Jump to content

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா! #WeekEndRecipe


Recommended Posts

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா! #WeekEndRecipe

சுவையான சிக்கன் பக்கோடா

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான 'சிக்கன் பக்கோடா' அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைப் பேராசிரியர் கெளசிக்.

தேவையானவை:

சிக்கன் (எலும்பு நீக்கியது) - கால் கிலோ
பெரிய வெங்காயம் (நீளமாக நறுக்கியது) - 50 கிராம்
பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - ஒன்று
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
கடலை மாவு - இரண்டு டேபிள்ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
கொத்தமல்லித்தழை(பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, மெல்லிய நீளமான துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். நறுக்கிய சிக்கன் துண்டுகளில் நன்கு தண்ணீர் வடித்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கடலை மாவு, கார்ன் ஃப்ளார் மாவு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலக்கி 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை சிறிது சிறிதாக எண்ணெயில் சேர்த்து பொன்நிறமாகப் பொரித்து எடுக்கவும். சிக்கன் பக்கோடாவுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து சூடாகப் பரிமாறலாம்.

குறிப்பு:

சிக்கன் பக்கோடா கலவை கெட்டியாக இருந்தால், அதனுடன் சிறிதளவு தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம். கலவை நீர்த்துப் போனால் சிறிது கடலை மாவு சேர்த்துக்கொள்ளலாம்.

http://www.vikatan.com/news/health/77147-in-thirty-minutes-ready-to-chicken-pakoda.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நவீனன் said:

 

முப்பதே நிமிடங்களில் மொறுமொறு சிக்கன் பக்கோடா!

 

உது எங்களுக்கு நேரம் கூடிப்போச்சுது.....மூண்டு நிமிசத்திலை வெட்டிப்புடுங்கிற மாதிரி ஏதாவது இருந்தால் சொல்லுங்க...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.