• ×   Pasted as rich text.   Paste as plain text instead

      Only 75 emoticons maximum are allowed.

    ×   Your link has been automatically embedded.   Display as a link instead

    ×   Your previous content has been restored.   Clear editor

    ×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Similar Content

    • By நவீனன்
      வவுனியாவில் 10ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்க விண்ணப்பபடிவம் விநியோகம்     வவுனியா மாவட்டத்தில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை வழங்குவதற்கு கிராமசேவையாளர்களூடாக விண்ணப்பப்படிவம் விநி யோகிக்கப்பட்டு   வருகின்றது.   சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத விவகார அமைச்சினால் இவ்விண்ண ப்பப்படிவங்களின் விநியோகம் அரசாங்க அதிபரின் சிபாரிசுக்கு அமைவாக இடம்பெற்று வருகின்றது.   கிராமசேவையாளர்களுக்கு இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் கலந்துரையாடல் கடந்த  வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர், கிராமசேவையாளர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றது.   இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர்களினால் பொருத்து வீடு தொடர்பாக கிராமசேவையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்களை எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னர் கையளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.   10 ஆயிரம் வீடுகளில் செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், வவுனியா தெற்கு, வவுனியா நகரம் போன்ற பகுதிகளிலுள்ள பொருத்து வீடு தேவையுடையவர்களுக்கு பொருத்துவீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரு வதாக வன்னி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம் தெரிவித்துள்ளார். http://www.onlineuthayan.com/news/22587
    • By நவீனன்
       'சுவாமிநாதன் பதவி துறக்கவேண்டும்'     தன்னுடைய அமைச்சுப் பதவியை முறையாக செய்யமுடியாவிடின், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தன்னுடைய அமைச்சுப் பதவியை துறக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்றத்தில் சற்று முன்னர் தெரிவித்தார்.
      - See more at: http://www.tamilmirror.lk/187568/-ச-வ-ம-ந-தன-பதவ-த-றக-கவ-ண-ட-ம-#sthash.MAgADxh4.dpuf
    • By நவீனன்
      நாவற்குழியில் குடியேறிய சிங்கள குடும்பங்களுக்கு இவ்வாண்டு வீடமைப்புதிட்டம்     நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமை ப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக  தேசிய வீடமைப்பு அபி விருத்தி அதிகார சபையின் யாழ் மாவட்ட முகாமையாளர்  எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவி க்கையில்    2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது.இதன்படி ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா   3,50000 ரூபா வீதம்  வீட்டுத் திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 86.55 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது...மேலும் 3000 குடும்பங்களுக்கு   குடும்பம் ஒன்றிற்கு 10 சீமெந்து பைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளது..இதற்காக 24.7 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது.   அத்துடன்   2017ம் ஆண்டிற்கான மிகப்பெரிய திட்டமாக நாவற்குழி பிரதேசத்தில் 250 வீடுகளைக் கொண்ட மாதிரிக் கிராமம் ஒன்று அமைக்கப்படவுள்ளது..நாவற்குழி பிரதேசத்தில் குடியேறியுள்ள 200 தமிழ் குடும்பங்கள்,50 சிங்களக் குடும்பங்களுக்கான வீடுகளை,வீடொன்றிற்கு 5 இலட்சம் ரூபா செலவில் குறித்த மாதிரிக் கிராமத்தில்   அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். http://www.onlineuthayan.com/news/22300
    • By Athavan CH

      வடக்கு கிழக்கு மாகாணத்தில் வசிக்கின்ற மக்களுக்கு கல் வீடே வேண்டும், பொருத்து இரும்புக் கூடு வேண்டாம் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா  பொருத்து வீட்டு விண் ணப்பங்களை முழுமையாக நிரா கரிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், 
      பொருத்து  இரும்பு வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும் பொருத்தமற்ற வீட்டுத் திட்டம் என எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், 
      மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும், மாகாணசபைகளிலும் இதை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
      பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாத காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சு விவாதத்தின் போது இவ் வீட்டுத்திட்டத்திற்கான ஒப்பந்த விதி முறைகள்  மீறப்பட்டுள்ளமை, ஊழலுக்கு இட மளிக்கப்பட்டுள்ளமை மோசடிக்குள்ளானவர்களுடன் உள்ள ஒப்பந்தம் உடன்பாடுகளை பாராளுமன்றத்தில் வெளியிட்டு மீள்குடியேற்ற அமைச்சின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 
      பாராளுமன்றத்தில் எனது தலைமையில் உள்ள மீள் குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவில்  இத் திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
      அத்துடன் கடந்த வருடம் டிசம்பர் 7 ஆம் திகதி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டு இப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாகவும் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி பணிகளுக்கும் கூடுதலான நிதி ஒதுக்குவதாகவும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். 
      யாழ்ப்பாண மாவட்டத்தில் எட்டு இலட்சம் ரூபா வீட்டுத்திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால் அமைச்சர் கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி மக்களை ஏமாற்றகின்றார். 
      பிரதமர் பாராளுமன்றில் மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் வீட்டுப் பிரச்சினைகளைத் தலையிட்டுத் தீர்வுகாணும் வாக்குறுதியை வழங்கியுள்ள நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் பொருத்துவீட்டுக்கு விளம்பரம் செய்வது தவறானதாகும். 
      ஏன் இவ்வளவு அவசரம். அமைச்சர் சுவாமிநாதனின் விசுவாசிகளும்,  முகவர்களும், அரச அதிபர்களையும் பிரதேச செயலாளர்களையும், ஊழியர்களையும் மிரட்டி அச்சுறுத்தி பொருத்து வீடுகளை ஏற்கவேண்டு மெனப் பேசுகின்ற செய்திகளும் கசிந்து இருக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சு, வீடு தேவைப்பட்டவர்களுக்கு கல்-சீமெந்து வீடுகளை பத்து இலட்சம் ரூபாயில் கட்டிக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முறையாக செயற்படுத்துவதே இன்றைய தேவை. 
      தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்திப் பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகின்றோம். அமைச்சர் சுவாமிநாதனின் மீள்குடியேற்ற அமைச்சில் ஓராண்டுக்குள் இரண்டு அமைச்சின் செயலாளர்கள் துரத்தப்பட்டுள்ளனர். அமைச்சுக்கு இன்னும் ஒரு செயலாளர் நியமிக்க முடியவில்லை. அரசு செயலாளர் தர முள்ளவர்கள் இந்த அமைச்சுக்கு வரமறுக்கின்றனர். 
      இந்நிலையில் இப் பொருத்து வீட்டுத் திட்டத்தை இருபத்தொரு இலட்சத்திலிருந்து பதினாறு இலட்சமாக குறைத்து அமைச்சர் சுவாமி நாதன் விளம்பரம் பிரசுரித்து ஒப்பேற்ற எடுக்கும் நடவடிக்கையில் மறைந்திருக்கும் மர்மந்தான் என்ன? இத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்புகிறோம். 
      அரசையும் தமிழ் மக்களையும் அமைச்சர் சுவாமிநாதன் தவறாக வழிநடத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். போரினால் அழிந்து போயுள்ள வடக்கு கிழக்குப் பிரதேசங்களுக்கு கல் சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து முப்பதினாயிரத்திற்கும் அதிகமான வீடு தேவை. 
      எனவே பொருத்து வீட்டு விண்ணப்பங்களை வீட்டுத் தேவையுள்ள மக்கள் நிராகரித்து கல்வீடுதான் வேண்டுமென அமைச்சுக்கு, அதிகாரிகளுக்கு எழுதிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். மக்களின் வீட்டுத் தேவையை நிறைவு செய்ய அமைச்சரின் தவறான வழிநடத்தலுக்குப் பலியாகிப் பின் மன வருத்தப்பட வேண்டாமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என மாவை எம்.பி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
       
      http://www.valampurii.lk/valampurii/content.php?id=12916&ctype=news
    • By Athavan CH

      வடக்கு மாகாண மக்களுக்கு பொருந்தாத பொருத்து வீட்டினை மக்கள் மீது திணிக்கும் நாசகார வேலையை இந்த அரசாங்கம் முன்னெடுக்குமென தாம் எதிர்பார்க்கவில்லையென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
      இருபற்றி அவர் தெரிவிக்கையில், வடக்கு மாகாண மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏற்காத ஒரு வீட்டினை மக்களுக்குத் திணிப்பது தொடர்பாக கூறவேண்டிய கட்டாய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு. எமது மக்களுக்கு வீடு வேண்டும் என்பதை நாம் தொடர்ந்தும் கூறி வருகின்றோம். அது கல்வீடாக இருக்கவேண்டுமே தவிர தொங்கும் வீடாக இருக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
      பொருத்து வீடு தொடர்பாக தனிப்பட்ட விருப்பில் இருந்து அகன்று அதாவது தனிநபர் விருப்பு மற்றும் தனிநபர் அரசியல் என்பவற்றிலிருந்து விலகி அவர்களின் விருப்பத்தை நிறைவுசெய்ய முன்வரவேண்டும்.
      மீள் குடியேற்ற அமைச்சரை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். ஓர் ஆழ்ந்த ஆராய்ச்சியின் பின்னரே தாம் இந்தத் திட்டம் மக்களுக்குப் பொருந்தாது என முடிவெடுத்தோம் என்பதை அவர் உணரவேண்டும்.
      அதற்குமப்பால் இந்த வீட்டுத்திட்டத்திற்காக கூறும் விலையும் ஏற்றுக்கொள்ளமுடியாதது என்பதுடன், இவ்வீட்டுத் திட்டத்தினால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
      இவ்வாறான நிலையில் ஏன் இந்த வீட்டுத்திட்டத்தினை முன்னெடுக்க முயற்சிக்கின்றார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இத்திட்டத்தினை நாம் மட்டும் எதிர்க்கவில்லை. அரசாங்கத்தில் பல அமைச்சர்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மைத்திரிபால சிறிசேனவும் மக்கள் விரும்பாத திட்டத்தினை மக்களுக்கு திணிக்கவேண்டாம் எனக் கூறியதும் எனக்கு ஞாபகமிருக்கிறது.
      அரசாங்கம் இப்படியானதொரு நாசகார வேலைத்திட்டத்தை எம்மக்கள் மீது திணிக்குமென நான் நினைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் கூறுவோம் எமது மக்களுக்கு வீட்டுத்திட்டம் தேவை, அதற்கு பொருத்து வீடு உசிதமானதல்ல எனவும் தெரிவித்தார்.
       
      http://thuliyam.com/?p=52982
    • By போல்
      மக்களின் விருப்பத்துக்கு ஏற்ற வீடுகளை - கல் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் முன்வரவேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, வடக்கு மாகாண மக்கள் ஏற்க மறுத்த பொருத்து வீட்டை முன்நிர்மாணிக்கப்பட்ட வீட்டைத் திணிப்பதற்கு முயலும் காரணத்தைச் சொல்ல வேண்டிய கடப்பாடு அமைச்சருக்கு உண்டு.
      எங்கள் மக்களுக்கு வீடு வேண்டும். அதனை நாம் திரும்பத் திரும்பக் கூறுகின்றோம். கல் வீடாகவே இருக்கவேண்டும். தொங்கிக் கொண்டிருக்கும் வீட்டினை நாம் ஏற்கமாட்டோம்.
      மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை எனக்கு 50 வருடங்களாகத் தெரியும். நாம் நீண்ட ஆய்வுகள் ஆராய்வுகளின் பின்னர்தான் முன்நிர்மாணிக்கப்பட்ட பொருத்து வீடு வேண்டாம் என்று சொன்னோம். இதனை அவர் உணர்ந்து கொள்ளவேண்டும். இந்த வீட்டுத் திட்டத்தைத் திணிப்பதால் எதிர்காலத்தில் சமூகப் பிரச்சினைகள் ஏற்படும்.
      எல்லோருக்கும் எதிர்க்கும், பிரச்சினைக்குரிய திட்டத்தை முன்னெடுக்க ஏன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது எனக்குப் புரியவில்லை.
      மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்தையும் திணிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் குறிப்பிட்டிருந்தார்.
      எமது பிரதேச காலநிலை நிலைக்குப் பொருந்தாது இருக்கும் இந்தத் திட்டமானது மலையக கால நிலைக்குப் பொருந்தக் கூடும். அவ்வாறு பொருந்தினால் அது தொடர்பில் மலையகத் தலைவர்களுடன் பேச வேண்டும்.
      அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ளலாம். ஒரு நாசகாரத் திட்டத்தை எம் மீது அரசு திணிக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
      எமது மக்களின் வீட்டுத் தேவையைப் பொருத்து வீடு நிறைவு செய்யாது. உசிதமான மாற்றுத் திட்டத்தினைக் கண்டுபிடிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
      http://www.tamilwin.com/politics/01/129755?ref=morenews
    • By நவீனன்
      பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம்     மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.   இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர்.   இந்த ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில், நாளை திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயல கம் முன்பாக  காலை 8.30 மணியளவில்  நடைபெறவுள்ளது.   இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு  கிளிநொச்சி மாவட்ட கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.   யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு  வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஆரம்பத்தில் இருந்தே பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து வருகின்றது.   கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.   பொருத்து வீடுகள் தமது சூழலுக்கு பொருந்தாது என தெரிவித்துள்ள கிளிநொச்சி  மாவட்ட மக்கள், தமது வாழ்க்கை முறை, தமது பிரதேசத்தின் காலநிலை, பாரம்பரிய கட்டடமுறை என்பவற்றை கருத்திற்கொண்டு வீடுகளை அமைத்துத்தருமாறும் வலியுறுத்தி யுள்ளனர் http://www.onlineuthayan.com/news/21535
    • By நவீனன்
      பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழ்ப்பாணத்தில் 189பேர் விண்ணப்பம்   -எம்.றொசாந்த்
      பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து இதுவரை 189பேர் விண்ணப்பித்துள்ளதாக, யாழ். மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
      வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை நிர்மாணிக்கும் அரசாங்கத்தின்; திட்டத்துக்கு, பரவலாக எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
      எங்களுடைய சூழல், சுற்றுவட்டாரம், கலாசாரம் ஆகியவற்றுக்கு, இவ்வீடு பொருந்தாது எனவும் ஒரு வீடு அமைக்க செலவு செய்யும் 2.1 மில்லியன் ரூபாயில்  2 அல்லது 3 கல் வீடுகளை அமைக்க முடியும். பொருத்து வீட்டுக்கான காலம் 30 வருடங்களே எனத் தெரிவிக்கப்பட்டு, பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு பரவலான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
      வடமாகாண முதலமைச்சர், வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இத்திட்டத்தை நிராகரித்ததுடன் வடமாகாண சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதியின் கவனத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மக்கள் பொருத்து வீடு வேண்டாம் என போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.
      இந்நிலையில், அரசாங்கம் தொடர்ச்சியாக பொருத்து வீட்டுத்திட்டத்தை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு விண்ணப்பங்களையும் கோரியுள்ளது. இந்நிலையில், பொருத்து வீட்டுத்திட்டத்துக்கு யாழிலிருந்து இதுவரை 189 பேர் விண்ணப்பித்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
      - See more at: http://www.tamilmirror.lk/189304/ப-ர-த-த-வ-ட-ட-த-த-ட-டத-த-க-க-ய-ழ-ப-ப-ணத-த-ல-ப-ர-வ-ண-ணப-பம-#sthash.HXsDjcjl.dpuf
    • By நவீனன்
      என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீடு நடைமுறைப்படுத்தப்படும் – டிஎம் சுவாமிநாதன்

      என்ன முட்டுக்கட்டை வந்தாலும்  பொருத்து  வீடு  நடைமுறைப்படுத்தப்படும்   என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு,  சிறைசாலைகள் மறுசீரமைப்பு,  இந்து சமய  விவகார அமைச்சா் டிஎம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்
      இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில்  கடந்த  செம்ரெம்பா் மாதம்  கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு    நட்ட ஈட்டினை வழங்கி விட்டு   உரையாற்றும் போதே அவா் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.
      மேலும் வீட்டுத்திட்டத்தின் பொழுது இப்பொழுது பல பிரச்சனைகள் காணப்படுகின்றன.  மண்  இல்லை ,வேலைகளைச்  செய்வதற்கான மேசன்மார்கள் இல்லை  போன்ற  பல  பிரச்சனைகள் காணப்படுகின்றன.
      இதனால் நான் பிரதமருடன்  பேசி முன் அமைக்கப்பட்ட ஒரு தொகை   வீடுகளை நிர்மாணிப்பதற்கான முன்வந்திருக்கின்றேன். அந்த வீட்டுத்திட்டத்தின்  மூலம் ஒரு வீட்டை  நான் சுன்னாகத்திலே  கட்டி இருக்கின்றேன்.  இந்த வீட்டை  எத்தனையோ பேர்  சென்று பார்வையிட்டு இருக்கின்றனர்.
      ஆனாலும்  இவற்றுக்கு  எதிர்ப்பை  காண்பதற்கு பலர் இருக்கின்றனர்  அதனைப்பற்றி  இச்சந்தர்ப்பத்தில் பேச விரும்பவில்லை எனினும்  இத்திட்டம்  முற்றுமுழுதாக மக்கள் நலம்  சார்ந்ததே ஆகவே  இத்திட்டம் விரைவில் அமுல்ப்படுத்தப்படும் எனவும்  தெரிவித்தார்
      இதனைத் தொடர்ந்து  நிகழ்வின்  முடிவில் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்காத மக்களுக்கு மாற்றுத்திட்டம் ஏதும் இருக்கிறதா  என ஊடகவியலாளர்களினால்  தொடுக்கப்பட்ட  கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல்  சென்றமை குறிப்பிடத்தக்கது
      http://globaltamilnews.net/archives/11987
    • By Athavan CH
      காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படவிருந்து நிராகரிக்கப்பட்ட பொருத்து வீட்டு திட்டத்தினை, மலையகத்திற்கு பொருத்தமானதா என ஆராய்ந்து பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

      இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
       
      முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு பின் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டு பொருத்தப்படும் பொருத்து தனி வீடமைப்பு திட்டம் காலநிலை சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. 
      இந்நிலையில், இந்த திட்டம் குளிர் கால சீதோஷண நிலைமைகள் கொண்ட இலங்கை மலைநாட்டுக்கு பொருத்தமானதா என ஆராய்வது முறையானது என நான் நம்புகிறேன். 
      எனவே இதுபற்றி பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. 
      மேலும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவிலும் இவ்விவகாரம் விரைவில் பரிசீலிக்கப்படவுள்ளது.      
      உலகின் குளிர் மற்றும் மத்திய சீதோஷண வலய நாடுகளில் வெற்றிகரமாக நடைமுறையாக்கப்படும் இந்திட்டம், மலையக சீதோஷண நிலைமைகளுக்கு பொருந்துமா என்பது விஞ்ஞானப்பூர்வமாக பரிசீலிக்கப்பட்டு, நடைமுறையாக்கப்படுமானால், அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் என்ற எங்கள் திட்டம், மலையகத்தில் வெற்றி பெற பெரும் வாய்ப்பு உள்ளது. 
      ஏற்கனவே எமது பிரதி தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில்  லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். 
      இந்த மலைநாட்டு வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம்.
       
      அடுத்த ஐந்து வருடத்தில் ஐம்பதாயிரம் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுவது தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுரிமை இலக்குகளில் ஒன்றாகும். 
      இதன் மூலமாகவே தோட்டத்துறை வாழ் தமிழ் மக்களின் லயன் வாழ்க்கை  முறைமையை முழுமையாக ஒழித்து, வீடில்லா பிரச்சினையை தனி வீடுகள் மூலம் தீர்க்க முடியும். 
      இந்நிலையில் தனி வீடுகளை அமைப்பதில் நாம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினை வீடுகள் கட்டப்படுவதற்கான மூலப்பொருட்களை மலைநாட்டில் திரட்டுவதாகும். 
      இதனால் பாரிய தாமதம் ஏற்படுகிறது. ஆகவே மாற்று மூலப்பொருட்களை பயன்படுத்தி, உதிரி பாகங்களை தொழிற்சாலைகளில் செய்து, அவற்றை கொண்டு வந்து, பொருத்து வீடுகளை சடுதியாக கட்டும் திட்டத்தை நாம் ஆராய வேண்டும். உலகின் பல குளிர் வலய பகுதிகளில், சடுதியாக வீடுகள் கட்டப்பட வெற்றிகரமாக வழி ஏற்படுத்தியுள்ள இந்த பொருத்து வீட்டு திட்டம், மலைநாட்டில்  நடைமுறையாக்கப்பட வாய்ப்புள்ளதா என்பதை நாம் ஆலோசித்து பார்க்க வேண்டும்.
      வடக்கில் 65,000 தனி பொருத்து வீடுகளை கட்ட முடிவு எடுக்கப்பட்டு இருந்தாலும் கூட, அது இன்று அப்பிரதேச மக்கள் வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் வெளியிட்ட எதிர்ப்புகள் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
      பொருத்து வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், வடக்கின் சீதோஷண நிலைமைகளுக்கு பொருந்தி வராது என்ற காரணம் இன்று ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. எனவே இதை குளிர் சீதோஷண நிலைமைகளை கொண்ட மலைநாட்டில் நிர்மாணிக்க முடியுமா என நாம் பார்க்க வேண்டியுள்ளது.   
      மலைநாட்டின் நூறு வருடங்களுக்கு மேல் இழுபட்டு வரும் வீடில்லா பிரச்சினைகளை தீர்த்து தனி வீடுகள் கட்டும் திட்டத்தை, இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள எமது நல்லாட்சியின் முதல் ஐந்து வருட ஆட்சி காலத்துக்குள் முடித்துவிட எமது கூட்டணி விரும்புகிறது. 
      இன்றைய எமது அரசாங்கத்திற்கு உள்ளே நாம் நிதானமாக காய் நகர்த்தி செயற்பட்டு வரும் இந்த காலத்துக்குள், இந்த பிரச்சினையை தீர்க்க முடியாவிட்டால், இதை என்றுமே இதை தீர்த்து முடியாது. ஏற்கனவே எமது பிரதித் தலைவர் அமைச்சர் பழனி திகாம்பரம், தான் பொறுபேற்றுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சு மூலமாக, மலைநாட்டில்  லயன்களை ஒழித்து தனி வீடுகளை கட்டி வருகிறார். 
      இந்த வீடமைப்பு திட்டத்துக்கு இலங்கை, இந்திய அரசுகள் ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. இந்நிலையில் இந்த மலைநாட்டு வீடமைப்பு திட்டத்தை துரிதப்படுத்த நாம் விரும்புகிறோம். இந்த பின்னணியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதுபற்றிய சிபாரிசை நாம் முன்வைத்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழுவும் இது தொடர்பில் ஆராய்ந்து விரைவில் உரிய முடிவை எடுக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
      http://www.virakesari.lk/article/10168