Sign in to follow this  
Followers 0
நவீனன்

விமல் கைதானார்.!

6 posts in this topic

விமல் கைதானார்.!

 

 

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/15286

Share this post


Link to post
Share on other sites

UPDATE : வாகன முறைகேடு : விமல் வீரவங்சவுக்கு விளக்கமறியல்.!

 

 

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Jail.jpg

கடந்த மஹிந்த ஆட்சி காலத்தில் அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில், இவர் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15304

Share this post


Link to post
Share on other sites
விமலை பார்க்க சிறைக்கு வந்தார் மஹிந்த
 
 

article_1480570973-image_1480566527-5983விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பு மெகசின் சிறைச்சாலைக்கு இன்று மாலை கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.

அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மெகசின் சிறைச்சாலைக்கு வந்திருந்து, விமலிடம் நலன் விசாரித்துள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/189587/வ-மல-ப-ர-க-க-ச-ற-க-க-வந-த-ர-மஹ-ந-த#sthash.BLWZRgzg.dpuf

 

 

 

விமலுக்கு விளக்கமறியல்
 
 

article_1484059483-sd1.jpg

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)

article_1484059495-sd.jpg

article_1484059504-sd2.jpg

article_1484059512-sd4.jpg

article_1484059521-sd3.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/189590/வ-மல-க-க-வ-ளக-கமற-யல-#sthash.XO3fMDyW.dpuf
Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

விமல் கைது

Sp01-d262361d44ff2c697219eec9ac0812b92711da5d.jpg

 

24ஆம் திகதி வரை விளக்கமறியல்
(எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன் னாள் வீட­மைப்பு, நிர்­மா­ணத்­துறை பொறி­யியல் விவ­கார அமைச்­ச­ரு­மான விமல் வீர ­வன்ச நேற்று நிதிக்குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­ட­துடன் எதிர்­வரும் 24 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­ய­லிலும் வைக்­கப்­பட்டார்.

40 அரச வாக­னங்­களை மோச­டி­யாக பயன்­ப­டுத்தி, நம்­பிக்கை துரோகம் செய்து மோசடி புரிந்­தமை, மோச­டிக்கு உதவி ஒத்­ தாசை அளித்­தமை ஆகிய குற்றச் சாட்­டுக்­களின் கீழேயே அவர் கைது செய்­யப்­பட் டார். இம்­மோ­சடி நட­வ­டிக்­கைகள் கார­ண­ மாக அர­சாங்­கத்­துக்கு 9 கோடியே 16 இலட்­சத்து 35 ஆயிரம் ரூபா வரை நட்டம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக விசா­ர­ணை­யா­ளர்­க­ளான நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அறி­வித்­தனர்.   

விமல் வீர­வன்­ச­வுடன் நேற்­றைய தினம் அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­ணத்தின் முன்னாள் உதவி பொது முகா­மை­யாளர் சம்பத் லொகு ஹென்­ன­தி­கேவும் கைது செய்­யப்­பட்டார். இரு­வரும் நேற்று பிற்­பகல் கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லையில் ஆஜர் செய்­யப்­பட்ட போது அவர்­களை எதிர்­வரும் 24 ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

வாகன முறை­கேடு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக நேற்று காலை 9.30 மணி­ய­ளவில் முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்­சவும், அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­னத்தின் முன்னாள் பிரதி பொது முகா­மை­யா­ள­ரான சம்பத் லொக்கு ஹென்­ன­தி­கேவும் கோட்­டையில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டனர்.

அங்கு சென்ற அவர்­க­ளிடம் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கார மற்றும் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஆகி­யோரின் மேற்­பார்­வையில் நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர பிரே­ம­ரத்­னவின் கீழ் பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­ணான்டோ தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்ப்ட்­டன.

சுமார் இரு மணி நேர விசா­ர­ணையின் பின்னர் விமல் வீர­வன்­சவும், அவ­ரது அமைச்சுக் காலப்­ப­கு­தியில் பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­னத்தின் பிரதி பொது முகா­மை­யா­ள­ராக செயற்­பட்ட முன்னாள் இரா­ணுவ கெப்டன் சம்பத் லொகு ஹென்­ன­தி­கேவும் கைது செய்­யப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து அவ்­வி­ரு­வ­ரி­டமும் இரு மணி நேரத்­துக்கு குறை­யாத சிறப்பு வாக்கு மூலம் ஒன்­றினை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் பதிவு செய்­து­கொண்­டனர்.

நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் விமல் வீர­வன்ச கைது செய்­யப்­பட்டார் என்­பதை அறிந்த அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் கோட்­டையில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்தை சூழ்ந்­து­கொண்­டனர். இதனால் அப்­ப­கு­தியில் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. நிலை­மையை சமா­ளிக்க கோட்டை பொலி­ஸாரும் மேல­திக பொலிஸ் துருப்­புக்­களும் ஸ்தலம் வர­வ­ழைக்­கப்­பட்­டன.

இந் நிலை­யி­லேயே நேற்று பிற்­பகல் 1.45 மணி­ய­ளவில் விமல் வீர­வன்­சவும், சம்பத் லொக்கு ஹென்­ன­தி­கேவும் சிறப்பு பாது­காப்­புக்கு மத்­தியில் கோட்டை நீதிவான் நீதி­மன்­றுக்கு அழைத்து வரப்­பட்­டனர். கோட்டை நீதி­மன்ற வளா­கத்­துக்கு விமல் வீர­வன்­சவின் ஆத­ர­வா­ளர்கள் வருகை தந்த நிலையில் கோட்டை நீதி­மன்ற பகு­தியில் கடும் பாது­காப்பை ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

 கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சாலிய சில்­வாவின் நேரடி கண்­கா­ணிப்பில் கோட்டை, கொம்­பனித் தெரு, கொள்­ளு­பிட்டி மற்றும் மாளி­கா­வத்தை உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களில் இருந்து பொறுப்­ப­தி­கா­ரிகள் தலை­மை­யி­லான பொலிஸ் குழுக்கள் வர­வ­ழைக்­கப்ப்ட்டு இந்த பாது­காப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தது.

மேலும் நீர்த்­தாரை வண்­டியும், கல­ம­டக்கும் பொலி­ஸாரும் அப்­ப­கு­திக்கு வர­வ­ழைக்­கப்­பட்டு தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இத்­த­கைய கடு­மை­யான பாது­காப்­புக்கு மத்­தி­யி­லேயே வழக்­கா­னது விசா­ர­ணைக்கு வந்­தது.

வழக்கு விசா­ரணை ஆரம்­ப­மான போது நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு சார்பில் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் அனுர பிரே­ம­ரத்ன, பொலிஸ் பரி­சோ­தகர் சஞ்­ஜீவ பெர்­ணான்டோ ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர். சந்­தேக நப­ரான பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச சார்பில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க தலை­மையில், ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவீந்த்ர பெர்­ணான்டோ, விஜே­சிரி அம்­ப­வத்த, உதய கம்மன் பில, பாலித்த பெர்­ணான்டோ, ஹேமந்த கொடித்­து­வக்கு, ஹரிஸ் சந்­திர, ரகித்த அபே­சூ­ரிய, அசித் சிரி­வர்­தன, பிரே­மநாத் சீ தொல­வத்த உள்­ளிட்ட 17 சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.

சம்பத் லொகு ஹென்­ன­திகே சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்­திர பெர்­ணான்டோ மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிரி­வர்­தன ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கினர். இதன் போது மன்றில் கருத்­துக்­களை முன்­வைத்த நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரிகள் குறிப்­பி­டு­கையில்

' 2014 ஆம் ஆண்டு அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­னத்தின் உள்­ளக கணக்­காய்வின் பிர­காரம் 47 வாக­னங்கள் தொடர்பில் மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக குறிப்­பிட்டு அக்­கூட்­டுத்­தா­ப­னத்தின் தலை­வரே பொலிஸ் மா அதி­ப­ருக்கு இது தொடர்­பி­லான முறைப்­பாட்டை கடந்த 2015 ஆம் ஆண்டு வழங்­கி­யி­ருந்தார். இது தொடர்பில் விசா­ரணை செய்யும் பொறுப்பு பொலிஸ் மா அதிபர் ஊடாக எமக்கு அளிக்­கப்­பட்­டது. இது தொடர்பில் நாம் நீண்ட விரி­வான விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்தோம். அதன் பிர­காரம் 40 வாக­னங்கள் தொடர்பில் மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளதை நாம் கண்­ட­றிந்தோம். அதில் 3 வாக­னங்­க­ளுக்கு எரி­பொருள் விநி­யோ­கத்தின் போது மோசடி இடம்­பெற்­றுள்­ளது. அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­ணத்தின் ஆவ­ணங்கள் உள்­ளிட்ட பல ஆவ­ணங்கள், மோசடி நட­வ­டிக்­கைக்கு உட்­பட்ட வாக­னங்­களின் சார­தி­களின் வாககு மூலம் என பல­தையும் நாம் பதிவு செய்தோம். இதன் போது இந்த 40 வாக­னங்­களும் பொறி­யியல் கூட்­டுத்­தா­ப­னத்­துக்கு சொந்­த­மான வேலைத் தலங்­களில் உள்­ள­தாக கூறப்­பட்­டது. அங்கு சென்று நாம் சோதனை செய்தோம். எனினும் அங்கு அவை இருக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து வேலைத்­தள முகா­மை­யா­ளர்­க­ளிடம் நாம் விசா­ரணை செய்தோம். அவ்­வாறு எந்த வாக­னமும் வேலைத்­தள நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­பது அத­னூ­டாக உறு­தி­யா­னது. இது தொடர்பில் தொடர்ந்து முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் அவ்­வா­க­னங்கள் 10 இலட்சம் வீடு­களை அமைக்கும் ஜன செவன திட்­டத்தின் ஒருங்­கி­ணைப்­பா­ளர்­க­ளாக சேர்க்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளதை கண்­ட­றிந்தோம். எனினும் அவ்­வா­க­னங்கள் ஜன செவன திட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக அவர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.

அர­சியல் மற்றும் சொந்த தேவை­க­ளுக்­கா­கவே அவர்­களால் பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­த­தையை எம்மால் உறுதி செய்ய முடிந்­தது. அவ்­வி­சா­ர­ணையில் விமல் வீர­வன்­சவின் சகோ­த­ரியின் மகன் மார் இரு­வ­ருக்கும், மைத்­து­னர்கள் இரு­வ­ருக்கும் மேலும் ஒரு உற­வி­ன­ருக்கும் வாகனம் வழங்­கப்­பட்­டி­ருப்­பதை நாம் உறுதி செய்தோம். அத்­துடன் தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் நடை முறை அர­சி­ய­லுடன் தொடர்­பு­பட்ட 10 பேருக்கும் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இது தொடர்பில் நாம் விமலின் அமைச்சில் செய­லா­ளர்­க­ளாக இருந்த மூவ­ரிடம் விசா­ர­ணை­களை செய்­துள்ளோம்.

 இவ்­வி­சா­ர­ணை­களின் பின்­ன­ரேயே விமல் வீர­வன்ச, சம்பத் லொக்கு ஹென்­ன­திகே ஆகியோர் அரச வாக­னங்­களை தவ­றாக பயன்­ப­டுத்­தி­யுள்­ளதும் நம்­பிக்கை துரோகம் செய்­துள்­ளதும் மோசடி செய்­துள்­ளதும் அதற்கு உடந்­தை­யாக இருந்­துள்­ள­மையும் உறு­தி­யா­னது. மோசடி கார­ண­மாக அர­சாங்­கத்­துக்கு 9 கோடியே 16 இலட்­சத்து 35 ஆயிரம் ரூபா­வரை நட்டம் ஏற்­பட்­டுள்­ள­தாக கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.

விமல் வீர­வன்ச மற்றும் சம்பத் ஆகி­யோ­ருக்கு இக்­குற்றச் சாட்­டுக்­க­ளுடன் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் தொடர்­புள்­ளது. எனவே பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் இங்கு குற்றம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. ' என அறி­வித்­தனர்.

இத­னை­ய­டுத்து விமல் வீர­வன்­சவின் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க வாதிட்டார். அவ­ரது வாதத்­தின்­போது

"" நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரிவு அர­சியல் நிக்ழ்ச்சி நிரலின் கீழ் செயற்­பட்­டுள்­ள­தாக குற்றம் சாட்­டினார். ' இது அர­சியல் ரீதி­யி­லான கைதாகும். மோசடி இடம்­பெற்­றுள்­ள­தாக கூறப்­பட்ட போதும் உயர் நிலையில் இருந்த விமலும் கீழ் நிலையில் இருந்த உதவி பொது முகா­மை­யா­ளரும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். எனினும் அப்­போது அரச பொறி­யியல் கூட்­டுத்­தா­பன பொது முகா­மை­யா­ள­ராக இருந்த தற்­போ­தைய பார­ளு­மன்ற உறுப்­பினர் ஆசு மார­சிங்­கவை ஏன் கைது செய்­ய­வில்லை? அவ­ரது அனு­மதி இன்றி எப்­படி வாக­னங்கள் வழங்­கப்­பட்­டி­ருக்க முடியும்.? என சுட்­டிக்­காட்டி இதனை அர­சியல் கைது என அவர் விப­ரித்தார்.

இத­னை­விட பொது சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் முன்­வைக்­கப்­படும் குற்­றச்­சாட்டு தொடர்பில் மன்­றுக்கு உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வ­ரினால் முன்­வைக்­கப்­படும் உறுதிக் கடி­தத்தில் உள்ள குறை­பா­டு­க­ளையும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அது ஒரு அறிக்கை மட்­டுமே என தெரி­வித்த அவர் அதனை உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் உறுதி செய்­ய­வில்லை எனவும் அவர் வாதிட்டார்.

எவ்­வா­றா­யினும் பொதுச் சொத்து குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு விஷேட கார­ணிகள் இன்றி நீதிவான் நீதி­மன்­றுக்கு பிணை வழங்க முடி­யாது என்­பதை மையப்­ப­டுத்தி விஷேட கார­ணி­க­ளையும் அவர் முன்­வைத்தார். இதன்­போது அவர் வாதி­டு­கையில்

' எனது சேவை பெறு­நரின் வீட்டில் ஒரு இளைஞர் உயி­ரி­ழந்தார். இதனை மையப்படுத்தி சமூக வலைத்தலங்கள் பல்வேறு கட்டுக்கதைகளை பரப்பி வருகின்ளன. இதனால் குறிப்பாக அவரது 15 வயதான மகள் மற்றும் மனைவி ஆகியோர் கடுமையான மன உணைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். மகள் இந்த வருடம் சாதரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளார். எனினும் அவர் தந்தையின்றி மேலும் பல மன உளைச்சலுக்கு உள்ளாக நேரிடும். இது தொடர்பிலான வைத்திய அறிக்கையும் சமர்ப்பிக்கின்றேன். என கூறி எந்த ஒரு நிபந்தனையின் அடிப்படையிலும் பிணை வழங்குமாறு கோரினார்.

மற்றைய சந்தேக நபர் சார்பிலும் அவரது இரு மகள்மார் சாதாரண தர உயர் தரம் பரீட்சைகளுக்கு தோற்றுவது, 12 வயதான பிள்ளை மன நிலை பதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுவது, வயதான அம்மாவை பராமரிப்பது போன்ற காரணங்களைக் காட்டி பிணை கோரப்பட்டது.

இந்த காரணிகள் குறித்து கவனம் செலுத்திய கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன, அவற்றை ஆழமாக ஆராய்ந்து பிணை தொடர்பில் தீர்மானமொன்றை எதிர்வரும் 24 ஆம் திகதி அறிவிப்பதாகவும் அதுவரை இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-11#page-1

Share this post


Link to post
Share on other sites

விமல் வீரவன்ஸவின் கைதுக்கு காரணம் வெளியாகியது

 

 

அரசாங்கத்துக்கு சொந்தமான  40 வாகனங்களை சட்டவிரோதமாக  பயன்படுத்தி  நாட்டுக்கு 9 கோடியே 16 இலட்சம் ரூபாவை துஷ்பிரயோகம்  செய்த  காரணத்திற்காகவே தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல்  வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளார்.   இதில் எந்தவிதமான அரசியல்  பழிவாங்கல்களும் இல்லை என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று  பிரதியமைச்சர் அஜித் பி  பெரேரா தெரிவித்தார்.  

விமல் வீரவன்ஸவின் அக்காவின் இளையமகன், மூத்தமகன், மனைவியின்  அக்காவின் கணவர், தங்கையின் கணவர், விம லின் தங்கை என இந்த  வாகனங்களை பயன்படுத்தியவர்களின்  பட்டியல் 'பீ ' அறிக்கையில்  நீண்டு கொண்டே செல்கிறது என் றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து  கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

40 வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி  நாட்டுக்கு  9 கோடியே 16  இலட்சம் ரூபாவை நஷ்டப்படுத்திய காரணத்திற்காகவே தேசிய சுதந்திர  முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ கைதுசெய்யப்பட்டுள்ளார். இதில்  எந்தவிதமான அரசியல் பழிவாங்கல்களும் இல்லை என்பதை நாட்டு மக்கள்  புரிந்துகொள்ளவேண்டும்.  

அவர் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தபோது  அரச பொறியியல்  கூட்டுத்தாபனத்தில் 2014 ஆம் ஆண்டு  முன்னெடுக்கப்பட்ட உள்ளக  கணக்காய்வின் போது 40 வாகனங்கள்  துஷ்பிரயோகம்  செய்யப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது கடந்த  அரசாங்கத்தின் காலத்திலேயே இந்தக்குற்றம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.  

இந்நிலையில் 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி  அரச  பொறியியல் கூட்டுத்தாபனத்தின் தலைவர்   நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவில்  இது தொடர்பாக முறைப்பாடு செய்தார்.  அந்த  முறைப்பாட்டுக்கு அமைவாக  நடத்தப்பட்ட விசாரணையின் முடிவிலேயே  விமல் வீரவன்ச  கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம்  அமைச்சுடன்  சம்பந்தப்படாதவர்களுக்கு இவ்வாறு 40  வாகனங்களை வழங்கியமையினால் நாட்டுக்கு 9 கோடியே 16  இலட்சத்து 35  ஆயிரத்து 599 ரூபா  நஷ் டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த  வாகனங்களுக்கான வாடகை, எரிபொருள் செலவு, சாரதிகளுக்கான சம்பளம்,  மேலதிக கொடுப்பனவு என்பவற்றுக்காகவே இந்த செலவுகள்  செய்யப்பட்டுள்ளன.  

அப்போது இதில் கடமையாற்றிய  அதிகாரி ஒருவரே அமைச்சரின்  உத்தரவின்பேரில்  இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். 1982 ஆம்  ஆண்டு 12 ஆம் இலக்க பொதுச் சொத்து துஷ்பிரயோகத்தின் கீழேயே விமல்  கைது செய்யப்பட்டுள்ளார்.  

இந்த 40 வாகனங்களைப் பயன்படுத்தியவர்களில் சந்தேக நபரின் உறவினர்கள்  உள்ளனர்.  இவை அனைத்தும் 'பீ ' அறிக்கை யில் காணப்படுகின்றன. விமல்  வீரவன்ஸவின் அக்காவின் இளையமகன், மூத்தமகன், மனைவியின் அக்காவின்  கணவர், தங்கையின் கணவர், விமலின் தங்கை என  இந்த வாகனங்களை  பயன்படுத்தியவர்களின்  பட்டியல் 'பீ 'அறிக்கையில்  நீண்டுகொண்டே  செல்கிறது.

அதாவது இதன்மூலம்  நாட்டு மக்களுக்கு  9 கோடியே 16 இலட்சம் ரூபா  நஷ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது அரசாங்க அதிகாரிகளுக்கும் ஒரு சிறந்த  பாடமாக அமையவேண்டும். காரணம் விசாரணையின் போது   விமல்  வீரவன்ஸ  வாக்குமூலமளிக்கையில்   தான் அமைச்சர் என்ற ரீதியில்  உத்தரவுகளைப் பிறப்பித்ததாகவும் அது தவறு எனின்  அதிகாரிகள்    சுட்டிக்காட்டியிருக்கவேண்டுமெனவும் கூறியிருக்கிறார்.  

அந்தவகையில், அதிகாரிகளும் சுயாதீனமாக நடந்துகொள்ள வேண்டியது  மிகவும் அவசியமாகும்.

கேள்வி:- அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் அப்போது தலைவராக  இருந்தவர்  தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.  அப்படியாயின்  ஏன் அவரை கைதுசெய்யவில்லை?

பதில்:- (ராஜித)  இந்த கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். நான்  நிர்மாணத்துறை  அமைச்சராக இருந்தபோதுதான்  நீங்கள் கூறும் இந்த நபர் அரச பொறியியல்  கூட்டுத்தாபனத்தில்  தலைவராக கடமையாற்றினார். அவர் சிறப்பாக  சேவையாற்றினார்.  அவரில் எவ்விதமான தவறுமில்லை.  நஷ்டத்தில்  இயங்-கிய  பொறியியல் கூட்டுத்தாபனத்தை அவர் இலாபகரமாக மாற்ற  முயன்றார். அதுமட்டுமன்றி அவர் 2011 ஆம் ஆண்டு தலைவர் பதவியிலிருந்து  விலகிவிட்டார்.  இந்த துஷ்பிரயோகங்கள் அதன் பின்னரே நடைபெற்றுள்ளன.

பதில்:-(அஜித் பி பெரேரா) வாகனங்களை எவ்வாறு  பயன்படுத்துவது என்பது  தொடர்பான சட்டதிட்டங்கள் உள்ளன. ஆனால் அந்த அனைத்து  விதிமுறைகளையும் மீறி விமல் வீரவன்ஸ  தனது உறவினர்களுக்கும்   தேவையானவர்களுக்கும் கொடுத்திருக்கிறார். ஒன்று, இரண்டு என்றால்  ஏதோ  தவறு நடந்திருக்கின்றது என்று கூறலாம்.  ஆனால் 40  வாகனங்களை   துஷ்பிரயோகம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  

கேள்வி:-  இந்த 40 பேரில்   ஒரு-சில ஊடகவியலாளர்களும் உள்ளதாக  கூறப்படுகின்றதே?

பதில்:- ஒரு சில  ஊடகவியலாளர்களின் பெயர்கள் பி அறிக்கையில் உள்ளன.   ஆனால் அவற்றை நான் கூறுவது முறையல்ல.  அதனை என்னிடம்  கேட்காதீர்கள்.

கேள்வி:- நீங்கள் தேர்தல் காலத்தில் மெகா டீல் தொடர்பாக பேசினீர்கள்,   ஆனால் தற்போது இந்த சிறியளவிலான வாகன விடயங்கள் தொடர்பில்தானே  கைதுகள் இடம்பெறுகின்றன?

பதில்:- உங்களுக்கு  இது சிறிய விடயமாக இருக்கலாம். ஆனால் 9 கோடி ரூபா  என்பது இலங்கையர்களுக்கு பெரிய விடயமாகும்.

கேள்வி:- விமல் கைதுசெய்யப்படுவார் என மஹிந்த ராஜபக்ஷ எவ்வாறு  முன்கூட்டியே கூறினார்?

பதில்:- தான் செய்துள்ள தவறின் அடிப் படையில்  கைதுசெய்யப்படலாம் என  அவர் கருதியிருக்கலாம்.

http://www.virakesari.lk/article/15370

Share this post


Link to post
Share on other sites

சிறையில் என்ன செய்கிறார் விமல்?

 

(எம்.எப்.எம்.பஸீர்)

அர­சாங்­கத்தின் 40 வாக­னங்­களை மோச­டி­யாகப் பயன்­ப­டுத்­தினார் எனும் குற்­றச்­சாட்டில் கைதுசெய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்பட்­டுள்ள தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வரும்,

 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் வீட­மைப்பு நிர்­மா­ணத்­துறை மற்றும் பொறி­யியல் விவ­கார அமைச்சர் விமல் வீர­வன்ச வெலிக்­கடை சிறையின் சிறப்பு தடுப்பு அறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன.

வெலிக்­கடை சிறைச்­சா­லையின் ஈ வோர்ட்டில் உள்ள சிறப்பு சிறைக் கூடத்­தி­லேயே அவர் தனி­யாக இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக வெலிக்­கடை சிறைச்­சா­லையின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

 முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஜனா­தி­ப­தி­யாக முன்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்த காலப்­ப­கு­தியில் விளக்­க­ம­றி­யலில் அடைக்­கப்­பட்ட போதும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ அண்­மையில் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த போதும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த சிறை­ய­ரை­யி­லேயே விமல் வீர­வன்ச இவ்­வாறு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

விமல் வீர­வன்­சவின் பாது­காப்பை கருத்தில் கொண்டே இவ்­வாறு அவர் தனி சிறைக் கூண்டில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிறைச்­சாலை தக­வல்கள் தெரி­வித்­தன. ஈ வோர்ட்டில் சுமார் 50 கைதிகள் உள்ள போதும் விமல் வீர­வன்­சவின் சிறைக் கூண்டின் பக்கம் அவர்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை என அறிய முடி­கின்­றது.

 இத­னி­டையே நேற்­றைய தினம் விமல் வீர­வன்­சவின் மனைவி சஷி வீர­வன்­ச­வினால் சிறைச்­சாலை ஆணை­யா­ள­ரிடம் விஷேட வேண்­டுகோள் ஒன்று முன் வைக்­கப்­பட்­டது. விமல் வீர­வன்­ச­வுக்கு மூன்று வேளை உண­வி­னையும் வீட்டில் இருந்து எடுத்து வர அனு­மதி கோரப்­பட்­டது.

இந்த கோரிக்­கைக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்றிலிருந்து மூன்று வேளை உணவும் விமலுக்கு வீட்டில் இருந்து கொண்டுவந்து கொடுக்கப்படுவதாக வெலிக்கடை சிறைச்சாலையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-01-12#page-1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  
Followers 0