• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
நவீனன்

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது

Recommended Posts

சசிக்கு எதிர்ப்பு வலுக்கிறது:
தீபாவுக்கு ஆதரவு பெருகுகிறது
 
 
 

அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு எதிர்ப்பும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதர வும் அதிகரித்து வருகிறது. தொண்டர்களிடம் பேசிய தீபா, 'என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது' என, தெரிவித்தார்.

 

Tamil_News_large_168467620170105235329_318_219.jpg

ஜெயலலிதா மறைந்ததும், அவர் வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை நியமனம் செய்து, பொதுக்குழு வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; அவரும் பொறுப்பேற்றார்.

அதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், 'தலைமை ஏற்க வர வேண்டும்' என, தீபாவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
சசிகலா தங்கியுள்ள,

சென்னை, போயஸ் கார்டன் வீடு வெறிச்சோடி கிடக்க, தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன், தினமும் ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். நேற்று, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, திருப்பூர், மதுரை என, 14 மாவட்டங் களில் இருந்து, ஏராளமான தொண்டர்கள், தீபா வீட்டுக்கு வந்தனர்.

அவர்களிடம் தீபா பேசும் போது, ''என் அரசியல் பயணத்தை, யாராலும் தடுக்க முடியாது. நிச்சயமாக அரசியலுக்கு வருவேன். தொண்டர் கள் பொறுமையோடு இருக்க வேண்டும். விரைவில், நல்ல முடிவை அறிவிக்கிறேன். ஜெயலலிதாவின் புகழை காப்பாற்ற வேண்டும் என்ற உணர்வுடன் பணியாற்ற, தயாராக உள்ளேன்,'' என்றார்.

அப்போது தொண்டர்கள், 'அரசியலுக்கு வர பயப்படாதீர்கள்; நாங்கள் இருக்கிறோம்' என கோஷமிட்டனர். அதற்கு பதில் அளித்த தீபா, ''எனக்கு பயம் எதுவும் இல்லை,'' என்றார்.

 

பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:


இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. தொண் டர்களிடம் கருத்து கேட்டு, என் கருத்தை பகிர்ந்து கொண்ட பின், முடிவை அறிவிப்பேன். தொண்டர் களுடன் கலந்து பேசியே, முடிவு செய்வேன். அ.தி. மு.க.,வை கைப்பற்றுவதா, புதிய கட்சி துவங்குவதா என, இன்னமும் முடிவு செய்யவில்லை.சசிகலா, பொதுச் செயலராக நியமிக்கப்பட்டது குறித்து, கருத்து கூற விரும்பவில்லை. அவர் முதல்வரா னால், அப்போது கருத்து தெரிவிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

பேனர்கள் கிழிப்பு


பெரம்பலுார் நகரில், சசிகலாவுக்கு ஆதரவுமற்றும் வாழ்த்து தெரிவித்து, நகரின் முக்கிய இடங்களில், அவரது ஆதரவாளர்கள், 'டிஜிட்டல்' பேனர் வைத் தனர். அவற்றில் உள்ள, சசிகலா புகைப்படங் கள் கிழிக்கப்பட்டன.

தம்பிதுரையின் சசி புராணம்


மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 30ம் நாள் நினைவு மவுன ஊர்வலம், கரூரில் நடந்தது. ஊர்வலம் முடி வில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேசினார். அப்போது, ஜெயலலிதா குறித்து பேசா மல், சசிகலா புராணம் பாடினார். இது, அ.தி.மு.க., தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

தை மாதம் அரசியல் பிரவேசம்


தீபா, அரசியலுக்கு வர வேண்டும் என, அ.தி.மு.க., தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அவரும் வர விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும், தன் முடிவை, தை மாதம் அறிவிக்கலாம் என, அவர் தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரண மாகவே, அவர் விரைவில் முடிவை அறிவிப்பேன் எனக்கூறி வருகிறார்.
 

மதுரையில் குமுறல்


மதுரை, ஜெய்ஹிந்த்புரம், 90வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக இருந்தவர் போஸ். மாநகராட்சியில் சுகாதார குழு உறுப்பினராகவும் இருந்தார். அவர், ''என் போன்ற கட்சிக்காரர்களுக்கு, சசிகலா

 

தலைமை பிடிக்கலை. இதே மனநிலையில் தான் தொண்டர்கள் உள்ளனர். தீபா தலைமையை ஏற்க தயாராக இருக்கிறோம். அவர் முடிவை பொறுத்து எங்கள் முடிவு இருக்கும். அவர் அரசியலுக்கு வராதபட்சத்தில், நாங்கள் கட்சியை விட்டு விலகி விடுவோம்,'' என்றார்.இந்நிலையில், தீபா ஆதரவாளர்கள், 7ம் தேதி, கடலுாரில் ஆலோசனைக் கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால், போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

கிராமங்களில் தீபாவுக்கு பெருகும் ஆதரவுசென்னை செல்லும் வாகனங்கள் கணக்கெடுப்பு

திண்டுக்கல்:தமிழக கிராமங்களில் ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவிற்கு பெருகும் ஆதரவு குறித்தும், அவருக்கு ஆதரவாக சென்னை செல்லும் வாகனங்கள் குறித்தும் உளவுத்துறை யினர் கணக்கெடுத்து வருகின்றனர்.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்குப்பின், சசிகலாவை விரும்பாத தொண்டர்களிடையே, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, வேடசந்துார், வடமதுரை, வத்தலகுண்டு, நத்தம், கொடைக்கானல் உட்பட பல இடங்களில் அவருக்கு ஆதரவாக போஸ்டர், பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. போலீசார் தடை விதித்த போதும், எதிர்ப்பை மீறி ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும் தீபா விற்கு ஆதரவு தெரிவிக்க பலர் சென்னை சென்ற வண்ணம் உள்ளனர். அதேநேரம் சசிகலா போஸ்டர்கள் கிழிக்கப்படுவதும் நடக்கிறது.
 

உளவுத்துறை கணக்கெடுப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிராமங்கள், கட்சியினர், நிர்வாகிகள் விபரங்களை உளவுத் துறை போலீசார் சேகரித்து வருகின்றனர். அவ ருக்கு ஆதரவு தெரிவிப்பவர் எத்தனை ஆண்டு களாக கட்சியில் உள்ளார், அவர் அ.தி.மு.க., விலும், உள்ளாட்சி அமைப்பிலும் பதவிகள் ஏதும் வகித்துள்ளாரா என்பது குறித்தும் தகவல்கள் திரட்டுகின்றனர்.
 

வாகனங்கள் கண்காணிப்பு


தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் அவரின் வீடு முன் ஆதரவாளர்கள் தினமும் குவிகின்றனர். இதனால் சென்னை செல்லும் வாகனங்களையும், யார் தலைமையில் செல் கின்றனர் என்ற விபரங்களையும் உளவுத்துறை யினர் கண்காணித்து வருகின்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1684676

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டுக்கு வந்த காலம்

Share this post


Link to post
Share on other sites

தமிழ் நாட்டுக்கு......  சசிகலா  போன்ற, தமிழ்  மண்ணின் மைந்தர்களே... தேவை. 

ஜெயலலிதாவைப் போல் ... 
தீபா,  சிவப்பு.... நிறத்தில் இருந்தால்,  தமிழ் நாட்டை.. ஆள  முடியாது.

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, தமிழ் சிறி said:

தமிழ் நாட்டுக்கு......  சசிகலா  போன்ற, தமிழ்  மண்ணின் மைந்தர்களே... தேவை. 

ஜெயலலிதாவைப் போல் ... 
தீபா,  சிவப்பு.... நிறத்தில் இருந்தால்,  தமிழ் நாட்டை.. ஆள  முடியாது.

எனது கருத்து இருவர்களுமே தேவையில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையுடைய பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். பணபலமின்மையால் நல்வழி அரசியல்கள் பின்னுக்கு நிற்கின்றன.
இருந்தாலும் சசிகலா எனும் கோட்டில் வரும் போது தீபா அரசியலுக்கு அருகதையற்றவர்.

  • Like 2

Share this post


Link to post
Share on other sites

கட்சிக்காக உழைத்த எத்தனையோ பேர் இருக்க சசிகலாவும் தீபாவும் எதுக்கு??

எல்லாரும் சுரணை கெட்ட பயல்களாய் இருக்கிறார்கள்

Share this post


Link to post
Share on other sites
34 minutes ago, குமாரசாமி said:

எனது கருத்து இருவர்களுமே தேவையில்லை என்பதுதான். தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையுடைய பல அரசியல்வாதிகள் இருக்கின்றனர். பணபலமின்மையால் நல்வழி அரசியல்கள் பின்னுக்கு நிற்கின்றன.
இருந்தாலும் சசிகலா எனும் கோட்டில் வரும் போது தீபா அரசியலுக்கு அருகதையற்றவர்.

இப்போது.... ஒரு, தெரிவு  தான் இருக்கின்றது.
சசிகலா நடராஜன்   -  ஸ்ராலின் கருணாநிதி. 
எனது... முதல் தெரிவு........  சசிகலா நடராஜனுக்கு  மட்டுமே. tw_heart:

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, தமிழ் சிறி said:

இப்போது.... ஒரு, தெரிவு  தான் இருக்கின்றது.
சசிகலா நடராஜன்   -  ஸ்ராலின் கருணாநிதி. 
எனது... முதல் தெரிவு........  சசிகலா நடராஜனுக்கு  மட்டுமே. tw_heart:

இருக்கலாம்.....
ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி நல்ல அரசியல் உள்ளே நுழைய முயற்சிக்கலாம். முயற்சிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றவர்களை குறை குற்றம் பிடிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.
இவையெல்லாம் வடநாட்டு  கிந்திய ஆளுமைக்கு வழிவகுக்கின்றன.

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

இருக்கலாம்.....
ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் பெரியதொரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த இடைவெளியை பயன்படுத்தி நல்ல அரசியல் உள்ளே நுழைய முயற்சிக்கலாம். முயற்சிக்கவில்லை போல் தெரிகிறது.
மற்றவர்களை குறை குற்றம் பிடிப்பதிலேயே காலத்தை கடத்துகின்றனர்.
இவையெல்லாம் வடநாட்டு  கிந்திய ஆளுமைக்கு வழிவகுக்கின்றன.

குமாரசாமி அண்ணா.....  நல்ல  சிந்தனை.
அதற்கு ... காசு, இருக்க வேணும்.
மக்களுக்க... சேவை  செய்ய, முதல்..... "மணி"  முக்கி
யம். :grin:

Bildergebnis für dont worry animated gis

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now

Sign in to follow this