Sign in to follow this  
நவீனன்

2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..?

Recommended Posts

2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்..?

2016 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா விருது போர்ச்சுகல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான ரோனால்டோவிற்கு வழங்கப் பட இருக்கிறது.ஒவ்வொரு வருடமும் சிறந்து விளங்கும் கால்பந்தாட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன் படி 2016 ஆண்டிற்கான சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்ற கவுரவத்தை பெற்றிருக்கிறார் ரோனால்டோ.

2016 ஆம் ஆண்டின் சிறந்த கால்பந்தாட்டக்காரர் யார்...?

சிறந்த வீரருக்கான வாக்கெடுப்பில் ரோனால்டோ 34.54 சதவிகிதம் பெற்று முதலிடமும், அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி 26.42 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர்.பெரும் எதிபார்ப்புக்கு இடையில் ரோனால்டோ தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/sports/77411-best-football-player-of-2016.art

Share this post


Link to post
Share on other sites

பிபா விருதுக்கு போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ தேர்வு

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 
பிபா விருதுக்கு போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் ரொனால்டோ தேர்வு
 
பாரிஸ்:

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா விருதுக்கு, போர்ச்சுக்கல் கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பார்சிலோனா அணியின் மெஸ்ஸி மற்றும் ஜெர்மனியின் அந்தோனியா கிரிஸ்மேன் ஆகியோரை பின்னுக்கு தள்ளி 31 வயதான ரோனால்டோ முதலிடத்தை பிடித்துள்ளார்.

முன்னதாக இந்த ஆண்டிற்கான பல்லோ டி'ஓர் விருது கடந்த டிசம்பரில் அவருக்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. சாம்பியன்ஸ் லீக் மற்றும் ரியல், யூரோ கோப்பைகளை வென்று கொடுத்ததை அடுத்து அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை சேர்ந்த கார்லி லோய்டு என்பவருக்கு சிறந்த பெண் வீரருகான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு

கிறிஸ்டியனோ ரொனால்டோ - 34.54%

லியானெல் மெஸ்ஸி - 26.42%

அந்தோனியா கிறிஸ்மேன் - 7.53%

http://www.maalaimalar.com/News/Sports/2017/01/10053831/1061164/Cristiano-Ronaldo-beats-Lionel-Messi-to-win-Fifa-best.vpf

Share this post


Link to post
Share on other sites
மேலான பீபா கால்பந்தாட்ட விருது விழா 2016: அதிசிறந்த வீரர் ரொனால்டோ, அதிசிறந்த வீராங்கனை கார்ளி
2017-01-11 17:56:04

21744_ronaldo.jpgசர்­வ­தேச கால்­பந்­தாட்ட சம்­மே­ள­னங்கள் சங்­கத்தின் (FIFA பீபா) அங்­கு­ரார்ப்­பண அதி­சி­றந்த பீபா கால்­பந்­தாட்ட விருது விழாவில் வரு­டத்தின் (2016) அதி சிறந்த வீர­ருக்­கான விருதை கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ வென்­றெ­டுத்தார்.

 

ரியல் மெட்றிட், போர்த்­துகல் ஆகிய அணி­க­ளுக்­காக முன்­கள வீர­ராக விளை­யா­டி­வரும் 31வய­தான க்றிஸ்­டி­யானோ ரொனால்டோ கடந்த வருடம் அதி சிறந்த ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் பல­னாக அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீரர் விருதை வென்­றெ­டுத்தார்.

 

கடந்த வருடம் 44 போட்­டி­களில் விளை­யா­டிய ரொனால்டோ, 42 கோல்­களைப் போட்­ட­துடன் 14 கோல்­க­ளுக்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருந்தார்.

 

அதி சிறந்த பீபா விரு­துக்­கான இறுதிப் பட்­டி­யலில் இடம்­பெற்­ற­வர்­களில் கிறிஸ்­டி­யானோ ரொனால்­டோ­வுக்கு 34.54 வீத வாக்­குகள் கிடைத்­தன.

 

பார்­சி­லோனா மற்றும் ஆர்­ஜன்­டீன வீரர் லயனல் மெசிக்கு 26.42 வீத வாக்­கு­களும் ரியல் மெட்றிட் மற்றும் பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் கிறீஸ்­மா­னுக்கு 7.53 வீத வாக்­கு­களும் கிடைத்­தன.

 

21744Hosts-Marco-Schreyl-and-co-host-and

 

இந்த விருது குறித்து கருத்து வெளி­யிட்ட ரொனால்டோ, ‘‘எனது கால்­பந்­தாட்ட வாழ்க்­கையில் கடந்த வருடம் மிகச் சிறந்த ஆண்­டாகும். போர்த்­து­க­லுக்கு வெற்றிக் கிண்ணம் கிடைத்­தது மகத்­தா­னது.

 

இத­னை­யிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். சம்­பியன்ஸ் லீக் மற்றும் கழக உலகக் கிண்ண வெற்­றி­களை என்னால் மறக்க முடி­யாது. வரு­டத்தை நாங்கள் மிக சிறப்­பாக நிறைவு செய்தோம். ஓர­ணி­யா­கவும் தனிப்­பட்ட ரீதி­யிலும் பல கிண்­ணங்­களை வென்­றெ­டுத்­த­தை­யிட்டு நான் பெரு­மிதம் அடை­கின்றேன்’’ என்றார்.

 

21744Penang-FA-and-Malaysia%5C%5C%5C%27s

மொஹமத் பாயிஸ் சப்றி


 

அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீராங்­க­னைக்­கான விருது அமெ­ரிக்­காவின் கார்ளி ஆன் லொய்­டுக்கு வழங்­கப்­பட்­டது. ஆண்கள் அணிக்­கான அதி சிறந்த பயிற்­றுநர் விருது இத்­தாலி நாட்­ட­வ­ரான குளோ டியோ ரெனி­யே­ரிக்கு கிடைத்­தது. இவர் லெஸ்டர் சிட்டி அணியின் பயிற்­று­ந­ராவார்.

 

மகளிர் அணிக்­கான அதி­சி­றந்த பயிற்­றுநர் விருது ஜெர்மன் மகளிர் அணி பயிற்றுர் சில்­வியா நீடுக்கு கிடைத்­தது.

 

21744fifa-best-coaches-and-best-players.

சிறந்த பயிற்றுநர்கள்


 

வரு­டத்தின் அதி­சி­றந்த பீபா பதி­னொ­ருவர் அணி:


கோல்­காப்­பாளர்: மெனவல் நோயர்

 

பின்­கள வீரர்கள்: டெனி அல்வ்ஸ், ஜெரார்ட் பிக், சேர்­ஜியோ ரமோஸ், மார்­செலோ

 

மத்­திய கள வீரர்கள்: லூக்கா மொட்றிக், டோனி க்ரூஸ், அண்ட்ரெஸ் இனி­யெஸ்டா

 

முன்­கள வீரர்கள்: லயனல் மெசி, லூயி சுவாரெஸ், கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ.


வரு­டத்தின் அதி சிறந்த கோலுக்­கான புஸ்காஸ் விருது பெனாங்க மற்றும் மலே­சிய வீரர் மொஹமத் பாயிஸ் சப்­றிக்கு வழங்­கப்­பட்­டது. இந்த விருதை வென்­றெ­டுத்த முத­லா­வது மலே­சியர் சப்றி ஆவார்.

 

2010 முதல் 2015 வரை பெலன் டி’ஓர் விருது என அழைக்­கப்­பட்டு வந்த அதி சிறந்த வீரர் மற்றும் வீராங்­க­னைக்­கான விருது இவ் வருடம் முதல் அதி சிறந்த பீபா கால்­பந்­தாட்ட வீரர், வீராங்­கனை விரு­தாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

 

பிரான்­ஸினால் 2009 வரை வழங்கப்பட்டு வந்த பெலன் டி’ஓர் விருது மீண்டும் அந் நாட்டினால் கடந்த வருடத்திலிருந்து வழங்கப்பட்டுவருவதை அடுத்து பீபா தனது விருதின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளது.

 

(என்.வீ.ஏ.)

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21744#sthash.D797iTR0.dpuf
  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this