Jump to content

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி


Recommended Posts

ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி

 

ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 
  ஐரோப்பா கண்டம் முழுவதும் கடுங்குளிர்

உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள்.

வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர்.

மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.

போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர்.

இத்தாலியில் தென் கிழக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சூழப்பட்டுள்ள கடுமையான பனிப்போர்வையால் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மிக குளிரான குளிர்கால இரவை சந்தித்துள்ள செக் தலைநகர் ப்ராக்கில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

http://www.bbc.com/tamil/global-38546286?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று..... இங்கு, -14 பாகை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

நேற்று..... இங்கு, -14 பாகை.

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

-14 பாகை அளவில்.... குளிர் காலத்துக்கு இரண்டு மூன்று முறை தான் இங்கு வரும். 
அதுகும்... மாசி மாதத்தில் மட்டுமே வருவது, இம்முறை தை  மாதத்தில், வந்து விட்டது.
சென்ற 5 வருடங்களை விட... இந்த முறை குளிரும், பனிப் பொழிவும் இங்கு  அதிகமாக உள்ளது.   
இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா போட்டு தாக்குது குளிர்.அடுத்த வின்ரருக்காவது ஊருக்கு போற பாக்கியம் கிடைக்கும் என்று நம்புறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா முழுவதும் கடுமையான குளிர் நிலவுவது உண்மையே, அதுக்காக அநியாயத்துக்கும் அதைப் பெரிசாக்கக்கூடாது.

கடந்த பத்து வருடத்துக்கு முன்பு நான் வாழும் தேசத்தின் தலைநகரிலிருந்து கிட்டத்தட்ட ஆயிரத்து இருநூறு கிலோமீட்டர்கள் பூமி உருண்டையின் மேல் பாகத்தில் (ஆர்டிக்வட்டகை) ஆறு வருடங்கள் வாழ்ந்திருக்கிறேன் அங்கு குளிர் மைனஸ் 42 பாகை செல்சியஸையும் தொட்டிருக்கு. ஆனால் வீடுகள் எல்லாம் பக்காவாகத் திட்டமிட்டுக்கட்டியவை பெரிசாக்குளிரை உணரமுடியாது. வெளியில்போனால்தான் பிரச்சனை ஆனால் போயாகவேண்டும். இல்லையேல் பிழைப்புக்கு என்ன வழி. இப்போ இரண்டு நாதளுக்குமுன்பு தலைநகரில் மைனஸ் இருபதைத் தொட்டது தொடர்ந்து வேலை. வயசாகிப்போட்டுது கஸ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:


இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

 
 
 

கவனம் மருதர்...

சரியான குளிரான இடத்தில இருக்கிறியள்.

என்ன அவசரம் எண்டாலும் வெளியால நம்பர் ஒன்னு அடிக்க எண்டு காரில் இருந்து இறங்கிடாதீங்கோ.

சர்... எண்டு போகேக்கையே... ஐஸாக போயிடும்.... பிறகு.... உடைச்சுத்தான்.... விடணும்...

உந்த  -14 பாகைல விஷயம் தெரியாம தமிழ் சிறியர் சரியான பிரச்சனைப் பட்டுப் போனார் எண்டால் பாருங்கோவன். :grin: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8.1.2017 at 2:01 PM, Maruthankerny said:

-14 எல்லாம் ஒரு குளிரா ?
எமக்கு -20 எல்லாம் சாதாரணம் 
மாசி மதம் முடியத்தான் உங்கள் செல்ஷியஸில் எமக்கு ஸிரோவிட்கு 
மேலே வரும். 

என்ன இது சாதாரணம் என்பதால் எம்மிடம் அதட்கான முன் ஏற்பாடுகளும் 
கைவசம் இருக்கும். உங்களிடம் குளிருக்கு உகந்த ஜாக்க்கெட் கூட இருக்காது 
என்று நினைக்கிறேன்.

லண்டனில் கழிவு தண்ணீர் வெளியாகத்தானே போகிறது 
முதல் முதலில் பார்த்த போது எனக்கு வியப்பாக இருந்தது.
இங்கு என்றால் ஐஸ் ஆகி நின்றுவிடும். 

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

On 8.1.2017 at 2:26 PM, தமிழ் சிறி said:


இங்கு..... குளிருக்கு, தண்ணீர் அடைப்பதை கேள்விப் படவில்லை.
சிலவேளைகளில் குளிர் அதிகமாக இருக்கும் போது, வீதியில் உள்ள  கழிவு வாய்க்கால் நீர் ஓடும் குழாய்களில் இருந்து,   நீர் ஆவியாக மேலே செல்வதை காணக்  கூடியதாக இருப்பதை பார்த்தால், அந்த வாய்க்கால்கள், உறைநிலைக்கு மேற்படட வெப்பத்தில்... இருக்கலாம் என நினைக்கின்றேன். 

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

கனடாவிலையும் கழிவுதண்ணி இறுகிறேல்லையாம்.....
அமெரிக்கா உலகத்துக்கு பெரிசாய் தெரிஞ்சாலும் ஒருசில ரெக்னிக்கிலை இன்னும் பின்னுக்குத்தான் நிக்குதெண்டு ஜேர்மன்காரர் சொல்லுவினம். :)

சிறித்தம்பி! தண்ணி பைப்புகள் இறுகிற விளையாட்டெல்லாம் இஞ்சை 40,50 வருசத்துக்கு முதல் நடந்திருக்குதாம். இப்ப கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறிட்டாங்கள்......அதை விட கனடா அமெரிக்கா குளிரோடை எங்களை ஒப்பிட்டு பாக்கவும் ஏலாது எண்டு நினைக்கிறன்.

கழிவு தண்ணி இங்கேயும் இறுகுவதில்லை 
காரணம் நிலத்திற்கு கீளால்தான் பைப்புகள் செல்கினறன 

லண்டனில் சமையலறையில் நீங்கள் கழுவினால் 
வெளியில் தண்ணீர் வருவதை காணலாம் 

அப்படி கனடா அமெரிக்காவில் இருந்தால் ஐஸ்தான் இருக்கும். 
அமெரிக்காவிலும் மேலேதான் குளிர் .... கீழ் பகுதி 
புளோரிட்டா பகுதிகள் எப்போதும் சமர் போலத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்லாந்தில், வீடுகளுக்கான வெப்பமூட்டிகளுக்கு நிலத்துக்கடியில் பலமீற்றர் தூரம் துளையுட்டு அத்துளையினூடே தண்ணீரை அனுப்பி அதை சூடான தண்ணீராகத் திரும்பப்பெறுவதானல் குறந்த செலவிலான வெப்பத்தைப் பெறக்கூடியதாக இருக்கின்றது ஆனால் இம்முறை அனைத்து வீடுகளுக்கும் இல்லை, தவிர நிலத்தடிக்கழிவுவாய்கால் ஓரளவு ஆழமான பகுதிகளில் தாள்க்கப்பட்டிருப்பதால் பூமியினது வெப்பம் அங்கு அதிகமானதால் கழிவுநீர் உறைவதில்லை, சில இடங்களில் பராமரிப்புக்கான இறங்குகுழாய்கள் சரிவரப்பராரிக்கப்படாமையாலும், பெரிய மரங்களது வேர்கள் நீரைத்தேடி கழிவுநீர்க்குழாயைநோக்கி வருவதால் ஏற்படும் அடைப்புகளும் ஏற்பட வாய்ப்பிருக்கு. தவிர நாட்டின் மேற்பகுதியில் நிலத்தின் மேல்மட்டத்தில் காணப்படும் கழிவுநீர்க்குழாய்களுக்குள் முன்சாரம்மூலம் ஓரளவு வெப்பத்தை உண்டுபண்ணக்கூடிய மிந்தடைகளை நிர்மானிப்பதன்மூலம் நீர் உறைவதைத் தடுக்கிறார்கள்.

இவைபற்றி ஓரளவு எனக்குத் தெரியக்காரணம் இத்துறையில் நான் சில காலம் வேலை பார்த்திரிக்கிறேன், 

அதுக்காக இந்தியாவில் மனிதக்கழிவு வாய்க்காலுக்குள் இறங்கி ஏறுவதுபோல் கற்பனை செய்யவேண்டாம். 

Link to comment
Share on other sites

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கடும் குளிருக்கு அறுபது பேர் பலி

 

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவினால் இதுவரை அறுபது பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள், வீடற்றோர் மற்றும் வயோதிபர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது.

4_Winter_Dead.jpg

இந்த நிலையையடுத்து வீடற்றோர் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் போலந்தில் மட்டும் இருபது பேர் பனிக்கு இரையாகியுள்ளனர். அங்கு நிலவிவரும் கடுமையான காலநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பனிக்காலத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் முகமாக வோர்ஸோ நகரில் இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனப் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்பியாவில் வறிய நிலையில் வாழும் 88 வயதுத் தந்தையும் அவரது 66 வயது மகனும் கடும் குளிரினால் உயிரிழந்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/15346

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்ற வருடமும் இந்த வருடமும் வழமையாக சினோ  கொட்டும் இடங்களில் கொட்டாமால்   இடம் பெயர்ந்து கொட்டுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் சீரற்ற காலநிலைதான் கடும் பனிக்காற்று பாடசாலை கூட காலை 8.30 மணிக்கு ஆரம்பிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது  திருவெம்பா போகலாம் என்று எழும்பினால்  உடம்பு தவில் அடிக்குது  இந்த குளிருக்கே இப்படியென்றால் உங்கள் நிலை   ஐயோ  எப்படித்தான் வாழ்கிறீர்கள்  tw_cold_sweat:

Link to comment
Share on other sites

உறைபனியில் அகதிகளின் அவலம்

கிரேக்கத்தில் வழக்கத்தைவிட அதிகமான திடீர் குளிர் ஏற்பட்டுள்ளது.

அதனால், ஆயிரக்கணக்கான அகதிகள் இருபது டிகிரி ஷெல்ஷியஸுக்கும் குறைவான கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

அறுபதாயிரம் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் பத்தாயிரம் பேர் குளிர் தாங்க முடியாத கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

பனி மிதக்கும் நதி

ஹங்கேரியின் பூடாபெஸ்டிலுள்ள டான்யூப் நதியில் உறைபனி மிதக்கிறது.

ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் கடுங்குளிரால் ஒட்டுமொத்த டான்யூப் நதியே உறைபனியாகத் தோன்றுகிறது.

ஹங்கேரி உள்ளிட்ட ஐரோப்பாவின் பல நாடுகள் உறைபனியால் போர்த்தப்பட்டு, உறைய வைக்கும் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கின்றன

Link to comment
Share on other sites

லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து

கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

 
 
லண்டனில் கடும் பனிப்பொழிவு - ஹீத்ரோ விமான நிலையத்தில் விமான சேவைகள் ரத்து
 
லண்டன்:

கடந்த சில தினங்களாக லண்டன் நகர் முழுவதும் கடுமையான பனிப் பொழிவு நிலவி வருகிறது. பனிப் பொழிவுடன் பலத்த காற்றும் வீசுகிறது.

இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக லண்டன் நகரின் ஹீத்ரோ விமான நிலையத்தில் 12-க்கும் அதிகமான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சில சேவைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெனீவா, மான்செஸ்டர், பிளாங்பர்ட் ஆகிய நரங்களுக்கு செல்லும் முக்கிய விமானங்களில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்று ஹீத்ரோ விமான நிலையம். ஹீத்ரோ விமான நிலையத்தில் நேற்று திட்டமிடப்பட்ட 1,350 விமானங்களின் சேவைகளில் 80 சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஹீத்ரோ விமான நிலையம் தனது டுவிட்டர் பக்கத்தில், “மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளின் திட்டமிடலில் மாற்றங்கள் செய்யப்படலாம். பயணிகள் தங்களது பயண விவரங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
28986452-F96D-4389-9666-767B8BAC68D5_L_s

சனிக்கிழமை வரை இந்த பனிப் பொழிவு இருக்கும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹீத்ரோ விமான நிலையம் மட்டுமன்றி ஐரோப்பாவின் ஏனைய விமான நிலையங்களும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. 

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/12225931/1061859/Heathrow-Airport-cancels-flights-amid-snow-forecasts.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.