Sign in to follow this  
நவீனன்

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள்

Recommended Posts

ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் சிறப்புப் பதிவு: அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள்

 

 
கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன்
கோப்புப் படம்: தி இந்து பிசினஸ் லைன்
 
 

ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் அன்று அவருக்கான சிறப்புப் பதிவு போடாதவர்கள் இன்னும் 30 நாளைக்கு ஏடிஎம் வாசலில் காத்திருக்கக் கடவது என சமூக ஊடக நல் உள்ளங்கள் சிலர் சாபம் விட தயாராக இருப்பதால் அவரது இசையில் அதிக கவனம் பெறாத ஆனால் சிறந்த பாடல்கள் சிலவற்றின் பட்டியல் இதோ.

ரஹ்மானின் ரசிகர்களாக மட்டுமல்லாமல் பக்தர்களாக இருக்கும் பலருக்கு இந்த பட்டியலில் இருக்கும் எல்லா பாடல்களும் தெரிந்திருக்கலாம். எல்லா பாடல்களுமே ஹிட் தானே என்று தோன்றலாம். அவர்கள் பொங்கியெழுந்து வாதிடுவதற்கான தளம் இதல்ல. குறிப்பிட்ட அந்தந்த படங்களில் ஹிட்டான பாடல்களைத் தாண்டி மற்ற பாடல்களை சிலருக்கு தெரியாமல் அல்லது தெரிந்தும் சரியாக கேட்டிருக்காமல் விட்டிருக்கலாம். படம் வந்த தடம் தெரியாமல் போயிருக்கலாம். அப்படி கவனிக்கத் தவறியவர்களுக்குத்தான் இந்த பதிவு.

உங்கள் எண்ணத்தில் கண்டிப்பாக ஹிட் ஆகக் கூடிய ஆனால் சரியாக கவனம் பெறாத பாடல்கள் என்னென்ன என்பதை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். இப்போது பட்டியலுக்கு தாவுவோம்...

படம்: வண்டிச்சோலை சின்னராசு

ஹிட்டான பாடல்: செந்தமிழ் நாட்டுத் தமிழச்சியே

கவனம் பெறாத பாடல்: இது சுகம் சுகம்

படம்: பவித்ரா

ஹிட்டான பாடல்: செவ்வானம் சின்னப் பெண்

கவனம் பெறாத பாடல்: உயிரும் நீயே

படம்: ஜீன்ஸ்

ஹிட்ஸ்: கொலம்பஸ், ஹைரப்பா, அஜுபா, அன்பே அன்பே

கவனம்: புன்னகையில் தீமூட்டி (சிறிய பாடல்)

படம்: என் சுவாசக் காற்றே

ஹிட்ஸ்: காதல் நயகரா, சின்ன சின்ன மழைத்துளி

கவனம்: தீண்டாய்

படம்: தெனாலி

ஹிட்ஸ்: ஆலங்கட்டி, இஞ்சருங்கோ, ஸ்வாஸமே

கவனம்: போர்ர்க்களம் அங்கே

படம்: பார்த்தாலே பரவசம்

ஹிட்ஸ்: அன்பே சுகமா, நீ தான் என் தேசியகீதம், மூன்றெழுத்து கெட்டவார்த்தை

கவனம்: லவ் செக்

படம்: காதல் வைரஸ்

ஹிட்: சொன்னாலும் கேட்பதில்லை, ஏ ஏ என்ன ஆச்சு

கவனம்: வான் நிலா தரும்

படம்: பாய்ஸ்

ஹிட்ஸ்: மாரோ மாரோ, அலே அலே, சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

கவனம்: ப்ளீஸ் சார், ரயிலே ரயிலே (இரண்டும் சிறிய பாடல்கள்)

படம்: நியூ

ஹிட்ஸ்: தொட்டால் பூ மலரும், சர்க்கரை இனிக்கிற, காலையில் தினமும்

கவனம்: மார்க்கண்டேயா

படம்: அன்பே ஆருயிரே

ஹிட்ஸ்: மயிலிறகே, ஆறரை கோடி,

கவனம்: வருகிறாய் தொடுகிறாய்

படம்: அழகிய தமிழ் மகன்

ஹிட்ஸ்: மதுரைக்கு போகாதடி, வளையபட்டி தவிலே

கவனம்: நீ மார்லின் மன்றோ

படம்: விண்ணைத்தாண்டி வருவாயா

ஹிட்ஸ்: ஹொசானா, மன்னிப்பாயா, ஆரோமலே

கவனம்: கண்ணுக்குள் கண்ணை

படம்: ராவணன்

ஹிட்ஸ்: உசுரே போகுதே, காட்டு சிறுக்கி

கவனம்: கோடு போட்டா

படம்: லிங்கா

ஹிட்: மோனா மோனா

கவனம்: உண்மை ஒரு நாள்

http://tamil.thehindu.com/opinion/blogs/ஏஆர்ரஹ்மான்-பிறந்தநாள்-சிறப்புப்-பதிவு-அதிக-கவனம்-பெறாத-சிறந்த-பாடல்கள்/article9463799.ece?homepage=true

Share this post


Link to post
Share on other sites
Bild könnte enthalten: Malen und Text
 

மெர்சல் கலைஞனும் மென்டல் ரசிகனும்! - லவ் யூ ரகுமான் #HBDARR50

1995. தேனியின் சுமாரான ஒரு இருட்டுக் கூடத்திற்கு என்னை தூக்கிச் சென்றார்கள். பெருங்கூட்டம், மூட்டைபூச்சிக்கடி என நான் மிரள அங்கே நிறைய விஷயங்கள் இருந்தன. திரையில் தோன்றினார் ரஜினி. குழந்தைகளின் சூப்பர் ஹீரோவை எனக்கும் பார்த்தவுடன் பிடித்துப் போனது. அவரின் 'ஒருவன் ஒருவன் முதலாளி' பாட்டை கற்பனையாய் காற்றில் கால் உதைத்து பாடித் திரிந்தேன். எனக்கே தெரியாமல் ரகுமான் என் முதலாளியானார்.

* அதே காட்சி தேஜாவூவாய் மீண்டும் நடந்தது. படையப்பாவில் வெற்றி கொடி கட்டு பாடலில் ரஜினியின் மேனரிசமும், பின்னணி இசையும் சேர்ந்து அதுவரை இல்லாத உற்சாகத்தை அளித்தது. என் ஐந்தாம் வகுப்புத் தேர்வுகளை அந்த தருணத்தில் வைத்திருந்தால் முதல் ரேங்க் நான்தான். அப்படியொரு உற்சாகம். யாரு மியூஸிக் இது என விவரம் தெரிய குழந்தைகளின் கூகுளான அப்பாவிடம் சரணடைந்தேன். பின் தெரிந்தது, ரோஜா, ஜென்டில்மேன், திருடா திருடா, காதலன், கருத்தம்மா என என்னை அப்போது ஆட்கொண்டிருந்த இசை எல்லாம் அவருடையது என. ரகுமான் எனக்குத் தலைவரானார். அவரின் கேசட்கள் நான் அடம் பிடித்து வாங்கும் பொருட்களாயின.

* என் பள்ளிக்கால தேவதை பச்சைநிற யூனிபார்மில் வருவதையும், இவர் 'பச்சை நிறமே பச்சை நிறமே' எனப் பாடல் அமைத்ததையும் என்னால் இப்போது வரை தற்செயல் என ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரகுமான் என் மனமறிந்த மந்திரக்காரர் ஆனார்.

* பள்ளிக் காலம் முடிந்து பிரிகையில் கண்ணோரம் வியர்ப்பதை, 'அட முஸ்தபா, இதெல்லாம் சகஜமப்பா' என துடைத்தெறிந்த தருணங்களில் அவர் என் அண்ணனானார்.

* ஆஸ்கர் மேடையில் தமிழ்குரல் ஒலித்தபோது குதூகலித்துக் குதித்தவர்களில் நானும் ஒருவன். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே'- நாத்திகனான நான் கடவுள் மேல் காதலில் விழுந்த மிகச்சில தருணங்களில் அதுவும் ஒன்று.

* பிரேமம் பித்தாய் தலைக்கேறி இருந்த காலங்களில் ரகுமான் எனக்கு நிறையவே கடனும், கையும் கொடுத்திருக்கிறார், நம் எல்லாருக்கும் ஐடியாக்களை அள்ளித்தரும் ஒரு ரகளையான மாமா இருப்பாரே, அவர் போல. என் பெருங்காதலில் ஒளிந்திருந்தது அவரின் மெல்லிய இசை.

* பின் காதல் கசந்து, காயம் பட்ட காலங்களில், 'வா மச்சி சரக்கடிச்சிட்டு அவளை பத்தி அசிங்கமா பாடலாம்' என ஐடியா தராமல், கடந்து போன காதலைக் கொண்டாட 'எவனோ ஒருவன்' பாடலின் வருடல் இசையால் கற்றுக்கொடுத்த நல்ல 'நண்பன்' அவர்.

* 127 hours, Million Dollar Arm படங்களின் டைட்டில் கார்டில் அவர் பெயரைப் பார்க்கும்போதெல்லாம் பெயர் தெரியா தேசத்தில் நம்மூர்க்காரர்களை பார்க்கும் பரவசம் தொற்றிக்கொள்கிறது.

* மெர்சலாயிட்டேன், மென்டல் மனதில் என பல்ஸ் பிடித்து துள்ளலாய் இசையமைத்து, 'எப்பவும் நான் யூத் ப்ரோ' என தோள் தட்டி 'ட்யூடாய்' வாட்ஸப் க்ரூப்பில் இணைகிறார்.

* இதோ இப்போது, 'கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்' என என்னை அடுத்த காதலுக்கு தயார் செய்வதில் மும்முரம் காட்டுகிறார் ஒரு 'மெச்சூர்ட் குரு’வாய்!

* டேப் ரிக்கார்டரிலிருந்து வாக்மேனுக்கு, வாக்மேனிலிருந்து சிடி பிளேயருக்கு, அதிலிருந்து எம்.பி.3 பிளேயருக்கு, அதிலிருந்து இந்த ஸ்மார்ட்போன் யுகத்திற்கு என மீடியங்கள் பல மாறினாலும் ப்ளேலிஸ்ட்டில் அவரின் முகம் மாறவில்லை. இந்த யுக மாறுதல்கள் அனைத்திலும் ஆளுமை செலுத்துவதில் இருக்கிறது ரஹ்மானின் வெற்றியும் ரசனையும்!

* அது ஏன் ரஹ்மான் மேல் அப்படியொரு காதல்? நான் வளர வளர அவரும் வளர்ந்தார். அவர் வளர வளர நானும் வளர்ந்தேன். எனவே, அது காதல் மட்டுமல்ல.... அதற்கும் மேலே!

vikatan

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, நவீனன் said:

அதிக கவனம் பெறாத சிறந்த பாடல்கள்

எனக்கு இங்குள்ள பல பாடல்கள் பிடிச்சிருக்கே 

Share this post


Link to post
Share on other sites
Sign in to follow this