Sign in to follow this  
குமாரசாமி

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன்

Recommended Posts

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் -கமல்ஹாசன்

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான். இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறினார். 
 
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது. ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது. 
 
ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் பணியவைக்கப்படுகிறதே தவிர அவை காயப்படுத்தப்படுவது கிடையாது. காளைகள் கொம்புகள் உடைப்பு, பிற இடங்களில் காயம் ஏற்படுத்துவது போன்ற எந்தஒரு காயமும் ஏற்படுத்தப்படுவது கிடையாது என்றார் கமல்ஹாசன்.

http://www.nakkheeran.in/

Share this post


Link to post
Share on other sites
போல்    337

கமலஹாசனிடம் இருந்து தளம்பல் இல்லாத அபூர்வமான கருத்து ஒன்று வெளிவந்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, போல் said:

கமலஹாசனிடம் இருந்து தளம்பல் இல்லாத அபூர்வமான கருத்து ஒன்று வெளிவந்துள்ளது.

ஜல்லிக்கட்டு தடையிலும்  தமிழினத்திற்கான ஒரு அடக்குமுறை ஆழமாக பதிந்துள்ளது.

ஒருசில நக்கல் நமசிவாயங்கள் தமிழ்நாட்டின் தைத்திருநாள் விடுமுறை நீக்கத்தை வைத்து.....சிங்களவனை தூக்கி கதைக்கினம்...சிலோனிலை தைத்திருநாள் விடுமுறை நாளாம்....மகிந்த தைப்பொங்கல் பொங்கினவராம்.....மைத்திரியும் பொங்கினவராம்....பொங்குவாராம்.
இதை விட ஈழத்தமிழனுக்கு இன்னும் என்னடா வேணும் எண்டு கேக்காத குறையாய்....ஒரு சில......
 

Share this post


Link to post
Share on other sites
6 hours ago, குமாரசாமி said:

ஜல்லிக்கட்டு தடையிலும்  தமிழினத்திற்கான ஒரு அடக்குமுறை ஆழமாக பதிந்துள்ளது.

ஒருசில நக்கல் நமசிவாயங்கள் தமிழ்நாட்டின் தைத்திருநாள் விடுமுறை நீக்கத்தை வைத்து.....சிங்களவனை தூக்கி கதைக்கினம்...சிலோனிலை தைத்திருநாள் விடுமுறை நாளாம்....மகிந்த தைப்பொங்கல் பொங்கினவராம்.....மைத்திரியும் பொங்கினவராம்....பொங்குவாராம்.
இதை விட ஈழத்தமிழனுக்கு இன்னும் என்னடா வேணும் எண்டு கேக்காத குறையாய்....ஒரு சில......
 

 எங்கை பூந்து..... கிடாய் வெட்டலாம் என்று, பாத்துக் கொண்டு இருக்கிறார்கள். :grin:

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this  

 • Similar Content

  • By karu
   சல்லிக் கட்டு-3
   கல்லிப் பருவதத்தைக் கண்டதுபோல் சுண்டெலியை
   ஜல்லிக்கட்டின்று தமிழரடைந்த சொத்து.
   கொல்லுகிற பொஸ்பரசுக் குண்டெறிந்து எம்மினத்தை
   வல்லார் அழிக்கையிலே வாய்மூடி நின்றவர்கள்
   சொல்லாமல் வந்தார் துணிவாய்த் தம் பங்களித்தார்.
   நல்ல சகுனமிது நாம்மகிழ, எம்மினத்தைப்
   பொல்லார் அழிக்கவந்தால் பொங்கியெழ மக்களுண்டு
   எல்லாரும் வந்து இனிமேல் குரல் கொடுப்பார்.
   முற்றுகைகள் செய்து முடக்கித் தமிழ் நாட்டை
   வெற்றிக் குரலெழுப்பி வீச்சாய்க் கவிசமைத்து
   ஆகாகா எங்கள் அருந்தமிழர் வென்றிடுவார்.
   வாகாகக் காளைதனை வதையாது பாய்ந்து பற்றும்
   எம் தமிழர் பண்பாட்டை எம்மிளைஞர் மீட்டதுபோல்.
   தாகமாம் தமிழரது தாயகத்தைக் காண்பதற்கு
   ஆட்சியதிகாரம் அனைத்தையுமே மீட்டிடுவார்
   சூட்சிப்பகை விரட்டிச் சுதந்திரத்தைக் கண்டிடுவார்
   என்று மனம் மகிழ்ந்தோம் இனியெமக்கு என்ன குறை
   நன்றே நடக்குமினி நம்மினத்திற் கானாலும்
   கொன்று தமிழினத்தைக் குழிதோண்டிப் புதைக்கையிலே!
   அன்றெம் இனத்துக்காய் அனைவரும் சேர்ந்திருந்தால்
   இன்றெமக்கு இந்த இழிவு நிலை வந்திடுமா.
   சென்றதினி மீளாது சிந்தை செய்து அத்துயரை
   என்றும் கவல்வதனால் என்ன பலன் கண்டிடலாம்
   ஒன்று மட்டும் உண்மை அதை உலகுக் குரைத்திடுவேன்
   விழலுக் கிறைத்தது போல் வீரத்தை வீண்டித்து
   பழம் படுபனையின் கிழங்கு பிளப்பதற்கு
   ஆப்பு மொங்கான் கோடரியென்றத்தனையும் பாவித்தோர்
   சட்டமறுப்பாலே தமிழ்நாடனைத்திலுமே
   சல்லிக்கட்டை நிகழ்த்திச் சரித்திரத்தை மீட்டிருந்தால்
   எம் தமிழர் ஓர்மத்தை இவ்வுலகு கண்டிருக்கும்
   இந்தியத்துக் கோர் பாடம் இதனால் கிடைத்திருக்கும்.
   விந்தியத்தின் தெற்கில் வர விசமிகளும் அஞ்சிடுவார்.
   ஆனாலுமந்தோ! அகிம்சைவழிப் போரால்
   சட்டமொன்றைக் கேட்டு தடியடிகள் பட்டுலைந்தோர்
   விட்ட தவறென்ன வீணாயேன் நோதலுற்றார்.
   என்ன பரிதாபம் எதற்காயிவ் வேதனைகள்?
   மாட்டைப் பிடிப்பதற்கும் மண்ணில் தமிழரினம்
   நாட்டைப் பிடிப்பதுபோல் நடந்து கொண்ட மாயமென்ன?
   கோட்டை விழுந்துகொடுங் கோல்சரிந்து நாம் பட்ட
   பாட்டுக்குக் கொஞ்சம் பலன் கிடைத்ததவ்வளவே!
   ஆட்டம் முடிந்ததடா! அடுத்ததென்ன யாமறியோம்.