யாழிணையம்

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?   51 members have voted

 1. 1. வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம்

  • பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
   30
  • இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்
   16
  • கருத்து எதுவுமில்லை
   5

Please sign in or register to vote in this poll.

168 posts in this topic

இலங்கையில்  தமிழர்கள் வாழும் பகுதியில் அரசாங்கம் அமைக்க திட்டமிட்டு இருக்கும் பொருத்து வீடுகள் தொடர்பாக பல விமர்சனங்கள் மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் எழுப்பப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உங்கள் கருத்துகளை தெரிவிப்பதுடன், கருத்துக்கணிப்பில் உங்கள் தெரிவினையும் (வாக்கினையும்) செலுத்தவும்.

உங்களது தெரிவை / எதற்கு வாக்களித்தீர்கள் என்பதை ஏனையவர்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு இக் கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

நன்றி
யாழிணையம்

6 people like this

Share this post

Link to post
Share on other sites

முப்பது வருடங்கள் மாத்திரமே இருக்கக்கூடிய பொருத்துவீடுகளை விட உள்ளூர் மூலப்பொருட்களைக் கொண்டு நல்ல சுவாத்தியமான வீடுகளை குறைந்த செலவில் அமைக்கலாம். அப்படி இருந்தும் உருக்கிலான பொருத்து வீடுகளை அமைப்பதால் லாபமீட்டுபவர்கள் இந்தத் திட்டத்தில் முன்னின்று செயற்படும் அரசியல்வாதிகளும் வியாபாரிகளும்தான். வீடுகள் முப்பது வருடம் நிலைக்குமா என்பதும் சந்தேகமே.

பொருத்துவீடுகள் பற்றி மாற்றம் இணையத்தில் வந்த கட்டுரை ஒன்றை பல மாதங்களுக்கு முன்னரே இணைத்திருந்தேன்.

http://maatram.org/?p=4315

4 people like this

Share this post

Link to post
Share on other sites

இது பற்றிய தெளிவான ஒரு அறிக்கை தேவை.முழுமையாக தெரியாத ஒரு விடயம்  பற்றி  எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை.

விளக்கம் தந்தால் வாக்களிக்கலாம்.

நன்றி.

Share this post

Link to post
Share on other sites

எனது கருத்து:

பொருத்து வீடுகள்,

 • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
 • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
 • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
 • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
 • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
 • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
 • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
 • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
 • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
 • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

இந்த பொருத்து வீடுகள் எமது சக உறவுகளான தமிழ் மக்களுக்கு குறுகிய கால சிறு நன்மைகளைவிட நீண்டகால பெரும் தீமைகளையே விளைவிக்கும்.

10 people like this

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, விசுகு said:

இது பற்றிய தெளிவான ஒரு அறிக்கை தேவை.முழுமையாக தெரியாத ஒரு விடயம்  பற்றி  எவ்வாறு பதிலளிப்பது என்று தெரியவில்லை.

விளக்கம் தந்தால் வாக்களிக்கலாம்.

நன்றி.

தெளிவான அறிக்கையை எவரிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் விசுகு? இது தொடர்பாக நிறைய விடயங்கள் யாழிலும் தமிழ் செய்தி இணையங்களிலும் உள்ளனவே?

Share this post

Link to post
Share on other sites

பொருத்து வீட்டை விட குடிசை வீட்டைக் கட்டிக் கொடுக்கலாம்<_<

Quote

பி;கு:நிர்வாகம் இந்த தலைப்பை எடுத்ததன் நோக்கம் என்னவோ?...யாழில் பெரும்பான்மையினர் இந்த வீட்டுத் திட்டத்திற்கு ஆதரவாய் வோட் போட்டால் உடனே கூட்டமைப்பை சரிக்கட்டி சம்மதம் சொல்ல வைக்கப் போயினமோ:rolleyes:

Share this post

Link to post
Share on other sites

மேலே கிருபன், போல் ஆகியோர் எனது மனதில் உள்ள விடயங்களை ஏற்கனவே எழுதியுள்ளார்கள் .

இந்த வீட்டில் சில வருடங்களில் பின்னர் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உதாரணமாக மரங்கள் சரிந்து விழுந்து வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்தால் எவ்வாறு       ( பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும்) திருத்துவது? உதிரிப்பாகங்களை என்ன விலையில் வாங்குவது?

என்ற காரணங்களால் பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

Posted (edited)

அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் தமக்கு பொருத்துவீடு வேண்டுமா இல்லையா என்று. அவர்களுக்கு கிடைப்பது ஒரு பிடி மண் என்றாலும் ஒரு செங்கல் மாத்திரமே என்றாலும் அதை தட்டிப்பறிப்பதற்கான உரிமையை வேறு ஒருவரும் எடுத்துக்கொள்ளக்கூடாது.

பொருத்து வீடு கேட்பவர்களுக்கு பொருத்து வீடுகளை கொடுக்கலாம். கல்வீடுதான் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அதற்கான காலம் கனியும்போது கல்வீடு கொடுக்கலாம். பொருத்துவீடு தேவையில்லை என்று கூறுபவர்களுக்கு பொருத்துவீடுகளை கொடுக்கத்தேவையில்லை.

எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது.  நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது.

இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள்.

பொருத்துவீடு தீப்பிடிக்கும் என்று சிலர் கூறுகின்றீர்கள். ஆனால், ஓலைவீட்டுடன் ஒப்பிடும்போது எது விரைவில் தீப்பிடிக்கும்? குளிர், வெப்பம் பற்றிய முறைப்பாடு உண்டு. வெப்பத்திற்கு சுற்றிவர மரங்களை நடலாம். குளிருக்கு போர்வை பயன்படுத்தலாம், உடையை அதற்கு ஏற்றபடி போடலாம். வெளிநாடுகளில் நாங்கள் காணாத குளிரா? எப்படியான கொடுங்குளிருக்குள் எல்லாம் நாங்கள் மாட்டுப்பட்டு இருக்கின்றோம். -20, - 30 டிகிரி செல்சியஸ் உள்ள இடங்களில் வேலை செய்து இருக்கின்றோம். குளிருக்குள் வெளிச்சூழலில் எத்தனை அலுவல்கள் பார்க்கின்றோம். குறைபிடிப்பது என்றால்கல்வீட்டிலும் ஆயிரம் குறைகள் பிடிக்கலாம்.

பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

Edited by கலைஞன்
7 people like this

Share this post

Link to post
Share on other sites

எனக்கென்னவோ இது சரியாக்கப்படவில்லை.
பொருத்து வீடுகள் எங்கள் நாட்டின் கால நிலைக்குத் தகுந்தவை அல்ல.
இதில் வியாபார நோக்கமே முதல் நிலையில் உள்ளது.
இப்படியான வீடுகளால் மக்களுக்கு இன்னும் பல சிரமங்கள் எதிர்காலத்தில் ஏற்படும்
வரும் முன்னே யோசிப்பது மிகவும் நன்று
வந்த பின்னர் யோசிப்பதால்... வரும் இடங்களுக்கு யார் பதில் அளிப்பார்கள்

1 person likes this

Share this post

Link to post
Share on other sites
 
3 hours ago, கலைஞன் said:

எங்களில் உள்ள குறைபாடு ஒன்று என்ன என்றால் இடைக்கால தற்காலிக தீர்வுகளை நாம் விரும்புவது இல்லை. தனித்தமிழீழத்தை மாத்திரமே ஏற்றுக்கொள்வோம் எனும் மனநிலையில் இருந்த எமக்கு கடைசியில் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு தீர்வுத்திட்டத்தையே எட்டமுடியாமல்போனது.  நாங்கள் தரையில் இருந்து பத்தாம் மாடிக்கு தாவிக்குதிப்பதையே விரும்புகின்றோம். ஒவ்வொரு படிகளாக ஏறி மேலே செல்வது எமக்கு கசப்பாக இருக்கின்றது.

பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

வெல்டன் தம்பி

Edited by வைரவன்

Share this post

Link to post
Share on other sites

உண்மையில் இது அங்குள்ள மக்களிடம் தனித்தனியாக கேட்டு செய்யவேண்டிய விசயம் இது. ஏன் என்றால் வாழப்போவது அவர்கள்தான். 

நான் சற்றுமுன் வீட்டிற்காக காத்திருக்கும் அங்குள்ள ஒருவரிடம் தொடர்புகொண்டு இதுபற்றி கேட்டேன். அவர் தனக்கு பொருத்துவீட்டை பற்றி அதிகம் தெரியாது என்று கூறினார். ஆனால், பொருத்துவீடு நீண்டகாலம் தாக்குப்பிடிக்கமாட்டாது என்று ஆட்கள் கதைப்பதாய் கூறினார். இதனால், அரசாங்கம் தனக்கு பொருத்துவீட்டை தந்தால் தான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். தான் கல்வீடு தனக்கு தரப்பட்டாலே அதை ஏற்றுக்கொள்வேன் என்று கூறினார். தான் கல்வீட்டிற்காக காத்திருப்பதாய் கூறினார். 

அங்கேயுள்ள மக்களின் தேவைகளை அறிந்து திட்டத்தை செயற்படுத்தவேண்டும். 

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, கலைஞன் said:

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

நல்லது கெட்டதை சொல்லி அறிவுறுத்த வேண்டியது நலன் விரும்பிகளின் கடமை.

பொருளாதார விஞ்ஞான வளர்ச்சி அடைந்த நாடுகளில் வாழ்பவர்களுக்கே பொருத்து வீடுகளின் நல்லது கெட்டது தெரியாமல் இருக்கும் போது அங்கிருப்பவர்களுக்கு எப்படி எல்லாம் தெரியப்போகின்றது.

பசியின் அவதியை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைவதை கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்கிறீர்களா?.

3 people like this

Share this post

Link to post
Share on other sites
35 minutes ago, கலைஞன் said:

அங்கேயுள்ள மக்களின் தேவைகளை அறிந்து திட்டத்தை செயற்படுத்தவேண்டும். 

பெரும்பாலான மக்களுக்கு இலங்கைக்கு முற்றிலும் புதிய பொருத்து வீடுகளின் தன்மை பற்றிய அறிவு இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே! துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் அவசியமாகிறது.

புதிய பொருத்து வீடு வெளிப் பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமானவை! எனவே விபரமறியாத மக்கள் ஆபத்தை அறியாது அதை விரும்பலாம். எனவே! துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துக்கள் மக்களின் நலனுக்கு  அவசியமாகிறது.

சில மாதங்களின் முன்னர் யாழில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டை 3 தடவை நேரில் சென்று பார்த்தேன். என்னுடன் வந்தவர்கள்,
(1) முதல் தரம்: 1 கட்டடத்துறைப் பொறியிலாளர்
(2) இரண்டாம் தரம்: அனுபவ நிபுணத்துவம் வாய்ந்த (இயக்க நிர்மாணத்துறை சேர்ந்த) இருவர் (தாய் மண்ணில் வாழ்பவர்கள்)
(3) மூன்றாவது தரம் 1 கட்டிட பொறியியல் துறைப் பேராசிரியர் 1 கட்டிட நிர்மாணக் கலைஞர்

இவர்களின் கருத்துக்களின் அடிப்படையிலேயே மேலே எனது கருத்து மிகவும் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

குறிப்பாக மூன்றாவது தரம் நாம் சென்ற போது சிங்கள இராணுவ பொறியியல் துறையைச் சேர்ந்த 6 பேர் அதைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள் என்னுடன் வந்திருந்த பேராசிரியருடனும் கட்டிட நிர்மாணக் கலைஞருடனும் அளவளாவிய சந்தர்ப்பத்தில், தமக்கும் இதில் திருப்பதி இல்லை என தெரிவித்தனர். எனவே தங்களால் முன்னெடுக்கும் காங்கேசன்துறை வீட்டு திட்டத்துக்கு இந்த பொருத்து வீடுகளை அனுமதிக்கப்போவதில்லை என்று தெரிவித்தனர்.    இவை நேரடியாக என்னால் அவதானிக்கப்பட்டவை.

Edited by போல்
1 person likes this

Share this post

Link to post
Share on other sites

நிச்சயம் பொருத்துவீடுகளின் தன்மை, அவற்றின் நன்மைகள், தீமைகள் பற்றி அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளவேண்டும். ஆனால், நாங்கள் அவர்கள்மீது எங்கள் கருத்துக்களை வலிந்து திணிக்கக்கூடாது. தகவல்கள் அவர்களிற்கு செல்லட்டும், முடிவை அவர்கள் எடுக்கட்டும். ஆனால், பொருத்துவீடு என்றாலும் பரவாயில்லை என்று விரும்பும் ஒருவருக்கு பொருத்துவீடு கிடைக்காதவகையில் மற்றவர்கள் திட்டங்களை காலதாமதப்படுத்துவது, இழுத்தடிப்பது, தங்கள் விறுப்பு, வெறுப்புக்களை அவர்கள் மீது திணிப்பது தவறானது.

பொருத்துவீடுகளை எதிர்ப்பதற்கு இதன்பின்னால் வியாபார நோக்கம், அரசியல் இலாபம் உள்ளன எனும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இப்போது உலகில் பெரும்பாலும் அனைத்துமே வியாபார நோக்கம், அரசியல் இலாபங்களின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றது. புனித ஆட்சி நிருவாகம் உலகில் எங்கும் இல்லை. 

போல் நீங்கள் அங்கே சென்றபோது படங்கள், காணொலிகள் எடுத்திருந்தால் பகிர்ந்துகொள்ளலாமே.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

பொருத்து  வீட்டு  திட்டத்தினால், ஆதாயம் அடையும்  மக்களை விட... 
அரசியல் வாதிகளும், சில நிறுவனங்களுமே... அதிக  ஆதாயம்  அடையும்.  
அதுகும்.... இந்தியா,  செய்வதென்றால்... நிச்சயம்  அதில் தரம் இருக்காது.
ஏற்கெனவே.. இந்தியா  கொடுத்த வீட்டுக்  கூரையின் தரமற்ற  தகரங்களை பற்றிய, விமர்சனம் அதனைப் பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து வந்தது.

இந்தியாவுக்கு, உண்மையிலேயே..... எமக்கு உதவ விருப்பம் என்றால், 
பொருத்து  வீட்டு  திட்டத்திற்குரிய பணத்தை, வீ டு இல்லாதவர்களுக்கு கொடுத்து, 
அவர்களே... தமது உழைப்பையும், விருப்பமான படி... உள்ளூர் பொருட்களையும்  கொண்டு, 
குறிப்பிட் ட  காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று, காலக்கெடு விதித்து....
அதனை... கண்காணிக்க வேண்டும்.  

Edited by தமிழ் சிறி
2 people like this

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, கலைஞன் said:

.

? பொருத்துவீடு இருபது வருடம் தாக்குப்பிடிக்கும் என்றால் அது ஒரு பெரிய விடயம். நிம்மதியாக வாழ்வதற்கு ஒரு இடம் கிடைக்கும் என்றால் இருபது வருடங்களில் வருடத்தில் ஒரு குடும்பத்தினால் எத்தனையோ விடயங்களை சாதிக்கமுடியும்.  அவர்கள் தம் வாழ்வில் முன்னேறி தாங்களாகவே ஒரு பெரிய கல்வீட்டைக் கட்டிக்கொள்ளக்கூடிய சூழ்நிலையே எதிர்காலத்தில் உருவாகலாம்.

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

கலைஞன் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து அல்லலுறும் மக்களுக்கே இந்த பொருத்து வீடு. கடந்த இருபது ஆண்டுகளில் வீட்டை கட்டாதவர்களால் எப்படி அடுத்த இருபது ஆண்டுகளில் வீட்டைக் கட்டமுடியும் என்று நம்புகிறீர்கள்?

Share this post

Link to post
Share on other sites

இப்படியே பல வருடங்கள் போகட்டும்  பொருத்து வீடு சரிப்பட்டு வராது  போதுமா

குடிசையில்  வாழும் மக்களை கேட்டும் ஒருகருத்து கணீப்பு நடத்துங்கள் பொருத்து வீடு கேட் கிறவர்களுக்கு   கொடுக்கலாம் கேட் காதவர்களை விட்டு விடுங்கள் சுனாமியில் கட்டி கொடுக்கப்பட்ட பிளர்ஸ் என்ற தொடர் மாடிகளில் தான்  கிழக்கில் கனபேர் இருக்கிறார்கள்  மற்ற வீடு கேட்டவர்கள் இன்னும் கொட்டில் குடிசைகளில் வாழ்கிறார்கள் .

1 person likes this

Share this post

Link to post
Share on other sites

நீண்ட நாளா இந்த பிரச்சினை பத்திரிகை செய்திகளில் அடிபடுது.

கிருபன், போல், MEERA, வாத்தியார், குமாரசாமி, தமிழ் சிறி போன்ற சிரேஷ்ட உறுப்பினர்களின் கருத்தே என் கருத்தும்.

2 people like this

Share this post

Link to post
Share on other sites
48 minutes ago, முனிவர் ஜீ said:

இப்படியே பல வருடங்கள் போகட்டும்  பொருத்து வீடு சரிப்பட்டு வராது  போதுமா

குடிசையில்  வாழும் மக்களை கேட்டும் ஒருகருத்து கணீப்பு நடத்துங்கள் பொருத்து வீடு கேட் கிறவர்களுக்கு   கொடுக்கலாம் கேட் காதவர்களை விட்டு விடுங்கள் சுனாமியில் கட்டி கொடுக்கப்பட்ட பிளர்ஸ் என்ற தொடர் மாடிகளில் தான்  கிழக்கில் கனபேர் இருக்கிறார்கள்  மற்ற வீடு கேட்டவர்கள் இன்னும் கொட்டில் குடிசைகளில் வாழ்கிறார்கள் .

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

3 people like this

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, கலைஞன் said:

அங்கே வாழ்விடம் தேவைப்படும் மக்கள்தான் தீர்மானிக்கவேண்டும் 

இலங்கையில் ஊழல் இல்லாமல் வியாபார நோக்கம் இல்லாமல் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டதை யாராவது கூறமுடியுமா? பொருத்துவீடுகளின் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலன்கள், வியாபாரிகளின் இலாபநோக்கு இருக்கின்றது என்று கூறுகின்றீர்கள். இந்தவிசயங்கள் இல்லாமல் இலங்கையில் ஏதாவது ஒரு திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றால் அவற்றை குறிப்பிடுங்கள்.

பசித்தவன் எதைச்சாப்பிடவேண்டும் என்பதை பசித்தவனே தீர்மானிக்கட்டும்.

சரி கலைஞன், வியாபார  நோக்கமே எல்லாம் அதை ஏற்றுள்ளோள்ளும் அதே வேளை, குறைந்த விலையில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டு இந்த வீட்டுத் திட்டத்தை  முன்னெடுக்காது   , (அதுவும் பொருத்து வீடுகளின் செலவைவிடக் குறைந்த செலவில் நிறைவேற்றும் சாத்தியம் இருக்கும் பொது) , எதற்காக அடுத்த நாட்டுக்கு கொம்பனிகளை இங்கே அழைக்கின்றார்கள் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் நிறுவனங்களை ஊக்குவித்தால் ஆகாதா?
உள்ளூர் தொழிலாளர்கள் இதனால் லாபம் அடையக் கூடாதா?
உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் இத்திட்டத்தினால் உயரக் கூடாதா?

இது தான் சுவாமி நாதனின் அரசியலும் வியாபாரமும் இதையே பலரும் அங்கே சுட்டிக் காட்டுகின்றனர்.
குறைந்த செலவும்  நீண்ட கால பாவிப்பும் கால நிலைக்கு ஏற்றதாகவும் சுகாதார நோக்கும்  இருக்கும்போது இப்படியான இரும்புக்கு குப்பைகளை எங்கள் மக்களின் வாழ்வை அழிக்கப் பயன்படுத்துகின்றார்கள்.

எப்படியான வீடுகள் தமக்குத் தேவையென மக்கள் தீர்மானிக்கலாம். அனால் இந்த இரும்புக்கு  குப்பை வீடுகளை அமைக்கச் சுவாமி நாதன் அவர்களே விடாப்பிடியாக இருக்கின்றார். இதன் உள்நோக்கம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்.

1 person likes this

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, போல் said:

எனது கருத்து:

பொருத்து வீடுகள்,

 • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலுக்கு பொருத்தமற்றது என்பதாலும்
 • வடக்கு கிழக்கு தட்ப வெப்ப சூழலில் வீட்டிலிருந்து வெளிவரும் கதிர்கள் ஆபத்தானவை என்பதாலும்
 • கொண்டுள்ள பொருத்து சுவர்கள் பலமற்றவை என்பதாலும்
 • மொத்தமாக உறுதியற்றவை என்பதாலும்
 • இலகுவில் தீப்பற்றி எரியக் கூடியது என்பதாலும்
 • மிகவும் குறைந்த ஆயுட்காலத்தைக் கொண்டவை என்பதாலும்
 • பராமரிப்பு மிகவும் சிரமமானது என்பதாலும்
 • ஏழை மக்களின் இயலாமையை வைத்து அவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவதாலும்   
 • அமைக்க செலவாகும் தொகையில் இரண்டு மிகவும் வசதியான, உறுதியான, நீண்ட ஆயுதக்காலம் உடைய, சுவாத்தியத்துக்கு உகந்த கல்வீடுகளை அமைக்க முடியும் என்பதாலும்
 • இதற்கான செலவு மதிப்பீடு பெரும் ஊழலுக்கு வழிவகுத்துள்ளது எனப் புலப்படுவதாலும்

இந்த பொருத்து வீடுகள் எமது சக உறவுகளான தமிழ் மக்களுக்கு குறுகிய கால சிறு நன்மைகளைவிட நீண்டகால பெரும் தீமைகளையே விளைவிக்கும்.

இதில் உள்ள கருத்துக்களுடன் உடன்படுகின்றேன் .

2 people like this

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, MEERA said:

ஜீ பத்து இலட்சத்தில் கட்டக்கூடிய கல் வீட்டிற்கு பதிலாக ஏன் 21/25 இலட்சத்தில் பொருத்து வீடு?

இந்த பொருத்து வீடு திட்டம் ஒன்றரை வருடங்களாக இழுபடுகிறது. கல் வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் எத்தனை வீடுகள் கட்டி முடிந்திருக்கும் ?

ஆனால் அரசாங்க தரப்பில் பொருத்து வீடுகள்  மட்டுமே அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து  கொஞ்சம் வ்லுவான தீர்மானங்கள் தமிழர் சார்ப்பில்  ஒன்றும் எடுக்காமல் இருப்பதற்க்கான காரணம் என்ன   பொருத்து வீடு இல்லயென்றால் மற்ற வீடு கிடைக்கலாம் அல்லது அதுகூட கிடைக்காமல் போகலாம்  அல்லது இன்னும் வருடங்கள் கடந்து செல்லலாம்  அதனால் குடிசையில் இருப்பவர்களூக்குதான் இழப்பு  நான் கூட ஆரம்பத்தில் இதை ஆதரிக்க வில்லை    உதவிகள் கூட காலம் கடந்து செல்கிறது அவ்வளவுதான் 

இப்படியே சிலர் வாழ்கிறார்கள் அதற்க்காகதான் இது பழைய போட்டோ

FB_IMG_1441029481074.jpg

1 person likes this

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, முனிவர் ஜீ said:

இந்த வீடுகள் கிடைப்பதற்கு 

முதலாவது நிபந்தனை

சொந்தமாக காணி  உள்ளவராக இருக்கணும் என்பது அல்லவா??

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, முனிவர் ஜீ said:

ஆனால் அரசாங்க தரப்பில் பொருத்து வீடுகள்  மட்டுமே அமைத்து கொடுக்கப்படும் என அறிவித்தல் கொடுக்கப்பட்டுள்ளது இதை எதிர்த்து  கொஞ்சம் வ்லுவான தீர்மானங்கள் தமிழர் சார்ப்பில்  ஒன்றும் எடுக்காமல் இருப்பதற்க்கான காரணம் என்ன  

வீடுகளை இழந்தவர்களுக்கு அரசாங்கம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் என்று தான் முதலாவது தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஆனால் எப்படியான வீடுகளை அமைப்பது என்று இந்த இரும்பு வீட்டுத் திட்டத்தை   கொண்டு வந்தது சுவாமி நாதன்  தான்.

அப்போதிலிருந்தே பல அமைப்புக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலும் ஐயா சுவாமி நாதன் தான்  இந்த மிட்டலின் பழைய இரும்புகளுக்கு விலை பேசியவர்.  மக்களுக்காக வீடுகளோ? அல்லது
துருப்பிடிக்கும் இரும்புகளை   விலை பேசி எம் மக்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்படுகின்றனரா? 

7 people like this

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, வாத்தியார் said:

இந்தப் பொருத்து வீடுகள் லக்ஸ்மி மித்தாலின் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்யப்படுவதாக சில வருடங்களுக்கு முன்னர் கேள்விப் பட்டுள்ளேன். விபரம் தெரிந்தவர்கள் உறுதிப் படுத்துங்கள். 

இவை மித்தால் வீடுகளாக இருந்தால் வீடுகளில் வசிக்கப் போகும் ஏழை மக்களை விட லக்ஸ்மி மித்தால் மற்றும் வீட்டு உடம்படிக்கைகளில் தொடர்புடைய அரசியல் வாதிகள்தான் அதிக பயன் அடைவார்கள். ஏனென்றால் இந்தியா முதல் ஐரோப்பா வரை ஏழை உழைப்பாளிகளின் வையிற்றில் அடித்துக் கொழுத்த உலகின் முதல்தர பணக்காரர்களில் ஒருவர்தான் இந்த லக்ஸ்மி மித்தால்.

இவ் வீடுகளில் பாவிக்கப்படும் மூலப் பொருட்கள் asbestos போன்ற ஐரோப்பிய நாடுகளால் முற்றாகத் தடை செய்யப்பட்ட ஆபத்து நிறைந்த மூலக்கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்ற அத்தாட்சியைப் பெற்றிருக்கின்றதா ? அல்லது வேறு ஆபத்தான பொருட்கள் கலந்திருக்கப்படவில்லை என்ற அத்தாட்சிகள் சர்வதேச விதிமுறைகளுக்கேற்றவாறு வழங்கப்பட்டுள்ளனவா ? 

இது தவிர மலையகத்தில் லயன் வீடுகள் தந்த அனுபவத்தையும் கவனிக்க வேண்டும். 

பசித்தவனைப் பட்டினி போடுவதை விட எதையாவது உண்ணக் கொடுக்கலாம் என்ற கோட்பாட்டில் பொருத்து வீடுகளை ஆதரிக்கலாம். ஏனென்றால் நாம் வெளிநாட்டில் இருந்து வீரம் பேசுவதை விட வேறெதையும் சாதிக்கப் போவதில்லை.

5 people like this

Share this post

Link to post
Share on other sites