிறார் நாம் இந்தப் பூமியை விட்டு வெளியேறி வேறு எங்காவது குடியேறுவதற்கு. தற்போதுள்ள வேகத்தில் சுற்றாடல் அழிக்கப்படுமானால் 1000 வருடங்களுக்கு முன்னரே பூமி வாழ்வதற்கு ஏற்புரையதற்றதாகி விடும்.

21 hours ago, suvy said:

செங்கல் வீடுகளும் சிறந்ததே. கீழே அரை மீற்றர் உயரத்துக்கு  நல்ல பூச்சு பூசினால்  வெல்ல அரிப்பையும் கூட தாங்கும்....! ஆனால் உதையெல்லாம் யார் செய்யப் போகினம்....!

நான் இருக்கும் இடத்திலும் அதிகமான வீடுகள் கு.சா. படம் போட்டா மாதிரித்தான் இருக்கின்றன. ஓடுகள் கூட பீலி ஓடுகள்...!

செங்கல் நல்ல உறுதியானது. ஆனால் விலை அதிகம். அதனை ஒட்டுவதற்குச் சீமெந்து வேண்டும். அத்துடன் கற்களை எரிப்பதால் வெளியேற்றப்படும் காபனீர் ஒட்சைட்டினால் அது 100 வீதம் இயற்கையப் பாதுகாக்காது.

Link to comment
Share on other sites

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இல்லாததுக்கு ஆசை கொள்வது மனித மனம்.

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

15 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

உண்மையாய் இப்படியான வீடுகள் ஜேர்மனியில் இருக்குதா? குளீருக்கு எப்படித் தாக்குப் பிடிக்கும்

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரதி said:

குடிசை வீடென்டால் பாம்பு,பூச்சி எல்லாம் வருமெல்லோ:rolleyes:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎/‎01‎/‎2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

On ‎11‎/‎01‎/‎2017 at 2:16 PM, குமாரசாமி said:

அவுஸ்ரேலியா , புளோரிடா பக்கமெல்லாம் முதலை வந்து  வீட்டுமணி அடிக்கிற விசயமெல்லாம் தங்கச்சிக்கு தெரியாது போலை கிடக்கு..:grin:

HT_Alligator_Door1_MEM_160503_16x9_992.jpg

croc-in-fam-home-asutralia__oPt.jpg

அவையள் என்ன குடில் , கொட்டில்லையே இருக்கினம்

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

34 minutes ago, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

தெரியும் அண்ணா...அவுசில் போய் குடியேற வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை...ஒரு,சில காரணங்களுக்காய் போகவில்லை.1}பணம் இல்லை 2}படிப்பில்லை வேலை எடுக்கேலாது. 3} பாம்புப் பயம்tw_cry:

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நான் 13 வயது வரை மண் வீட்டிலேயே வாழ்ந்தேன்.பின்னர் கல் வீடு.நன்மை தீமை தெரியவில்லை.இப்போ மட்பாண்டங்களே பாவிக்காத போது மண் வீட்டைப் பற்றி யார் யோசிக்கிறார்கள்.

காசு பணம் இல்லாட்டி என்ன அன்புக்கு பஞ்சம் இல்லை என்றால் நீங்க அவுசில் வாழலாம்.

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ரதி said:

இந்தக் காலத்தில காசு இல்லாட்டில் வீட்டில வளர்க்கிற நாய் கூட சீண்டாது:cool:...நானும் சின்ன வயசில கொஞ்சக் காலம் மண் வீட்டில வாழ்ந்திருக்கிறேன்

நாங்களும் தான் ரதி பழையதை மறக்க முடியவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 0:21 PM, முனிவர் ஜீ said:

உன்மைதான் குமாரசாமி அண்ணை  அந்த நிலை தற்போது இலங்கையில் 3 மாடி வீடுகள் வசிக்க ஆள் இல்லை  எல்லாம்  அடுத்தவனை பார்த்து பார்த்து .........................

இந்த பிளாஸ்டிக் பைகளை பாவிப்பதை குறைத்து கொண்டுதான் வருகிறோம் ஒரு சின்ன அறீவூட்டலின் மூலமாக ஆனால் அது கொஞ்சம் சிரமாக இருக்கிறது   சீலை ப்பைகளையும் சாக்கு பைகளையும் , பனையோலையினால் செய்த பைகளையும் அறி முகப்ப்டுத்தியுள்ளார்கள் தற்போது மட்டக்கலப்பில் ஆனால்   செயற்பட வைப்பது என்பது முளங்காலால் மலையேறி போக வேண்டிய நிலமைபோக் இருக்கிறது  அப்படி பிளாஸ்ரிக்கு அடிமையாகிட்டோம்

குடிசை வீட்டில பாம்பு  பல்லி ஓணான் தவளை மோக்கான் நட்டுவகாலி , அறணை எல்லாம் அழையா விருந்தாளிகள் அப்பப்போ வருவார்கள் போவார்கள் அதற்கும் குடிசை வீட்டில் மருந்து இருக்கிறது அதற்கு. மூலிகை செடி இருக்கிறது நட்டால் அந்த பக்கம் ஒருவர் கூட தலை வைத்து படுக்க மாட்டார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, சுவைப்பிரியன் said:

சில முன்னோர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்  சில மூலிகை செடிகளை நட்டால் சில ஊர்வன வராது என்று அதான் சொன்னது  தற்போது இன்சுலின் என்று அழைக்கப்படும் அதாவது உடம்பில் சீனி அதிகமாக இருந்தால் சப்பி சாப்பிடும் இலை மிக கசப்பானது வாயில் வைக்க முடியாது அந்த செடியை நட்டால்  பாம்பு வராது என்று சொல்வார்கள் ,

தென்னை வண்டுகளுக்கு தலைமுடியை  பெண்கள் தலையில் இருந்து உதிரும் முடிகளை தென்னை வட்டினுள்  வைத்து விடுவார்கள் ஏன் என்று கேட்ட்டால் தென்னம் வண்டு உள்ளே செல்ல முடியாது  என்ற்ய் சொலவ்வார்கள் உன்மையும் தான் அந்த வண்டு அதில் விழுந்து சிக்கி கொள்ளும் சில வேளைகளில்  அதே போல் இன்னும் வேற மூலிகை செடி இருக்கலாம் 

Link to comment
Share on other sites

ஏன் கனக்க ரெண்டு நல்ல வேட்டை நாய் வளர்த்தால் போச்சு மழைகாலங்களில்தினமும்  விடிகாலையில் பாம்பு பிஞ்சு முத்தத்தில் கிடக்கும் அடுத்து நாய் குரைப்புக்கு விஷ ஊர்வன வீட்டு பக்கம் கூடுதலா வராது வந்தால் பாக பிரிவினைதான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/01/2017 at 1:35 PM, இணையவன் said:

வீடு கட்டப் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் தான் வித்தியாசப்படுமே தவிர கட்டி முடித்தபின் தோற்றத்தில் பெரிய மாற்றம் இராது. உள் சிவர்களுக்கு வேண்டுமானால் பிளாஸ்ரிக் பெயின்ற் அடித்துக் கொள்ளலாம் :unsure:. ஆனால் 100 வீதம் இயற்கை ஆகாது. இயற்கையான வண்ணப் பூச்சுக்களும் உள்ளன. நாமே தயாரித்துக் கொள்ளலாம்.

brique2.jpg

மண் வீடு என்றால் குடிசை வீடாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சீமெந்து வீடு போலவே பூச்சி வராமல் கட்டலாம். குளிர் மட்டுமல்ல வெப்பத்தையும் தடுக்குமாறு கட்ட முடியும். களிமண்ணானது சீமெந்தை விட அதிக திணிவு கொண்டது. வெப்பத்தைப் பிடித்து வைத்துச் சிறிது சிறிதாகக் கதிர்வீச்சு மூலம் வெளியேற்றும் ஆற்றல் அதிகம் கொண்டது.

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

Link to comment
Share on other sites

On 12 janvier 2017 at 6:35 PM, ரதி said:

அதெப்படி இப்படியான வீடுகள் என்டால் குடிசை வீடுகளாத் தானே இருக்கும்.கூரைக்கு கல் வைத்துக் கட்டினால் அது கல் வீடு இல்லையா?...அடுத்தது இப்படியான் வீடுகள் குளிர்மையாய் இருக்கும் அல்லவா? வெயிலுக்கு ஓகே ஆனால் குளிருக்கு எப்படி தாக்குப் பிடிப்பது?

சீமெந்து, பலகை, இரும்பு போன்று ஒரு மூலப் பொருளாகதான் களிமண் பாவிக்கப்படுகிறதே அன்றி குடிசை வீடுதான் கட்ட வேண்டும் என்பதல்ல. மண்சுவர் வெயிலை விடக் குளிருக்கே உகந்தது.

.

On 15 janvier 2017 at 0:52 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சுடாத களிமண் கொண்ட கற்களா நீங்கள் கூறுவது?அவை நீண்ட காலம் நிலைத்திருக்குமா ?

சுட்ட மண் உறுதியாயினும் சுடாத மண்சுவர்களும் நூற்றாண்டுகள் நிலைத்துள்ளன. இது தவிர சீமெந்துச் சுவர்கள் எவ்வளவு காலம் நிலைத்திருக்கும் என்பதைக் கட்டட வல்லுனர்கள் இருந்தால் கூறுங்கள்.<_<
மேலுள்ள படத்தில் காட்டப்படுவது சுடாத மண் கல் !

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.