Jump to content

நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்!


Recommended Posts

நினைவு தவறிய கருணாநிதி... நிலை நிறுத்திய ஸ்டாலின்!

 

டோனி பற்றிய பெட்டிச் செய்தியை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் வந்து சேர்ந்தார் கழுகார்.

‘‘உம்மிடமிருந்து இப்படி ஒரு செய்தியை எதிர்பார்க்கவில்லை’’ என்றோம்.

p42d.jpg‘‘அதில் ஒளிந்திருக்கும் அரசியலை ஜூ.வி வாசகர்கள் புரிந்துகொள்வார்கள்’’ என்று சொல்லி அமைதியானவரிடம் முதல் கேள்வியைப் போட்டோம்.

‘‘செயல் தலைவர் ஆகிவிட்டாரே ஸ்டாலின்?”

‘‘அது என்ன செயல் தலைவர்? தலைவர் ஆகிவிட்டார் என்றே சொல்லும். ‘தலைவர் பதவி விலகினாலோ, நீண்ட நாட்களுக்குக் கழகப் பணியாற்ற முடியாதநிலை ஏற்பட்டாலோ கழகப் பொதுக்குழு, செயல் தலைவர் ஒருவரை நியமிக்கலாம். சட்ட திட்டங்களில் தலைவருக்கு அளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள், பணிகளையும் செயல் தலைவர் ஆற்றுவார்’ என்று புதிய விதியைச் சேர்த்துவிட்டார்கள். இதன்படி பார்த்தால் தலைவரின் அனைத்து அதிகாரங்களும் செயல் தலைவருக்கும் உண்டு. அதனால்தான், ‘ஸ்டாலின் செயல் தலைவர் ஆகவில்லை, தலைவராகவே ஆகிவிட்டார்’ என்று சொன்னேன்.”

‘‘கருணாநிதி வரவில்லையே?”

‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை. வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை. அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

கருணாநிதியை மருத்துவமனையில் வைத்துக்கொண்டு செயல் தலைவர் ஆகக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின். அதனால்தான் வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டு, தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.”

‘‘ஏனாம் இந்த அவசரம்?”

p42dd.jpg

‘‘கருணாநிதிக்கு ஏதாவது ஆகி, அந்த நேரத்தில் குடும்பத்திலும் கட்சியிலும் கொந்தளிப்பு உருவாகிவிடக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். இன்றைய நிலையில் அழகிரி பெரிய அச்சுறுத்தல் இல்லை என்றாலும் சிறு சலசலப்புகூட இருக்கக்கூடாது என்று ஸ்டாலின் நினைக்கிறார். அதனால்தான் இந்த அவசரமாம். பொதுவாக, பொதுக்குழு என்றால் அனைவரையும் பேசவிட்டு கடைசியில் கருணாநிதி கருத்துச் சொல்வார். அப்படி எந்த நிகழ்வும் வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே ஸ்டாலின் சொல்லிவிட்டார். ‘ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தலைவரிடம் ஆசி வாங்கப் போய்விட வேண்டும்’ என்று முதலிலேயே சொல்லிவிட்டார். ‘மகிழ்ச்சியோடு இந்தப் பதவியை ஏற்கவில்லை’ என்றும் காட்ட நினைத்தார் ஸ்டாலின். அவர் பேச்சும் அப்படித்தான் இருந்தது. வழக்கமாக, ஸ்டாலின் பேசி முடித்ததும் அவருக்குக் கைகொடுத்து சால்வைகள் வழங்குவார்கள். இப்போது அவர் செயல் தலைவர் ஆனபோதும் யாரும் சால்வை கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். விட்டால் மொத்தக் கூட்டமும் சால்வைகளைக் குவித்திருக்கும். சோகம் தாங்கிய முகத்துடன் உடனடியாக கோபாலபுரம் வந்துவிட்டார் ஸ்டாலின். அவரோடு அன்பழகன், துரைமுருகன் ஆகியோரும் வந்தார்கள். கருணாநிதி தோளில் மஞ்சள் சால்வை போர்த்தி உட்கார வைத்து இருந்தார்கள். அவரிடம் ஆசி வாங்குவது மாதிரி புகைப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டது.’’

‘‘நீர் பயன்படுத்திய வார்த்தைகளைப் பார்க்கும்போது என்ன நடந்திருக்கும் என்பதை யூகிக்க முடிகிறது!”

‘‘புரிந்தால் சரி! போட்டோ எடுத்துக்கொண்டதும் தனது செனடாப் ரோடு வீட்டுக்கு ஸ்டாலின் போனார். அங்கு அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். மருமகன் சபரீசன், தனது மாமனாரைக் கட்டி அணைத்து வரவேற்றாராம்.”

‘‘இன்னும் சிலர் தங்களுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று நினைத்தார்களே?”

‘‘அவை அனைத்தையும் தள்ளி வைத்துவிட்டார் ஸ்டாலின். பொருளாளர் பதவியைக் கைப்பற்ற கே.என்.நேருவும் எ.வ.வேலுவும் முயன்று வருகிறார்கள். ஒருவேளை அன்பழகன் பதவி விலகினால் பொதுச்செயலாளர் பதவியை அடைய துரைமுருகன் முயல்கிறார். இந்த ஆட்டத்தை சில மாதங்கள் கழித்து ஆடலாம் என்று நினைக்கிறார் ஸ்டாலின்!” என்ற கழுகாரின் கவனத்தை போயஸ் கார்டன் பக்கம் திருப்பினோம்.

‘‘அண்ணி, அத்தை, அத்தாச்சி, சித்தி போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் கூட்டம், போயஸ் கார்டனிலும் தலைமைச்செயலகத்திலும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறதாமே?’’

‘‘வராதா பின்னே? பொதுச் செயலாளர் ஆனதும் சசிகலா தனது உறவுக்காரர்கள், குடும்பத்தினரின் தலையில் குட்டு வைத்து எச்சரிக்கும் வகையில் பேசுவார் என்றே கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் எதிர்பார்த்தனர். ஆனால், சசிகலா அப்படி ஏதும் பேசவில்லை. அதனால் ஏற்பட்ட தைரியம் உறவுமுறைகளைச் சொல்லி அதிகாரம் செய்யும் பவர் ஏஜென்ட்டுகள் பெருகிவிட்டனர்.’’

‘‘ம்ம்ம்... சசிகலாவின் கவனத்துக்கு இந்த விஷயங்கள் போனதா?’’

‘‘தெரியவில்லை!’’

‘‘நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒருபுறம்... அமைச்சர்கள் மறுபுறம்... சசிகலாவுக்கு ஐஸ் வைக்கும் வகையில் ‘விரைவில் சசிகலா முதல்வர் ஆக வேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசித் திரிகிறார்களே?’’

‘‘ஆனால் அவர்களில் யாருக்கும் பாராட்டுப் பத்திரம் கிடைக்கவில்லை.  முதலில், தம்பிதுரையை வரச்சொல்லி, ஸ்பெஷல் அர்ச்சனை நடத்தினாராம் சசிகலா. ‘நான் முதல்வர் ஆக வேண்டுமென்று  உங்களை அஃபிஷியல் லெட்டர் பேடில் அறிக்கை விடச் சொன்னேனா? ஆனால், நான் சொல்லி நீங்கள் அப்படிச் செய்ததாக ஊரே பேசுகிறது. என்னை தர்மசங்கடத்தில் தள்ளவேண்டும் என்றே இப்படிச் செய்தீர்களா? யாராவது சொல்லி நீங்கள் அப்படிச் செய்தீர்களா?’ என்று சத்தம் போட... தம்பிதுரை வாயடைத்துப்போய் நின்றாராம். அவரைப்போலவே, ‘சசிகலா முதல்வர் ஆகவேண்டும்’ என்று மீடியாக்களிடம் பேசிய அமைச்சர்களுக்கும் தனித்தனிக் கச்சேரி நடந்ததாம். ‘நாம சரியாதானே பேசினோம்’ என்ற குழப்பத்தோடு அவர்கள் வெளியில் வந்திருக்கிறார்கள்!”

‘‘அது இருக்கட்டும்... எப்போது பதவி ஏற்பார் சசிகலா?”

‘‘ஜனவரி 12, 14 ஆகிய தேதிகளைக் குறித்துக் கொடுத்துள்ளார்களாம். மார்கழியாக இருந்தாலும் ஜனவரி 12 பௌர்ணமி தினம், 14-ம் தேதி தை பிறக்கிறது. சலசலப்புகள், முணுமுணுப்புகள்கூட பொங்கல் கொண்டாட்டத்தில் அமுங்கிப் போகும் எனக் கணக்கு போடுகிறார்கள். எல்லாம் சரியாக அமைந்தால், அதிகபட்சம் 18-ம் தேதிக்குள் பதவி ஏற்பு முடிந்துவிடுமாம்!”

p42c.jpg

‘‘ஓ!’’

‘‘இப்போது இளவரசியை ‘நம்பர் டூ’ என்று கார்டனில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். சசிகலாவுக்கு சில அன்புக்கட்டளைகள் போட்டுவருகிறாராம் இளவரசி. ‘முன்பைப்போல வீட்டிலிருக்கும் செக்யூரிட்டிகள், சமையல்
காரர்கள், உதவியாளர்களிடம் சகஜமாகப் பேச வேண்டாம். முதல் மாடி அறையிலேயே இருக்கவேண்டும். அப்போதுதான், மற்றவர்களிடம் சசிகலாவின் இமேஜ் கூடும்” என்று நினைக்கிறாராம் இளவரசி.’’

‘‘இதை சசிகலா ஏற்றுக்கொள்வாரா?’’

‘‘ஏற்றுக்கொள்ளாமலா இருப்பார்! கார்டனில் இரண்டு டெய்லர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்த்துவிட்டு, இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியாதான் சசிகலாவின் புது காஸ்ட்யூம்களை வடிவமைத்தாராம். ஜெயலலிதா வழக்கமாகத் தலையில் கொண்டை போட்டுக்கொள்வார். அதேபோல், சசிகலாவின் தலையில் கொண்டை போட வைத்தது கிருஷ்ணப்ரியா என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில். சசிகலா, அ.தி.மு.க பொதுச்செயலாளராக டிசம்பர் 31-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது, ஜெயலலிதா போலவே அவர் மாறி இருந்தார்.’’

‘‘திவாகரன் வீடும் மகாதேவன் வீடும் பரபரப்பாக இயங்குவதாகச் சொல்கிறார்களே?’’

‘‘ஆம்! புத்தாண்டு காலை மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளும், அர்ச்சனைகளும் திவாகரன் பெயரில் செய்யப்பட்டன. அவரின் ஆதரவாளராக மாறுவதற்கு அமைச்சர் ஆர்.காமராஜ் தீவிர முயற்சி செய்து வருகிறார். விசுவாசத்தைக் காட்ட காலையிலேயே திவாகரனை சந்திக்க வந்த அமைச்சர் ஆர்.காமராஜ் வலது பக்கத்தில் நின்றுகொண்டார். சிறிது நேரத்தில் தனது ஆதரவாளர்களுடன் வந்த முன்னாள் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ் இடது பக்கம் நின்றுகொண்டார். எஸ்.காமராஜுடன் டிபன் சாப்பிட்ட திவாகரன், ஆர்.காமராஜுடன் மதிய உணவை முடித்திருக்கிறார். இருவரில் யாரை இனி திவாகரன் கைதூக்கி விடுவார் என்பதுதான் இப்போது மன்னார்குடி சஸ்பென்ஸ்! அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு ஆகியோரும் திவாகரனை  சந்தித்து வாழ்த்து பெற்றுச் சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முதல்முறையாக திவாகரனை வந்து சந்தித்திருக்கிறார். ‘காலில் விழச் சென்றார்’ என்றும், ‘பதற்றத்தில் தவறி கீழே விழுந்துவிட்டார்’ என்றும் மாறி மாறி சொல்கிறார்கள்.

தஞ்சையில் உள்ள மகாதேவன் வீடும் தடபுடலாக இருக்கிறது. அமைச்சர் துரைக்கண்ணு, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், எம்.பி பரசுராமன் எனப் பலரும் புத்தாண்டில் வந்து வாழ்த்து வாங்கிச் சென்றுள்ளார்கள். எல்லோருக்கும் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டி-சட்டையுடன், இனிப்பும் வழங்கியிருக்கிறார் மகாதேவன்.”

‘‘சரி, சேகர் ரெட்டி விவகாரம் எப்படி இருக்கிறது?’’

‘‘சேகர் ரெட்டி தலைமையில் சர்வேயர் ரத்னம், புதுக்கோட்டை ராமச்சந்திரன், ஆடிட்டர் பிரேம் ஆகியோர் பிடியில்தான் அரசு மணல் குவாரிகள் செயல்பட்டன. இவர்கள் அனைவருமே இப்போது வருமானவரித் துறையிடம் சிக்கிவிட்டதால் தடைப்பட்டுள்ள மணல் பிசினஸைத் தொடர்ந்து செய்ய மணல்மேல்குடி கார்த்திகேயன் பெயரை மன்னார்குடி திவாகரன் பரிந்துரை செய்துள்ளாராம். குடவாசல் ராஜேந்திரனின் மருமகனான இவர், சைலன்ட்டாக திருச்சி ஏரியாவில் மணல் பிசினஸ் செய்துவந்தார். இனித் தமிழ்நாடு முழுவதும் மணலில் கோலோச்சப் போகிறார். 2011-ம் ஆண்டு தென் மாவட்டங்களில் மணல் பிசினஸை சில மாதங்கள் செய்தவர் இவர். இவரின் அடாவடிப்போக்கினால் கோபம்கொண்ட ஜெயலலிதா, கட்சியில் இருந்தே இவரை நீக்கினார். ஜெயலலிதா இருந்த வரை கார்டனுக்குள் இவரால் நுழைய முடியாத நிலை இருந்தது. இப்போது திவாகரனின் நிழலாக மணல் பிசினஸை இவர் கையில் ஒப்படைக்க உள்ளார்கள். மாதா மாதம் பல கோடி கறுப்புப் பணம் இதில் விளையாடுமாம். இப்போதே கார்த்திகேயன் தலைமையில் ஒரு டீம் வசூலில் இறங்கிவிட்டார்கள்.’’

‘‘சேகர் ரெட்டியைத் தொடர்ந்து இப்போது இ.டி.ஏ. குரூப்பில் ரெய்டு நடந்துள்ளதே?’’

‘‘எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பரான பி.எஸ்.அப்துல்ரகுமான் உருவாக்கிய இ.டி.ஏ மற்றும் புஹாரி குழுமங்களில், வருமானவரித் துறை ரெய்டால் பல அரசியல் கட்சிகளும் கலங்கி உள்ளன. இவர்களிடம் நன்கொடை வாங்காத அரசியல் கட்சிகளே இந்தியாவில் இல்லையாம். சமீபத்தில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கியுள்ள ஆயிரம் கோடி மதிப்பிலான மின் உற்பத்தி நிலைய அனுமதிக்காக சில பி.ஜே.பி பிரமுகர்களைப் பெரிய அளவில் கவனித்துள்ளார்
களாம்.’’

‘‘எதற்காக இந்த ரெய்டு?’’

‘‘இந்த ரெய்டின் பின்னணியில் ஹவாலா விஷயங்கள் இருக்கலாம் என்கிறார்கள். அப்துல் ரகுமான் உயிரோடு இருந்த வரை அவருடைய உறவினர் சலாவுதீன் என்பவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தி.மு.க ஆட்சியில் பல ஒப்பந்தங்களைப் பெற்றார். துபாயில் ஸ்டாலினுக்குப் பாராட்டு விழா நடத்தினார். உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாஃபர் சேட்டுக்குப் பல உதவிகளைச்் செய்து கொடுத்தார். ராசாத்தி அம்மாளுக்கும் பல நிறுவனங்களை உருவாக்கிக் கொடுத்தார். ராம மோகன ராவ் ஆரம்பத்திலிருந்து இவர்களின் தொழில்துறை ஆலோசகராக இருந்து வருகிறார். தி.மு.க ஆதரவாளராக சலாவுதீன் வெளிப்படையாக இயங்கியதால் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஆட்சி மாறியவுடன்     அ.தி.மு.க-வுடன் ஒட்டிக்கொள்ள வந்த சலாவுதீனை சந்திக்க மறுத்தார் ஜெயலலிதா.

அப்துல் ரகுமான் மறைவுக்குப்பின் அவருடைய வாரிசுகள் சலாவுதீனை டம்மியாக்கிவிட்டு, மன்னார்குடி குடும்பத்துடன் நட்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். இதோடு பல ஏற்றுமதி நிறுவனங்களுடன் பார்ட்னராகப் பல நாடுகளில் தொழில் செய்கிறார்கள் இவர்கள். தற்போது இ.டி.ஏ குருப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட சிலர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் இந்த ரெய்டுகள் நடத்தப்பட்டதாம்’’ என்ற கழுகார், மேலும் இரண்டு பெட்டிச் செய்திகளைக் கொடுத்துவிட்டு அவசரமாகப் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி


இது விளையாட்டுச் செய்தி அல்ல!

ஒரு நாள் மற்றும் ட்வென்ட்டி 20 போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து புதன் கிழமை அதிரடியாக விலகியிருக்கிறார் டோனி. ‘’இது என் முடிவு’’ என தனது இளமைக்காலப் பயிற்சியாளர் சஞ்சல் பட்டாச்சார்யாவிடம் உற்சாகமாகச் சொல்லியிருக்கிறார் டோனி. ‘’சரியான நேரத்தில் டோனி எடுத்த சரியான முடிவு இது’’ என்கிறார் பட்டாச்சார்யா. ‘விராட் கோஹ்லி இந்திய அணிக்குத் தலைமை ஏற்க வேண்டும்’ என முன்னாள் வீரர்கள் பலர் சொல்ல ஆரம்பித்திருக்கும்போதே டோனி விலகி வழி விட்டிருக்கிறார். 

p42b.jpg

2 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்தும் இப்படித்தான் திடீரென விலகி ஓய்வை அறிவித்தார் அவர். இந்தமுறை ஓய்வு இல்லை, அணியில் ஒரு வீரராக அவர் தொடர்வார். கடந்த 12 ஆண்டுகளில் டோனியின் தலைமைத் திறமை கேள்விக்குள்ளானது சமீப மாதங்களில்தான். தன் தலைமைப் பதவியைப் பற்றி பெரும் விமர்சனங்கள் கிளப்புவதற்கு முன்பே, ‘`எப்போதுதான் இவர் விட்டுக் கொடுப்பாரோ” எனச் சலிப்போடு யாரும் பேசுவதற்கு முன்பே, டோனி ஒதுங்கியிருக்கிறார்.


தங்கமாக மாறிய ரூ.20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம்!

p42a.jpg

தங்க இறக்குமதி தொடர்பான தகவல்களைத் திரட்டிய மத்திய அமலாக்கத் துறையினர் திகைத்துப் போயிருக்கிறார்கள். 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் மாதத்தில் நகைக்கடைகளில் வியாபாரமே இல்லை எனப் புலம்பல் கேட்டது அல்லவா? இந்த நவம்பரில் மட்டும் 66 ஆயிரம் கிலோ தங்கம் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்கப்பட்டிருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் செய்த இறக்குமதியைவிட 14 ஆயிரம் கிலோ அதிகம். ஒட்டுமொத்தமாக தங்க நகை விற்பனை கடந்த 2015-ம் ஆண்டைவிட 2016-ம் ஆண்டில் குறைவாக இருக்கும்போது, நவம்பர் மாதத்தில் மட்டும் தாறுமாறு விற்பனை எப்படி ஆனது என இப்போது புலன் விசாரணை நடக்கிறது.
சென்னையில் மட்டுமே சுமார் 7 ஆயிரம் கிலோ தங்கம் நவம்பரின் சில நாட்களில் விற்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் இப்படி தங்கமாக மாறியிருக்கலாம் எனக் கணக்கிட்டிருக்கிறது அமலாக்கத் துறை. மாற்றிய பெரும்புள்ளிகள்மீது இப்போது விசாரணை வெளிச்சம் விழுந்திருக்கிறது.


நடராசனுக்கு நன்றியோடு இருப்பேன்!   - வைகோவின் புதிய பாதை!

p42.jpg

விஞர் காசி ஆனந்தன் எழுதிய ‘தம்பி ஜெயத்துக்கு (கடிதம் 2)’ நூலின் வெளியீட்டு விழாவில் பேசிய வைகோ, “இந்த நூலை நான் வெளியிட, அதைப் பெற்றவர் ம.நடராசன். நன்றி உணர்வோடு நான் இதைப் பார்க்கிறேன். ‘தமிழர்களின் சுவடே இல்லாமல் போகட்டும்’ என்று இந்திய அரசு அழித்ததே ஈழத்தை, எந்தப் புலிக்கொடியை புலிகள் தங்கள் கொடியாகப் பயன்படுத்தினார்களோ, அதே கொடிதான் சோழனின் ஆட்சியிலும், அருள்மொழித்தேவனின் ஆட்சியிலும் பறந்த கொடி. அந்தப் புலிக்கொடி சோழமண்டலத் தலைநகரான தஞ்சையிலே பறந்தது என்று அந்தத் தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்து, காலத்தால் அழியாத சாட்சியாக அதை உருவாக்க பழ.நெடுமாறனுக்குத் துணை நின்று அந்த இடத்தையும்  அளித்த ம.நடராசனுக்கு தமிழ்ச்சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. நான் நடராசனைப் புகழ்ந்து பேசியதை நாளை ஊடகங்கள் ஆயிரம் அர்த்தங்கள் பொதித்து எழுதுவார்கள். நான் அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நான் ரோஜாவை ரோஜா என்று அழைப்பேன். முட்களை முட்கள் என்று அழைப்பேன். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவனாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தலைமையேற்று நின்ற அந்த நடராசன் என் மனதில் நிற்கிறான். குற்றாலத்தில் நடைபெற்ற எனது திருமணத்துக்காக மூன்று நாட்கள் அங்கு தங்கி துணையாக இருந்து திருமணம் நடைபெற உதவிசெய்த அந்த நடராசனை நான் மறக்க மாட்டேன். நன்றியோடு இருப்பேன்” என்று நடராசனுக்குப் புகழ் மாலை சூட்டினார்.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

‘‘பொதுக்குழுவுக்கு வரும் நிலைமையில் கருணாநிதியின் உடல்நிலை இல்லை. அவருக்கு நினைவு தவறிய நிலைதான். பெரும்பாலும் யாரையும் அடையாளம் தெரியவில்லை. பேச்சும் இல்லை. வயிற்றில் போட்டுள்ள குழாய் மூலமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது. படுத்த படுக்கையாகத்தான் இருக்கிறார். முதுமையினால் ஏற்பட்ட பாதிப்பு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். முன்பு உடலில் இருந்த கொப்புளங்கள் இப்போது இல்லை. திடீர் மூச்சுத் திணறலுக்குக் காரணமான சளி அடைப்பு நீக்கப்பட்டுவிட்டது. ஆனால், தன்னைச் சுற்றிலும் நடப்பதையெல்லாம் அறியும் நிலைமையில் அவர் இல்லை. அந்த சக்தியைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார். அதனால்தான் நாளிதழ்களைப் படித்துக் காண்பிப்பது, டி.வி-யில் பாடல்களை ஓடவிடுவது என்று அவருக்கு நினைவூட்ட சில காரியங்களைச் செய்து வருகிறார்கள்.

அம்மாவுக்கு மேலேயும் போட்டி போட ஆள் தேவைப்படுகிறது போல கிடக்கு ....அதுதான் தனக்கு தகுதியான ஒருவரை தேடுகிறார்போல ......
எதோ மிக விரைவில் தமிழனுக்கு நல்லது நடந்தால் சரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அம்மாவுக்கு மேலேயும் போட்டி போட ஆள் தேவைப்படுகிறது போல கிடக்கு ....அதுதான் தனக்கு தகுதியான ஒருவரை தேடுகிறார்போல ......
எதோ மிக விரைவில் தமிழனுக்கு நல்லது நடந்தால் சரி 

நல்லது நடக்க நாம்தான் உழைக்க வேண்டும் 
உழைக்காத எந்த சமூகமும் முன்னேறியது கிடையாது.

ஒரு தலைவன் திடீரென தோன்றி தமிழ் இனத்தை முன்னேற்ற வேண்டும் 
என்றால் ............. ஹிந்திக்காரன் பயங்கரவாதி என்று தூக்கி ஜெயிலில் போடுவான்.

சின்னம்மா வரத்தான் ...... இதைவிட அம்மாவே பரவாயில்லை என்று தோன்றும்.
பின்பு குட்டியம்மா .... சித்தி என்று தொடருமே தவிர ...
எமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.

அதட்கான முழு பொறுப்பும் மக்கள்தான் ஏற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

நல்லது நடக்க நாம்தான் உழைக்க வேண்டும் 
உழைக்காத எந்த சமூகமும் முன்னேறியது கிடையாது.

ஒரு தலைவன் திடீரென தோன்றி தமிழ் இனத்தை முன்னேற்ற வேண்டும் 
என்றால் ............. ஹிந்திக்காரன் பயங்கரவாதி என்று தூக்கி ஜெயிலில் போடுவான்.

சின்னம்மா வரத்தான் ...... இதைவிட அம்மாவே பரவாயில்லை என்று தோன்றும்.
பின்பு குட்டியம்மா .... சித்தி என்று தொடருமே தவிர ...
எமக்கு விமோசனம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.

அதட்கான முழு பொறுப்பும் மக்கள்தான் ஏற்க வேண்டும்.

அண்ணை தப்பாக விளங்கிவிட்டீர்கள் போல ...நான் கட்டுமரம் மலை ஏறுவதை தான் தமிழர்களுக்கு விமோசனம் என்று சொன்னேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை தப்பாக விளங்கிவிட்டீர்கள் போல ...நான் கட்டுமரம் மலை ஏறுவதை தான் தமிழர்களுக்கு விமோசனம் என்று சொன்னேன் 

நீங்கள் சொல்ல வந்தது நன்றாகவே விளங்கியது ...........
அதனால்தான் அப்படி எழுதினேன்.

கட்டுமரம் கரை சேர்ந்தாலும் ...
கடல் செல்ல காத்திருக்கும் ஏனைய படகுகளும் 
கட்டுமரம் போலத்தான். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.